Skip to content
Home » என் நேச அதிபதியே -52

என் நேச அதிபதியே -52

அத்தியாயம்-52

மின்மினியோ இரண்டு நொடிக்கு குறைவாக நகம் கடித்தபடி, இல்லை... அக்காவிடம் சொல்ல ட்ரை பண்ணினேன். பெரியப்பா தான் தமிழுக்கு போன் போடறானு நினைச்சி அக்கா என் போனையுமா எடுக்கலை. 

சும்மா போன் போட்டு இந்தியா வான்னு பெரியப்பா அதட்டுறதால அவ யோசிப்பா.

பெரிப்பாவுக்கு அவ லவ் மேட்டர் தெரிந்திடுச்சுன்னு அவளுக்கு வேற எப்படி தெரியப்படுத்தறதுன்னு தெரியலை.

எனக்கு உங்க நினைப்பு தான் வந்துச்சு. அக்காவுக்கு நீங்க உதவுவதனால் எப்படியும் உங்க போன அவ அட்டென்ட் பண்ணுவா. இக்னோர் பண்ண மாட்டா இல்லையா?!” என்றதும் சர்வேஷ் “மேபீ… ஓகே நான் கன்வே பண்ணிடறேன்” என்று துண்டித்தான்.

“ஹலோ சர்வேஷ்” என்று தனியாக போனை வைத்து விழித்தாள். அவளுக்கு சர்வேஷிடம் பேச வேண்டுமென்ற ஆவல். கூடுதலாக இரண்டு நொடி வயசு பையனை போல நீங்க நல்லாயிருக்கிங்களா‌. ஜாக்கிரதையா இருங்க. ஊருக்கு போய் மறந்திட்டிங்களா? அரசியல் வேலை எப்படியிருக்கு‌? எதுவும் கேட்காமல் அணைத்தவனை எண்ணி ஆச்சரியப்பட்டாள்.

‘அக்காவிற்கு இந்த சிராப் தேவையா? பேசாம இவரையே மணந்திருக்கலாம். நல்லவரா இருக்கார். அழகா கனிவா சில நேரம் எட்டி நிறுத்தி முசுடா’ என்று அவளது மனதில் சர்வேஷ் உலாவ துவங்கினான்.

மறுபக்கமோ சர்வேஷ் தமிழிற்கு வாய்ஸ் மெஸேஜ் மட்டும் அனுப்பினான்.

‘ஹலோ தமிழ் உங்கப்பா சி.எம் அரவிந்திற்கு உங்க காதல் தெரிந்திடுச்சு. என்ன நீ கன்சீவா இருப்பது தெரிய வாய்பில்லை.

நீ உங்கப்பாவிடம் விவரத்தை சொல்லுவியோ இல்லையோ அங்கயிங்க அலைந்து பேபிக்கு டிரபிள் தந்துடாதே. அப்பறம் சிராப் உன்கிட்ட நல்லா பழகுறாரா? அது முக்கியம். லைஃப்பை கவனி” என்று முடித்தான்.

அவன் அனுப்பிய ஆடியோ சில நொடியில் பார்த்து விட்டதாக காட்டியது.

கூடுதலாக தமிழும் ஒரு வீடியோ அனுப்பினாள்.

“ஏய் சூப்பர்மேன் தேங்க்யூ. ஆக்சுவலி நீ இல்லைனா நான் இங்க வந்திருக்கவே முடியாது.

அப்பா அவசரமா எனக்கு கல்யாணம் செய்து உன்னை மாப்பிள்ளையாக தேர்தல்ல நிறுத்தி குடும்ப லைஃப்லயும் அரசியல்லையும் கெத்து காட்ட நினைச்சார். பட் நீ எனக்கு உதவறதால நான் சிராப் கூட கைப்பிடிச்சி என் வாழ்க்கையை வாழ முடியுது‌.

இந்த வீக் சர்ச்ல எங்க மேரேஜிற்கு சிராப் பேசியிருக்கான். மேரேஜ் முடிஞ்சதும் கொஞ்சம் நிம்மதி வந்துடும்.

பேபியோட க்ரோத் கூட பம்ப் தெரியும். அப்பா வந்தார்னா நான் சொல்லவே தேவையில்லை. அவரால என்‌ லைப்பை தடுக்க முடியாது. 

சிராப் கூட பேசுறியா?” என்று கேட்டாள்.

சர்வேஷோ தலையை உலுக்கி “நோ நோ இருக்கட்டும் அம்மா சாப்பிட இரண்டு தடவை கூப்பிட்டுட்டாங்க tc’ என்று அனுப்பினான்.

நல்லவேளை வில்லியா வந்து உருட்டுவான்னு நினைச்சேன். மச் பெட்டர்” என்றவன் வெளியே வந்தான்.‌

இரவு உணவை வீட்டு ஆட்களோடு இணைந்துக் கொண்டான்.

”என்னய்யா யார் கூட பேசிட்டு இருந்திங்க சாப்பிட லேட்டா வர்றாப்ல இருக்கு” என்று நிபுணன்‌ கேட்டு மகனை தனக்கருகில் அமர பேரை இழுத்து போட்டார்.

“மின்மினி கூட பேசிட்டு இருந்தேன் அப்பா” என்று தந்தையிடம் எதையும் மறைக்காதவனாக கூறவும், ராணி ஆச்சியோ “இந்த வெயில்ல மின்மினி பூச்சி வருதா? அதுக்கூட எல்லாம் பேசுவிங்க” என்று பரிமாற, “அய்யோ ராணிக்கா அவன் சி.எம் அரவிந்தோட தம்பியா.. அண்ணனா… அவரோட பொண்ணு மின்மினியை சொல்றான்” என்று ஆதிரா விளக்கினாள்.

துளிரோ தந்தை நிபுணனுக்கு மறுபக்கம் அமர்ந்திருந்தவள் இந்த பக்கம் ஆர்யன் அண்ணனிடம் ‘சர்வேஷ் அண்ணா எதுக்கு மின்மினி அக்காவோட பேசியிருக்கும்?” என்று கேட்டு கிசுகிசுக்க, “ம்ம்ம்… அவனுக்கு பிடிச்ச குட்டி கண்ணும் அந்த பொண்ணு கண்ணும் குட்டியா இருக்கும். அதனால ரசிச்சிருப்பானோ? நீ திமிர் அரசனை ரசிச்ச மாதிரி” என்று ஆர்யன் அண்ணன் கிண்டல் தோனியில் கூறினார்.

துளிரோ சின்ன அண்ணனை காண ஆதிரா ராணிக்காவிடம் பேசியதற்கு சிரித்த சர்வேஷை கண்டு குழம்பினாள்.

அச்சோ மின்மினி அக்காவையா அண்ணன் விரும்புதா? இதை விதார்த்திடம் சொல்லணுமே. அவசரப்பட்டு விதார்த் அந்த பொண்ணு ஆதினியிடம் கல்யாண விஷயம் பேசிட்டா?’ என்று அதிர்ந்தாள். மளமளவென உண்டு போனில் பேச முவெடுத்தாள்.

ஆனால் அங்கு விதார்த் வீட்டில், “அப்பா கேட்கறாங்கள்ல சொல்லு ஆதினி அந்த பையன் சர்வேஷை உனக்கு பிடிச்சிருக்கா? பேசிமுடிக்கலாமா?” என்று விதார்த் அவசரம் காட்டினான்.

விதார்த் வீட்டில் தன் அம்மா ஆர்கலி சித்தி ஆருத்ரா இருவரும் இரட்டையர். இருவருக்கும் ஒரே நாளில் தந்தை வித்யுத் தாயையும். ஆருத்ரா சித்தியை சரண் சித்தப்பாவும் ஒரே மேடையில் மணந்தனர்.

அது போல தனக்கும் தங்கைக்கும்‌ பெண் எடுத்து கொடுத்து ஒரே நாளில் நடத்திட கேட்டனர்.

விதார்த்திற்கு ஆர்யன் சர்வேஷ் பற்றி ஓரளவு தெரியும்‌. சர்வேஷ் சிங்கிள் என்று துளிர் கூறியதும் தந்தையிடம் உரைத்து திருமணத்து நெருக்கினான்.

அவனுக்கு அவன் கொழுந்து தன் கைக்குள் பொத்தி வைக்கும் பேராசை.

ஆதினியோ தந்தை சரணை காண, சரண் ஆருத்ராவோ, "ஆதினி உங்க பெரியப்பா வித்யுத் பையனை பத்தி சொல்லறார்னா கண்ணை மூடி கொடுக்கலாம்." என்று கூற, "இல்லைப்பா அவரோட சி.எம் பொண்ணு சம்மந்தப்படுத்தி போட்டோ எல்லாம் வந்துச்சு. அவர் ஒருவேளை காதலிச்சிருந்தா? சி.எம் பொண்ணு எங்க நான் எங்க? 

அதோட மனசுக்குள்ள நெருடலா இருக்கும் பெரிப்பா” என்று தயங்கி உரைத்தாள்.

விதார்த்தோ சபையில் தங்கையிடம் சி.எம். மகள் கர்ப்பம் என்று கூறமுடியுமா? அல்லது சர்வேஷ் உதவுவதை தான் வெளிச்சம் போட்டு பேச முடியுமா?

‌ அதனால் மச்சானுக்கு வக்காலத்து வாங்கும் பொருட்டு, “அதெல்லாம் தமிழை காதலிக்கலை‌. நான் துளிரிடம் கேட்டுட்டு தான் சொல்லறேன். உனக்கு ஓகேன்னா நான் அவரை பேச வைக்கிறேன். சர்வேஷ் வாயால காதலிக்கலைனு சொன்னா உனக்கு நெருடல் போயிடுமா? கல்யாணத்துக்கு ஓகேவா. அதை சொல்லு. சி.எம் மகளோடு நீ எந்த விதத்திலும் தாழ்ந்து போகலை. நீ போலீஸ்காரன் பொண்ணு” என்று கூறியதும் ஆதினியோ தாய் ஆருத்ரா வை கண்டாள்.

சம்மதம் சொல் என்ற வாஞ்சனையான பதிலிருக்க, சரியென்றாள்.

இரு குடும்பமும் கலந்து பேசி ஆதினி குடும்பம் கிளம்பியது. விதார்த் வீட்டிலிருந்து இரண்டு மூன்று தெரு நடந்து சென்றால் ஆதினி வீடுயிருக்க புறப்பட்டனர்.

‌ ஆதினி‌ பெற்றோர் ஆருத்ரா-சரண் இருவரும் மகளின் வாழ்வில் திருமண கலை வந்தது போல் பேசிட, ஆதினியோ சர்வேஷ் நினைப்பில் யோசித்தாள்.

இவ்வாறு இரண்டு வீட்டில் திருமணப் பேச்சு உலாவ, ஆர்யன் சிற்பிகாவோ தேர்தல் களத்தை பற்றி விவாதித்தனர்.

சிற்பிகாவோ ஆர்யனின் நெஞ்சில் ரோமங்களோடு விளையாடி கொண்டு இருந்தாள்.

“என்ன யோசனை?” என்று ஆர்யன் கேட்க, “ஏங்க? இப்ப தேர்தல் அதுயிதுனு நின்று அலைச்சல் ஆனா குழந்தை தங்கறது டிலே ஆகுமா” என்று கிணற்றுக்குள் இருந்து பேசுவதாக கேட்டாள்.

ஆர்யன் உடனே நகைத்துவிட்டு, “சோ… மேடம் குழந்தை எல்லாம் எதிர்பார்க்கறிங்க” என்று தாடை நிமிர்த்தினான்.

“இல்லையா பின்ன? கல்யாணமாகி தேர்தல்ல நின்று இந்த விஷயம் நமக்கு தள்ளி போனா கஷ்டமிவ்லையா?” என்று கேட்டாள்.

“Knife ஒன்ன நல்லா நினைவு வச்சிக்கோ. பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் ஆனதும் பிள்ளையை பெத்து கொடுக்கற மெஷின் இல்லை.

குழந்தை குட்டி எல்லாம் கல்யாணம் ஆனவங்க உடனே யோசிப்பாங்க தான். ஆனா பெட்ல இருக்கறப்ப அந்த எண்ணத்தோடு கொஞ்சி குலாவக்கூடாது‌. பிகாஸ் கான்ஸட்ரேஷன் முழுக்க குழந்தையை பத்தி தோணும். குழந்தை வேண்டும் என்ற நோக்கத்துல இணைவதா போயிடும்.

எப்பவும் இல்லறம் இருவரோட இனிமைக்கு மட்டும் தான் நடக்கணும்‌. அதை சரியா செய்தா குழந்தை வரம் தானா கிடைக்கும்.

பலரும் அதை ஒரு பிராஸஸா நினைக்கிறாங்க. குழந்தை ஆசையிருக்கலாம். ஆனா அந்த நினைப்போடு மனைவியை நெருங்க கூடாது. அதே போல மனைவியும் குழந்தை உதையத்துக்கு மட்டும் கணவரோட ஒன்றக் கூடாது‌.‌

எங்கயாவுக்கு நான் ஒரு வருஷம் கழிச்சு தான் பொறந்தேன். அதெல்லாம் முத்தா மூனு பிள்ளை பெத்தெடுத்தார்‌. நாம இரண்டை பெத்துக்கலாம்.” என்று கழுத்தில் முத்தமிட்டு பதில் கூறினான்.

சிற்பிகா வெட்கம் கொண்டு திரும்ப அவளது முதுகில் முகம் கொள்ள, “இப்படி திரும்பினா என்ன அர்த்தம். ம்ம்ம்?” என்று திருப்ப அவளது மொட்டு போன்ற கைகள் முகத்தை மறைத்து சிரிக்க, அவளது கன்னத்தில் இச்சென்ற முத்தம் பதித்தான்.

சிற்பிகா விழிகள் மெதுவாக மூடி ரசிக்க, கன்னக்குழியில் ஆழமாய் தேனை நிரப்பும் விதமாக முத்தங்களை விதைத்தான்.

ஒவ்வோரு முத்தங்களும் அவன் அவள் பால் கொண்ட அன்பை விதைத்து காதலை தூவி காமத்தை தேடியது. 

நல்ல மருத்துவனுக்கு தெரியாதா வைத்தியம் செய்திட…


அடுத்த நாள் விடியலில் அழகாய் விடிய கணவனும் மனைவியுமாய் வந்திட, நிபுணனோ தேர்தல் வேலைகள் இனி தொடருமென கூறி சிற்பிகாவை தயார்படுத்திட அட்டவணையிட்டார்.

சுயேட்சையாக நின்றாலும் ஓட்டு பிரச்சாரம் மக்களை நேரில் சந்தித்தல், ஊரில் பாலாப்பக்கமும் பிரச்சாரத்திற்கு தனி நாட்களை ஒதுக்கி வைத்தாள்.

மாமனார் நிபுணன் தந்தையாக வழிநடத்த அச்சொல்லை தட்டாமல் பின்பற்றினாள்.

வீட்டையும் கணவரையும் ஒரளவு கவனித்து மற்ற தேர்தல் வேலையில் நுழைந்தாள். 

துண்டு சீட்டு முதல், மற்றவருக்கு தொல்லைக் கொடுக்காத பேனர், போஸ்டர் என்று பார்த்து செய்தனர். பரதன் மற்றவர்களை நன்றாக அறிந்திருக்க, எவ்விடமென்றாலும் நிபுணன் அண்ணனோட மருமக சிற்பிகா நிற்கறா என்று தண்டோர போடாத குறையாக பெருமையாக உரைத்தான்.

ஓரளவு நல்லதை விதைத்ததால் தற்போது நல்லதையே அறுவடை செய்தனர்.‌

தனியாக நின்றாளும் ஆதரவு கிடைத்திடும். 

நீதி நியாயம் என்று தனக்கென குறிக்கோளோடு வாழும் மனதிற்கு நல்லது காலதாமதமாக கிடைத்தாலும் ஒரு உயர்ந்த தகுதியான இடத்தை அடைய வைக்கும்.

அப்படி தான் சிற்பிகா தனக்கான இடத்தில் அடையும் நேரம் நெருங்கியது.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

29 thoughts on “என் நேச அதிபதியே -52”

 1. Avatar

  Sarvesh ku aadhini kudukardhu k tan ana enaku twist arasi veena akka mela ore doubt 🧐 ah iruku….avanga enna decide pannuvanga nu therilayae….. super super ka 😍😍…. waiting for next ud ka

  1. Avatar

   சிற்பிகா,
   நிச்சயமா .. அதிக வோட்டு வித்தியாசத்துல ஜெயிப்பான்னு தோணுது.

 2. Avatar

  Sarvesh ku athini than jodi ah illa athu la yum ethachum.twist vaipigala sis tho thulir ah vachi athuku basement podra pola iruku yae sirpika oda election velai chum na super ah progress aaguthu polayae

 3. Avatar

  Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 sarvesh ku Jodi minmini ya Ella aadhini ya yaara erukum🤔 election la kandipa nibunan jeyikka vechiduvaaru parpom 😊

 4. Avatar

  சர்வேஸுக்கு நெசமாவே யாரு ஜோடியாவாங்க ஆதினியா இல்ல மின்மினியா ?????பரவாயில்லப்பா சர்வேஸுக்கு செம காம்பெடிஷன் தான்.

 5. Avatar

  சர்வே சுக்கு ஜோடி யார் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

 6. Kalidevi

  Sarvesh aathini ketkanum ninaikiranga thedirnu Intha minmini vera site adikira sarvesh vera sirikiran avala sollum podhu ena twist iruku ithula therilaye. Unaku Yen intha doubt sirpi ellam thana nallathu nadakum nee atha ninachi kavala padama election velaiya paru namba doctor eppadi advise panni crt panraru paru

 7. Avatar

  ரொம்ப ரொம்ப அழகாக போகுது கதையின் பயணம் ஆர்யனின் காதல் மனைவிக்கு சொன்ன குழந்தையின் தேவையை பற்றி சொன்ன கருத்து ரொம்ப அழகாக இருந்தது சர்வேஷ்க்கு பொண்ணு கொடுக்க ரொம்ப போட்டியா இருக்கு கதையை சீக்கிரம் முடிக்காமல் தொடருங்கள் அதற்காக ரொம்ப தாமதம் பண்ணாதிங்க வீணாமா வாழ்த்துகள்

 8. Avatar

  Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr sis 👌👌👌👌👌👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *