Skip to content
Home » என் நேச அதிபதியே -55

என் நேச அதிபதியே -55

அத்தியாயம்-55

   சிற்பிகாவின் மொத்த எடையையும் தன்னவன் ஆர்யன் மீது சாய்த்திருக்க, ஆர்யன் மனைவியின் முதுகு மீது தூரிகை வரைவது போல கைகளால் கோலமிட்டான்.

மனைவியின் மான் விழிகள், கூர்நாசி, ஆரேஞ்சு சுளை போன்ற உதடுயென கண்களால் ஆராய்ந்தவன், “எவ்வளவு நேரம் குரங்கு குட்டி மாதிரி என் மேலையே தொத்திட்டு இருக்க போற? கீழே போக வேண்டாமா? ஐயா அம்மா, தங்கச்சி, தம்பி, ராணி ஆச்சியெல்லாம் உன்னை வாழ்த்த தயாரா இருப்பாங்க. மேடம் என்னன்னா ஜம்முன்னு என் மேல உங்க பாரத்தை போட்டுட்டு ஹனிமூன்ல படுத்து கெடுக்கற மாதிரி இருக்கிங்க. எனக்கும் நேரமாகுது.” என்று அவளை வருடிய கைகளில் கடிகாரம் கட்டியிருக்க நேரத்தை கண்டு பெண்ணவளிடமும் சுட்டிக்காட்டினான்.

 சிற்பிகாவோ அவனது கையை எடுத்து மீண்டும் தன்னையே அணைக்கும்படி வைத்துக்கொள்ள, அவளை இறுக்கி கொண்டு, "மனசுல இருக்கறதை சொல்லறது" என்று அவளது உதட்டை தடவி கேட்டான். 

“இந்த வீட்டு மாட்டை தேர்தல்ல நிற்க வச்சியிருந்தாலும் ஜெயித்திருக்கும். ஜெயித்தது என்ன பெரிய விஷயமா?

எனக்கு கனவு மாதிரி இருக்கு ‘ராக் ஈட்டர்’ இதுல நீங்க என்னை இம்புட்டு நேசம் வைக்கிறதுல என் மனசு நிறைந்திருக்கு. பிறந்ததிலிருந்து இந்தளவு அன்பும் பாசமும் என்னை மூழ்கடிக்கலை.
இப்ப இதை எப்படி எடுத்துக்கன்னு தெரியலை‌. அளவுக்கதிகமா சந்தோஷத்தை வெளிப்படுத்த தெரியலைங்க. என்னோட அதிகப்படியான சந்தோஷம் உங்க மார்பில் தலை வச்சி படுத்துக்கணும் அவ்ளோ தான். அது மட்டும் தான்.” என்றவளின் ஆனந்த் கண்ணீர் அவன் மார்பில் விழிநீராக சொட்டியதும், அவளை பட்டென்று மெத்தையில் சாய்த்தான்.‌

“ரொம்ப யோசிக்காத ‘நைஃப்’ தலைக்கு மேல ஜோலி கிடக்கு. கணவன் மனைவி என்றாலே இந்த நேசம் தானாக வந்துடும். என்ன சிலருக்கு எந்தெந்த நேரத்துல அன்பை காட்டணும்னு தெரியாது.” என்று கன்னத்தில் தேன் குடித்து எழுந்தான்.

சிற்பிகா முந்தானையை சரிப்படுத்தி எழுந்தாள். “என்னயிருந்தாலும் எனக்கு என் நேசத்துக்கு அதிபதி நீங்க தான். உங்க அன்பு தான் என்னை ஆனந்தமா நடமாட வைக்குது.” என்றாள்.

அவளது பேச்சில் முறுவலிட்டு கீழே அழைத்து சென்றான்.‌

மாடியிலிருந்து படிக்கட்டில் கீழிறங்கவும் வீட்டுக்கு முன் ஊர் கூட்டம் நிறைந்திருந்தது.

ஆளாளுக்கு வாழ்த்து சொல்ல, ஆர்யன் அவளை அப்படியே அவ்விடத்தில் விட்டுவிட்டு வீட்டுக்குள் வந்தான்.‌ ‘ஏங்க? என்னங்க?’ என்ற அவளது அழைப்பு அவன் செவிக்குள் ஏற்ற வில்லை. நீயே சமாளி என்பது போல ஹாலுக்கு வந்தான்.

“ஆர்யன் மருமகளை அங்க விட்டுட்டு வந்துட்ட” என்று ஆதிரா கேட்க, “எந்நேரமும் கூடயிருக்க முடியுங்களா, பழகிப்பாங்க” என்று ராணி ஆச்சியிடம் டிபன் கட்டி முடித்தாயிற்றா என்று கேட்டு, காபி பருகினான்.

அரை மணி நேரம் கழித்து வீட்டுக்குள் வரவும், “பாருங்க அம்மா அப்படியே தள்ளிட்டு வந்துட்டார். தனியா திணறிட்டேன்” என்று வந்தவளிடம், ராணி ஆச்சியோ, “பேரன் பக்கத்துலயே இருக்க முடியுமா? நீங்களும் நாலு பேரோட கலந்து பேசி பழகணும் இல்லையா” என்று வரவும், சிற்பிகாவுக்கு பொறுப்புகள் தலையில் ஏற்றப்படுவது அறிந்தாள்.

நிபுணனோ “ரொம்ப பயப்பட வேண்டாம் அம்மா. என் குட்டி மச்சான் நிலவன் உன் கூடவேயிருப்பான். உனக்கு பெரியண்ணா மாதிரி நிழலாயிருப்பான்.” என்றுரைத்தார்.

“பாருங்க அக்கா… நான் குட்டி மச்சானாம். மச்சான்னு சொன்னா ஆகாதா. குட்டின்னு சேர்த்துடறார்.” என்று பரதனின் மாப்பிள்ளையும், ஆதிராவின் குட்டி தம்பிக்கு இணையான நிலவன் ஆதிராவிடம் புகார் வாசித்தான்.

‌‌ “நீ விவரம் தெரியாதப்ப, அவரை(நிபுணன்) அண்ணன்னு கூப்பிட்டு அழிச்சாட்டியம் பண்ணின‌, உன்னை அவர் இப்ப வரை ‘குட்டி’னு முடிவுக்கட்டிட்டார்.

நீ என்னை அக்கானும் அவரை மச்சானும் கூப்பிட்டாலும் வேலைக்கு ஆகாது‌.” என்றாள் ஆதிரா.

நிலவனும் வாழ்த்து கூறி சிற்பிகாவிடம் பி.ஏ.வாக பதவி ஏற்றான்.

அதனால் சிற்பிகா நிழலாக நிலவன் கூடியிருந்து ஊர் தொகுதி எம்.எல்.ஏ பதவியில் அடியெடுத்து வைத்தாள்.

இங்க முதலமைச்சர் அரவிந்த் சிலயிடத்தில் தோல்வியுற்றாலும், பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ரௌவுத்திரமாக மாறினான்.‌

சமீபத்தில் இந்திரஜித்(உடன்பிறப்பு) இலண்டன் சென்று வர, அரவிந்திடம் உரைத்த விஷயம், அரவிந்த்-ஷமிரா மகளான தமிழ் கர்ப்பவதியாக இருப்பதை தெரிவித்ததே. அதிலிருந்து அரவிந்த் தமிழை மற்றவர் மூலமாக பேச அழைக்க அவளோ எந்த வித முயற்சியிலும் தந்தையிடம் பேசுவதை தவிர்த்தாள். 

அன்னை ஷமிராவை கொன்றுவிடுவதாக கூறி வீடியோ காலில் அழைத்திட, சிராப்-தமிழ் இருவரும் வீடியோ காலில் வந்திருந்தனர்.

அனலாக அரவிந்த் “அடுத்த பிளைட் ஏறி சென்னை வர்ற, இல்லை உங்கம்மா இங்க செத்து கிடப்பா” என்று தமிழ் பேசவும் விடாமல் கத்தரித்திட, தமிழிற்கு திகில் அதிகரிக்க கிளம்புவதாக கூறினாள்.

‌‌ சிராப் தானும் துணைக்கு வருவதாகவும், அவள் தந்தையுடன் பேசி புரியவைப்பதாகவும் கூறியும் தமிழ் வரவேண்டாமென்று மறுத்திட, சிராப் ‘உன் வயிற்றில் இருப்பது என்‌ குழந்தை தமிழ்’ என்று கூறி கைப்பற்றினான்.

தமிழ் இருக்கும் குழப்பத்தில் சர்வேஷிடம் கூறவில்லை. முக்கிய காரணம் அவனை வேறு இக்கட்டில் தள்ள பிடிக்காதது‌. ஆர்யனுக்கு தெரிந்தால் என் தம்பியை ஏன் இதுல இழுக்கற? என்று கடிவான்.

சர்வேஷ் மணப்பதாக கூறி வெளிநாட்டுக்கு அனுப்ப உதவியதே போதுமென்று நினைத்தாள்.

இதெல்லாம் சர்வேஷிக்கு அறியாது ஜாலியாக படத்திற்கு செல்ல வந்திருந்தான்.‌

வரிசைக்கட்டிய க்யூவில் நின்றிருக்க, அவனுக்கு முன்னால் ஒரு பெண் ஐந்து டிக்கெட்டுகள் வாங்கி திரும்பினாள்.

சர்வேஷ் அவளுக்கு வழிவிட்டு முன்னே வந்து ஜந்து டிக்கெட் என்றான்.

முன்னால் நின்ற பெண்ணோ ‘இவரு அவருல’ என்று திரும்பி திரும்பி பார்த்து நடக்க, சர்வேஷோ ‘இது துளிர் கட்டிக்கப்போற விதார்த் மச்சானோட கூட வந்த தங்கச்சியா?’ என்று டிக்கெட் வாங்கி அவளை கண்டு நின்றான்.‌

இருவரும் ஒரே நேரத்தில், "நீங்கதானே?" என்று கேட்டு, "அப்பாடி சரியா சொல்லிட்டேன்" என்று நெஞ்சில் கைவைக்க, இருவரது சைகையும் ஒன்று போல இருந்தது. 

”ஆதினி யாரு?” என்று ஒரு பெண் வரவும், “அக்கா… இவர்… இவரு… விதார்த் அண்ணாவோட காதலி துளிர் அண்ணி இருக்காங்களே. அவங்களோட அண்ணா… சின்ன அண்ணா.” என்று அறிமுகப்படுத்தினாள்.

சர்வேஷ் லேசாய் முறுவலிக்க, “இவங்க என் அக்கா அஞ்சலி‌, அவங்க என் அண்ணி திரிபுரா. இந்தகுட்டி வாலுங்க அக்கா பையன் சந்தீப், அண்ணன் பொண்ணு சார்மி” என்று அறிமுகப்படுத்தினாள்.

விடுமுறைக்கு வந்ததால் படத்திற்கு அழைத்து வந்ததாக உரைத்தாள்.

படம் ஆரம்பமாகவும் பேசியபடி இருக்கையை தேடி அமர்ந்தனர்.

அதிர்ஷ்டவசமாக, ஆதினி அருகே சர்வேஷ் அமரவும், ஏதோ நெஞ்சமெல்லாம் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது அவளுக்கு.

அக்கா அஞ்சலி அண்ணி திரிபுரா இருவருக்கும் சர்வேஷ் பற்றி சொல்லாததால் நாணிகோணி அமராமல் இயல்பாய் இருந்தாள்.

என்ன இயல்புநிலையில் இருந்தாலும், அவருக்கு தன்னை மணக்க வீட்டில் பேசியதில் பெண்ணவள் நினைவு முழுக்க படத்தில் இல்லை. சர்வேஷ் பக்கமே விழித்திறந்து கனவுலகில் சஞ்சரித்தாள்.

சர்வேஷ் கைகள் முதல் முறை ஆதினியோடு உரசவும், ஆதினி பூவுலகில் மிதக்க, சர்வேஷ் அதன் பின் தன் நண்பன் பக்கமாக திரும்பி கொண்டான் எனலாம். 

 தங்கை வாழப்போகும் சொந்தங்கள், அவப்பெயரை உருவாக்கிடாமல் தவிர்க்க எண்ணினான் சர்வேஷ்.‌ இல்லையென்றாலும் அவன் ஒதுங்கி கொள்ளும் பண்புடையவனே‌.

இடைவெளியில் பாப்கார் ஐஸ்கிரீம் என்று அக்கா, அண்ணி, குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து வந்தமர்ந்தாள்.‌

தாமதமாக நண்பர்களோடு பேசியபடி வந்த சர்வேஷ் கையில் பாப்கார்ன் இருக்க, மெதுவாக சுவைத்தான்.

அவனையே பார்வையிட்டவள் கைகள் தானாக அவன் பாப்கார்னில் நுழைத்திட, சர்வேஷ் கைகள் உரசி திரும்பினான்.

“சாரி… நான் பேமிலியோட வந்த மீனிங்ல உங்களோட பாப்கார்ன்ல கையை விட்டுட்டேன்” என்று அக்கா அண்ணி‌ பார்த்துவிட்டாரா‌யென பயந்தாள்.

“இட்ஸ் ஓகேங்க. இந்தாங்க” என்று அவள்‌ மடியில் பாப்கார்னரை வைத்து‌ விட்டு படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

ஆதினிக்கோ ‘விதார்த் அண்ணா ஜஸ்ட் யாரோ எவரோ ஹாய் ஹலோனு இவரை மூவ் ஆன் பண்ணியிருப்பேன். எனக்கு கல்யாணம் பேசலாமான்னு கேட்டு, சும்மாயிருந்த மனசுல சலனத்தை விதைச்சிட்டியே.’ என்று பெரிம்மா மகனை மனதிற்குள் கடிந்தாள்‌.

படம் ஓடிக்கொண்டிருக்கும் தருணம் சர்வேஷிற்கு மின்மினியிடமிருந்து அழைப்பு வந்தது.

முதலில் யாரென பார்த்துவிட்டு ‘இவளா?’ என்று எடுக்க யோசித்தான்.
சத்தம் கேட்டு ஆதினி திரும்ப கத்தரித்து சைலண்டில் போட்டான்.‌

மீண்டும் சைலண்டில் இருந்தாலும் வெளிச்சம் விட்டு விட்டு வரவும், எடுத்து பார்த்தான்.
ஆதினிக்கோ ‘மின்மினி’ என்ற பெயரை கண்டதும் முகம் வாடியது.

‘தமிழை சர்வேஷ் மணக்க மாட்டான் ஆதினி. தமிழ் வேறொரு லண்டன்காரனை லவ் பண்ணறா. விரைவில் திருமணம் செய்துப்பாங்கன்னு என்று தமிழ் என்பவள் குடைந்திருக்க, அப்புறப்படுத்தினான் விதார்த்.

ஆனால் அரவிந்த் அவரோட தம்பி பொண்ணை மணக்க பிளான் பண்ணறாரோனு டவுட்டா இருக்கு. இந்த மின்மினி அடிக்கடி போன் பண்ணறானு துளிர் சொல்லறா. அதென்ன கதைன்னு தெரிந்தப் பிறகு முடிவுப் பண்ணிடலாம்,’ என்றாரே.

இப்படி அடிக்கடி மின்மினி போன்‌ பண்ணி பேசற அளவுக்கு இருந்தால் இது காதல் தானே? என்று ஆதினி மனம் கனத்தது.

சர்வேஷ் தன் நண்பர்களோடு படம் பார்த்து மகிழ அவன் புன்னகை இதயத்தை களவாடியது. அடுத்த நொடி இவன் எனக்கானவன் இல்லை என்ற உண்மை சுட்டது.

இதற்கு முன் அவன் பக்கம் சாய்ந்து அமர்ந்தவளின் தேகம், தானாக அண்ணன்‌ மகள் சார்மி பக்கம் சாய்ந்தாள்.

மின்மினி அழைப்பு எடுக்கவில்லை என்றதும் புலனத்தில் குறுஞ்செய்தியாக அனுப்பினாள்.

‌ “நான் என்ன செய்யறது? எதுக்கு என்னிடம் சொல்லற?” என்று அனுப்பிவிட்டு, ‘ஐ அம் இன் தியேட்டர். ஐ கால் யூ பேக்” என்று‌ அனுப்பிவிட்டான்.

ஆதினிக்கு என்ன அனுப்பினார்? இவர் அவளுக்கு கால் பண்ணி என்ன பேசுவாங்க? என் மனசு ஏன் இவரை ஆசைப்படுது.’ என்று வாடினாள்.

அதன் பின் பேண்ட் பாக்கெட்டில் போனை வைத்துவிட்டு நிம்மதியாக படம் பார்த்தான் சர்வேஷ்.

இந்த மூன்று மணி நேரத்தில் ஆதினி மனம் சந்தோஷம், சோகம் கனவு, காதல், வலி, ஏக்கம், கோபம், என்று மாற்றி மாற்றி கலவையான உணர்வுக்குள் தள்ளிவிட்டு படம் முடிந்து சர்வேஷ் வஞ்சனையில்லாத புன்னகையோடு விடைப்பெற்றான்.

ஆதினி தலைவலியோடு வீடு திரும்ப, பைக்கை உதைத்து, ப்ளூ டூத்தில் பேசிய சர்வேஷ் பேசினான். ‘இதுக்கெல்லாம அழுவாங்க. நான் அண்ணாவிடம் பேசிட்டு அங்க வர்றேன். ஏய் உங்கண்ணா ப்ருத்வி இருப்பாரே அவருக்கு ஏதும் சொல்லலையா? என்ன‌ குடும்பமோ போனை வை வந்து பேசறேன்” என்று மின்மினியை அதட்டினான்.‌

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்


‌‌

23 thoughts on “என் நேச அதிபதியே -55”

 1. Avatar

  Indha sarvesh paiyanuku yaaruka jodi…. Ore confusion ah irukae…. Paavam aadhini….siripika jeichadhu sandhosama irukku….. Super ka… Waiting for next ud ❤️

 2. Kalidevi

  Superb epi epovum unaku thunaiya aaryan irupan sirpika . Adutha prachanai start tamil inga vantha ena panuvan therila intha aravind

 3. CRVS2797

  அட.. எல்லாத்துக்கும் ஆர்யனை துணைக்கு கூப்பிட்டா, இவன் என்ன பண்ணப் போறான்ங்கற கேள்வி வருதா… இல்லையா..?

 4. Avatar

  சர்வேஷ் இப்போ எதுக்காக அங்க தனியா போறான்

 5. Avatar

  அச்சோ இந்த Sarvesh அரவிந்த் இடம் மாட்ட போகிறானோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *