Skip to content
Home » என் நேச அதிபதியே-56

என் நேச அதிபதியே-56

அத்தியாயம்-56

வீட்டிற்கு வந்து அண்ணனிடம் உரைத்திட, ஆர்யனோ “உதவின்னு கேட்டு வீடு தேடி வந்த பொண்ணு. இந்த மின்மினி போன் பண்ணலைனா நாம போகாம இருக்கலாம். போன்‌செய்து சொன்னப் பிறகு ஒரெட்டு போய் பார்ப்போம்.” என்று ஆர்யன் கூறவும், “நானும் அதை தான் நினைச்சேன் அண்ணா. ஆனா அவர் நீயிருந்தா அமைதியா போறதா தெரியுது.” என்றதும் ஆர்யன் மௌவுனமாய் தந்தையை ஏறிட்டான்.

“நீங்க கூட போங்கயா.” என்று நிபுணன் உரைத்தார்.‌

ஆர்யனோ சிற்பிகாவிடம் கூறிவிட்டு கிளம்ப, “அந்த சி.எம் ஏன் உங்களை மாப்பிள்ளையா வர ஆசைப்பட்டார்? உங்களை கண்டு ஏன் அமைதியாகறார்” என்று கேட்க “விதியால சில உண்மைகளை அவர் அப்பாவிடம் பேசறப்ப அவர் வாயால நானும் அவரோட ரகசிய வாழ்க்கை சிலது கேட்க நேர்ந்தது. அதோட பாதிப்பா இருக்கலாம்” என்றவன் வேறேதும் கூறவில்லை.

ஊரறிந்த செய்தி, சி.எம். அரவிந்திற்கு இரண்டு தாரம் என்பதும், முதல் தாரத்தின் வழியில் ப்ருத்வி என்ற மகனும், இரண்டாம் தாரத்தின் வழியில் தமிழும் பிறந்துள்ளது யாவரும் அறிந்ததே. இந்த ரகசியத்தின்‌ ஆதி அந்தம் கொண்டு நண்பரிடம் அளாவிய போது கணவன் ஆர்யன் கேட்டிருப்பார் என்று நங்கை முடிவெடுத்தாள்.

சென்னை செல்லும் பொருட்டு அண்ணன் ஆர்யனும் தம்பி சர்வேஷும் புறப்பட்டனர்.

விமான பயணம் என்பது, விரல் சொடக்கிடும் நிமிடங்களில் கடந்தது அவர்களுக்கு.

அதற்குள் அரவிந்த் வீட்டில் தமிழ் மேடிட்ட வயிற்றோடு நிற்க, அரவிந்திற்கு கட்டுக்கடங்கா கோபம் வந்தது.

பெற்றவர்கள் செய்த பாவங்கள் பிள்ளையை ஆட்டுவிக்குமாம். சிறு வயதில் இளமையில் ஆடிய ஆட்டங்கள் மகளின் வாழ்வில் வந்து தனக்கு சவுக்கடி கொடுப்பதாகபட்டது.

ஆனால் இந்த அதிகாரத்தில் இருந்து பழக்கப்பட்டு, பதவி, புகழின் உச்சாணியில் இருந்தவனுக்கு பாசம் கண்ணை மறைத்தது.

ஆசையாக மகளை வளர்த்து, அவளிஷ்டத்திற்கு ஆட்டம் போட வைத்தாலும் திருமணத்தை அரவிந்த் இஷ்டத்திற்கு எதிர்பார்த்தார்.
பல கனவு கோட்டைகளை கட்டி வைத்தார்.
அத்தனையும் தரைமட்டமான கடுப்பில், மகள் கர்ப்பிணி என்றும் பாராமல் ஒரறை விட்டிருக்க சுருண்டு விழுந்தாள்.

அடுத்து குழந்தையை கமுக்கபாய் பெற்று எடுத்தாலும், தான் சொல்லும் பையனுக்கு கழுத்தை நீட்ட சம்மதிக்க, சிராப்பை ஓரிடத்தில் பணயம் வைத்து, மகளிடமே பேச்சு வார்த்தை நிகழ்த்தினார். தனது சொல்லுக்கு கீழ்படியவில்லை என்றால், சிராப்பை அடைத்து துன்புறுத்தி கொன்று விடுவதாக மிரட்டினார்.

எப்படியும் சர்வேஷிற்கு மகளின் காதல் நிலையறிந்ததால் கல்யாணம் செய்வது கேள்வியென்று, சடுதியில் சகுனியாக தந்திர கணக்கை கணக்கிட்டான்.

கேரள மாநிலத்தில் முதல்வர் மகனை கட்டி வைத்திட முடிவுக்கட்டினார்.

லேசாக தலையாட்டி, “ப்ளீஸ்ப்பா சிராப் நல்லவன், ஒரு சான்ஸ் கொடுங்க” என்று கெஞ்சினாள்.

“ஏய் அப்பன் அம்மாவோட இல்லாதவனுக்கு சாராயகடையில வேலை, பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத அன்னக்காவடி என் மருமகனா? தமிழ் நாட்டு சி.எம். அரவிந்த். பதவிக்கு வர்றதுக்கு முன்ன தோற்றது. இப்ப பதினைந்து வருடமா ஜெயிக்கறவன் நான். கேவலம் அவனை மருமகனா ஏற்றுக்க என்னால முடியாது” என்று கூற, “என்னாலையும் சிராப்பை விட்டு யாரோடவும் வாழ முடியாதுப்பா” என்று அடிவயிற்றை பிடித்து கஷ்டப்பட்டு எழுந்தாள்‌.

“உன்னையும் அவனையும் கொல்லப் போறேன் பாரு” என்று பூ ஜாடியை எடுத்து வீசினார்.

வயிற்றில் வந்துபட்டுவிடுமோயென அஞ்சி பதற, ஒரு ஆண்மகன் கைகள் தடுத்து நிறுத்தியது.

“பதவி புகழ்ல பெத்த மகளை கொல்லவும் தயங்காம இருக்கிங்க. பென்டாஸ்டிக் டாடி. பென்டாஸ்டிக்” என்று கைகள் தட்டி வந்தான் ப்ருத்வி‌.

  தமிழின் அண்ணன், தந்தையின் மூத்த தாரத்தின் மகன்.

    “ப்ருத்வி இதுல நீ தலையிடாத” என்றார்.

   “ஏன்… சின்னதுலயிருந்து இப்படி சொல்லி சொல்லியே வளர்த்துட்டிங்க. சரி நாமளா எதுலயாவது தலையிட்டா பிரச்சனை வெடிக்கும்னு விலகியிருந்து அன்பை பகிர்ந்தோம்‌.

   இப்ப கேட்க நாதியில்லாத நிலையில் தமிழை நிற்க வச்சியிருக்காங்க.
  
   இனியும் பேசாம இருந்தேன். உங்களை போல கல்நெஞ்சக்காரனா நான்‌ இருக்கணும். ரிது தமிழை கவனி” என்று கூற, ப்ருத்வி பேசவும் “தம்பி தலைவரை எதிர்த்து பேசாதிங்க” என்று ஒரு தொண்டன் எகிறவும், “எவன்டா அவன்? நான் உங்க தலைவனை எதிர்த்து பேசலை. எங்கப்பாவை எதிர்த்து பேசறேன்.
   பெர்சனல் பேசறப்ப உங்களுக்கு என்னடா வேலை. ஜஸ்ட் கெட் அவுட்.” என்று கத்தவும் தொண்டர்களில் சிலர் அடியாட்களாக இருந்தவர்கள் அரவிந்தை காணவும், “ஓ… உங்க அரவிந்த் சொன்னா தான் கேட்பிங்களா? மரியாதை கேட்டு உங்க தலைவனை திட்டறதுக்கு முன்ன கிளம்புங்க” என்று கூறவும் அரவிந்த் கண் அசைக்க தொண்டர்கள் அகன்றனர்.‌

   ஆர்யன் சர்வேஷ் அவ்வறைக்கு வர,  மின்மினியோ “அவங்க வந்துட்டாங்க” என்று கூறினாள்.

   சர்வேஷால் ப்ருத்வியிடம் தமிழின் நிலையை மின்மினி மூலமாக தெரியப்படுத்தவும் ப்ருத்வி வந்துவிட்டான். அதே போல சர்வேஷ் வருவதை ப்ருத்வியிடம் தெரிவித்திருந்தாள்.

    ஆர்யன் சர்வேஷ் வரவும், தமிழ் தள்ளாடினாள்.
ஆர்யன் பார்வை மருத்துவனாய் ஆராய, “இவளுக்கு ட்ரீட்மெண்ட் அவசியம்” என்று வந்ததும் தமிழ் நிலைமையை சுட்டிக்காட்டினான்.

  பயத்தில் அடிவயிறு சுள்ளென்று வலியை தருவிக்க, லேசான பீளிடிங் உருவானது.

    “ரிது தமிழோட நீ போ” என்று கட்டளையிட்டான் ப்ருத்வி.
     ஆர்யனிடம் “சிராப்பை அடைச்சி வச்சியிருக்கார்” என்றதும் “நான் சிராப்பை கூட்டிட்டு வர்றேன். நீ அவரோட போ” என்று ப்ருத்வி உரைத்திடவும் தமிழ் அரை மயக்கத்தில் காரில் ஏறினாள்.

    ஆர்யன் அவனது தாத்தா மாதவனின் வீட்டிற்கு வந்து அவரது காரில் வந்திருக்க அதிலேயே தமிழை மற்றவர்களை அழைத்து புறப்பட்டான்.‌

   ஆர்யன் இங்கு மருத்துவராய் பணிப்புரிந்த இடத்தில் காரை எடுத்து வந்ததும், மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்கள்.

உடனடியாக மருத்துவம் பார்க்க ரிதன்யா மின்மினி இருவரும் வீற்றிருந்தார்கள். சர்வேஷ் அமைதியாக போனை நோன்டினான்.

ப்ருத்வி காரில் சிராப் அழைத்து வந்து அவனுக்கும் சிகிச்சை கொடுக்கப்பட்டது. அந்தளவு அடித்து வெளுத்திருந்தனர்.

சர்வேஷ் தான் ப்ருத்வியை ரிதன்யாவை தனியறையில் இருக்க வைத்தான்.‌

சி.எம் பையன் என்று கூட்டம் கூடிவிட்டால், மீடியாவிற்கு தகவல் வந்து இஷ்டத்திற்கு எழுதி தொலைப்பார்கள்.

 அதனால் தனியறையில் இருந்தவன் மின்மினியிடம் "அந்த டாக்டர் தான் அப்பா தமிழுக்கு கட்டி வைக்க நினைச்சாரா?" என்று கேட்டான். 

“அவருக்கு கல்யாணமாகிடுஞ்சு அண்ணா. இவரை தான் அக்காவுக்கு கட்டி வைக்க முடிவு செய்தார். இவர் தான் உங்களிடம் இன்பார்ம் பண்ண சொன்னார்.” என்றதும் சர்வேஷை கவனித்தான்.

சர்வேஷ் அந்த நேரம் சரவணவேலனிடம் பேசியிருந்தான். “இல்லைங்க மச்சான் நாங்க அங்கயில்லை. அண்ணா முன்ன வேலை பார்த்த ஹாஸ்பிடல்ல இருக்கோம். வசதிக்கு குறைச்சலில்லை அண்ணா தான் ட்ரீட்மெண்ட் பார்க்கறார். சரியானதும் தமிழிடம் எந்த பிரச்சனையும் இல்லாம மறுபடியும் லண்டன் ஏற்றி விட்டுட்டு வந்துடுவோம்.” என்று பேசவும், ப்ருத்வி அண்ணனாக இருந்து தமிழை கவனிக்கவில்லையென்று மனம் சுணங்கினான்.

 மின்மினி சித்தப்பா மகள். அதனால் உரிமையாக அண்ணா என்பாள். தமிழ் பேசி பழகினாலும் சின்ன தயக்கமுண்டு.

தந்தை பார்த்த சர்வேஷ் சிறந்தவனாக தெரிந்தாலும், தங்கை சிராப்பை காதலித்துவிட்டாலே. 

”குட்டிபட்டாசு(ரிதன்யா) நீ வேண்டுமென்றால் வீட்டுக்கு போ” என்று மனைவியிடம் கிசுகிசுக்க, ‘இட்ஸ் ஓகே இருக்கேன்” என்றாள்.

மின்மினி பார்வை சர்வேஷை வட்டமிட, ப்ருத்வி கவனித்து “பையன் நல்லாயிருக்கான் ஆனா தமிழ் லண்டன்காரனை காதலிச்சிட்டா என்ன செய்யறது.” என்று வருந்தினான்.

‘ஏய் நீ சர்வேஷை கல்யாணம் பண்ணிக்கறியா?’ என்று ப்ருத்வி கேலி செய்து கிசுகிசுக்க, மின்மினியிடம் மௌவுனம் உருவானது.

ரிதன்யாவோ ‘ப்ருத்வி சும்மாயிருக்க மாட்டிங்க.’ என்று புஜத்தில் அடித்தாள்.

அதற்குள் ஆர்யன் ஸ்டதஸ்கோப்பை மற்றொரு நர்ஸிடம் தந்துவிட்டு, ப்ருத்வியிடம் வந்தான்.

“ரொம்ப பயந்து போயிருக்கா. கொஞ்ச காலம் பெட் ரெஸ்ட் இருந்தா மச் பெட்டர்.
அப்பறம் ஒரு டாக்டரோட மேற்பார்வையில் இருந்தாலும் நல்லது.

நீங்க உடனடியா உங்க சௌவுகர்யத்துக்கு வேற ஹாஸ்பிடல்ல சேர்த்து பாருங்க. இங்கயேனா மீடியா மோப்பம் பிடிச்சி வரலாம்.

ஐ ஹோப் உங்கப்பா இனியும் தமிழோட லைஃப்ல தலையிட மாட்டார் தானே” என்றான் ஆர்யன்.

ப்ருத்வியோ ஆமென்று தலையாட்டி, “நீங்க உங்க வீட்ல தமிழை கூட்டிட்டு போய்…” என்றவன் சட்டென நிறுத்தினான்.

‌ ப்ருத்வி கேட்க வருவது புரிந்திட, “எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. தாராளமா தமிழ் வருவதா இருந்தா நோ பிராப்ளாம். சிராப் வருவாரா கேட்டுக்கோங்க” என்று கூறிவிட்டு சர்வேஷிடம், “சர்வேஷ் அவங்க முடிவு கேட்டு வருவதா இருந்தா டிக்கெட் எடுத்திடு. ஐயாவிடம் தகவல் சொல்லிடு. வண்டி அனுப்பிடுவார்.” என்றவன் பொதுவாய் ‘ஹாஸ்பிடல் டீனிடமும் பிரெண்ட்ஸிடமும் பேசிட்டு வர்றேன்‌.” என்று புறப்பட்டான்.

 சற்று நேரம்‌ முடிவெடுத்து தமிழை ஆர்யன் வீட்டிற்கு அனுப்பி முடிவெடுத்தனர். 

மின்மினியை துணைக்கு அனுப்பினான் ப்ருத்வி. மின்மினிக்கு அது சந்தோஷம் தான்.
சர்வேஷை அருகிலிருந்து தரிசிக்கலாம்.

அதன் பின் ப்ருத்வி அவன் காரிலேயே தமிழையும் சிராப்பையும் அழைத்து வந்து ஏர்போர்ட்டில் விட்டான். 

தமிழிடம், “நீ காதலிச்சதை முதல்லயே என்னிடம் சொல்லிருக்கலாம் தமிழ்‌. இந்த அண்ணன் நம்ம அம்மா வயிற்றுல பிறக்கலைனு சொல்லாம தவிர்த்திட்டியா? அப்பா நமக்கு ஒன்னு தானே தமிழ். அண்ணாவா மின்மினியிடம் காட்டுற அதே அன்பை தானே உன்னிடமும் காட்டினேன். என் கல்யாணத்துல மத்தவங்களை விட உனக்கு தானே முன்னுரிமை கொடுத்து நகையிலயிருந்து டிரஸ் பார்த்து பார்த்து எடுத்தேன்.

சர்வேஷிடம் அப்பா கல்யாணம் பேசினார்னு அவரிடமே உதவி கேட்க போயிட்டல?” என்றதும் தமிழ் அழுதவாறு, “என்னை மன்னிச்சிடு அண்ணா. அம்மா எப்பவும் என்னதான் உறவாடினாலும் ஏதாவது ஒருவிதத்துல ஏற்றதாழ்வா பார்த்து சுட்டிகாட்டுவாங்க‌.‌ அதோட பாதிப்பு நீ உதவாம போனா என்ன செய்யறதுன்னு தான் சர்வேஷிடம் உதவி கேட்டது. ஐ அம் சாரிண்ணா” என்ளு தேம்பினாள்.

“ஏய்… அழாத… பிறகு டாக்டர் ஆர்யன் என்னை திட்டலாம். அழுது குழந்தைக்கு எதுவும் ஆபத்தை இழுத்து விடாத.

சிராப்பை பார்த்துக்கோ. லண்டன் போறப்ப நான் வந்து வழியனுப்புவேன்." என்று தங்கைக்கு நெற்றியில் முத்தமிட்டு வழியனுப்பினான். சிராப்பிற்கு கைகுலுக்கி விட்டு ஆர்யனிடம் "ஏதும் சிரமமில்லையே?" என்றான். 

ஆர்யனோ “அதெல்லாம் ஒன்னும் இல்லை” என்று உரைக்க, சர்வேஷோ கார் மட்டும் அனுப்பிவைங்க நிலவன் மாமா‌” என்று கூறி அணைத்தான்.

 அமைதியான பயணமாய் கழிந்து திருநிறையகம் வந்து சேர்ந்தார்கள். 

சிராப் ஆங்காங்கே கட்டு கட்டியிருந்தாலும் தூத்துக்குடி விமான நிலையம் வந்தப்பின் வழிநெடுகில் இயற்கையை ரசித்து வந்தார்.

தமிழ் மட்டும் அடிவயிற்றை பிடித்தபடி சோர்வாய் வந்தாள். மின்மினி சர்வேஷை ஏறிட்டு பார்க்க, “உங்க வீட்ல உங்கப்பா உன்னை இங்க வர திட்டலையா?” என்று கேட்டான்.

“எங்க அம்மா சந்தோஷியிடம் சொல்லிட்டேன். அப்பாவுக்கு பெரியப்பா மீது அப்பெக்ஷன் பெரிசா இல்லை. அதனால் அக்கா அண்ணா மேல் நான் பாசம் வச்சா கண்டுக்க மாட்டார்.
அவருக்கு நான் பையனா பிறக்கலைனு ஒரு ஆதங்கம் உண்டு. அவரோட கட்டுப்பாட்டுல நானும் அம்மாவும் போக மாட்டோம். எங்க விஷயத்துல அப்பா தலையீட மாட்டார்” என்றதும் சர்வேஷ் தலையை உலுக்கி கெண்டான்.

 வீட்டிற்கு வரும் போது அங்கே டீயை பருகி விதார்த் இருந்தான்.‌ காரிலிருந்து முன்னே நிலவன் ஆர்யன் இருவர் இறங்க, பின் சீட்டில் தமிழ்-சிராப் மெதுவாய் இறங்கினார்கள். 

அதற்கு பின் சீட்டில் மின்மினி சர்வெஷ் இறங்கவும், இவன் இந்த பொண்ணுக்கூட இறங்கறதே கிலியா இருக்கே.
ஆதினிக்கு இவன் தேவையா? பேசாம கொழுந்து மட்டும் போதும்னு இருக்கணுமோ? என்று எண்ணம் உருவானது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

21 thoughts on “என் நேச அதிபதியே-56”

 1. Kalidevi

  Sarvesh manasula ena iruku theriyama aal oru iru ninaipu vachitu irukinga aathini vera manasula aasai valathutu iruka

 2. Avatar

  Aathi 🫣enga manasula aadhini sarvesh nu uruvakittu ipo minmini ya vera naduvula sarvesh kuda sutha vaikuranga enaku heart break 💔agudhu ka…. Skrama indha payaluku oru mudivu kattunga ka…..

 3. Avatar

  சர்வேஷ்க்கு ஜோடி யாருன்னு கடைசியா சீட்டு குலுக்கி போட்டு நம்மளே எடுக்க சொல்லுவாங்களோ………

  1. CRVS2797

   அச்சச்சோ..! சர்வேஷ் மேல ஆளாளுக்கு டிமான்ட் காட்டறாங்களே…! ஆர்யனுக்கு கூட இந்தளவுக்கு இல்லையே..!!?

 4. Priyarajan

  Sharvesha un life tha tragedy aagum polaye aal aalukku unna kattika mudivu panranga👌👌👌👌 spr going waiting for nxt ud💕💕💕💕💕💕💕💕

 5. Avatar

  Sarvesh enna nenaikiran nu theriyama aaluku onnu yosikiragalae prithvi enna than arvi oda paiyan ah irundhalum sir thara oda valarpu anga ellam sound vida mudiyathu pathathuku aariyan oda entry vera keka va venum

 6. Avatar

  Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr sis 👌👌👌👌

 7. Avatar

  அந்த அழு முதலமைச்சரா இருந்தா யார வேணாலும் எது வேணாலும் பண்ணுவாரா சரியான பதவி பைத்தியம் பிடிச்சு போயிருக்கு. நல்ல வேலையா பிரித்விக்கு தகவல் கொடுத்து இவங்க போறதுக்கு முன்னாடி அவன் போயிட்டான் இல்லன்னா அந்த ஆளு கண்டிப்பா ஏதாவது பண்ணி இருப்பாரு அவங்க ரெண்டு பேரையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *