புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே-57&58

அத்தியாயம்-57

      ஒரு வாரங்கள் கடந்திருக்கும். தமிழ் ஆர்யன் வீட்டிற்கு வந்து, ஆர்யனை போல டாக்டரின் பராமரிப்பில், ராணி ஆச்சி சமையலில் கூடுதலாக தெளிந்தாள்.

   ராணி ஆச்சிக்கே முன்பு தமிழை கண்டால் திமிர் பிடித்தவள் என்று ஒதுக்கம் உண்டு. இன்று குழந்தை சுமக்கும் பெண் என்ற கூடுதலாக கவனித்தார். தமிழ் சாப்பிட மறுக்க,

   “அட நேரத்துக்கு சாப்பிடணும். நீங்க நேரத்துக்கு சாப்பிடறிங்களா இல்லையான்னு பேரன் ஆர்யன் என்னை தான் கேட்பார்.” என்று வயிறார பரிமாற, தமிழோ வேலைகாரர்கள் என்று உதாசினம் செய்தவள் அவர்கள் அன்பில் நெகிழ்ந்தாள்‌.

   சிராப்பிற்கு கொத்தமல்லி துவையல் பிடித்ததாக கூற ராணி ஆச்சி அம்மி கையில் அரைத்து கொடுத்தார்.

   சிராப்பின் தேவைக் கூட பாட்டி நிறைவேற்ற, உங்களுக்கு வேற ஏதாவது வேண்டுமின்னா தயங்காம கேளுங்க” என்று தமிழில் பேச, தமிழோ “பாட்டி அவருக்கு தமிழ் புரியாது. இங்கிலிஷ் மட்டும் தான்” என்றதும்.

  ராணி ஆச்சியோ “யூ வாண்ட் எனி புட் ஐயிட்டம் லைக் டெல் மீ. ஐ ப்ரிப்பேர்ட்’ என்றதும் சிராப், “டெபனட்லி கிராணி லவ் யூ ” என்று உரைக்க தமிழோ வயிற்றை பிடித்து சிரித்தாள்.

   துளிரோ “ராணி ஆச்சி இங்கிலிஷ் பிச்சு உதறுவிங்க போல.” என்று கேலி செய்ய விதார்த் கார் கேட்டில் நுழைந்தது.

   விதார்த் கூடவே ஆழினியும் விதார்த் தம்பி வசீகரன், பாட்டி வதனி, தாத்ரு வம்சி, என்று துளியை காணவந்தார்கள்.

நிபுணன் ஆதிரா வரவேற்று பேசவும் வதனி கொழுந்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

  பேரனின் மனைவி மீது ப்ரியம் உண்டாக மரியாதையும், பேச்சும் கடந்தது.

   ஆதினி வசீகரன் இருவரும் கிசுகிசுவென பேச, சர்வேஷ் அடிக்கடி ஆதினியை அறிந்ததால் புன்முறுவலோடு ஏறிட்டான்.

  கொழுந்து சுற்றி வதனி வம்சி பேசவும், தமிழிற்கும் சிராப் கூட அவர்கள் வீட்டு சம்பந்தி என்று கலந்தார்கள். மின்மினி மட்டும் சர்வேஷ் ஆதினி பேசுவதில் எரிச்சலடைந்தாள். 

   பேச்சுவாக்கில் சமீபத்தில் பார்த்த படத்தை பற்றி பேசவும், சர்வேஷ் சுவாரசியமாக பேச, துளிரோ “சின்ன அண்ணா நீ எப்ப படம் பார்த்த?” என்று கேட்டாள்.

   “தமிழ் விவகாரம் தெரியதப்ப படம் பார்த்தது. இதோ இவங்க கூட தான் பார்த்தேன்” என்றதும் விதார்த் துளிர் இருவரும் சேர்ந்து முழிக்க, விதார்த் பார்வையில் ஆதினி தலையில் அடிக்காத குறையாக, “அய்யோ அண்ணா அஞ்சலிக்கா, திரிபுரா அண்ணி கூட போனப்ப இவர் அவரோட பிரெண்ட்ஸ் கூட வந்திருந்தார்.” என்றதும் “ஓ” என்று கூற, “பின்ன வேற எப்படி நினைச்சிங்க?” என்ற சர்வேஷ் அதன் பின்னரே விதார்த் கேட்ட தோணி புரிய, ஆதினியை கவனித்தான்.

  “சொல்றதை ஒழுங்கா சொல்ல மாட்டிங்களா?” என்று கடியவும் சர்வேஷ் கண்ணை சுருக்கி சாரி என்றான்.‌

    சர்வேஷின் முகபாவனையையே ரசித்த மின்மினி கவனித்தாள். அதை தான்டி விதார்த்-துளிர் கவனித்தனர்.
  
   விதார்த் வீட்டு ஆட்கள் துளிரை காண வந்ததால், தங்கள் பிள்ளை ஆதினியை அறியவில்லை.

   மின்மினி கோபமாய் எழுந்து தனியாக சென்றிட, அன்றைய மதிய உணவு உண்ணும் நேரம் குழுமினார்கள்.

    ஆதினி வெள்ளிகிழமையென்று என்று மாமிசத்தை தவிர்க்க, “ஏங்க உங்க அண்ணி வீட்டுக்கு வந்துட்டு சாம்பார் ரசமா சாப்பிடுவிங்க. வெள்ளிகிழமை என்ன? ஞாயிற்று கிழமை என்ன? நான் வெஜ் சாப்பிடுங்க” என்று கூறவும் ஆதினி அங்குமிங்கும் விழியை உருட்ட, வசீகரனோ “ஓய்… அண்ணியை விட அண்ணியோட அண்ணனிடம் செம க்ளோஸா” என்று சீண்ட, “வசீ அண்ணா அப்படியெல்லாம் இல்லை. ஒழுங்கா சாப்பிடு” என்று அதட்டினாள்.

    நிபுணன் ஆதிரா இருவரிடம் வம்சி-வதனி நன்றாக பழகி வீட்டின் சங்கமித்திட்டனர். சென்னை சென்றதால் இன்று தான் வரமுடிந்தது என்று கூறி வீட்டில் வளர்ந்த பழங்களை வைத்திட, நிபுணனுக்கு பெரியவர்களும் சிறியவர்களும் கலந்து பேசி மகிழும் தருணம் விரும்பி ஏற்றார்.‌

   உண்மையில் காதல் திருமணம் என்றால் சிறு சிறு முகத்திருப்பல் கண்டதுண்டு. அப்படியில்லாமல் ரம்மியமாக சென்றது.

    சிராப் ஆர்யன் சிற்பிகாவிடம் ‘எங்களுக்கும் இது போல காதல் திருமணத்தை ஆதரித்து இருக்கலாம். நல்ல வேளை ப்ருத்வி பேசியது பழகியது கொஞ்சம் ஆறுதல் என்று’ ஆங்கிலத்தில் கதைத்தான்.

   ஆர்யனோ “சில் மேன் விரைவில் பேசுவார். தமிழ்னா அவருக்கு பிடிக்கும்” என்று தோளில் தட்டினான்.

    விதார்த் துளிரிடம் இயல்பாய் கதைக்க, ஆர்யன் தங்கையை நிறைவாய் காண, சர்வேஷோ வசீகரனிடம் பேச்சில் கலந்தான்.

   விதார்த்தை விட வசீகரன் சர்வேஷ் வயதென்றதால் சற்று நெருக்கம் வந்தது.

இப்படி அழகாய் சென்ற தருணத்தில் வம்சி வதனி காலில் ஆசிர்வாதம் பெற்று துளிர் எழவும், விதார்த் கிளம்பினான்.
 
    எல்லோரும் எல்லாரிடமும் விடைப்பெற்று கிளம்ப, ஆதினி சர்வேஷிடமும் புறப்படுவதாய் உரைத்தாள்‌.
 
     சர்வேஷ் வழியனுப்பி வீட்டுக்குள் வரும் வரை மின்மினி வெளியே வரவில்லை‌. தமிழ்-சிராப் கூட விதார்த் குடும்பத்தோடு பேசி சிரித்தனர். மின்மினி ஒதுங்கிவிட்டால் எனலாம்.

   சர்வேஷின் புன்னைகை முகம் மின்மினிக்கு சங்கடத்தை தந்தது.

அத்தியாயம்-58

தமிழ் உடல்நிலை ஓரளவு சீராகவும் சென்னைக்கு புறப்பட்டு அப்படியே ஷமிராவை அழைத்து கொண்டு லண்டன் செல்ல திட்டமிட்டார்கள்.

சிராப் ‘இந்த ஊரை மறக்க முடியாது. உங்கள் நட்பையும் மறக்கவேயியலாது’ என்று ஆர்யனிடம் உறவாடினான்.

 வீட்டிலிருக்கும் ஆட்களை மனதில் வைத்தும் பேச, நிபுணன் குடும்பத்தினர் சிறப்பான முறையில் கவனித்தனர். 

அரவிந்த் தன் வாழ்நாள் பக்கத்தில் தன் தந்தை செய்த அதே தவறை தானும் செய்துவிட்டதாக காலம் கடந்து உணர்ந்தான். 

ஆனாலும் ஷமிரா தன்னை விட்டு போவதை தடுக்கவில்லை. எந்த முகத்தை வைத்து கொண்டு மனைவி மகளை தடுப்பது. மாப்பிள்ளையிடம் மன்னிப்பை கேட்பது?

அதனால் நண்பனிடம் ‘தமிழை லண்டனுக்கே போக சொல்லுடா’ என்று மட்டும் தெரிவித்தான்.

நிபுணனால் ஆர்யன் தெரிந்துக் கொண்டாலும், ‘தப்புன்னா மன்னிப்பு கேட்டு பேசி பழகி, உறவு மலர்ந்திட சொல்லி கொடுத்தவர் நிபுணன். அதனால் அரவிந்த் மகளிடம் மன்னிப்பு கேட்க மனசில்லையா?’ என்று இகழ்ந்தான்.

அவரவர் சூழல் அவரவர் வளர்ப்பு வேறல்லவா. தன் தந்தையும்(நிபுணனும்) முதலமைச்சர் அரவிந்தும் குணத்தில் வேறல்லவா?!

தமிழ் பெட்டி படுக்கை எடுத்து ஆர்யனிடம் புறப்படுவதாக தெரிவித்தாள். தனிப்பட்ட ஆர்யனை கண்டால் தமிழுக்கு பிடிக்காது. ஆர்யனுக்கும் தமிழை பிடிக்காது.

ஆனால் இந்த இடைப்பட்ட நாளில் மருத்துவன், கர்ப்பவதியான பேஷன்ட் என்ற உறவில் இருவரிடமும் நட்பு உருவானது. ‘சிராப் நல்ல தேர்வு’ என்று கூறி தமிழிடம் வாழ்த்தினான் ஆர்யன். தமிழும் ஆமோதித்தாள்‌.

இங்கு மின்மினி சர்வேஷிடம், “ரொம்ப தேங்க்ஸ்ங்க நான் போன் பண்ணியதும் வந்திங்க. அதோட ப்ருத்வி அண்ணாவிடம் சொல்லி ஸ்டெப் எடுக்க வச்சிங்க.” என்று புகழ, ”அட நீங்க வேற. உங்கண்ணாவிடம் சொல்லிருந்தா பிரச்சனை சுமூகமாக இருந்திருக்கும். உங்க அக்கா தான் மூத்த தாரத்து பையன்னு அவரை அவாய்ட் பண்ணிட்டாங்க‌.

கூடபிறந்த உடன்பிறப்பு எதுக்குங்க? தப்போ சரியோ ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிப்போம். முன்ன எல்லாம் அதுக்கு தாங்க. தான் ஆடா விட்டாலும் தசை ஆடும் சொல்வாங்க பார்த்தீங்களா. நீங்க சித்தப்பா பொண்ணு என்ற உரிமையில எங்கன்னாலும் துணைக்கு வர்றிங்க. அவரும் அப்படி தானே.

நான் எல்லாம் எங்கண்ணா பேச்சை தட்டவே மாட்டேன். எதுனாலும் சொல்லிடறது. நமக்கு அறிவு இருந்தாலும், வளர்ந்துட்டாலும், வயசுல பெரியவர் என்றதால் ஒத்த வார்த்தை கேட்டுக்கறது தான்.

இப்ப பாருங்க தமிழுக்கு பீளிடிங் ஆனதும் அவரே மருத்துவம் பார்க்க ஆரம்பிச்சார். நல்ல வேளை… இல்லைனா அந்த நேரத்துல பெரிய ஹாஸ்பிடல்ல தேடி, டாக்டரிடம் காண்பிச்சு, மீடியாவுக்கு தெரிய வந்து இந்நேரம் குடும்ப விவகாரம் ஏலத்துக்கு போயிருக்கும்‌.

எங்கண்ணா மருத்துவம் பார்க்க எந்த மீடியா நிழலும் படவிடலை.

 உங்கண்ணாவும் சட்டுனு இங்க அனுப்பி வச்சிட்டார். உங்க பெரிப்பாவையும் ஹாண்டில் பண்ணிட்டார். 

சொல்லப்போனா இங்க நான் ஒன்னுமே பண்ணலை‌.” என்று கூறினான் சர்வேஷ்.‌

மின்மினிக்கு ‘நெஞ்சில் காதல் விதைத்து ஒன்றும் பண்ணலைனு சொல்லறியேடா’ என்பது போல பார்த்தாள்.

“நான் லக்கேஜை எடுத்து வைக்க போறேங்க.” என்று நிற்காது சென்றான்.

‘இந்த பொண்ணு என்ன ஒரு தினுசாவே பார்க்குது?’ என்று குழம்பி தான் போனான். ஆனால் முதலமைச்சரின் தம்பி மகள் என்ற பார்வையிலிருந்து அவன் மாற்றிடவில்லை.

அதனாலோ என்னவோ மின்மினிக்கு நன்றாக புரிந்துவிட்டது. தந்தை இந்திரஜித்தும் ‘நீ தமிழ் கூட இருந்தது போதும். அவ லண்டனுக்கு போறா. கூடவே நீயும் வந்திடு. இங்க தேவானந்த் கூட உனக்கு நிச்சயம் வைக்கறதா சந்தோஷியும் நானும் முடிவெடுத்திருக்கோம்‌.’ என்றார். தேவானந்த் வேறு யாருமில்லை இந்திரஜித்தின் தங்கை இனிதாவின் மகன். இனிதா-வினோ இவர்களின் புதல்வன். சொந்தத்தில் உறவை இணைக்கும் எண்ணம்.

அரவிந்த் குடும்பத்து ஆட்கள் சென்றதும் இயல்பான வாழ்க்கை துவங்கியது.

நிபுணன் மில்லிற்கு சென்று மேற்பார்வையிடவும், ஆதிரா சீர்த்திருத்த பள்ளிக்கு செல்லவும், சிற்பிகா தொகுதி பிரச்சனையை அரசியல்வாதியாக மாறி களைவதும், டாக்டர் ஆர்யனோ அரசாங்க மருத்துவமனைக்கு சென்றான்.

அண்ணன் சர்வேஷ், தங்கை துளிர் இருவரும் கல்லூரியில் பரீட்சைக்கு சென்றனர்.

ராணி ஆச்சி எப்பவும் போல வீட்டை சுற்றி விளைந்த காய்கறி பழத்தை பறித்து நளபாகத்தில் மூழ்கினார்.

விதார்த் வீட்டிலும் பரீட்சை முடிய நிச்சயம் செய்வதால், விதார்த் சரவணவேலனோடு பரீட்சைக்கு தயாரானான்.

ஆதினி அக்கா அண்ணி பசங்கள் சென்றதும், அவளுமே படிக்க வெளியூருக்கு சென்றிருந்தாள்.

இப்படியான சூழலில் ஆர்யன் தன் தம்பியை தன் அறைக்கு வெளியே இருந்த மல்லிப்பந்தல் அருகே அழைத்து “சர்வேஷ் நீ எப்ப மேரேஜ் பண்ணற ஐடியால இருக்க?” என்றான்.

சர்வேஷ் திகைத்து “ஏன்‌ அண்ணா… திடிதிடுப்புனு கேட்கறிங்க?” என்றதற்கு “ஐயா தான் கல்யாணத்தை பத்தி உன் அபிப்ராயம் கேட்டு வச்சிக்க சொன்னார்” என்று கேட்டான்.

சர்வேஷோ, “இப்ப தானே அண்ணா உங்களுக்கும் சிற்பிகா அண்ணிக்கும் கல்யாணம் முடிஞ்சது. பத்து மாசம் கூட ஆகலை. இதுல துளிருக்கும் விதார்த் மச்சான் பேசியிருக்கு நிச்சயம் முடியட்டும். தங்கை கல்யாணம் முடிஞ்சி பொறுமையா பார்க்கலாம்” என்றான்.

ஆர்யனோ “பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கறத பத்தி என்னை நினைக்கிற?” என்று கேட்டதும், சர்வேஷ் தலைக்குள் பல்பு எரிய ஆரம்பித்தது.

அண்ணா… துளிர் கட்டிக்கப்போற இடத்துலே விதார்த் மச்சான் ஒத்த பையன்ல” என்று கூறிவிட்டு தான் ஒய்ஃபை பாஸ்வோர்ட் கூறிய ஆதினி தங்கை என்று அறிமுகம் செய்தது நினைவு வந்தது.

“அ..அ..ண்ணா?” என்று கேட்டு திகைக்க, “ஐயாவிடம் விதார்த் அப்பா… இன்னும் என்ன விதார்த் அப்பா. அந்த மாமா கேட்டார்‌.

ஆர்கவி அத்தையோட தங்கை ஆருத்ரா இருக்காங்களே. அந்த அத்தையோட பொண்ணு ஆதினிக்கும் படிப்பு முடிய கல்யாணம் பண்ணணும்னு நினைக்கறாங்க. விதார்துக்கு உன்னை பிடிச்சிருக்காம். துளிரோட சின்ன அண்ணாவுக்கு கட்டிக் கொடுக்கலாம் கேட்டு பாருங்கன்னு அவர் வித்யுத் மாமாவிடம் கேட்டிருக்கார். வித்யுத் மாமாவுக்கும் பக்கத்துலயே கட்டிக் கொடுக்க ஆசை.
ஆருத்ரா ஆர்கலி அத்தையோட சொந்த மண் திருநெல்வேலி. பொண்ணு சொந்தமண்ல கட்டிக்க கொடுக்க விருப்பப்படுறாங்க போல.

நடுவுல தமிழோட உன் போட்டோ வந்து டாபிக்கா போனதும், தவிர்க்க பார்த்தாங்க. துளிர் விதார்த்திடம் சொல்லிருந்தாலாம். தமிழ் வேறொருத்தரை லவ் பண்ணிறதாகவும், அதுக்கு நீ உதவியதாக சொல்ல, கடைசியா விதார்த், அவங்க தாத்தா-பாட்டி வந்தப்ப தமிழ் இருக்கவும் மறுபடியும் ஆதினிக்கும் உனக்கும் கேட்கலாம்னு முடிவெடுத்து ஐயாவிடம் என்று மாமா கேட்டார்.

ஐயாவுக்கு நல்ல இடம்னு விட மனசில்லை. உன்னிடம் அபிப்ராயம் கேட்டு வைக்க சொன்னார். நிச்சயம் அப்ப பதில் சொல்வோம்னு இருக்கார்.” என்றதும் சர்வேஷ் மௌவுனமாய் கேட்டவன், “முன் ஏர் செல்லற மாதிரி தான் அண்ண. பின்னாடி இருக்கற ஏர்.

நீங்களே ஐயா அம்மா சொல்லறவங்களை தான் கட்டிக்கிட்டிங்க. நான் மட்டும் விதிவிலக்கா? ஐயாவுக்கும் அம்மாவுக்கு அந்த பிள்ளையை பிடிச்சிருந்தா எனக்கும் பிடிக்கும்.” என்றான்.

“டேய்… பெர்சனலா உன் ஒபீனியன் சொல்லு. நான் தான் தாலி கட்டிட்ட பிறகு காதலிச்சேன். என் ஒப்பீனியனை ஐயா கேட்கலை. கேட்க விடாத மாதிரி கோல் போட்டுட்டாங்க.” என்றதும் ‘ஆஹ் ம்குகூம்’ என்ற குரல் அறையில் கேட்டது.

“நைஃப் என்ன சத்தம்?” என்று கேட்டான்.

“யாரையும் காதலிக்கலை‌. அப்பா அம்மா பார்க்கற புள்ளையை கட்டிக்கறேன்னு வாக்கு தந்துட்டு. ஒப்பீனியன் கேட்கலலனா என்ன அர்த்தம்?
எங்க மாமா ஒன்னும் உங்க பதிலை சொல்லாம கோல் போடலை. பிடிக்கலைனா அப்பவே நீங்களும் சொல்லிருக்கலாம்” என்று வந்தாள்.

“அய்யோ அண்ணி சண்டை எல்லாம் வேண்டாம். அண்ணா உங்களை இப்ப எவ்ளோ விரும்பறார்” என்று சர்வேஷ் இருவரிடமும் நடுநிலையான சன்ன சிரிப்பில் உரைத்தான்.‌

“கல்லை முழுங்கிட்டு இருப்பார் உங்கண்ணா. நீங்களாவது தெளிவா அந்த பிள்ளையை பிடிக்குதான்னு சொல்லுங்க.” என்றவள் பூ பறித்தபடி ‘ராக் ஈட்டர்’ என்று செல்லமாய் கணவன் ஆர்யனை திட்ட, ‘நல்லா பெயர் வச்சிருக்காங்க. நைஃப்-ராக் ஈட்டர்’ என்றவனுக்குள் ஆதினியை பிடிச்சிருக்கா இல்லையா என்று பட்டிமன்றம் வைக்கும் நிலையை தவிர்த்து, “நல்லா தான் இருக்காங்க அண்ணா… அவங்க..‌. தங்கச்சி கல்யாணம் முடிஞ்சா ஆகற வேலையை பார்க்கலாம். ஐயாவுக்கு அம்மாவுக்கு, உங்களுக்கும் அண்ணிக்கும் பிடிச்சிருக்கல்ல எனக்கு பிடிக்காம போகுமா.” என்று மனதை பகிர்ந்தான்.

சிற்பிகாவுக்கு ஆச்சரியம் உண்டானது.

ஐயா வளர்ப்பு மீது. ஆர்யனும் சில நேரம் மனைவியிடம் நிபுணன் ஆதிராவிடம் பேசுவது போல ‘வாங்க போங்க’ வரும். இதோ இந்த சர்வேஷும் ‘அவங்க’ என்கின்றானே.

இந்த மரியாதை பெரியவர்கள் விளிக்க தாமாக குழந்தைகளுக்கும் வரும்.
ஆண் குழந்தைகள் தறுதலையாக மாறாமல் இருக்க, முக்கியமான ஒன்று. தந்தை தாயுக்கு கொடுக்கும் மரியாதையை கண்டு வளர்வதே. கணவன் மனைவியாக பொதுவெளியில் கொடுக்கப்படும் மரியாதை. தந்தையை பார்த்து வளரும் ஆண்‌மகன் கடைப்பிடிப்பது சாத்தியம் அதிகம்.

தனக்கும் குழந்தை பிறக்கும் ஆவலோடு அடிவயிற்றை வருடினாள். திருமணமாகி பத்து மாதம் ஆகியும் குழந்தை உருவாகாதது எண்ணி கலங்கினாள் சிற்பிகா.

எங்கே பணி பொறுப்பு என்று கடந்திட, வயிற்றில் பிள்ளை தங்கும் பாக்கியம் அமையவில்லையோ என்று கூட ஆர்யனிடம் கேட்டுவிட்டாள். 

மருத்துவன் ஆர்யனோ ‘லூசா நீ, என்ன அவசரம்?’ என்று கடிந்திருந்தான்‌.

“ஏ… நைஃப். பூ பறிக்கலை” என்றதும் சித்தம் கலைந்து திரும்பினாள்‌.

“அண்ணி… அண்ணா…” என்று துளிர் ஓடிவந்தாள்.

“இந்த இரண்டு அண்ணா அண்ணி மட்டும் என்னை விட்டு பேசுறாங்க.” என்று முனங்கி வந்தவள், அண்ணியை தோளில் தொற்றிப்பிடித்து நின்றாள்.

சர்வேஷிற்கு இதே இடத்தில் ஆர்யன் அண்ணா சிற்பிகா அண்ணியிடம் துளிர் பழகுவது போல ஆதினியிடமும் பழகும் வாய்ப்பு உண்டென்று தோன்ற, ஆதினி முகவடிவம் வரிவடியாய் நினைத்து பார்த்தான்.

அன்று தியேட்டரில் சுடிதார் அணிந்து முகம் வந்திடவும், அன்னைக்கு என்ன அடிக்கடி பார்த்தது இதனால தானா? என்றவன் உதடு தானாக முறுவல் கொண்டது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

ஹாய் ரொம்ப கேப் விடறேன்னா. சாரிங்க… மே 2 நெருங்கிய உறவில் ஒருவர் இறந்துட்டாங்க. அங்க கொஞ்ச நாள் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதுல அப்பாவுக்கு ஆப்ரேஷன். அப்பா வீடுன்னு சுத்திட்டேன்‌. எங்க வீட்ல இரண்டு நாள். அப்பா வீட்ல நாலு நாள். கிராமத்துல அத்தை வீட்டுக்கு அடிக்கடி பறந்துட்டு இருந்தேன்.
இதுல ஒரு மேகஸீனுக்கு சின்ன கதை எழுதியிருந்தேன். இதுல எனக்கு உடற்சூட்டால் கண்ணு வீக்கம் வேற வந்தது. அது ஏதோ உறுத்துதுனு மூன்று நாள் போனை அதிகம் உபயோகப்படுத்தலை

அதனால் நேச அதிபதியே மற்ற கதைகள் காலம் தாழ்த்தப்பட்டது.
வெரி வெரி சாரி.
கதை முடிவை நோக்கி பயணிக்குது.
உங்க அன்பும் ஆதரவும் என்னைக்கும் வேண்டும்.

25 thoughts on “என் நேச அதிபதியே-57&58”

  1. It’s OK sisy unga situation therium athanala wait panom . Take care. Kathai mudivuku vara porathu konjam kastama iruku but interesting ah alaga poitu iruku epi ellam athoda pathai la nallave

    1. Alagana kudumbam.kannu pada poguthu.soopeeeerr.seekirama enga knife ku oru kuttu Aaryan a kudunga pa.sooopeerrrrr. Appa Amma ev valiyo athae pola pullainga.semmaaaaaaaaaa cute.story line

  2. இப்போ நார்மல் லைப்புக்கு
    வந்துட்டிங்களா

  3. Yeppa oru vazhiya sarvesh route clear agiduchu…. Minmini vandhadhum marupadiyum mothala irundha nu thonuchu ipo tan happy ah irukku…. Story romba romba super ka❤️❤️…

    Adhalan paravala ka health ah pathirama paarthukonga ka….

  4. Super sis nice epi 👍👌😍 happa eppdiyo andha minmini sarvesh ku Jodi Ella 🙏 semmaiya pogudhu sis story end aga pogudhu nu konjam kashtama eruku pa 🤧

  5. 👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕
    Super going… Mudiya pothunu ninaichale knjam varuthama irukku…..
    Family romba mukkiyam atha vida health romba romba mukkiyam…. Nalla rest edunga updates kuda porumaiya podalam……

  6. Expecting it Sarvesh aadhini must be paired because cm aravind ‘s family not fitting in nubunan story line movings

    Nubunan family relying on complete family package closed with one to another in a chain link

  7. Ok sis unga situation puriyuthu
    Sarvesh ku athini than jodi nu fix aagiduthu athuvum illama Sarvesh kum feelings yetti pakka arambichiduthu polayae
    Arvi ne tamizh vishyathula pannathu rombha vae thappu Sarvesh sonnathu pola tamizh um prithvi kita appovae anna nu avan kita help ketu irukalam
    Sirpika nenaikira thu pola nibu athira va treat panra vitham than aariyan Sarvesh indha alavuku genuine ah iruku ah karanam

  8. ஆக மொத்தம், சுத்தி வளைச்சு ஒண்ணுக்குள்ள ஒண்ணாவே சொந்தத்துல கல்யாணம் கட்டி வைச்சு பார்க்க நினைக்கிறாங்க.
    சிறப்பு, மிகச் சிறப்பு..!

  9. ஒரு வழியா தமிழ் சிராப்போட பிரச்சனையை தீர்த்து வைத்து அவங்கள பத்திரமா லண்டனுக்கு அனுப்பி வச்சிட்டாங்க சூப்பர் சூப்பர்.
    நான் ரொம்ப பயந்துட்டே இருந்தேன் எங்கடா மின்மினிய சர்வேஷீக்கு பேசி வைப்பாங்களோன்னு. நல்ல வேலையா அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆதினி நல்ல ஜோடி தான் சர்வேஷுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!