அத்தியாயம்-59
துளிரின் நிச்சயத்திற்கு இரண்டு அண்ணன் தோள் வளைவில் ஏற்றி வந்த பல்லாக்கில் வந்தாள்.
ஆதினியோ வலது பக்கமிருந்த சர்வேஷை கவனிக்க, மண்டப வாசலில் பன்னீர் சாரலில் பதமாய் பல்லாக்கை இறக்கி விட்டு முகமெல்லாம் சந்தோஷத்தின் ஆர்ப்பரிப்பில் இருந்தவன் ஆதினியை கண்டதும், ரசவாதம் இதயத்தில் நிகழ ஆரம்பித்தது.
இதற்கு முன் அவளை கண்டு ஒதுங்கியும் கவனமாய் பழகும் பண்புடன் இருந்தவன், அடிக்கடி அவன் பார்வை அவளை வட்டமிட்டு மொய்த்தது.
ஒரு ஆண்மகனின் பார்வை உச்சி முதல் பாதம் வரை நாண வைக்குமா? சாதாரண கடைக்கண் பார்வைக்கு விதிர்த்து, தன் அண்ணன் விதார்த்தை பக்கம் ஓடினாள்.
“வெடியெல்லாம் அதுருது.” என்று தீவிரமாய் கொழுந்து பக்கம் வந்து சேர்ந்தான் விதார்த்.
இருவரையும் நிற்க வைத்து ஆரத்தி தட்டுக்கள் எடுக்கப்பட்டது. எப்பொழுதும் திருமணத்திற்கு முன் எடுக்கப்படும். இப்பொழுது ரிசப்ஷனிற்கு நிச்சயத்திற்கும் இவ்வாறு எடுக்கப்படுகிறது. சொல்லப்போனால் மணமகள் நடனமாடி வருகின்றாள்.
இங்கு பாட்டி தங்கலட்சுமி ‘டான்ஸ் எல்லாம் ஆடக்கூடாது’ என்ற கண்டிப்பு கடிவளையம் போட்டியிருக்க அடக்கவோடுக்கமாய் வந்தாள்.
ஆளாளுக்கு நிச்சய விழாவில் திளைத்திருக்க, விதார்த் வீட்டில் பெரிதாய் சடங்கு சம்பிரதாயம் பார்க்க மாட்டார்கள்.
முத்துவேலன் தாய் மாமா முறைக்கு மேடைக்கு அமர, விதார்த் பக்கம் சித்தப்பா வழி சொந்தமும் மறுபக்கம் சித்தி வழி சொந்த மென்று இருக்க, வித்யுத்தின் நண்பன் கார்த்திக்கை வருங்காலத்தில் வசீகரனுக்கு மாமனாராக வருபவரை தாய்மாமனாக அமர வைத்தார்.
இரண்டு வீட்டு பக்கமும் தட்டு மாற்றி கொண்டு, மேடைக்கு வரக்கூறினார்கள். வித்யுத் தரப்பில் தம்பி ஆத்விக் கால்நடை மருத்துவன், அவரது மனைவி மஹதி, ஆருத்ரா சரண் இருந்தனர்.
அதே போல் நிபுணன் வீட்டு சார்பில் சாருலதா-முத்துவேலனோடு, வெண்ணிலா-விகாஷ், தவிர்த்து பரதன்-எழில் இருந்தனர்.
துளிரை அலங்கரிக்க ஆதிரா சென்றிருந்தாள்.
விதார்த் கூட நண்பன் சரவணவேலன் நின்றிருந்தான்.
அதனால் ஆதினி அங்குமிங்குமாக சேலையில் பவனி வந்தாள்.
சாதாரணமாகவே அழகு சிலையென இருக்கும் பெண்ணவளை, கண்ணில்பார்த்து இதயத்தில் பதிய வைக்கும் ஆண்கள் குணம். இதில் தன்னை மணக்க இவளை வீட்டில் தேர்ந்தெடுத்ததை அறிந்தப்பின், இன்னமும் நழுவுபவனா ஆர்யனின் தம்பி சர்வேஷ்.
இதுவரை காதலென்று பேத்தல் புரியாத இதயம் தற்போது ஆதினியிடம் பேசுவதற்கு ஆசைக்கொண்டது. தங்கை நிச்சயத்திற்கு வந்த கூட்டத்தின் அலை ஓய காத்திருந்தான்.
ஆதினி தந்தை சரண் வேறு தன்னை கவனிக்க இயல்பாய் கடந்தான். சரண் என்றில்லை, ஆளாளுக்கு எதிரிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்ற ரீதியில் குறுகுறுவென சர்வேஷை நோட்டமிட்டனர்.
ஆருத்ராவிடம் சரணோ ‘புல் சாட்டிஸ்பேக்ஷன் பையன் எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று கூறி வித்யுத்திடமும் தெரிவித்திருந்தார்.
மாலை ஐந்திற்கு களைகட்டிய நிச்சயதார்த்தம், ஒன்பரை ஆகவும் நிதானிக்க, நிபுணனோ சர்வேஷ் அருகே அமர்ந்து, “வித்யுத் கேட்டா ஓகே சொல்லிடலாமா சர்வேஷ்” என்று கேட்டார்.
“எ…எதுக்கு ஐயா” என்று அறியாது கேட்க, அன்னை ஆதிராவோ, “மருமகள்டா… இரண்டாவது மருமகளா ஆதினி நம்ம வீட்டுக்கு வர ஓகே தானே.” என்றதும், சர்வேஷ் “உங்க விருப்பம் அம்மா” என்று வெட்கம் கொண்டான்.
அதன் பின் சரண் ஆருத்ராவிடம் மூத்தவர்கள் கலந்து பேசி முடிவெடுக்க, அங்கே அடுத்த திருமணத்திற்கும் ஜோடிகள் தேர்வானார்கள்.
ஆதினியை அவளது அக்கா அஞ்சலி, மாமா சேஷு அண்ணி திரிபுரா, அண்ணன் அருண், ஒரு பக்கம் சினிமா தியேட்டர் நிகழ்வை கூறி கேலி செய்ய, ஆத்விக் சித்தப்பா பையன் வசீகரன் மறுபக்கம் துளிர் அண்ணியை காண சென்ற போது சர்வேஷ் மச்சான் பார்த்து பார்த்து கவனித்ததை கிண்டல் செய்தனர்.
ஆதினியோ ‘ஐயோ அவருக்கு அப்ப கல்யாண விஷயத்தை பத்தி ஒன்னும் தெரியாது.
பெரியவர்களுக்கு இந்த தாட்ஸ் இருக்குன்னு கூட அவருக்கு தெரியாது. நார்மலா பேசி பழகினார். ஏன் எல்லாரும் ஏதோ லவ் பண்ணி சீன் உருவாக்குற மாதிரி டீஸ் பண்ணறிங்க” என்று பதில் தந்தாள். வாய் பதில் தந்தாலும் அவர்களது கிண்டல் கேலியை உள்ளுக்குள் மிகவும் ரசித்தாள் ஆதினி.
சரவணவேலனோ ”பங்காளி அர்ச்சனா வந்திருக்காடா. நான் கொஞ்சம் அட்டனன்ஸ் போட்டுட்டு வர்றேன்” என்று ஓடினான்.
விதார்த் அருகே கொழுந்து இருக்க நண்பனை இருக்க வைப்பானா? அனுப்பி வைத்தான்.
சிற்பிகா மண்டபத்தில் நிறைந்த சொந்தங்களை கண்டு திகைத்தாள்.
ஆதினி சின்ன மருமகள், அவளுக்கான சொந்தங்களை கவனித்து மகிழ்ந்தாள்.
லேசான கவலையும் எட்டி பார்த்தது. துளிர் நிச்சயத்திற்கு தன் தாய் தந்தை வரவில்லை. கைக்குழந்தையை வைத்து வர தயங்கினார்கள்.
சிற்பிகாவுக்கு தனக்கென சொந்தமில்லாத வருத்தம் முகத்தில் நிழலாட, ராணி ஆச்சியோ ‘எம்பேரன் ஆர்யனை கட்டிக்கிட்டியிருக்க, மூத்த மருமகள், ஆதிரா கண்ணுக்கு பிறகு பொறுப்பான இடம் உனக்கு தான் இருக்கு.
இப்படி திகைச்சி நிற்கலாமா? ஏங்கண்ணு எல்லாருமே உன் சொந்தமில்லையா?” என்று கேட்டதும் ராணி ஆச்சியை கட்டிக்கொண்டாள். மனதில் சலசலத்து கொண்டிருப்பதை கண்டறிந்து விட்டாரே.
''எம் பேரன் ஆர்யன் இங்க எந்த மூலைக்கு போனாலும் உன்னை கவனிச்சிக்க சொல்லியிருக்கான்மா. இப்படி கண்ணு கலங்கலாமா?" என்று தங்கலட்சுமி பாட்டி வந்து கேட்டார்.
“அதில்லை பாட்டி லேசா கண்ணுல தூசி” என்று கூற, “ஆனந்த் கண்ணீர் வரட்டும்மா.” என்று மாதவன் வந்தார்.
ஆதிராவும் “துளிரும் நீயும் இங்க வேற வேற இல்லை. சொல்லப்போன இனி துளிரை விட நீயும் ஆதினியும் முக்கியம்.” என்றதும் சிற்பிகா ”என்னை சுத்தி போட்டாச்சு. இரண்டாவது மருமகளை கவனிங்க அத்தை. பாவம் சர்வேஷ் தம்பியிடம் இன்னிக்கு மனசு விட்டு பேச சொல்லுங்க” என்று கூறி பேச்சை திசை திருப்பினாள்.
சுமன்-நதியா, பரதன்-எழில், பரதனின் மகள் ப்ரீத்தி-மருமகன் நிலவன் என்று படைசூழ, “நல்லா திசைதிருப்பிட்டிங்க அரசியல்ல கைதேர்ந்தவங்களா. அந்த குளிர்பான கம்பெனிக்காரன் வேற மாநிலத்தை தேடி ஓட வச்ச மாதிரி எங்களை சர்வேஷ் ஆதினி பக்கம் தள்ள பார்க்கறிங்க,” என்றனர்.
விளையாட்டாய் எடுத்து கொடுத்தாலும் இரண்டு வீட்டு ஆட்களும் மாநாடு போல அமைத்த சேரில் தனியாக வீற்றிருந்த சர்வேஷிடமும் ஆதினியிடமும் அங்கேயே சம்மதம் கேட்க இருவரும் தலையாட்டினார்கள்.
மாமனார் சரணோ “ஆதினி கொஞ்ச நேரம் பேசிட்டு வருவதா இருந்தா பேசிட்டு வா. பதினொன்றுக்கு மண்டபத்துலயிருந்து வீட்டுக்கு போகணும்” என்றார்.
ஆதினி வித்யுத் பெரிப்பாவை பார்க்க, அவரோ ஜஸ்ட் பேசதானே போ’ என்பதாக இமை மூடினார்.
இங்கே நிபுணனும் நிறைவாய் சர்வேஷை அனுப்பினார்.
தனியாக இருவரும் சேரில் அமர்ந்திருக்க, “அன்எக்ஸ்பெக்டட்” என்றான்.
“ம்ம்.. என்னிடம் விதார்த் அண்ணா முன்னவே கேட்டார்.” என்றதும் சர்வேஷ் மச்சான் விதார்த்தை பார்த்துவிட்டு ஆதினி பக்கம் திரும்ப, “ஆர்யன் அண்ணா ரீசன்டா தான் கேட்டார்” என்றதும், ஆதினிக்குள் மின்மினி தமிழை எல்லாம் இவருக்கு வந்து சென்ற ஆஃபர் அதையெல்லாம் பற்றி அறிந்திட ஆவலாய் இருந்தாள். ஆனால் தவறாக மாறிப்போனாளல்… அந்த பயத்தில் கையை பிசைந்து தரையை நோக்கி பார்வையை செலுத்தியிருந்தாள்.
, “ஒரே கிண்டலா இருந்ததுனு கேள்விப்பட்டேன். சொந்தக்காரங்க ஓட்டிட்டாங்களா” என்று சர்வேஷ் கேட்டதும், “பின்ன தனியா ஒருத்தரிடம் மாட்டினாலே பாவம். இத்தனை பேர் கிண்டல் பண்ணுறாங்க. இதுல என்னவோ அண்ணி அக்காவுக்கு எல்லாம் சினிமா தியேட்டர்ல உங்க பக்கத்துல உட்கார்ந்ததை வச்சி கேலி பேசுறாங்க” என்றாள்.
“சீரியஸ்லி அன்னைக்கு எதேச்சையா மீட் பண்ணியது. என் பிரெண்ட்ஸ் கூட என்னை கிண்டல் பண்ணி சாகடிச்சானுங்க” என்றான்.
“பொய்…. அன்னைக்கு தியேட்டர்ல இருந்து சட்டுனு பைக்ல போனத பார்த்தேன்.” என்றாள்.
சர்வேஷிற்கு தன்னை அன்றும் கவனித்தபடி இருந்தாளா? என்று பார்த்து, அன்று திணறி விழித்து முழித்த, ஆதினியின் மருண்ட விழிகள் மின்னலாய் காட்சிப்படுத்தினான்.
“ஏங்க… மின்மினி வாட்சப் பண்ணிருந்தா. எல்லாம் தமிழ் விவகாரம் தான். அதான் பிரெண்ட்ஸ்கிட்ட அவசரம்னு சொல்லிட்டு பறந்தேன். ஆனா அவனுங்க ‘எங்க நான் இருந்து கிண்டல் பண்ணுவேன்னு ஓடியதா காலேஜ்ல சொன்னாங்க. அது மட்டுமா? யார்டா அந்த பொண்ணு. உன் பக்கத்துல உட்காரணும்னு குழந்தையை கூட அந்த பக்கம் உட்கார வச்சிது. நீயுமே உன் பாப்கார்னை அந்த பொண்ணுக்கிட்ட கொடுத்துட்ட’ கேட்டாங்க.
என்ன சொல்லி தப்பிக்க, தமிழை வேற வீட்ல சிராப் கூட எடுத்த போட்டோவை காட்டினேன். அதனால் அப்ப நீங்க தான் எனக்கு ஜோடின்னு முடிவே பண்ணிட்டாங்க.” என்று கூறவும், ஆதினி உதட்டை ஈரப்படுத்தி, “மின்மினியை வச்சி கிண்டல் செய்யலையா?” என்றதும் கண்கள் சுருக்கி ஆதினியை கண்டான் சர்வேஷ்.
“இல்லைங்க… சி.எம் அரவிந்த் பொண்ணு. தமிழை கட்டிக் கொடுக்க நினைச்சதா விதார்த் அண்ணா சொன்னார். தமிழ் அவங்க யாரையோ லவ் பண்ணறதா துளிர் சொல்லவும், ஒரு வேளை மின்மினியை கட்டிக் கொடுக்க விரும்பலையானுனுனுனு” என்று இழுத்தாள்.
அட நீங்க வேற. அவங்களோட நமக்கு ஒத்து வராது. நட்புக்கு கைகோர்க்கலாம். வாழறதுக்கு சான்ஸ் இல்லைங்க. எங்க வீட்ல ஒவ்வொருத்தரும் இப்ப வரை அவங்கவங்க தொழிலை வேலையை பதவியை கவனிக்கறோம்.
வீட்ல அம்மா அண்ணி எல்லாம் அவங்களா தான் இப்ப வரை தனி கார்ல போய் பழக்கம்.
மின்மினி தமிழை கட்டிக்கிட்டா அது முடியுமா? அதுவும் இந்த திருநெல்வேலி டவுன்ல? எங்கம்மா ஐயாவை கட்டிக்க முன் வந்தாங்க அப்படின்னா சொந்தம். அந்த புள்ள வெளிநாட்டுல வாழற கோஸ்டிங்க.
எனக்கு எல்லாம் கடைசி மூச்சு வரை எங்க ஐயா அம்மா, அண்ணன் அண்ணி தங்கச்சி கூடவே இருக்கணும்.
வண்டி எடுத்தமா திருநெல்வேலி டூ நாகர்கோவிலு. அவ்ளோ தான்.
மின்மினியை கட்டிக்க எந்த நினைப்பும் போனதில்லை.
அதோட முதல்வர் அரவிந்தோட பையன் ப்ருத்வி. பொண்ணு தமிழ்.
மின்மினி எல்லாம் முதல்வரோட தம்பி பொண்ணு. அவங்க எப்படி முடிவெடுவாங்க?
நீங்க கேட்கறதை பார்த்தா தமிழை விட மின்மினியை எனக்கு கொடி போட்டு கணக்கிட்டிங்களோ?” என்றதும் ஆதினி தன் குட்டு வெளிப்பட்டதில் கீழ்உதட்டை கடித்தாள்.
“பாவமுங்க விட்டுடுங்க. நான் என்னை சொல்லலை உங்களோட கீழ் உதட்டை. வலிக்க போகுது” என்றான்.
ஆதினி கீழ்உதட்டை விடுவித்து, “நீங்க இதுக்கு முன்ன இப்படி பேசியதில்லை. இ… இப்படி பார்த்தும் இல்லை.” என்றாள்.
அக்கம்பக்கம் பார்த்து பேரை மெதுவாய் நகர்த்தி, “முன்ன தங்கச்சி வாழப்போற இடம். அங்கயிருக்கற பெண்ணிடம் பிளார்ட் பண்ண முடியுமா? காலேஜ்லயும் பிரெண்ட்ஸ் கூட இருக்கறப்ப சைட் அடிப்பேன்.
லவ் யாரிடமும் வந்ததில்லை. இப்ப தானே உங்களை எனக்கு பேசி முடிச்சிருக்காங்க. இனி பேசுவேன், பார்ப்பேன்.” என்றவன் புருவம் தூக்கி சிரிக்க, ஆதினி உள்ளத்திலிருந்த குழப்பம் அகன்று, வெட்கத்தை மட்டும் நிறைத்து கொண்டாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

அப்போ லவ் வந்துடும்
Sarvesh niyam than pa munna yaro evaro athu na la silent ah irundhan ippo avan wife ah vara pora ponnu so flirt pannalan sight adikalam love um kooda pannalam.
Super super sago
Nice sis waiting for next ud sis 😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
👌
So cute lovely epi 🥰🥰🥰
Paar da namma sarvesh um aaryan ku salachavan illa nu nirubikiran
Super epi
Super epi👍
Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr 👌👌👌👌👌👌🥰
Super 💓💓💓💓💓
அதானே பார்த்தேன்.. சைக்கிள் கேப்ல சைட் அடிக்கிறான், சந்துல சிந்து
பாடறான்..
Sarvesha vera level po👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕😍😍😍😍😍😍
ரொம்ப அழகானது நிபுணன் குடும்பம் ஆர்யன் துளிர் சர்வேஷ் எல்லோருடைய வாழ்க்கையும் ரொம்பசிறப்பா இருப்பது மகிழ்சியாதான் இருக்கு ஆனாலும் கதை முடிந்துவிடுமோ என்ற வருத்தம் அதை விட அதிகமா இருக்கு வீணா மா உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்
Super suoer akka…. Story vera level😘😘…. Waiting for next ud….
Sooopeerrr.sarvesh u pinnrae pa.sirbi aluthathum enakkum kannu verthuruchu.sooperrr fmly
nice!!!
Apadi. At last sarvesh got his pair. Super. Excellent sis.
❤️❤️❤️❤️
சூப்பர் செம
Super sis semma epi 👍👌😍 sarvesh Kum love vandhachu😘😘😘
Super super super super super super super super super super waiting for next ud sister👍👍👍👍 nan ipo than site la register panni intha story padikuren sister👍👍👍 story supera irukku
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அடேய் யப்பா சர்வேஷீ உனக்கு இப்படியெல்லாம் கூட பேச தெரியுமா
Super super super super