Skip to content
Home » என் நேச அதிபதியே-60(முடிவுற்றது)

என் நேச அதிபதியே-60(முடிவுற்றது)

அத்தியாயம்-60

சர்வேஷ் திருமணத்திற்கு மறுத்தவனாய், “இல்லிங்க ஐயா… துளிர் கல்யாணத்தோட என் கல்யாணம் வச்சா நான் எப்படிய்யா என் தங்கை கல்யாணத்துல வேலை பார்க்கறது. எனக்கும் என் தங்கை கல்யாணத்துல அலைஞ்சி திரிஞ்சு வேலை பார்த்து கண் நிறைய என்ற தங்கச்சி கல்யாணத்தை பார்க்கணும்.

நானும் அதே மேடையில ஆதினி கூடயிருந்தா, தங்கச்சி கல்யாணத்தை அந்தளவு நிறைவா பார்க்க முடியாதே” என்று வாதிட்டான்.

ஆர்கலி ஆருத்ரா இரட்டையர். திருமணமும் ஒரே மேடையில் நடந்தது. நீதிபதி வித்யுத் ஆர்கலியையும், காவலதிகாரி சரண் ஆருத்ராவையும் மணந்தார்கள்.

அதனால் அவ்வாறு எதிர்பார்க்க சர்வேஷ் பிடிவாதமாய் மறுத்தான்.

ஆதினி தந்தை சரணோ சர்வேஷ் பேசுவதும் சரியாக தோன்ற “சரிங்க சம்பந்தி மாப்பிள்ளை சொல்லறதும் நியாயம் தான். இவங்க கல்யாணம் பொறுமையா முடிக்கட்டும். விதார்த்-துளிர் மேரேஜை கவனிப்போம்.” என்று சரண் எழுந்தார்.

நிபுணனோ “ஒன்னும் கோபமில்லையே சம்பந்தி. நான் எவ்வளவோ சொல்லிட்டேன்… தங்கச்சி மேல பாசம் கூடுதலா.. அதான் சின்னவர் முரண்டு பிடிக்கிறார். மத்ததுனா சரின்னு தலையாட்டுவார்” என்றுரைத்தார்.

“அச்சோ நீங்க விளக்கம் தர வேண்டாம் புரியுது.” என்று நடக்க, நிபுணன் குடும்பத்தார் வாசல் வரை வந்து வழியனுப்பினார்கள்.

அரசாங்கத்தின் காவல்துறை வண்டியில் தான் சரண் வந்திருந்தார். அதனால் நேரத்தோடு கிளம்பினார்.

நீதிபதி வித்யுத்திற்கு கால் செய்து “வித்யு நீ சொன்ன மாதிரியே பையன் சம்மதிக்கலைடா. தங்கச்சி கல்யாணம் முடியவும் பண்ணிக்கறேன்னு கறாரா சொல்லிட்டார்.” என்று தெரிவித்தார்.‌

வித்யுத் கலகலவன நகைத்தார். “நிபுணனும் இப்படி தான் எதுனாலும் முடிவெடுத்தா மாற்ற முடியாது. அதான்‌ உன் ஆசைக்கு பேசி பார்க்க சொன்னேன்.” என்றார்.‌

“இப்ப புரிஞ்சிடுச்சு” என்று பேச, இங்கே நிபுணனோ சின்னவர் சர்வேஷிடம், “கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி ஒரே கல்யாணத்தை நடத்தியிருக்கலாம். ஏன்பா கட்டன்ரைட்டா சொல்லிட்டிங்க. பெரிய காவலதிகாரி.” என்று சர்வேஷை பார்த்தார் நிபுணன்.‌

“ஐயா.. இந்த வீட்ல ஒரு சம்பந்தி நீதிபதி, இன்னொரு‌ சம்பந்தி காவலதிகாரி, ஆனாலும் எங்களுக்கு நீங்க முக்கியமில்லையா. நமக்கு துளிர் முக்கியமில்லையா? அண்ணன் கல்யாணத்துல அவருக்கு சிற்பிகா அண்ணியை பிடிக்கலையேனு வருத்தமா இருந்தேன். நம்ம தங்கை கல்யாணத்துல அதற்கெல்லாம் சரிகட்டணும்.” என்று கூறவும் மகனை பெருமை பொங்க கடந்தார்.

இதில் ஆதிராவோ “அட்லீஸ்ட் மருமகளிடம் டெய்லி போன் போட்டு பேசுடா.” என்று கடிந்து சென்றார்.

ஆர்யனோ தம்பியை எண்ணி சிரித்து கடக்க, சிற்பிகா வேதனை நிரம்பி கண் கலங்கி மாடியேறினாள்.

ஆர்யன் மாடிக்கு வந்ததும், என்னயேதென வினவ, மாமாவுக்கு நீதிபதி, காவலதிகாரி எல்லாம் சம்பந்தி… எங்க அப்பா மட்டும் குடிக்காரர். என்னால தானே உங்களுக்கு அவமானம்? நீங்க தமிழை காதலிச்சி கல்யாணம் காட்டியிருக்கலாம்ங்க. அந்த பொண்ணு அப்படியொன்றும் தப்பான கேரக்டர் இல்லை. நல்ல குணம் தான். சி.எம் மகளை கட்டியிருந்தா சென்னையில பெரிய பெரிய ஹாஸ்பிடல்ல டீன்னா இருப்பிங்க.

என்னை கட்டிக்கிட்டது வேஸ்ட்.” என்று தேம்பினாள்.

ஆர்யனோ “கடவுளே… எத்தனை முறை டி உன்னை தேற்றுவது?

இப்பவே இப்படியா?

நாளைக்கு பெரிய மருமக சின்ன மருமகன்னு எங்க ஐயா-அம்மா தலையை உருட்டுவிங்க போல.

இப்ப யாரு உங்க அப்பா குடிக்காரன்னு சொன்னது? நீயா லூசாட்டம் பேசாத.

எங்கய்யா நல்லது நடத்திட்டு சிறைச்சாலைக்கு போனவர். அவருக்கு ஏத்த மாதிரி நீயும் நல்லதுக்கு போயிட்டு வந்தவ. தேவையில்லாம பேசாத.. திரும்ப சப்புன்னு கன்னம் பழுக்க அறைஞ்சிட கிறைஞ்சிட போறேன்.

இங்க யாரும் உன்னையும் உன் வீட்டையும் குறைச்சி யாரும் இங்க பேசமாட்டோம். நீயா வாலண்ட்ரியா பேசாத. ஆதினியும் பேசற மாதிரி தெரியலை. அப்படியே பேசினா தம்பி சும்மாயிருக்க மாட்டார்.
எங்களை நம்பி என்னை நம்பி கழுத்தை நீட்டின உன்னை ஒரு சொல் தப்பா பேச விடமாட்டேன்.
நீயா உன்னை தாழ்த்திக்காத. அவ்ளோ தான்‌ இதான் லாஸ்ட்‌” என்று எச்சரிக்கை செய்தான் ஆர்யன்.

சிற்பிகா கண்கள் பளபளப்பாய் கண்ணீரால் மின்ன, அவள் துடைக்க வந்திட, அவள் கையா தடுத்து ஆர்யன் கன்னத்தை துடைத்தான்.

அடுத்த கணமே அவள் கையை இறுக்க பிடித்து கண்கள் திகைக்க விரிந்தது. “நைஃப்… பீரியட்ஸ் ஆகி எத்தனை நாளாச்சு?” என்று கேட்டான்.

மூக்குறிந்து “தெரியலை…. ஏன் சப்பந்தமேயில்லாம கேட்கறிங்க. என் மைண்டை திசைத்திருப்ப தானே” என்றாள்.

“அடியேய்… நாடி எக்குதப்பா துடிக்கு” என்று அவளை அமர வைத்து ஸ்டதஸ்கோப்பை எடுத்தான்.‌

அவளது இதயமிருக்கும் பக்கம் வைத்தவன், கையில் நாடியிலும் மருத்துவனாய் சோதித்தான்.

அவன்‌ கணிப்பு அவள் கர்ப்பவதியாக கூற, அவள் கன்னம் பிடித்து இதழ் முத்தம் வைத்து மழலை வரும் விஷயத்தை பகிர்ந்தான்.

சிற்பிகாவும் மற்ற அழுகுனி பேச்சை மறந்தே போனாள். கூடுதலாக தாரை தாரையாக ஆனந்த் கண்ணீரை தழுவவிட்டவளோ, “என்னடி இதுக்கும் அழுகையாக?” என்றான்.‌

“நான் தான் இதெல்லாம் நினைவு வச்சி சொல்லணும். ஆனா நான் தொகுதி வேலை அதுயிதுனு அரசியல் வேலை பார்க்கவே போயிட்டேன். இதை கூட நானா சொல்லலை‌” என்று தேம்பினாள்.

“கன்பார்ம் டி…. கான்பார்ம்… பிள்ளை உண்டானவங்க காரணகாரியம் இல்லாம புருஷனோட சண்டை பிடிப்பாங்கன்னு வர்ற பேஷண்டுக்கு சொல்லி விடுவேன்.

இங்க எனக்கே நீ உடுப்பை அடிக்கிற. அதுசரி… நாம என்ன வானத்துலயிருத்து குதிச்சோமா என்ன? நீயும் நானும் ஆர்டினரி கணவன் மனைவி தானே.” என்று தாடை பிடித்து கொஞ்சினான்‌

“என்னங்க.. நிஜமா உண்டாயிருக்கேனா?” என்று கேட்டாள்.

“பத்து மாசம் கழிச்சு குட்டி வந்து பால் குடிக்க தொல்லை பண்ணும்ல அதுவரை நம்பாத” என்று குறைப்பட்டான்.

“எவ்வளோ பெரிய ஹாப்பி நியூஸ். அனுபவிக்க விடறியா” என்று முத்தங்களை மீண்டும் சுவைக்க ஆரம்பித்தான்.


கீழே சர்வேஷோ அறைக்குள் “ஏய்… இப்ப என்ன அவசரம்? கல்யாணத்துக்கு முன்ன கொஞ்சம் காதலிப்போம். கல்யாணத்தை தள்ளி வச்சதுக்கு இந்த குதி குதிக்கற? முதல் முதல்ல பார்த்தப்ப இந்த பூனை பால் குடிக்குமான்னு அமைதி. இப்ப சல்லி கல்லை கலவை மிஷினில் போட்ட மாதிரி சத்தம் கொடுக்குற” என்று எகிறினான்.‌

‌‌ வித்யுத் மூலமாக ஒரே நேரத்தில் திருமணம் வேண்டாமென்று சர்வேஷ் கூறிய விஷயம் ஆதினிக்கு தெரியவும் “ஏன் ஒரே திருமணம் நடந்தா என்ன?” என்று சர்வேஷிடம் தான் மல்லுக்கு கத்தி இதோ பதில் பேச்சு வாங்குகின்றாள் ஆதினி.

“பி.இ. படிச்ச பில்டிங் கட்டுறவரோட புத்தியை பாரு. கலவை மெஷின்ல சல்லி போட்டது மாதிரின்னு பேச்சு.” என்று கலாய்த்தாள்.

“ஆமாம்மா… இங்க என் அண்ணனுக்கு நான் காட்டிக்கொடுக்க போற ஆஸ்பிட்டல் தான் என் முதல் பிராஜெக்ட் டிசைனே. அப்படி தான் பேசுவேன்.

நீயாவது இரண்டு மூன்று இடத்துல என்னை வச்ச கண்ணு வாங்காம பார்த்த. நான் அப்படி உன்னை சைட் அடிச்சேன்? திருப்தியா கொஞ்ச காலம் காதலிக்கறேனே.

முடிஞ்சா உன்னை தேடி வந்தா… இரண்டு முத்தம் கித்தம் தரலாம் ஆதும்மா.” என்றான் குழைவாக.

ஆதினியோ “சரு நாம இரண்டு தடவை தான் மீட் பண்ணினதே‌” என்று குரல் கிணற்றுக்கடியில் கேட்டது.

“பின்ன என்னவாம். மொத்தமே மூன்று முறை பார்த்தோம்.‌ அதனால பக்கா அரேஜ்மேரேஜ் நான் லவ் மேரேஜா கன்வெர்ட் பண்ண ட்ரை பண்ணுறேன். நீயென்னடான்னா கல்யாணம் கட்டறதுலயே இருக்க” என்று கூறவும் ஆதினியோ, அவன் நிலைமை புரிய, பேச்சு வேறு கலவி பாடத்தில் திரும்பியது.


“உங்கண்ணாவுக்கு என்ன பிரச்சனை தாலி கட்டி வீட்ல டூயட் பாடலாம்ல. அவனும் காலேஜ்ல எவளையும் காதலிக்கலை. இப்பவும் கல்யாணத்தை தவிர்த்து தங்கை தான் எல்லாம்னு பாடறான்.” என்று சர்வேஷை பற்றி கொழுந்திடம் பிளுபிளுவென கேட்டான் விதார்த்.

“என்ன ஏன் கேட்கறிங்க. உங்க சின்ன மச்சானிடம் கேளுங்க. நீங்க தானே உங்க தங்கைக்கு பொறுத்தம்னு சொன்னது. இப்ப வருத்தப்பட்டா எனக்கு தெரியாதுப்பா.” என்றாள்.

“எங்களுக்கு தங்கை பாசமில்லையா? என்னவோ ஊர்ல ஒருத்தி தங்கச்சியா கிடைச்சதா உங்கண்ணன்ங்க பில்டப்.” என்றான் விதார்த்.

‌ “எங்க பெரியண்ணாவை முன்ன ஏதாவது சொல்லிட்டு இருந்திங்க. இப்ப சின்ன அண்ணாவா? என்னயா உனக்கு வேண்டும்.” என்று கொழுந்து பேச, விதார்த்தோ “என்னத்த வேண்டும்னு சொல்லறது? கேட்டா கொடுப்பியா? ஐஸ்கிரீம் திண்ணுட்டு வா கிளம்புவோம். இல்லை… என் தங்கச்சியை காணோம்னு இரண்டு படைவீரரும் பைக்ல பறந்து வரலாம்.

என்ன ஒரு அதிசயம்னா, முன்ன உன்ற தாய்மாமா மகன் சரவணனும் என்னல.. ஏன்ல… உனக்கொன்னுனா பதறுவான். பக்கி அர்ச்சனா கூட பிளாக் தண்டர் போயிருக்கு. போன் பண்ணினா எடுக்கவே மாட்டறான். முத்து சித்தப்பாவும் சாரு சித்தியும் போன் எடுக்கலை. இல்லைனா அந்த தடிமாட்டை இப்பவே வர வச்சி கொன்று இருப்பேன்.‌” என்று கூறவும் ஐஸ்கிரீம் கடையிலிருந்து இருவரும் சிரித்து பேசி திரும்பினார்கள்.

விதார்த் பேச பேச செல்லமாய் திமிரரசனின் புஜத்தில் கிள்ளினாள். அவனும் அவார்ட் வாங்கியவன் போல இளித்தான்.

இவர்களை கட்டிடத்தில் எதிரில் அறைக்குள்ளிருந்த ஞானவேலோ ‘இந்த பொண்ணை வச்சி அவன் அண்ணன் அண்ணியை மிரட்டலாம்னா இந்த பொண்ணு என்னடா ஜட்ஜ் வீட்டு மருமகளா? அதுசரி நாம் முன் ஜாமீன் வாங்கி கமுக்கமா கொஞ்ச நாளுக்கு லாட்ஜில் இருப்பதே நல்லதென முடிவெடுத்து எதிரே கண்ணாடி கதவு வழியாக துளிரை கண்டு பொறுமினார்.

ஞானவேல் முதலில் சிற்பிகாவை எள்ளலாக நினைக்க, அடுத்தடுத்து அரவிந்த் நிபுணன் நட்பை நேரில் கண்டதும், முதலமைச்சரின் குடும்பமே தங்கி செல்லும் விருந்தினராக நிபுணன் வீடு இருக்க, ஆட்டம் கண்டார்.

இதில் துளிர் ஜட்ஜ் மருமகளா ஆகவும், சர்வேஷ் நாகர்கோவிலில் பெரிய பதவியில் இருக்கும் அதிகாரியாக மாமனார் சரண் இருக்க, எங்க போனாலும் முட்டு சந்தா இருக்கே என்று நகைச்சுவை மன்னனாக மாறினான்.

தான் சீண்டிய பெண் கட்சி வேட்பாளர், புகார் தர, ஞானவேலை தற்போது வலை வீசி தேடுகின்றனர்.
அவனோ சின்னஞ்சிறிய லாட்ஜில் புலம்பல் புரிந்தான். விரைவில் கட்சி தொகுதியிலிருந்து நீக்கப்படலாம் என்ற பேச்சு வேறு கசிகின்றது.‌


சிற்பிகா கர்ப்பம் கூறவும் வீட்டில் ஆனந்தத்திற்கு அளவேது.

ஆர்யனோ வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்ப்பேன் என்று தாய் தந்தையரிடம் ஆனந்தத்தை பகிர்ந்தது முதல் மனைவியை தாங்கினான். ராணி ஆச்சி வாரிசு வரவும் உள்ளங்கையில் தாக்கினார்.

ஆதிராவோ “டேய்… அண்ணன் குழந்தை பிறக்கற வரை கல்யாணம் வேண்டாம்னு சின்னமருமக கூட கடலை வறுக்காத. துளிருக்கு முடிந்ததும் உனக்கு பண்ணிட்டா எங்க திருமண கடமை முடியும்.

அடுத்த கடமைக்கு தயாராகிடும்” என்றார்.

“போங்கம்மா” என்று சர்வேஷ் வெட்கப்பட்டிட, துளிரோ அவள் வாழப்போகும் வீட்டில் அண்ணி உண்டான சந்தோஷத்தை பகிர மீண்டும் போனில் திமிரரசனின் காலிற்கு அழைத்தாள்.

இவ்வாறாக மகிழ்ச்சியின் அலைகள் பன்மடங்காக, அடுத்தடுத்து மணநாளும் பிள்ளை பேறு காலமும் திருநிறையகம் சந்திக்கும்.

ஆளாளுக்கு தங்கள் நேசத்தை வழங்க காதலில் அதிபதியாக விளங்குவதால் இல்லறம் நல்லறமாக சென்றிடும்.

மருமகள் என்று யார் வந்தாலும் இரண்டு மைந்தனும் பார்த்துக் கொள்ள ஆதிரா இடைவிடாது தனக்கான அறப்பணியை தொடர்ந்தார்.

குழந்தைக்கு நல்ல தகப்பனாக, மனைவிக்கு மதிப்பு கொடுத்தாலும் நல்ல கணவனாக, சிறைக் கைதியாக இருந்தாலும் நீதிபதிகள் காவலதிகாரிகள் என்று தங்கள் வீட்டில் பெண் எடுத்து பெண் கொடுத்திட விரும்புபவரை ஆதரித்து, இவ்அனைத்து நல்ல பழக்கத்திற்கு வித்திட்டு நின்றார்‌ நிபுணன்.

அவரை போலவே ஆர்யனும், சற்று சர்வேஷும். நிமிர்ந்த நடை, மதிப்புடன் பேச்சு, நியாயம், தர்மம் என்று பார்த்து பார்த்து விருப்பம் கொள்ள திருநிறையகம் எப்பவும் போல நிறைவாக இருந்தது‌.

மனைவியை மனதார நேசித்து வாழும் கணவன், நேசத்தின் அதிபதியாக பூஜிப்பது தவறில்லையே...❤️

❤️சுபம்❤️

பிரவீணா தங்கராஜ்

33 thoughts on “என் நேச அதிபதியே-60(முடிவுற்றது)”

 1. Kalidevi

  S kandipa over mariyathai koduka atleast konjam irukalam purithal irunthave alaga pogum vazhkai antha mari tha nibu aaryan. Superb superb ending 👌 👏 👍. Congrats sisy. Sikram arjun kathai kondu vanga

 2. Priyarajan

  Lovely story sis💕💕💕💕💕💕💕💕💕💕💕💕😘😘😘😘😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌

 3. Priyarajan

  Lovely story sis💕💕💕💕💕💕💕💕💕💕💕💕😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌

 4. Avatar

  Semma semma semma semma semma semma semma semma semma semma semma semma alagana family story sister👍👍👍👍👍 entha oru cinna mistake um illama story nalla full fill pannitinga sis 🥰🥰🥰🥰🥰waiting for epilogue 😍😍😍😍😍

 5. Avatar

  Super sis happy ending semma story pa ellarukum oru niraivana vazkhai parkave romba santhoshama eruku last la sirpika consive nu sonnadhu semma pa👍👌😍😍😍❤️😘 seekirama next story podunga sis🙏

 6. Avatar

  Super. Excellent narration sis. Awesome story. We miss ariyan very much sis. Super happy ending. Nibu loveable hero forever. Wonderful story sis.

 7. Avatar

  Super story sis Sarvesh ku pure arrange marriage ah irukam athu na la konja nall love pannitu marriage panran ah ivan um.aariyan um innaiku avanga wife nu nesa athipathi ah irukirathu ku nibu oda nadathai than karanam avan athira mela vachi irundha love um avan aval ah treat panna vitham um parthu valandha pasanga la aachae

 8. Karthika R

  Sema sema sema happy ending 🥰🥰🥰🥰 romba azhagana etharthamana story 🤩🤩🤩🤩🤩 ellarayum romba miss pannuven 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 all pairs are so lovely ❤️❤️❤️❤️❤️❤️ happy ending🤩🤩🤩🤩🤩🤩🤩Waiting for epilogue 🥰🥰🥰🥰🥰

 9. Avatar

  Semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma sis, sarvesh marriage kattirukalam, Happy ending superrrrrr 👌👌👌👌👌👌🥳🥳🥳🥳

 10. Avatar

  Super super akka…. Sema ending…. Ella epi um romba nalla irundhudhu….. 😍😍😍story mudinchadhu konjm kastama irukku…. Ellaraiyum romba miss panrom ka😍…. Nibu, adheera, aryan…..ella characters um romba romba azhaga irundhudhu enga manasula azhama ninnutanga…. Super ka😘😘😘😘…..

 11. Avatar

  Arumai ❤️❤️❤️ niraiyagam mudium poothu romba ithama santhosamana niraiva irruku payrukku yatha mari ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
  Ellathukkum adipadai nipu aadhi oda vazhkai murai thaan … Epavum oru kudumbam nallatha irrukanum next generation um athye mari varanum na avanga appa Amma Patti thatha nu 1st kudumbam thaan ellathaium kathu tharum 🥰 antha vithathula olukkam, nayramai, neethi, mathipu , mariyathai , samaniliyana ennam , enga athiradi kattanumo anga adikku adi 🔥 nu ellam pakka package 🎁🎇❤️
  Kadhal kaiyanamoo illa yarppattu kalyanamoo yathunalum konjam purithal ,rendu pakkam nadaimurai valakkam pathi thayrinju konda poothum after marriage life oru niliya kondu pooga easy aa irrukum …atha vittuttu namaloda yathirparpa innorther ta thayduna anga yamatram thaan kidaikum life oru seera poogathu.
  Naysa athipathi nanjam niraivu ❤️❤️❤️❤️❤️❤️

 12. Avatar

  ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

 13. Avatar

  அடடா குழந்தை பிறக்கும்
  முன்பே முடிஞ்சிடுச்சா

 14. CRVS2797

  Wow..! Super..! Super..! Super..!
  Super..! Super..! Super..! Super..!
  Super..! Super..! Super..! Super..!
  Super..! Super..! Super..! Super..!
  Super..! Super..! Super..! Super..!
  Super..! Super..! Super..! Super..!
  Super..! Super..! Super..! Super..!
  Super..! Super..! Super..! Super..!

 15. Avatar

  😍😍🥰🥰🥰👌👌👌
  As always best seller idum….
  Ur way of writing is awesome….👏👏👏
  🥰🥰🥰

 16. Avatar

  அச்சோ story முடிந்து விட்டதா நம்ப முடிய வில்லை சகி எபிலோகி வேண்டும் சகி

 17. Avatar
  Vijayalakshmi Vaasan

  மனதிற்கு நிறைவான கதை. எல்லா கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றனர். அருமை தோழி❤❤❤. மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

 18. Avatar

  Excellent family love story

  Good thing in this story is there is no proper negative characters so story moving with full of positive vibes

  What I felt was Without inclusion of aravind family(tamil ,minmini )means
  This story moving in one track smoothly

 19. Arulmozhi Manavalan

  அருமை பிரவீணா மா 😊😊😍
  அருமையான அன்பான குடும்பம். சூப்பர். தாய் தந்தையர் போலவே பிள்ளைகளும் மனதில் நிறைந்து விட்டார்கள்.
  அருமை அருமை.. 😊😊😍😍

 20. Avatar

  அருமையான கதை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
  எதுக்காக இப்படி பொசுக்குனு முடிச்சீங்க 😡 துளிரோட கல்யாணம் சர்வேஷோட கல்யாணம் அப்புறம் சரவணன் கல்யாணம் அப்புறம் ஆரிய சிற்பியோட குழந்தை இதெல்லாம் காட்டாம முடிச்சிட்டீங்களே😏😏😏😏😏

 21. Avatar

  Nice ending sis 🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *