பாகம்-21
அவளின் மெல்லிய அழிப்புக்கு அவன் அவள் அருகில் வந்ததும், சட்டை காலரை பிடித்துக் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் தந்தாள். பெரியவர்களும் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ள்வில்லை. குழந்தைகள் சந்தோசமாக இருப்பது தானே அவர்களுக்கும் தேவை. ஆனால் சாரதா மகனின் முகத்தை உற்று நோக்கினாள். அவள் எதிர்பார்த்தது போலவே ஒரு சிறு கூச்சமும் வெட்கமும் அவன் முகத்தில் இருந்தது. “அம்மா! நாங்க கல்யாணம் பண்ணிக்கலான்னு யோசிக்கிறோம். தயக்கம் இல்லாமல் கம்பீரமாகவேச் சொன்னான் சூர்யா. “இப்பதான் யோசிக்கறீகளா? இதுக்கு மேல எங்களால உங்க அட்டகாசம் தாங்க முடியாது. ஒடனே கல்யாணம்.என்ன அண்ணா சொல்லறீங்க?” இப்போது மருமகள் முகம் வெட்கத்தில் சிவந்தது. (கல்யாணம்னா பொண்ணுக்கு வெக்கம் வர வேண்டாமா?)
“நான் என்ன சொல்லறது சம்மந்தி அம்மா! அவ உங்க வீட்டு பொண்ணு” “அவங்கள சாப்பிட சொல்லி இருக்காங்க எல்லாரும் வெளில போங்க. யாராவது ஒருத்தர் மட்டும் இருங்க” அதட்டிக் கொண்டே வந்தாள் நர்ஸ். இப்போது அவள் தந்தையுடன் இருக்க விரும்பினாள். அதுவரை எதையும் காட்டிக் கொள்ளாதவர் மகளைத் தனிமையில் பார்த்ததும் அடக்க முடியவில்லை.
“என்ன பாப்பா இப்படி பண்ணிட்டியே ? என் பொண்ணு என் பொண்ணுன்னு உன் வாழ்க்கையை பாழாக்கிட்டனே?” குலுங்கி குலுங்கி அழுதார். ” என்னப்பா இது சின்னக் குழந்தையா நீங்க ? முதல்ல சாப்பாடு குடுங்க. எனக்குச் சுத்தமா சக்தி இல்ல” மகளின் கட்டளைக்குப் பிறகு கண்ணைத் துடைத்துக் கொண்டவர் மெதுவாகச் சாப்பாடு ஊட்ட ஆரம்பித்தார். “அப்பா! நான் சூர்யாவை கல்யாணம் பண்ணிக்கறது உங்களுக்கு ஒகேதானே ?”
“இது என்ன கேள்வி தங்கம்?” கன்னத்தை வருடினார். அதே சமயம் கோபத்தினால் ராகவ் மருத்துவமனையை விட்டு வெளியேறி இருந்தான். அவன் அந்தப்பக்கம் செல்லக் காயத்ரியும் சுந்தரியும் இந்தப் பக்கம் வந்திருந்தனர். அவள் உணவு உண்டு முடிக்கட்டும் என்று வெளியில் காத்திருந்தனர். சாரதா, சுந்தரியையும் காயத்ரியையும் நலம் விசாரித்தார். பிறகு சந்திராவை தன் மகனுக்குப் பெண் கேட்டார். “நீங்க அவருகிட்டேதான் கேட்கணும்” சுந்தரியின் பதில் சாரதாவுக்கு யோசனையாக இருந்தது.
“ஏம்மா! உங்களுக்கும் அவ பொண்ணுதானே ?” “இல்ல!சந்திரா எங்களோட பொண்ணு இல்ல. அவரோட தங்கச்சி பொண்ணு. நடந்த விஷயங்களைக் கூறினாள் சுந்தரி. “ஆன்டி! அதே மாதிரி அக்கா இந்தக் குழந்தையை வயத்துல சுமக்கறதும் எனக்காகத்தான். அந்தக் குழந்தைக்கு அப்பா என்னோட கணவர்தான்”
“என்ன சொல்லறீங்க?” புரியாமல் கேட்டாள் சாரதா.
காயத்ரி சிறிது தயங்கி பின் தொடர்ந்தாள். “நான் இதை இப்ப கண்டிப்பா நான் சொல்லியே ஆகணும். நாங்க ஏற்கனவே சந்திராவுக்கு நிறைய கஷ்டம் குடுத்துட்டோம் என்று தன்னுடைய அசிங்கமான காதல் கதையிலிருந்து விளக்க ஆரம்பித்தாள் காயத்ரி. ராகவும் காயத்ரியும் பெங்களுருவில் ஒன்றாக வேலை, காதல், ஒரே அறையில் தங்குவது என்று லிவிங்கில் இருந்தவர்கள். இதை அவள் சொல்லும்போது சுந்தரி அவமானத்தால் நகர்ந்து சென்று விட்டாள். ஒன்றாக இருந்தபோது காயத்ரி குழந்தை உண்டாகி கலைத்தும் விட்டாள். இந்த விஷயம் அறிந்த ராகவின் பெற்றோர் காயத்ரியின் வீட்டிற்கே வந்து வெளியில் நின்று கத்த ஆரம்பித்து விட்டனர். “அம்மா! இப்படி வெளில நின்னு கத்தாதீங்க. ரொம்ப அசிங்கமா இருக்கு” கெஞ்சினார் கணேசன். “உன் பொண்ணு என் பையனோட மாசக்கணக்குல ஒரே படுக்கைல இருந்தப்போ உனக்கு மானம் போகலையா? இல்ல! குடும்ப வாரிசைக் கலைச்சுட்டு வந்து நிக்கறாளே அப்ப உங்க மானம் போகலையா? இல்ல எல்லாமே நீங்கச் சொல்லிக் கொடுத்ததுதானா ?”
ஒரு நல்ல தந்தையாக எப்படி இந்தக் கொடூர வார்த்தைகளைத் தாங்க முடியும்? நல்லது சொல்லிச் சொல்லி நல்ல பிள்ளையாகத் தானே வளர்த்தார்?பிள்ளைகள் எங்கேயோ சென்று எதை எதையோ கற்றுக் கொண்டு அசிங்கம் செய்தாலும் பெற்றவர்களுக்குத் தானே அசிங்கம்.தாங்க முடியாதவர் மனதளவில் உடைந்தப் போனார்.அவர்கள் சென்றதும். தூக்கில் தொங்கி விட்டார். சந்திரா பார்த்துக் காப்பாற்றி விட்டார்கள். ராகவின் பெற்றோர் காலில் விழுந்து கெஞ்சி அவர்கள் கேட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்து திருமணத்தை நடத்தியது சந்திராதான்.
இந்தச் சம்பவம் நடந்த நேரம் சூர்யாவும் அவனையும் ஊரில் இல்லை. இருந்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ‘இவ்ளோ பெரிய அசிங்கத்தை எப்படி சந்திரா தன்னிடம் வாய் விட்டுக் கூற முடியும்? அதுனாலதான் அவ சூர்யாவை வேண்டான்னு சொல்லிட்டாளா? இந்தச் சின்ன வயசுல எத்தனை பெரிய பொறுப்பை ஏத்துக்கிட்டு இருக்கா?’ பெரு மூச்சு விட்டார் சாரதா. நாகரிகம் கருதி சற்று தொலைவில் அமர்ந்திருந்த சூர்யாவுக்கும் காதில் விழுந்தது. உங்க கிட்ட என்ன இருக்கு? பணம்? என்னோட பணத்தேவை ரொம்ப அதிகம். அதன் அர்த்தம் இதுதானா? போங்க போய்ப் படிச்சு பாஸ் பண்ணற வழியப் பாருங்க”அவள் சொன்னது தான் அவன் காதில் கேட்டது. ‘ எங்க எங்கிட்ட சொன்னா நான் டைவர்ட் ஆகிடுவேனோன்னுதான் எங்கிட்ட சொல்லலியா சந்திரா?’ மனதில் புழுங்கினான் சூர்யா.
” எப்டியோ எங்க மாமியார் வீட்டுல பேசிச் சம்மதிக்க வச்சு எங்க கல்யாணத்த சந்திரா நடத்தினா. அதுக்காக அவ பட்ட பண கஷ்டமும், மனக் கஷ்டமும் சொல்லவே முடியாது. அந்தச் சமயத்துல என்னோட குற்ற உணர்ச்சி ஒரு பக்கம். பொண்ண சரியா வளக்கலியேன்னு பெத்தவங்க பட்ட கஷ்டம் ஒருபக்கம். எங்க எல்லாரையும் தேத்தி கல்யாணத்தையும் பண்ணி. ப்ச்.! கூடப் பொறந்தவளா இருந்திருந்தா கூட யாரும் செய்யமாட்டாங்க. குளமாகிய கண்ணீரை காயத்ரி துடைக்கவில்லை. எல்லாம் அதோட முடியல. வந்த வாரிசை உங்களோட திமிரால அழிச்சவங்கதான் நீங்கன்னு கடவுளுக்குக் கோபம் வந்துடுச்சு போல. கல்யாணத்துக்கப்புறம் மறுபடியும் உண்டானேன். விஷயத்தைச் சொல்லிப் பெரியவங்க கிட்ட ஆசீர்வாதம் கூட வாங்கல. பார்த்தீங்களா அடுத்தது ஒடனே உண்டாகிட்டேன்னு மனசுல ஒரு கர்வம். “நான் ஆம்பள” ராகவிற்கும்தான் தலைக்கணம். நாலு மாசமா இருக்கும்போது ஆட்டோ சாஞ்சு நோண்டி வைச்சுருந்த பள்ளத்துல விழுந்து வயத்துல இருந்த குழந்தை ரொம்ப மோசமா சிதைஞ்சு., சொல்ல முடியாமல் கேவினாள். சாரதா அவளை அணைத்துக் கொண்டாள்.
“நானே ரொம்ப சீரியஸா இருந்து தான் உயிர் பிழைச்சேன். அம்மா வீட்டுலதான் இருந்தேன். அவருக்கு என்னோட குளிக்காத உடம்பும், ரத்த வாடையும் ரொம்ப அருவருப்பா இருந்துச்சு. என்ன பாக்க வர்றத கூட நிறுத்திட்டாரு. அது, குழந்தை இழப்பு எல்லாம் சேர்ந்து எனக்கு மனசளவுல ரொம்ப பாதிப்பு. கிட்டத்தட்ட பைத்தியம் நிலைமைக்குப் போய்ட்டேன். அப்பதான் அக்கா உனக்கான குழந்தையைச் செயற்கை முறைல நான் பெத்துக்குடுக்கறேன்னு சொன்னா. அப்போ நான் இருந்த நிலமைல அக்காவைப் பத்தி யோசிக்க முடியல. ஏன் அப்பா அம்மாவால கூட யோசிக்க முடியல” அப்போதும் இப்போதும் காயத்ரி அறியாத விஷயம் ராகவின் மிரட்டல். அவள் சொல்லவில்லை என்றாலும் சூர்யாவுக்கு அது நன்றாகவேத் தெரிந்தது.
காயத்ரி கண்ணீரை துடைத்துக் கொண்டாள். “முதல் தடவைலேயே அவளுக்கு க்ளிக் ஆகிடுச்சு. ஆனா அக்கா அவரை ஒரு நாள் கூடத் தப்பா பார்த்ததில்லை. அவ சூர்யா சார மட்டும்தான் விரும்பினா. அவளோட உடம்பு மனசு உயிர் எல்லாமே உங்க பையன்தான். அவரு படிச்சு பெரிய ஆளா வரணுங்கறதுக்காகத்தான் அவ தன்னோட நிலையைப் பத்தி வாயேத் திறக்கலை. பொதுவா அவ எதைப்பத்தியும் வாய திறக்க மாட்டா. அவள் வச்ச கண்மூடித்தனமான பாசத்தை நாங்க உபயோகப்படுத்திகிட்டோம். தொடரும்……..
ம்.. எல்லாருமே இப்படித்தான் சுயநலமா இருப்பாங்க போல.
Thank you ma
பார்க்கலாம்
Ava situation therinji neenga unga suya nalathuku use panikitingala itha reason vachi avan chandra kitta thappa nadanthukiran ipo ellam surya ku therinjiduchi surya pathupan eni apram iruku paru antha raghav ku
Thank you ma
எல்லாரும் சுயநல வாதிகள்
அப்படி சொல்லி விட முடியாது
Nice