Skip to content
Home » என் வாசம் நீ உன் சுவாசம் நான்-சுபம்

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-சுபம்

“நான் ஒரு சுயநலவாதி. லிவிங் ரிலேஷன் சிப் வேண்டான்னு எல்லாரும் சொல்லும்போது அவங்கள நாம பத்தாம் பசிலியா பாக்கறோம். அதுவே அசிங்கம், டிப்ரஷன் வரும்போது? வீட்டு மனுசங்க செய்ய வேண்டியது கடமைன்னு நினைக்கிறோம்” ஆழமான வார்த்தைகள். ஆமோதிப்பாய் தலை ஆட்டினார் சாரதா . இவற்றை எல்லாம் தூரத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த மாயாவுக்கு இப்போது புரிந்தது. இந்தச் சந்திராவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

அதையே சந்திராவிடம் சொன்னபோது,

“அவள் தலை சாய்த்து அப்படியா?என்ன வேணா செய்வியா? அப்போ ராஜூவை கல்யாணம் பண்ணிக்கோயேன்” சூர்யாவுக்கும், சாரதாவுக்கும் தூக்கி வாரிப் போட்டது. அப்போ மாயா? கேட்கணுமா?

 “நான் அவரை எப்படி?”

 “நீங்க ரெண்டு பேரும்தான் நிறைய பேசல. ஆனா ராஜு அவர் ஆட்டோல நான் போகும்போது உன்ன பத்தி நிறைய பேசி இருக்கார். அவரு உன்ன எவ்ளோ விரும்பறாரு தெரியுமா? ரொம்ப நல்லவர். ஆயாவும் உன்ன நல்லா பார்த்துப்பாங்க.நான் ஏன் ராஜூவை சொல்லறேன்னு உனக்குப் புரியும்போது நீ வேற லெவல்ல இருப்ப. மாயா! எனக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கும்போது உனக்கும் சந்தோசமான வாழ்க்கை கிடைச்சா? புருஷன், பிள்ளைகள் இதுக்கெல்லாம் நமக்கும் தகுதி இருக்கு மாயா, கண்களில் குளம் கட்டியது. அந்த வார்த்தைகள் மாயாவை உலுக்கி விட்டன. அதன் அர்த்தம் என்பது மாயாவுக்கும் புரிந்தது. “இது கட்டாயம் இல்லை. உன்னோட முடிவுதான்” திரும்பியவளின் கையைபிடித்தாள் மாயா.

“சரி! நான் கல்யாணம் பண்ணிக்கறேன்”, மாயாவின் நெற்றியில் எம்பி முத்தமிட்டாள் சந்திரா. “காட் பிளஸ் யூ மாயா” “மாயா அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், “ஏன்டி! எனக்கும் அங்கம்மாவுக்கும்தான் சொக்கு பொடி போட்டன்னு நினச்சேன். அடுத்து மாயாவுமா?” “டேய்! அந்த லிஸ்ட் பெரிய லிஸ்ட் டா “…… சாரதாவும் சேர்ந்து கிண்டலடித்தார்.

ராஜூ விஷயத்தைச் சொன்ன அன்று இரவு ஆயா ரொம்ப யோசித்தாள். ராஜு நன்றாகப் பிறந்த குழந்தை. பெற்றவர்களுடன் வண்டியில் சொல்லும்போது நடந்த விபத்தில் தப்பி பிழைத்தவன். கால் ஊனமாக இருந்தாலும்  என்றுமே ஆயாவைத் தொந்தரவு செய்தவனில்லை. அவளுக்குத் தெரியும். அவன்மீது எந்தப் பெண் வாடையும் படவில்லை. எப்போதுமே அவன் இப்படியே இருக்க வேண்டுமா? ஊருக்காக யோசிக்க வேண்டுமா அல்லது பேரனுக்காக யோசிக்க வேண்டுமா? ஒரு வேளை  ராணி சொல்வது போல அவளுக்கே ஏதாவது விபரீதம் ஆகி இருந்தால் வீட்டிற்குள் சேர்க்காமல் இருந்திருப்போம்?ஏதோ நேரம் அந்தப் பெண் மாயா  எங்கோ சென்று யாரிடமோ சீரழிந்தாள். இப்போது சூர்யாவின் குடும்பத்தில் அமைதியாக நல்லப்  பெண்ணாகத் தானே வாழ்கிறாள்? என்ன யோசித்தாலும் அவளால் முழுமையாக மாயாவை ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை. ஆனால்  சரி சொல்லி விட்டாள். பேரனுக்காக.

 அன்னை, மாயா இருவருமே சம்மதம் சொல்லியதில் ராஜூவுக்குத்தான் ஏதாவது உள் குத்து இருக்குமோ என்னும் அளவுக்கு யோசனை வந்தது. வந்த அடுத்த முகூர்த்தத்திலேயே நால்வரும் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டனர்.

முதல் இரவில்…… சூர்யா சந்திராவை கையால் தூக்கிக் கொண்டான்.

“ப்ச்! கீழ விடுங்க பயமா இருக்கு”

 “உனக்குதாண்டி பயமா இருக்கு. வயத்துல இருக்கற புள்ள ஜாலியா என்ஜாய் பண்ணுது” சொல்லிக் கொண்டே தன்னுடைய படுக்கையில் அவளை விட்டான்.

“எதுக்குடி அன்னிக்கு என்னோட இடத்துல எங்கம்மாவை கட்டிக்கிட்டு படுத்த ? “அவன் மேனி முழுவதுமே அவள்மேல் தான் இருந்தது கவனமாக. இப்போது அவளுக்கு உடல் எங்கும் கூச்சம் வந்து தொலைத்தது.

“உன்னோட பதிலுக்காக இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கறது? முகம் எங்கும் முத்தம் வைத்துக்கொண்டிருந்தான்.

“அது உங்களோட இடம்னு தெரிஞ்சுதான் படுத்துகிட்டேன்”

“கேடி! அப்பவே வாய விட்டுச் சொல்லி இருக்கலாமில்ல?”

 “படிப்பு படிப்புன்னு ஓடறவரை எப்படி தடுப்பணை போடறது. அதுவும் சும்மா படிப்பா ? நானும் கொஞ்சம் பொறுப்பா இருக்க வேணாமா?என்னோட செல்லம் அவங்க அப்பாவை விட்டு அம்மாவுக்காக வெளில வந்து சின்ன வயசுலேயே பசி தூக்கம் எல்லாம் விட்டுட்டு கட்டப் பட்டுப் படிக்கும்போது. அதான் நான் எதுவும் சொல்லல”, வாடிய அவன் முகத்தைத் தாங்கி,

 “சரி! நான் ஒரு கேள்வி கேக்கறேன்? நீங்க எந்தப் பொண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லையாம். மாயா புகழறா ?அப்படியா? “அவன் கன்னத்தை லேசாகக் கிள்ளி கொஞ்சினாள்.

“ம்! அதுல என்ன?”

“நீ! அவ்ளோ நல்ல பையனா ?”

 “ஏய்! நான் அம்மாவுக்கு அடுத்து பார்த்ததே உன்னைத்தானே. உன்ன பார்த்துட்டு அப்புறம் எப்படி வேற ஒருத்திய பாக்க முடியும்? உன்ன தவிர வேற  யாரையும் யோசிச்சது கூட இல்ல”

 அவள் புரியாமல் விழித்தாள்.

 “ஏ!மக்கு! முதன் முதல்ல உன்ன எங்கடி பார்த்தேன்?” அதை நினைவு கூர்ந்தவள்,

“சீ! நீ பேட் பாய்” இப்படியே இரவில் கொஞ்சல்களும் கேள்வி பதிலும் தொடர்ந்தன.

“டெலிவரி ஆகற வரைக்கும் நான் குட் பாயாத்தான் இருக்கணும். இரு உங்க மாமியாரை அனுப்பி வைக்கறேன்”. அவன்  வெளியில் சென்றாலும் அவன் கஷ்டம் அவளுக்குப் புரிந்தது. அவள் ஆசைப்படியே பிரசவத்தின்போது அவள் கணவன் அருகில் இருந்தான். குழந்தை பிறந்த மூன்று மாதங்கள் கழித்து இவள் குழந்தையைக் காயத்ரியிடம் கொடுத்தாள். அவளின் ஏக்கம் இவளுக்குத் தெரியாதா? குழந்தை வந்ததும், காயத்ரிக்கு உலகமே தெரியாமல் போயிற்று. குழந்தைக்குச் சேவை செய்வதில் அவளுக்கு உணவு கூட மறந்து போயிற்று. மனமகிழ்ச்சியில் பழைய காயத்ரியாக அழகான தேவதையாக மாறிப் போனவளை மீண்டும் சுற்றி வர ஆரம்பித்தான் ராகவ். எந்த விஷயமும் அறியாத மக்குப் பெண் கணவனிடம் சரணாகதி ஆனாள்.

======================================================

ராஜுவின் வீட்டில்…….

தயக்கத்துடன் திரும்பிப் படுத்துக் கொண்டவனை பார்க்க மாயாவுக்கு கஷ்டமாக இருந்தது. இன்னும் அவர்கள் இருவரும் சரியாகப் பேசிக் கொள்ளவில்லை. எத்தனையோ பேருக்குச் சில நிமிடங்களுக்கு மட்டும் மனைவியாக இருந்தவள், அவள் கணவனை எப்படி தள்ளி வைக்க முடியும்? அதுவும் முதல் இரவில்? இவள் தானாகவே அவனிடம் சென்றாள்.அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள். அவன் கையைத் தன் இடுப்பில் வைத்தாள். ஆண் மகன் விழித்துக் கொண்டான். “உனக்கு என்ன புடிச்சிருக்கா?” ராஜு கேட்டான். அவளிடம் பதில் இல்லை. “எனக்குக் கால் இல்லையே?” அவன் உதடுகள் அவளிடம் சிக்கி இருந்தன. அவளுக்கு வலித்து விடுமோ என்னும்படி அவளை அவன் பார்த்துக் கொண்டான். முத்தங்கள் கூடப் பூவுக்குக் கொடுப்பது போலவே இருந்தது. எத்தனையோ வெறி பிடித்தவர்கள் மத்தியில் இருந்தவளுக்கு இது ஒரு இன்ப உணர்வாக இருந்தது. அவள் வயது அவன் உடலுக்கு ஏங்கியது. அவனின் கொஞ்சலினால் அவளுக்குப் பழைய நினைவுகளை இல்லாமல் ஆக்கிக்கொண்டிருந்தான் ராஜு.

ராஜு, திருமணத்திற்கு பிறகு ஆயா வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று விட்டான். சூர்யாவும் ஆயாவுக்கு கம்பனி மூலம் ஒரு சிறு தொகை மாதா மாதம் கிடைக்கும்படி செய்தான். மாயா, அவளை மகா ராணி போலவே நடத்தினாள். எந்த அளவுக்குக் காலமெல்லாம் ஓடி ஓடி உழைத்தாளோ அந்த ஆயாவுக்கு இப்போது ரெஸ்ட் எடுக்கும் காலம். ராணியும் அடிக்கடி வந்து போவாள். அந்தப் பிஞ்சு குழந்தையின் பால் மணம் மாயாவுக்கு அப்படிப்பட்ட பேரின்பத்தைக் கொடுத்தது. மாயாவும் தினமும் சூர்யா வீட்டிற்க்குச் சென்று காலை வேளையில் வேலை செய்தாள். வீட்டு வேலை என்பதையும் தாண்டி மகளாகவே அந்த வீட்டில் அவளுக்கு உரிமை இருந்தது. சந்திராவும் அவள் படிப்பிற்கு உதவி செய்ய ஆரம்பித்திருந்தாள். அந்த வகையிலும் மாயா முன்னேற ஆரம்பித்திருந்தாள் என்றே சொல்லலாம்.

முதலிரவுக்குப் பிறகு அந்தச் சிறு வீட்டில் பல இரவில் பேரனின் முனகல் சத்தம் கேட்டு ஆயாவுக்கும் சந்தோஷமாகவே இருந்தது. அன்று மட்டும் அல்ல. எப்போதுமே. உடலுறவில் ஆரம்பித்த அவர்கள் பந்தம் மனதையும் விட்டு வைக்கவில்லை. அதற்குக் காரணம், கால் இல்லாத ராஜு, அவன் கனவுப்படியே மனைவியைத் தடகள வீராங்கனை ஆக்கினான். அவன் முதலில் இந்த விஷயத்தைச் சந்திராவிடம் சொன்னபோது அவள் தான் சொன்னாள். “ஒனக்கு ஓட்டப் பந்தயத்துல ஓட ஆசை. நீ ஓடலைன்னா உன் பொண்டாட்டிய ஓட வை” இவனுக்கு முதலில் எதுவும் விளங்கவில்லை. “ஏன் உன்னோட கனவை உன் பசங்க தான் நிறைவேத்தணுமா? நீ அவளை ஓடவை. அவ உன்ன பறக்க வைப்பா” அதனால் தான் அவள் ராஜூவை மணந்துக் கொள்ள மாயாவிடம் கேட்டாள் போலும். “நீ வேற லெவல்ல இருப்ப” சொன்னதன் அர்த்தம் இதுதான். அவன் காஸ்ட்லீ ஷுவுடன் தன் விருப்பத்தைச் சொன்னபோது, மாயாவின் உணர்ச்சிகளைச் சந்தோசத்தை சொல்ல முடியாது.பொதுவாக எல்லா கணவர்களும் கொலுசும் மெட்டியும் கொடுக்கும்போது இவன் அவளுக்கு ஷூ வாங்கி கொடுத்தான். அவன் அதற்காக எத்தனை கஷ்டப் பட்டிருப்பான் என்பது அவளுக்குத் தெரியும். அவன் கொடுத்த பரிசுக்கு அவள் பதிலுக்கு என்ன செய்திருப்பாள் என்பதை நான் சொல்லமாட்டேன். வெட்கமாக இருக்கிறது.

எந்த அளவுக்குக் காலம் அவளைப் பாதாளத்தில் தள்ளியதோ அதைவிட வேகமாக வானத்தில் பறக்க வைத்தது.அதற்காக அவளும் ராஜும் செய்த தியாகங்கள் அதிகம்தான். பட்ட கஷ்டங்களும் அதிகம்தான். மாயாவுக்கு இப்போது இதே வீட்டில் வேலைக்காரியாக இரு என்று சொன்ன அண்ணன் குடும்பத்தைப் பற்றிய கவலை இல்லை. அவர்கள் தன்னை மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்ற ஏக்கம் இல்லை. அவளின் அந்தப் பழைய பெயரை அழிக்க அவள் பல தடைகளை மிதித்து ஓடினாள். எந்த ஊருக்காகப் பயந்து ஆயா மாயாவை வேணடாம் என்றாளோ அதே ஊர் இன்று மாயாவின் நிகழ்ச்சிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் தங்கம் வென்ற என்ற செய்தியைப் பார்த்தபோது பக்கத்து வீட்டு ஆண்டாள் இவளைக் கட்டிக் கொண்டாள். புடவை முந்தானையில் கண்ணீரை துடைத்துக் கொண்டாள் ஆயா. ஆவலுடன் இருந்த ராஜூவுக்கோ கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் பூக்களாகக் கொட்டியது…….(சில வருடங்களுக்குப் பிறகுதான்)

==================================================

குழந்தையைக் காயத்ரியிடம் கொடுத்தவர்கள், அடுத்த சில வாரங்களில் ரிசெப்ஷன் வைத்தார்கள். வீணா வந்திருந்தாள். “தேங்க்ஸ் வீணா ! அன்னிக்கு நீதானே கார் ஓட்டிட்டு என்ன ஹாஸ்பிடல் விட்ட. வலியில் ரொம்ப துடிச்சு போய்ட்டேன். ரொம்ப பயந்திருந்தேன்.டைம்லி ஹெல்ப்”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சந்திரா. நான் தான் உங்ககிட்ட சாரி கேக்கணும். உங்க பக்கத்துலேயே நான் இருந்தும் நீங்க சொல்லக் கூட முடியாத அளவுக்கு உங்கள தப்பா பேசி இருக்கேன் ரொம்ப கில்டியா இருந்துஞ்சு.

“ப்ரண்ட்ஸ்குள்ள என்ன சாரி? நீ எதையும் மனசுல வச்சுக்காத”

ராகவ் வரவில்லை. மற்றவர்கள் வந்திருந்தார்கள். மேடையில் கம்பீரமாக நிற்கும் மாப்பிளை பெண்ணைப் பார்த்தவருக்கு மனம் முழுதும் மகிழ்ச்சி. சாந்தியை இந்தக் கோலத்தில் பார்க்காதவருக்கு அவள் மகளை நல்ல இடத்தில் காய் சேர்த்து விடா நிம்மதி. “என்ன அண்ணா! மகளையே வச்ச கண்ணு வாங்காம பாக்கறேன்?” “இல்ல தங்கச்சி. எங்கேர்ந்து இவ்ளோ அழகான பொண்ண சூர்யா புடிச்சிருப்பான்னு பாக்கறேன்” சந்தோஷமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு அங்கே ஸாரதாவுக்குப் பதில் சாந்தியாகவே தெரிந்தார் சாரதா. விழாவிற்கு ஸ்ரீ வரவில்லை.

“சார்! நீங்க வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தோம்” இரவில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார்கள். “எனக்கும் வரணுன்னு ஆசைதான். ஏதோ வர முடியாமப் போச்சு. அதனால என்ன? சீக்கிரமா பொண்டாட்டி புள்ள குட்டிங்களோட வரேன்” குஷியாகச் சொன்னான் ஸ்ரீ. “டேய் குட்டிங்கன்னா ” ” ரெண்டு டா ” “சார பாருங்களேன்! தீயா வேல செஞ்சுருக்காரு” சந்திரா ஆச்சர்யமாகச் சொன்னாள். ” நானும் எப்படி தீயா வேலை செய்யறேன்னு பாரு” பெருமை பீத்திக் கொண்டான் சூர்யா. ” இப்படியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அன்னையின் வீட்டில் இருந்த கவனிப்பா அல்லது மருத்துவரின் கவனிப்பா என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த முறை எந்தப் பாதிப்புமின்றி பூரணிக்கு கர்ப்பம் நின்றது. இப்போது ஏழாவது மாதம்.

ஒரு நாள் சந்திரா “அத்தை!நாங்க ஹனி மூன் போகப்போறோம். நீங்களும் வறீங்களா ? “ம்ம் நானும் வந்தா அது சனி மூன்” நக்கலாகச் சொன்னாள் சாரதா. வாலிப வயதிற்கான வயதில் காதலை சொல்லாமல் விட்டதற்கு அவர்களின் பொறுப்புகளும், மன முதிர்ச்சியுமே காரணம். ஆனால் இப்போது அவர்களுக்குப் பொறுப்புகள் இருந்தாலும் அவர்கள் வாலிபத்தை இளமையை நன்றாக அனுபவிக்கக் கற்றுக் கொண்டார்கள். வீட்டிலேயே அவர்களுக்கு நேரம் போனது தெரியவில்லை. சூர்யாவை விடவும் சந்திரா தான் அவனுக்காக மிகவும் ஏங்கினாள். சில நாள் அவளுக்கு ஆசை அதிகரித்தால், அவனைப் படுத்தி எடுத்துவிடுவாள். தன் ஆசையைச் சொல்லாமல் இருந்தவள், இப்போதெல்லாம் தயங்குவதே இல்லை.

அந்தக் குழந்தையின் நினைவும் அடிக்கடி வரும். “நீங்க ரெண்டு பேரும் எப்படி அந்தக் குழந்தையை அவ்ளோ ஈஸியா எடுத்துக்கிட்டிங் அத்தை ?” குழந்தை குழந்தைதான் அது யாரா இருந்தா என்ன? எப்படி வெறுப்பு காட்ட முடியும்? என்றாள் சாரதா. “இவள் தலையில் லேசாக முட்டியக் கணவன், “அந்தக் குழந்தைக்கு அப்பா ராகவ். ஆனா உன்னோட ரத்தம் சதைல வந்தது. காயத்ரி பாவம். இல்லனா நான் அந்தக் குழந்தையைக் குடுத்துருக்கவே மாட்டேன்” “ம்ம் அந்தக் குழந்தை உங்களைத்தான் அப்பாவா நினச்சுது போல “அவன் தோள் சாய்ந்தாள்.

“நீ ஏன் IVF க்கு ஒத்துக்கிட்ட சந்திரா ? அதுவும் கல்யாணத்துக்கு முன்ன ? உன்னோட லைப் யோசிக்கவே இல்லையா ?” “எப்படி சூர்யா? காயத்ரி நிறைய தப்பு பண்ணி இருக்கா தான். இன்னும் அவங்க வீட்டுல டைவர்ஸ் பண்ணிட்டா?அவ ராகவ எவ்ளோ லவ் பண்ண தெரியுமா? அதுலயும் குழந்தை அவ்ளோ மோசமான நிலமைல அழிஞ்சு போச்சுன்னா? அது ஒரு பொண்ணு எவ்ளோ பெரிய துன்பம். அப்போ என்னால அவளைப் பத்தி மட்டும்தான் யோசிக்க முடிஞ்சது. இது அவங்களுக்கான நன்றியா? இல்ல! அவங்க எல்லாருமே என்னோட குடும்பம். எனக்கு அம்மா, அப்பா, தங்கை. “காயத்ரிதான் நான் பார்த்துப் பார்த்து வளர்த்த முதல் குழந்தை. என் குழந்தைக்காக நான் செய்யக் கூடாதா?”

“நீ என்ன சொன்னாலும் சரி, இது தப்புதான். நாம சட்டத்தை மீறி நடக்கக் கூடாது” அவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள். சரி! சரி ! முடிஞ்சதைபத்தி இப்ப என்ன? சமாதானப்படுத்தினான்.

ராகவன் மீதுமீது சூர்யாவுக்கு அளவு கடந்த வெறுப்புதான். இருந்தாலும் அவனைத் தண்டிக்க விரும்பவில்லை. ஒரே குடும்பம். யார் யாரை பழி வாங்குவது? விட்டு விட்டான்.

“இனிமே தப்பு பண்ண மாட்டேன். எப்டிங்க உங்களுக்கு அந்தக் குழந்தைக்கும் அப்படியொரு இணக்கம்? தலை தூக்கி அவன் கன்னம் உரசிக் கேட்டாள்.”

அன்னிக்கு நீ திடீர்னு ஏன் கையை உன் வயத்துல வச்சப்போ இருந்த உணர்ச்சியை வாயால சொல்ல முடியாது. அப்படியே குறுகுறுன்னு கைக்குள்ள பூப்பூத்த மாதிரி., எனக்குச் சொல்லத் தெரியல. எல்லாருக்கும் குழந்தைய கைல வாங்கும்போது கிடைக்கற சந்தோஷம் எனக்கு மட்டும் அதுக்கு முன்னாடியே கிடைச்சுது. கண்களில் ஒளி தெரிய பேசியவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். இப்போதெல்லாம் அவர்கள் எதைப் பற்றியும் கவலை படுவதே இல்லை. அவனின் சூட்டில் இவள் இன்பம் அடைந்தாள், இவளின் உணர்ச்சியில் அவன் குளிர் காய்ந்தான். சந்திராவை, அவளின் வாசத்தை சுவாசத்தை சூர்யா ஒவ்வொரு நாளும் அனுபவித்தான். அவர்கள் வாலிபத்தை, இளமையை அனுபவிக்கட்டும்.அன்று ஜன்னி கண்டவள் உயிருடன் இருப்பது அவனின் சுவாசத்தில்….

எந்த விதமான இலக்கும் இல்லாமல் இருந்த மாயா வாழ்வில் பூவாய் வாசமாய் சுவாசமாய் வந்தவன் ராஜு. அவன் மனதின் தெம்பு அவள் ஓடும் பாதையைப் பூவாக மாற்றி இருந்தது.

======================================================================

என்ன மக்களே! இதோட இவர்களின் பயணம் முடிஞ்சு போச்சு. சந்திரா … என்னால விட்டுட்டு வெளில முடியாத ஒரு காதாபாத்திரம். சாரதா, மாயா போன்ற பெண்கள் நம் சமுதாயத்துல நம்மோட வாழறவங்கதான்னு நான் நினைக்கிறன். ராகவ், மகேஷ், மாயாவின் முதல் கணவன், சூர்யாவின் தந்தை போன்றவர்களால் பல பெண்களுக்கு வீட்டிலும் வெளியிலும் மனதாலும் உடலாலும் துன்பம் தான். அப்படிப்பட்ட கயவர்கள் முகத்தில் அறையப்பட வேண்டியவர்கள் தான் என்றே நான் நம்புகிறேன்.

நன்றி!

சுபம்…….

4 thoughts on “என் வாசம் நீ உன் சுவாசம் நான்-சுபம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *