Skip to content
Home » என்  வாசம் நீ உன் சுவாசம் நான் -3

என்  வாசம் நீ உன் சுவாசம் நான் -3

அத்யாயம்-3
மறு நாள் காலை இருவருமே அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தனர் . ஒன்றாகவே லிப்டில் பயணித்தனர். முதலில் தள்ளி தள்ளி நின்றிருந்தவர்கள் மற்றவர்கள் ஏற ஏற அருகருகே நின்றிருந்தனர். அவளின் மூக்குத்தியும் நாக பழ வர்ண சேலையும் அவளின் அழகையும் நிறத்தையும் இன்னும் எடுப்பாக காட்டியது. முகத்தில் இருந்த சோர்வையும் மீறி பிரசவ காலத்தில் பெண்களுக்கே வரும் அழகும் சேர்ந்துக் கொண்டது. பல நாட்களுக்கு முன் அவளை இத்தனை நெருக்கத்தில் பார்த்திருந்தான். ஏனோ இருவருக்குமே பழைய நினைவு வந்தது. அவன் அவளை முதன் முதலில் அத்தனை நெருக்கத்தில் எப்போது பார்த்தான் ? அதுவும் இதே வர்ண புடவையில்?
சந்திரா மாடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு பெண்மணி கையில் பேப்பர் , வடாம் மாவு என்று அனைத்தையும் எடுக்க கொண்டு லிப்டில் வந்தார். அவர் பேப்பரை போட்டு அதன் மேல் துணியைப் போட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததை பார்த்தவள்,
“நான் ஹெல்ப் பண்ணட்டுமா ஆன்டி?” என்று கேட்டுக் கொண்டே அனைத்து இடங்களிலும் கற்களை வைத்தாள் . உதவி செய்ய வருகிறேன் என்று பாதிக்கு மேல் அவளே பிழிந்து விட்டாள் . சட்டென நினைவு வந்தவளாக,
“அச்சோ ஆன்டி! அம்மாகிட்ட சொல்லவே இல்லையே நான் ஓடிப் போய் சொல்லிட்டு வந்துடறேன்”
“இல்ல பரவால்ல மா. இன்னும் கொஞ்சம்தான் நானே முடிச்சுடுவேன். நீ போய் கை கழுவிக்கோ”
“இல்ல ஆன்டி! நான் இதோ ஒரே நிமிஷம் அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்” வேகமாக படிக்கட்டில் இறங்கியவள் எதிரில் வந்தவன் மீது மோதினாள் . அவளை கீழே விழாமல் சட்டென அவளின் இடையை வளைத்துப் பிடித்தான்.(அப்டின்னு நீங்க சீனு எதிரிபார்த்தா அதெல்லாம் இங்க வராது)
எதிரில் வந்தவன் மீது மோதி விடாமல் சட்டென அருகில் இருந்த சுவற்றை பிடித்து நின்றாள் . எதிர்பாராமல் எதிரில் வந்த அவனும் தன் வேக நடையை நிப்பாற்றிக் கொண்டான். இருந்தாலும் இரண்டு படிகள் கீழே இருந்தவனுக்கு வெள்ளை வெளேர் என்றிருந்த சிறு இடுப்பும் அதன் மேல் சற்றே விலகி இருந்த புடவையும் கண்ணில் பட்டு விட்டது(இந்த சீனு ரொம்ப முக்கியம் மக்களே)
“சாரி” என்று சத்தமாகவே கூறினான், அவளுக்கு நகர்ந்து வழி விட்டு. இறங்கி அடுத்தடுத்த படிக்கட்டுகளில் இறங்கியவள் வேகமாக வீட்டுக்கு ஓடினாள்.
கதவை திறந்த அன்னை,
“பக்கெட் எங்கடி?”
“இதோ போய் கொண்டு வரேன்மா . புதுசா குடி வந்துருக்கற ஆன்டி மேல வடாம் போட வந்தாங்க. பாவம் அவங்களால பேப்பர் வச்சு, காக்காய் ஓட்டி எல்லாத்தையும் செய்ய கஷ்டப்பட்டாங்க. அதான் நான் கொஞ்சம் உதவி செஞ்சேன்”
“சரி! போ கை கழுவிட்டு போய் மாடில க்ளிப்பையும் பாக்கெட்டையும் கொண்டு வா.
இல்லமா! உங்ககிட்ட சொல்லிட்டு மறுபடியும் வரேன்னு சொல்லி இருக்கேன்”
“இப்படியே ஊருக்கு உதவி செஞ்சுட்டு நில்லு. என்னிக்கு எந்த பிரச்சனை வர போகுதோ?”
ஏதோ பெயருக்கு இரண்டு வார்தைகளை உதிர்த்தவள் மீண்டும் தொலைந்து போன உமா என்னவானாள்? என்று பார்க்கத் தொடங்கினாள். சீரியலில்தான். எங்களுக்கு அது ரொம்ப முக்கியமில்ல ?
‘அவன் ஏன் என்னை அப்படி பார்த்தான்?’ மனம் குறுகுறுத்தது. கண்ணாடியில் தன்னை பார்த்தாள் .
‘ச்சே ! என்ன இது ?’ தூக்கிச் சொருகி இருந்த புடவையை கீழே இறங்கியவள் சட்டென மாராப்பை சரி செய்துக் கொண்டாள் . நெற்றியிலும் ஓங்கி அடித்துக் கொண்டாள்.
‘ இப்போ போனா அவன் அங்க இருப்பானோ ? அவன் யார் வீட்டுக்கு வந்திருப்பான்? இப்ப எப்படி போகறது? பேசாம அம்மாவை போக சொல்லலாம்’
சீரியலில் உமாவைக் காணோம் என்று படபடப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அன்னை. இருக்கட்டும் என்று கையை கழுவி விட்டே போனாள் .
இவளை பார்த்ததும்,
“வாம்மா! இவன்தான் என் பையன். என்னடா இது அம்மாவாக காணோமேன்னு தேட்டிட்டு வந்துட்டான்”
“ஹாய் !” இருவரும் சொல்லிக் கொண்டனர்.
மற்ற சாமான்களை எடுத்துக் கொண்டு அவன் வேகமாகச் கீழே சென்றான்.
இங்கதான் மூன்றாவது தளத்தில் தான் எங்க வீடு. வீட்டுக்கு வாங்க ஆன்ட்டி”
“இல்லமா ! இனிமேதான் நான் சமைக்கணும். வேற ஒரு நாள் வரேன். நீயும் வாம்மா ! உன் பேரு என்ன சொன்ன ? “
“சந்திரா ஆன்டி”
“சரிம்மா! அப்புறம் பாக்கலாம்”.
அவரவர் வீட்டுக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டார்கள். ஆனால் சந்திராவுக்கும் சூர்யாவுக்கும் மட்டும் மனங்கள் திறந்துக் கொண்டன அவர்களை அறியாமலே.

இதோ அவர்களின் அலுவலகத்துக்கான தளம் வந்தது . லிப்ட் குலுங்கி நிற்கவும் சட்டென அவளையும் அறியாமல் அவனை பிடித்துக் கொண்டாள் . ஆம் !அவளுக்கு பிடித்த அதே புஜத்தில் தான்.
“சாரி !” தலை குனிந்து சொல்லிவிட்டு மெதுவாக வாத்து நடையில் அலுவலகம் சென்றாள் . அவள் சென்றதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா. மகேசும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்துப் பார்த்ததில் இருந்தே மகேஸுக்கு வயிறு எரிந்தது. முதல் நாள் நடந்த சம்பவம் வேறு அவனின் கோபத்திற்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தது. ‘இவளுக்கு நான்னா மட்டும் இளக்காரமா போச்சா? எவன்கூட வேண்ணாலும் பல்ல இளிச்சுகிட்டு நிக்கறா ? வாடி உன்ன என்ன பண்றேன் பாரு! ‘ மனதிற்குள் கறுவினான் .
மகேஷ், சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்பு இந்த பணிக்கு வந்தவன். அவன் வேலை, சென்னையில் இருக்கும் அனைத்து கடைகளுக்கும் சப்ளை வந்ததா என்று பார்ப்பது ,குளிர்சாதனப் பெட்டி புதிதாக இறக்குவது, பழைய குளிர்சாதனப் பெட்டிகளை சரி செய்ய அனுப்புவது என்று பார்த்துக் கொள்ளும் அனைத்து நிர்வாகப் பொறுப்பை பார்த்துக் கொள்பவன்.
முதலில் வந்து சேர்ந்தவுடன் மேடம்! மேடம்! என்று பல சந்தேகங்களை தீர்த்து கொள்ளப் பேசுவான். நிறைய பேசுவான். சந்திரா எப்போதுமே தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவள். எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை நன்றாகவே அறிவாள் . கலகலப்பாய் இருக்க வேண்டிய இடத்தில் கலகலப்பாய் இருப்பாள். அதே நேரம் கொடுக்கப்படும் வேலைகளுக்கு டைமர் போட்டுக் கொள்வாள் . அவளுக்கு இந்த வீண் வம்பு, அரட்டை இதெல்லாம் பிடிக்காது. ஸ்ரீதர் தனது சொந்த காலில் நிற்க எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறான் என்பது நன்றாகவேத் தெரியும்.
ஸ்ரீதரின் தந்தை ஏற்கனவே தொழில் செய்துக் கொண்டிருந்தவர் தான் . அவர் செய்தது சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மில்க் ஷேக். ஸ்ரீதர் அதில் இருந்தே சிஸ்டர் கன்செர்னை ஆரம்பித்தான். தந்தை எல்லா விதங்களிலும் உதவி செய்யத் தயாராக இருந்தபோதிலும் தானே முட்டி மோதி தனியாக நிற்க விரும்பினான் ஸ்ரீதர். ஸ்ரீதர் ஆரம்பித்து இதோ நான்கு வருடங்கள் ஆகி விட்டன. இப்போது அவர்களின் பனிக்கூழ் வேண்டும் என்றே அடம்பிடிக்கும் குழந்தைகள் ஏராளம். பெரியவர்களும் தான். தன்னுடைய தொழிலை வளர்த்தது மட்டும் இல்லாமல் தந்தையின் தொழிலையும் சேர்த்தே வளர்த்தான் மகன். அதனால்தானோ என்னவோ மகன் காதல் என்று வந்து நின்றதும் பச்சைக் கொடி காட்டிவிட்டார் தந்தை .
இதே கம்பனியில் முதலில் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள், சிஏ படிக்க ஆரம்பித்ததும் மெதுவாக கணக்குகளையும் பார்க்கக் கற்றுக் கொண்டாள் . இவளே தானாகவே முன் வந்து உதவி செய்யும் போது யார்தான் வேண்டாம் என்பார்கள்? மெதுவாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பேசி பேசி பணம் வாங்குவது, அவர்களுக்கே இன்னும் சில புது வகைகளை பற்றி எடுத்துரைப்பது என்று அனைத்தையுமே பார்க்க ஆரம்பித்தாள். கம்பெனி பெரியதாக ஆக ஆக இவளால் சமாளிக்க முடியவில்லை. அதனால் கணக்கு வழக்குகளை மட்டும் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தாள். அதற்கு அவளின் அனுபவமும் திறமையும் படிப்பும் கைக் கொடுத்தது. அதற்குப் பிறகே இது போல நிர்வாகத்தைப் பார்க்க புதியதாக ஆள் போட ஆரம்பித்தனர்.
ஸ்ரீதரின் மாமனாரும் சொந்த தொழில்தான். அவர்கள் பிஸ்கட்,சாக்கலேட் , கேக்குள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனம். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அவர் ஓய்வில் இருக்க வேண்டும். மனைவியே அவரது தொழிலை பார்த்துக் கொள்வாள் தான். இருப்பினும் அவள் உடல் நிலை சரியில்லாதவள். அவள் எத்தனை முறை கரு தரித்தாலும் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தானாகவே கருக் கலைந்து விடும். ஏன் என்று ஏனோ எந்த மருத்துவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. என்ன பிரச்சனையாக இருக்கும் என்பதை அறிய இருவரும் போகாத மருத்துவமனைகளே இல்லை எனும்படிக்கு அவர்கள் அலைந்து களைத்து விட்டனர்.
“ஸ்ரீ! நான் கொஞ்சநாள் அம்மா வீட்டுல இருக்கட்டுமா “?
ஏற்கனவே,
” நான் உனக்கு குழந்தை பெத்து தர முடியாது. நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ”என்று கூறி கொண்டிருப்பவளை தனியாக அனுப்பினால் அவ்வளவுதான் என்பது அவனுக்கும் தெரியும். தன் மீது இத்தனை காதலோடு இருப்பவளை எப்படி தனியாக அனுப்ப முடியும் அதுவும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் ? அப்போதுதான் இவனின் உயிர்த்தோழன் எம் பீ ஏ முடித்து விட்டு வருவதை எதிர்பார்த்திருந்தான் . அவனுக்கு கம்பெனி பிளேஸ் மென்ட் ஆகி இருந்தபோதும் தோழனுக்காக அதை எல்லாம் நிராகரித்து விட்டு வந்துவிட்டான். பள்ளிப் பருவத்து பழக்கம் ஆயிற்றே! (அது நம்ம சூர்யாவேதான்)
(எங்க மகேச பத்தி சொல்ல ஆரம்பிச்சுட்டு இவ ஸ்ரீதரோட சொந்த கதை சோகக்கதைக்கு போயிட்டாளேன்னு நீங்க திட்டறது எனக்கு கேட்குது) மீண்டும் ஆரம்பிச்ச இடத்துக்கு வருவோமா?
முதலில் “மேடம் மேடம்!” என்று அழைத்துக் கொண்டிருந்தவன் சடக்கென ஒரு நாள் “சாரு” என்று அழைத்தான்.
“மிஸ்டர் மகேஷ், ப்ளீஸ் நீங்க இப்படி என்ன ஷார்ட் நேம் சொல்லி கூப்பிடாதீங்க. எனக்கு பிடிக்கல”.
“ஓ!சரி சாரு பிடிக்கலைன்னா சந்திரா ம்ம்ம்ம்… சாரா சாரான்னு கூப்பிடவா ?”
அந்தப் பெயரைச் சொன்னதும் இவளுக்கு ரத்தம் கொதித்தது . அடக்கிக் கொண்டாள் . பின் என்ன ? தினமும் அவள் காதில் அவன் குரலில் ரீங்காரமிடும் பெயர் அல்லவா சாரா?
“என்னோட பேரு சந்திரா அப்படியே கூப்பிடுங்க. இல்லன்னா ஸ்ரீதர் சார்கிட்ட சொல்ல வேண்டி வரும்” பல்கலைக் கடித்து வார்த்தைகளை துப்பினாள் .
பதில் பேசாமல் அமைதியாகச் சென்று விட்டான். அன்று இரவு படுக்கையில் வந்து விழுந்தவளுக்கு அவன் முதன் முதலில் சாரா என்று அழைத்தது நினைவிற்கு வந்தது.(ம்! ஆச தோசை இன்னிக்கு அவங்களோட காதல் பகுதில ஒண்ணுதான். சாரா பெயர்க் காரணம் நாளைக்குத்தான்)
மறுபடியும் இரு நாட்கள் கழித்து வந்தான். சந்திரா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.
இவளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது .
தொடரும்…
ஹாய் மக்களே! கதையை படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடறவங்களுக்கு மிக்க நன்றி. சைலன்ட் ரீடர்ஸ் ப்ளீஸ் கொஞ்சம் பார்த்து ஏதாவது கமெண்ட்ஸ் போடுங்க. சில பகுதிகள்ல நான் நடுல நடுல ஏதாவது சில்லியா போடுவேன். கதையோட போக்கு போகப் போக கொஞ்சம் ஹார்ஷாவேத் தான் இருக்கும். என்னை பொறுத்தவரைக்கும் நாம புத்தகங்கள் படிக்கறது மைண்ட் ரிலாக்ஸ் ஆகத் தான். அதுலயும் ரொம்ப அழுத்தம் குடுக்க வேண்டான்னுதான் இந்த மாதிரி.

13 thoughts on “என்  வாசம் நீ உன் சுவாசம் நான் -3”

 1. CRVS 2797

  அப்படின்னா சீக்கிரமா அவங்க ரொமான்டிக் ஸ்டோரி சொல்லிடுங்க.

 2. Avatar

  யாரை பத்தி சொல்றீங்கன்னு சொல்லிட்டு, கொஞ்சம் நிதானமா சொன்னா நல்லா இருக்கும்!!… மகேஷ்🤦🏻‍♀️🤦🏻‍♀️

  1. Avatar

   பொண்ணுங்க எங்கே போனாலும் சில வழிசல்கள்தொல்லை.

   சந்திரா – சூர்யா எங்கெந்து மா name செலக்ட் பண்ணீங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *