Skip to content
Home » என் வாசம் நீ உன் சுவாசம் நான்-9

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-9

பாகம்-9
சூர்யா மகேஷ் விஷயத்தைப் பற்றி நேரடியாகவே கேட்டதால் அவளும் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தாள் .
“மகேஷுக்கு என்ன சொல்லி இருக்கீங்க?”
“உனக்கு பெர்சனலா சொல்லனுமா? இல்ல அபிஷியலா தெரிஞ்சுக்கணுமா? ஒற்றைப் புருவம் ஏறி இருந்தது.
“ரெண்டும் !”
“முதல்ல அவனை நான் பையர் பண்ணிடலான்னு தோணுச்சு. ஆனா ரொம்ப கெஞ்சினான். ஓகேன்னு மூணு மாசத்துக்கு சஸ்பெண்ட் பண்ணிட்டேன். ஆனா என்ன தோணுச்சோ தெரியல அவனே வந்து ரிசைன் பண்ணறேன்னு சொன்னான். இப்போது அவன் பார்வை கூர்மையானது. அதனால இந்த சஸ்பென்ஷன் முடிஞ்சதும் அவன் வந்து அவனோட மூணு மாச நோட்டீஸ் பீரியட முடிக்க சொல்லி இருக்கேன்”.
“ஆனா! நீங்க பண்ணது தப்பு. அவர் ரொம்ப பாவம்” அவனுக்காக பரிதாபப் பட்டாள் .
“ஏன் நீ பாவமில்லை ?” சுள்ளென அவனிடமிருந்து கேள்வி வந்தது.
“எனக்காகத்தானா ?” அவள் குரலில் எதோ ஒரு ஏக்கம்.
“நான் எஸ் சொல்லனுமா? நோவா ?”
அவளிடமிருந்து வந்த பதில் மௌனம்.
“சந்திரா! இதுல இருக்கற மேனேஜ்மென்ட் கால்குலேஷன் உன்னால புரிஞ்சுக்க முடியலையா?”
“ம்! புரியுது. அவரை இப்பவே இதை செய்ய சொன்னா எனக்கும் அவருக்கும் நிறைய பிரச்சனைகள் வரும், அது கம்பனியை பாதிக்கும் இன்னிக்கு மாதிரி. அவர் வேலைல இருந்தார்னா இந்த வருசத்துக்கு குடுக்க வேண்டிய அப்ரைசல் போனஸ் குடுக்கணும். இப்ப அவர் சஸ்பென்ஷன்ல இருக்கறதுனால குடுக்க வேணாம் அவளுக்கு புரிந்த விளக்கங்களைத் தந்தாள்”
“எஸ்! நோட்டீஸ் பீரியடில் இருந்தாலும் நம்ம கம்பெனியோட ரூல்ஸ் படி இயர்லி போனஸ் கொடுத்துதான் ஆகணும். அம் ஐ ரைட் ?”
“ம்! ஆமோதித்தாள்”
“அது மட்டும் இல்லாம பெண்கள் வேலை பாக்கற இடத்துல எத்தனையோ பாலியல் கஷ்டங்களை அனுபவிக்கறாங்க.பெண்கள் நிம்மதியா வேலை செய்யற சூழ்நிலையைக் குடுக்க வேண்டியது., முதலாளியோட கடமை. நிறைய பேர் வெளில சொல்லறது இல்ல. ஆனா நீ சொல்லி இருக்க. இந்த விஷயத்துல ஸ்ரீதர் சரியான முடிவெடுக்கல. நான் இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சு. நான் ஸ்ரீதர குறை சொல்லல. தப்புகள் நடக்கறது மனித இயல்புதான்” இடத்தில் இருந்து எழுந்து தண்ணீரை பருகிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான்.
“ம்” ஆமோதிப்பாக தலையாட்டினாள்.
“எனக்கு ஒரு விஷயம் தெரியணும் சந்திரா. பெர்சனலா அண்ட் அபிஷியலா போத் !” அவனின் ஆழ்ந்த குரலில், இவளுக்கு வயிற்றில் பயப் பந்து உருண்டது. உஷாராக, கிளம்புவதற்கு தயாராக இடத்தை விட்டு எழுந்துக் கொண்டாள் .
“அவன் உன்கிட்ட வெறும் வாய் வார்த்தையாதான் தொந்தரவுக் குடுத்தானா ?”
என்ன பதில் சொல்ல வேண்டும்?அவன் செய்த பாலியல் சீண்டல்களை எப்படி? பயத்தில் நாக்கு உலர்ந்து போனது. சூர்யா மிச்சம் வைத்திருந்த தண்ணீரையையே ஒரு மிடங்கு விழுங்கி கொண்டாள் .
“சார்! நீங்க சொன்னது தான். பெண்கள் வெளில வரும்போது, நிக்கும்போது, நடக்கும்போது, பஸ்சுல, ட்ரைன்ல, ஆபிசுல சந்திக்கற பிரச்சனைகள் ரொம்ப அதிகம். எல்லா நேரத்துலையும் எல்லாத்தையும் சொல்ல முடியாது”,
அவளின் பதிலை விட அவளின் செய்கை அவனை அதிகம் பாதித்தது.
அவள் அறையை விட்டு செல்லும்போது,
“சந்திரா! இனிமே எதுக்காகவும் யாருகிட்டயும் கை கூப்பி நிக்காத” மகேஷிடம் அவள் பேசியத்தைத்தான் சொல்கிறான்.
“கடவுள் கிட்டையுமா ?” திரும்பி அவன் முகத்தை கூர்ந்துப் பார்த்தாள் .
“ம்!” தோளைக் குலுக்கினான்.
அவனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென இவளுக்குத்தான் தெரியுமே ?
அடுத்த சில மணி நேரத்தில் ராகவன் வந்தான்.
அவனுடன் செல்வதற்கு இவளுக்கு விருப்பமே இல்லை.
“என்ன? இன்னுமா கிளம்பல ? வீட்டுல அத்தை காத்துகிட்டு இருப்பாங்க. புள்ளத்தாச்சி பொண்ணு நேரத்தோட வீடு போய் சேர வேணாமா ?” எத்தனை உரிமை?எத்தனை அன்பு!
“கொஞ்சம் இருங்க ராகவ் . நான் ஒரே ஒரு சின்ன விஷயம் முடிக்கணும். முடிச்சுட்டு வந்துடறேன்.
‘வேலையை எத்தனை நேரம்தான் இழுத்தடிக்க முடியும்? இல்லை எத்தனை நேரம்தான் அவன் உளறல்களை கேட்க முடியும்? வீட்டிற்கு சென்றால் அங்கும் நிம்மதி இருக்காது. எனக்கு எப்ப தான் விடிவு காலம் வருமோ ?’
மனதில் புலம்பிக் கொண்டே கிளம்பினாள் .
அவள் வேறு ஒரு ஆடவனுடன் பைக்கில் செல்வதை கண்ணாடி அறையில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா.
எத்தனையோ முறை தன்னுடன் வரும்படி அழைத்திருப்பவன்தானே சூர்யா. தனக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு என்று நினைத்திருந்தான். அதுதான் இல்லை என்று அவள் பலமுறை கூறி விட்டாளே?அவளின் வார்த்தைகளை அன்று தாங்க முடியாதவன் இன்று கண் நிறைய பார்த்துக் கொண்டு நிற்கிறான்.
மனதில் பாரம் ஏறியது. வீட்டிற்கு வரும் வழி எல்லாம் சந்திராவை பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தான். ஏதேதோ எண்ணங்கள் சூர்யாவை குழப்பிக் கொண்டிருந்தன.
‘அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்லையா ? தாலி மெட்டி மோதிரம் எதுவும் இல்ல. ஆனா கர்ப்பமா இருக்கா . மகேஷ் வேற என்னவோ சொல்லறான் . ஆனா புருஷன்கூட வீட்டுக்குப் போறா ! என்னோட எச்சிலை ரொம்ப சாதாரணமா தானேவே எடுத்துக்கறா . அப்போ அவ மனசுல நாந்தான் இருக்கேனா ? என்னவா இருக்கும்?’ யோசித்து யோசித்து மண்டை வெடித்துவிடும் போல இருந்தது.
‘ஸ்ரீதரிடம் இதைப் பற்றிக் கேட்கலாமா? அந்த சந்திரா தான் இவள் என்று அவனிடம் சொல்லி இருந்தால் கேட்கலாம். இப்போது அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணை பற்றி எப்படி கேட்பது?’ யோசித்தவன் வேண்டாம் என்று முடிவெடுத்தான்.
வீட்டுக்கு வந்ததும் முதலில் ஒரு காபி குடிக்க வேண்டும்.
வீட்டுக்கு வந்தவன் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு,
“மாயா எனக்கு ஒரு காபி” என்றான், அன்னையின் மடியில் சாய்ந்து…..
“என்னடா! மாயா இங்க இல்ல. அவங்க அம்மாவீட்டுக்கு போய் இருக்கா . நினைவில்லையா ?”
“ஓ! சாரிமா மறந்தே போய்ட்டேன்”
“இந்த பொண்ணுங்களுக்கு அம்மா வீட்டுக்குப் போனாலே போதும் . வேற எதுவும் நினவிருக்கறதில்ல”
“அதனால என்னடா அவளுக்கு இங்க என்ன வேல இருக்கு? அங்க அண்ணன் அண்ணி அம்மாவோட இருந்துட்டு வரட்டுமே?”

அன்னை கொடுத்த காபியை எடுத்து கொண்டான் சூர்யா.

≈====≈=============================

ராகு இப்படி டூ வீலர் எடுத்துக்கிட்டு வராதீங்கன்னு எத்தனை தடவ சொல்லறது?”
“நான் கூடத்தான் என் பேரு ராகு இல்ல , ரகுன்னு எத்தனை தடவை சொல்லறது?”
“எனக்கு நீ ராகுதான்” வெளியில் தெரியும்படியே முணுமுணுத்தாள்.
“என்ன சொன்ன ? “
“இல்ல! ஒன்னும் இல்ல, வண்டிய மெதுவா ஒட்டுங்கன்னு சொன்னேன்” அவள் முகத்திலேயே சிடுசிடுப்பு தெரிந்தது.
அவள் பயப்பட வேண்டும் என்றே வண்டியை நெளித்து வளைத்து ஓட்டினான். பயத்தில் கண்ணை மூடிக் கொண்டவள் தன்னையும் அறியாமல் அவனை தோளையே பிடித்துக் கொண்டு வந்தாள் . அவளின் அருகாமையை, தொடுதலை அவன் ரசித்தான். காற்என் வாசம் நீ உன் சுவாசம் நான்-றில் வரும் அவளின் தனி நறுமணம் அதையும் ரசித்தான்.
“சுடி போட்டுக்கிட்டா ரெண்டு பக்கமும் கால் போட்டு உட்காரலாமில்ல ?”
“இன்னும் ரெண்டு மாசத்துல எனக்கு டெலிவரி. கொஞ்சமாவது யோசிச்சு பேசுங்க”.
“அதுக்குத்தான நானும் காத்துக்கிட்டுருக்கேன்?” கள்ளமாகச் சொன்னான்.
வீட்டிற்கு வந்தவள் பயங்கர கோபத்தில் இருந்தாள் . அன்னையிடம் எதுவும் சொல்ல முடியாது. தந்தையிடம் காட்ட வேண்டும் போல இருந்தது.
“அப்பா எதுக்குப்பா இவரை அனுப்பினீங்க ?”
“இல்ல! இன்னிக்கு நானே கூட்டிட்டு வந்துடறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க மாமான்னு மாப்பிளை சொன்னாரு அதான்” அவர் விளக்கம் தந்தார். அவரிடம் எப்படி சொல்வது என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மகள்.
” ரொம்ப ராஷா ஓட்டறாரு. ரொம்ப பயமா இருக்குப்பா “
“ஏண்டி! இருக்கற வேலை எல்லாம் விட்டுட்டு உனக்காக எங்கிருந்தோ வந்தா அவருக்கு நன்றி சொல்லாம குறை சொல்லற?” இருவருக்கும் காபி கொண்டு வந்தார் சுந்தரி.
“விடுங்க அத்தை! இந்த உலகமே அப்படித்தான். நான் கிளம்பறேன் அத்தை” . காபி டம்ளரை வைத்து விட்டு கிளம்பினான்.
சந்திரா ஒரு நிமிஷம் வாசலுக்கு அவளைத் தனியாக அழைத்தான்.
இவளுக்கு கடுப்பேறியது.
இவள் வெளியில் வந்ததும், இவள் கன்னத்தில் செல்லமாக தட்டி,
” வரட்டாடி செல்லம்? உடம்ப பார்த்துக்கோ மாமா போயிட்டு வரேன், இன்னும் ரெண்டு மாசம்தான். அப்புறம் நம்ம வீட்டுல இருக்கலாம்” என்று காதல் கணவனாகச் சொன்னான்(அப்படியா?)
தொடரும் …….

6 thoughts on “என் வாசம் நீ உன் சுவாசம் நான்-9”

  1. Avatar

    ராகவ் யாரு மாயா யாரு குழப்பம் தான் அதிகமாக இருக்கு
    கொஞ்சம் புரியல மாதிரி எழுதுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *