எலும்பகம் 1
வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ
சர்வ கார்யேஷு சர்வதா
என்ற பாடல் இனிமையாக ஒலித்துத் துயிலெழுப்பியது. காலை ஆறு மணி. ஏகதந்தன் நிதானமாக கண் திறந்தான். அருகிலிருந்த செல்போனை எடுத்து அலாரமை ஆப் செய்தான்.
தன் அறையின்கண்ணாடி ஜன்னலைத் திறந்தான். காலையின் பனியும் இளஞ்சூரிய கதிரும் முகத்தில்பட்டு அறையினுள் பிரவேசித்தது.
இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருந்த தெரு விளக்கின் ஒளி சூரிய ஒளியுடன் போட்டிப்போட்டுத் தோற்றது. சோம்பல் முறித்தவனாய் குளியலறைக்குள்ச் சென்றான்.
ஏகதந்தன் என்னும் நம் நாயகனை ஏகா என்றே அவனை அழைப்பார்கள். வெண்மை நிறம், மெலிந்த தேகம் அளவான மீசை, சின்ன கண்கள், ஆறடிக்கு சற்றே குறைவான உயரம்.
அன்பும் அமைதியும் நிறைந்தது ஏகனின் குடும்பம். அவன் அப்பா முத்துகிருஷ்ணன் அம்மா பார்வதி. அவனின் தங்கை ரம்யா என அழகான குடும்பம்.
முத்துகிருஷ்ணன் ஆடிட்டிங் வேலை ஆதலால் எப்போதும் ஊர் ஊராகச் சென்றுவிடுவார். பெரும்பாலும் குழந்தைகள் தாயின் பராமரிப்பில் வளர்ந்தன. பார்வதி குழந்தைகளைத் தாயும் தந்தையுமாய் வளர்த்தார்.
முத்துகிருஷ்ணனின் மூத்த சகோதரன் மாணிக்கம். அவரிடம் செல்வம் குவிந்துள்ளது. பல தொழில். தொட்டதெல்லாம் பணமானது. மாணிக்கம் மனைவி மங்களம். இவர்களுக்கு இரு குழந்தைகள் மகன் சக்தி மற்றும் மகள் சங்கீதா. செல்வச் செழிப்பில் வளர்ந்த குழந்தைகள்.
சங்கீதாவை மிகப் பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்தாயிற்று. சக்தி படிப்பு என்கிற பெயரில் எதோ படித்தான். அவனிடத்தில் படிப்பும் பணமும் போட்டிப்போட்டது . அவன் வைத்த தேர்தலில் படிப்புத் தோல்வியைத் தழுவியது. அத்தனை கெட்டப்பழக்கமும் அவனிடம் அடைக்கலம் புகுந்தது.
பதினைந்து வயதில் திருட்டு தம் எனத் தொடங்கிக் குடி, கெட்ட சகவாசம் என அனைத்து எல்லையும் கடந்துவிட்டன். பெற்றோர்க்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டான்
சக்தி “அப்பா ப்ரெண்ட்ஸ்க்கு பார்ட்டி கொடுக்கணும் . . இருபதாயிரம் வேணும்” எனச் சக்தி கேட்டால் “ இந்த முப்பதாயிரம்” எனக் கொடுப்பார். மனைவி அவரை கண்களால் கேள்வி கேட்க “இந்த வயசுல சந்தோஷமா இருக்காம எப்போ இருப்பான்?” என்று விடுவார்.
ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களுக்குச் சக்தியைப் பற்றிய உண்மைச் செய்திகள் தெரியவர அதிர்ந்து போயினர். மகன் என்கிற பாசமும் கண்ணைக் கட்டியது.
“நீ சரியா படிச்சி பிசினஸ் பார்த்துகணும் சக்தி. இல்லனா எல்லா சொத்தையும் அனாதை ஆசிரமத்துக்கு கொடுத்துடுவேன்” என அவன் அப்பா சொல்லிவிட்டார். சக்திக்கு என்ன செய்வதென்றேத் தெரியவில்லை.
சக்தி படிப்பையும் முடிக்காமல் தன் தந்தையின் தொழிலையும் கவனிக்கத் தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தான். தந்தையிடம் பணம் கேட்க முடியாமல் போகவே மற்றவரிடம் கடன் வாங்கத் தொடங்கினான்.
அவன் பெற்றோர் சிறுவயதில் செல்லம்க் கொடுத்துக் கெடுத்துவிட்டு. இப்போது செய்வதறியாது தவித்தனர். ஐந்தில் வளையாததை ஐம்பதில் வளைக்க இயலுமா?. சக்தி படிக்கும் வயதில் படிக்காமல்ஊர் சுற்றுவான். அவனை அப்போது படி என்றுசொல்லாமல் விட்டனர். ஒரே மகன் என்ற பாசம் அவர்கள் கண்ணை மறைத்தது.
அவன் மீது கோபப்படுவதைவிட தன் தம்பி முத்துகிருஷ்ணன் குடும்பம் மீதுதான் பொறாமை கொண்டு வெந்துபோனார்கள்.
முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு பணம் என்பது தேவைக்கு மட்டுமே என என்னும் மனிதர்கள். பணத்தைத் தாம் ஆள வேண்டுமே அன்றி பணம் நம்மை ஆளக் கூடாது என நினைப்பவர்கள்.
அவர்களிடம் அதிகப் பணமில்லை , இருப்பினும் இன்பம் இருந்தது.அதையும்விட மிகப் பொறுப்பான குழந்தைகளான ஏகா மற்றும் ரம்யா அவர்களின் கண்ணை உறுத்திக் கொண்டே இருந்தனர்.
ஏகா மற்றும் ரம்யா இருவரும் படிப்பு வேலை என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார்கள்.
ரம்யா பேஷன் டிசைனிங் படித்து முடித்து அதன் தொடர்பான வேலையில் உள்ளாள். ரம்யா படிப்பு முடித்ததும் வரன் பார்க்கத் தொடங்கினர் பெற்றோர்.
ஆனால் அவளோ “எனக்கு ரெண்டு வருஷமாவது வேலை பார்க்கணும். அதுக்கு அப்புறம் நீங்க எந்த மாப்பிள்ளை சொன்னாலும் நான் கல்யாணம் செய்துக்க தயார். ப்ளீஸ் ப்ளீஸ் மா” எனச் செல்லமாய்க் கொஞ்சவும். பெற்றோர் மறுக்க இயலாமல் மகளின் ஆசைக்குப் பச்சைக் கொடி காட்டினார்கள்.
ஏகா தயாராகி தற்செயலாக ஜன்னல் வழியே பார்க்க .. அங்கே ஒருவர் வெளியே கண் இமைக்காமல் இவன் பக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மனிதர் அழுக்கு வேட்டி சட்டை, பெரிய தாடி முதுகளவு இருந்த முடிகளைச் சணல் கயிற்றால் கட்டி இருந்தார். சில அடங்கா முடிகள் முன்னும் பின்னும் ஊஞ்சலாடியது.
“ ஏகா நீ செய்தது சரியல்ல” என அவர் கண்கள் குற்றம் சாட்டின.
“இவருக்குஎப்படி எனத் தெரிந்தது?” எனச் சிந்தித்தவன் பெருமூச்சை விட்டவனாய் “மன்னித்துவிடுங்கள்“ என நயன மொழியில் கேட்கவே
இருவரின் நயன உரையாடலைக் கிழித்தபடி ஹாரன் சப்தத்துடன் கார் ஒன்று வேகமாக வந்து நின்று கிரீச்சிட்டது. அதிலிருந்து சக்தி கோபமாக இறங்கினான். கார் கதவை டமாரென்ற சத்தத்துடன் அறைந்தான்.
புயலென வீட்டினுள் நுழைய “வாங்க அண்ணா” எனப் புன்னகையுடன் அழைத்தாள் ரம்யா. அவளை அலட்சியமாகப் பார்த்தவன் “ஏகா எங்க?” என்றான்.
அவன் முகத்தை வைத்தே நடந்தவற்றை யூகித்தவள் புன்னகையை சுருக்கி “மேல அவன் ரூம்ல” என்றாள்.
தடதடவென படிகளில் ஏறியவன் ஏகா அறையின் கதவைத் திறக்க கைவைக்கும் முன் கதவு திறந்தது.
“வெல்கம் ப்ரோ” என ஏகா கேலி புன்னகையுடன் வரவேற்றான்.
அறையுள் சென்றதும் சக்தி கதவை தாளிட்டு குரலைத் தாழ்த்தி எச்சரிக்கும் பாவனையில் “உன் வேலையை மட்டும் பார் ஏகா இல்லனா?” என வார்த்தைகளை நிறுத்தி முறைத்தான்.
சொல்லின் தாக்கம் மற்றும் வெறுப்பின் உச்சமும் அவன் முகத்தை அஷ்ட கோணலாக்கியது.
“இல்லனா? என்னடா பண்ணுவ?” ஏகா தன் முழுக்கைச் சட்டையை மடித்தபடி தான் எதற்கும் தயார் என்னும் பாவனையில் வினவ.
“வேண்டா உனக்கு நல்லதுக்கில்லை சொல்லிட்டேன் .. நான் பாக்கைத்தான் மாடர்ன்னா இருக்கேன். உண்மையில தரலோக்கல்” என்றபடி பல்லைக் கடித்தான் சக்தி.
செல்வத்தில் பிறந்து வளர்ந்த இருபத்தி எட்டு வயது செல்லக் குழந்தை சக்தி. சொக்கும் அழகு, அந்தஸ்து, கம்பீரம் என அனைத்தும் அவனிடம் சலாம் போட்டு நின்றது.
சக்தியின் இந்த குணத்தால் பலபிரச்சனைகள் எழப்போவதை வெளியிலிருந்த மனிதர் நன்கு உணர்ந்திருந்தார். ஆனால் அவை எல்லாவற்றிற்கும் ஏகா பதில் சொல்லும் நிலை ஏற்படப் போகிறது.
பாயும் …
Interesting start 👏
Thank you so much Rathi sis
INTERESTING . Ithu ellathaium ega mela solla poranga yen na ?
Thank you so much Kalidevi sis
Nalla thodakkam
Sakthi enna seyya pogiran?
Thank you so much Abirami sis