எழுத்தின் துவக்கமும் அடுத்த கட்ட ஓட்டமும்… எப்பவும் என் அனுபவத்தினை(கற்றதை) சொல்லிட்டு பிறகு பகிர்ந்து தங்கள் செய்ய கூடியது செய்ய கூடாதது பகிர்ந்துக்கலாம்.
உங்க எழுத்து பயணம் எந்த புள்ளியிலிருந்து ஆரம்பித்தாலும் முடிவென்பது புத்தக வெளியீட்டில் வந்து நிற்கும். ஒரு எழுத்தை புத்தகமாக பார்க்கப்பட்டால் மட்டுமே எழுதிய எழுத்தாளருக்கு மனநிறைவு வரும்.
எனது எழுத்து பயணம் எப்படி ஆரம்பிச்சதுனு நான் ஏற்கனவே இரண்டு மூன்று இடத்துல சொல்லிட்டேன். இங்கு அந்த கதை தேவைப்படாது.
எல்லாரும் நல்ல வாசகனாக இருந்து எழுத்தாளராக மாறுகின்றனர். இது மறுக்க முடியாதது.
நான் எழுதிய போது எனக்கான வழிகாட்டல் எப்படியிருந்தது என்றால்… மிகப்பெரிய நாளிதழ், மாதயிதழ் போன்றதற்கு பிரிண்ட் அவுட் எடுத்து தபால் மூலமாக சிறுகதை, கவிதையையும், கொரியர் மூலமாக நாவலும் அனுப்பி வைக்கப்பட எனக்குரிய வழிகாட்டிகள் கூறினார்கள்.
அந்த மாதயிதழ் ஆசிரியர் அந்த நாவல் சிறுகதை படித்து பார்த்து நல்லாயிருந்தா தான் பிரசுரிப்பாங்க.
அப்படி தான் நான் மூன்றாம் வருடம் கல்லூரி ஆண்டுவிழாவுக்கு எழுதிய கவிதையை மங்கையர் மலருக்கு அனுப்பினேன். அவை என் மூன்றாம் ஆண்டு கல்லூரி முடிந்து, எனக்கு பெண் பார்க்க கணவர் வந்து சென்ற ஒரு வாரக்காலகட்டத்தில் பிரசுரமானது.
எனக்கு கிட்டதட்ட ஒரு கவிதை வெளிவர பத்து மாத இடைவெளி.
அதன் பின் மடமடவென பத்து கவிதை வெளியானது. குறிப்பு: யாரின் உதவியின்றி சிபாரிசுயின்றி என் கவிதைக்கான அங்கீகாரம் பெற்றது.
நாவலை பிரிண்ட் அவுட் செய்து பெயர் பெற்ற இரண்டு மாதயிதழுக்கு நேரிலே கொண்டு சென்று கொடுத்தேன். ஆனா வாங்கி வச்சிட்டு ஆறு மாசம் வெயிட் பண்ண சொன்னாங்க. ஆறு மாசம் பிறகு கால் பண்ணினா வெயிட் பண்ணுங்கமா இதான் பதில்.
அதற்கு வந்த பிற ஆண்டுகள் கணிப்பொறி பலரின் வீட்டில் இடம் பெற்றப்பின், பிரிண்ட் அவுட் தபால் தேவையின்றி ஜிமெயில் மூலமாகவும் அனுப்பலாமென்று காலம் மாறியது.
ஜிமெயில் அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திருந்தது எல்லாம் சில நாட்கள்.
‘கதைக்கான தளம் நிறைய உண்டு, நீ கிணற்று தவளை… புக் படிக்கணுமா? நெட்ல சர்ச் பண்ணு. நிறைய ஆப் இருக்கு.’ என்று கணவர் கூற கிணற்று தவளையாக இருந்த நான் படிக்க அமர்ந்த நேரம் கண்ணில் தட்டுப்பட்டது பல தளம்.
நிறைய தளம் இருக்கு….
முதல்ல wattpad next பிரதிலிபி இரண்டிலும் எழுத ஆரம்பிச்சேன். இப்ப வளர்ந்துட்டேன்னு சொல்லறாங்க. சத்தியமா இல்லை. இன்னமும் கத்துக்குட்டி. என் பழைய கதையை பார்த்தா தெரியும் எப்படி முட்டி மோதி எழுத பழகினேன் என்று.
இப்ப ஒரு டாபிக்ல கொடுத்து சட்டுனு எழுத சொன்னா கொடுங்கனு வாங்கி எழுதிடுவேன். முன்ன அப்படியில்லை. அச்சோ என்று பயம் உண்டு.
ரொம்ப வளவளனு இருக்கா… சரி ஷார்ட்ஸ் அண்ட் ஸ்வீட்டா சொல்லறேன்.
கதைகள் எழுதி வெளியிட ஆன்லைனில் உள்ள தளங்கள் கூகுள்ல ‘Tamil novel’ போட்டு பாருங்க நிறைய தளங்கள் வரும். மோஸ்டா நாம சைட்ல கதை போட்டாலே யாராயிருந்தாலும் அந்த அட்மின் வரவேற்பாங்க. எப்படியும் திரி கிடைக்கும்.
கதை பதிவு பண்ணலாம்.
பதிவு செய்தவையை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து உங்க நட்பு வட்டத்தை பெருக்கலாம். மோஸ்டா சிலர் போல்டா இருக்கறவங்க சோஷியல் ஆக்டிவிட்டிஸ்ல தாராளமா இறங்கி ஷேர் பண்ணலாம்.
அச்சச்சசோ இன்பாக்ஸ்ல தேவையற்ற சனியன்கள் வர்றாங்க இப்படி வந்தா வீட்ல பிரச்சனை வரும். கணவர் சந்தேகப்படுதல், எழுதுவதில் பாதிப்பு, வீட்டில் ஆதரவில்லாது இப்படி இருக்கறவங்க சோஷியல்ல ஷேர் பண்ணவோ அக்கவுண்ட் ஓபன் பண்ணவோ தயங்கலாம்.
(சிலர் வீட்டுக்கு தெரியாம எழுதறாங்க. அது ரொம்ப தப்பு. ஒரு எழுத்தாளரே திருட்டு தனமாக வீட்ல மறைச்சு எழுதுவதா?)
எதுவந்தாலும் திறமையா சமாளித்து இன்பாக்ஸில் வர்றவங்களை கண்டுக்காம இக்னோர் பண்ணிட்டு அப்படியே தொல்லை வந்தாலும் ‘ஐ கேன் மேனேஜ்’ என்றவங்க தாராளமா முகநூல் இன்ஸ்டா, ட்விட்டர் என்று எந்த சோஷியல் மீடியாவிலும் பகிரலாம்.
அப்படி பகிரவும் வாசிக்கிற வட்டம் பெரிதாகும். உங்களுக்கு பாலோவர்ஸ் அதிகமாகலாம். உங்க கதைகள் அதிக வாசகரை சென்றடையும்.
குறிப்பு: நான் முகநூல்ல தவிர எங்கயும் இல்லை. பாலோவர்ஸ் அதிகமாவது தொடர்ந்து எழுதறதால மட்டும்னு நம்பறவ நான்.
நீங்க ஒரு மூன்று கதை எழுதிட்டு அச்சோ என்னை இந்த உலகம் என்னை பேசலை. என் கதையை யாரும் படிக்கலைனு புலம்ப கூடாது. முதல்ல கடமையை செய்தாலே பலன் நிச்சயம் வரும்.
அப்பறம் மாதயிதழுக்கு அனுப்பணும்னு நினைச்சா தாராளமா அனுப்புங்க. பெரும்பாலும் மாதயிதழுக்கு குறைந்த அத்தியாயம் தான் கேட்கறாங்க.
ராணி
கண்மணி
அக்ஷயா
குடும்ப நாவல்
இப்படி நிறைய இருக்கு. சிறுகதை என்றால் ஆனந்த விகடன் குமுதம், குமுதம் சிநேகிதி என்று நிறைய இருக்கு. ஆனா இதெல்லாம் எப்ப உங்க கதையை பதிப்பாங்கனு தெரியாது பொறுமையா பொறுத்தா மட்டும் தான் உண்டு. அவசரம் காட்டினா நிச்சயம் வேலைக்கு ஆகாது.
நான் புக் போடணும் என்ன பண்ணணும்?
நல்ல பதிப்பகம் தேடுங்க நிறைய பதிப்பகங்கள் உண்டு. ஒன்னு நாமளா காசு போட்டு புத்தகம் பதிச்சி நாமளா விற்கணும். இதுக்கு பணம் செலவு செய்யணும். இப்ப எல்லாம் அமேசான்ல காசு வருது. பேசாம நாமளே பதிப்பகம் ஆரம்பிச்சு நாமளே விற்கலாம்னு நினைப்பு உண்டு. அதோட புத்தகத்தை விற்று தர டிஸ்டூபீயூட்டர் உண்டு. ஆனா அதுக்கும் கமிஷன் தரணும். உங்களால் செய்ய முடியும் என்றால் தாராளமா செய்யலாம்.
மற்றொன்று சில பதிப்பகம் குறிப்பிட்ட பிரபல எழுத்தாளர் கதை எப்படியும் வாசகர் காசு கொடுத்து வாங்குவாங்கனு அவர்களுக்கு தெரியும். அப்படிப்பட்டவங்களோடது பதிப்பகமாவே வாங்கி போட்டு தருவாங்க. நிச்சயம் அந்த இடத்துல நமக்கு சட்டுனு அங்கீகாரம் கிடைக்காது. ஆனா முயற்சி செய்து நம்ம கதை தரமானதாக இருந்தால் அவங்களே புக் போட்டு தருவாங்க. அவர்களே விற்பனை செய்வார்கள். நம்ம கதை மட்டும் எழுதணும். *நல்ல கதைகள்.*
சென்னையில் உள்ள பதிப்பகங்கள் ‘most popular publisher in Chennai‘ என்று கூகுல்ல தேடுங்க. ஏகப்பட்டது கண்ணுல வரும். அதுல எத்தனை காலமாக இயங்குகிறதென்ற தரம் இருக்கும். போன் நம்பர் இருக்கும் போன் பண்ணி பேசுங்க. உங்களுக்கு தோதுவாக இருந்தால் புக் போடலாம். இல்லைனா வேற சர்ச் பண்ணுங்க. சில பதிப்பகம் தற்போது ஆரம்பித்தாலும் பெயர் பெற்றதும் இருக்கு. கூகுள்ல எல்லாம் கச்சிதமா இருக்கு. தேடுங்க.. எல்லாம் சொல்லிட்டா தேடி கிடைக்கிற வழிக்கு மகிழ்ச்சி இருக்காது.
இப்ப எல்லாம் பதிப்பகத்தில் புத்தகம் போட்ட எழுத்தாளர்கள் கூட சமீபகாலமாக ஆன்லைன் ஆஃப்ல வரிசை கட்டி வர்றாங்க. காரணம் எல்லாமே மாறுது.
போன்லயே வசதி இருக்க இ-புக் போட்டும் நாமாக அமேசான்ல பதிவிட்டு அது ரீடிங் போக காசு வருது.
ஏன் நம்ம பிரதிலிபில கூட காயின் அறிமுகம் செய்தப்பிறகு தான் நிறைய சைட் ஆட்கள் இங்க வந்து கதை போடறாங்க. அதுக்கு முன்ன வரலை. ஆக வாசகரின் எண்ணிக்கையும், பணவருவாயும் நேரிடையா எழுத்தாளருக்கு கிடைக்க, அச்சு புத்தகம் என்றதை விட காலம் மாறுது என்று ஆப் சைட்ல எழுத்தாளர்கள் வளருகின்றனர். வளர்ந்த எழுத்தாளரும் புகழடையும் ஆன்லைன் தளத்தில், செயலியில் பங்கு வகிக்க ஆவலா வர்றாங்க.
எழுத தேவையானது
*நல்ல கற்பனை வளம்.
*கற்பனையை எழுத்துல கோர்வையா கொடுக்கற பக்குவம்.
*பிழையில்லா நடை(இதை நான் சொல்லக்கூடாது.🤪)
*சொல்லப்படுற விஷயம் சுவரசியம் தருவதா எழுதணும்.
*எங்க நிறுத்தற்குறியிடு போடணும். எங்க கொட்டேஷன்(“…”) போடணும் என்று அறிந்திருக்கணும்.
*ஐ ஆல்இன் அது கண் இதெல்லாம் எங்க சரியா பொறுத்தி எழுதணும்னு பாருங்க. வல்லினம் மிகும் இடம் மிகா இடம் கவனிக்கணும்
*அப்பறம் எழுத்து பிழை அப்பவும் சரிசெய்ய முடியலைனு பீல் ஆகாதிங்க. பிரச்சனையேயில்லை. இப்ப எல்லாம் ப்ருப் ரீடிங் பார்த்து தர நிறைய பேர் முன் வர்றாங்க. ஆனா அவங்களுக்கு ஒரு கதைக்கு இவ்வளவு காசு என்று வாங்குவாங்க. அதோட பெருசா நாலேட்ஜ் இருக்கா என்றால் கேள்விக்குறியே. வீட்ல சும்மா இருக்கற லேடிஸ் எழுத்துப்பிழை மட்டும் பார்க்கறவங்க இருப்பாங்க. ப்ரூப் ரீடிங் சரியாக செய்வோரை தேர்ந்தெடுங்க.
(ஜாக்கிரதை பணம் கொடுத்து ஏமாறாதிங்க. எந்த இடமென்றாலும் ஒரு முறைக்கு இரண்டு மூன்று பேரிடம் கேளுங்க)
அந்தளவு ப்ரூப் ரீடிங் பார்க்க காசு தர்ற அளவுக்கு வசதியில்லைனா. சிம்பிள் நீச்சல்காரன் என்று அடிங்க வாணி நாவி இரண்டு இருக்கு அங்க காபி பேஸ்ட் போட்டு எடுங்க, பாருங்க புரியும்.
இங்க பலரும் அங்கீகாரம் கிடைக்க எழுதறிங்க. சிலர் வருவாய்காக எழுதறிங்க.
அங்கீகாரம் கிடைக்க எழுதற எழுத்துல நிச்சயம் ‘எழுத்து விபச்சாரம்’ நடக்க கூடாது.
வருவாய் ஈட்டுவதற்காக எழுதறேன் என்றாலும் எனக்கு நியாயமா பணம் ஈட்டணும்னு இருப்பாங்க. உழைக்கும் பணம் உடலில் ஒட்டணும் இல்லையா?
இந்த ரெண்டு கேட்டகிரி தாண்டி சிலர் எழுதுவாங்க பாலோவர்ஸ் அதிகமா இருக்கும் ஏன் சூப்பர் பேன்ஸ் அதிகமா இருக்கும். ஓ அப்ப இப்படிப்பட்ட டெம்பிளேட் எழுதணும்னு வளரும் எழுத்தாளர் தவறா போயிடாதிங்க. எழுத்தாளர்கள் என்றாலே சில நியாயம் தர்மம் பார்க்கணும்.
பாரதி தன் பத்திரிக்கை துறைக்கு பொருளாதார பற்றக்குறை வந்தாலும் ஆங்கிலனுக்கு முட்டுக்கொடுக்காதவர்.
உங்களை எழுத்தாளர் என்று அறிமுகம் செய்துக்கறப்ப மற்றவங்க பிம்பம் ‘ஓ பிராட் ஆப் மைண்ட். பல ஆலோசனைகள் அனுபவங்கள் கடந்திருப்பாங்க. நல்வழியை காட்டுபவர்கள்’ என்ற நோக்கத்தோட மட்டும் தான் பார்க்கணும்.
‘என்னது… ரைட்டரா.. ஓ.. அப்படிப்பட்ட பலான கதை எழுதறவங்க’ என்று சிலாகிக்க வச்சிடக்கூடாது. அப்படி பெயர் வாங்கினா நிச்சயம் நிறைய பாலோவர்ஸ் இருந்தும் பிரயோஜனமில்லை.
அடுத்த பதிவில் வேறொன்று பேச(கற்க)லாம்.