அத்தியாயம்-23
Thank you for reading this post, don't forget to subscribe! ராவணன் காருண்யா அலுவலகம் செல்ல கிளம்பினார்கள்.
காருண்யா எப்பவுமா போல ஸ்கூட்டி சாவி எடுத்தாள். மெது மெதுவாக ராவணன் இருந்த திசையை பார்த்தாள். ஷர்ட் பட்டனை மாட்டியவாறு வந்தவனை பார்வையிட்டவாறு அவளது ஸ்கூட்டி சாவியை சாவிக்கொத்து மாட்டும் இடத்திலேயே வைத்துவிட்டு, நாணம் கொண்டாள்.
நேற்று புது பைக் வாங்கி கோவிலுக்கு சென்று வந்தவர்கள், வீட்டுக்கு வந்ததும், டிபன் பாக்ஸை கழுவி வைத்து கிச்சனில் நாளை செய்ய போகுமா உணவிற்காக பட்டாணி உறித்துக் கொண்டிருக்க, ராவணனோ “காரு…. குட்நைட்” என்று கன்னத்தில் உதட்டை ஒற்றி எடுத்தான்.
காருண்யா பதட்டமாய் எழ, உறித்து வைத்த பட்டாணியில் சில சிதறியது.
ராவணன் அடுத்து காருண்யாவின் எதிர்வினைக்கு பயந்து, “சீக்கிரம் இந்த பிரெண்டை தூக்கி போடு காரு. லைப் பார்ட்னரா மாறுவோம். இது அட்வான்ஸ் புக்கிங்” என்று அறைக்குள் பதுங்கினான்.
ஐந்து நிமிடம் ஸ்தம்பித்து போனவள், மணி ஒன்பது ஆகவும் கடிகாரத்தில் இருந்து, குருவி சத்தமிட்டு அவளது சிலையாக நிற்கும் வதனத்தை கலைத்தது.
மெதுவாக ராவணன் பட்டும் படாமலும் முத்தமிட்ட கன்னத்தை தடவினாள்.
அவனது குட்டி குட்டி தாடியின் ரோமங்கள் அவளை இப்பொழுதும் சிலிர்க்க வைப்பதாக குத்தி கூச செய்ய, அந்நொடி அருவருப்பு உண்டாகாமல் வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
அதன்பின்னே ராவணனோடு தனக்கு ஏற்பட்ட பந்தம் மெதுவாக மொட்டுவிடுவதை உணர்ந்தாள்.
நண்பனாக எண்ணினால் அருவருப்பு உண்டாகியிருக்கும். இன்று அப்படியில்லையே. அவனை மனம் நாடுவது புரிந்தது.
அடுத்த நாள் அலுவலகம் செல்ல தயாரானவர்கள். ஸ்கூட்டி சாவியை எடுக்க சென்றவள், ராவணனின் பைக் சாவி பார்த்து அதை எடுக்க, இருவரும் புன்னகையுடன் வெளிவந்தனர்.
“இன்னிக்கு எவன் எவன் ட்ரீட் கேட்டு சாவடிக்க போறாங்களோ” என்று கூறி கீயை திருகினான்.
“உட்காரு” என்றதும் அவன் தோளை தீண்டி ஏறினாள்.
“டபுள் சைட் கால் போட்டு உட்காரலாம்” என்றான்.
“அதுக்கு தான் ஸ்பேஸ் தந்திருக்கேளே.” என்று கிலுக்கி சிரித்தாள்.
வண்டியை அதிவேகமாய் இயக்க, “ஏன் இப்படி வேகமா போறேள். இதுக்கு தான் மாமி உங்களை வண்டி வேண்டாம்னு கண்ட்ரோல் பண்ணிருக்கா. நான் ஈவினிங் போட்டு தந்துடறேன் இருங்கோ” என்று போலியாக மிரட்டினாள்.
“என்ன வேண்டுமின்னா போட்டு கொடு. ஐ டோண்ட் கேர்” என்றான் ராவணன். சொல்லுமா போது மாறாத புன்னகை உதட்டில் வழிந்தது.
“நேக்கு ஒரு டவுட். பைக் வாங்கியதை நிஜமாவே சொல்ல போவதில்லையா?” என்று கேட்டாள்.
“ஈவினிங் சொல்லறேன். எங்க போக போறாங்க எப்படியும் கால் பண்ணுவாங்க” என்று வண்டியை ஓட்டினான்.
என்ன தான் அதிவேகமாக வண்டியை செலுத்தினாலும் ஒரு நிதானத்தை உணரவே, “நன்னா தான் ஓட்டறேள். பாவம் இத்தனை நாளா கஷ்டப்பட்டு என் ஸ்கூட்டியை ஒட்டியிருப்பேள் தானே?” என்றான்.
“பின்ன.. அது எனக்கு சைக்கிள் மாதிரி இருக்கே” என்றான்.
“உண்மை தான் ஷோ ரும்ல அத்தனை வண்டி வரிசையா நிறுத்தியிருக்கறச்ச, நீங்க இந்த வண்டியில் சாய்ந்து நின்றது வசீகரமா இருந்துச்சு” என்று புகழ, “வசீகரமா… யூ மீன் அழகா இருந்தேனா?” என்று கண்ணாடியில் அவளை பார்த்து கேட்டான்.
“வசீகரமான்னா அதான் அர்த்தம்னு நினைக்கேன். நீங்க வேண்டுமின்னா அகராதியில தேடி பாருங்கோ. அகராதி பிடிச்ச ஆளு தானே” என்றாள்.
ராவணோ “பரவாயில்லை.. புருஷன் அழகாயிருக்கான்னு வார்த்தையில சொல்லிட்ட. பெரிய மனசு தான்.” என்றான் கேலியாக.
“ஆஹ்ஆங் நீங்க வந்ததிலருந்து, நம்ம ஆபிஸ்ல ஷாலினி, ரோஸ்லின் ஜோள்ளு ஊத்திண்டு கிடந்தா. ரோஸ்லினாவது என்னோட உங்களுக்கு விவாஹம் ஆனதிலருந்து வழியலை. ஆனா இந்த ஷாலினி இப்பவும் உங்களை பார்த்து ஏங்கி தவிக்கா.
இதுல நீங்க வேற வேலை செய்த அலுப்புல பின்னங்கழுத்தை தடவிண்டு சோம்பல் முறிக்கறச்ச, உங்க புல்ஹாண்ட்ல ஷர்ட்ல ஆர்ம்ஸ் டைட்டா மேன்லியா காட்ட இப்பவும் பார்த்து பொறுமறா. என்னைக்கு என்னிடம் வாங்கி கட்டிண்டு அடங்கப்போறான்னு தெரியலை.” என்று கோபமாய் முகம் சுருங்கியது.
ஆபிஸ் வரவும் வண்டியை நிறுத்திவிட்டு, காருண்யா புஜத்தை பிடித்து, “யாராவது என்னை பார்த்தா உனக்கு கோபம் வருதா?” என்றான் ராவணன்.
தட்டுதடுமாறி அவனை கண்டவள், “நேக்கு கோபம் வரலேன்னா எப்படி. நீங்க என்னோட ஆம்படையான். நேக்கு தானே சொந்தம்.” என்றவள், “கையை விடறேளா.. நேக்கு என்னவோ படபடப்பாகுது” என்று இறைஞ்ச, விடுவித்து, கையை பிடித்து நடந்து வந்தான்.
“புது வண்டியா தம்பி” என்று வாட்ச்மேன் கேட்டதும், “ஆமா அண்ணா.” என்றான்.
“சாக்லேட்டு கீக்லேட்டு எல்லாருக்கும் கொடுக்கலையா தம்பி.” என்று கேட்டதும், விழிக்க, “இந்தாங்கோ.. நான் பாதூஷா பண்ணி கொண்டாந்திருக்கேன்.” என்று டிபன்பாக்ஸை திறந்து நீட்டினாள்.
“அட இது இருக்கட்டும்மா. தம்பி நீங்க காசு தந்தா பிரியாணி வாங்கிப்பேன்.” என்று தலையை சொரிந்தார்.
“இந்தாங்க 500 என்ன வேண்டுமோ வாங்கிக்கோங்க” என்று தந்துவிட்டு காருண்யாவை கைப்பற்றினான்.
“500ரூவா தூக்கி கொடுத்துட்டேள். அவாளுக்கு குடிப்பழக்கம் இருக்க போகுது.” என்று முகம் சுழித்தாள்.
“ஏய்… அந்தண்ணா சாப்பாடு வாங்கி சாப்பிடுவார். சும்மா ஆம்பளன்னாலே டிரிங்க்ஸ்னு நினைக்காத.” என்று வரவும் லிப்டில் இருவர் மட்டுமே பயணிக்க, “சரி நான் அழகாயிருக்கேன்னு சொல்லறியே. என்னைக்கு என்ன ரசித்து பார்த்த?” என்றான்.
“ரசிச்சு எல்லாம் இதுவரை பார்க்கலை. பார்க்க நன்னாயிருப்பேள்.” என்று மெதுவாக கூறினாள்.
“இனி அடிக்கடி என்னை பாரு. என் கண்ணை பாரு. அப்ப தான் ஏதாவது தோன்றும். சரியா.” என்று குழந்தையிடம் கூறுவது போல கூற, லிப்ட் கதவு திறக்கவும், பாதுஷா கொண்டு வந்த பாக்ஸை வாங்கி “தேங்க்ஸ்.” என்றான்.
ஆளாளுக்கு பாதுஷாவை எடுத்து பைக் வாங்கியதை பகிர்ந்தான். ‘புதுசா கல்யாணம், புது பைக்கு நீ கலக்கு ராவணா” என்று மற்றவர்கள் கேலி செய்ய, அவரவர் இடத்தில் அமர்ந்து, பணியை ஆரம்பித்தார்கள்.
ராவணன் கூறியதாலா? அல்லது ஏற்கனவே அவன் வைத்த முத்தம் வேலை செய்த காரணத்தால் அவன் நெருக்கம் அவன் பெர்ஃப்யூம் மணம் அவளை வாட்டியதே.
அடிக்கடி ராவணானை கண்டவளுக்கு தன் கணவன் என்ற கர்வம் கூட தோன்றியது.
எல்லாம் இனிமையாக அவன் பக்கம் மனம் சாய துவங்கியது.
அலுவலகத்தில் அன்று மதியம் ராவணன் ட்ரீட் என்று ஆளாளுக்கு ஸ்விகியில் ஆர்டர் போட்டனர்.
கணக்கு வழக்கின்றி எல்லாம் செலவழித்தான். காருண்யா அதட்டவோ, தடுக்கவோயில்லை.
ராவணனின் மகிழ்ச்சியில் அவன் முகம் மலர்ந்து ஆனந்தமாய் நடமாட, அதை பார்க்க காருண்யாவுக்கு பிடித்திருந்தது. மனதிற்குள் அவனை ரசிக்க ஆரம்பித்திருக்க, ரோஸ்லின் அவளை இடித்து, “என்ன பார்வை இது. மேடம் கண்ணு அங்கயே இருக்கு. உன் ஆளு பைக் வாங்கியதுக்கு ட்ரீட் தர்றானா? இல்லை உங்களுக்குள் மத்த விஷயம் நடந்ததுக்கு சந்தோஷத்தில் தலைகால் தெரியாம ஆடறானா?” என்று கல்மிஷமாய் கேட்க, காருண்யாவோ, ‘ஏன் அப்படி அபிஸ்டு மாதிரி பேசற, அச்சோ தப்பா பேசாதேள்’ என்று கூறாமல், ‘சீ… அவரு பைக் வாங்கியதுக்கு தான் இந்த ஆட்டம் போட்டுண்டு இருக்கார். நேக்கும் அவருக்கும் இன்னமும் பேச்சு வார்த்தை மட்டும் தான்” என்று நாணத்துடன் உரைத்தாள்.
“என்னவோ போ. இதே ரீதியில் அவனை சைட் அடிச்சிட்டு இருந்த அவன் உன்னை முழுங்கிடுவான்.” என்று சிரித்தாள் ரோஸ்லின்.
‘ராவணன் தானே… தூக்கிட்டு போகட்டும்.’ என்று மனதிற்குள் சொல்லி முகம் மலர்ந்தாள் காருண்யா.
அதென்னவோ காதல் வந்தால் கள்ளத்தனம் வந்து அடிக்கடி பார்வையிட்டு ரசித்து இருவருமே ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதை தடுக்க முடியவில்லை. முன்பு பாராமுகமாக முகம் திருப்பியவர்கள்.
இப்பொழுது எல்லாம் ராவணன் அவள் அருகே தள்ளி நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, சில நேரம் நாற்காலிகள் நெருக்கமாய் போட்டு வேலையில் இருக்கும் போது தோள்கள் உரசியபடியோ, கைகள் கணினியில் தவறாக செய்துவிட்டால், மௌஸை தொடும் போது கை விரல் மீது உரிமையாக தான் தீண்டினான்.
காருண்யாவுக்கு ஜிவ்வென்று வெட்பம் ஏறும். நடுக்கம் கூடும், அதெல்லாம் ஓரவிழியில் அறிந்தவன் உதடு பிரிக்காமல் சிரித்தான் கள்ளன்.
“நேக்கு ஒரு மாதிரி இருக்கு கையை எடுக்கறேளா?” என்று மெதுவாய் கேட்டாள்.
“ஏன் கையை தொடக்கூடாதா?” என்று அவள் வெண்டக்காய் விரலை விடாமல் கேட்டான்.
“ஆத்துக்கு இருக்கறச்ச தொட்டு பேசுங்கோ. இங்க வேண்டாம். நேக்கு அன்கம்பர்டபிளா இருக்கு” என்றாள்.
“ஆத்துல.. ம்ம்ம.. சரி..” என்று விடுவித்து விட்டான்.
காருண்யாவுக்குள் இதயம் தாறுமாறாய் துடித்தது.
வீட்டிற்கு வந்து தொட்டு பேசுவானோ, என்று விழித்தவளுக்கு, ராவணன் தன் கன்னத்தில் முத்தமிட்டு முன்னேறும் விதமாக, காட்சிகள் கற்பனையில் வந்து செல்ல, ரோஸ்லின் உலுக்கினாள்.
“வரவர நீ சரியில்லை காருண்யா. கண்ணை திறந்துட்டு கனவு காணற. வா.. சாப்பிட” என்றதும், ராவணனை தேடினாள்.
“உங்க வீட்டுக்காரர் அசிஸ்டன்ட் மேனேஜரை பார்க்க போயிட்டார்மா.” என்றாள்.
காருண்யா அதன் பின் இருவருக்குமான டிபன் பாக்ஸை எடுத்து கொண்டு நடந்தாள். எப்படியும் ராவணன் வந்து சேர, சேர்ந்து சாப்பிட காத்திருந்தாள்.
அவனுமே பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தான்.
“செய்த பிராஜக்ட் ரொம்ப நல்லா போகுது.” என்று காருண்யா தட்டில் இருந்த காய்கறியை எடுத்து சுவைத்தான்.
“என் டிபன் பாக்ஸ்” என்று அதன்பின்னர் கேட்டான். மடியிலிருந்து எடுத்து தர, வாங்கியவன் ஸ்பூனால் எடுத்து சுவைத்தான்.
வேலை நேரம் மீண்டும் துவங்க, நேரம் போனதே தெரியாமல் இருந்தார்கள். மாலை பைக்கில் வரும் நேரம் முன்பு மாவு வாங்க நிறுத்திய இடத்தில் இன்றும் நிறுத்தினான்.
“மாவு கடையில ஏன் நிப்பாட்டுறேள். கோதுமை மாவு பிசைந்து காத்தாலயே ஆத்துல ரெடிப் பண்ணி ப்ரிட்ஜில் வச்சியிருக்கேன்” என்றாள்.
“இல்லை… பூ… பூ வாங்கலையா? மல்லிப்பூ” என்று கேட்க, காருண்யா சிறிது யோசனையுடன் அமைதியாக, ராவணனே சென்று வாங்கினான்.
காருண்யா வழிநெடுக பேசாமல் வந்தாள். வீட்டுக்கு வந்ததும் கோதுமை மாவை எடுத்து வெளியே வைத்துவிட்டு குளித்து முடித்து, பூரிக்கு உருட்டி, காலையில் செய்த சென்னா குருமாவை சூடுபடுத்தினாள்.
அன்று போலவே பூவை கொண்டு வந்து தலையில் சூடிவிட்டான். பூரிக்கு உருட்டி விட்டவள் அவன் தீண்டலில் சிலிர்க்க, “நேக்கு ஸ்பேஸ் தர்றேன்னு சொன்னேள்” என்றாள்.
“மேரேஜ் ஆகி இரண்டு மாசம் ஆகுது. ஸ்பேஸ் பத்தலையா?” என்றவன் மூச்சு காற்று காருண்யாவின் பின்னங்கழுத்தில் வெட்பகாற்றாய் வீச, பூரியை உருட்டி கைநடுங்க, சூடான எண்ணெய் சட்டியில் போட எண்ணெய் தெளித்துவிட்டது.
“அம்மா” என்று அலற, “அச்சோ.. சாரி சாரி காரு” என்றவன், எண்ணெய் தெளித்த கையை தண்ணீரில் காட்டினான். வேகமாய் ஐஸ்கட்டியை எடுத்து வைத்தான். தன்னால் தான் இந்த நிலை என்று துவண்டு சோகமாக, அவனது அக்கறை, காருண்யா மனதில் ஜீராவாய் இறங்க, “பதறாதேள் ஒன்னும் ஆகலை” என்று வலியை மறைத்து பூரியை போட்டு எடுத்தாள்.
ராவணன் ஏதோ தவறிழைத்த குழந்தை போல கிச்சனிலிருந்து டைனிங் டேபிள் பக்கம் வந்து அமர்ந்தான்.
அவசரப்பட்டு விட்டோமோ என்று மனம் வெதும்பினான். .
பூரியும் சென்னாவும் தொட்டு ராவணன் உதட்டருகே கொண்டு போனாள் காருண்யா.
“சாப்பிடுங்கோ” என்றாள்.
“பச்… ஐ ரியலி சாரி.” என்று கூற, “முதலில் சாப்பிடுங்கோ” என்று ஊட்டிவிட, ராவணன் அவள் கையை தடுத்துவிட்டு அவன் அவளுக்கு ஊட்ட துவங்கினான்.
“அவசரப்பட்டுட்டேன். இன்னும் வெயிட் பண்ணிருக்கணும்.” என்று புலம்ப, “நேக்கு சம்மதம்” என்றாள்.
காருண்யா சொல்லிவிட்டு நாணி தலைகவிழ, ராவணன் நிமிர்ந்து பார்த்து ‘ஏதாவது சொன்னாளா இல்லை எனக்கு பிரம்மையா தோன்றுதா?’ என்று விழிக்க, அவன் கன்னத்தில் முதல் முத்தமிட்டு அன்று சொன்னது போல, அவளும் அவனது தாடியில் பட்டும் படாமலும் முத்தம் வைக்க நினைத்து அருகே செல்ல, சட்டென்று பூரி ஊட்ட தான் வருகின்றாளென்று வாயை மெதுவாக திறந்தான். இதழும் இதழும் இணைந்து இருவருக்குள் மெல்லிய காதல் பூகம்பத்தை தூவியது.
-தொடரும்.
💕💕💕💕💕💕💕💕💕💕💕👌👌👌👌👌👌👌 waiting for nxt epi 😍
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 wow oru vazhiya madam ku love vandhachu😘 pudhu bike pudhu wife kalakkura da raavana😂
Interesting 😘🥰
ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 23)
நான் சொல்லலை, அதெல்லாம் ஸ்பேஸ் கொடுக்கறேன், பூஸ்ட் கொடுக்கறேன்னு சொல்லி, சொல்லியே… காரியத்தை சாதிக்க வைச்சிடுவாங்க.
ஏன்னா, ஆம்பிளைங்களுக்கு அற வைக்க பொறுக்காது. அதன் உண்மை.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Wow super super. Intresting
❣️❣️❣️❣️
Pa oruvazhiyamadam vazhiku varaanga
Woe ravana nee kalakkurada
Rompa super ah pokuthu seekrama story mutinchuruma
Super super super super super super super super super super super super
Interesting ud
Ada paavi space kodukurenu sollitu neeye avaluku ella unarvaium sikram vara vachita . Kariyakaran than nee karu um manasu marital paravalaye ok sollita unaku. Start your happily