Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-26

ஐயங்காரு வீட்டு அழகே-26

அத்தியாயம்-26

Thank you for reading this post, don't forget to subscribe!

   ராவணன் முதுகுக்கு பின் மூக்குறிந்து வந்தாள்.
   “ஏய் இப்ப எதுக்கு அழுது வடியற முகத்தோட வர்ற. உனக்கு மட்டும் உன் அப்பா, பாட்டி போறாங்களா. எங்கப்பா அம்மா கூட போனாங்க. நான் என்ன அழுதுட்டே வர்றேன்னா? அவங்க அவங்க சொந்த வீட்டுக்கு போக வேண்டாம்.” என்று கடிய, ‘நோக்கு பீலிங்க்ஸே இல்லையா ராவணா?. இரண்டு நாள் ஆத்துல பெத்தவாளா இருந்தா. மறுபடியும் தனியா விட்டுட்டு போன ஒரு மாதிரி இருக்கும்.” என்றாள்.

  “தனியாவா.. அப்படில்லாம் தோன்றலை. எனக்கு ஜாலியா தான் இருக்கு. அவங்களாம் இருந்தா என் பொண்டாட்டி கூட நிம்மதியா பேச கூட முடியலை. ஹால்ல கட்டி பிடிக்க முடியலை. கிச்சனில் சில்மிஷம் பண்ண முடியலை. இனி எப்பவும் போல இருப்போம்” என்றான் சந்தோஷமாக.

  “உங்களுக்கு எப்ப பாரு அதே நினைப்பு. என்னயிருந்தாலும் பேரண்ட்ஸ் இல்லைன்னா கஷ்டமாயிருக்கு.” என்றாள்.

  இனி பேசி புரோஜனமில்லை என்று, ராவணன் சாலையில் கவனத்தை பதித்தான்.

அலுவலகம் வந்ததும் காருண்யா சற்று நேரத்திலேயே இயல்பானாள். வேலை அவர்களை சுழற்றி அடித்தது.
   வீட்டுக்கு வந்தால் தனிமையை யோசிக்க வைக்காமல் தன் மனைவியை பார்த்துக்கொண்டான். காருண்யாவிற்குமே ராவணன் ஒரு ஆளே தன் பிரபஞ்சத்தில் இருப்பது போல நினைத்துவிட்டாள்.

   அழகான நாட்கள் இளையவர்கள் வாழ்வு இனிமையாக கழிந்தது. ஆனால் அதன் ஆயுள் காலம் ஒரு மாதம் மட்டுமே இருந்தது.

     ராவணனின் டீமில் இருந்த தாமஸ் கிறிஸ்மஸ் என்று வீட்டில் இப்பொழுதே செய்த கேக் கொண்டு வந்தான். வரிசையாக கொடுக்க, டீமில் எடுத்தனர்.‌

  அந்த நேரம் காருண்யாவிடம் நீட்ட, “இல்லை… நேக்கு வேண்டாம்.” என்று மறுத்தாள். கேக்கில் முட்டை கலந்திருக்கும் என்ற காரணத்தால்…

  ராவணனோ அதெல்லாம் பார்க்காமல், “மேரி கிறிஸ்மஸ் தாமஸ். ரோஸ்லின் உங்க வீட்டு கேக் எங்க?” என்று கேட்டான்.

   “நானும் கொண்டாந்து இருக்கேன்.” என்று திறந்தவள், “இதுயில்லை… இது காருண்யாவுக்காக எக்லஸ் கேக். இது உங்களுக்காக.” என்று கொடுத்தாள்.

காருண்யா ரோஸ்லின் தந்ததை மட்டும் பெற்றுக் கொண்டாள்.
  இது தாமஸிற்கு லேசான வருத்தம்.

   “ஏய் மச்சான்… அன்னிக்கு ஹோட்டல்ல பார்த்தேன். நீ மட்டும் தனியா வந்து சாப்பிட்ட. நீ நான்வெஜ் சாப்பிடறப்ப, காருண்யா வீட்ல சாப்பிட்டுப்பாங்களா?’ என்றான். தற்போது அவன் முட்டை கேக்கும் அவள் முட்டை கலக்காத கேக்கும் விழுங்குவதால் அப்படி கேட்டான். 

‘எது…. நான்வெஜ் ஹோட்டலிலா?” என்பதாக காருண்யா ராவணனை காண, அவனோ சங்கடமாய் விழித்தது சில நொடியே, “பின்ன அவளை எப்படி கூட்டிட்டு வருவேன் காருண்யா வீட்ல தான் சாப்பிடுவா. அவ நான்வெஜ் பக்கமே வரமாட்டா. எனக்கு வேண்டுமின்னா என்வி சாப்பிடுவேன்” என்றான்.‌
  என்றாவது தெரிந்தால் பொய்யுரைக்க போவதில்லை என்ற கோட்பாட்டில் தான் ராவணன் இருந்தது. இன்று அதை தெரிவிக்கும் விதமாக உரைத்தான்.

  காருண்யாவோ முகம் இருண்டுவிட்டது. மாமிசத்தை எப்பொழுது சாப்பிட்டான். சாப்பிட்ட சுவடே இல்லையே. தினமும் மெத்தையில் உறக்கத்தை பகிர்வது போல, உடலையும் பகிர்வது வழக்கமாக இருந்தும், வாடை எதுவும் இல்லையே‌’ என்று சிந்தனை ஓடியது.

ரோஸ்லினோ “ஏய்… ராவணன் என்வி சாப்பிடுவார் என்றால் நான் நாளைக்கு பிரியாணி கொண்டு வர்றேன். கிறிஸ்மஸுக்கு அம்மா செய்வாங்க.” என்றவள் ராவணனிடம் திரும்பி, “ராவணன் சாப்பிடுவிங்க தானே?” என்று கேட்டாள்.

  “எடுத்துட்டு வாங்க ஒரு பிடி பிடிப்போம்” என்றான்.

  ‘அபச்சாரம் வீட்ல எல்லாம் அசைவ வாடை வரவே கூடாதென்ற முடிவில், இறுக்கமாய் இருந்தாள் காருண்யா. அவர்கள் பேச்சில் அங்கிருந்து ஓடிவர நினைத்தாள். மனசில் பட்டதை எல்லாம் கூறிட முடியுமா? ரோஸ்லின் எல்லாம் நெருக்கமாய் பழகு நட்புவேறு.

   ராவணனுக்கு காருண்யாவின் முகபாவணை மாற்றம் பெற்றதும், ‘டேய் தாமஸ் உனக்கு கிறிஸ்மஸ்னு எனக்கு பொங்கல் தீபாவளி கொண்டாடிட்டியே. இப்ப இவ வீட்டுக்கு போய் பிரச்சனை ஆரம்பிக்க போறாளோ. லுக்கு எல்லாம் சரியில்லையே.’ என்று இப்பொழுதே பஞ்சாயத்துக்கு தயாரானான்.

   உணவு இடைவேளை முடிந்து அருகருகே அமர்ந்து வேலையை கவனிக்க, காருண்யாவோ சற்று தள்ளி நகர்வது அப்பட்டமாக தெரிந்தது. ஏற்கனவே ரோஸ்லின் மூலமாக, ஷாலினி என்வி எடுத்துட்டு வந்தா காருண்யா இரண்டடி தள்ளி ஓடுவா.’ என்ற இயல்பான பேச்சு இப்பொழுது நினைவில் வந்தது.

  ஷாலினியும் நானும் ஒன்றா? என்று ராவணன் மனதினுள் ஓடியது. தன் முகபாவனையை வெளிப்படுத்தாமல் அங்கே வேலை செய்யும் இடத்தில் இருப்பவனாய் வேலையை தொடர்ந்தான்.

   மாலை பைக்கில் புறப்பட, எப்பொழுதும் ஓரளவு நெருங்கி அணைத்துக் கொண்டு வருபவள் இடைவெளியிடவும், ராவணனுக்கு கழுத்து நரம்புகள் புடைத்தது. அந்த கோபத்தை தன் வேகத்தில் காட்டினான்.

   “செத்த மெதுவா போறேளா” என்று தோளை தட்டி கூற, காது கேளாதவன் போல வண்டியை முறுக்கினான்.

“உங்களுக்கு தான் வாகன தோஷம் இருப்பதா சொன்னேளே. இப்ப மெதுவா போகலை.. ரோகிணி மாமியிடம் சொல்வேன்” என்று மிரட்டினாள்.‌

அவனை பெற்றவரிடம் சொல்வதாக மிரட்டினால் அடங்குவான் என்று எண்ணினாள். அவள் அப்படி தானே. பாட்டியிடமும் அப்பாவிடம் சொல்வதாக உரைத்தாலே சற்று அச்சம் கொள்வாள்.
  ஆனால் இங்கே ராவணன் விஷயத்தில் அவன் அவனது வாழ்வில் யாரின் தலையிடலிலையும்  கேட்பவன் இல்லை. அந்த விஷயம் அவன் மென்மேலும் பைக்கை முறுக்கி ஓட்டுவதில் புரிந்துக்கொண்டாள்.
 
  மனதில் ‘பெத்தவா என்றதும் கொஞ்சமாவது அடங்குறேளா?’ என்று முனங்கி அவன் இடையை கட்டிக்கொள்ள, இத்தனை நேரம் அவன் பிடித்து வைத்த கோபங்கள் பஞ்சாய் பறந்தது.
 
  ராவணன் உதட்டில் முறுவல் கூடி, “இப்ப எதுக்குடி தள்ளி உட்கார்ந்த? வேகமா ஒட்டவும் ஒட்டிக்கிட்ட” என்றான்.

  அவன் மீது கோபத்தில் பேசாமல் வர, வீட்டுக்கு போய் பேச வேண்டுமென்று புரிந்துக்கொண்டான்.‌

    வீட்டுக்குள் வந்ததும் கதவை திறந்தவள், அவளது அறைக்கு சென்றுவிட்டாள்.

  ராவணன் ஹாலில் போனில் கவனத்தை செலுத்த, காருண்யா அவளது வேலையில் மூழ்கினாள்.

  அவனாக பேசுவானென்று வீம்பு பிடிக்க, அவனோ ‘நீயா பேசு’ என்றது போல குளித்து முடித்து வந்தான்.

  “நைட்டுக்கு என்ன செய்ய இட்லியா தோசையா?” என்று கேட்டு நின்றாள்.

  “தோசை” என்றான்.

  “தக்காளி தொக்கு தரவா, ஊறுகாய் தரவா?” என்று கேட்டதும் சலிப்படைந்து, “இட்லிபொடி” என்றான்.

  அவளுக்கு தக்காளி ஊறுகாயும், அவனுக்கு இட்லி பொடியும் கொண்டு வந்து வைக்க, “உங்களுக்கு பிடிச்ச புட் எது?” என்று அவளாக தான் கேட்டாள். ரோஸ்லின் நாளை ப்ரியாணி கொண்டு வரட்டுமா என்று கேட்க, தலையாட்டிவிட்டான்.
  அவனுக்கு பிடித்த உணவை வீட்டில் செய்து அவனிடம் தந்துவிட்டால் ரோஸ்லின் கொண்டு வரும் பிரியாணி வேறு யாருக்காவது சேரும் என்ற மட்டமான திட்டம்.

  அவனோ நிஜமாகவே தனக்கு பிடித்ததை கேட்கின்றாளென்ற எண்ணத்தில், ”பிஷ் பிரியாணி” என்றான்.

ஏற்கனவே கடுப்பில் இருந்தவளோ “திரும்ப திரும்ப கிண்டல் பண்ணறேளா? அதெல்லாம் ஆத்துக்கு வெளியே வச்சிக்கோங்க. எனக்கு இதெல்லாம் பிடிக்காது.
  எத்தனை நாளா என்னை ஏமாத்தறேள். மாமா கல்யாணம் பேசறப்ப, நீங்க மாமிசம் சாப்பிடற பழக்கத்தை விட்டதா பேசினா.
ஆனா நீங்க வெளியே போய் டின்னர் வாங்கறப்ப எல்லாம் ‘பசிக்கலை, அங்கயே சாப்பிட்டேன்’ என்ற கதையை அள்ளி விட, இப்ப தான் புரியுது. அசடாட்டும் நீங்க சொன்னதை நம்பிண்டு இருக்கேன்.‌” என்றாள். அவளுக்கு அவன் தனக்கு தெரியாமல் வெளியே சாப்பிடுவது வருத்தத்தை தந்தது. தனக்காக மாறவில்லையா என்ற வாட்டம். அதனால் கோபத்தை மழையாக பொழிந்துவிட்டாள்.

“என்னத்த ஏமாத்திட்டாங்க…? முன்ன நீ என் பக்கத்துல இருந்ததால் நான்வெஜ் ஆப்டர்னுன் சாப்பிடாம தவிர்த்து நைட் சாப்பிட்டேன்.‌ அது பிப்ஃபோர்… நமக்கு கல்யாணம் ஆகலை.
  எங்கப்பாவிடம் நான் அதை தான் மீன் பண்ணினேன். அவரும் அதை தான் சொன்னார்.
  என்னவோ என்வி சாப்பிடறதையே விட்டுட்டேன்னு உன்னிடம் ப்ராமிஸ் பண்ணியதா சொல்லற. நாம என்ன லவ் மேரேஜ் செய்த கப்பீளா? யாரு யாரை ஏமாத்தறா?‌
 
  வயிற்றுக்கு பிடிச்சதை சாப்பிட ஆசைப்பட்டேன். உனக்கு தெரிந்தா பீல் பண்ணுவேன்னு சொல்லலை. அதர்வைஸ் நான் என்ன தப்பு பண்ணினேன். ஏமாத்தறாங்களாம் ஏமாத்தறாங்க… ஏய் நான் அதே ராவணன் தான். நீ தான் அடிக்கடி பச்சோந்தி மாதிரி மாறுற.

  உனக்கு தேவைன்னா வந்து இசிண்டு குழைந்து பேசுவ
இல்லையா… கமுக்கமா திரிவ. உன்னை பத்தி எனக்கு தெரியாதா?” என்று சாதாரணமாய் கத்தினான்.

அவனை பொறுத்தவரை சாதாரண கத்தலே. எப்பவும் ராவணனின் சத்தம் இந்தளவு தான்.
  ஆனால் காருண்யாவோ, “என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கத்தினாள். ராவணன் அருகே வந்தாலே ‘பகவானே… இவாளோட நமக்கு எந்த வம்பும் வேண்டாமென ஒதுங்கி போகும், அவளோ கத்தவும் ராவணனுக்கு வசதியாக போனது.

  “ஓ… என்ன தெரியும்னு சொல்லவா.. ஆஹ்.. சொல்லவா?” என்று இடையில் கைவைத்து, அவளை திருப்பி நெருங்கி வர, சோபாவில் தொப்பென்று சாய்ந்தாள்.

  “இப்ப இந்த வாய் வாயாடறியே. என்னை சந்திச்சப்ப ஒரு சைல்வுட் நண்பனா, வேண்டாம்… அட்லீஸ்ட் பக்கத்து வீட்டுல இருக்கற தெரிந்த பையன் என்று காரணத்துக்காகவாது பேசலாம்ல. ஏதோ நீ தான் வானத்துல இருந்து குதிச்சவளாட்டும், நான் எல்லாம் சாதாரண மனுஷன் என்பது போலவும் லுக் விட்டு ஒதுங்கின.

  அப்படியென்ன பண்ணிட்டேன்..‌ சரி சைல்வுட்ல பழகியவன்.  ரொம்ப வருஷம் டச் இல்லை.. அதனால் விலகறேன்னு நானா புரிஞ்சிக்கிட்டேன்.

  உன்னையும் என்னையும் அந்த அரை மண்டையனுங்க தப்பா கனெக்ட் பண்ணி பேசி, நமக்கு கல்யாணத்தை ஏற்பாடு செய்தாங்க. அப்பவாது இரண்டு வார்த்தை ஏதாவது பேசினியா..? சிட்சுவேஷன் இப்படி அதை அக்சப்ட் பண்ணி அடுத்த லைப்ல எப்படி போகலாம்னு பேச நினைச்சியா? இல்லையே… நானா பத்திரிக்கை அடிச்சு இங்க ஆபிஸ்ல கொடுக்கற வரை நம்மளை பத்தி மூச்சு விடலை.
  சரி அதுக்கூட கலக்கமா இருக்கும்னு விட்டுட்டேன்.
உன்னை ஹாஸ்டல் வந்து, அழைச்சிட்டு போய், பஸ் ஏத்தி விட வந்தேன். உன்னை தொட்டு இறங்குனு சொன்னதுக்கு, கீழே இறங்கறதுக்கு முன்னவே, கர்ச்சீப் வச்சி கையை தொடைக்கற.
நான் என்ன அவ்ளோ மட்டமா? அழுக்காவா வந்தேன். அந்தளவு சுத்தம் பார்க்கறனு நானும் பல்லைக் கடிச்சிட்டு நின்றேன்.‌
  ஏதோவொரு பையன் சடனா தொட்டா சங்கோஜமாவது, கரெக்ட் தான். நீ அந்த மனநிலையில் இருந்துருப்பன்னு எடுத்துக்கிட்டேன்.

  கல்யாணம் ஆகறப்ப, தாலி கட்டறேன், மேடம் உங்கப்பா மடில உட்கார்ந்து தாரை தாரையா கண்ணீர் வடிக்கறிங்க. நான் என்ன அரக்கணா? கல்யாண போட்டோவுல ஒரு போட்டோவுலயாவது சிரிச்சி வச்சியிருக்கியாடி” என்று தாய் தந்தை வந்தப்போது கொடுத்து சென்ற கல்யாண ஆல்பம் டிவி அருகேயிருக்கே அவள் முன் வீசினான். அதில் பெரும்பாலும் காருண்யா சிரிக்கவில்லை. அழகான அமைதி மட்டுமே.
  கல்யாணம் ஆனப்பிறகு உங்க வீட்லயும் சரி எங்க வீட்லயும் சரி, நானா உனக்கு ஸ்பேஸ் தந்தேன். உனக்காக பார்த்து பார்த்து, என் செயலால் நீ காயமாக கூடாதுன்னு இருந்தேன். இதுல மேடம் நான் குடிச்ச வாட்டர் பாட்டிலில் நீங்க குடிக்க மாட்டிங்கன்னு சீனு வேற. கிஸ் பண்ணும் போது எச்சிலாம் பார்க்க மாட்டியா?

  எப்ப பாரு மோர் குழம்பு அவியல் துவையல், தொக்கு, பருப்பு சாதம், வத்தக்குழம்பு, புளியோதரை, பொங்கல்லுனு, ஒன்னு புளிப்பை அள்ளி கொட்டி திக்கா ஒரு குழம்பு. இல்லையா… உப்பு சப்பு இல்லாத சமையல். இதுல தோசைக்கு ஊறுகாய்’ என்று ஊறுகாய் டப்பாவை வேறு தட்டிவிட்டான்.

எனக்கு பிடிக்காதப்ப, உன்னிடம் சொன்னா ஹார்ட் ஆவேன்னு கடையில சாப்பிட்டேன். நான் நல்லா மட்டன், சிக்கன், பிஷ், சீ புட்னு மிதக்கறது பறக்கறது எல்லாம் சாப்பிடுவேன். ஐ லவ் என்வி புட்.

  ஒரு மனுஷனுக்கு எது பிடிக்குமோ அதை தான் சாப்பிடுவான்.

ஆப்ட்ரால் நார்மலா பேசுன்னு சொன்னா, அவாஅவா பேசற பேச்சு பழக்க வழக்கம் யாருக்காவும் மாத்தணும்னு எனக்கு அவசியமில்லைனு சொன்ன. அப்ப என்னோட பழக்கவழக்கம் மட்டும் உனக்காக மாத்தணுமா? எந்தவூர் நியாயம்.

  நீ ஐயர், வெஜிடேரியன், நான் ஐயனார்… நான்வெஜிடேரியன். இந்த கருமம் தான் கல்யாணத்தப்பவே தெரியுமே. எப்படியிருந்தாலும் நான் சாப்பிடுவேன்னு தெரிந்தும் ஏமாத்துவதாக சொன்னா என்ன அர்த்தம்.

  இதெல்லாம் ஒரு காரணம்னு ஆபிஸ்ல தள்ளி உட்காருற. பைக்ல தள்ளி உட்காருற. கணவன்  நெருக்கமா வர்றப்ப மனைவி தள்ளி தள்ளி போனா என்னடி அர்த்தம்? எப்படியும் ஒரே பெட்ல தானே உருண்டாகணும்” என்றான்.‌ இத்தனை நாள் மனதில் அரித்த விஷயத்தில் பாதியை கொட்டி தீர்த்தான். அவன் தீண்டிய போது கைகுட்டையால் துடைத்தது, அவன் எச்சி பட்ட தண்ணீரை மறுத்தது, தள்ளி தள்ளி அமர்ந்தது என்று அன்றைய நிகழ்வின் வலிகள் இன்று கொட்டப்பட்டது.

    “இதெல்லாம்…. இப்ப சொல்லறேள். அப்ப உங்க மனசுல இதெல்லாம் வச்சி பழகினேளா? நல்லது… உங்க இஷ்டப்படி நீங்க இருங்கோ. அப்படியொன்னும் உங்களை கட்டிண்டு தூங்க, நேக்கும் அவசியமில்லை.” என்றவள் பாத்திரத்தை கழுவ உருட்டினாள். அவனோ கோபமாக அறைக்குள் அடைந்துக் கொண்டான்.

-தொடரும்.

14 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-26”

  1. Priyarajan

    எல்லாத்தையும் கொட்டிட்டான்…. வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி 👌👌👌👌👌👌💕💕💕💕

  2. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 26)

    இதை, இதைத்தான் எதிர் பார்த்தேன். என்னவோ ராவணனை பத்தி தெரியாத மாதிரியே அதிர்ச்சியாகுறா பாருங்களேன். அவ மட்டும் என்வீ சாப்பிடாம, பிராமண பாஷையை மாத்தாம வழக்கம் போலவே இருக்கணுமாம். ஆனா, அவன் மட்டும் இந்த மகராணியை கட்டிக்கிட்டவுடனே டோட்டலா மாறிடணுமாம். இது எந்த ஊரு நியாயம்ன்னே தெரியலையே. என்ன கேட்டா, ராவணன் பேசறதுல நியாயம் இருக்குன்னு தான் சொல்லுவேன். அவன் வீட்ல அவளுக்கேத்த மாதிரி தானே இருக்கிறான், நடந்துக்கிறான்.
    அத்தோட நிப்பாட்டிக்கணும்.
    ஓவர் டாமினேஷனோ, இன்டர்ஃபியரோ பண்ண கூடாது.. அதான் குடும்பம் நடத்த உதவும்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Ravananan u rocked. Kaaru he matched u in many situations for unonky. U should understand it. He ate NV in outside only. So it’s not a problem. He has given more space and comfortable to u. You should also accept his desire. Intresting sis.

  4. Kalidevi

    Ninachen enada over romance pothe twist vaika poranga intha sissy nu vachitanga paru sandaila unmai therinjiduchi sanda start avan solrathum crt thane nee sila vishayam mathikala athe mari avanum unakaga Inga atha panalye atha ninachi santhosa padu kaaru

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *