அத்தியாயம்-33
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ராவணனுக்கு நெஞ்செமெல்லாம் ஏதோ வதைத்தது.
காருண்யாவோடு சிறுவயதில் விளையாடி, பேசி சிரித்ததெல்லாம் ஐந்தாம் வகுப்பு வரை தான். அதன்பின் அவள் பெண்கள் படிக்கும் பள்ளியில் சேர்ந்துவிட்டாள். இல்லையில்லை அமிர்தா பாட்டி சேர்த்துவிட்டார். அமிர்தா பாட்டிக்கு தன்னை பிடிக்காது. வெற்று இனம் என்ற காரணம் மட்டுமே. போதாதிற்கு மாமிசம் சாப்பிடுபவா, என்ற துணுக்கு காரணமும் உண்டு.
காருண்யா எப்பவும் போல தன் வீட்டில் வந்த அன்று, உணவை பகிரும் பொருட்டு தெரியாத்தனமாக சிக்கன் பீட்ஸாவை விழுங்கிவிட்டாள். அன்னை ரோகிணி அதை துப்ப கூறி வாஷ்பேஷனில் அவளை அழைத்து செல்ல காருண்யா முகம் வாடிவிட்டது.
ருசியாகவும் மணமாகவும் இருந்த பண்டம் முதல் வாய் விழுங்கியதில் மற்றொரு வாயை விழுங்காமல் துப்ப கூறவும் கஷ்டப்பட்டு அந்த வயதில் துப்பினாள்.
போதாத குறைக்கு பேஸ்ட் எடுத்து கொடுத்து தேய்க்க கூறவும், விழிபிதுங்கி பயந்து கைகளால் பல்லை விளக்கினாள்.
“உங்க பாட்டியிடம் சொல்லாத. சொன்னா திட்டுவாங்க” என்று கூற, தலையை ஆட்டி கிளப்பினாள்.
பாட்டி அமிர்தமோ பேத்தி முகம் இயல்பாய் இல்லாமல் குழப்பத்தில் இருக்க கேட்டு விட்டாள்.
அம்மாவாக பாட்டியை நினைத்து வாழும் பெண்ணவளோ, நடந்ததை அப்படியே விவரித்தாள்.
பாட்டி நெருக்கமா? ரோகிணி மாமி சொன்னது பெரிதா என்ற காரணத்தில் பாட்டி தானே தனக்கு அம்மாவுக்கு நிகரென்று ஒப்பித்தாள்.
அடுத்த நொடி பளாரென்ற அறை விழுந்தது. “அவா வீட்டுக்கு போகாதனு தலைப்பாடா சொன்னேன். கேட்டியானோ.. இதெல்லாம் பழகி விடுவானு படிச்சி படிச்சி சொன்னேன். சீனிவாசன் கேட்டாத்தானே.. ஏன் நோக்கு நம்மாத்து மனுஷா கூட பழக என்ன கேடு.” என்று அடித்து திட்டிவிட்டு, “பகவானே இந்த பாவத்தை நான் எங்க போய் கரைப்பேன். நம்மாவாக்கு தெரிந்தா வாய்க்கு வந்ததை பேசுவாளே.” என்று புலம்பினார்.
ரோகிணி காருண்யாவை அனுப்பிவிட்டு மனம் கேளாமல் எதற்கும் பின் தொடர்ந்து வர, கூடவே ராவணனும் வந்தான்.
அவன் பார்வையில் காருண்யா அடிவாங்கி திட்டு வாங்குவது மனதில் பதிந்தது.
ரோகிணி பிறகு மாடிக்கு சென்ற இடைப்பட்ட வேளையில் நடந்துவிட்டதென்று சொல்லி மன்னிப்பு கேட்க, அமிர்தாவோ, “இங்கப்பாருடிம்மா நாங்க சுத்தபத்தமா வாழறவா. இதெல்லாம் என் பேத்திக்கு கொடுக்காதிங்கோ. ஏற்கனவே உங்களுக்கு தெரியும்னு நான் சொல்லலை. குழந்தையிடம் நீங்க திண்பண்டம் கொடுக்கவும், இப்ப எதுல வந்து நிறுத்தியிருக்கு பாருங்கோ.” என்று கோபிக்க, “மாமி நான் வந்ததும் அவளை தடுத்துட்டேன்” என்று கூறினார்.
“என்னத்த தடுத்தேள்.” என்று முகம் திருப்பி ‘போ ஸ்னானம் பண்ணு.’ என்று திட்டும் காருண்யாவுக்கு கிடைத்தது.
ரோகிணி ராவணனை அழைத்து வீட்டுக்கு வந்துவிட்டார்.
ராவணன் அன்றைய நாளில் ‘ஏன்மா காரு சிக்கன் பீட்ஸா சாப்பிட்டதை துப்ப சொல்லிட்ட” என்று விசாரிக்க, “அவங்க சாப்பிடக்கூடாதுடா” என்று பதில் தந்தார்.
“ஏன்மா… அவங்களும் ஹூமன்ஸ் நாமளும் ஹூமன்ஸ். ஏன் சாப்பிடக்கூடாது. பகவானே பாவத்தை எங்க கழுவுறதோனு சொல்லறாங்க. அவங்க சாமி திட்டுவாரா? நீ சொன்ன கண்ணப்பர் கதையில சாமிக்கு மான் கறி வச்சி, எச்சி அபிஷேகம் தானே செய்தார்.” என்று இந்த சாதி இந்த மதம், மக்களில் பிரிவுகள் அறிந்திடாது விவரம் கேட்டான்.
மெத்த படித்த பெரியவர்களுக்கு கூட வாதம் விவாதம் செய்திடலாம். ஆனால் கிள்ளை மொழி மாறாத குழந்தைகளிடம் இது போன்ற விஷயத்திற்கு சாதாரண பதில் கூட கூறயியலாதே.!
ரோகிணியோ தடுமாறி போனார். ஆனால் இந்த உலகத்தில் குழந்தைக்கு தேவையான பதிலை மாற்றி கூட கூறயியலும்.
அதை தான் ரோகிணி செய்தார்.
ராவணனை உட்கார வைத்து, ‘உனக்கு பாவக்காய் பிடிக்குமா? அம்மாவை செய்ய விடுவியா?’ என்று கேட்க முகத்தை சுழித்து வேகமாய் தலையாட்டினான். ராவணன் பாவக்காயை வாங்கவே விடமாட்டான். அதை சுட்டிக்காட்டி, அது போல தான். அவங்களுக்கு பிடிக்காது காருண்யாவையும் சாப்பிட கூடாதுன்னு சொல்லி வளர்ப்பாங்க.
இதெல்லாம் பெரிய விஷயமில்லை. அவங்க அவங்க பழக்கவழக்கத்தை யாருக்காகவும் மாத்திக்காம இருப்பதுல தப்பில்லை ராவணா. ஒவ்வொரு ஊரும் எப்படி சிறப்போ, ஒவ்வொரு மொழியும் எப்படி தனித்துவமோ, அப்படி தான் கடவுளும், நமக்கான உணவுகள் வீட்டின் பழக்கவழக்கமும். நாம நாமளா இருக்க விரும்பறது தான் வாழ்க்கை. பிடிச்சதை செய், மகிழ்வித்து மகிழ், யாரையும் காயப்படுத்தாத அவ்ளோ தான்டா” என்றார்.
எது புரிந்ததோ இல்லையோ அதன்பின் காருண்யாவிடம் பீட்ஸா பற்றி பேச மாட்டான். மனதில் அம்மா கூறிய வார்த்தை பிடிச்சதை செய்-மகிழ்வித்து மகிழ்-யாரையும் காயப்படுத்தாத என்ற வார்த்தைகள் ஆழப்பதிந்தது.
அதன் பின் சிறிது நாட்கள் காருண்யா வரவில்லை. பிறகு அமிர்தாவே கோயில் பஜனை செல்வதாக கூறி, அரை நாட்கள் அங்கேயே இருக்க வேண்டும். காருண்யாவை நீங்க பார்த்துக்கோங்கோ’ என்று கூறியிருக்க, பீட்ஸாவால் வாங்கிய திட்டு அடி எல்லாம் மறந்து மீண்டும் ராவணனோடு விளையாட வருவாள்.
எல்லாம் பெரியவளாக மாறிய பின் மாற்றமாகிவிட்டது.
தன் வீட்டு மாடியில் தான் காருண்யா பூப்பெய்தியது. ஆனால் அது அறிந்தும் அன்னையிடம் நாசூக்காய் விவரித்தான் ராவணன்.
அவனுக்கு இருந்த நாசூக்கும் நாகரிகமும் அமிர்தா பாட்டிக்கு இல்லாமல் போனது.
வயசுக்கு வந்தப்பின் காருண்யா விளையாட அனுப்புவதில்லை. பெரும்பாலும் வயசுக்கு வந்தால் ஆண்களோடு விளையாடுவதை குறைத்து கொள்ள சொல்வது குடும்பத்தில் உள்ளதே.
ஆனால் காருண்யா ஸ்லோகம் வகுப்புக்கு சென்ற நேரம், ராவணன் அவள் வீட்டுக்கு வந்த தபாலை தன் வீட்டில் தூக்கி போட்ட காரணத்தால் அதை எடுத்துக்கொண்டு வந்தான். அந்த நேரம் பாட்டி அவளின் மனுஷாளிடம், “நேக்கு அதான் பயமே. அடிவயித்துல புளியை கரைக்குது. இத்தனை நாள் பிரெண்டுனு விடலாம். இனியும் அவா ஆத்துக்கு அனுப்ப முடியுமோனோ. இப்ப இருக்கற பிள்ளையாண்டா எல்லாம் பொசுக்குன்னு காதலில் விழறா. பக்கத்து பக்கத்து வீடுன்னு காதலிச்சி தொலைச்சா.. பகவானே நினைச்சாளே குமட்டுது. நம்மாத்து பொண்ணை படிதாண்டாம பார்த்துக்கறேன்.” என்று பேசிக்கொண்டிருக்க, ராவணன் “பாட்டி காருண்யாவுக்கு லெட்டர்” என்று நீட்ட, “என்னடா லெட்டர்? லவ் லெட்டரா” என்று பாய்ந்து வந்து பிடுங்க, ராவணன் “கம்பியூட்டர் கோர்ஸ் பாஸ் ஆனதா லெட்டர் அனுப்பியிருக்காங்க” என்றவன் ஒரு மார்க்கமாய் தான் அமிர்தாவை கண்டான்.
இதுவரை மறைமுகமாக ஏதேனும் திட்டுவதெல்லாம் வளர்ந்த பையனான ராவணனுக்கு அர்த்தம் புரிய, முதிய பெண்மணி என்ற மரியாதையை அமிர்தாம்பாள் முதலில் இழந்தார்.
அடுத்து பக்கத்து மாமியிடம் ஏதோதோ பேசி தரத்தை குறைத்து மதிப்பீடு செய்ய, முற்றிலும் பாட்டி என்ற அடைமொழியை கூட கூற பிடிக்காது. கிழவி என்று தான் பதிந்தார்.
சாதி மதம் பிரிவினை இதெல்லாம் அந்த வயதில் புரிந்தவன் அல்லவா.
அதோடு ஸ்லோகம் வகுப்பு, தங்கள் இனம் தங்கள் மனுஷாள் என்று குழுவாக இருப்பவர்களை பார்த்தால் ஏனோ எரிச்சல் உண்டாகும்.
பொதுவாக எல்லாவிதமான சலுகைகள் வசதி என்று பார்த்து பார்த்து செய்வதை கண்கூடாக கண்டான்.
‘நம்மாத்து புள்ளையாண்டாளா சரி அப்ப சொல்லி வச்சி வேலை வாங்கிடுவோம்’ ‘சரிசரி எல்லாம் சொல்லணுமோனோ நம்மாத்து குழந்தை இவாளுக்கு சீட் இல்லாம எப்படி?’ இப்படியான சலுகைகளில் எல்லா இடத்திலும் உண்டு என்றாலும் நேரில் அமிர்தம் மூலமாக கண்டவனுக்கு இந்த மனுஷங்களே தனி டைப் என்ற கணிப்பு.
அது போல அமிர்தாவும் ராவணன் என்றால் அதிருப்தி முகத்தில் காட்டி வீட்டில் வரவிடாமல் செய்தார். அதே எண்ணத்தை அப்படியே காருண்யாவுக்கும் கடத்தினார்.
ராவணன் வருகின்றான் என்றால் வேகமாய் பேச வேண்டுமே என்று அவசரமாய் வீட்டுக்குள் போய் கதவை தாழிட்டு கொள்வாள்.
எதிரெதிரே நடந்தாலும் கவனிக்காதது போல நடிப்பாள். கிட்டதட்ட அமிர்தம் பாட்டியின் குணத்தை குத்தகைக்கு எடுத்து வளர்ந்ததாக கருதினான்.
அதனாலோ என்னவோ மடி ஆச்சாரம் சுத்தப்பத்தம் என்று காருண்யா பேசினாலே எரிச்சலாவான்.
காருண்யாவை சந்தித்த பொழுது அவள் இவ்வாறு விலகி செல்ல, தன் சிநேகிதி இவளில்லை. இவளுக்கு அவள் இனம், பிரிவு, இதை தாண்டி மனிதரிடம் மனிதநேயத்துடன் பழகுவதில்லை என்ற கசப்பால் மனதால் விலகினான். ஆனாலும் அவன் இயற்கை குணத்தால் அவனது சிநேகிதியை தேடினான்.
இதில் ஹரனின் புகைப்படத்தை எல்லாம் தன்னிடம் தான் முதலில் காட்டவும், தன் பழைய சிநேகிதியை உணர்ந்து ஆத்மார்த்தமாக பழக, விதி சிநேகிதர்கள் எல்லாம் வேண்டாம் என்று கணவன் மனைவியாக மாற்றி அமைத்துவிட்டது.
தன்னால் தான் இந்த நிலை என்ற எண்ணத்தில் தான் தந்தை சிவராமன் கூற மணக்க ஒப்புக் கொண்டான்.
தான் யாரையும் காதலிக்கவில்லை என்றதால் திருமணம் இவளுடன் என்ற ரீதியில், மனதால் அத்திருமணத்தை ஏற்க துவங்கினான்.
நாளடைவில் வீட்டில் அழகான பெண், மனைவியென்ற உரிமையோடு வலம் வர, அவனது பார்வை மாற்றம் பெற்றது. ஷாலினியை வேற்றுகிரக வாசியை போல பார்ப்பதை தவிர்த்து ராகவி இந்து, சரோஜா அக்கா, அன்னப்பூரணி மேஸ் நடத்தும் மேடம், ரோஸ்லின் ஜவஹர் என்று கனிவாய் பழக, இவனும் கனிந்தான். ஷாலினி விஷயத்தில் தான் ஆம்பளை புத்தி, வழியறேள், குழையறேள், ஏன் அவா லஞ்ச் கொண்டுவருவா’ அவான்னா இறங்கி போவேள்’ என்ற வார்த்தைகள் இதுவரை கேட்டிராது தன் ஒழுக்கத்தை எடைப்போட்டதால் துடித்தான்.
அத்தனை சுலபமில்லை, பெற்றவர் இருந்தும் தனியாக வேறொரு ஊரில் தங்கி கல்லூரியில், வேலை என்று தனித்து இருந்து தனிமனித ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பது.
ஏதாவது ஒரு தவறான பழக்கம் ஆட்கொள்ளாத இளைஞனே இல்லை. அப்படியிருக்க, தந்தை சிறுவயதில் புகைப்படித்து கேன்சரால் பாதிப்படைந்த ஆட்களை நேரில் கண்டவன், எவ்வித கெட்ட பழக்கத்திலும் தலையை விடவில்லை. காதலிப்பதில் கூட ஆர்வமின்றி திரிந்தவனை ஒழுக்கம் கெட்டவனாக பேசியது மட்டுமே ராவணனை பெரிதாக உறுத்தியது. அதோடு அதை சொல்லும் போது காருண்யாவின் முகபாவனை இரண்டுமே பாதித்தது
காதல், புரிதல், நேசம் எதுவுமின்றி உடலால் இணைந்தது தவறென்று வருத்தத்தில் இருக்க, உனக்கா நான் என் ஐயங்கார் பாட்டி சொல்லி தந்த ஆச்சாரம் மடிசுத்தம் எல்லாத்தையும் மீறி, மீன் வாங்க சென்றேன் என்று சொல்லாமல் அவள் காதலை காட்டிவிட்டாள் காருண்யா. கூடவே தவறுக்காக மன்னிப்பும் வேண்டி நிற்கின்றாள்.
நீ என்ன செய்ய போகின்றாய். பதிலுக்கு காதலை தரப்போகின்றாயா? இல்லை மீண்டும் அவளுக்கு காயத்தை தரப்போகின்றாயா? என்றதும், ‘பிடிச்சதை செய்-மகிழ்வித்து மகிழ் காயப்படுத்தாதே’ என்ற வரிகள் நினைவில் கலந்தது.
‘பிடிச்சதை செய்துட்டு சந்தோஷமா இருந்தேன். இப்ப என் சந்தோஷம் எங்க போச்சு.” என்று அறைப்பக்கம் கவனம் செல்ல காருண்யா அங்கே படுத்திருப்பதை கண்டான். அவன் சந்தோஷம் அவளின்றி வேறில்லை என்று ஆழமாய் புரிந்தது. அவனுக்குள் புன்னகை விரிந்தது.
அதே நேரம் காருண்யா போன் அடித்தது. ராவணனின் எண்ணவோட்டத்தை கலைத்து திரும்பி பார்த்தவன் எடுக்கலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நிகழ்த்தினான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
கனிவான வாசக பெருமக்களுக்கு…(பொதுவாகவே ஒரு போஸ்ட் எதற்கும் போட்டு வைப்பது சிறந்தது)
என் எழுத்தில் கூட சில கொள்கையை கடைப்பிடிப்பவள் நான். அப்படியிருக்க என் தளத்தில் வரும் விளம்பரங்கள் கூட ரம்மி போன்ற சூதாட்டமோ, செக்ஸியான விளம்பரங்களோ கூடாதென்று பார்த்து பார்த்து விளம்பரத்தில் கூட பிளாக் செய்து பதிவிடுவேன். சில தளத்தில் ரம்மி எல்லாம் கூட அலோவ் பண்ணுவாங்க. அப்படியிருக்க விளம்பரம் சாதாரணமாக இருந்தால் போதுமென்று வைப்பவள். அப்படியிருக்க உங்கள் தகவல்களை நான் தேர்ட் பார்ட்டிக்கு வழங்குவதாக டேக் பண்ணியிருக்கிங்க. மேபி பொத்தம் பொதுவாக நீங்க வாசிக்கும் சைட்டின் அட்மினை டேக் பண்ணிருக்கலாம். என் தரப்பில் என் பதில். உங்க ஜிமெயில் ஐடி தவிர எனக்கே உங்க நம்பர் தெரியாதுங்க. அப்படியிருக்க தூக்கி கொடுக்கறது எல்லாம் எதுவும் இல்லை. நீங்க ஏதாவது அப்ளிக்கேஷன் வேற ஆப்ல கூட ஸ்டோரோஜ் ஆகியிருக்கும். தளத்தில் கதை படிப்பதால் அதில் வரும் விளம்பரம் மூலமாக உங்களுக்கு கால் எல்லாம் வராது. உங்கள் search history + நீங்கள் போன் எண்ணை கொண்டு திறக்கப்படும் ஆப்பில் வேண்டுமாயின் இப்பிரச்சனை நிகழலாம். ஆது கூட இதனால் என்று கூறிட முடியாது. உங்களுக்கு ஏதேனும் வேறு காரணத்தால் அது போல நிகழ்ந்திருக்கலாம். தளத்தில் வரும் விளம்பரம் பொதுவானவை. அதை வைத்து புரளியை கிளப்பாதீர்கள்.
முகநூலில் டேக் பண்ணி கேட்டதால் அங்கே பதிவிடுவதை விட என் மொத்த வாசக பெருமக்களுக்கும் இதை அறிவிக்க நினைக்கின்றேன்.
Super sis nice epi 👍👌😍 raavanan evlo valiya anubavichirukan chinna vayasula adhan manasula appdiye eruku🤔🙄 parpom eniyavudhu adhu kaadhal ah maarudha nu💗❤️🥰
Nice epi waiting for nxt 😍
ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 33)
அப்பாடா…! இப்பத்தான் இவனுக்கு இதுகாதல்ன்னு புரியுது. அப்போ அவளுக்கு எப்ப புரியும்..? ஒருவேளை, புரிஞ்சிடுச்சோ. அப்ப இனிமே அவன் நான்வெஜ் சாப்பிட்டா.. முகத்தை சுழிக்க மாட்டா தானே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Justified
Interesting😍😍
Nice epi. yaru phn panura?
Really awesome narration sis. Ravana what will do now?
Kaaru love purinjukkittan entha Ravanan very nice ud samma entrastinka erukku super super super
Nice going
Nice
Appa etho oru alavuku ellam yosichi pathu avala konjam purinjikittan antha paati periyavanga mari illama antha kalathulaye irukanga apadi sila per la ivangalum onnu pola . Eppadiyo ella yosichi ithunlove thanu purinjithe , kaaru ku avan mela love vanthuchi athanala thana thirupi vanthu pesura iniku avanukaga enga poitu vanthu iruka sikrame rendu perum seranporanga
Athu oru just advertisement thana athanala namaku ena problem iruka pothu site la neenga solra mari 3rd range add ethum varalaye oru vela apadi varala vantha nanga papome nu sollama solrangalo sisy . Oru purali kelapa varuvanga avangaluku la ella time mum pathil koduthute iruka mudiyathu sisy . Just go ahead ur writing
Super super super super super super super super super super super super super