அத்தியாயம்-34
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
காருண்யா போனில் ‘சாரதா அக்கா’ என்ற பெயரிட்டு அழைப்பு வந்தது.
போனை எடுத்து வந்து காருண்யாவை பார்க்க, அவளோ “பாட்டியா?” என்றாள்.
”உங்க பாட்டியில்லை.. ‘சாரதா அக்கா’ காலிங்.” என்றான்.
“அப்பறமா பேசிக்கறேன்னு அவாளாண்ட சொல்லிடுங்கோ.” என்றாள்.
போனை துண்டிக்க போனவன் கை தவறி அழைப்பை ஏற்றான். “சாரி பட்டன் மாத்தி அட்டன் பண்ணிட்டேன்” என்றான் காருண்யாவிடம்.
காருண்யா சலிப்புடன் மாற, “ஓகே.. நான் பேசறேன். நீ ரெஸ்ட் எடு.” என்று அவளிடம் கூறிவிட்டு, “ஆஹ் அக்கா… காருண்யாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அப்பறமா கால் பண்ண சொன்னா. ஏதாவது சொல்லணும்னா சொல்லுங்க. மெஸேஜ் பாஸ் பண்ணிடறேன்” என்றான் எடுத்ததும். அவனுக்கு காருண்யா பற்றி நினைக்கும் தருணம் இந்த அழைப்பு இடையூறாக கருதினான்.
“உடம்பு சரியில்லையா? ஏன் தம்பி என்னாச்சு?” என்று சாரதா கேட்க கட்டைவிரலால் நெற்றியை கீறி, “ஜஸ்ட் கேரா வருதுன்னு படுத்திருக்கா அக்கா. வேறவொன்னுமில்லை.” என்றான்.
“அப்படியா… இந்த பக்கம் தான் வந்தேன். காருண்யா வீட்ல இருந்தா பார்க்கலாம்னு… வீட்ல தான் இருக்கிங்களா தம்பி” என்று சாரதா கேட்டதும், ராவணனுக்கு மறுக்கவா முடியும்.
“நீங்க வாங்க அக்கா. வீட்ல தான் இருக்கோம். அட்ரஸ் தெரியுமா?” என்று விசாரிக்க, “தெரியும் தம்பி” என்றார்.
சரியென்று கூறி போனை துண்டித்தப்பின், காருண்யாவை மெதுவாக ஏறிட்டான், தன்னிடம் பேசிவிட்டு கண்ணயர்ந்துவிட்டாள்.
காருண்யாவை தலைகோதி விட வேண்டுமென்று கைகள் பரபரத்தது. ஆனால் குளிக்காமல் கொள்ளாமல் பழைய டீஷர்ட்டுடன் அவளை நெருங்க மனமின்றி முதலில் குளிக்க ஓடினான்.
எப்படியும் சாரதா அக்கா வந்தால் சற்று பேசுவாள். அப்படியே அவரெதிரே பேசும் போது பழையபடி பேசிட வேண்டும். ‘தனக்காக எதுவும் மாமிசம் வாங்காதே. வீட்டுக்குள் மாமிசம் வேண்டாமென்று கூறிவிட்டு அவளை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று முடிவெடுத்தான்.
ஷவரில் குளிக்கும் போதே காருண்யாவோட சேர்ந்து குளிச்சி, சேட்டை பண்ணி ரொம்ப நாளாச்சு. “ஐ மிஸ் யூ காரு.” என்றான். “ம்ம்” என்ற முனங்கல் வெளியே கேட்க, வெட்கத்துடன் சிரித்தான். அவன் பேச அவளிடம் ஒரு பதிலும் வருகின்றது. அவளை அறியாமல்…
வெளியே வந்து தலையை உலர்த்தி, டீஷர்ட் ஷார்ட்ஸ் அணிந்து அவளை நெருங்கும் சமயம் காலிங்பெல் சத்தமிட்டது.
மெத்தையில் ராவணன் அமர்ந்தவன், அறைக்கதவை பார்த்து எழுந்து சென்றான்.
காருண்யாவுக்கு ராவணன் வந்து சென்றது போல இருக்க, கையை துழாவினாள்.
சாரதா அக்காவை வரவேற்று அமர கூறினான்.
“நல்லாயிருக்கிங்களா தம்பி. காருண்யாவுக்கு என்னாச்சு?” என்று வந்ததும் பழங்களை தந்துவிட்டு கேட்டார்.
“ஒன்னுமில்லை அக்கா.. ஜஸ்ட் கடைக்கு போனா அங்க மயங்கிட்டா. நீங்க உட்காருங்க. இப்ப வந்துடுவா.” என்றவன் எந்த கடையென்று விளக்கவில்லை “காரு.. காரு.. சாரதா அக்கா வந்திருக்காங்க.” என்று தீண்ட, அவன் கையை பிடித்து எழமுயன்றாள்.
அவனை அவள் தீண்டவும், பரிசம் தந்த இதத்தில், “உன்னை யாரு அங்கலாம் போக சொன்னது? நான் என்.வி எல்லாம் உன்னை சமைக்க சொன்னேனா. வீட்டுக்குள்ள என்.வி வேண்டாம்னு உன்னை தாலி கட்டினப்பவே முடிவெடுத்தேன்” என்றான்.
“இல்லை.. நீங்க ஏதும் சொல்லலை. ஆனாலும் நேக்கு ஒரு ஆசை. உங்களுக்கு பிடிச்சதை செய்யலாம்னு இருந்தேன். ஆனா நேக்கு அங்க ரத்தம், மீன்னு பார்க்கறச்ச குமட்டிடுச்சு, மயங்கிட்டேன்” என்றவள் “சாரதாக்கா எப்படியிருக்கிங்க” என்று வந்தவரை வரவேற்று கேட்டாள். ராவணன் சாரதா அக்கா இருப்பதால் பேசுகின்றானென நினைத்து கொண்டாள்.
“என்னடிம்மா துவண்டு போயிருக்க” என்று அவளை அருகே அமர்த்தி கேட்டார்.
“நான் போய் காபி போடறேன்” என்று ராவணன் அவ்விடமிருந்து நகர்ந்தான்.
“அய்யோ தம்பி காபி போடப்போறார். வேண்டாம்னு சொல்லும்மா” என்றார்.
“இருக்கட்டும் அக்கா. நீங்க நல்லாயிருக்கேளா? ராகவி இந்து எப்படியிருக்கா. அவாளை உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்?” என்று விசாரித்தாள்.
“நேற்று உன்னை பத்தி பேசினாங்க. என்னை நீ விசாரிச்சதாவும் சொன்னாங்க. அதான் இந்த பக்கம் வரவும் ஒரெட்டு உன்னை பார்த்துட்டு போக வந்தேன்.” என்றவர் அவளது முகத்தில் படர்ந்த முடியை ஒதுக்கி வைத்து, “ஏன் டல்லாயிருக்க” என்று கேட்டார்.
“வேலை டென்ஷனா இருக்கும் அக்கா. கொஞ்சம் தூக்கம் வேற நீங்க வரச்ச பார்த்தேளே படுத்துண்டு இருந்தேன்.” என்றாள். அதற்குள் ராவணன் ட்ரேவில் காபி போட்டு தந்தான்.
“தம்பிக்கு ஒரு வேலை வச்சிட்டேன்” என்று கூற “அதெல்லாம் ஒன்னுமில்லைக்கா” என்றவன் சோபாவில் அமர்ந்தான்.
சாரதா காபி பருகியபடி வீட்டை ஆராய்ந்தார். “வீடு நீட்டா இருக்குடா. நம்ம காவ்யா வீடு இப்படி நீட்டா இருக்காது. உங்களவா தான். வீடே அழுக்கும் தூசியுமா இருக்கும் நீ நல்லா வச்சியுருக்க..” என்றதும் காருண்யா மென்புன்னகை உதிர்த்தாள். சிலர் எல்லாம் ஐயங்கார் சுத்தப்பத்தமாக இருப்பதாக நினைப்பார்கள். அதிலும் சிலர் வீட்டில் தேவைக்கு அதிகமாக வாங்கி வீட்டில் குமித்து வைத்து குப்பையாக தான் காட்சிப்படுத்தியிருப்பார்கள். எந்த பிரிவானால் என்ன? எலி வலையானாலும் தனிவலையில் தன் வீட்டை பராமரிப்பது வீட்டை சுற்றி பாஸிடிவ் எண்ணத்தை விதைக்கும். அதே அழுக்கும் தூசியுமாக இருந்தால் எதிர்மறை கருத்தை விதைக்கும்.
ராவணன் போனை எடுத்தபடி, “நான் அம்மாவிடம் பேசிட்டு வர்றேன். நீங்க பேசுங்க” என்று நழுவினான். இருவருக்கும் தனிமை தந்து நழுவியவனை மெச்சுதலாக பார்த்தாலும், ‘வரவர எப்பவும் இப்படி தான் நழுவறார்’ என்ற எண்ணமும் வலித்தது.
தனக்குள் வலியை மறைத்தவளாக, சாரதாவிடம் ஹாஸ்டல் ஆட்களை பற்றி கேட்டாள்.
“எங்க… ஹாஸ்டலில் வேலையை விட்டு மூனு நாள் ஆகுது காருண்யா. உனக்கு தெரியும்ல என் வீட்டுக்காரர் குடிப்பார்னு. அதனால பணத்தை அன்னப்பூரணி அக்காவிடம் தான் தருவேன். இரண்டு வாரமா குடிச்சிட்டு ஹாஸ்டல்ல வந்து பணம் கேட்டு, அங்க தங்கிட்டு இருக்கறவங்களிடம் வம்பு பண்ணறார். அதுல ஒருத்தி அன்னப்பூரணிம்மாவிடம் கம்பிளைன் பண்ண, அவரை வரவிடாம செய்ய சொன்னாங்க. அந்தாளு நான் வேலை பார்க்கற இடத்துல வராம இருப்பானா. அதனால மேடம் தனியா கூப்பிட்டு, இங்க பொம்பள பிள்ளைங்க வந்து போற இடம், அவங்க கம்பிளைன் தந்தா ஆக்ஷன் எடுப்பது என் வேலை. தயவு செய்து வேற வேலை பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டாங்க. இப்ப வேலையில்லாம இருக்கேன்.” என்றார்.
“அச்சோ… ஏன் இப்படி பண்றார். அழாதிங்கோ. அக்கா வேற வேலை கிடைச்சிடும்” என்று கூறியவள், சாரதா கையிலிருந்த டம்ளரை வாங்கி கிச்சனில் வைக்க சென்றாள் அங்கே மூடிப்போட்டதை எடுத்து பார்க்க மீன் துண்டுகள் இருக்கவும், போன மயக்கத்திற்கு பதிலாக குமட்டல் வந்தது
“என்னாச்சும்மா” என்று சாரதா ஓடிவந்தார்.
“ஒன்னுமில்லைக்கா.. இது.. இது.. பார்த்தாளே வாந்தி வருது” என்று சுட்டி காட்டினாள்.
“அட தம்பிக்கு மீனா? யார் தம்பியே சமைக்குமா” என்று கேட்க, “இல்லைக்கா இதான் முதல் முறை” என்று எச்சிலை விழுங்கினாள். அவளால் விவரித்து தங்கள் பிரச்சனை கூறமுடியுமா?
“அக்கா… ஒரு ஆர்வகோளாறுல வாங்கிட்டேன். நேக்கு இதெல்லாம் சமைக்க தெரியாது. நீங்க தப்பா நினைக்கலைன்னா சமைச்சி தர்றேளா” என்று கண்ணில் நீர்த்தளும்ப கேட்டாள்.
“அட அக்கா இதை செய்யுங்கன்னா செய்யப்போறேன்” என்று “உப்பு புளி மிளகா கொடு.” என்றார்.
”அக்கா பிஷ் ப்ரியாணி செய்ய தெரியுமானோ?” என்று கேட்டாள்.
“அச்சோ அதெல்லாம் தெரியாதும்மா. குழம்பா வறுவலா செய்திடுவேன்” என்றார்.
ராவணனோ காருண்யா சமையல் பக்கம் போகவும் அவசரமாய் வந்து எட்டி பார்த்தவன், இவர்கள் பேச்சை கேட்டு, “அக்கா.. உங்களுக்கு எது ஈஸியோ அதை செய்யுங்க. அவளை வெளியே அனுப்பிட்டு செய்யுங்க” என்றான்.
காருண்யா கண்ணில் ஈரத்துடன் முறைக்கவும் “என்ன பார்க்கற வாமிட் தலைசுற்றல்னு நீ கஷ்டப்படக்கூடாதுன்னு சொன்னேன்.” என்று அறைக்குள் புகுந்தான்.
“என்னச்சும்மா.. கண்ணுல தண்ணி?. மீன் வைக்க சொல்லி சண்டையா?” என்று கேட்டார் சாரதா. உடனோ காருண்யா பதறி “அச்சோ அப்படியெல்லாம் இல்லைக்கா.” என்றவள் ரூமை பார்த்து அவன் சென்றதை அறிந்து, “கொஞ்சம் பிரச்சனைக்கா… நான் தான் தப்பா வார்த்தை இழுத்தேன்.
சரி ஆம்படையானுக்கு பிடிச்சதை செய்வோம்னு காலையில் மீன் மார்க்கெட் போனேன். அங்க மீன் வெட்டறதையும் இடத்தையும் பார்த்து, குமட்டிக்கிட்டு தலைசுத்தி மயங்கிட்டேன். இங்க வந்து படுத்துட்டேன். நீங்க வந்தேள் இப்ப பரவாயில்லை.” என்று பூசி மொழுகி கூறினாள்.
“அதானா… நீ உட்காரும்மா மீன் குழம்பு வச்சிட்டு கூப்பிடறேன்.” என்றார்.
“உப்பு புளி மிளகா நான் தானே எடுத்து தரணும். பரவாயில்லை.. நீங்க செய்யுங்கோ கூடயிருக்கேன். கழுதைக்கு வாக்கப்பட்டா உதைக்கறதை வாங்கிக்கணும்னு சொல்வா.” என்று உதாரணம் கூறியவள் சாரதா கூறியபடி சின்ன வெங்காயத்தை உறித்தாள்.
“எந்த பாத்திரத்தில குழம்பு வைப்ப?” என்று கேட்டு நின்ற சாரதாவிடம் ‘இது வத்தகுழம்பு வைக்கிறது இது பருப்பு குழப்பு வைக்கிற பாத்திரம், அச்சோ.. அசைவத்தை எதுல செய்யறது? பெருமாளாண்ட இப்படியெல்லாம் வேண்டுவேனு கனவுலயும் நினைக்கலை.” என்று கதறாத குறையாக புலம்ப, ராவணன் அறைக்குள் இருந்து கேட்டவனாக, அவனாக வந்து “அக்கா அம்மா வந்தா இதுல தான் செய்வாங்க” என்று அகன்ற பாத்திரத்தை தந்துவிட்டு சென்றான்.
காருண்யாவோ அந்த பாத்திரத்தில் தான் போன முறை பாதுஷாவுக்கு மாவு பிசைந்தாள். அதை எண்ணி மனதில் நொந்தவளாக, நின்றாள்.
பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, சின்னவெங்காயத்தை பொன்நிறமாக வதக்கி, மிக்ஸியில் காஞ்சமிளகாய் ஏழு, சீரகம், மிளகு, பெருஞ்சீரகம், புளி எல்லாம் போட்டு பேஸ்ட் போல விழுதாக அரைத்து எடுத்து, சின்ன வெங்காயம் வதங்கியதும் அதில் போட்டு, வதக்கி பச்சை வாசம் போனதும் மஞ்சள் தூள் உப்பு போட்டு தண்ணீர் தேவையான அளவு ஊற்றினார்.
கொதிக்கும் போதா மீனை போட்டார் இந்த மீன் அப்படியே வச்சிட்டேளே?” என்று சுட்டிக்காட்ட, “இவ்வளத்தையும் எப்படிம்மா சாப்பிடும். இதை வறுத்திடலாம்.” என்று உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கூடுதலாக இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை என்று வறுக்க தயார் செய்தார்.
காருண்யா மடமடவென செய்ததை கவனித்தாள். துப்பட்டாவை வைத்து மூடியிருக்க, “நாத்தம் வரலை” என்று கேட்டாள்.
“வறுக்கும் போதா வரும் பாரு” என்று சாரதா கூறினார்.
காருண்யா வேடிக்கை பார்க்க, “காருண்யா… உனக்கு தெரிந்த இடத்துல வேலை ஏதாவது இருந்தா சொல்லறியா. அவசரமா வேலைக்கு சேர்ந்தா தான் அடுத்த மாசம் செலவுக்கு வசதி. இல்லைன்னா கஷ்டம்” என்றதும், “தெரிந்தவங்களிடம் சொல்லறேன் அக்கா.” என்றாள்.
அடுத்து வறுக்க ஆரம்பிக்கும் போது வீடே மீன் வாடை வீச, மீண்டும் குமட்டல், வாஷ்பேஷனில் வாந்தியை எடுத்திருந்தாள். காலையிலிருந்து எட்டியெட்டி பார்த்த வாந்தி எடுத்ததும் சோர்ந்தாள்
ராவணனோ ஓடிவந்து பார்த்து அவளை தாங்கிட, “தயவு செய்து மீன் கறினு இனி எதுவும் வாங்காத. இந்த ஒரு விஷயத்தால் சண்டை நமக்குள்ள வரவேண்டாம்.” என்று அதட்டினான்.
காருண்யா தலையை தலையை ஆட்டினாள். மிகவும் சோர்ந்து போனவளை சோபாவில் சாய்ந்து படுக்க வைத்தான்.
காருண்யாவின் தோற்றம் ஏதோ உறுத்த, “ஏம்மா காருண்யா… கேட்கறேன்னு தப்பா நினைக்காத, கன்சீவா இருக்கியா?” என்று சாரதா கேட்க, ராவணன் காருண்யா இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Athuva eruntha evanga prachanaiku oru end automatic ah varum
Interesting😍😍 🥰
ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 34)
இது எதுக்கு முழிக்கிறது ? கல்யாணம்ன்னா, அடுத்து வளைகாப்பு தானே..?
ஆக மொத்தம், இந்த குமட்டல் மீன் வாசனையால வரை
அப்படித்தானே…?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Wow super. Kaaru is it true? Intresting sis.
Innum love eh varalainu solran… Athukulla kulanthai vanthidicha🤣🤣🤣👌👌👌👌💕 waiting for nxt epi 😍
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 meen smell ku eppdi ayitiye ennum ennalam panna poriyo🙄 oru vela consive ah dhan erupalo🤔 parpom 🧐
Irukalam irukalam ❤️
Saratha akka ku ipovathu keka thonuche athe doubt tha iruku enakum kumatal varum than aana intha alavuku yen tired aganum apo ava itha note Panama irunthu iruka pinna avlo santhosama irunthangale adutha promotion Venum la
Super super super super super super super super super super super super super super super super super super super
Nice going…