ஒரு பக்க கதை – உறவாக வந்தவள் நீ
இதுவரை யாரும் வரவில்லை, அவளது புகைப்படம் கூட ஒரு வாரமாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பி ஓய்ந்து விட்டனர். சரி இனி யாரும் வர மாட்டார்கள் என்ற நிலையில் அவளை மருத்துவமனை அனுப்ப முடிவு செய்தது. அவளுக்கென யாரும் வரவில்லை என்றதும் கவலையிருக்க தான் செய்தன. இருந்தாலும் இந்த இரு பெரிய பேருந்துகள் மோதி நிறைய பேர் இறந்து இருக்க, அவள் உயிரோடு இருப்பதே அதிசயம் தான். என்ன நினைவு ஆற்றல் தான் சுத்தமாக இல்லை.
சரி போனால் போகட்டும் என்று தான் அவளும் கிளம்பினாள். மனதில் சிறு பாரத்துடன். அப்பொழுது தான் ஒரு பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து தாய் இறந்து விட, அக்குழந்தைக்கு யாரும் இல்லை என்ற நிலையில் ஆசிரமம் அனுப்ப எண்ணினர் அமருத்துவ நிர்வாகம்.
உடனே நினைவு இழந்த அவள் எனக்கு இந்த குழந்தை தாருங்கள் நல்ல முறையில் வளர்க்கிறேன். இங்கேயே ஒரு சின்ன வேலை கொடுத்தால் கூட போதும் என்றாள்.
மருத்துவ பெண் என்ன நினைத்தாளோ சரி என இசைத்திட, நினைவு இழந்த அவள் அக்குழந்தையின் தளிர் கரத்தில் முத்தமிட்டு எனக்கு ‘உறவாக வந்தவள் நீ’ என்று கொஞ்சினாள். அது அவளை பார்த்து அழகா சிரித்தது.
– பிரவீணா தங்கராஜ்
Magical moment 🥹காரண காரியம் இன்றி எதுவும் நடக்காது