Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-14

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-14

அத்தியாயம்-14

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   துகிரா இமை திறந்ததும் சென்னை செல்வதாக படபடப்பாகவும், சார்லஸோ “நான் கூட வர்றேன்” என்றான்.‌

“பரவாயில்லை… நான் பார்த்துப்பேன்” என்று தவிர்க்க நினைக்க, மெர்ஸியுமே, “அண்ணா தான் வர்றேன்னு சொல்லறானே. நீயே நடுங்கிட்டு மயங்கிட்டு இருக்க.” என்று சுட்டிக்காட்ட, இதோ ஏசி பஸ்ஸில் துகிரா ஏறிவிட்டாள்.
  சார்லஸோ அருகே அமர்ந்து, துகிராவின் செயல்களை தான் வேடிக்கை பார்த்தான்.

  போனில் அமுல்யாவும் துகிராவும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இமைக்கொட்டாமல் பார்த்து வந்தாள். நேற்றும் இதே போல பேருந்தில் அழுதவண்ணம் வந்தாள்.

  பன்னிரெண்டு மணி நேர பயணம், மௌனம் மட்டுமே ஆக்கிரமிக்க, நேராக மருத்துவமனைக்கு வந்தாள். சார்லஸ் கூடவே வரவும் இஷானுக்கு  லேசான எரிச்சல்.
  ‘இவ தனியா வர எண்ணவாம். இதுக்கு முன்ன வந்திருக்காளே’ என்று கோபம் இருந்தாலும் அவளை இங்கிருந்து போக சொன்னது இஷான் என்பதால் அவளை கண்டு கொதிகலனாகவில்லை. இல்லையென்றால் மகள் உடலில் ஊசி மருந்து என்று தனியறையில் சேர்த்திருக்க, ருத்ரதாண்டவம் ஆடியிருப்பான்.‌

  ஆனால் இவனுக்கு பதிலாக துகிரா கண்ணாடி முகப்பு வழியாக அமுல்யாவை பார்த்து, துடித்தவள், இஷானின் சட்டையை பிடித்து, “என் கூட இருந்தவரை, என் குழந்தைக்கு தடுப்பு ஊசி தவிர எதுவும் போட்டதில்லை. உன்னால பாரு.. என் பொண்ணு ட்ரிப்ஸ் ஏத்தி படுத்த படுக்கையா இருக்கா.
  சின்ன வீட்ல தாய் பறவை குட்டி பறவையா நாங்க பாட்டுக்கு இருந்தோமே. ஏன் எங்களை பிரிச்ச? உனக்கு இப்ப திருப்தியா?” என்று உலுக்கியதில் அத்தளத்தில் அங்கிருந்தவர்கள் அனைவரும் பார்வையிட, இஷானோ, “பைத்தியமாடி நீ.‌.. இத்தனை வருஷம் உன்னோட வளர்ந்த குழந்தை. நீ இல்லைன்னா ஏதாவது ரியாக்ட் பண்ணுவானு தெரியும். அழுது ஆர்ப்பாட்டம் செய்தா பேசி புரிய வச்சியிருப்பேன். இப்படி சமத்தா இருந்துட்டு உங்கக்கா மாதிரி மனசுக்குள்ள அழுதுயிருக்கா. நான் என்ன செய்ய?” என்று அவளது கையை தள்ளிவிட்டு உடையை சரிப்படுத்திக் கொண்டான்.

  டாக்டர் வரவும், “வாட் இஸ் திஸ்? உங்க புருஷன் பொண்டாட்டி சண்டையை வீட்ல வச்சிக்கோங்க. இது ஹாஸ்பிடல். இங்க பலவிதமான நோயாளிகள் இருக்காங்க. ரெஸ்பான்சிபிளிட்டி எங்களுக்கு இருக்கு” என்று கத்திவிட்டு சென்றார். நர்ஸிடம், “குழந்தையோட பேரண்ட்ஸை ரூமுக்கு வரச்சொல்லுங்க” என்று கூறிவிட, நர்ஸும் அழைத்தார்.

“சார் பாப்பாவோட அப்பா அம்மா வாங்க” என்றதும், இஷான் செல்வதற்கு முன் துகிரா வேகமெடுக்க, இஷானோ பின் தொடர்ந்தாலும், சார்லஸை தான் கேள்வியாய் நோக்கினான்.‌

  “நீங்க தான் பேரண்ட்ஸா? சண்டைன்னா குழந்தையை விட்டுட்டு அம்மா வீட்டுக்கு போவியாம்மா. குழந்தை அம்மா அம்மானு உன் பெயரையே அணத்துறா” என்று கடிய,

  சார்லஸோ கூடவே வந்தவன், “ஹலோ மேம், நான் சார்லஸ் மனோதத்துவ டாக்டர்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

   இஷான் இவன் வேற எதுக்கு வர்றான். என்று பார்வையிட்டு இருக்க, மனோதத்துவ மருத்துவன் என்று கூறி அறிமுகமாகவும் அமைதியானான். சார்லஸின் பணிக்கான மரியாதையாக அந்நேரம் எடுத்துக்கொண்டான்.‌

  “மேம்… இந்த கேஸ் டீட்டெயில் சொல்லிடறேன். குழந்தை அமுல்யா இஷானோட பொண்ணு. அமுல்யா பிறந்தப்பவே அவ அம்மா இறந்துட்டாங்க. துகிரா.. இவங்க தான் குழந்தை பிறந்ததிலருந்து வளர்த்து ஆளாக்கியது. முக்கியமா சித்தி என்ற ஸ்தானத்தில் வளர்க்கலை. அம்மா என்று ஊர் உலகத்துக்கு தெரிய வளர்த்திருக்காங்க. பட்… குழந்தைக்கு இப்ப துகிரா அம்மா இல்லைனு தெரிய வந்திருக்கு. அதோட அப்பாவிடம் குழந்தை வளரட்டும்னு இப்ப சொந்த அப்பாவிடம் விட்டுட்டு செல்லவும் இப்படியாகியிருக்கு.” என்று கூறவும், துகிரா உதடு நடுங்க, டாக்டரை பார்த்தாள். இஷானும் கையறு நிலையில் நின்றான்.

டாக்டரோ “சந்தோஷமாயிருக்கும்மா குழந்தை உன்னை அம்மாவா நினைச்சி வாழ்ந்திருக்கா. ஆனா இப்ப அதுவே அவளோட இந்த நிலைமைக்கு காரணம். நீங்க கூடயிருந்த நாட்களில் குழந்தையை விட்டு போவதை பேசியிருக்கிங்களா?” என்று கேட்க, இம்முறையும், சார்லஸ் முன் வந்து, “மேம்.. துகிராவை நான் மேரேஜ் பண்ணறதால் அமுல்யாவோடு நிரந்தரமா இருக்க போவது சாத்தியமில்லைன்னு ஏற்கனவே சொல்லியிருந்தா. அப்ப கூட குழந்தை மனதளவில் இன்னமும் தயாராகலை. சொல்லப்போனா…. துகிராவுமே குழந்தையை விட்டு தனியா வர மனதை தயார்படுத்திக்கலை.” என்றவன் பார்வை இஷானிடம் நிலைத்தது. ‘இது தெரியாமல் இவளையும் நீ அனுப்பிவிட்டாய்’ என்ற குற்றசாட்டு அதிலிருந்தது.

   குழந்தை அனுமதித்த மருத்துவமனையில் உள்ள டாக்டரோ “ம்ம்ம்.. கேஸ் டீட்டெயில் புருஷன் பொண்டாட்டி சண்டையில் குழந்தையை பார்த்துக்காம விட்டதா நினைச்சேன். இப்படியொரு சிட்சுவேஷன் எதிர்பார்க்கலை. துகிரா… குழந்தை நிலைமை பார்த்திங்கள்ல… நீங்க இருந்தா அவ பூரணமா குணமாவா. பட் எத்தனை நாளைக்கு அவ கூட நீங்க இருக்க முடியும்? குழந்தை கண் விழித்ததும் நான் ஒரு கவுன்சீலிங் தர்றேன். நீங்களும் கொஞ்ச நாள் கூடயிருந்து பிரிவை இன்னமும் க்ளியரா சொல்லுங்க. அதர்வைஸ் இதுக்கான முடிவு” என்று தோளைக்குலுக்க, அமுல்யா அழுதபடி ஓடிவந்து, ”அம்மா… அம்மா.. வந்துட்டிங்களா..? அம்மா.. நீ என்னை விட்டு போகாத.” என்று கட்டிபிடித்திட, ” அம்மு… அம்மு‌‌.. உன்னை விட்டு போகமாட்டேன்.” என்று முத்தமழை பொழிந்தாள்

இரண்டு நர்ஸ், பிரதன்யா, ரிஷி, பைரவி என்று ஓடிவந்தவர்கள், “டாக்டர் இப்ப தான் குழந்தை கண்விழிச்சா, உங்க அம்மா வந்துட்டாங்கன்னு இவங்க பேசியதும், குழந்தை நைஸா இங்க வந்துட்டா.” என்று கையை பிசைந்தார்.
 
  “குழந்தை இங்க வாடா?” என்று மருத்துவ பெண்மணி அழைக்க, முடியாதென்று மறுத்திட, “உங்கம்மா இவங்க இல்லையே. அவங்க வேற கல்யாணம் செய்து வாழ வேண்டாமா? உனக்கு தான் அப்பா இருக்காரே?” என்று கேட்டதும், அமுல்யாவோ டாக்டரை பார்த்து, ”எனக்கு அம்மாவும் வேண்டும் அப்பாவும் வேண்டும். அம்மாவுக்கு கல்யாணம் செய்ய வேண்டுமின்னா, எங்கப்பாவையே கல்யாணம் செய்துக்கிட்டோம். எங்க அம்மா என்னோட தான் இருக்கணும்” என்று துகிரா வயிற்றில் முகம் புதைத்து கொண்டாள்.

  அமுல்யா கண்ணீர் துகிரா வயிற்றில் விழுந்தது. இந்த இடத்தில் உதித்தால் மட்டும் தான் நான் உன் பிள்ளையில்லை என்று வளர்த்தாயே. இப்பொழுது ஏன் என்னை விட்டு பிரிந்தாய் என்று அக்கண்ணீர் இவளை சுட்டது.

அதை விட, ‘எங்கப்பாவையே கல்யாணம் செய்துக்கொள்ளட்டும்’ என்ற வார்த்தை அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

  துகிரா உறைந்தவளாக நிற்க, இஷானோ “அமுலு” என்று கர்ஜித்தான்.

  “சார்… தப்பு சார்.. குழந்தையை அதட்டாதிங்க. அவளுக்கு என்ன தெரியும்? யாரும் சொல்லிக் கொடுத்து பேசறதில்லையே. மனசுல அம்மாவா இவங்களை உருவகப்படுத்தி வச்சியிருக்கும் போது, அப்பாவையே கல்யாணம் பண்ணிக்கட்டும்னு கேட்கறா. சரி தவறு என்றதை சுட்டிக்காட்டி, குழந்தையிடம் பேசி புரியவையுங்க. கண்விழிச்சதால், கொஞ்ச நேரம் இருந்துட்டு ட்ரிப்ஸ் போட்டது வரை முடிச்சி கூட்டிட்டு போங்க. வீட்டுக்கு போய் அடிக்கவோ திட்டவோ இல்லாம காம்பர்மைன்ஸ் பண்ணுங்க” என்று நர்ஸிடம் அழைத்து செல்ல கூறினார்.
 
   அவருக்கு அடுத்த பேஷண்ட் பார்க்க வேண்டுமல்லவா?!

  துகிரா தளர்ந்த நடையுடன் வர, சார்லஸோ துகிராவின் மனநிலை புரிந்ததால் பேசவில்லை.
     
   “சாரி” என்றவன், அமுல்யாவை பின் தொடர்ந்தான்.

  பிரதன்யா பைரவி துகிராவை பார்வையிட்டு கடந்து சென்றார்கள்.

”அம்மா.. அமுல்யா சரியான நேரத்துல துகிரா அண்ணி அண்ணா இவங்க மேரேஜ் பண்ணிட்டா என்னனு அவளா பேசிட்டா.” என்று மகிழ, “நிறுத்துடி. உங்கண்ணா முகத்தை கவனிச்சியா? எள்ளும் கொள்ளும் வெடிக்குற மாதிரி முகத்தை வச்சிட்டு போயிட்டான். வீட்டுக்கு போய் என்னென்ன ஆட்டம் ஆடுவானோ” என்று கூற, பின்னால் வந்த சார்லஸோ யோசித்தபடி இவர்களோடு சேர்ந்து வந்தான்.‌
 
   காரில் தியான மண்டபம் போல அமைதியின் உருவமாக அவரவர் வர,  அமுல்யாவும் துகிராவின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு வந்தாள்.

  வீட்டுக்குள் வந்து இறங்கியதும், துகிரா குழந்தையை தூக்கி கொள்ள, “சார்லஸ் லக்கேஜ் ரூம்ல கொண்டு வைக்க முடியுமா?” என்று கோரிக்கை வைத்திட, சார்லஸ் கூடவே வந்தான்.
அவளுக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு செல்ல போனவளை, “என் ரூம்ல அமுலுவை தூங்க வை” என்று கட்டளையிட்டான் இஷான்.‌

  துகிராவுக்கு தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் கால்கள் சென்றது, இஷான் கூறவும், அவனது அறைக்கு நடந்து சென்றாள்.
 
  துகிராவின் உடைமையை சார்லஸ் எடுத்து பின் தொடர்ந்தான். முதல் முறை வந்தப்பொழுது சோபாவில் அமர்ந்து அப்படியே தோட்டத்தில் அமர்ந்து பேசி சென்றுவிட்டான்.
  தற்போது துகிரா அறைக்கு செல்ல, துகிரா இஷான் அறைக்கு செல்லவும், அவனும் அந்த அறையில் நுழைந்தான். அறையை சுற்றி பார்க்க, கலை நயத்தோடு இருக்க, இஷான் ரசனையை வியந்தான் சார்லஸ்.

சார்லஸ் பார்வை ஒரிடத்தில் அப்படியே ஸ்தம்பித்தது. இஷான் துகிரா சேர்ந்து எடுத்த புகைப்படத்தை கண்டான். கண்கள் சுருங்க, அந்த புகைப்படத்தையே காண, குழந்தையை மெத்தையில் போட்டுவிட்டு, “அது துர்கா அக்கா. அமுல்யா பிறக்கறதுக்கு முன்ன எடுத்த போட்டோ. நீங்க ஏற்கனவே அக்கா போட்டோவை பார்த்திருக்கிங்களே” என்றதும் பார்வையை சாதாரணமாக்கினான் சார்லஸ்.

   “போட்டோ எல்லாம் நீ காமிச்சதை பார்த்திருக்கேன். பட்… இந்த பிக்.. டோட்டலி.. நீயும் இஷானும் சேர்ந்து நிற்பது போல இருக்கு.” என்று வார்த்தையை விட, இஷான் அதே நேரம் உள்ளே நுழைந்தான்.

“சாரி நான் கீழே வெயிட் பண்ணறேன் துகிரா.” என்று கூறி விடைப்பெற்றிட, துகிராவை பிடித்த கையை விடாமல் அமுல்யா இருந்தாள்.

இஷானோ, இத்தனை நாள் இருந்த தனிமையில், இயல்பாக சட்டையை கழட்டி லாண்டரி பேகில் போட்டுவிட்டு இடுப்பில் பேண்ட் பெல்டில் கைவைத்தவன், “அம்மு.. நான் இங்கயே தான் இருக்கேன். ப்ளிஸ் கையை விடு” என்று துகிரா தன்னிருப்பை கூற, வாட்-ட்ராப்பிலிருந்து தனது உடையை எடுத்து குளியலறைக்கு சென்றான் இஷான்.

  ‘அவ முன்ன என்ன காரியம் செய்ய பார்த்த இஷான். அவ துர்கா இல்லை. துகிரா.’ என்று மனசாட்சி கூற, பல்லை கடித்து குளித்து உடைமாற்றி தலை துவட்டியபடி வந்தான்.‌

அமுல்யா லேசாக கண் உறங்கும் நேரம், துகிரா நெஞ்சில் தட்டி கொடுக்க, இமை மூடியிருந்தாள் குட்டிமகள்.

    இஷான் அறையிலிருந்து வெளியேற, மாடிபடியில் நடந்து வந்தான்.
 
  சார்லஸோ இஷானை கண்டு எழ தயாராக, “உட்காருங்க” என்று முதல்முறை பேசினான்.‌

   சார்லஸ் அமர்ந்ததும், இஷானே பேசினான்.
  “சோ… மனோதத்துவ டாக்டர் ரைட்?” என்றதும் சார்லஸ் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.

  “நான் டாக்டர் இல்லை… அடுத்தவங்க மனநிலை எப்படியிருக்கும்னு புத்தகத்தில் படிச்சவன் கிடையாது. ஆனா, என் வாழ்க்கையில கிடைச்ச அனுபவத்தை வைத்து சொல்லறேன்.
   என் பொண்ணு அமுல்யாவுக்கு இப்ப மனதளவில் துகிரா தேவைப்படலாம். ஆனா அவளுக்கு துகிரா நிரந்தரமா இங்கயிருக்க முடியாதென்ற நிதர்சனத்தை ஏற்க வைக்கணும்.
  அதோட அந்த பொண்ணும் என்‌ மகளை விட்டு தூரமா இருந்தா மச் பெட்டர்.
      சோ… துகிராவை மேரேஜ் பண்ணி குயிக்கா கூட்டிட்டு போங்க. இப்ப தற்சமயம், அந்த பொண்ணு கொஞ்ச நாள் இருந்தா நல்லாயிருக்கும்” என்றான் இஷான்.

  சார்லஸோ உதட்டை வளைத்து ஒரு நக்கலான புன்னகையை உதிர்க்க, “நான் ஏன் அம்முவை விட்டு தூர போகணும். நீங்க போங்க. நீங்க வராம இருந்திருந்தா, நான் அம்மு நிம்மதியா இருந்திருப்போம்.” என்று வந்து சேர்ந்தாள் துகிரா.

“லூசு மாதிரி முடிந்ததை பேசாத” என்று பல்லிடுக்கில் இஷான் பேச, பைரவியோ, “நீயும் அப்ப முடிந்ததை பேசாத இஷான். குழந்தை பேசியதை யோசித்து சொல்லு. நானும் நாகரிகம் கருதி உன்னிடம் பேச வேண்டாம்னு தயங்கினேன்.
  ஆனா இன்னிக்கு குழந்தை அவளுக்கு தேவையானதை அழகா வாய் விட்டு கேட்டுட்டா. அவளுக்கு துகிரா மட்டும் தேவைன்னா அவ கேரளா போவாடா. அப்பா மட்டும் வேண்டுமின்னா இங்க இருப்பா. ஆனா குழந்தைக்கு நீங்க இரண்டு பேரும் வேண்டும். உன்னால இன்னொருத்தியை கல்யாணம் செய்ய முடியாது.
    குழந்தையால அம்மா ஸ்தானத்தை வேறொருத்திக்கு கொடுக்க முடியாது.
இதோ இங்க நிற்கற உன் பொண்டாட்டி துர்காவோட தங்கைக்கு அமுல்யா தான் முதல் குழந்தை. அவளை விட்டு போக மனமில்லை. இதுக்கெல்லாம் ஒரே தீர்வு, நீங்க இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்கறது தான்.” என்று கூறினார்.

“அம்மா என்ன பேசறிங்க? பிரதன்யா அம்மாவை கூட்டிட்டு போ” என்று அடக்க பார்த்தான்.‌

  “இல்லைன்னா… அம்மா சொல்லறதுல என்ன தப்பு?” என்று திருட்டு முழியோடு பிரதன்யாவும் பேச, “ரிஷி அம்மாவுக்கும் பிரதன்யாவும் எங்க எது பேசணும்னு தெரியலை. உன் ரூமுக்கு அழைச்சிட்டு போ.” என்று ஆணையிட ரிஷியும் அண்ணனை கண்டு பயந்தபடி, “அண்ணா… எனக்கும் அம்மா சொல்லறது சரியா தான் இருக்கு.” என்று கூற இஷான் இருந்த கோபத்தில் ரிஷியை அடிக்க கை ஓங்கினான்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.






10 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-14”

    1. M. Sarathi Rio

      கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
      எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
      (அத்தியாயம் – 14)

      அட.. பேச்சு பேச்சா இருக்கிறச்சவே எதுக்கு கையை நீட்டணும்..?
      பிசினஸ், வீடுன்னு எல்லாத்தையும் பார்த்துக்கிற திமிரோ..?
      அதான் வீட்டையும் நாமளே சமாளிச்சிடலாம்ன்னு சிம்பிளா நினைச்சிட்டானோ..?
      ம்ஹூம்… அதான் மிகப் பெரிய குஷ்டமே.
      அப்புறம் தெனாலிராமன் கதை மாதிரியாகிடும். அதான்ங்க பானைக்குள்ள யானையை கொண்டு வர கதை மாதிரி. புத்திசாலிங்களால மட்டும் தான் குழந்தையை சமாளிக்க முடியும்.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

  1. Kalidevi

    PAPA crt time la sollita ava ninaikuratha atha vachi ellarum pes try panringa ishan pathi therinjum avan ena pana poran therila ithula kudave charles vanthu irukan vera doctor so mudivu ena nadakum?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!