Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-11

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-11

அத்தியாயம்-11

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

  அன்னை சொன்ன காரணத்திற்காக பிரதன்யா மிகவும் கஷ்டப்பட்டு அமுல்யாவிடம் பேச முயன்றாள்.

   அறையில், தோட்டத்தில், பக்கத்தில் உள்ள பார்க்கில் என்று அழைத்து செல்லும் பொழுது எல்லாம், சூழ்நிலை அமையாமல் அல்லது சிறுமியிடம் எவ்வாறு பேசுவது என்று தயங்கியே பிரதன்யா நாட்களை கடத்தினாள்‌.‌
 
  பைரவியோ, “ஒரு விஷயத்தை குழந்தையிடம் பேச இவ்ளோ நாளா?” என்று கடியவும் ஆரம்பிக்க, “நீங்க போய் கேளுங்கம்மா. அப்ப தெரியும். நானே இப்ப தான் குழந்தையிடம் நெருங்கி பழகுறேன்.‌ சடனா அமுல்யா நான் ஏதாவது பேசியதை, துகிரா அண்ணியிடமோ, இஷான் அண்ணாவிடமோ சொல்லிட்டா என்ன பண்ணறதாம்? என்று அலுத்துக் கொண்டாள்.

  “ஒரு மாசமாகிடுச்சு பிரதன்யா. குழந்தை இஷானிடம் இப்ப எல்லாம் நல்லா பழகறா. தினமும் ஸ்கூல் விட்டு தனியா வர்றப்ப வேற வேற கடைக்கு அழைச்சிட்டு போறான்.
   சொல்லப்போனா துகிராவை அந்த குட்டி ஏன் வரலைன்னு கேட்கலை. வீட்டுக்கு வந்ததும் தான் தேடுது.” என்று பேச, பிரதன்யாவோ வேகமாய் தலையாட்டி பேசாதீர்கள் என்று தவிக்க, பைரவியோ விட்டதை தொடர்ந்தபடி, “இப்படியே போச்சு… உங்கண்ணா இஷான் அமுல்யாவை அவன் பக்கம் இழப்பான்.‌ துகிரா அந்த சார்லஸை மணக்க போயிடுவா. அதுக்கு பிறகு உங்கண்ணா வேறொருத்தியை கல்யாணம் செய்தா பரவாயில்லையே… உங்கண்ணா தான் எவளையும் திரும்பி கூட பார்க்க மாட்டானே. துகிரா குழந்தை குட்டின்னு வந்தா அமுல்யாவை உரிமையா வந்து பார்க்கவும் முடியாது. துகிராவை உங்க அண்ணாவோட கல்யாணம் பண்ண அமுல்யாவிடம் நேக்கா பேசி சம்மதிக்க வைக்க தெரியலை.” என்று கையை விரித்து கூற, இடது பக்கமிருந்து அமுல்யா கைகள் பைரவி கையை பற்றியது.

திடுக்கிட்டு திரும்பியவரோ அமுல்யா இருக்க, சமாளிக்கும் விதமாக “நீ..நீ.. எப்படா குட்டி வந்த.” என்று பிரதன்யாவை பார்த்து சொல்ல வேண்டியது தானே?! என்பது போல பார்த்து வைத்தார்.

  “அமுல்யா குட்டி… இங்க நாங்க வேற விஷயம் பேசினோம். நீ ஏதாவது தப்பா புரிஞ்சிட்டியா தெரியலை‌. எதுக்கும்மா இங்க வந்திங்க? என்ன வேண்டும் பாப்பாவுக்கு” என்று பிரதன்யா சமாளிக்க முயன்றாள்.

  “பாட்டி.. அத்தை…. உங்ககிட்ட நான் பேசணும்.” என்றாள்.

  அச்சச்சோ.. என்ன கேள்வி கேட்க போறாளோ என்ற திகிலோடு “பேசுடா தங்கம்” என்று தாடைப்பிடித்து கொஞ்சினார்.‌

  அமுல்யா அப்பொழுதும் யோசனையுடன், “நான் இதை பத்தி பேசலாமா என்னனு தெரியலை அத்தை. ஆனா என் மனசுல இந்த விஷயம் கொஞ்ச நாளா ரன் ஆகிட்டே இருக்கு.” என்று ரிஷியை பார்த்தாள்.

ரிஷியோ, “நான் போயிடவா” என்று கேட்டான். அமுல்யா பார்வை இவன் இருக்கானே’ என்று தான் ஆராய்ந்தது‌.
 
  மறுப்பாய் தலையசைத்து, கதவை மட்டும் மூடுங்க சித்தா.” என்றவள் ரகசியம் பேசுவது போல பைரவியிடம் வந்தாள்.

“நான் குழந்தையா இருக்கும் பொழுதே துகிரா அம்மாவோடவே வளர்ந்தேன். எனக்கு அவங்க என் அம்மவோட தங்கச்சின்னு தெரியாது.
  அப்பா ஏதோவொரு ரீசன்ல என்னையும் துகிரா அம்மாவையும் பிடிக்காம தனியா விட்டுட்டு போயிட்டார்னு நினைச்சேன்.
  என் கூட படிக்கற பிரெண்ட்ஸுக்கு எல்லாம் அப்பா அம்மா இரண்டு பேருமே ஸ்கூலுக்கு வருவதை பார்த்திருக்கேன்.‌

எனக்கு மட்டும் அப்பா இல்லாம, சிங்கிள் மதரா அம்மா இருப்பதை நினைச்சி, நான் சின்ன வயசுல எவ்ளோ ஃபீல் பண்ணிருக்கேன் தெரியுமா? அம்மா அதுக்கு, ‘அப்பாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ஆனா அப்பா….’ அப்படினு தயங்கி, ‘ஏன்டா அம்மு அம்மா அன்பு மட்டும் உனக்கு பத்தலையா?’ என்று கேட்டாங்க. அம்மா மனசு கஷ்டப்படக்கூடாதேனு எனக்கு அப்பா அம்மா இரண்டும் நீ தான் மம்மினு சொன்னேன்.‌

அதுக்கு பிறகு நான் அப்பா பத்தி அம்மாவிடம் கேட்கலை. ஒரு நாள் வந்து சார்லஸ் அங்கிள் தெரியுமா?’னு கேட்டாங்க. ஆங் அங்கிளை தெரியும்னு சொன்னேன். அவரை அம்மா மேரேஜ் பண்ணினா உனக்கு அவர் அப்பாவா இருப்பார். மேரேஜ் பண்ணிக்கவானு கேட்டாங்க. ஐ திங் யூகேஜி படிக்கும் போது செகண்ட் மிட்டர்ம்ல பாடம் சொல்லி தந்தப்ப கேட்டாங்க. நான் ஓகேன்னு சொன்னேன்.‌
  அப்பயிருந்து அவரை அப்பானு பிக்ஸ் பண்ணிட்டேன். சார்லஸ் அங்கிளை நேர்ல இதுவரை அப்பானு சொன்னதில்லை. பட் அப்பானு பிக்ஸ் பண்ணியிருந்தேன்.
 
  அன்னிக்கு சண்டே மார்னிங் முன்னயிருந்த வீட்ல பிரஷ் பண்ணிட்டு இருந்தப்ப இஷான் அப்பா வந்தார். அம்மாவை துகிரா அம்மாவை கழுத்தை நெறிச்சிட பார்த்தார்.
  பயந்துட்டேன்… பாட்டி… அப்பறம் அம்மாவை தள்ளிவிட்டுட்டு என்னை தூக்கிட்டு கார்ல வந்தார்.‌
கார்லயும் ‘நான் உன் அப்பா என்னை பார்த்து ஏன்‌ பயப்படற?’னு கத்தினார்.‌
  எனக்கு அம்மாவை கழுத்தை நெறித்ததால் அப்பா மேல பேட் ஒபீனியன். மம்மி இத்தனை நாளா டேடி பத்தி எதுவும் சொல்லாததால டேடி பேட் பாய்னு நினைச்சேன்.
  
  பட் டேடி என்னிடம் பேசவர துடிக்கவும், டேடிக்கும் மம்மிக்கும் ஏதோ சண்டை  இப்ப பேசாம இருக்காங்கன்னு நினைச்சேன்.

சார்லஸ் அங்கிள், மெர்ஸி ஆன்ட்டி  இங்க வந்தப்ப, டேடி பத்தியும் துகிரா அம்மாவை பத்தியும் பேசிய பிறகு தான். துர்கா தான் என்னை பெத்தவங்கன்னும். துகிரா அம்மா துர்கா அம்மாவோட தங்கைன்னு புரிந்துடுச்சு.

  அப்பாவும் நல்லவர்னு துகிரா அம்மா அப்பாவிடம் கூட பேச சொன்னாங்க. எனக்கு தான் அப்பா அம்மா கழுத்தை நெறித்தது கோபமாவே இருந்தது.
  அன்னிக்கு ஸ்கூலுக்கு போன ஃபஸ்ட்-டே, அப்பா என்னிடம் பேசியதில் அவருக்கு என்னை பிடிக்கும். நான் அவரோட பேச ரொம்ப ஆசைப்படறார்னு பழகினேன்.‌

   அம்மாவுமே ‘அப்பா கூட பேசு ப்ளிஸ் அவருக்கு என் மேல கூடுதலா கோபம் ஆகுது. என்னை தப்பா எடுத்துக்கறார். மம்மியை தப்பா எடுத்துக்கிட்டா ஓகேவா’னு கேட்டாங்க. டேடியோட அடுத்த நாளே கொஞ்சம் கொஞ்சமா பழகினேன்.‌

  ஆனா துர்கா மம்மி சார்லஸ் அங்கிளை மேரேஜ் பண்ணிட்டு போயிட்டா என்னால தாங்க முடியாது. மம்மி என் கூடவே இருக்கணும்.
  இப்ப நீங்க சொன்னிங்களே… டேடியும் மம்மியும் மேரேஜ் பண்ணிக்கிட்டா மம்மி என் கூடவே இருப்பாங்கன்னு. எனக்கும் மம்மி டேடி மேரேஜ் நடக்கணும்.
  நீங்க ஏதோ ஐடியா வச்சியிருந்தா சொல்லுங்க. பாட்டி.. எனக்கு மம்மி டேடி இரண்டு பேரும் வேண்டும்.” என்றாள் குழந்தை.

  பாட்டியை கட்டிப்பிடித்திருக்க, பிரதன்யா கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தது.

ரிஷியோ “மலையை கூட புரட்டி மாத்திடலாம். இஷான் அண்ணா மேரேஜ் பண்ணறது எல்லாம் சாத்தியமேயில்லை.” என்றான்.‌

“பாட்டி.. அம்மா அப்பா அப்ப சேர மாட்டாங்களா?” என்று கிள்ளை மொழியில் கேட்டாள்.

  பைரவியோ, “உங்க சித்தப்பனுக்கு மூளை இப்ப கழட்டி வச்சிட்டு வந்திருக்கான். அப்படில்லாம் இல்லைடா கண்ணு. நீ நினைச்சா துகிராவையும் உங்க அப்பாவையும் இந்த கல்யாணத்தை நடத்த வைக்கலாம்.” என்றார் ஆணித்தரமாக.

  பிரதன்யாவுமே அன்னையின் திட்டம் ஏற்கனவே அறிந்தததால், “இங்க பாரு அமுல்யா… கொஞ்சம் ரிஸ்க் தான். ஆனா நீ அழுது ஆர்ப்பாட்டம் செய்து பிடிவாதம் பிடிச்சா இது சாத்தியமாக சான்ஸ் இருக்கு. ஆக்சுவலி அம்மா என்னை வச்சி உன்னிடம் பேசி, நைஸா இதை பத்தி தான் பேச சொன்னாங்க. பட் எங்களுக்கு வேலை மிச்சப்படுத்தி நீயே துகிரா அண்ணியை அண்ணாவுக்கு மேரேஜ் பண்ணி வைக்க கேட்டு நிற்கற. உனக்கு உன் அம்மா அப்பா வேண்டுமின்னா. அந்த இரண்டு பேரும் உன் அன்புக்கு அடிமையா இருக்கணும்.
  நீ சொல்லி மறுக்க முடியாம துகிரா அண்ணி அண்ணாவையையும், அண்ணா துகிரா அண்ணியையும் மேரேஜ் பண்ணணும்.
அண்ணா மனசுல யாருமில்லை.. சோ… அப்பா எனக்கு துகிரா அம்மா தான் வேண்டும். நீங்க அவங்களை மேரேஜ் பண்ணிக்கோங்கன்னு அடம் பிடி.
அதை போல எங்கப்பாவை கஷ்யாணம் பண்ணிக்கோங்க என்று அண்ணியிடம் நீ தான் பேசணும். ஏன்னா…நாங்க பேசினா ரியாக்ஷன் குறைவு. அதோட அவங்க சார்லஸ் என்பவரை மணக்க இருக்காங்களே.‌‌” என்று கூறிட, அமுல்யாவோ  இரண்டு மூன்று முறை தன் கண்ணை உருட்டி சிந்தித்து, “அடம் பிடிக்கறது அழுவறது, எல்லாம் எனக்கு நல்லா வரும். அது பரவாயில்லை… ஆனா அப்பா அம்மா கண்டுபிடிச்சிட்டா? அதோட அவங்களிடம் நான் என்னனு சொல்லணும்?” என்று கேள்விக் கேட்டாள்.

  ரிஷியோ, “கண்டிபிடிச்சா அடி தான்” என்றான் அவன்.‌

“சித்தா நீ பேட் பாய். பேசறப்ப குறுக்கே வர்றாதே. நீங்க சொல்லுங்க அத்தை. பாட்டி என்ன பேசறது” என்று கேட்டவளை பைரவி கண்டு சிரிக்க, “என்ன கேளு… நான் ஐடியா தர்றேன்.” என்றாள் பிரதன்யா.
  அங்கே இன்னமும் வாதம் நிகழ, பிரதன்யாவோ வசனத்தை எந்த இடத்தில் எப்படி பேச என்று கற்றுக்கொடுத்தாள்.

  அமுல்யா எல்லாம் கேட்டுவிட்டு, “அத்தை..‌. நான் ஏதாவது அடம் பிடித்தாலோ இல்லை அழுதாலோ அப்பா அடிப்பாரா? அம்மா கழுத்தை பிடிச்ச மாதிரி என்னையும் பிடிப்பாரா?” என்று ஐயம் கேட்டவளிடம் பிரதன்யாவோ “அண்ணாவுக்கு கோபம் வரும். ஆனா நிச்சயம் உன்னை அடிக்க மாட்டார். உன்னை யாருக்கு அடிக்க மனசு வரும்” என்று கொஞ்சினாள்.

கதவு தட்டும் ஓசை கேட்க, “அச்சோ… இஷான் அண்ணா” என்று பிரதன்யா உச்சரிக்க, ரிஷியோ, “போச்சு… எல்லாம் கேட்டிருந்தா?” என்று பயப்பட, “முதல்ல கதவை திறடா” என்று பைரவி கடிந்தார்.‌

    “வீட்டை திறந்து போட்டுட்டு கதவை மூடி வச்சிட்டு என்ன ரகசியம் பேசறிங்க? அதென்ன உன்னை அடிக்க மனசு வருமானு?” என்று நிற்க, பிரதன்யாவோ சமயோசிதமாக, “பெர்ஃப்யூம் பாட்டில் உடைச்சிட்டா அடிப்பிங்களானு ஒரு ரீல்ஸை பார்த்து கேட்டா அண்ணா. அதுக்கு தான்‌. குழந்தை தெரியாம செய்தா வேற வழியில்லை. ஆனா ரீல்ஸ் வீடியோ எடுக்க பேரண்ட்ஸே இப்படி ஸ்கிரின் பிளே பண்ணியிருக்கலாம்னு சொல்லி புரிய ட்ரை பண்ணினேன். ஏன் அண்ணா.. ஏதாவது தப்பா கேட்டுச்சா?” என்று பயந்து நடுங்கினாள்.
 
“நானே இப்ப தான் வந்தேன். அமுலு அங்க இருப்பான்னு போனேன். அந்த பொண்ணு தான் உட்கார்ந்திருந்தா. வெளியே வந்துட்டேன். இந்த ரூம் பூட்டியிருக்கவும் தட்டினேன். அமுல்யா ஹோம் வொர்க் முடிச்சிட்டியா? நாளைக்கு லீவு தானே? அப்பாவோட எங்க போகலாம்” என்று கேட்க, அமுல்யாவோ, “மார்னிங் மீன்-கண்காட்சி நம்ம ஏரியாவில் வைப்பதா இந்த பேப்பர்ல போட்டிருக்காங்க. அங்க போகலாம் டாடி” என்றாள்.

  இன்றைய செய்திதாளில் லோக்கல் பேப்பராக மீன் கண்காட்சி நாளை நடைப்பெறுவதாக அறிவிப்பு போட்டியிருக்க அதை எடுத்துக் காட்டினாள்.

“ஓ… இதெல்லாம் கூட படிக்கறியா?” என்று அமுல்யாவை முத்தமிட, துகிராவோ சேலை கட்டி மெதுவாக நடந்து வந்தாள்.

சற்றுமுன் உடை மாற்றியபடி இருந்தவள் அமுல்யா போனதை அறியாமல் கதவை தாழிடாது உடைமாற்ற, இஷான் கதவை பட்டென்று திறந்து துகிராவின் பாதி உடையணிந்து ஃப்ளிட்ஸ் மடிக்க, முன்னே லேசாக மாராப்பை போட்டிருந்தாள்.
  கதவை திறக்கவும் துகிரா திரும்ப, மேலே அணிந்த முந்தானை நழுவி தொலைக்க, இஷான் கதவை அறைந்து தாங்கி அமுல்யாவை தேடி இந்த கதவை தட்ட ஆரம்பித்திருந்தான்.

அதனால் துகிராவை காணவும் தடுமாறி போக, தன்னை பற்றி பைரவியிடம் இது ஒரு காரணமாக ஏதாவது சொல்லி பிரச்சனை வருமோயென்று பயந்து போனாள்.

இஷானுக்கு அவன் மீதும் தவறுள்ளதாக எண்ணி அமுல்யாவிடம் மட்டும் பேசி மகளை தூக்கி கொஞ்சினான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்




8 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-11”

  1. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 11)

    அட ராமா ! பெரியவங்க எல்லாம் சின்னபுள்ளைத் தனமா நடந்துக்கிட்டதால, கடைசியில குழந்தையே பெரிய மனுசியாகிடுச்சு பாருங்க?
    எத்தனை அழகா விஷயத்தை புரிஞ்சுக்கிட்டு, எப்படி ப்ளான் பண்றா பாருங்க.

    ஓ… பார்த்துட்டானா, பார்த்துட்டானா… சாரி கட்றதை வேற பார்த்துட்டானா…?
    ம்ஹூம்…. இவன் முதல்ல இருந்தே சரியில்லை, முதல்ல கிஸ், அப்புறம் கொஞ்சமா சைட் டிஸ், இப்ப முழுசாவா ?
    ஓ மை காட் ! போற போக்கைப் பார்த்தால், ரெண்டு பேரும் தானாவே சம்மதிச்சிடுவாங்க போலயிருக்கே, தடியெடுத்தெல்லாம் அடிக்கத் தேவையில்லை… கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி..
    அப்படித்தானே ????

    (அமுலு பேசுற இடத்துல துர்கா மம்மி சார்லஸ் அங்கிளை மேரேஜ் பணடணிட்டு போயிட்டா என்னால் தாங்க முடியாதுன்னு சொல்ற இடத்துல துகிரா மம்மின்னு வரணும். கரெக்ட் பண்ணிடுங்க ப்ளீஸ்)

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 11)

    அட ராமா ! பெரியவங்க எல்லாம் சின்னபுள்ளைத் தனமா நடந்துக்கிட்டதால, கடைசியில குழந்தையே பெரிய மனுசியாகிடுச்சு பாருங்க?
    எத்தனை அழகா விஷயத்தை புரிஞ்சுக்கிட்டு, எப்படி ப்ளான் பண்றா பாருங்க.

    ஓ… பார்த்துட்டானா, பார்த்துட்டானா… சாரி கட்றதை வேற பார்த்துட்டானா…?
    ம்ஹூம்…. இவன் முதல்ல இருந்தே சரியில்லை, முதல்ல கிஸ், அப்புறம் கொஞ்சமா சைட் டிஸ், இப்ப முழுசாவா ?
    ஓ மை காட் ! போற போக்கைப் பார்த்தால், ரெண்டு பேரும் தானாவே சம்மதிச்சிடுவாங்க போலயிருக்கே, தடியெடுத்தெல்லாம் அடிக்கத் தேவையில்லை… கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி..
    அப்படித்தானே ????

    (அமுலு பேசுற இடத்துல துர்கா மம்மி சார்லஸ் அங்கிளை மேரேஜ் பண்ணிட்டு போயிட்டா என்னால் தாங்க முடியாதுன்னு சொல்ற இடத்துல துகிரா மம்மின்னு வரணும். கரெக்ட் பண்ணிடுங்க ப்ளீஸ்)

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Kalidevi

    Ishan ku epovum avasaram than nithaname illa ethulaum avan mela thappu iruntha amaithiya iruka appadi ena kovamo. periyavanga yaru mudivu eduka matanganu kolanthaiye evlo periya vishayam yosichi solra parunga kolanthaiye alaga seyal padutha pora parunga athuku etha mari than nadakuthu inga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!