அத்தியாயம்-13
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
இஷான் தன் பங்கிற்கு உதவுவதாக, “கார்ல ஒன்டே டிரைவரை வரவச்சி கொண்டு போய் விட்டுட்டு வர ஏற்பாடு செய் ரிஷி” என்று ஆணையிட, “இல்லை…. என்னை நான் பார்த்துப்பேன்” என்றவள் அவளாக பஸ்ஸில் டிக்கெட் பதிவு செய்துவிட்டாள்.
இஷானிடம் குழந்தை ‘அம்மா ஊருக்கு எல்லாம் போக வேண்டாம். நம்மிடமே இருக்கட்டுமென்று’ வாதிட்டிருக்க, அவனோ “அமுலு… அவங்க இங்க இருக்க முடியாது.” என்று கூற, “அதெல்லாம் அம்மாவா என்னோடவே காலம் முழுக்க இருக்கலாம். அவங்க என் மம்மியா. நீங்க என் டேடியா.” என்றவளை சத்தம் போடாதவாறு ‘சரி நீ ஸ்கூலுக்கு கிளம்பு வந்து பேசிக்கலாம்.” என்று திசை திருப்பி பள்ளிக்கு அனுப்பி விட்டான். அதன்பின் துகிரா பெட்டியை எடுத்து தயாராக, “பாப்பா வந்தா சொல்லிடுங்க. பத்திரமா பார்த்துக்கோங்க” என்று பிரதன்யாவிடம் தெரிவித்து அழுகையை அடக்கி சென்றாள்.
ரிஷி பஸ் ஏற்றிட்டு வா” என்று தம்பிக்கு கட்டளையிட ரிஷி தலையாட்டினான். அவனுக்கு பாவமாக இருந்தது
ரிஷி துகிராவை அழைத்து பஸ் ஏற்றிட செல்லவும், இஷான் அலுவலகம் சென்றிட, “அண்ணா வேண்டுமின்னே அமுல்யா இல்லாத நேரமா துகிரா அண்ணியை துரத்திட்டார்ம்மா.” என்றாள்.
பைரவியோ, “நாம அவனுக்கு தெரியாம திட்டம் எல்லாம் போட்டோம். ஆனா அவன் எப்பவும் போல அவனுக்கு சாதகமா சூழ்நிலையை மாத்திக்கிட்டான். இந்த பொண்ணும் கிளம்பிட்டாளே. ம்ம்ம்ம் இப்ப அமுல்யா வந்தா அவளை தான் நாம சமாதானம் செய்யணும்.
நினைச்சதெல்லாம் நடக்குதா? திட்டம் எல்லாம் வேஸ்டா போச்சு” என்று சோர்ந்தவராய் பேசினார்.
“ஓ… அண்ணா அதுக்கு தான் என்னை காலேஜுக்கு லீவு போடு பிரதன்யா. ஈவினிங் அமுல்யாவை சமாதானம் செய்ய முடியுமானு தெரியலை. நீ இருந்தா பெட்டர்னு சொன்னார். ஆக அண்ணாவுக்கு துகிரா இல்லாம அமுல்யா என்னவோ அடம் பிடிப்பான்னு தெரியுது. அண்ணா எல்லாம் தெளிவா இருக்கார் அம்மா. நாம போடற கணக்குக்கு கேள்வியே தப்பா இருக்கு.” என்று நகர்ந்தாள்.
பைரவி ஆசை நிராசையாக சென்றதில் பெரும் வருத்தம் உண்டானது.
அதற்கேற்றது போல அமுல்யா வந்ததும் துகிராவை தேட, அவள் சென்றதை உரைத்ததும், அழுவாள் ஆர்ப்பாட்டம் செய்வாளென்றதற்கு பதிலாக மௌனமாய் மாடிபடியேறினாள்.
பைரவியோ “குழந்தை, துகிரா இல்லைன்னா கூட இஷான் போதும்னு முடிவெடுத்துட்டா போல.” என்று கலங்கி செல்ல, பிரதன்யாவோ ”எனக்கென்னவோ சரியப்படலைம்மா. அவ முகம் சட்டுனு மாறிடுச்சு” என்று கூற, “போடி” என்று பைரவி களைந்து போய் விட்டார்.
இஷானோ காரை நிறுத்திவிட்டு, அமுல்யாவை ஹாலில் தேட, “அவ மாடிக்கு போயிட்டா அண்ணா.” என்றாள் பிரதன்யா.
“மாடிக்கா.?” என்று யோசனையோடு செல்ல, அவனது அறையில் பிரதன்யா இல்லை. துகிராவோடு இருந்த அறையில் உடை மாற்றி முகமலம்பி, தலைவாறிக் கொண்டிருந்தாள்.
இஷானுக்கு நிம்மதியாக, “அமுலு சாப்பிடலாமா?” என்று கேட்டதும், தலையாட்டி தந்தை கைப்பிடித்து நடந்து வந்தாள்.
சிற்றுண்டி தயாராக இருக்க, குக்கீஸ் பால் பழச்சாலட் என்று கொஞ்சம் கொறித்தாள்.
“அத்த.. நான் படிக்க போறேன்” என்று மாடிக்கு சென்றாள். இஷானோ ‘நீயும் போ’ என்று தங்கையிடம் கண்ணாலேயே உரைத்திட, அவளும் “அமுல்யா இருங்க அத்தை வர்றேன்” என்று வந்தார்.
அமுல்யா முகம் வாடியிருந்ததே தவிர, மற்றபடி எந்தவித மாற்றமும் இல்லை.
இஷானுக்கு ஓரளவு நிம்மதியளித்தது. நேரங்கள் நகர, இரவு உணவை முடித்து அமுல்யா இஷான் இருவரும் உறங்கினார்கள்.
இங்கு துகிராவோ இரவு பத்து மணிக்கு வீட்டுக்கு வந்தாள். அன்று போட்டது போட்டபடி போட்டுவிட்டு சென்றதால், இடமே கெட்டவாடை வீசியது.
கண்ணீரோடு அந்த நேரத்தில் வீட்டை சுத்தம் செய்தாள். அமுல்யாவின் நினைவுகளை பறைச்சாற்ற வாய்விட்டு கதறி அழுதாள்.
வீட்டை சுத்தம் செய்து அழுது களைத்து, உறக்கமே வராமல் மூன்று மணிக்கு குளித்து முடித்து ஈரத்தலையுடன் சோபாவில் அமுல்யா புகைப்படத்தை கட்டிக்கொண்டு சாய்ந்தாள். குளித்ததாலோ என்னவோ அசதியில் அதிகாலை நான்கு பத்துக்கு உறங்கினாள்.
மணி ஏழாக பக்கத்திலிருந்து பாட்டு சத்தம் கேட்டது. சேட்டன் பாடல் டீக்கடையில் ஒலிக்க, மணி ஏழு என்றதும், இஞ்சி தட்டி கடுங்காபி தயாரித்து குடித்தாள்.
இரண்டு தோசை சுட்டு சாப்பிட்டாள் நேற்று மதியத்திலிருந்து சாப்பிடாதது தலைசுற்ற கஷ்டப்பட்டு விழுங்கினாள்.
தலைவலி வாட்டியெடுக்க மாத்திரையும் விழுங்கினாள்
பத்துமணி அளவில் மெர்ஸி வீட்டுக்கு சென்றாள். அங்கே சார்லஸும் அவன் பெற்றோரும் வரவேற்றார்கள்.
முன்பு ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் துகிராவை அரை மனதாக தான் பையனுக்கு மணமுடிக்க நினைத்தார்கள். இன்றோ அவள் கன்னிப்பெண், குழந்தையும் அக்கா குழந்தை என்ற எல்லா விவரமும் மகளிடம் பெற்றப்பின், துகிராவை கொண்டாடினார்கள்.
மெர்ஸியோ, நலம் விசாரித்து எப்பொழுது வந்தாய் என்ற தகவல் அறிந்தப்பின், தோழியின் முகவாட்டத்தை கண்டு, வரவேற்பு பானத்தை தந்து இயல்பான பேச்சு முடிந்ததும், “சரி இப்பவாது சொல்லு. கல்யாணம் செய்யறதுக்கு பத்திரிக்கை அடிப்போமா? பாவம்யா அண்ணா… உன்னை விரும்பியதை சொல்லி, அமுல்யாவோட சம்மதத்துக்குனு காத்திருந்து, கிட்டதட்ட ஏழு மாசம் காத்திருக்கான். நீ சம்மதம் சொல்லிட்டா, இப்பவே பாதரிடம் சொல்லணும். மத்த வேலையை பார்க்கணும்” என்று துகிரா கையை பிடிக்க, சார்லஸும் துகிரா பதிலுக்காய் அவளது முகத்தை காணவும், துகிராவுக்கு இந்த மனநிலையில் தனக்கு கல்யாணமா? என்று ஆயாசமாக இருந்தது.
அவள் அமுல்யா இல்லாமல் மனழுத்தத்தில் துவள, சார்லஸுடன் கல்யாணத்தை யோசிக்க முடியவில்லை. ஆனால் மனழுத்தம் நீங்க இந்த கல்யாணம் தனக்கு தேவைப்படலாம் என்றும் ஒரு மனம் எடுத்துரைத்தது.
துகிரா பேச தயங்க, “என்ட மோலே, கல்யாணத்தை பத்தி கல்யாண பொண்ணிடமே பறைய முடியுமோ? அதெல்லாம் வீட்டில இருக்க பெரியவங்களிடம் பேசணும். மோலேக்கு இனியெல்லாம் நாம தான். துகிராவை பிடிச்ச துஷ்ட ஆத்மா எல்லாம் விலகிடுச்சு. இத்தனை நாள் நாங்க கல்யாணத்தை பத்தி யோசித்ததுக்கு காரணமே அமுல்யா குட்டி தான். அவளே அவ அப்பாவோட போனப்பின்னே, எங்களுக்கு எங்க பிள்ளை கல்யாணத்தை கிராண்டா சர்ச்ல வச்சி, துகிராவை கட்டி வைக்க தடபுடலா செய்யலாம். நீ சார்லஸை கட்டிக்க சம்மதிச்சா மட்டும் போதும்” என்று சார்லஸ் தாய் நிர்மலா பேச, “ஆன்ட்டி… அம்மு துஷ்ட ஆத்மா இல்லை. பார்த்து பேசுங்க. அவ என்னோட தேவதை.. என்னோட உயிர்” என்று திருந்த, “சாரிம்மா… அவ என்னிடம் பேசற மாதிரி உன்னிடம் வார்த்தையை விட்டுட்டா.” என்று மோஸஸ் வந்தார்.
சார்லஸின் தாய் தந்தைக்கு அமுல்யாவோடு வரும் தன்னை பிடிக்காது என்று அறிந்தும், சார்லஸிற்காக தன்னை ஏற்க இவர்களும் இடைப்பட்ட நாளில் நேரம் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் ‘துஷ்ட ஆத்மா’ என்று பேசும் அளவிற்கு அமுல்யாவை எந்த இடத்தில் விட்டுக்கொடுத்து இறக்கினோம் என்று கோபம் வந்தது.
“என்ன மெர்ஸி என் உலகமே அமுல்யா என்று இருந்தேன். இவங்க இப்படி துஷ்ட ஆத்மானு சொல்லறாங்க” என்று கடிய, “அச்சோ… இந்த அம்மாவுக்கு பேச தெரியாம பேசுவாங்க துகிரா. நீ அதை மைண்ட்ல வச்சிக்காத. அண்ணா கல்யாணத்துல அமுல்யாவை மைனஸா நினைச்சாங்க. அதை தான் அவங்க சொல்ல வந்தது.” என்றாள்.
“அமுல்யா மைனஸா? அவ தானே என்னோட லைப்புக்கு பிளஸ். அப்பா அம்மா அக்கா இறந்துப்போய் அனாதையா நின்றப்ப, இந்த குழந்தை உனக்காக இருக்கானு கடவுள் கொடுத்த தேவதை அவ. உங்கம்மா துஷ்ட ஆத்மா செல்லறாங்க. அதையே நீ கொஞ்சம் வித்தியாசமா மைனஸ்னு சொல்லற மெர்ஸி..” என்று மெர்ஸியும் கூறியதில் காயம் அடைந்தாள்.
மோஸஸோ, “இங்கப்பாரும்மா.. கல்யாணமாகி குழந்தையோட எங்களுக்கு அறிமுகமானவ நீ. மெர்ஸி அப்ப உன் குழந்தை இல்லை என்றதை மறைச்சிட்டா. சார்லஸ் விரும்பவும், எவ்வளவோ எடுத்து சொன்னோம். அப்பறம் மெர்ஸி தான் அதெல்லாம் மேரேஜ் பண்ணிவையுங்கனு ஓவர் சப்போர்ட். சரினு தான் உன்னையும் அமுல்யாவும் ஏத்துக்க நிர்மலாவிடம் பேசியது. அப்பவே வேண்டாவெறுப்பா இருந்தாலும் கல்யாணத்துக்கு சம்மதிச்சோம். இப்ப அமுல்யா உன் குழந்தையே இல்லையென்றதால் நிர்மலாவுக்கு சந்தோஷம். வார்த்தை முன்னபின்ன போனா என்ன? நீயும் என் மகனை விரும்பற தானே?” என்றார்.
“சார்லஸ்… அமுல்யாவை நீங்க என்ன அர்த்தத்தில் பார்க்கறிங்க?” அதை சொல்லுங்க?” என்று கேட்டாள்.
“அமுல்யா தான் இஷானிடம் விட்டாச்சே. இப்ப எதுக்கு அவளை பத்தி பேசணும். உனக்கு அமுல்யாவை பிரிந்தது வேதனையா இருக்கும். மேரேஜ் ஆனா அமுல்யாவை மறந்துடுவ” என்று ஆறுதலாக உரைத்தான்.
துகிராவோ, “உங்க அம்மாவுக்கு அமுல்யா ஒரு துஷ்ட ஆத்மா. உங்கப்பாவுக்கு கல்யாணமாகி குழந்தை இருந்தப்பவே உங்க குடும்பம் என்னை உங்களுக்கு மேரேஜ் பண்ண ரெடி. அது அவருக்கு பெருமையான விஷயமா நினைச்சி எனக்கு குடும்பமா வாழ்க்கை பிச்சையா உறவு வருவதை இன்டேரக்டா சொல்லறார்.
என்னோட பிரெண்ட் மெர்ஸிக்கு அமுல்யாவோட உங்களை கல்யாணம் செய்ய நினைச்சது, ஒருவிதத்தில் மைனஸ். உங்களுக்கு அவளை பத்தி பேச எதுவும் இல்லை. அப்படி தானே?” என்று தள்ளாட்டம் கொண்டாள்.
சார்லஸோ “ஒரு மேரேஜ் நடக்கும் போது இதெல்லாம் ஆராய்வது இயல்பு துகிரா. நீங்க ஏதோ மைண்ட் டிஸ்டர்ப்ல இருக்கிங்க. நேத்து நைட் தான் வந்திருப்பிங்க. போய் தூங்குங்க. கல்யாண விஷயம் பொறுமையா பேசிக்கலாம்” என்றான்.
மெர்ஸியும் ஆமோதிப்பாய், “அண்ணா சொல்லறது ரைட் துகிரா. போய் ரெஸ்ட் எடு” என்று முகவாட்டத்தையும் வீக்கத்தையும் கண்டு உரைத்திட, துகிரா சற்று தடுமாறி தள்ளாடி சாய்ந்திட, போன் அழைத்தது.
மெர்ஸி தண்ணீரை எடுத்து தர, “அம்மு… அம்முவா இருக்கும்” என்று தண்ணீரை தட்டிவிட்டு போனை ஏற்றாள்.
நிர்மலாவோ முகம் திருப்பிக் கொண்டு செல்ல, “ஹலோ அம்மு” என்று பேச, “அண்ணி… நான் பிரதன்யா… அண்ணி.. அம்முவுக்கு அம்மு..” என்று நிறுத்த, “என்னாச்சு?” என்று பதறினாள்.
“அம்மு நீங்க இல்லன்னதும் அழுவா அடம்பிடிப்பானு நினைச்சோம். ஆனா அவ சமத்தா சாப்பிட்டு ஹோம்வொர்க் முடிச்சி, அண்ணாவோட தூங்க போனா. நாங்க கூட உங்களை விட்டு வாழ பழகிட்டானு நினைச்சோம். ஆனா அவ மனசுக்குள்ள பீல் பண்ணி நைட் படுத்து தூங்கி, தூக்கத்துல ‘அம்மா அம்மானு சொல்லிட்டே இருந்திருக்கா. அண்ணாவும் ஏதோ மிஸ் பண்ணியதால தூக்கத்தில் உலறுறா என்று தட்டிக் கொடுத்திருக்கார்.
ஆனா காலையில் ஒரு மாதிரி எந்திரிக்கவேயில்லை. ஹாஸ்பிடல்ல அவங்க அம்மாவை கூட்டிட்டு வாங்கன்னு சொல்லிட்டாங்க. மருந்து மாத்திரையில் பாருங்கன்னு சொன்னதுக்கு, அம்மா தான் சார் மருந்துனு சொல்லிட்டாங்க. கொஞ்சம் வாங்க அண்ணி. ப்ளீஸ்” என்று கூப்பிட, போனின் பிடி நழுவியது.
துகிரா தொப்பென்று விழவும், மெர்ஸி தாங்கி பிடிக்க, சார்லஸ் போனை வாங்கி பேசினான்.
“நான் அவங்களை கூட்டிட்டு வர்றேன்மா” என்று வைத்துவிட்டு துகிராவை பார்த்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Kolanthai onnu adam pannum illa amaithiya iruntha ippadi thane agum athuku ena therium evlo matured ah pesinalum athu manasula evlo kastam irukum . Itha oru reason vachi ipo bairavi avanga nonachanvelaiya pana poranga ninikiren
கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 13)
இப்ப என்ன பண்ணுவானாம் இந்த இஷான்..? இதுக்கும் துகிராவைத்தான் திட்டுவானோ. ஆனா, முதல்ல அவன் ஒண்ணை உணர்ந்துக்கணும். அமுல்யா குழந்தை, அவளை கை குழந்தையில இருந்து வளர்த்தது, அதுவும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம தன் குழந்தையா வளர்த்திருக்கா.
குழந்தையை இப்படி ஸ்கூலுக்கு அனுப்பிச்சிட்டு, கையோட துகிராவையும் ஊருக்கு பஸ் ஏத்தி விட்டது தப்பில்லையை..? இஷான் துகிராவை தப்பான பார்வையே பார்த்ததில்லை, ஆனா அந்த குழந்தை துகிராவைத்தான் தன் தாயாவே நினைச்சிருக்காள்.
துகிரா தன் தாய் கிடையாது, தன்னோட சித்தி என்கிற விஷயமே அமுல்யாவுக்கு
இப்பத்தான் தெரிஞ்சிருக்கு.
அதுல இருந்தே அவ வெளியே வரலை, இதுல இத்தனை வருசமா தாயா இருந்து வளர்த்தவ, திடீர்ன்னு சொல்லாம கொள்ளாம போனால், குழந்தையால எப்படி தாங்கிக்க முடியும்…? அவ என்ன உணரச்சிகளற்ற பொம்மையா..? இதெல்லாம் யோசிக்க மாட்டானோ இந்த பிடிவாதக்கார இஷான்.
(மேலே மாடிக்கு போனது அமுல்யா தானே, பட், நீங்க பிரதன்யான்னு டைப் பண்ணியிருக்கிங்க. கரெக்ட் பண்ணிடுங்க).
😀😀😀
CRVS (or) CRVS 2797
Kulanthai manasalavula paathichita.. thugira mattum than marunthu
Super super super super super super interesting
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 paavam andha kuzhandhai 🙄 ellarum serndhu athoda mananilaiya yosikkave ellai🥺
Interesting
Nice!!!
Interesting💯💯💯💯
Interesting💯💯💯💯… Going good
Super
Nice going