Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-24

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-24

அத்தியாயம்-24

நீலகிரிக்கு செல்லும் ரயில் வண்டியில் ஏசி கோச் கிடைத்திருந்தது. அதிலும் பஸ்ட் கிளாஸ் ஏசி கோச் என்பதால் மூன்று பேர் படுக்கும் விதமாக தனிமையாக அமைந்தது.
  என்ன கிட்டதட்ட தங்கள் அறையில் இருப்பது போல தான். ஆனால் இங்கே சற்று நெருக்கமான இடத்தில்…

   இரவு ஒன்பது மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் புறப்படுவதால், வீட்டிலேயே அமுல்யாவுக்கு சாப்பிட தந்து அழைத்து வந்திருக்க, அவர்களுமே சாப்பிட்டு விட்டார்கள்.
  அதனால் ரயிலில் ஏறியதும் உடைமையை வைத்துவிட்டு அமுல்யாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, டிக்கெட் செக்கிங் முடித்து உறங்க வேண்டியது மட்டுமே.

  ஏசி கோச் என்பதால் ஏறும் போதே டிக்கெட் எல்லாம் பரிசோதித்து முடித்திருக்க, அமுல்யா இஷானோடு பேசினாள்.

  “அப்பா.. ஊட்டிக்கு எப்ப ரீச் ஆவோம்” என்று கேட்க, “ஆறு ஆறரைக்கு டிரெயின் மேட்டுபாளையம்ல நின்றுடும் அமுலு. அதுக்கு பிறகு கார்ல பேசியிருக்கேன். அங்கிருந்து டூ ஆர் த்ரி ஹவர்ஸ் போகணும்‌” என்று கூறவும், அமுல்யாவிற்கு படுக்க தோதுவாக துகிரா ஏற்பாடு செய்துவிட்டாள்.

  அமுல்யா தந்தைக்கு முத்தமிட்டு “குட்நைட் டேடி” என்று என்றாள்.

  இஷானுமே “குட்நைட்” என்றவன் இரு தினம் முன் துகிரா முத்தமிட்டதும் தேவையற்று நினைவு வந்து அவளை காண, அவளுமே ‘ஓ.. இதான் அன்னிக்கு குட்நைட் முத்தமிட்டப்ப இவருக்கு சந்தேகம் வரலை. பொண்ணு தந்ததா நினைச்சிட்டார் போல, இல்லைன்னா அந்த நைட் எழுந்து பேயாட்டம் ஆடியிருப்பார்’ என்று துகிராவுமே மனதோடு பேசிக் கொண்டாள்.

    துகிரா படுத்ததும் போர்வை போர்த்திக் கொண்டாள். அமுல்யா உறங்கிட, துகிராவும் கண்ணயர்ந்திட,  துர்காவோடு பயணம் செய்த நாட்களில் ஏசி கோச் சில்மிஷம் செய்த நினைவுகள் இஷானை இம்சை செய்ய, தூக்கமின்றி தவித்தான். அந்த சில்மிஷ ஆட்டத்தின் பரிசு தான் அமுல்யா.’ என்ற நினைப்பு வரவும் எழுந்து அமுல்யாவை தீண்டினான்.
 
  அவன் நேரமோ என்னவோ துகிராவின் மெத்தென்ற நெஞ்சில் கைகள் உரசிட, மகளின் சிகை கோதினான்.

துகிரா தன் மார்பில் ஏதோ உரசிசென்றதும், இஷானின் பெர்ஃப்யூம் மணமும் தாக்க, சட்டென்று எழுந்தாள்.

  சாதாரணமாய் எழுந்தால் பரவாயில்லை. அவளோ தன் நெஞ்சில் கைவைத்து எழவும், “அமு..அமுலுவை டச் பண்ணினேன்‌ நாட் யூ” என்று துகிரா பதட்டத்தால் அவசரமாய் உரைத்தான். ஆனால் தன் கை உரசியது துகிரா மார்பில் என்றதும் பதட்டம் உருவானது. 

  “நீ… நீங்க வேண்டுமின்னா அமுல்யா கூட படுத்துக்கோங்க” என்று துகிரா கூறியதும் இஷானோ, “இல்லை பரவாயில்லை… அமுலு நைட்ல, உன்னை தான் அதிகமா தேடுவா.” என்று கூறிவிட்டு அவனது இடத்தில் படுத்து ஸ்கீரினை சாற்றி விட்டான்.

  துகிராவுமே தான் உறங்குமிடத்தில் திரைசீலையை நகர்த்திக் கொண்டாள்.
  துகிராவுக்கு மேடிட்ட வயிற்றோடு வீட்டுக்கு வந்த அக்காவோடு இரண்டு நாள் பேசியதில், அக்காவும் மாமாவும், ஊட்டிக்கு இதே போல ஏசி கோச்சில் ஹனிமூன் சென்றதை அக்கா கூறியது நினைவு வந்தது.

  ‘ஒரு வேளை அவருக்கு அக்கா நினைப்பு வந்திருக்குமோ?’ என்று தலையை விட்டு இஷான் இருந்த இடத்தில் லேசாக எம்பி பார்க்க, போனில் துர்கா இஷான் சேர்ந்த ஒரு புகைப்படத்தினில் இருந்த துர்காவை தொட்டு தடவினான்.

  துகிராவுக்குள் அவன் தீண்டல் புகைப்படத்தில் என்றாலும், அவளுக்கு துர்கா அக்கா என்றதை தாண்டி தன்னை அதில் நினைத்து உறக்கத்தை தொலைத்தாள். அப்படியிருந்தும் ரயிலின் தாலாட்டில், ஏசி குளிரில், பத்து பதினைந்திற்கு இருவருமே உறங்கினார்கள். அதன்பின் பயணங்கள் எல்லாம் உறக்கத்தில் கழிய, ஐந்து மணிக்கு துகிராவுக்கு முழிப்பு தட்டியது.

  கண்ணாடி ஜன்னல் வழியாக திரைச்சீலை நகர்த்தி நேரம் பார்த்துக் கொண்டவள், சத்தமின்றி தலைவாறிக் கொண்டாள். அதோடு பல் தேய்த்து முகமலம்பி, ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் தொலையாமல் பார்த்துக் கொண்டாள்.

  போனில் யூடியூப்பில் சென்றவள் பாட்டு கேட்க முடிவு செய்ய, ஹெட்செட் இல்லாமல் அலறிடவும் இஷான் விழித்தான். மணி ஐந்து நாற்பது என்றதும், எழுந்தவன் அவனும் முகமலம்பி பல்தேய்த்து, பேண்ட் பேக்கெட்டில் இருந்த சீப்பால் தலைவாறி முடித்தான்.‌

  “அமுலு” என்று எழுப்ப நினைக்க, அமுல்யாவோ அசையவில்லை‌.

  “பரவாயில்லை தூங்கட்டும். ரயில் நின்றதும் பாப்பாவை நான் தூக்கிப்பேன்” என்றாள்.

     இஷான் அமுல்யாவை எழுப்புவதை தவிர்த்துவிட்டு போனில் செய்தியை பார்க்க, ரயிலும் மேட்டுபாளையம் நின்றது.

  இஷான் லக்கேஜை இறக்கவும், அதை பாதுகாக்க, துகிரா கைப்பையை மாட்டிக்கொண்டு  அமுல்யாவை தூக்கி கொண்டு இறங்கினாள்.

   சற்று நடந்து செல்ல, அவசரமாய் வேறொரு ரயிலில் செல்ல ஓடியவர்கள் துகிராவை இடிக்க வரவும், இஷான் துகிராவின் இடையை பற்றி தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.

  குளிரான தட்ப நிலையில், வெட்பமான இஷானின் கரம் வெற்றிடையை பற்றியதும் உடலெங்கும் மின்சார தீண்டல் பெற்ற துகிராவுக்கு அவள் உடலெங்கும் மயிர் கூச்சம் பெற்று சிலிர்த்தது.

இஷான் அதை கவனித்தவனோ, “பார்த்து வா” என்று முன்னே நடந்தான்.

துகிராவோ சட்டென இஷான் தீண்டவும் பயந்தாலும் அவன் அவளது பாதுகாப்பிற்கென புரிந்துக் கொண்டாள். ஆனாலும் தீண்டல் அவளை திக்குமுக்காட செய்தது. ‘இப்படி இவரோட ஒரு தீண்டலுக்கே, என் உடல் சிலிர்த்து கூச்சத்தை தந்தா அவர் என்னை என்ன நினைப்பார்.’ என்று தன்னையே கடிந்தபடி பின் தொடர்ந்தாள்.

  இஷானோ அவன் பழைய துர்காவின் நினைவுக்கும், துகிராவின் புதுமைக்கும் மத்தியில் மாட்டிக்கொண்டு திளைத்தான்.
   கார் ஏற்கனவே பேசி வைத்திருக்க, இஷான் போனில் தொடர்பு கொண்டு காரை பக்கத்தில் வரவழைத்து, அதில் லக்கேஜை ஏற்றினான்.‌

  இஷான் அமர்ந்து குழந்தையை கேட்க, துகிரா கொடுத்தாள். அமுல்யா அரை உறக்கத்தில் தந்தையின் மடியில் படுத்துக்கொள்ள துகிரா அமர்ந்து அமுல்யா பாதத்தை மடியில் வைத்து நீட்டி படுத்துக்க வைத்தாள். இதில் அமுல்யா செருப்பை வேறு கையில் சுமந்து வந்து காரில் சேர்த்திருக்க, காலில் ஷாக்ஸை, கழட்டாமல் சரிசெய்து போட்டுவிட்டாள்.
  இதையெல்லாம் கவனித்து கொண்டவன் மனதில், அமுல்யா அம்மாவாக துர்காவே நேரில் வந்தது போல தான் எண்ணி வியந்தான்.

   இத்தனைக்கும் அமுல்யா துர்கா சாயலில் இல்லை‌. இஷான் சாயல். முடிந்தா இங்கிருந்து போகறதுக்கு முன்ன முதல் மீட்டிங்ல துகிராவிடம் அத்துமீறியதுக்கு சாரி கேட்கணும்.’ என்று நினைத்தான்.

   அமுல்யா அரையுறக்கத்தில் உடலை முறுக்கி இடத்தை பார்த்தாள். ரயிலில் வந்தோம் இப்ப கார் என்றதும் “அப்பா டிரெயின் எங்க?” என்று கேட்டாள்.

“நீ தூங்கும் போது டிரெயின்ல இருந்து இறங்கி கார்ல வந்துட்டோம். அமுலு அம்மா தோள்ல சுகமா தூங்கிட்டிங்க” என்று கூறினான்.

துகிராவோ “மௌத்வாஷ் பண்ணறதா இருந்தா சொல்லு. காரை நிறுத்த சொல்லறேன். ஏதாவது பால் குடிக்கறியா?” என்று கேட்க, கொட்டாவி விட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு” என்று தண்ணீர் மட்டும் குடித்தாள்.
  ஈர டிசு பேப்பரால் அமுல்யா  முகத்தை துடைத்து விட்டு, ஹெட் பேண்டை கழட்டி தலைவாறி முடித்து மீண்டும் ஹெட் பேண்டை போட்டுவிட்டாள்.

    “பிஸ்கெட் சாப்பிடறியா?” என்று கேட்டதற்கு வேண்டாமென மறுத்து, தந்தையோடு ஜன்னல் பக்கம் பார்வையிட வேண்டுமென இடத்தை மாற்றி சென்று “தள்ளுங்கப்பா” என்று அமர, இஷான் துகிரா பக்கத்தில் அமர்ந்தான். அப்படியொன்னும் பக்கத்தில் பக்கத்தில் உரசி அமரும் சங்கடமில்லை. ஆனால் வளைவில் வேகத்தில் திரும்பும் சமயம் இஷான் தோள்கள் துகிரா தோள்கள் உரசி கொண்டது.

   துகிரா கூடுமானளவு தள்ளி அமர, இஷானோ “அமுலு நீ நடுவுல உட்காரு.” என்று பிடித்து அமர வைத்திருந்தான். தேவையற்ற உரசல்களை தவிர்க்க நினைத்தான்

“அப்பா பசிக்கு” என்றதும், துகிராவோ “எங்கயாவது டீக்கடையில் பால் இருந்தா கூட போதும்” என்று கூற, இஷானோ துகிராவை ‘சொல்லிட்டல்ல நிறுத்திக்கோ’ என்ற பார்வையை சாடிவிட்டு கார் டிரைவரிடம், கூறினான்.‌

  அவரும் ஒரு குட்டி உணவகத்தில் நிறுத்தினார். டிரைவரோடு சேர்த்து நால்வரும் டீ குடிக்க இறங்கினார்கள்.

  அங்கே யாரேனும் சென்று வாங்கி வந்து அமர்ந்து குடிக்கும் விதமாக இருக்க, இஷான் தான் எழுந்து சென்றான். அங்கு சென்றதும் இஷான் துகிராவுக்கு காபியா டீயா என்று தொரியாமல், “அமுலு உங்கம்மாவுக்கு காபியா? டீயா?” என்று கேட்டான்.
  “அம்மா டீ தான் குடிப்பாங்க” என்று அமுல்யா கூற மூன்று டீ ஒரு பால் வாங்கி வந்திருந்தனர்.
  அதற்குள் துகிரா மில்க் பிஸ்கேட் ஒன்றை நீட்டி, “அம்மு உங்கப்பாவிடம் இதுக்கும் சேர்த்து பில் போட சொல்லிடு” என்று கூறிவிட்டு அமுல்யாவையும் அழைத்து வந்து சூடான பாலை ஆற்றினாள்.

“எவ்ளோ நேரம் ஆத்தற. குடிச்சிட்டு கிளம்பணும்” என்று அவசரப்படுத்த, “என் அம்முக்கு சூடான பால் பிடிக்காது. நல்லா ஆத்தி தான் தரமுடியும்” என்று கூற, இஷானோ ‘பச் வீட்ல இருந்தா இவளிடம் பேசவே அவசியம் இருக்காது. வெளியே வந்தா எப்படியாவது இவளிடம் தான் பேச வேண்டிய கட்டாயம்னு அம்மா பிளான் பண்ணி அனுப்பிட்டாங்க’ என்று குமைந்தான்.

   நிதானமாக அமுல்யா பிஸ்கேட்டை பாலில் தொட்டு சுவைத்து வயிறு நிரம்ப, அந்த வாஷ்பேஷனில் வாய் கொப்பளிக்க வைத்து, சேலை முந்தானையில் துடைத்து அழைத்துவர, இஷான் காரிலிருந்தபடி இருவரையும் கண்டு புன்முறுவல் புரிந்தான்.

  இஷான் மனதில் மனைவி துர்கா, மகள் அமுல்யா என்று பதிவாக, துகிராவின் முகமாற்றம் கண்டு தான் துகிராயென்று சுதாரிப்பான்.‌

  மீண்டும் கார் பயணத்தில், ஏறியதும் அமுல்யா குட்டி தூக்கம் போட, துகிராவும் அமுல்யாவை பொம்மை போல கட்டிப்பிடித்து உறங்கி வழிந்தாள்.

    நடுவில் ‘ஊட்டி உங்களை அன்புடன் வரவேற்கின்றது’ என்ற பலகையை கடந்த பொழுது, இஷான் இருவரையும் பார்த்து ‘தூங்கு மூச்சி அமுலு பாப்பா’ என்று அமுல்யாவை பார்த்து கூறிவிட்டு இயற்கையை வேடிக்கை பார்த்தான். அவனுக்குள் துர்காவோடு வந்த நாட்கள் அசைப்போட மனதை தொலைத்தான். 

   தங்க வேண்டிய ஹோட்டலுக்கு  வந்ததும், ஆன்லைன் மூலமாக ரூம் புக் செய்த இடத்தில், இறங்கிவிட்டு, திரும்ப துகிராவும் உறங்கியபடியிருந்தாள்.

‘ஓ காட்… அமுலு மட்டும்னா நானே எழுப்புவேன். இதென்ன இவளும் சேர்ந்து தூங்கறா’ என்று “அமுலு… அமுல்யா.. அமுலு… இடம் வந்துடுச்சு இறங்கணும்” என்று எழுப்ப, அமுல்யாவோ துகிராவை கட்டித்கொண்டு ‘டூ மினிட்ஸ் டேடி” என்று துகிராவிடமிருந்து பிரியாமல் பதில் தந்தாள்.

‘கார் டிரைவரோ ”சார் டிராபிக் ஆகும். சட்டுனு மேடத்தை எழுப்புங்க சார்” என்று கூற, இஷான் தயங்கியபடி, “துகிரா‌… துகிரா” என்று கூப்பிட, அசையாமல் இருந்தாள்.

  ”ஏய்… துகிரா” என்று கையை பிடித்து கிள்ள, “என்ன..‌ ஏன் கிள்ளறிங்க” என்று சுணங்கி எழுந்தாள்.

கையை தேய்த்தபடி, அமுல்யாவை தூக்கிக் கொண்டு இறங்கினாள் துகிரா.

  இஷானோ கிள்ளிவிட்டதற்கு துகிராவின் வினையை கவனித்தாலும், ஹோட்டலில் ரூம் புக் செய்த கீயை கேட்டு நின்றான்.‌

  ‘கீயை கொடுத்த ரிசப்ஷனிஸ்ட் ‘இரண்டாம் ஹனிமூனுக்கு ஆங்கிலத்தில் வாழ்த்து தெரிவிக்க, இஷான் ‘இது வேறயா?’ என்று கண்டுகொள்ளாமல் செல்ல, துகிராவோ வெளிறிய முகத்தோடு அமுல்யாவின் இழுப்புக்கு சேர்ந்து நடந்தாள். 

-தொடரும். 

பிரவீணா தங்கராஜ்  

Happy New Year Readers

புதுக்கதை அல்லது ரீரன் உங்கள் வாசிப்புக்கு நாளை வந்துடும்.

10 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-24”

  1. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்க ராஜ்
    (அத்தியாயம் – 24)

    எனக்கென்னவோ, இந்த இஷான் ஊட்டியை விட்டு போறதுக்குள்ள துகிராவோட ஹனிமூன் கொண்டாடிடுவான்னு தோணுது. யார், யார் பெட் கட்ட வரிங்க…? ஏன்னா, சிச்சுவேஷன் அப்படித்தான் போகுது. தவிர, காதுல
    “கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா…
    கண்டபடி கட்டிப்புடிடா”
    சாங் தான் பேக் கர்வுண்ட்ல கேட்டுக்கிட்டே இருக்குது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!