Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-27 (முடிவுற்றது)

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-27 (முடிவுற்றது)

அத்தியாயம்-27

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   தன் செய்கையில், மன்னிப்பு கேட்டும் விலகி சென்ற துகிராவை எண்ணி இஷான் கலங்கிவிட்டான்.
  ‘சீ இவ்வளவு தான் துர்கா அக்கா மீது நீ வைத்த காதலா?’ என்று எண்ணி தவிர்ப்பதாக இஷான் நினைக்க, துகிரா மயங்கி சரிந்தாள்.

    “அப்பா… அம்மா விழுந்துட்டாங்க” என்று அழைக்க, துகிரா சரிந்திருக்க, மடியில் வைத்து எழுப்ப முயன்றான்.

  உதடு தந்தியடிக்க, உடல் உதறியது, துகிராவை உடனே மருத்துவமனைக்கு அழைத்திட, காரில் ஏற்றியிருக்க, சற்று நேரத்திலேயே, “காரை நிறுத்துங்க” என்று கூறி வாந்தி எடுத்து முடித்திருந்தாள். நேற்றிரவு சாப்பிட்ட பரோட்டா ஜீரணமாகாமல் வாந்தி எடுத்து முடித்ததும் முகத்தில் வேர்வை அரும்பியது. அவள் காலையில் விழுங்கிய மாத்திரையும் அப்படியே வந்திருக்க, இஷானோ தண்ணீரை நீட்டினான்.

முகம் அலம்பி, இஷானை பார்வையிட, “வாமிட் வருதுன்னு தான் என்னிடமிருந்து பதில் பேசாம ஓடினியா?” என்று கேட்க, துகிராவோ திருட்டு முழியில் காரில் ஏற, இஷானுக்கு லேசான சிரிப்பு வந்து ஒட்டிக்கொண்டது.

  “அம்மா ஓகேவா?” என்று அமுல்யா இன்னமும் பதட்டமாய் கேட்டு முடிக்க, “ஓகேடா.” என்று கூற, “டேடி நம்ம ரூமுக்கே போயிடலாம். மம்மி முகமே டல்லாயிடுச்சு. பாருங்க நீங்க நிறைய பேசியும் அவங்க கொஞ்சமா பேசறாங்க” என்று அவள் கவனித்ததை வைத்து கூறினாள்.

  “ரூமுக்கே போயிடலாம்.” என்று அமுல்யாவிடம் ஆமோதிப்பாய் கூறியவன், துகிராவுக்கு சாக்லெட் எடுத்து நீட்டினான்.‌

  இஷானின் புன்னகையை துகிராவும் கண்டதால் வாங்கிக்கொண்டாள். இனிப்பு சுவைக்கவும், அமுல்யாவோ “டேடி… அந்த சாக்கி எனக்குன்னு சொன்னிங்க. இப்ப மம்மிக்கு கொடுத்திட்டிங்க?” என்று இடையில் கேட்க இஷானோ “பஸ்ட் டைம் உங்க மம்மிக்கு சாக்கி தந்துயிருக்கேன். அவளே சாப்பிடட்டும். உனக்கு பெரிய கேன்டி” என்று குழந்தையை சமாளிக்க கூற, துகிராவோ, “அம்மாவுக்கு இந்த சாக்கி போதும். நாம ஷேர் பண்ணிக்கலாம்” என்று பிரித்து தந்தாள்.
 
இஷானோ துகிராவை கண்ணெடுக்காமல் பார்வையிட, “ஏதாவது ஹோட்டல்ல நிறுத்துங்க சாப்பிட்டுட்டு டெப்ளெட் போட்டுட்டு ரூமுக்கு போகலாம்.” என்றதும் ஹோட்டலுக்கு வந்தார்கள். துகிராவுக்கு இஷான் மன்னிப்பு கேட்டதும் அவன் உதடு லேசாக முறுவலில் திளைத்ததும் அத்தனை ஆறுதல். ஒருவேளை அமுல்யா இல்லாமல், பொதுயிடமாகவும் இவளது உடல்நலமும் நல்விதமாக இருந்தால், இவளே இன்னமும் சுமூகமாக பேசியிருப்பாளோ என்னவோ!?

   மினி மீல்ஸ் துகிரா ஆர்டர் செய்ய, இஷான் ஒருபக்கம் பிரியாணி வாங்கி மகளோடு பங்கிட்டு உணவருந்தினார்கள்.
 
  இம்முறையும் மாத்திரை விழுங்க சென்ற துகிராவை தடுத்து, ஹாட் வாட்டர் கேட்டு, அதில் மாத்திரையை போட கூறினான்.
  துகிராவும் அவ்வாறே செய்தாள். “ஊர்சுத்தி பார்க்கறதா இருந்தா போகலாம். என்னால எதுவும் தடையாக வேண்டாம்” என்றாள் துகிரா. மகளுக்காக தானே இங்கே அழைத்து வந்தான். டிக்கெட் எடுக்கும் முன், பைரவி தன்னையும் கூட போக கண்டிக்கும் முன் குழந்தை விடுமுறைக்காக தானே எண்ணினான்.

  “நீயும் என் பேமிலி தானே? ரெஸ்ட் எடு. லீவு இருபது நாள். இன்னியோட மூன்று நாள் தான் போயிருக்கு. மீதி நாட்கள் வரை இங்க தான் சுத்தப்போறோம்.” என்றான் கனிவாக.

  அறைக்கு வந்து சேர, வீட்டிலிருந்து கொண்டு வந்த வீடியோ கேம் பிளேயரை டிவியில் மாட்டிவிட்டு அமுல்யா விளையாட, துகிராவோ  உடைமாற்றி முகமலம்பி மாத்திரை விழுங்கியதால் உறங்கினாள்.

  இஷானோ, நீண்ட வருடங்களுக்கு பிறகு, நிம்மதியாக உணர்ந்தான்.
  
   அவன் இங்கு வந்தப்பொழுது கூட, மனதில் துகிராவுடன் முன்பு பழகியதற்கு மன்னிப்பு கேட்டு, நட்போடு பழக, அடியெடுத்து வைக்க நினைத்ததே! ஆனால் அவளையே ஆக்கிரமித்து மேலும் தவறிழைத்தவனாக இஷான் துடித்து போனான். இறைவனோ ‘நட்பெல்லாம் உங்களுக்குள் வேண்டாம், கணவன் மனைவி பந்தமே சரியா உறவென்று’ இரவு மன்மதன அம்பை எய்து, இருவரின் காதலை மனம்விட்டு பேச வைத்தும் வேடிக்கை பார்த்து விட்டார். 
 
   இஷான் எண்ணியது போல துகிரா தன்னை வெறுக்கவில்லை என்றதிலேயே நிம்மதியடைந்தான். அதிலும் தன்னிலை உரைத்ததும் புரிந்துக்கொண்டாள் என்ற இதம், அவனுக்குள் புது மனிதனாக பாவிக்க வைத்தது. அதோடு அவளுக்கும் தன்னை பிடித்திருப்பதை அவன் அறிந்தான்.

   துகிராவும் போர்வை போர்த்தி உறங்க, இஷானும் மெத்தையில் படுத்துக் கொண்டு துகிராவையே பார்வையிட்டான்.

  துகிரா இமை திறக்காமல், ‘இப்படி என்னையே பார்த்துட்டு இருந்தா தூக்கம் வராது.” என்று எழுந்துக் கொள்ள, “எஸ்… உன்னையே பார்த்துட்டே இருந்தா தூக்கமே வராது.” என்றான் இஷான். அவன் குரலில் தேன் குழைத்து கூறியது போன்ற உணர்வில் துகிரா வெளியே பால்கனி பக்கம் வந்து சேர்ந்தாள்.

   இஷானும் பின்னாடியே வர, ”நான் இந்த வாழ்க்கையையே எதிர்பார்க்கல. அக்கா வாழ்க்கையை நிறுத்தி, அந்த வாழ்வில் நான் நுழைந்ததா தான் இப்பவும் தோனுது. எனக்கான வாழ்க்கையை நான்…” என்றவள் உதட்டை தன் வலது கரத்தால் தடையிட்டவன், “உனக்கான வாழ்க்கையை தான் நீ இனி வாழ போற. அதுல எந்த சந்தேகமும் வேண்டாம்.” என்றான் இஷான்.‌

  “எங்க.. ஐ லவ் யூ துகிரானு சொல்லுங்க பார்க்கலாம்‌” என்று கையை கட்டி கேட்டாள்.

  இஷானோ ‘இப்படி கேட்டா எப்படி?’ என்று பார்வையில் திணறினான்.‌

   “உங்களுக்கு நேத்து நடந்த நிகழ்ச்சியில் தப்பு பண்ணிட்டோம்னு பதட்டத்தில் மன்னிப்பு கேட்கறிங்க. அதோட இதுவும் காதல்ல நிகழ்கின்றதா, பூசி மொழுக பார்க்காதிங்க. நீங்க என்னை தூக்கிட்டு வர்றப்ப, துர்கா அக்காவா நினைச்சிங்க என்பது உண்மை. கடைசி நிமிடத்துல துகிராவா போச்சேனு துடிச்சிங்க” என்று அழுதவளை சமாதானம் செய்ய இயலாது துவண்டான்.

  ”நான் உங்களை குற்றம் சுமத்த விரும்பலை. ஒரே உருவத்துல உரிமையா பெட்ல இருந்ததும் உங்க மனசு தடுமாறியிருக்கலாம். துர்கானு கனவுல வாழ்ந்த நீங்க, சட்டுனு துகிரானு நினைக்க கஷ்டமாயிருக்கும். ஆனா நேத்துலயிருந்து உங்க மனசுல துர்கா அக்காவை விட இந்த துகிரா ஆட்சி செய்யறா. எனக்கு அதுவும் தெளிவா தெரியுது.
  இந்த மாற்றமே பெரிய விஷயம் தான்.” என்று மூக்குறிந்து கூற, இஷான் மெதுவாக தலையாட்டி அவள் பேச்சை ஆமோதித்தான்.

அவள் கூறியது நூறு சதம் உண்மையே. அதற்காக தாலி கட்டிவிட்டு துகிராவை தள்ளி நிறுத்தி, அவள் வாழ்க்கையில் அமுல்யாவுக்கு அம்மாவாக மட்டுமே வாழும் தியாக சுடராக பாவிக்கவும் மனமில்லை.
  அவனவன் மனைவி இறந்தால் அடுத்து புதுமாப்பிள்ளையாக மாறுகின்றான். இங்கே ஆறு வருடங்கள் தவவாழ்க்கையை தான் வாழ்ந்தான் இஷான். எந்த பெண்ணிடமும் தன் மோகத்தை தீர்க்கவும் சென்றதில்லை‌யே..!
 
   இதற்கிடையே காபி பருகினார்கள் குழந்தையை அழைத்து மெதுவாக வாக்கிங் சென்றார்கள். அழகான குடும்பம் சற்று துகிரா இஷான் தங்கள் பேச்சை புரிதலோடு ஆரம்பிக்க முயன்றார்கள்.

  இரவு ”அம்மா.. நான் இன்னிக்கு இந்த பெட்ல படுக்கவா?” என்று கேட்க, துகிராவோ திணறி போய் மறுக்க பார்க்க, இஷானோ ”அம்மா பயப்படுவா. வேண்டாம்னு சொல்வா பாரு.” என்று இஷான் கமுக்கமாய் சிரிக்க, துகிராவோ முட்டைக்கண்ணில் அவனை  முறைத்துவிட்டு, “அதெல்லாம் வேண்டாம். இங்கயே படு” என்று அதட்டினாள்.

“டேடி… நீங்க சொல்லுங்க‌. மம்மி இப்படி தான்.” என்று தந்தையிடம் சலுகை கேட்டு நின்றாள்.

  இஷானோ “நீ பஸ்ட் ஸ்டாண்டர்ட் எல்லாம் போறிங்க. தனியா படுக்கலாம். பக்கா‌” என்று பகளை ஏற்றிவிட, அமுல்யாவோ குத்தாட்டம் போட்டு அங்கே சென்று படுத்தாள்.

  “அம்மு… நைட்டு அழுவ. மரியாதையா இங்கயே படு” என்று துகிரா மிரட்ட, “நோ மம்மி. நீ என்னோடவே இருக்கன்னு தெரிந்தாலே நான் அழமாட்டேன். அன்னிக்கு கூட பிரதன்யா அத்தை கூட தூங்கினேன் நினைவிருக்கா.” என்றாள். துகிரா எப்படி மறப்பாள் அன்று முதலிரவு நாட்களென்று பைரவி அத்தை பால் டம்ளரை கையில் கொடுத்து அனுப்பினார்களே!

  இன்று இஷானின் பார்வை பேச்சு சிரிப்பு என்று மாறியிருக்க, திகிலாக தான் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில், அமுல்யாவை அதிகமாக வற்புறுத்த இயலாது. அதோடு நேற்று நடந்துமுடிந்த  கலவரம் நினைவு வந்தது. இஷானுக்கு தன் பெண்மை தேவை என்றால் மறுக்கும் பேதையும் இல்லை.

இரவு உணவை விழுங்கி, கொஞ்சம் அப்பா மகள் கதை பேசினார்கள். துகிராவும் அதில் கலந்துக் கொண்டாள். இதில் வீடியோ காலில் வேறு இஷான் துகிரா அருகே, அமர்ந்து பேச, துகிராவோ பைரவி அத்தை பார்க்க வேண்டுமென்றே இப்படி செய்வதை அறிந்து அமுல்யா தேடி அவள் நுழுவ, இஷானோ “அம்மா… இன்னிக்கு எடுத்த செல்ஃபி எல்லாம் அனுப்பறேன்‌ பாருங்க” என்று இலைமறை செய்தியாக உரைத்தான். அவர்கள் அதை சரியாக காதில் வாங்கினார்களோ இல்லையோ, அனுப்பிய புகைப்படம் எல்லாம் மூன்று பேர் சேர்ந்திருந்தவை மட்டுமே. 

பைரவியோ “உங்கண்ணா முகமும், அந்த துகிரா முகமும் பாரு. ஏதோ சோகத்தை முகத்தில் அப்பி வச்ச மாதிரி‌” என்று குறைப்பட்டார். எல்லாவற்றையும் புகைப்படமே விளக்கி விடுமா என்ன? இன்று எடுத்தவை எல்லாம், இஷான் குற்றவுணர்விலும், துகிரா உஞல் அசதியிலும் இருந்த புகைப்படமே.

    துகிராவுக்கு ஜுரமும் மட்டுப்பட்டுயிருந்தது. இரவு அவ்வளவு சொல்லியும் அமுல்யா தனியாக படுத்துறங்க செல்ல, துகிராவோ, மாத்திரை விழுங்கி படுக்க சென்றாள்.

நேரங்கள் நகர, துகிராவை அணைத்திருந்தது இஷான் கைகள்.

  “துகிரா… துகிரா.. ஏதோ.. ஒரு வார்த்தை கேட்டியே… அதை சொல்லு.. இப்ப சொல்லறேன்.” என்று ஆரம்பிக்க, “அவளோ நெளிந்தபடி, “எனக்கு மறந்துடுச்சு” என்றாள்.

  “எனக்கு மறக்கலை டி.” என்று கூற, “சரி. கையை எடுங்க. அமுல்யா எந்திரிச்சிடுவா. எனக்கு பயமாயிருக்கு” என்றாள். அவன் ஆசையும் பேச்சும் புரிந்தப்பின்னும்.

  “அவ தூங்கினா நடுவுல எந்திரிக்க மாட்டா. நீ இந்த ரூம்ல இல்லைனா  எந்திரிக்கலாம். அவளை விட்டு தனியா போக கூடாதுன்னு என்னோட உன்னை கல்யாணம் செய்து வைக்க, இல்லாத அடம் பிடிச்சாளே” என்று துகிரா உதட்டை தீண்ட, இஷானின் கைகள் தன் அங்கத்தில் ஊர்ந்து சென்று, பெண்மையை விழித்திட செய்தது.

  மெதுவாக இஷான் பக்கம் துகிராவை திருப்பி தன் முத்தத்தின் பல விதத்தை, வித்தையாக பரிமாற, அன்பை நிறைக்க முயன்றான்.‌ இனி வாழ்க்கை இல்லறத்தையும் நல்கியாக வேண்டியது தானே!?

  வன்மையும் மென்மையும் போட்டி போட்டு இஷான் துகிராவை மையலிட்ட பொழுது, “துகிரா.. ஐ லவ்யூ.” என்று செவிமடல் சூடேற, காதல் யுத்தம் செய்தவனாக மனதை நிறைத்தான்.‌

  நேற்றைய அழுகை எல்லாம் மாறி, இஷானின் செல்ல கடிகளை கூட, சுகமாய் ஏற்றவளாக துகிரா ஆனந்தப்பட்டாள்.

    ஆனந்தங்கள் கட்டுக்குள் உண்டு என்பது போல யுத்தங்கள் இனிதாய் முடிவடைந்தப் பின்னும் இஷான் துகிராவை அணைத்துக் கொண்டு துயில் கொண்டான்.

  அடுத்தடுத்த நாட்கள் இங்கிருந்த  விடுமுறை நாட்கள் எல்லாம் பகலில் அமுல்யாவுக்கு ஊட்டியை சுற்றி காண்பித்தும், இரவில் துகிராவோடு இரண்டாம் தேன்நிலவை கொண்டாடினான் இஷான். துகிராவுக்கும் முதல் தேன்நிலவாக அமைந்தது ஊட்டியில்…

   சென்னை திரும்பி வந்தப்பொழுது, பிரதன்யாவுக்கு கைப்பையும், உடையும், சாக்லேட்டும், வளையலும் என்று அள்ளிக் கொண்டு வந்திருக்க, ரிஷியின் காதலி அஞ்சனாவுக்கும், பிரதன்யாவுக்கு வாங்கியது போலவே துகிரா தரவும், “அண்ணி தேங்க்யூ.” என்றாள் பிரதன்யா. 

ரிஷியோ “எதுவும் எனக்கில்லையா அண்ணி” என்று தேட, இஷானோ “அரியர் வச்சதை க்ளியர் பண்ணு, அஞ்சனாவையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.” என்று வாறினான் இஷான்.

  “துகிரா… அம்மாவுக்கு மூட்டு வலி தைலம் வாங்கினியே, எதுல வச்ச?” என்று இஷான் உரிமையாக கூப்பிட, “அமுல்யா அது அவளோட கிஃப்ட்னு அவ தான் அவ பாட்டிக்கு தருவேன்னு சொல்லிருந்தா. அவ பையில இருக்கும்” என்றாள்.

  பைரவியோ இஷானும் துகிராவும் இயல்பாய் பேசியதை கவனித்து துகிராவிடம், “என்ன மேஜிக் இது?” என்று கேட்க, “நீங்க தானே மஞ்ச கயிறு மேஜிக் நடக்கும்னு பிளான் போட்டது. அந்த மேஜிக் வொர்க்கவுட் ஆகிடுச்சு.” என்று வெட்கம் கொண்டாள்.
  இதற்கு மேல் பைரவிக்கு வேறென்ன வேண்டும். ரிஷி திருமணம் முடிய, அடுத்து பிரதன்யாவுக்கு நல்ல வரன் தேட வேண்டும், எப்படியும் இனி எல்லாம் சுபமாக அமையுமென்று பைரவிக்கு தோன்ற இறைவனுக்கு நன்றி நவில்ந்தார்.

  அமுல்யா கேட்ட குட்டி மெத்தை சரியாக வந்திறங்கவும், அமுல்யாவோ “சித்தா, அத்தை இங்க பாருங்க. எனக்கு தனி பெட்.” என்று குதூகலிக்க, “அண்ணி அண்ணா… ஊட்டிக்கு போயிட்டு வந்தப்ப தான் அமுல்யா பிறந்தா. இப்ப ஒரு அமுதனை எதிர்பார்க்கலாமா?!” என்று கேட்டு துகிராவை வெட்கம் கொள்ள வைத்தாள் பிரதன்யா.

 ”கொழுந்தனார் மேரேஜ் முடியவும், நாத்தனாரை வீட்டை விட்டு துரத்தணும்.” என்று துகிராவோ சமாளித்து ஓடினாள்.

    இஷான் துகிரா அறைக்கு வந்து சேர, அமுல்யா இன்னமும் பிரதன்யாவிடம் தன் பொருட்களை கடைப்பரப்பி விளக்க ஆரம்பித்திருந்தாள். 

  துகிராவின் கையை பிடித்து, முத்தமிட்ட இஷானோ, “இங்க வீட்ல எல்லாரும் ஹாப்பி. நீ ஹாப்பியா?” என்று கேட்டான்.‌

  “அப்பா அம்மா அக்கானு குடும்பத்தை இழந்து அமுல்யாவோட தனியா அனாதையா நின்றவ நான்.
கண்ணுக்கு அழகா கணவன்,  நாத்தனார், கொழுந்தனார், மாமியார்னு இத்தனை சொந்தம் அமைந்திடுச்சு. இதுக்கு மேல என்ன வேண்டும்.” என்றாள் ஆனந்தமாய் அவன் நெஞ்சில் சாய்ந்தபடி.

  “இதுக்கு மேல ஒரு பையன் வேண்டும். ஒரு பொண்ணு ஒரு பையன். பொண்ணு ஆல்ரெடி இருக்கா. பையன் மட்டும்… அதுவும்… உடனே வேண்டாம்… உன் பிரெண்ட் மெர்ஸி கல்யாணம் மூன்று மாசம் இருக்கா? அதுக்குள்ள..‌. ரெடி பண்ணுவோம்” என்று கூற, துகிராவோ, “ஆசை தான்” என்று இஷானின் நெஞ்சில் இடிக்க, “ஆசையில்ல… பேராசை… கண்ணாடி நெஞ்சம் தாள்ளாடதே… உன்னை பார்த்து.” என்று துகிரா இடைவளைத்து இதயம் நுழைந்த கள்வனாய் கணவனாய் இஷான் அன்பெனும் கடலில் மையலிட்டான்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.  

இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை. 

-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்



12 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-27 (முடிவுற்றது)”

  1. Kalidevi

    Oru kanavan manaiviku sariyana purithal first Venum antha purithalum porumaium iruntha kandipa life nalla pogum athu than Inga nadanthuchi periya anga ethum summa solla matanga illaya .

    வாழ்த்துக்கள் சகோதரி
    Unga kathaigal itheari vanthuten iruka valthukkal. Ivlo sikram mudipinga ethirpakala taknu mudichitinga adutha puthu kathai ready agi irukum ethir pakuren.

    Competition vaikalaye romba naal achi ethum plan illaya iruntha sollunga kalanthukalam

  2. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்க ராஜ்
    (அத்தியாயம் – 27 Final)

    இஷானுக்கு இது ரெண்டாம் தேனிலவு மட்டுமில்லை, ரெண்டாவது மனைவியோட அவனுக்கும் இது முதல் தேனிலவுத் தான். கரெக்ட்டா.
    எப்படியோ, முசுடன் இறங்கி வந்துட்டானே. ஆனானப்பட்ட விசுவாமித்திரரே மேனகாவுக்கு மயங்குறச்ச,
    இஷான் துகிராவுக்கு மயங்குனது ஒண்ணும் அதிசயமில்லை. ஆனா, மயங்கி கீழ விழுந்தும் மீசையில மண் ஒட்டலைன்னு இன்னும் ஸீனை போட்டான் பாருங்க.. அதைத்தான் என்னோட லிட்டில் ஹார்ட் ஏத்துக்கவே இல்லை, ஒரே சிப்பு சிப்பா வருது.
    😀😀😀
    அட ராமா..! துர்காவை இஷானே மறந்தாலும், நீங்க மறக்க விடமாட்டிங்க போல. அங்க பாருங்க, இஷான் துர்கான்னு கூப்பிட்டு மூட்டுவலி தைலத்தை கேட்குறதா எழுதியிருக்கிங்க.
    இந்த இடத்துல துகிரான்னுத்
    தானே எமுதனும். மாத்துங்க, மாத்துங்க உடனே மாத்துங்க.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  4. Dharshini

    Super sis semma story 😘😍 very nice characters oru azhagana family and mamiyar character super pa also good nathanar evlo azhagana love super sis 👍👌 seekirama next story podunga sis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!