Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-4

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-4

அத்தியாயம்-4

    இஷான் தன் மகளை காரில் அழைத்து வந்தவன், மதியம் உணவு நேரம் நெருங்க, ப்ரைட் ரைஸ் வாங்கினான். எப்படியும் ஹோட்டலில் சென்று ஆற அமர சாப்பிட்டு கொஞ்சி பேசும் அளவிற்கு மகள் நிலை இல்லை என்று புரிந்தது. அதனால் உறக்கத்தில் இருக்கும் போதே மத்திய தரத்தில் இருக்கும் உணவகத்தில் பேக்கிங் வாங்கினான்.
  கார் கதவை திறக்க, “மம்மி… மம்மிகிட்ட என்னை விட்டுடுங்க.” என்று இஷானை பார்த்து பயந்தாள்.

அவனோ “அமுல்யா… நான் உன் அப்பா. என்னை பார்த்து பயப்படாத. இங்க பாரு ப்ரைட் ரைஸ் வாங்கியிருக்கேன். அப்பாவும் நீயும் சாப்பிடலாமா? அப்பா ஊட்டி விடவா?” என்று ஸ்பூனால் ஊட்ட முன்வந்தான்.

  “நோ… நீங்க என் அப்பா இல்லை. மம்மி சார்லஸ் அப்பாவை தான் மேரேஜ் பண்ண போறாங்க.” என்று தகவல் கூற, இஷானுக்கு கழுத்து நரம்பு புடைத்தது.
  தன் மகள் யாரோ ஒரு சார்லஸ் என்றவனை அப்பா என்கின்றாளே?!
   இந்த துகிரா கட்டிக்க போகும் நபராக இருக்க வேண்டுமென்று யூகித்தாலும் மகள் கண்டவனை எல்லாம் அப்பா என்றதில் விருப்பமின்றி, “அமுல்யா.. உன் அப்பா நான் தான். இனி அப்பா சொல்வதை கேட்டு வளரு. இந்தா இதை சாப்பிடு” என்று தர, “ஸ்டேன்ஜர் யார் கொடுத்தாலும் மம்மி சாப்பிட கூடாதுன்னு சொன்னாங்க. நீங்க ஸ்டேஞ்சர்” என்று விம்மி கூற இஷானின் மனம் ரணத்தை வாட்டியது.
  அந்த கோபமெல்லாம் துகிரா மீது திரும்பியது. “இதை சாப்பிடு” என்று ஆணையிட குழந்தை மறுக்க, இப்ப நீ  சாப்பிடலை உங்க அம்மா உன்னை பார்க்க வரமாட்டா. அப்படியே வந்தாலும் பார்க்க விடமாட்டேன்.” என்று மிரட்ட, அந்த மிரட்டல் வேலை செய்தது.

  அமுல்யா ப்ரைட் ரைஸ் வாங்கி கொஞ்சம் போல சுவைத்தாள்.

  அவள் தேம்பியபடி, உணவை விழுங்கும் அழகை ரசித்த இஷானிடம், “எனக்கு போதும் வயிறு ஃபுல்லாகிடுச்சு” என்று தர, ஏதோ தேவாமிர்தம் போல வாங்கி மகள் மீதி வைத்த உணவை உண்டான். 

       நேற்று இரவிலிருந்து சாப்பிடாததாலும், மகள் தந்த உணவென்றதாலும் ஒரு பருக்கை மிச்சமின்றி விழுங்கி தண்ணிரை குடித்தான்.
அதன்பின் வண்டியை இயக்கினான்.

   “மம்மி என்னை பார்க்க வருவாங்க தானே?” என்று கேட்க, பயணத்தில் அழுகையை தவிர்க்க, “வருவா” என்று பதில் தந்தான்.

  குழந்தை அமுல்யாவோ சோகமாய் மாறி வேடிக்கையில் மூழ்கினாள்.
  முன்பு போலவே நீண்ட தூர பயணம் என்றதால் உறங்கிவிட்டாள். இஷான் மகளின் தலைகோதி அன்னையிடம் காட்டும் வேகத்தில் இயக்கினான்.

  இஷானை போல ஏசி பஸ் வேகமெடுக்குமா? பொறுமையாக மதிய உணவு சாப்பிட ஒரு ஹோட்டலில் நிறுத்தி வந்தது. ஆங்காங்கே பயணியரை நிறுத்தி இறக்கிவிட்டு புது பயணியை ஏற்றிக்கொண்டு புறப்பட நேரம் கூடுதலானது.

   இரவு எட்டு பத்தாக இஷான் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவனிருக்கும் இருப்பிடம் வரவுமே, அன்னைக்கு தெரிவித்திருக்க, பைரவி, தங்கை பிரதன்யா, தம்பி ரிஷி என்று காத்திருக்க, வாசலில் கார் வரவும் ஆரத்தி தட்டெல்லாம் கரைத்து வரவேற்க ஓடிவந்தார்கள்.

  குழந்தை புதுவீட்டை கண்டு மிரண்டு நின்றாள். கூடுதலாக புது மனிதர்களை கண்டும் அஞ்சினாள்.

இஷானோ “அப்பாவிடம் வா” என்று கையை நீட்ட, “நீங்க என் அப்பா இல்லை‌” என்று தெளிவாக கூறி முடிக்க, பிரதன்யாவோ “செல்லக்குட்டி அத்தையிடம் வாங்க” என்று தூக்கி கொண்டாள்.

அம்மா துகிரா போல ஒரு பெண் என்றதும், கனிவாக அழைத்து முத்தமிட்டு கொஞ்சவும் அமுல்யா பிரதன்யாவை அச்சமின்றி ஆராயும் பார்வையுடன் பார்த்தாள்.

“அமுல்யா” என்று ரிஷி கூப்பிட, அவனையும் ஏலியனை பார்த்தது போல விலகினாள்.
  பைரவியோ “அம்மாடி… பாட்டிடா” என்று கையை நீட்ட, பிரதன்யா தோளில் முகம் திருப்பிக் கொண்டாள்‌.

  “பிரதன்யா… குழந்தையை அழைச்சிட்டு போ” என்று இஷான் உத்தரவிட, ஆரத்தி சுற்றப்பட்டு உள்ளே அழைத்து வந்தாள்.

“ஏதாவது சாப்பிடறியா” என்று கேட்க, “தண்ணி வேணும்.” என்றாள்‌ மிரட்சியாக.
  
  உடனடியாக இஷான் கொண்டு வந்து ஒரு பணியாட்களை போல நீட்ட, வாங்க மறுத்தாள் அமுல்யா.

  பிரதன்யா தான் அண்ணனிடமிருந்து வாங்கி நீரை புகட்டினாள்.
     “துர்கா வரலையாடா?” என்றதும், இஷான் மகளை பார்த்தவாறு, “துர்கா நமக்கு வந்த தகவல்படி முன்னவே இறந்துட்டாம்மா. அவ அப்பா அம்மாவோட இறந்ததா காட்டப்பட்டது துர்கா தான். அந்த வீடு இடிந்து விழுந்தப்ப துர்கா உயிர் போயிடுச்சு. ஆனா வயிற்றுலயிருந்த குழந்தை உயிரோட இருக்கவும் அமுல்யா உயிர் பிழைச்சிட்டா.
   இத்தனை நாளா துர்காவோட தங்கை துகிராவிடம் குழந்தை வளர்ந்திருக்கு. அவளை தான் அம்மானு சொல்லிட்டு இருக்கா. நாம அந்த வீடியோவில் பார்த்ததும் துர்கா தங்கை துகிராவை தான்‌ துர்காவா நினைச்சிட்டோம்” என்று கூறினான்.

  “அப்ப… துர்கா செத்தவ திரும்பி வரமாட்டா அப்படி தானே?” என்று கேட்க, “வரமாட்டாம்மா, என்னை தனியா தவிக்க விட்டு அவ போயிட்டா. இப்ப அமுல்யா தான் என் உலகம்” என்று மகளை முத்தமிட வர, அவளோ அவசரமாய் பிரதன்யாவை கழுத்தை கட்டிக்கொண்டு இஷானை விலகி நிறுத்தினாள்‌.

  “இப்படிதாம்மா… என்னை கண்டு ஒதுங்கி போறா” என்று குறைப்பட, பைரவியோ, “அந்த பொண்ணு துகிராவிடம் என்ன சொல்லி என் பேத்தியை அழைச்சிட்டு வந்த?” என்று குழந்தையின் முடியை ஒதுக்கி கேட்டார். 

  “என்ன சொல்லணும்? என் குழந்தையை கூட்டிட்டு வர அவளிடம் அனுமதி கேட்கணுமா? அவ என் குழந்தையை தரமுடியாது என்று பேசினா.  நான் குழந்தையை தூக்கிட்டு வந்துட்டேன். அந்த கலவரத்தில் துகிராவை கொஞ்சம் தள்ளி விட்டேன். அதுல அமுல்யா பயப்படறா” என்று சிலதை மறைத்து முன் மொழிந்தான்.‌

  “அதனால் தான் குழந்தை உன்னை கண்டு மிரளுறா. நீ போய் டிரஸ் மாத்து. நான் குழந்தையை பார்த்துக்கறேன்.” என்றார் பைரவி.

  “அவ காலையிலிருந்து குளிக்கலை. வந்த அலுப்பு வேற.” என்று மகளை குளிக்க வைக்க முன்வர, அமுல்யாவோ பிரதன்யா மீது இரண்டு காலையும் தூக்கி போட்டு இன்னமும் கழுத்தை கட்டிக்கொண்டாள் .

  இஷானுக்கு இதயம் வலித்தது. பைரவியோ, பிரதன்யா குளிக்க வைக்கட்டும். நீ ரெப்ரஷ் ஆகிட்டு வா.” என்று கூற மகளை விட்டு செல்வதற்கு யோசித்தவனாக சென்றான்.‌

ஏற்கனவே ரிஷி பிரதன்யா இருவருமே அண்ணன் குழந்தைக்கு இன்று காலை முதல் மதியம் வரை உடைகளையும் இதர விளையாட்டு பொம்மை, என்று நிறைய வாங்கி குவித்திருந்தனர்.
  பிரதன்யா தான் நைஸாக அழைத்து வந்து இந்த டிரஸ்ல உனக்கு எந்த டிரஸ் பிடிச்சிருக்கு. குளிச்சிட்டு எதை போடலாம்” என்று வாடட்ரேப் திறந்து பார்வையிட்டு கேட்க, அவ்வறையில் அமுல்யாவின் வயதிற்கான உடைகளே இருக்க, குழந்தை தேர்ந்தெடுக்க முடியாது அமைதியாக இருந்தாள்.

  “இந்த டிரஸ்ல மிக்கி மௌஸ் இருக்கு. இதுல பார்பி இருக்கு. இங்க பாரு இந்த டிரஸ்ல ஐஸ் க்ரீம், ஓ.. இங்க பாருங்க எமோஜியா இருக்கு.
  இந்த ரோஸ் நல்லாயிருக்கா? இந்த பேபி பிங்க் கலர்?
  ஆமா… உனக்கு எந்த கலர் பிடிக்கும்” என்று கேட்க, “ஸ்டாபெர்ரி ரெட்” என்றாள் அமுல்யா.

  “ஓ… அப்ப.. இந்த ரெட்கலர் டிரஸ் பிடிக்குமா?” என்று காட்ட, இலகுவான காட்டன் பூபோட்ட உடை, என்றதும் தலையாட்டினாள்.
பிரதன்யா தான் குளிக்க வைக்க பாத்ரூம் அழைத்து செல்ல, அமுல்யாவோ “நானே குளிப்பேன். எங்க மம்மி எனக்கு சொல்லி தந்திருக்காங்க” என்று பிரதன்யாவை வெளியே போக கூறினாள்.

  பிரதன்யாவோ வெளியே வந்து, “ரொம்ப சுட்டியா இருப்பா போலம்மா. நானே குளிச்சிப்பேன்னு சொல்லி என்னை வெளியே தள்ளிட்டா.” என்று பைரவியிடம் வந்து கூற, “நீ அவளை பார்த்து அழைச்சிட்டு வா. உன்னோட லேசா பழகறா. அதை மாத்திடாத” என்று கூற, “அம்மா அமுல்யா என் அண்ணன் குழந்தைம்மா. எப்படிம்மா விட்டுட்டு ஹாயா இருப்பேன். அண்ணா வீட்டுக்கு வந்து சிரிச்சி, பேசி, முன்ன போல மாறணும் அம்மா. அமுல்யாவால அண்ணா சந்தோஷப்படணும். வாழ்க்கையை ரசித்து வாழணும்” என்று கண்ணீரை துடைத்து கூறி “நான் போய் அமுல்யாவை பார்க்கறேன்” என்று மீண்டும் அறைக்கு வந்தாள்.

ரிஷியோ ஆணியடித்தது போல இருந்தான். பைரவியோ, தனியாக சிக்கிய ரிஷியை வறுத்தெடுத்திருக்க, அஞ்சனாவை பற்றி தெரிந்ததில் அமைதியாக… நல்லவனாக.. இருந்தான்.
 
  அமுல்யாவோ துண்டு கட்டி வந்து உடைமாற்ற, பிரதன்யா வரவும், “எங்க மம்மி எப்ப வருவாங்க. ஏன் என்னை இங்க கூட்டிட்டு வந்திங்க.” என்று வினாத்தொடுக்க, “இது உன் வீடு. அமுல்யா அப்ப இங்க தானே இருக்கணும்.” என்று கூற, “இந்த ரூம் இந்த டாய்ஸ் அந்த டிரஸ் எல்லாமே என்னுடையதா?” என்று கேட்க பிரதன்யா தலைவாறி ஹேர்பேண்ட் அணிவித்து, “ஆமா… இதெல்லாம் அமுல்யாவோடது.” என்று முத்தமிட, அமுல்யாவோ கன்னத்தை துடைத்து, “எங்க மம்மி என் கூட வந்து இது என் வீடுன்னு எப்ப சொல்வாங்க” என்று கேட்க, “அம்மா எல்லாம் வரமாட்டா. அவளோட வேலை முடிந்தது. இனி அப்பா கூட மட்டும் தான் இருப்ப. மம்மி டம்மி” என்று இஷான் ஈரத்தலையோடு வந்தான்.
 
  மம்மி டம்மி என்றதும் குழந்தையோ “இல்லை… எனக்கு மம்மி வேணும். அம்மா வேணும்.” என்றாள்.

   இஷான் கட்டன் ரைட்டாக தொழில் ரீதியாக பேசுவது போல பேச, குழந்தையோ விடாமல் “அம்மா வேண்டும். எனக்கு இந்த வீடு வேண்டாம். இந்த டாய்ஸ் வேண்டாம். துகிரா அம்மா மட்டும் போதும்.” என்று ஹெட்பேண்டை வேறு வீசியெறிய, பைரவி தலையில் பொம்மை பட்டு ‘ஸ்ஆ” என்று முனங்க இஷானுக்கோ கோபமேறியது.

  ‘துகிரா… அம்மாவாமே. என் குழந்தைக்கு அவள் அம்மாவா? என்ற கோபம் ஏறியது.
  அமுல்யா..‌ திரும்ப திரும்ப சொன்னதே சொல்லாத. துகிரா உன் அம்மா கிடையாது. உன் அம்மா துர்கா. இங்க பாரு.” என்று இஷானும் துர்காவும் சேர்ந்து எடுத்த திருமண புகைப்படத்தை காட்டினான்.

   அதில் துர்காவுக்கும் துகிராவுக்கும் வித்தியாசம் தெரியாத குழந்தையோ, அப்பா அம்மா என்று புரிந்தாலும் துகிரா தான் அப்புகைப்படத்தில் இருக்கின்றாளென முடிவுக்கட்டினாள்.

   “அம்மா வேண்டும். அம்மா வேண்டும்” என்று அழ, பிரதன்யா ஓகே ஓகே நான் வரச்சொல்லறேன் முதல்ல சாப்பிடு” என்று டைனிங் டேபிளில் அமர வைக்க, குழந்தைக்கு பிடிக்கும் வகையில் பூரி சாக்லேட் ஐஸ்க்ரிம் என்று அங்கே இருந்தது.

  அமுல்யாவை சுற்றியே பிரதன்யா, இஷான், பைரவி, ரிஷி என்றிருக்க பிரதன்யா ஊட்டிவிடவும், இஷானை பூச்சாண்டி போல பார்வையிட்டு உண்டாள்.

“என்ன பார்த்து பயப்படறாம்மா?” என்று இஷான் துவள, “பிரதன்யாவோட ஓட்டறாளே. சந்தோஷப்படுடா. இத்தனை வயசு வரை வராத அப்பா திடீர்னு வந்து நின்னு அந்த பொண்ணிடமிருந்து கூட்டிட்டு வந்தா இப்படி தான் ரியாக்ட பண்ணுவா. போக போக சரியாகிடும்” என்று ஆறுதலுரைத்தார்.‌

   பிரதன்யா உறங்க வைக்க கதை சொல்ல, “எங்க அம்மா எப்ப வருவாங்க. ஏன் அவங்களையும் கூட அழைச்சிட்டு வரலை? போன் போட்டு பேச முடியுமா?” என்று கேட்க, பிரதன்யாவோ “நீ முதல்ல தூங்கு கண் முழிச்சதும் அண்ணி வருவாங்க” என்றாள் ஏதோவொரு நினைவில்..

“அண்ணின்னா?” என்று கேட்க, பிரதன்யாவோ அது..அது… உங்கப்பா இஷான்‌ எனக்கு அண்ணா. உங்கம்மா எனக்கு அண்ணின்னு சொல்ல வந்தேன்.” என்றதும், “பிரதன்யா… என் மனைவி இறந்துட்டா. ஏதாவது குழந்தைக்கு தப்பும் தவறுமா சொல்லாதே. துகிரா வேற துர்கா வேற.” என்று கர்ஜிக்க, குழந்தை பயந்திட, இஷானை ரிஷி வெளியே இழுத்து சென்றான்.‌

  “ஏன் அண்ணா… கொஞ்சம் சும்மாயிரு. முதல்ல குழந்தை நம்மோட பழகட்டும்.’ என்றான்.‌

பிரதன்யாவோ குழந்தையை தட்டிக் கொடுத்து கதை சொல்லி உறங்க வைக்க முயன்றாள்.

  பைரவியோ, “அந்த பொண்ணு நம்ம அமுல்யாவை நல்லா பொறுப்பா பார்த்திருப்பா போல. இந்தளவு அட்டாச் வந்திருக்கு. அவ பெயர் என்ன சொன்ன?” என்று இஷானிடம் கேட்க, அலட்சியமாய் “துகிரா” என்றான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.


9 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-4”

  1. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் -4)

    ஆமா, ஆமா.. இப்ப அலட்சியம் காட்டுவான் தான். துகிரான்னாலே இவனுக்கு ஹார்ட் பீட் எகிறத்தான் செய்யும். ஆனா, குழந்தை துகிராவை அளவுக்கதிகமா விரும்ப விரும்ப.. இவனும் வேற வழியில்லாம ஏத்துக்கிட்டுத் தானே ஆகணும். அப்ப ஆட்டோமெடிக்கா நெருங்கத்தானே செய்யணும். அதுக்குத்தானே அச்சாரமா, முதல்லயே முத்தாரத்தை கொடுத்திட்டு வந்திருக்கான்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    Ishan nee than kolanthaiku appa aana yen ippadi rugged ah nadanthukura tak nu kolanthai ya thukitu vantha udane eppadi nalla palagum amma va keka than seium. kolanthai venumna nee porumaiya irunthu than aganum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!