அத்தியாயம்-8
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அமுல்யா முகம் வாடியபடி பிரதன்யா அருகே அமர்ந்திருந்தாள். பார்வை என்னவோ தாழ்த்தி தரையை பார்வையிட்டபடி இருக்க, துகிரா வரும் போது நிமிரவில்லை.
“நான் அப்ப உன்னோட பொண்ணு இல்லையா அம்மா?” என்று கேட்டு நிதானமாக நிமிர, துகிராவோ இஷானை முறைத்தாள்.
“அப்படியெல்லாம் இல்லைடா. நீ என் பொண்ணு” என்று மண்டியிட்டு குழந்தையின் விழியோடு கலக்க, “பொய்… அவர் தான் சொன்னாரே. எனக்கும் துர்காவுக்கும் பிறந்த குழந்தை அமுல்யானு. நீங்க அவர் பேசியதை மறுத்து பேசலையே.” என்றாள்.
எப்படி துகிரா மறுத்து பேசுவாள்? சற்று நேரத்திற்கு முன் தான் நீ என்னுடன் படுத்து பிள்ளையை பெத்தாயா என்று நெருப்பாக தன் மீது வார்த்தையை வீசினான்.
“திருப்தியா… நீங்க பேசறதை அமுல்யா கவனிக்கறா, பார்த்து பேசுங்க, பார்த்து நடந்துக்கோங்கன்னு தலைப்பாடா சொன்னேன்.” என்று இஷானை திட்டிவிட்டு குழந்தையிடம் “அம்மு… இங்க பாரு. நான் எந்த இடத்திலாவது நீ என் பொண்ணில்லைனு சொல்லியிருக்கேனா? இப்பவும் சொல்வேன். நீ என் பொண்ணு. இங்க வேறயெந்த பிராப்ளம், எப்படிப்பட்ட பேச்சு போனாலும் பரவாயில்லை. அமுல்யா அம்மா இந்த துகிரா மட்டும் தான். துர்கா கூட இல்லை. உன்னை சொந்தம் கொண்டாட உங்கப்பாவே வந்தாலும், நீ என் பொண்ணு என்பது மாறாது” என்று கட்டிக்கொள்ள, “அம்மா.. அழாத.” என்று அமுல்யாவும் பிஞ்சு கைகளால் கண்ணீரை துடைத்துவிட்டாள்.
அமுல்யாவை முத்தம் வைத்து கட்டிக்கொள்ள, மெதுமெதுவாக இஷானை ஏறிட்டாள் அமுல்யா.
இத்தனை நாள் தன் பக்கம் பார்வையிட தயங்கி நழுவும் மகளை அவனும் நேசத்தை நாடி பார்வையிட்டான்.
லேசாக கண்ணீரை கட்டுப்படுத்தி, “உனக்கு இப்பவாது நான் தான் அப்பானு தோன்றுதா?” என்றதற்கு அமுல்யா அமைதியானாள்.
பைரவி தான் இடத்தை சுபமாக மாற்ற, “துகிரா, உன் பிரெண்டுக்கு வந்ததும் வராததும் அதிர்ச்சியா? டீ காபி போட்டு கொடும்மா” என்று கூற, துகிரா அமுல்யாவிடம், “மெர்ஸிக்கு ஸ்னாக்ஸ் கொடுத்துட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு எழவும் எதிரே இஷான் பேண்ட் பேக்கெட்டில் கையை நுழைத்தவனாக துகிராவை கடந்து சென்றான்.
இஷான் குழந்தையிடம் வர அவளோ அப்பவும் பிரதன்யாவிடம் ஓடினாள். இத்தனை நடந்தும் குழந்தை என்னை நாடி வரவில்லை என்ற வலியில் அவனிருக்க, மெர்ஸியோ “அண்ணாவுக்கு நான் கொண்டு போறேன்” என்று எழுந்தவளை, “இல்லை… நீ உட்காரு, சார்லஸுக்கு நான் கொண்டு போறேன்.” என்று துகிரா செல்ல மெர்ஸியோ புன்னகையோடு அனுப்பினாள்.
வெளியே வீட்டுக்குள் இருந்த தோட்டத்து பெஞ்சில் அமர்ந்திருக்க, “டீ” ன்று கொடுக்க, “தேங்க்ஸ்” என்றான் சார்லஸ்.
அவனருகே சற்று இடைவெளியுடன் அமர்ந்தவள், “குழந்தை இருப்பதை மறைச்சிட்டு உங்களை கல்யாணம் செய்யறேன்னு நான் ஏமாத்தலை. அக்கா குழந்தையை என் குழந்தையா வளர்க்கணும் என்ற காரணத்தில் தான், என் குழந்தைன்னு சொன்னது. உங்களை ஏமாத்தயில்லை” என்று புரிய வைக்க பார்த்தாள்.
”நீ ஏமாத்தலை துகிரா. மறைச்ச.. எங்க இவனிடம் சொன்னா அக்கா பொண்ணு தானேனு உன்னை கட்டிக்க மாட்டேன்னு நீ நினைச்சி தவிர்த்துட்ட. நீ இல்லை.. என் தங்கை மெர்ஸியுமே.
இங்க வர்ற வரை எவ்ளோ நேரம் இருந்தது. ஒரு வார்த்தை அமுல்யாவை பத்தி டீட்டெயில் சொல்லியிருக்கலாம்ல?
உனக்கும் எனக்கும் உண்டான பழக்கம் அமுல்யாவை நீ கை குழந்தையா கொண்டு வந்ததிலருந்து ஏற்பட்ட நட்பு. அதனால தெரியாம இருக்கலாம்.
என் தங்கை மெர்ஸிக்கு என்னை பத்தி தெரியுமே. அவ என்னிடம் சொல்லியிருக்கலாம்.” என்றவன் டீயை பருகினான். சார்லஸ் எப்படிப்பட்ட குணம் கொண்டவன் என்று மெர்ஸி அறிந்தும் சொல்லவில்லை என்ற வருந்தினான்.
சில நொடி அமைதிக்குப்பின், “அப்போ.. குழந்தையை நீங்க உங்க விருப்பப்படி அழைச்சிக்க முடியாது. அமுல்யா அப்பா விடமாட்டார்.” என்றதும், துகிரா கண்களில் சொட்டு கண்ணீர் வழிய தயாராகியிருந்தது.
“எனக்கு அமுல்யாவோட நீ வந்தாலும் ஓகே. தனியா வந்தாலும் ஓகே துகிரா. எனக்கு உன்னை பிடிக்கும். வேறென்ன சொல்லி உன்னை தேற்றி ஆறுதல் சொல்லன்னு தெரியலை” என்று முடித்துக் கொண்டான்.
நீ என்ன செய்ய போகின்றாய், அமுல்யாவை வேறு விதமா நம்மோடு அழைக்க முடியாதா என்ற பேச்சு வார்த்தை கூட சார்லஸ் கேட்கவில்லை. அவனுக்கு ஓரளவு நிதர்சனம் புரிய, வீட்டை அளவிட்டான்.
“நீ போ.. யாரோ வீட்டுக்குள்ள இருந்து நம்மளை பார்க்கறாங்க” என்று கூற, துகிரா சட்டென திரும்ப அந்த அறையின் திரைசீலை ஆடியது.
இதென்ன இவர் ஒளிந்து கொண்டு பார்வையிடுகின்றார்’ என்று எண்ணும் போதே இஷான் கதவை திறந்து திரைசீலையை நன்றாக திறந்து வைத்தான். அப்பொழுது அவ்வறையிலிருந்து ஒரு சிட்டுகுருவி வெளியே பறந்தோடியது.
இஷான் எகத்தாள பார்வையில், ‘உன்னை ஒன்றும் வேவு பார்க்கும் அளவிற்கு தரம் தாழ்பவன் நானில்லை’ என்ற அர்த்தமிருந்தது.
“குருவி வீட்டுக்குள்ள இருந்திருக்கு. அதை வெளியே விட்டியிருக்காங்க. மத்தபடி அவருக்கு நம்மளை வேவு பார்க்க என்னயிருக்கு.” என்றவள் “சார்லஸ்… என் மேல கோபமில்லைன்னா உள்ள வாங்க.” என்று அழைக்க, சார்லஸ் அதிருப்தியுடன் கூடவே நுழைந்தான்.
“சாரிண்ணா” என்று மெர்ஸி கூற, சார்லஸோ மன்னிப்பை ஏற்றானோ இல்லையோ, அமுல்யாவை தேடினான்.
அமுல்யா பிரதன்யாவுடன் அமர்ந்திருக்க, துகிரா மெர்ஸி இருவரும் கொஞ்ச நேரம் அமுல்யா படிப்பை பற்றி தான் பேசினார்கள்.
மெர்ஸி கொண்டுவந்த உடைமையில் அமுல்யாவின் வெற்றி சான்றிதழ் நிறைய இருக்க, அதையெல்லாம் ரிஷி பிரதன்யாவிடம் காட்டினாள்.
அறைக்குள்ளிருந்து வரலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நிகழ்த்தியவன், ஒருவழியாக வந்தமர்ந்து குழந்தையின் சான்றிதழை பார்வையிட்டான்.
பெரும்பாலும் அவனை போலவே டான்ஸ் ஆடுவதில் இரண்டு மூன்று வாங்கியிருந்தாள். அதோடு டிராயிங் க்ராப் ஓர்க் என்று நிறைய இருந்தது.
அமுல்யாவை பெருமையாக பார்க்க, அவளோ பிரதன்யாவுக்கு பின்னால் மறைவதில் குறியாக இருந்தாள்.
ஒருவழியாக ரெப்ரெஷ்ஷாகி பேசி, அன்றே கேரளா திரும்ப ஆயத்தமானார்கள் மெர்ஸி, சார்லஸ்.
“ஏன் வந்ததும் வராததும் போறிங்க. மெர்ஸி இங்க தங்கலாம் இல்லையா?” என்று கேட்க, “உன்னிடம் மறைக்க என்னயிருக்கு? அண்ணாவுக்கு அமுல்யா உன்னோட குழந்தை என்று நினைத்ததால் கோர்ட் மூலமா போகலாம்னு துணியல்லாம் கொண்டுவந்தார். பச் அப்படியில்லை என்றதும் இந்த வழக்கு கோர்ட்ல செல்லாது இல்லையா. அதனால் இங்க இருந்த என்ன பண்ணப்போறோம்னு கிளம்ப சொல்லிட்டார். அதோட நீ இப்ப வரமாட்டேன்னு அவருக்கு புரியுது.
வீட்ல உன்னை மேரேஜ் பண்ண ரொம்ப போராடினான். இப்ப, கல்யாணமாகாத பொண்ணுனு தெரிந்தும் ஏதோ உடைந்தவனா இருக்கான். நீ அமுல்யாவிடம் அவரை அப்பானு சொல்லி அவளும் மனசார அண்ணாவை ஏத்துக்கிட்டு மேரேஜ் என்றதால் கல்யாணத்தை தள்ளிவச்சதா இருந்தது. இப்ப அமுல்யா எப்படின்னு ஒரு முடிவெடுக்க முடியலை இல்லையா? பார்ப்போம்…. கல்யாண பத்திரிக்கை அடிக்கறப்ப தெரியும். ஆமா… பத்திரிக்கை அடிக்கலாமா?” என்றாள் மெர்ஸி.
துகிரா குழப்பமான மனநிலையில் “நான் இங்கயிருந்து வந்தப்பிறகு அதை பத்தி பேசலாமே. இப்ப என்னால தெளிவா முடிவெடுக்க முடியலை.” என்று தவணை கேட்க, “சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” என்று தட்டி கொடுத்து கிளம்பினார்கள்.
அமைதியாக வீடு காட்சியளித்தது. அமுல்யா கார்டூன் பார்க்க, இஷான் குழந்தையை தான் ஆசையாக பார்த்தான்.
துகிராவோ மணி ஏழாகவும், பால் சாதம் பக்கோடா என்று வைத்து ஊட்டவும், குழந்தை அழகாக ஆ வாங்கியது.
பைரவியோ அமுல்யாவுக்கு இருபக்கமிருந்த துகிரா இஷானை தான் வேடிக்கை பார்த்தார்.
எப்படியாவது இந்த துகிராவை மகனுக்கு மணமுடித்து வைத்திட திட்டம் போட்டார்.
அங்கங்கே அக்கா பிள்ளை காரணம் காட்டி தங்கையை மணக்க வைப்பதை கேள்விப்பட்டதுண்டு.
இங்கேயேயும் அதையே நிகழ்த்திட நினைத்தார். ஆனால் இஷான் தனியாக ஆறுவருடம் இருந்த பொழுதே, திருமணம் செய்ய வற்புறுத்தி ஓய்ந்ததால், இந்தமுறை குழந்தையோடு இருப்பவனை வற்புறுத்துவது மிக கஷ்டம் என்பதையும் அணுமானித்தார்.
ஆனால் முன்பு யாரோ ஒரு பெண்ணை முன்னிருத்தும் சூழல். இன்றோ துர்கா போன்ற உருவத்தில் இருக்கும் துகிராவை முன்னிருத்தினால்…
இதை நினைக்கும் போதே இஷான் துகிரா வந்ததிலிருந்து எரிந்து விழும் காட்சிகள் கண்முன்னே வந்து கண்ணை கட்டியது.
அப்படியே இருந்தாலும் துகிரா வந்து சென்ற சார்லஸை கல்யாணம் செய்வதாக அல்லவா பேச்சு சென்றது.
பைரவிக்கு அதளபாதாளத்தில் தன் எண்ணம் தவிடுப்பொடியாக சென்றதில் சோகமானார்.
அப்பொழுது அமுல்யா “போதும் அம்மா.” என்றாள்.
“என் செல்லம்ல நாளைக்கு பாப்பாவுக்கு பிடிச்ச லாலிபாப் வாங்கி தர்றேன். இன்னும் இரண்டு வாய்டா” என்று கொஞ்ச, “எனக்கு பிடிச்ச ஸ்வீட்ஸ் சாக்லேட் கொடுத்தே காரியம் சாதிக்கற மம்மி.” என்று குழந்தை ஆவாங்கினாள்.
பைரவிக்கு திடுக்கிட்டு பேத்தியை காண, துகிராவோ “என்ன செய்ய உன்னை சாப்பிட வைக்க நான் மலையை புரட்ட வேண்டியதா இருக்கு” என்று கடைசி உருண்டையை மகளுக்கு ஊட்டிவிட்டு திருஷ்டி கழித்தாள்.
பைரவியோ அமுல்யாவையே பார்வையிட, “என்னம்மா… பேத்தியை இப்படி பார்க்கற?” என்று கேட்டு உலுக்க, ‘ஒன்னுமில்லை’ என்பதாக தலையாட்டினார்.
பிரதன்யாவை அழைத்து, தன் எண்ணத்தில் தோன்றியதை உரைத்ததும், பிரதன்யாவோ “என்ன விளையாடறியா அம்மா? இன்னிக்கு வந்தவங்களை பார்த்திங்க தானே? துகிரா அண்ணிக்காக அவங்களோட பிரெண்ட் அவங்க பியான்சி வந்ததை.
அமுல்யா கூடயிருக்கும் பொழுதே அவங்களை ஏற்க முன்வந்தவர் அந்த சார்லஸ். குழந்தை நம்மிடம் இருந்துட்டாளும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க. அவங்க ஒரு வருஷமா காதலிப்பதா பேசறப்ப கவனிச்சேன். அப்படியிருக்க நம்ம அண்ணாவை மணக்க ஓகே சொல்வாங்களா? அதோட நம்ம அண்ணாவை நினைச்சி பாருங்க.
இந்த இடைப்பட்ட வருஷத்துல வீட்டுக்கு வந்து அதிக நேரம் செலவிட்டு இருப்பாரா? அவருக்கு வாழவே விருப்பமில்லாம இருந்தார். இப்ப அமுல்யா வந்ததும் தான் எட்டாவது நாளா வீட்ல இருக்கார் இது யாருக்காக? அமுல்யா தன் பொண்ணு என்ற ஒரே காரணம் தான். ஏதோ நிம்மதியா அமுல்யாவை பார்த்து சந்தோஷப்படறவரை, கல்யாணம் அதுயிதுன்னு பேசி டிஸ்ஸப்பாயிண்ட் பண்ணிடாதிங்க. அதுவும் துகிரா அண்ணி எல்லாம் பாவம். நம்ம எதிர்லயே அந்த அண்ணியை அடிச்சி கன்னம் வீங்கியிருந்தது. குழந்தையை வாங்கறப்ப என்ன கலாட்டா பண்ணிட்டு வந்தாரோ?” என்று கூறவும் பைரவிக்கு தன் திட்டம் உடனடியாக நழுவியது போல ஏமாற்றம் கொண்டார்.
பிரதன்யா இரண்டெட்டு நடந்து பின்னால் வந்து, “ஆனா இதெல்லாம் சாத்தியமா மாறினா அண்ணாவுக்கு மறுவாழ்வு அமையும்மா. துகிரா அண்ணி, அமுல்யா பாப்பானு அண்ணாவுக்கு இழந்த வாழ்க்கை திரும்ப கிடைக்கும். நினைச்சி பார்க்கவே சந்தோஷமாயிருக்கு. அண்ணா சந்தோஷமா சிரிச்சி பேசி எத்தனை வருஷமாகுது.” என்று கனவுக்கு சென்று வந்தாள்.
பைரவியுமே, “எனக்குமே இந்த கனவு நனவாகணும்னு ஆசை. பூனைக்கு யாருடி மணி கட்டுவது. இதை பத்தி பேசி துகிரா அமுல்யாவை விட்டுட்டு அவ பாட்டுக்கு போயிட்டா. ஆல்ரெடி இஷானோடவும் நம்மளோடவும் குழந்தை ஓட்டிக்கிட்டா, அவ இங்கிருந்து போயிடுவதா வருத்தமா சென்னாளே. நாம இஷானை கல்யாணம் செய்துக்கோனு சொல்லப்போய் உடனே கல்யாணம் போயிட்டா?” என்று பயந்திட, ரிஷியோ, “அதுக்கு என்னிடம் ஒரு நல்ல பிளான் இருக்கு. ஆக்சுவலி இந்த பிளான் நான் நினைச்சு பார்க்கலை. அஞ்சனா தான் சொன்னது.” என்று தன் காதலியை பற்றி அன்னையிடம் நல்விதமாக உரைக்கும் பொருட்டு, திட்டத்தை விவரித்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 8)
அட.. இந்த ரிஷி சைக்கிள் கேப்ல அஞ்சனாவை இழுத்து வைச்சு சிந்து பாடப் பார்க்கிறான் பாருங்களேன்.
அப்படி என்ன ஐடியாவை அஞ்சனா கொடுத்திருப்பான்னு தெரியலையே..?
ஆனா, துகிரா இனி சார்லஸை கல்யாணம் பண்ண மாட்டா என்கிறது மட்டும் கன்ஃபார்ம்ட்.
ஏன்னா, அதான் இஷான் அய்த்தான் கல்யாணத்துக்கு முன்னாடியே அச்சாரமா முத்தம் கொடுத்து நிச்சயம் பண்ணிட்டான் தானே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 evanga nenaikirathellam nadakuma edhu therinja ishan enna gudhi gudhipaano🙄 nadakuma parpom 🤔
Yenna plan oh
Super super super super super super super super super super super super super super super super super super super intersting
side gap la rishi un lover ah kondu variye appadi en plan solli anupi iruka papom workout agala mavane nee gali ishan kitta
Interesting
Nice epi