Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-10

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-10

அத்தியாயம்-10

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   பைரவி வரவும், துகிரா அமுல்யா இருவரும் அவரை வரவேற்க, “புது ஸ்கூல் எப்படி இருந்தது டா செல்லம்” என்று தாடை பிடித்து கொஞ்ச, துகிராவோ இதை பற்றி மகளிடம் கேட்கவில்லையே. பச் வரும் பொழுது அவர் அவரோட பீலிங்கை கேட்கவும் குழந்தையை மறந்துட்டேன்.

   “நாட் பேட் பாட்டி” என்றவளை கையோடு பைரவி அழைத்து செல்ல, கூடவே நடந்தாள்.
  ஹாலில் இஷான் மகளை நாட, துகிராவோ மகளோடு ஒட்டுண்ணியாக வர கோபமாய் திரும்ப அமர்ந்துவிட்டான்

  துகிராவோ குழந்தை பேச பேச அவளுக்கு சென்னாமசாலா ஊட்டி விட்டாள். அமுல்யாவோ இரண்டு புது நண்பர்கள் கிடைத்ததும், மதியம் சாப்பிட்டதும், மேம் வந்து பேசி சிரித்து பாடம் நடத்தி, தன்னை அறிமுகப்படுத்தியது முதல் எல்லாம் கூறினாள்.
  கிள்ளை மொழி கதையில் இஷான் தன்னை‌ மறந்தான்.

  அமுல்யா இரவு வரை ஹாலில் அட்டூழியம் செய்து உறங்க செல்ல துகிராவும் சென்றாள்.

இஷான் அவனுமே தனியறைக்கு சென்றான்.‌

பைரவி ரிஷியை அழைத்தபடி பிரதன்யா அறைக்கு வந்தார். “நீ சொன்ன ஐடியா சரியா வரும்னு தோன்றுது. துகிராவை இஷான் கல்யாணம் செய்ய வைக்கலாம். அதுக்கு நாம இஷானிடமோ இல்லை துகிராவிடமோ முட்டி மோத வேண்டாம். அமுல்யா… அமுல்யாவிடம் துகிராவையே இஷான் கல்யாணம் பண்ணினா உன் கூடவே இருப்பானு சொல்லி, அமுல்யா வாயால துகிராவிடம் என் அப்பாவை கல்யாணம் செய்யறியா அம்மானு கேட்க வைக்கணும்.
  அதே போல இஷானிடம் அப்பா துகிரா அம்மாவையே கல்யாணம் பண்ணிடுங்க. எனக்கு அம்மாவை நிரந்தரமா கூடவே இருப்பாங்க’ன்னு சொல்ல வைக்கணும்.” என்றார்.‌

  ரிஷியோ, “அம்மா…  அமுல்யா இன்னமும் என்னிடம் சரியா பழகலை. நான் சொல்லறதை எப்படி கேட்பா?” என்றவன் பார்வை பிரதன்யாவை காணவும், பைரவியும் மகளை காண, “விளையாடறிங்களா? அண்ணாவுக்கு தெரிந்தது என்னை திட்டி தீர்த்துடுவார்.
  அதோட துகிரா அண்ணி உன்னிடம் நல்லா பழகின குழந்தையிடம் இப்படி சொல்லி என் வாழ்க்கையை பாழாக்கிட்டனு சொல்லலாம். அதோட அமுல்யா நான் சொல்வதை எப்படி கேட்பா” என்று சலித்தாள்.

   “முடியும் பிரதன்யா குழந்தை என்னிடமோ ரிஷியிடமோ இன்னமும் நல்லா பேசி பழகலை. துகிரா இல்லாதப்ப உன் கூட தான் தூங்கினா. நம்ம அண்ணனுக்காக கொஞ்சம் யோசி. அமுல்யாவை இங்கயிருந்து அழைச்சிட்டு போய் தனியா பேசு. எனக்கென்னவோ சித்தின்னு கூப்பிட மறுத்து அம்மானு தான் சொல்வேன்னு பிடிவாதம் பிடிக்கற குழந்தைக்கு, நாம சொல்ல வருவது புரியும்.” என்றதும் பிரதன்யா லேசாக சிந்தித்தாள்.

   “சரி நான் என்ன செய்ய?” என்று அன்னை பைரவியிடம் கேட்டாள்.

  பைரவியோ “குழந்தையை தனியா கூட்டிட்டு போய் கொஞ்சம் பேசி பழகு. அப்படி பேசும் போது துகிராவை இஷான் அண்ணா மேரேஜ் பண்ணினா அமுல்யா அம்மாவா துகிராவும் இங்கயே இதே வீட்ல இருப்பான்னு ஏத்தி விடு. சார்லஸை அங்கிள்னு சொன்னதா உங்க அண்ணா சொன்னார்.
  அப்பானு அமுல்யாவே நம்ம இஷானை சொன்னதா வந்ததிலருந்து சொல்லிட்டே இருந்தான்.
  இப்ப இந்த எண்ணத்தை நாசுக்கா விதைக்கறது மட்டும் இல்லை. அவளை வச்சி இரண்டு பேரிடமும் தனியா பேச வைக்க ஏற்பாடு செய்யணும். குழந்தை நம்மிடம் பேசி பழகி நம்ம திட்டத்தை புரிந்து, நமக்கு சாதகமா நடப்பது லேட்டாகலாம். ஆனா துகிரா சார்லஸ் கல்யாணம் தடையாகும்.
   அந்த குழந்தை வைத்து பேச்சை கிளறி விட்டா போதும். அடுத்தடுத்து நாம பார்த்துக்கலாம். குழந்தையை இந்த விஷயத்தில் அடம்பிடிக்க வைக்கணும்.” என்று கூற பிரதன்யா மெதுவாக தலையாட்டினாள்.

   “சரி தூங்குங்க.” என்று பைரவி செல்ல ரிஷியும் சென்றான். பிரதன்யாவோ அண்ணனுக்காக அண்ணன் மகளிடம் நயமாக பேசிட முடிவெடுத்தாள்.

   அடுத்த நாள் காலையில் அமுல்யா எழுப்பி துகிராவே குளிப்பாட்டி ஸ்கூலுக்கு அனுப்ப தயார்படுத்தினாள்.
  “மிச்சம் வைக்காம சாப்பிடணும். நிறைய தண்ணி குடிக்க..” என்று வர, “என்ன இஷான் இன்னிக்கு ஆபிஸ் போகலையா?” என்ற பைரவியின் பேச்சில் நானே விடறதா பேச்சு போச்சே. சரி எத்தனை நாளைக்கு அவரா கொண்டு போய் விடுவார்.’ என்று எதுவும் கூறாமல் வந்தாள்.

  நேற்று போலவே பின்னிருக்கையில் துகிரா ஏற, “அமுலு.. முன்னாடி வந்து உட்காரு.” என்றான் இஷான்.

  துகிராவை பார்த்து அமுல்யா முழிக்க, “போ” என்று அனுப்பினாள். அமுல்யா முன்னிருக்கையில் அமர்ந்ததும் இஷானுக்கு சந்தோஷமடைந்து ஓட்டினான்.

    “அம்மா கர்ச்சீப்” என்று கொடுக்க, சட்டையில் குத்த மறந்து கையில் வைத்திருக்க, துகிரா முன்னால் எக்கி வந்து, பின் வைத்து குத்தினாள்.

  துகிரா அமுல்யாவை கையில் வாங்கி, அன்னையாக மாறிய தருணத்திலிருந்து, சேலை கட்டியிருக்க, அவள் வளைவு நெளிவு இஷானின் கவனத்தை ஈர்த்தது.

  “இதெல்லாம் வீட்ல பின் பண்ணியிருக்கலாம்ல” என்று  எரிச்சலாய் மொழிய, “உங்க கண் எதிர்ல தானே அம்மா.. கர்ச்சீப் பின் பண்ணலைன்னு குழந்தை நீட்டறா.” என்று கூறி திரும்பினாள்.
  அந்த ஒரு நொடி இஷானின் கண்கள் அவளது மேனியில் பட்டும் படாமலும் ஊர்ந்து சென்றதில், அவனது முகசுழிப்பை அறிந்து பின்னால் நகர்ந்து சேலையை சரிப்படுத்தினாள்.

  இதுவும் இஷானுக்கு எரிச்சலை அதிகப்படுத்தியது. என்னவோ அவன் வேண்டுமென்றே பார்க்க இவள் மறைக்க என்று மாறியதாக சூழ்நிலை மாறியதாக எண்ணிவிட்டாளே?!

  எதுவென்றாலும் இனி குழந்தை எதிரில் நிதானமாக நடக்க முடிவெடுத்தவனாய் நிதானித்தான்.

பள்ளிக்கூடம் வந்ததும் கார் ஓரமாய் நிறுத்தி, மகளது இரு கன்னத்திலும் முத்தம் வைத்து, சாக்லேட் ஒன்றை நீட்டினான்.

அமுல்யாவோ தந்தையின் செய்கையில் பயமும் ஆனந்தமும் சேர்ந்தாலும், இஷானை கண்டு புன்னகைக்க தாமதப்படுத்தி, ‘நன்றியை தெரிவித்தாள்.

துகிரா தான் கேட் வரை சென்று வழியனுப்பினாள்.
  “அம்மா… அப்பாவிடம் தாடி குத்துதுனு சொல்லிடறிங்களா. எனக்கு அவரிடம் பேச பயமா இருக்கு. முத்தமிட்டதும் சுருக்குனு இருக்கு” என்றாள்.

“தாடியா… குத்துதா? நான் அவரிடம் சொல்லணுமா?” என்று அடுக்கி, சம்மதமாய் தலையாட்டினாள்‌.
  
   அமுல்யாவை விட்டுவிட்டு யோசனையோடு நடந்தாள். இஷான் காரில் ஏறி அமர்ந்துவிட்டு, இஷானின் முதல் சந்திப்பில் அவன் இவளது உதட்டில் முத்தமிட்ட பொழுது துகிராவுக்குமே, உதட்டில் சுருக்கென்று குத்தியதை நினைவில் வந்தது.

  பெண்ணவள் காரில் இருக்க, உடலெங்கும் மேனி சிலிர்த்து அடங்கியது.
  அன்றைய முத்தம் எண்ணி பார்க்க இன்றும் சிலிர்க்குமா? இத்தனைக்கும் அருவருப்பு நேர வேண்டும். ஏனோ கூச்சமாக வந்து தொலைத்தது. பருவ வயதென்றதால் கண்ட தீண்டலும் முத்தமும் இப்படி நினைத்து உடல் ஏங்குகின்றதோ?! இப்படி தான் தன்னை தானே கடிந்துக்கொண்டாள்.

  “ஈவினிங் நீ வராத. நானே என்‌ பொண்ணை கூப்பிட்டு வந்துடுவேன். தயவு செய்து அப்பா பொண்ணு உறவுல நுழையாத” என்றான்.
 
  ஏதேதோ தறிக்கெட்டு போன மனதில் தீயை பற்ற வைத்தவனாக நெருப்பை போல வாறியிறைக்க, துகிராவோ, “உங்க பொண்ணு உங்களிடம் ஒரு மெஸேஜை பாஸ் பண்ண சொன்னா” என்று பட்டும் படாமலும் உரைத்தாள்.

காரை நிறுத்தி ‘என்ன?’ என்று திரும்ப, இஷானின் முகத்தையும் உதட்டையும் அவன் பார்வையும் பார்வையிட்டு துகிரா திணறினாள்.

  “என்ன சொன்னா? அமுலு என்ன சொன்னா?” என்று உலுக்க, “ப்ளிஸ்.. என்னிடம் தள்ளி நின்னு பேசுங்க. பயமுறுத்தாதிங்க.” என்றதும் கையை உலுக்குவதை நிறுத்தினான்.

“அமுலு என்ன சொன்னா? ஏய்… என் பொண்ணு நேத்து அப்பானு சொன்னா. இன்னிக்கு எனக்கு மெஸேஜ் பாஸ் பண்ண சொல்லிருக்கா. க்ரைம் நாவல் போல இழுக்காம நேரா சொல்லி தொலையேன்.” என்று கடிய, தயக்கமாய், அவன் விழிகளை கண்டு மெதுவாக உதட்டருகே பார்வை சென்று, எச்சிலை விழுங்கி, “மீ..மீசை தாடி கு..குத்துது”..னு என்று விழுங்க, நான் அன்று முத்தமிட்டதுக்கு இன்று மீசை குத்துதுனு சொல்லறா என்று இவனும் தடுமாற, துகிராவோ “பாப்பா ஸ்கின் மிருதுவானது. உங்க முத்தத்தில மீசை குத்தி வலிக்க தான் செய்யும். அவ இதை சொல்ல சொன்னா” என்றதும் இஷானுக்கு நிம்மதி படர்ந்தது‌.
 
ஆக அன்றைய நிகழ்வில் அவள் கூற வரவில்லை. மகளுக்கு தான் இந்த புதர் தாடியும் மீசையும் குத்திருக்க சொல்லி சென்றதாக முடிவெடுத்தான்.

  “நல்லது… ஈவினிங் நீ வராத. குழந்தை என்னோட வரட்டும். தனியா வர்றோம்.” என்று கட்டளையிட்டு காரை வீட்டிற்கு செலுத்தினான்.‌
  நான் இல்லாம எப்படி? அம்மு வரமாட்டா, என்று எண்ணியதை அவனிடம் உரைக்கவில்லை.
 
  மாலை கிளம்பும் நேரம், துகிரா அறைக்குள் இருந்தாள். எப்படியும் பள்ளிக்கு சென்று இஷான் போன் செய்து அவசரமாய் காரில் வரக்கூறலாம் என்று நினைத்தாள்.
 
  இஷான் புறப்படுவதை மட்டும் கவனித்தாள்.
   பைரவியோ நீ போகலையாம்மா?” என்று கேட்க, “அமுல்யா அப்பா என்னை வரவேண்டாம்னு சொல்லிட்டார்” என்று முடித்துக் கொண்டாள்.

   பள்ளியில் அமுல்யா துகிராவுக்கென காத்திருக்க, இஷான் க்ளின் சேவில் நறுக்கி வைத்த மீசையோடு வந்து சிரிக்க, அமுல்யாவோ, தந்தையை கண்டு வாயடைத்து வந்தாள். அவனுக்கு பின்னால் துகிராவை தேட, “துகிராவை கூட வரவேண்டாம்னு சொல்லிட்டேன். அப்பா பொண்ணு ஆயிரம் பேசலாம். நடுவுல அவ எதுக்கு.” என்று மகளை அள்ளிக்கொண்டான்.‌

தன் உயரம் வரை தூக்கி புஜத்தில் இருத்தி மகளை காண, அமுல்யாவுமே இஷானின் முகமாற்றத்தில் வாயடைத்து போனாள்.

   “அம்மா… அம்மா நிஜமா வரலையா?” என்று தேடினாள்.

  “அப்பா வந்திருக்கேனே. என்னிடம் பேசு. ஐஸ்க்ரீம் கடைக்கு போகலாமா? சாக்லேட் வாங்கலாமா? இல்லை ஷாப்பிங் போலாம். உனக்கு டாய்ஸ் பிடிக்குமா?” என்று கேட்டு வைத்தான்.

  “அம்மா நான் நேரத்துக்கு வீட்டுக்கு வரலைன்னா பதறிடுவாங்க. நான் வீட்டுக்கு போகணும்.” என்றாள்.

  ”அப்பாவோட எங்கயும் போக விருப்பமில்லையா? அப்பாவுக்காக யோசிக்க மாட்டியா?” என்று கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்து, ”அம்மா சொன்னதும் சேவ் பண்ணிட்டிங்களா? தேங்க்யூ. நீங்க கிஸ் பண்ணினப்ப குத்துச்சு. டேடி” என்றாள்.

  துகிராவை போலவே பேச்சை மாற்றும் யுக்தியை அமுல்யா
அழகாக நடைமுறைப்படுந்த, “தாடி எடுத்துட்டேன்… உங்க அம்மா துகிராவுக்காக இல்லை. என் பொண்ணு சொன்ன ஒரே காரணத்திற்காக.” என்று ஜம்பமாய் கூறி காரை செலுத்தினான்.
இப்பொழுது பேச ஆரம்பித்த முதல் நாள்.  
 
   ஷாப்பிங் மால் அழைத்து செல்ல, ”அமுலுக்கு என்ன பொம்மை பிடிக்கும்?” என்று கேட்க, துகிராம்மாவுக்கு எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியும். நீங்க அவங்களிடம் போன் பண்ணி கேளுங்க” என்றாள்.‌

இஷானோ நெற்றியை கீறி, “அமுலும்மா… நீங்களே சொல்லுங்கடா” என்று மண்டியிட, பொம்மைகள் இருந்த இடத்திற்கு வரிசையாக நடந்தாள்‌ ஸ்பைடர்மேன் பொம்மையை எடுத்து பார்வையிட, “எடுத்துக்கோ… என்ன வேண்டுமென்றாலும் எடுத்துக்கோ” என்று ஆனந்தமாய் உரைத்தான். சாக்லேட் பொம்மை, பலூன், பறக்கும் பேட்டரி விமானம் என்று அள்ளியவள், இஷானை பார்த்து “போதும். இல்லைன்னா அம்மா உதைப்பாங்க.” என்றாள்.

“அவ என்ன உதைப்பது. நீ ஆசைப்பட்டதை வாங்கு.” என்றான்.‌

  அமுல்யாவோ அதிகமாக எடுத்துவிட்டதாக தோன்ற, “போதும் அப்பா” என்றாள்.

“நீ அப்பானு சொல்லிட்டே இருந்தா கூட எனக்கு போதாது.” என்று ஃபில் போட போனான்.‌

  வீட்டுக்கு வரவும், நேரம் கடக்க, துகிரா வாசலுக்கே ஓடிவந்தாள்.
  ஷாப்பிங் சென்று வந்ததை  பொருட்கள் தெரிவிக்க, “நான் நேரமாகவும் பயந்துட்டேன். ஒரு வார்த்தை சொல்லலாம் இல்லையா?” என்று இஷானை காண அவன் தாடி இல்லாமல் நறுக்கி வைத்த மீசையில் பேரழகனாக காட்சியளித்தான். அதுவும் இவளை மிரட்டிய செவ்வுதடு, பளிச்சிட்டது.

“என் பொண்ணு என்னோட தானே வர்றா? உன்னிடம் எதுக்கு சொல்லணும். நீ அவளை இத்தனை நாள் அம்மா அப்பா இல்லாத குழந்தைன்னு பார்த்துக்கிட்ட. ஜஸ்ட் அவ்ளோ தான். உன் அளவுக்கோல் எதுவரையோ அதுவரை டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணு.” என்று அம்பை பாய்ந்து கொன்று சென்றான்.‌

– தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.










6 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-10”

  1. Kalidevi

    super plan poduranga ishan amma crt ah work out aganume ena nadakumo, parra pap alagu appanu purinjikitta kiss panathum thadi kuthuthu nu msg pass panra athaium udane panitu vanthu nikuran very good ishan . eppadi serthu vaika pranga unagalanu papom

  2. M. Sarathi

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 10)

    ஆமா, ஆமா… எங்க ஆயா சத்தியமா நீ முற்றும் துறந்த முனி தான், உத்தம புத்திரன்தான் என்கிறதை நாங்களே ஒத்துக்கிறோம். அதனாலத் தான், நீ துகிராவை துர்கான்னு நினைச்சு லிப் லாக் பண்ணதைக் கூட நாங்க அப்படியே காத்து வாக்குல விட்டுட்டோம், மறந்தும் போயிட்டோம் போதுமா.

    அடேய்.. நீ மீசையும் தாடியும் மட்டும் எடுத்தா போதாது, கையோட அந்த நாக்கையும் எடுத்துடு.. தட் இஸ் வெரி பெட்டர்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!