Skip to content
Home » கண்ணுக்குள் கடல்-11

கண்ணுக்குள் கடல்-11

கண்ணுக்குள் கடல்-11

விஹான் தோளை ஆத்திரத்துடனும் ஆவேசத்துடனும் பற்றி பிடிக்கும் நேரம்  நெய்ந்துப்போன சுடிதார் கிழிப்பட்டது‌.

முதுகும் பக்கம் உள்ளாடை தெரிய கிழியவும் விஹான் அவசரமாய் கையை எடுத்தான்.

மானஸ்வியோ முக்காடுயிட்டவள் அவசரமாய் தன் முகத்தை மறைத்த துப்பட்டாவால் மானத்தை காக்க, குளிருக்கு போர்த்துவதாக போர்த்தி அவ்வகடத்திலேயே சுவரோடு ஐக்கியமானாள்.

விஹானிற்கு ஒரு பெண்ணிடம் இப்படி நடப்பது அநாகரீகமாக தோன்றினாலும், அண்ணன் சர்வானந்தனின் நிலையை எண்ணி, மனதை கல்லாக்கி, "எதுக்கு அந்த வீட்டை நோட்டமிட்ட? சொல்லு" என்று கத்தவும், 'என்னாச்சும்மா?, 'பொண்ணுங்கிட்ட இப்படியா நடந்துப்பிங்க?, என்று கூட்டம் சூழவும் கலியமூர்த்தி வந்து சேர்ந்தார். 

“ஹலோ நாங்க லவ்வர்ஸ். எங்க சண்டையை நாங்க பார்த்துப்போம்” என்று விஹான் வாயடைத்து மானஸ்வியை கைபற்றி அழைத்து சென்றான்.

தன் தந்தையின் கார் அருகே மானஸ்வியை இழுத்து வந்து காரில் தள்ளி, “யாருடி நீ? எங்கண்ணா இறப்புல அங்க என்ன பண்ணற?” என்று கர்ஜித்தான்.

“ச..சர்…சர்வானந்தன் சார் இறந்துட்டாரா?” என்று உதடு துடிக்க கேட்டாள்.

இரண்டு நொடி அவளை மேலும் கீழும் பார்வையால் அளந்து “ஆமா? நீ யாரு?” என்றான்.‌

”நான் மானஸ்வி. அவர் தான் என்னை காப்பாத்தினார். அவர்.. அவரை கடல்ல கப்பல்ல சந்திச்சேன்.” என்று கூற, தந்தை சுதாகரிடமிருந்து அழைப்பு வந்தது.

தன் பேண்டிலிருந்து போனை எடுத்து “சொல்லுங்க” என்றான். “எங்கடா இருக்க சர்வானந்தனுக்கு இறுதி காரியம் பண்ணனும். எப்பவும் போல எங்கேயாவது போயிட்டியா?” என்று கேட்டார். என்ன மற்ற நேரமெல்லாம் கோபமாக வார்த்தை வந்து விழும். இன்றோ சர்மானந்தல் இறப்பால் குரல் உடைந்து அழைத்தார்.

டூ மினிட்ஸ் வந்துட்டே இருக்கேன் என்று தந்தைக்கு பதில் தந்தான். என்ன நினைத்தானோ தன் கையில் இருந்த கைக்குட்டையை எடுத்து, “லுக் சர்வானந்தன் இறந்துட்டார். உன்னிடம் இப்ப பேச எனக்கு நேரமில்லை. அதே போல உன்னை நம்பவும் தயாராயில்லை. இந்த கார்ல உள்ளயிருக்கறவங்களை மத்தவங்களுக்கு தெரியாது. நான் திரும்பி வர்ற வரை அமைதியா இரு.” என்று‌ மளமளவென கையை கட்டி வாயை கட்டி பின்னிருக்கையில் தள்ளி விட்டான்.

மானஸ்வியோ பயத்தில் கண்கள் விரிய காரில் பின் சீட்டில் விழுந்தாள்.

பின்னர் விஹான் காரை திறந்து அண்ணனுக்கு இறுதி காரியத்தில் கலந்துக் கொள்ள சென்றான்.‌

பிருந்தா வாய் விட்டு கதறாமல் தாரை தாரையாக கண்ணீரை வடிக்க, கையில் பிரகனென்ட் திட்டை கொடுத்து குலுங்கி அழுதாள்.

‘”கல்யாணம் செய்து தனியா கடைக்கு கூட விட்டுட்டுட்டு போக மாட்டேன்னு சொல்வீங்களே சர்வா. இப்ப என்ன தனியா விட்டுட்டு மொத்தமா போறிங்களே” என்று அழுதவள் ஒரு கட்டத்தில் சர்வானந்தனை தூக்கி செல்ல மயங்கி சரிந்தாள்.

மயானம் சென்ற ஆண்களோ சர்வானந்தனை எரிக்க முடிவு செய்ய, விஹானோ அண்ணன் முகத்தை கடைசியாக தரிசிக்க வந்தவன் அந்த பிரகனென்ட் கிட்டை மட்டும் எடுத்துக் கொண்டான்.‌

சர்வானந்தன் உடலுக்கு தீ வைக்க, சடலம் எரிந்தது.

விஹான் உள்ளமோ அதைவிட கொதித்தது.

இதற்கெல்லாம் காரணமானவர்களை தண்டித்து முடிக்கும் வெறி கட்டுக்கடங்காமல் வெறியானது.

காரில் தன்னிடம் சிக்கிய பெண்ணவளை நோண்டி நொங்கெடுக்கும் கோபத்தோடு வந்தான்.

ஆனால் காரில் வந்து கதவை திறக்க அவள் காணாமல் போயிருந்தாள்‌.

“ஷிட் நான் நினைச்ச மாதிரி அவ நல்லவ இல்லை. யாரோட கை கூலியா வந்து நோட்டமிட்டு இருக்கா.
நான் தனியா வந்திருப்பான்னு நினைச்சு அடச்சி வச்சேன். ஆனா அவ யாரோடவோ வந்து தப்பிச்சிட்டா. இன்னொரு முறை கண்ணுல அகப்பட்ட செத்தடி’ என்று கதவை பட்டென்று சாத்தினான்.

பிருந்தா துணைக்கு கூப்பிட்ட போது வராத பெற்றவர்கள்‌ அவளை கண்டு கண்ணீர்‌வடித்து தாங்கினார்கள். 

மாமானாரும் மாமியாருயம் கூட அவ்வாறு தான் பிருந்தா வீடே பழியென்று கிடந்தார்கள். 

தன்‌மகன் தங்கை மகளை தானே மணந்திருக்கின்றான் என்ற அறிவு தற்போது தெளிந்திருக்க வைத்தது.

அதோடு மூத்த மகனை இழந்த வலி.

இதில் ஜெய்சங்கர் தன் மகனை காணாது போன் வந்ததை பற்றி எப்படி கேட்க? மகன் இங்கு தான் இருப்பதால் அங்கிருந்த பெரிய அதிகாரி கலியமூர்த்தியிடம் எப்.ஐ.ஆர் பதிவு செய்தார்.

புகைப்படம் கொடுத்து டிவியில் காணாமல் போனவர்களை பற்றிய அறிவிப்பில் போடவும் கொடுத்தார்.

  அங்கேயே இருந்திட முடியாதென்று ஹோட்டலில் தங்க புறப்பட, விஹானோ 'இங்கயே இருங்க சார். உங்க பையனை திரும்ப கூட்டிட்டு வர்றது என்னோட வேலை. இது எங்கண்ணா பாதில விட்ட கணக்கு. நான்‌ முடிப்பேன்." என்றான். 

இங்கேயே எப்படி தம்பி” என்று தயங்கிட, “சார் உங்களை மாதிரி தான் இங்கேயும் ஒரு இழப்பு நிகழ்ந்திருக்கு. நிச்சயம் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா பேச முடியாத சூழல். ஆனா உங்கப் பொண்ணு இருந்தா இந்த வீட்ல அவளோட தேவைக்குன்னு நீங்களும். உங்க தேவைக்கு நாங்களும் கவலையை புதைப்போம்.

உங்க பையன் கிடைக்கற வரை இங்கயே இருங்க. அண்ணி ஒரு வார்த்தை சொல்லுங்க” என்றதும் எங்கேயோ வெறித்த பார்வையில் இருந்த பிருந்தா மெதுவாக திரும்பினாள். அண்ணா நீங்க இங்க தாராளமா தங்குங்க” என்ற வார்த்தையை மட்டும் உதிர்த்தாள்.

கணவனை பறிக்கொடுத்த சின்ன பெண் , வாய் நிறைய அண்ணா என்று கூறி தங்க கூறுகின்றாள். இதற்கு மேல் கெஞ்ச விடவேண்டுமா? என்று சம்மதித்தார்‌.

இரண்டு மூன்று நாட்களில் கலியமூர்த்தி சர்வானந்தன் பார்க்கும் கேஸை பற்றி விவரித்து நிலைமையை கூறினார். சட்டப்படி இது தவறு‌. ஆனால் விஹானிடம் மறைக்க இயலாத அளவிற்கு கலியமூர்த்திக்கு சூழல்.

  சிறுவ சிறுமியரை கடத்தும் வீடியோவில் பெண்ணும் இருக்க, அந்த வீடியோவை திரும்ப திரும்ப ஓடவிட்டான்‌.

“சார் இந்த பொண்ணை நான் அண்ணன் இருக்கற தெருவுல பார்த்தேன் என்றான்.‌

“ஆர் யூ சூர்?” என்றார் கலியமூர்த்தி.

“சூர் சார். சிறுவசிறுமியர் கடத்தல் விஷயத்தில் பெண்களும் குற்றம் செய்யறாங்க. அதுவும் கேங்கா” என்று இறுதி காரியத்திற்கு முன் ஒரு பெண் தன்னிடம் மாட்டி பிறகு தப்பித்ததை உரைத்தான்.

கலியமூர்த்தியோ “என்ன விஹான். ஒரு வார்த்தை என் பொறுப்புல விட்டு போயிருக்கலாம். இப்ப அந்த குழுவுல ஒருத்தி கிடைச்சி தவற விட்டிருக்கோம்‌.” என்று வருந்தினார்.

மேஜையில் லத்தியை தட்டியவர் “அந்த பொண்ணு பெயர் ஏதோ சொன்னதா சொன்னிங்க. என்ன பெயர்?” என்று கேட்டார்.

“வீடியோல இருக்கற பொண்ணை நான் பிடிச்சி வைக்கோலை சார். இவ வேற மானஸ்வினு சொன்னா. அண்ணன் தான் காப்பாற்றியதா சொன்னா. அதோட கடல்ல கப்பல்ல சந்திச்சதா.” என்று கூறவும் கலியமூர்த்தியோ “ஏதாவது கதை விட்டிருக்கலாம் விஹான்.

அந்த கும்பல்னு நெரிந்து நீங்க கடுமை காட்டவும் நாடகம் போட்டிருக்கலாம். எதுக்கோ நீங்க பார்த்த பொண்ணு பெயர்ல கேஸ் பைல் இருக்கான்னு பார்க்கறேன்.” என்று கூற விஹான் நன்றியுரைத்து அவ்விடம் இருந்து அகன்றான்‌.


   மானஸ்வியோ கடற்கரையை ஒட்டிய குப்பத்து வீட்டில் 'சர்வானந்தன் சார் இறந்துட்டார். அவரோட வீட்டை சுற்றி அந்த கப்பல்ல இருந்தவங்களோட ஆட்கள் சுத்திட்டு இருக்காங்க. 

ஒருத்தன் என்னடான்னா தான் பெண்ணென்றும் பாராமல் ஆவேசமாய் தோளை பிடித்து உடையை கிழித்தான். போதாதற்கு காரில் வலு கட்டாயமாக தள்ளி கை வாயை கட்டினான்.‌

சற்று நிமிடத்தில் ஒரு பெண் வந்து கதவை திறந்து விட்டாலும், “எங்க அந்த பையன் என்று நிரஞ்சனை கேட்கின்றாள். அவளை தள்ளி விட்டு ஓடிவந்து இங்கு பதுங்கும் வரை உயிர் உடலில் இல்லை.

இதில் வினோத் என்ன ஆனான்? நிரஞ்சன் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்க எப்படி அவனை நல்லவிதமாக தாய் தந்தையோடு சேர்ப்பது?

தன்னையும் தேடும் இந்த கடத்தல் கூட்டத்திலிருந்து தன்னை எங்கணம் பாதுகாப்பது? என்று சிந்தித்தாள். அவளுக்கென யார் இருக்கின்றார்? கவலைகொள்ள?

தன்னை காரில் தள்ளியவர் போலீஸ் சர்வானந்தின் தம்பி என்று மானஸ்வி அறியவில்லை. அதே போல மானஸ்வி நல்லவளென்று விஹானும் அறியவில்லை.

இவர்களுக்கு இடையே பெண் ஒருத்தி வந்து இருவரையும் கெட்டவளாக நினைக்க வைத்த பெருமை விதிக்கே சாரும்.

கடலில் விழுந்த மானஸ்வி குமார் என்பவனின் மீன் வலையில் சிக்க அவனோ அரசாங்க மருத்துவமனையில் சேர்த்தான்.

உடல் தேறி நன்றானதும் முதல் வேலையாக பர்தா அணிந்து சர்வானந்தன் சொன்ன அடையாளத்தோடு இருந்த இடத்திற்கு சென்று நிரஞ்சன் கண்டாள்.

ஏற்கனவே பட்டினியில் இருந்தவன். கடத்தல் கும்பளோடு அடிபட்டு சோர்ந்திருந்தவன் இரண்டு நாளாய் உண்ணாமல் உயிர் கொண்ட சடலமாய் இருந்தான்.

அவனை ஆட்டோவில் தூக்கி போட்டு அரசாங்க மருத்துவமனைக்கு சென்றாள்‌

இவனுக்கும் சிகிச்சை பார்த்து ஓரளவு தேறி, அதே வீட்டில் நிரஞ்சன் தரையில் பாய் விரித்து படுத்திருந்தான்.

லேசாக கண் விழித்ததும் உன்னை காப்பாற்ற சொன்னது சர்வானந்தன் போலீஸ் அதிகாரி. அவர் தான் தன்னையும் காப்பாற்றினார் உன்னை அங்கு அடைத்திருந்ததும் கூறியது அவரே. அவரால் நீயும் நானும் உயிர் பிழைத்தோம்‌. ஆனால் அவர் இறந்து விட்டாரென உரைத்திட காத்திருந்தாள்.

நிரஞ்சன் அசதி காரணமாக சாப்பிட்டு வீட்டில் நிம்மதியாக தற்போது தான் உறங்குகின்றான்.

“இந்தாங்க அக்கா சுடிதாரு. அந்த சுடிதார் அடிக்கடி போட்டு இத்து போனதால் கிழிஞ்சியிக்கும். இதை உபயோகப்படுத்துங்க.” என்று நீட்ட மானஸ்வி தன்னிடம் கூட செல்ல அஞ்சி வாங்கி கொண்டாள்.

"துணியை தானமா கொடுத்தவங்க நல்லதா தான் கொடுத்தாங்க அக்கா. இப்ப அடிக்கடி போட்டதால கிழிஞ்சியிருக்கும். நீ சோறு துண்ணுக்கா" என்று நினைப்பை கலைத்திட தலையாட்டி சாப்பிட்டாள்‌.

-தொடரும்.

7 thoughts on “கண்ணுக்குள் கடல்-11”

  1. Kalidevi

    Eppadiyo kapathita niranjan ah aana ipo serthu vsiksnum family kuda yar vanthu avala car la irunthu open pani vitathu illanavigan vanthu visarichi irupan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *