அத்தியாயம்-5
யாராவது ஹோட்டல் வாசலில் உணவு பொட்டலத்தோடு நின்று போனில் அசட்டயாய் பேசினாலோ, அல்லது பைக்கில் உணவை வைத்து நின்றாலோ சட்டென புயல் வேகத்தில் வந்து பிடுங்கி ஓடிவிடுவது தான், நிரஞ்சன் தன் உணவிற்காக செய்யும் செயல். ஒரு வாரத்திற்கு மேலாக இப்படி திருடி சாப்பிடுகின்றான்.
திருடுவது தவறென்று சிவகாமி சொல்லி வளர்த்தாலும், ஏன் ஒருமுறை காலில் பிரம்பால் அடித்து வெளுத்த போதும், திருட மாட்டேன் அம்மா’ என்று கண்ணீர் வடித்த அதே நிரஞ்சன் தான் எவ்வித கவலையின்றி ரோட்டில் போவோர் வருவோரை கண்டு வேடிக்கை பார்க்க திருட்டு உணவை விழுங்கினான்.
காலாட்டி பேருந்து நிறுத்தத்தில் உணவை சாப்பிட்டு முடிக்க, அரசியல் கட்சி உபயத்தில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் மோர் பந்தல் அருந்தினான்.
அதை மீறி ஏதாவது சாப்பிட நினைத்தால் கடைக்காரரிடம் சிப்ஸ் முறுக்கு மாங்காய் பத்தை என்று கேட்பான். அவர்களும் கொடுக்க, பணத்தை கேட்கும் தருணம் ஓட்டமெடுத்து சந்து பொந்தில் ஒளிந்தான்.
இப்படி திருடி விளையாடுவது அவனுக்கு ஏதோ விளையாடுவது போல தோன்றியிருக்க வேண்டும். அதனால் தான் திருட்டும், தன்னை தேடுவார்களென்ற நினைப்பும் துளியும் இல்லை.
பள்ளிக்கு எடுத்து செல்லும் பையில் இரண்டு செட் டிரஸ் எடுத்து வந்ததால் அதை மாறி மாறி அணிந்தான்.
அன்று ஒருவனிடம் மாட்டி அடிவாங்கினான்.
அடித்தவன் சற்று ஈவு இரக்கம் பார்க்கவில்லை. முடியை பிடித்து உலுக்கி, ‘சின்னதுலயே திருடன், இதே பொழப்பா சுத்தறிங்க வெளுத்தான்.
அருகில் இருந்த நபரோ “ஏன்பா சின்ன பையனை போட்டு அடிக்கிற. அவனுக்கு என் தெரியும் பசகக்குன்னு பையில் கை வச்சியிருப்பான்” என்றார்.
“உங்களுக்கு தெரியாது அண்ணே சின்ன பசங்க வெச்சி திருடினால் தான் மாட்ட மாட்டாங்கன்னு தைரியமா அனுப்புறாங்க. இதுயெல்லாம் பெத்தவங்களே திருடி கொண்டு வர சொல்லற கூட்டம்” என்று நிரஞ்சனின் தாய் தந்தையருக்கும் அசிங்கமான திட்டு கிடைத்தது.
அதோட் விட்டால் தானே?! “நம்ம சின்ன பசங்கன்னு பாவம் பார்க்க கூடாது. போலீஸ்ல மாட்டி முட்டிக்கு முட்டி தட்டி வைக்கணும்.
இல்லன்னா வருங்காலத்தில் இப்படி சின்னதுலையே திருட்டு, கொலை, கற்பழிப்புன்னு வந்து நிப்பாங்க” என்று கூற போலீஸ் என்றதும் நிரஞ்சன் பயந்து திமிரினான்.
இன்றே அகப்பட்டு இருந்தாலும் போலீஸ் இடம் எப்படியாவது யார் என்ன என்று விவரம் அறிந்து தாய் தந்தையோடு சேர்த்து இருப்பார்.
அவனும் நல்லபடியாக வாழ்ந்திருப்பான். ஆனால் நிரஞ்சன் திமிரி கொண்டு ஓட ஆரம்பித்தான்.
எத்தனை நாள் தான் ஓட முடியும் விதி இனி என்னிடமிருந்து ஓடாதே என்று ஒருநாள் சொல்லத்தான் போகிறது அதுவரை இந்த சுதந்திரம் ஆவது அனுபவிக்கட்டும் என்று விட்டு வைத்தது.
நிரஞ்சன் ஓடி ஓடி களைத்து மூச்சு வாங்க ரோட்டு ஓரத்தில் இருக்கும் குப்பை தொட்டிக்கு பின்னே மறைந்தான்.
இன்று சுதந்திரமாக யாரின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இருக்கின்றான் இந்த நல்ல நாளும் சில நாளில் இழப்பது உறுதி. சர்வானந்தன் போலீஸ் உடையில் வண்டியில் செல்ல, குப்பை தொட்டியிலே மூச்சு பிடித்து குதித்தான். தன்னை பிடித்த நபர் பொலீஸை அழைத்து விட உடனடியாக வந்து விட்டார்களோ என்ற பயம்.
சர்வானந்தனோ குப்பைத் தொட்டியில் சத்தம் கேட்க என்னவென்று வண்டியை நிறுத்தி திரும்பினான்.
குப்பைத்தொட்டியில் நாய்கள் குதித்திருக்கும் என்று தவறாகவே எண்ணிக்கொண்டு மீண்டும் வண்டியை கிளப்பினான்
புதிதாக திருமணமான ஜோடியல்லவா. வீட்டை நாடி செல்லும் முனைப்பு அவனிடம் இருந்தது.
இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து சேர வாசலில் சில ரோஜா செடி, ஹாலில் சோபா டீப்பாய், சுவரில் டிவி, என்றிருக்க, பிருந்தா சுவரில் தொங்கிய கடிகாரத்தை கண்டாள்.
வாய் திறக்காமல் ‘மணி என்னவாகிறது?’ என்பது போல இருந்தது அவளது செய்கை.
“எட்டு மணி ஷோ தானே? எதுக்கு விசாரணை கைதி ரேஞ்சுல லுக் விடற? முகமலம்பிட்டு டிரஸ் மாத்திட்டு வர்றேன். நீ தானே உன் கூட வர்றப்ப எல்லாம் யூனிபார்ம்ல வரக்கூடாதுனு சட்டம் போட்டியிருக்க.?” என்று குளியலறைக்குக்குள் புகுந்தான்.
குளியலறையில் தண்ணீர் சத்தம் தாண்டி "போலீஸையே மிரட்டறா. இதுக்கு எல்லாம் சட்டம் இல்லை. ஊருக்கே ராஜானாலும் பொண்டாட்டிக்கு கூஜா தூக்கணும்" என்று முனங்கி குளிக்க, பிருந்தா புன்னகையோடு "அங்க என்ன சத்தம்? டைம் ஆகுது" என்று கூடுதலாக விளையாடினாள்.
"வர்றேன் டி" என்று குரல் கொடுத்து இடுப்பில் துண்டை கட்டி ஈரம் சொட்ட வந்தான்.
“இன்னும் ஒரு மாசத்துல ஓடிடிலயே ரிலீஸ் பண்ணிடுவான். அந்த படத்துக்கு போகணும்னு துடிக்கிற? வரவர காசு தண்ணியா செலவழிக்கற பிருந்தா” என்று டீ-ஷர்ட் ஜீன் அணிந்தான்.
"ஆஹ்ஹான் இப்பவே இப்படியா? முன்ன பேச்சுலர் சார் நீங்க. சம்பளத்தை வாங்கி அப்படியே அத்தையிடம் கொடுத்திருப்பிங்க. இப்ப அப்படியா? வீட்டை சுத்தி பாருங்க. கிச்சன்ல ஸ்டவ், பாத்திரம், தட்டு, மிக்ஸி ஆரோனு இருக்கு. ஹால்ல, டிவி சோபா தவிர வேறென்ன இருக்கு. இன்னும் கிரைண்டர் வாங்கணும். டைனிங் டேபிள் வாங்கணும் டைய்லி ஜுஸ் பிழியறேன் ஒரு ஜுஸர் வாங்கணும்." என்று அடுக்கினாள்.
“ஏய்… இப்ப படத்துக்கு போறோமா? இல்ல சண்டை போட போறோமா ஒழுங்கா அதை முதல்ல சொல்லு.
நானும் வீட்டுக்கு தேவையானது எல்லாம் ஒவ்வொன்னா வாங்கி கொடுக்க தான் செஞ்சிட்டு இருக்கேன் இப்ப கூட பாரு நம்ம ரூம்ல பெட்டு அதுவும் டபுள் காட் பெட்டு, நல்லா மெத்து மெத்துன்னு வசதியா வாங்கியிருக்கேனா இல்லையா?” என்றான் சர்வானந்தன்.
“அடடடா… அது உங்க வசதிக்கு வாங்கியது.” என்றவள் மற்ற வார்ந்தையை சர்வா காதில் மட்டும் கேட்கும் விதமாக முனங்கினாள்.
சர்வானந்தனோ ‘வரவர பயங்கரமா பேசற பிருந்தா” என்று அணைக்க, ”கப்பவே மணக 7.45 இங்கிருந்து போகவே தியேட்டர் போகவே இருபது நிமிஷம் ஆகும். இதுல டிக்கெட் வேற எடுக்கணும்.” என்று தள்ளி விட்டாள்.
“ஏய்… அதெல்லாம் விளம்பர பெயர் போடறப்பவே உன்னை கூட்டிட்டு போயிடுவேன்.” என்று கூறவும் வீட்டை பூட்டினார்கள்.
சல்வார் அணிந்து பூவை சூடி சர்வானந்தன் தோளில் கைவைத்தாள்.
முக்கு முடுக்கெல்லாம் வண்டியை செலுத்தி பதிமூன்று நிமிடத்தில் தியேட்டருக்கு வந்தான்.
“எப்படி வந்துட்டோம்ல” என்றான்.
பிறகு அங்கே சென்றால் படம் ஏழரைக்கே ஆரம்பமானது என்று டிக்கெட் கவுண்டர் இடத்தில் கூற, பிருந்தா மூக்கு முட்ட முறைத்தாள்.
தங்கள் இடம் தேடி வந்து அமர்ந்தார்கள்.
தியேட்டரில் நைட் ஷோ என்பதால் ஒரளவு காலியிடங்கள் இருந்தது.
“பெரிய பெரிய பேச்செல்லாம் பேசுனிங்க. பாருங்க அரைமணி நேரம் படம் போயிடுச்சு இதுல விளம்பரம் போறதுக்கு முன்னாடியே கூட்டிட்டு போயிடுவேன்னு என்று கெத்து வேற.” இன்று முழங்கிக் கொண்டே சீட்டில் உட்கார்ந்தாள்.
சர்வானந்தம் ஏதேனும் பேசினால் சண்டை கூடும் என்று அமைதியாக காதில் கை வைத்து சாரி என்று முடித்துக் கொண்டான்.
படமும் சென்று கொண்டிருப்பதால் கிசுகிசுவென சண்டை போடும் நோக்கத்தையும் பிருந்தா விட்டொழிந்தாள்.
ஆனால் சர்வானந்தன் பிருந்தாக்கையை தீண்ட வரவும் பிருந்தாவும் கையெடு என்று அடிக்கடி எடுத்துக் கொண்டால் இவர்களின் ஊடல் ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டிருக்க மறுப்பக்கமும் கூடலுக்கு முன்னுதாரணமாக முத்தங்களை பரிமாறிக் கொண்டிருந்தனர் ஒரு ஜோடி.
நைட் ஷூ டிக்கெட் எடுத்து வினோத் மானஸ்வியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருந்தான்.
திருமண விவகாரம் பேச வேண்டும் என்று சொல்லித்தான் அழைத்தான் ஆனால் நேராக தியேட்டரில் வந்து திருமண பேச்சை தவிர்த்து அவளிடம் கரங்களைத் தீண்டி முத்தமிட்டான்.
ஒரு கட்டத்தில் மனதை மயக்கி உருக்கும் பாடல்கள் வரவும் வினோத் தன் கட்டுப்பாட்டை இழந்தவனாக மானஸ்தன் முகத்தை தன் பக்கம் திருப்பி தாடை பிடித்து இதழில் முத்தமிட நெருங்கினான்.
மானஸ்வி அவன் செய்கை பிடிக்காமல், திமிரினாலும் வினோத் விடுவதாக இல்லாமல் இதழை கொய்தான்.
படத்தில் பாட்டு முடிவடையும் நேரம் மானஸ்வி வினோத்தை தள்ளிவிட்டு ‘என்ன பண்ற வினோத்?’ என்றாள்.
“ஜஸ்ட் ஒரே ஒரு கிஸ்” என்று தோளைக் குலுக்கினான்.
“கட்டிக்கபோறவன் உரிமையா பழகக் கூடாதா. வீட்டுக்கு வந்து பேசுவனு நினைச்சேன். இப்படி தியேட்டர்ல வந்து உட்கார்ந்திருக்கோம்” என்று குமைந்தான்.
“கிஸ் பண்ணலாம் தப்பில்லை. அதுவும் பஸ்ட் கிஸ்… எவ்ளோ இனிமையான நினைவா பதிய வைக்கணுப். ஆனா நீ… நீ… குடிச்சியிருக்க வினோத்.” என்று வருந்தினாள்.
இரவு நேரம் அமைதியாக திருமண பேச்சை மெதுவாக பேசியபடி முடிவெடுக்க நினைத்த மானஸ்வி. ஆனால் வினோத் இப்படி வரவும் ஏமாற்றம் கொண்டாள்.
“ஆபிஸ்ல சின்ன பார்ட்டி லைட்டா குடிச்சேன். இப்ப என்ன? உன்னை ஏதும் பண்ணியதா சீன்போடற. மிஞ்சி மிஞ்சி கையை பிடிக்க விடுவ. கட்டி பிடிக்க விட்ட. ஆசையா முத்தம் கொடுத்தேன். என்னடி தப்பு?” என்று லேசாக கத்த, ‘இப்ப இவனிடம் பேசறது டோட்டலா தப்பு காலையில் பேசிக்கலாமென்று தன் கைப்பையை எடுத்து, “ஓகே வினோத் நான் கிளம்பறேன். இன்னிக்கு எதுவும் பேச வேண்டாம். இன்னொரு நாள் பார்க்கலாம்” என்று அவன் பதில் கூற விடாமல் எழுந்து தன் செருப்பு சப்தம் அதீத ஓசையெழுப்ப வேகமாக நடந்தாள்.
“ஏய்…. மானஸ்வி. மானு” என்று பின் செல்ல தடுமாற்றத்தோடு விழுந்து எழுந்து வெளியே வந்து பார்க்க ஆட்டோவில் மானஸ்வி செல்வதை கண்டு தரையில் காலை ஓங்கி உதைத்தான்.
-தொடரும்
Interesting viduma police karan konjam late panitan. Oru ponna love panna ava kitta pesanumna crt aana edathula vachi peaanum athu ena theater la vachi ippadi panrathu crt time la purinjitu elunthu poita manasve
அப்படின்னா… இந்த வினோத் கெட்டவனோ…?
Niranjan um sarva vum adikkadi meet panra situation varuthu aana pakka mudiyala
Nice epi
Nice going
Nice
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Very interesting