Skip to content
Home » கண்ணுக்குள் கடல்-8

கண்ணுக்குள் கடல்-8

அத்தியாயம்-8

பிருந்தா சர்வானந்தன் இருவரும் நிரஞ்சனை பற்றி பேசிப் பேசியே கோவில் இருந்து வீடு திரும்பி இருந்தார்கள். சர்வானந்தன் இன்று வீட்டிற்கு விரைவில் வந்ததனால் நிறைய பேச வேண்டும் என்று ஆசையோடு இருந்தாள்.

இன்று விரைவாக வந்திருந்தாலும் பேச்சு என்னவோ தங்களைப் பற்றி அல்ல. கோவிலில் சந்தித்த நிரஞ்சனை பற்றி மட்டுமே இருந்தது.
அதுவும் அவனது கால் ரெக்கார்ட் ஆடியோ கேட்டுவிட்டு சர்வானந்தன் எப்படியாவது இவனை பெற்றோரிடம் சேர்த்திட நினைத்தான்.

ஒரு போலீஸ் அதிகாரியாக அவன் செய்வது தான். தன் காதல் கொண்ட மனைவி கேட்ட பின்னும் இதில் தீவிரமாக இறங்க எண்ணினான்.

ஏற்கனவே சிறுவர் சிறுமியர்களை கடத்திச் செல்லும் கூட்டத்தை பிடிக்கும் கேஸ் பைல்ஸையும் அவன் பார்க்க, இதில் சிறுவனை தாய் தந்தையோடு இணைத்து வைப்பது தானே? என்ற எண்ணம். இரண்டு மூன்று முறை இதே வட்டாரத்தில் நிரஞ்சன் என்ற சிறுவனை கண்டுவிட்டதால் இங்கு தான் சுற்றுவானென்று மிதப்பில் இருந்தான் சர்வா.

“பொண்டாட்டி என்ன கோவிலுக்கு எல்லாம் போயிட்டு வந்திருக்க?” என்று கன்னம் உரச இடித்து அமர்ந்தான். வேலையை தாண்டி புருஷனின் கடமையும் உண்டல்லவா.

இரவு உணவுண்ணும் நேரம் முடிந்தால் முழு நேர காவலன் காதலனாக காட்சி தர, “என் மாமியாரை பார்க்க போனேன்.” என்று சர்வானந்தன் மூக்கை கிள்ளி எடுத்தாள்.

“கள்ளி என்ன வேலை இது?” என்று கேட்டான்.

“கள்ளியும் இல்லை வள்ளியும் இல்லை. அத்தை தான் உங்களிடம் பேசினதா சொன்னிங்க. அதான் என்னிடமும் பேசுங்கன்னு நேர்ல அவங்க முன்ன போனேன்.

என்னை பார்த்து பார்த்து தலையை எனக்கு பின்னாடி தேடினாங்க. உங்களை தேடவும், “உங்க பையன் வரலை‌.‌ நான் தான் உங்களை சந்திக்க ஆசைப்பட்டேன்னு பேசவும், உட்கார்ந்தாங்க.

கோபமா அத்தைனு கேட்டேன். என் மூஞ்சை மூச்சை உத்து பார்த்தாங்க. என்னனு கேட்டதும், 'நல்லா அழகா தான் இருக்கே. அதான் என் பிள்ளை உன்னை தேடி வந்து தாலி கட்டிட்டான்.

அவனோட சண்டைகிண்ட போடாம வாழு. என் பிள்ளை எந்த நேரம் வந்தாலும் சூடா சாப்பிடுவான். கொஞ்சம் சிரமம் பார்க்காம சமைச்சி போடு. அவன் அடிக்கடி சொடக்கு போடறதுக்கு முன்ன கிளம்பிடுவான். அதனால் சில நேரம் சாப்பிடாம ஓடுவான்‌ நீ தான் கவனிக்கணும்.

இப்ப உங்க மாமா கூப்பிட்டுக்கலைனாலும் அவருக்கு விஹானை விட சர்வானா உசுரு.

கூடவே வச்சிக்க நினைப்பார். அதனால் அடிக்கடி உங்க அப்பாவுக்கு கால் பண்ணி பேசுங்கன்னு சொல்லிட்டே இருன்னாங்க.. இப்படி நிறைய நிறைய அடுக்கிட்டே போனாங்க.

ஏங்க ஒழுங்கா சாப்பிட கூட தெரியாதா? சை... என்னை விட பெரியவர் ஆனா அத்தை சொல்லறதை பார்த்தா நீங்க இன்னமும் எல்.கே.ஜி குழந்தை கணக்கா இருப்பிங்க போல. விட்டா இடுப்புல தூக்கி வச்சி சோறுட்டுன்னு சொல்வாங்க." என்றதும் தன் அன்னையின் அன்பில் நெகிழ்ந்தவன் அவள் கடைசியாக சொன்ன கேலி பேச்சில் இடையில் கிச்சுகிச்சு மூட்டி "எங்கம்மாவுக்கு நான் குழந்தை பிள்ளை டி" என்றான்.

“சர்வா.. கூசுது விடுங்க” என்று துள்ள துள்ள கட்டில் சாம்ராஜியத்தில் காதல் அம்பை விதைத்து கல்மிஷம் செய்தான்.

அடுத்த நாள் காலை எழுந்ததும் சிவகாமி எண்ணிற்கு போன் போடவும், சுவிட்ச் ஆப் என்று‌ வந்தது. 

சார்ஜரில் போடாத காரணத்தால் போன் சிவகாமியை போல செயலிழந்தது. என்ன போனிற்கு யாரேனும் உயிர் கொடுத்தால் அது மிளிர்ந்து விடும். மகனை காணாத சிவகாமி இனி‌யாராலையும் அழைத்து வராத இடத்திற்கு சென்றிருந்தாள். 

“என்னங்க நேத்து நிரஞ்சன் போட்ட நம்பருக்கு கால் பண்ணினா காலே போகலை” என்று காபி பருக வந்தாள் அவனுக்கும் எடுத்து வந்தாள்.

“நானே ஸ்டேஷன் போயிட்டு விசாரிக்க நினைச்சேன். நீ இப்பவே கேஸை கையில் எடுக்கற. அவங்க போன் எடுக்கலைனாலும் போன் ஓனருக்கு கால் பண்ணி இந்த பர்டிகுலர் நம்பரோட விலாசம் வாங்கிடுவேன். என்ன உடனே முடியாது நேரமடுக்கும். அந்த பையனையும் தேடணும் இல்லையா?” என்று காபி பருக, ”ம்ம்ம.. பாருங்க. நானும் விடாம கால் பண்ணறேன். போன் அட்டன்‌ பண்ணினா அடுத்த செகண்ட் பிரச்சனை பற்றி சொல்லிடுவேன்‌‌. அப்பறம் போட்டோ கேட்டு‌ எப்படியாவது நிரஞ்சனை கண்டுபிடிப்போம்.” என்று‌ கூறவும் குக்கர் சத்தம் உஸ்ஸ்ஸ்ஸ் என்றது.

சாம்பார் ரெடி. இட்லி ஊத்திட்டா டிபன் முடிஞ்சது.

‌”மதியம் குழந்தை கடத்தல் கும்பல் இருக்கற ஏரியாவுக்கு போகறதா இருக்கும். லஞ்ச் வெளியே பார்த்துக்கறேன்.

பிந்து நீ சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கு. அப்ப தான் குண்டா இது மாதிரி ஆவ” என்று லேசான உப்பசமானவளை கிண்டலடித்தான்.

“சிரிக்காதிங்க வந்தப்ப கூட ஒல்லியா இருந்தேன். அதென்னவோ குண்டாகிட்டே இருக்கேன்.” என்று கூறவும், “என்னோட பிருந்தா பப்லியா மாறினாலும் அழகு தான்” என குளிக்க சென்றான்.‌

மனைவி கையால் சாப்பிட்டு அவளது சேலை முந்தானையில் வாய் துடைத்து இருசக்கர வாகனத்தில் பறந்தான்.

இன்றோடு சர்வானந்தன் வீடு திரும்புவது சாத்தியமில்லாதது என்று விதி கொஞ்சம் ஜாடையாக எடுத்துரைத்திருந்தாலும் கண் நிறைந்த கணவனை அனுப்பாதிருப்பாள். ஆனால் விதி அப்படியொரு முன்னெச்சரிக்கையை கொடுக்கவில்லை‌யே.


காசிமேடு பகுதியில் நின்றிருந்தனர் வினோத் மானஸ்வி.

“வினோத் போட்ல போகப் போறோமா?” என்று தயக்கமாய் கேட்டாள் மானஸ்வி. “ஆமா மனு. அம்மா கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டார்கள்.

இனி என்ன கல்யாணத்துக்கு நாள் பார்க்க வேண்டியது தான்.” என்றான்.‌

“ஓகே டா… அதுக்கு கடலுக்குள் போகணுமா?” என்று பயந்தாள்.

“ஏய் அம்மாவே ஓகே சொல்லிட்டாங்க. செலிபிரேட் பண்ண வேண்டாம் அதான் வித்தியாசமா ஆளில்லாத கடலில் ஒரு கிஸ் கிடைச்சா கூட போதும்னு போட்டை வாடகைக்கு எடுத்தேன்.

நடுக்கடல்ல உன்னிடம் காதலை கத்தி சொல்லணும்.” என்று பலவித காதல் கனவுகளோடு அவள் கையை கொடுக்க ஊக்கினான்.

தட்டு தடுமாறி இனி வினோத் தானே எல்லாம் என்று அவன் கரம் பற்றி இறங்கினாள். 

போட்டில் படகு ஓட்டும் ஆடவன் இவர்கள் இருவரையும் அழைத்து நகர்ந்தது.

கற்பாறை பகுதியில் இருந்து கடலில் மிதந்தது படகு.

போட் ஓட்டுப்பவன் இல்லையென்றால் மானஸ்வியை கொஞ்சி முத்தமிட்டு பள்ளியறையாக கூட மாற்றியிருப்பான் வினோத்.

படகுகள்காரனை தவிர்க்க இயலாதே. படகுகாரனோ பணத்தை நோட்டமிட்டவன் இவர்களை காணாதது போல படகை செலுத்தினான்.

‌‌”வினோத் இப்படி படகுல நாம மட்டும் போறதுக்கு எவ்வளவு செலவு?” என்று கேட்டாள்.

“அந்த கவலை உனக்கென்ன? நான் என் காதலியை அம்மாவிடம் சொல்லி கல்யாணத்துக்கு ஓகே வாங்கின சந்தோஷத்துல செலவு பண்ணுறேன். உனக்கென்ன ஆப்டர் மேரேஜ் சிக்கனமா இருந்துக்கறேன்” என்று கடலை கண்டு அர்ப்பரித்தான்.

இப்படி தனியாக கடலில் செல்வது மானஸ்விக்கும் பிடிக்க வேறெதும் வறுத்து எடுக்கவில்லை.

“அம்மாவுக்கு போன்லயாவது பேச வச்சியிருக்கலாம். கால் பண்ணி தாடா” என்றாள்.

வேகமாக நம்பரை அழுத்தினான். ஆனால் ரிங் போகவில்லை. படகுக்காரனோ “சில இடத்துலே சிக்னல் கிடைக்காது தம்பி. வேறோரு பக்கம் போனா கிடைக்கும்.” என்று கூற, வினோத்தோ “சாரி டியர் கரைக்கு போனதும் கால் பண்ணி தர்றேன்” என்று வாக்கு தந்தான்.

மானஸ்வியும் சரியென்று தலையை ஆட்டினாள்.

கடலில் மீன்கள் நீந்துவது லேசாக தெரிய அதெல்லாம் பார்த்து வந்தாள். புகைப்படமாக வினோத்தோடு எடுத்தாள். நேரங்கள் கழிய வெயில் மண்டையை பிளப்பது கூட அறியாது ரசித்தனர்.

மானஸ்வியோ, “வினோத் என்கிட்ட இதுவரை பத்து சவரன்கிட்ட நகை சேர்த்து வச்சிருக்கேன். அதோட 1கோடிக்கிட்ட சேவிங்ஸ் இருக்கு. கல்யாணத்துக்கு அதுலயிருந்து செலவு செய்வேன். நீ வாங்கிக்கணும். அத்தை என்னைக்காவது காதலிச்சு என்னத்த கொண்டு வந்தான்னு கேட்டுட கூடாது.

அப்பறம்” என்றதும் வினோத் அவளிதழை முத்தமிட்டு பேச்சை அடைத்தான்.

படகுகாரன் வேறு திசையில் பார்வையிருக்க, லேசான நகைப்பு பீறிட்டு முத்தங்களை ஏற்க ஆரம்பித்தாள்.

இமை மூடி ரசிக்க, நேரங்கள் கடந்து படகை ஏதோவொன்று இடித்தது.
லேசான ஆட்டம் கண்டு தள்ளாட, இதழ்கள் விடுபட்டு இமை திறந்தார்கள் இருவரும்.

படகை ஒரு கப்பல் இடித்து அதிலிருந்து கயிற்றை போட்டார்கள். படகுகாரன் பல்லிளித்து மேலே ஏறினான், “ஹலோ நீங்க அங்கப் போனா படகை யார் ஓட்டறது?” என்று வினோத் கேட்க, “படகு கயிறு போட்டு கட்டியாச்சு. இனி கப்பலோட அது துணையா நிற்கும். உன் கேர்ள் பிரெண்டடை நாங்க ஒட்டறோம்” என்று குண்டு கட்டாக மானஸ்வியை தூக்கினார்கள் பின்னால் இருந்தவர்கள். கயிற்றை போட்டு மடமடவென இரண்டு பேர் குதித்திருந்தனர்.

மானஸ்வி பயத்தில் திமிர, வினோத்தை அறைந்து அவனையும் ஏணியில் ஏறக்கூறினார்கள்.

மறுத்து தள்ளாட, அங்கிருந்த ஆட்கள் அடித்து இழுத்து சென்றனர்.

நொடியில் இதமான சூழல் இதுபோன்ற சூழலாக மாற அதனை ஏற்க முடியாது மானஸ்வி வினோத் இருவரும் பயந்தார்கள்.

சுற்றிலும் கடல், தனியாக போட்டில், கப்பலோடு கட்டப்பட்டிருக்க, கப்பலில் வேறு எருமை மாடுகள் போல உடல்வாகு கொண்ட அரக்கர்களாக ஆட்கள். 

பார்க்கவே பயம் கவ்வியது. தனியாக வந்தது தவறென மானஸ்விக்கு புரிய துவங்கியது. அதுவும் வினோத் அடிவாங்கி துடிக்க, பக்கத்தில் காக்கி உடை தென்பட்டது.

போலீஸ் என்றதும் கண்கள் பிரகாசிக்க, அடுத்த கணம் கண்கள் விரிந்தது. காக்கி உடையெல்லாம் இரத்தம் வழிந்திருந்தது.

காக்கி உடையில் பெயர் ‘சர்வானந்தன்’ என்றிருக்க இதெல்லாம் காணும் கண்களுக்கு தன் இடையை வளைத்து தன்னை பூதகரமாக ரசிக்கும் கூட்டத்தை தாமதமாக கண்டாள்.

நெஞ்சு விம்ம, நிலைமையை உணர்ந்து உடலை உதறி விடுபட முயன்றாள். மானஸ்வி உடல் இயற்கையிலே மிருதுவானது‌ ஒல்லியான தேகம் அதே சமயத்தில் வனப்பானது, குண்டுக் கட்டாக தூக்கிட மிகவும் வசதி.

ஆட்களை பூங்கரத்தால் அடித்து பார்த்தால், கடித்து பார்த்தால், நகத்தால் பிராண்டிட முயன்றாள். எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

அந்த கும்பலில் ஒருவன் பளீரென அடிக்க சுருண்டு விழுந்தாள் மானஸ்வி.

“சரக்கு அடிச்சிட்டு வந்து உன்னை கவனிக்கிறேன். இன்னிக்கு இங்கிருக்கற மனித சுறாவுக்கு நீ தான் இரை. நாங்க மிச்சம் மீதி வச்சா கடலில் இருக்கற சுறாவுக்கு நீயும் உன் லவ்வரு, அப்பறம் இந்த வீணாப்போன ஜேம்ஸ்பாண்ட் போலீஸ் தான் இரைகள்.

தயாராயிரு” என்று சென்றதும், “வினோத் வினோத்” என்று அஞ்சியவளாக காதலனின் கன்னம் தட்டி எழுப்ப முயன்றாள்.

அசையாமல் கண்ணை திறவாது இருந்தவனை கண்டு அடிவயிறு சில்லிட்டது. நெஞ்சு பகுதி காலியாக, அவன் முகத்தை ஏறிட, வினோத் மூச்சு விடுவது தெரிந்தது.

“வினோத் எழுந்திரிடா‌ பயமாயிருக்கு” என்று அழுதாள்.

-தொடரும்

6 thoughts on “கண்ணுக்குள் கடல்-8”

    1. Avatar

      அச்சோ பாவம்..! மாட்டிக்கிட்டாளா…? அந்த சில்லறைப் பையனை நம்பி போயிருக்க கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *