அத்தியாயம்-5
பிரதீப் தன் கடந்தகாலத்தை கூறத்துவங்கினார். “நான் தனி மனுஷன் இல்லைடா. அப்பா அம்மா, அண்ணா, அக்கா தம்பின்னு எல்லா உறவும் எனக்கு இருந்தது.
நான் கோ-எஜிகேஷன் ஸ்கூல்ல படிச்சேன். அங்க நானும் கல்பனாவும் பிளஸ் டூ படிக்கறப்பே லவ்வர்ஸ்.” என்றதும் பிரசன்னா இதுவரை என்னது இத்தனை உறவுகளோடு பிறந்து வளர்ந்திருந்தவரா? என்று ஆச்சரியப்பட்டவன் ‘பள்ளிக் காலத்திலேயே காதலா?’ என்று அதிர்ச்சியும் அடைந்தான்.
“எனக்கு அப்ப… பதினெட்டு வயசு… நானும் கல்பனாவும் ஒரே காலேஜ். அப்ப காலேஜ் படிக்கும் போது ஏதாவது கிப்ட், சாக்லேட், லவ் லெட்டர் இப்படி அடிக்கடி தருவேன். போன்லயும் மணிக்கணக்கா மெஸேஜ்ல பேசிப்போம். அப்பல்லாம் 100 மெஸேஜ் ஃப்ரி.
சந்தோஷமா காதலிச்சிட்டு இருந்த சமயம் பஸ்ட் இயர்லயே படிக்கறப்ப கல்பனா வகையா வீட்ல மாட்டிக்கிட்டா. இந்த போன் சாட்டிங், லவ் லெட்டர்ஸ், காய்ந்த பூ, சாக்லேட் கவர்ஸ்.. குட்டி குட்டி கிஃப்ட் இதெல்லாம் மாட்டிவிட்டுடுச்சு.
அவ மாட்டியதால என் காதல் விவகாரம் எங்க வீட்லயும் தெரிந்தது. எங்க வீட்ல, அக்காவுக்கு கல்யாணம் முடிச்சி, அப்ப தான் அவ மாமியார் வீட்டுக்கு போயிருந்தா. பெரியண்ணாவுக்கு பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க.
இதுக்கு நடுவுல என் காதல் விவகாரம் தெரியவும், அப்பா அம்மா அடிவெளுத்தாங்க.
படிக்க அனுப்பினா காதலானு. ஆனா… என்னை காலேஜிக்கு அப்பவும் அனுப்பினாங்க. வருத்தமான விஷயம் கல்பனா வீட்ல அவளை காலேஜில இருந்து நிறுத்திட்டாங்க.” என்றார்.
அந்த நேரம் ரொம்ப வெக்ஸா, சுத்திட்டு இருந்தேன். அப்ப கத்துக்கிட்ட ரொம்ப நல்ல பழக்கம் தான் இந்த சிகரேட் தண்ணி இரண்டும்.
தண்ணி அடிச்சா.. வீட்ல மாட்டிக்கிட்டு அப்பா தோளை உறிச்சிடுவார். சோ… சிகரெட் மட்டும் நிறைய யூஸ் பண்ணினேன்.
வீட்டுக்கு போறதுக்கு முன்ன, சிக்லெட் வாங்கி மென்னு திண்ணுவேன்.
இப்படி தான் போச்சு. கல்பனா கூட பேசமுடியலை. அவளுக்கு வேற சொந்தத்துல யாரையோ பேசி முடிவு செய்ய போறதா கேள்விப்பட்டேன். அந்த சோகத்தோட, மெரீனா பீச் போனேன். அங்க…. சுனாமி வந்துச்சு.
சுனாமி… அப்படின்னா என்னனு கூட அதுக்கு முன்னாடி சரியா தெரிந்து வச்சிக்கலை. ஆனா நேர்ல பார்த்தேன்.. அவ்ளோ பெரிய அலை ஆளையே முழ்கடிக்க வந்தது.
அன்னிக்கு நான் செத்தேன்னு நினைச்சேன்.
துரதர்ஷ்டவசமா எப்படியோ உயிர் பிழைச்சிட்டேன்.
கடலலை பேரலையா வந்து மோதி அடிச்சி, பல்லாயிரக்கணக்கான உயிரை அள்ளிக்கிட்டு அன்னிக்கு போச்சு. சென்னைனு இல்லை.. கன்னியாக்குமாரி திருச்செந்தூர்னு நிறைய இடத்துல..
அதுல… சென்னை மெரீனாவுல நான்.. நான் உயிர் பிழைச்சேன்.
ரொம்ப சிக்கலான தருணத்துல அத்தனை உயிர் இறந்து கிடந்து செய்தில ஓடிட்டு இருக்கு. தொப்பலா நனைந்து மயங்கி சரிந்து, கடல் தண்ணி வயிற்றுல குடிச்சி, கரையொதுங்கியிருந்தேன்.
அன்னிக்கு தான் கடைசியா கல்பனாவிடம் பேசியது. அவ யார் போன்லயோ ‘எனக்கு கல்யாணம் பண்ண பார்க்கறாங்க. எனக்கு உன்னை விட்டு வேறொருத்தனை கல்யாணம் செய்ய இஷ்டமில்லைனு கதறி துடிச்சி பேசினா. நான் ஏதாவது என்னால முடிஞ்சவரை தடுக்க பார்க்கறேன்னு சொல்லிட்டு மெரீனா பீச்ல இருப்பதை சொன்னேன். மெரீனாவுக்கு போறேன்னு சொன்னது தான் தப்பாகிடுச்சு. அவ சுனாமில நிறைய பேர் இறந்த நியூஸை கேள்விப்பட்டு, எனக்கு போன் பண்ண முயற்சி பண்ணியிருக்கா. முப்பதுக்கு மேல கால் பண்ணியும் என் போன் எடுக்கப்படலைன்னு புரியவும், நான் அந்த சுனாமில இறந்ததா நினைச்சிக்கிட்டா.
முட்டாள் கல்பனா… ஒரு நாள் வெயிட் பண்ணிருக்கலாம். லூசு… நான் செத்துட்டதா நினைச்சு, அவ வீட்டு பேன்ல தொங்கிட்டா. நான்.. நான் வாங்கி தந்த சேலையிலயே தொங்கிட்டா.” என்றதும் பிரசன்னாவும் அவனது நண்பர்களும் கஷ்டத்துடன் பிரதீப்பை பார்வையிட்டனர்.
இத்தனை நாட்களில் பிரதீப் முகம் இந்தளவு வேதனையை சுமந்து அவர்கள் கண்டதில்லை. எப்பொழுதும் மகிழ்ச்சியான முகமாக காட்சி தருவார்.
அவ செத்தது எனக்கு தெரியாது. நான் சுனாமில உயிர் பிழைச்சு, மெதுவா நடந்து வர்றப்ப, அங்க கடலலை காலை தொட்டு நகர்ந்தப்ப, ஒரு குழந்தையை மூடி வைக்கிற கூடை(பை)யில இருந்தது.
அதுல பிஞ்சு கை மட்டும் சிவப்பா.. வெளியே தெரிந்தது.
பக்கத்துல அத்தனை ஒப்பாரி. அதுல தள்ளாடி அந்த குழந்தை பேக்கோட ஜிப்பை திறந்தேன். அதுல… நீ இருந்த. மூச்சு பேச்சு இல்லாம தண்ணீல மூழ்கி கரை ஒதுங்கி இருந்த. அங்கிருந்த அத்தனை கதறலை விட, உன் ஒரு மௌனம் என்னை உசுப்பேத்திடுச்சு. உன்னை தூக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு ஓடிவந்தேன். நீ ஒருவாரம் அப்சர்வேஷன்ல இருந்து உயிர் பிழைச்ச.
எனக்கு தான் கல்பனா தூக்குல தொங்கியது தெரியாதே. ஒரு வாரம் உன்னோட ஹாஸ்பிடல்லதான் கிடந்தேன்.
என்னோட வீட்டுக்கு போன் பண்ணி, இது மாதிரி சுனாமி வந்தப்ப ஒரு குழந்தை கிடைச்சது. அந்த குழந்தையை தான் ஹாஸ்பிடல்ல பார்த்துக்கிட்டு இருப்பதா சொல்லவும், வீட்ல அதுக்கு மறுத்து சொல்லலை.
எல்லாரும் ரொம்ப அமைதியா, என்னை விட்டுட்டாங்க.
கல்பனா இறந்த பதினாறாவது நாள்ல தான் அவ செத்ததே எனக்கு தெரியும்.
அதுவும் நான் செத்துட்டதா நினைச்சு. அவ செத்துட்டதா அவ பெத்தவங்க சொன்னாங்க பாரு….
பதினைட்டு முடிஞ்சு பத்தொன்பது வயசு பிரசன்னா எனக்கு. அந்த வயசுல அப்படியொரு காதல். என்னை உலுக்கிடுச்சு.
வீட்ல அதனால உன்னை கூட்டிட்டு வந்தப்ப, யாரும் என்னை தொந்தரவு பண்ணலை.
நானும் யாரிடமும் பேசலை. காலேஜிக்கு பரீட்சை மட்டும் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டு உன்னை தான் கண்ணும் கருத்துமா கவனிச்சிக்கிட்டு இருந்தேன்.
அதென்னவோ காதலி செத்ததும் நானும் செத்திடுவேன்னு பயந்து, அட்லீஸ்ட் குழந்தையை பார்த்துக்கிட்டு இருக்கறானேனு வீட்ல அப்படியொரு கவனிப்பு.
ஏதோ நீ தான் என் காதலை கல்பனாவை மறக்கடிக்க வச்ச குழந்தையா பேசிக்கிட்டாங்க. கிட்டதட்ட உண்மையும் அதுதான். உன்னை, உன்முகத்தை பார்த்துக்கிட்டு நான் கல்பனாவை மறக்க முயன்றேன். முடியலை… ஆனாலும் ட்ரை பண்ணினேன்.
அப்படியே ஒரு வருஷம் போச்சு. குழந்தையை வச்சிட்டு சுத்தறதில் வீட்ல கொஞ்சம் கொஞ்சமா அதிருப்தி நிலவுச்சு.
உன்னை ஆசிரமத்துல விட சொல்லி அப்பா அம்மா அண்ணா அண்ணி அக்கா மாமானு ஒரு பட்டாளமே மூளை சலவை செய்ய பார்த்துச்சு.
அதென்னவோ உன்னை ஆசிரமத்துல விட எனக்கு மனசு வரலை. கல்பனா இறந்தப்ப கிடைச்ச உயிர் என்பதாலயா? இல்லை… என்னை மாதிரியே சுனாமில ஸ்விமிங் பண்ணி உயிர் பிழைச்சதாலையா? அத்தனை ஒப்பாரிக்கு மத்தியில என் மனசை அசைச்சி, உன்னோட வாழ முடிவு பண்ணியதாலையோ, உன்னை பிரியவே முடியலை.
என் மனசை மாத்த, கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்ணினாங்க. உன்னை வளர்க்கற பொறுப்பும் என்னை கல்யாணம் செய்ய போற பொண்ணை சேரும்னு சொல்லவும், வீட்ல ஆளாளுக்கு திட்டினாங்க.
வர்ற வரணும் சரியா அமையலை. என் கண்டிஷன் வர்றவங்களுக்கு செட்டாகலை.
குழந்தையை கொண்ணுடுவேன்னு மிரட்டினாங்க. நான் இல்லாதப்ப எங்கயாவது விட்டுட்டு வந்துடுவேன்னு சொன்னாங்க.
காலேஜ் இன்ட்ரிவ்யூல வேலை வேற கிடைச்சது. என்னால யாரும் கஷ்டப்பட வேண்டாம்னு உன்னை தூக்கிட்டு தனியா வந்துட்டேன்.
எங்களை விட அனாதையான அந்த பையன் தான் முக்கியமானு கேட்டு பாயிண்ட் பண்ணினாங்க. நான் கூலா ஆமானு சொல்லிட்டேன்.
அதுல இருந்து தனியா, நீ-நான் மட்டும் தான். என்னோட அப்பா இறப்புக்கு கூட போனேன் வந்தேன். ஆனா வீட்ல யாரும் சரியா பேசலை.
அப்பறம் அம்மா மட்டும் போன்ல பேசினாங்க. திவாகர் வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கோடானு சொன்னான்.
எனக்கும் கல்பனா இடத்துல யாராவது வருவாங்களோனு தோனுச்சு. பீ பிராக்டிகலா யோசிக்க நினைச்சேன். மூவ் ஆக.
எங்க பொண்ணு பார்க்க போனாலும் உன்னை வச்சி கல்யாணம் தடையாச்சு. அதுக்கு பிறகு கல்பனாவையும் மறக்க முடியலை. உன்னையும் பிரிந்து கல்யாணம் செய்ய மனசில்லை.
அதனால இங்க வந்துட்டு கல்யாணமாகி குழந்தை பிறந்ததும் என் மனைவி கல்பனா இறந்துட்டானு சொல்லி, உன்னை வளர்க்கறேன்.
திவாகர் முதல்ல சொல்லி சொல்லி பார்த்தான். அப்பறம் நான் உன்னோட அட்டாச்சா இருப்பதை பார்த்து, விட்டுட்டான்.
இப்ப நீ எனக்கு பொண்ணு பார்க்கறதா பேசவும் அவன் வார்த்தை விட்டுட்டான்.
நீ கிடைச்சப்ப, இந்த பேக், இந்த டிரஸ் போட்டிருந்த, அதோட இந்த தங்க செயின், தங்க மோதிரம், வெள்ளி குண்டி கொடி போட்டிருந்த. இது நீ கால்ல போட்டிருந்த சாக்ஸ்” என்று அழகான பெட்டியில் அடுக்கி வைத்ததை ஒவ்வொன்றாய் காண்பித்தார்.
“என்னை மன்னிச்சிடு… நான் இருந்த நிலையில் உன் நிஜமான அப்பா அம்மாவை தேட முடியலை. இப்ப… என்னால கண்டுபிடிச்சி தரமுடியுமானும் தெரியலை. எப்படியும் நீ ஓரளவு வசதியான வீட்ல இருக்கற பையனா இருக்கலாம். அதனால் எந்த வசதி குறைச்சலா உன்னை வளர்க்காம வசதியா வாழ வைக்க நினைச்சேன்
உன் பேரண்ட்ஸ் அதே சுனாமில இறந்தும் போயிருக்கலாம். என்னால அவங்களை தேடவும் பயம். போலீஸுக்கு கூட போகலை.
சப்போஸ் உயிரோட இருந்தாலும், என்னால உன்னை உன் பேரண்ட்ஸுக்கும் விட்டு தரமுடியாது.
நீ என் பையன் பிரசன்னா.” என்றார்.
பிரசன்னா பிரதீப்பை ஓடிவந்து கட்டி அணைத்தான்.
“அப்பா… அப்பா…” என்று அழத் துவங்கினான்.
“என் கூட பிறந்தவங்கள்லாம் கூட விட்டு வாழ தெரிந்த எனக்கு, உன்னை விட்டு பிரிய மனசில்லைடா.” என்றார் பிரதீப்.
அகில், வருண், சலீம் மூவரும் கண்கள் கலங்க, பிரதீப் பிரசன்னாவை பார்வையிட்டனர்.
தங்கள் தந்தையை விட எத்தனை நாள் பிரதீப் போல ஒரு தந்தை இல்லையே என்ற ஏக்கம் உண்டு. இன்று அது குன்றிமணி அளவுக்கூட குறையாது உயர்ந்திருந்தது.
“அப்பா அடிச்சிட்டேன்னு கோபமாடா?” என்று பிரதீப் கேட்க, “லேசா…” என்றான் பிரசன்னா.
“பின்ன.. நீ பண்ணின காரியத்துக்கு அடிக்காம எப்படி விடறது. மக, மருமக வயசுல இருக்கற பொண்ணு போய் எனக்கு ஜோடி சேர்க்கறியே. அவ அப்பா அம்மா மனசு நோகாது. அந்த பொண்ணுக்கு கஷ்டமாயிருக்காது. ஏதோ யார் மாப்பிள்ளைனு குழப்பத்துல எனக்கு தலையாட்டினா.
என் பையன் நீ தான்னும், உனக்கு தான் பொண்ணு பார்க்க வந்ததா சொன்னா, அந்த பொண்ணு என்னை அப்பா ஸ்தானத்துல பார்த்திருக்கும். நானும் அறிமுகப்படுத்தாம உன்னோட கற்பனையில் ஜோடி போட்டு நிஜத்துல கோட்டை விட்டேன்.” என்றார்.
“சரி சரி… கதை கேட்டது போதும். வாங்க இங்க ஏதோ கையேந்தி பவன் பேமஸ். உயிரோட இருக்கற மீன் எல்லாம் நல்லா கண்முன்ன வறுவல் பண்ணி தருவாங்களாம். ஒரு ரீல்ஸ்ல பார்த்தேன்.” என்று பிரசன்னாவையும் அவனது நண்பர்களையும் உலுக்கினார்.
“அப்பா… இத்தனை நாள் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதா நினைச்சேன். நீயே ஸ்டில் பேட்சுலரா இருக்கறப்ப, என் திட்டத்தில் பின் வாங்கறதா இல்லை. உனக்கு கல்யாணம் முடிச்சிட்டு தான் நான் கல்யாணம் பண்ணப் போறேன்.” என்று பிரசன்னா கூறிவிட்டு, “வாங்கடா இப்ப அப்பா கூட போய் சாப்பிடலாம்” என்று அழைத்தான்.
அகில் வருண் சலீம் மூவரும் பிரசன்னா பிரதீப் இயல்பானதும் நிம்மதியடைந்தனர்.
பிரசன்னா பேசியதை கேட்ட பிரதீப்போ “டேய்… எனக்கு வயசாகிடுச்சுடா. இதுக்கு மேல கல்யாணம் செய்து என்ன பண்ண போறேன்.” என்றார்.
“அப்பா.. கல்யாணம் பண்ணிக்கோ… சிட்டுகுருவி லேகியம் வயாக்ரா வாங்கி தர்றேன். ‘இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே..
இதய துடிப்பிலே..
பனி காத்தும் சூடாச்சே…
ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்…
கைகள் சீப்பை தேடுது தானே..
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே..’ பாட்டு பாடிட்டு ஜாலியா இருக்கணும். அந்த பொண்ணு இல்லைன்னா என்னப்பா.. நான் வேற பொண்ணு பார்க்கறேன்.” என்றான்.
பிரதீப்போ மகன் ‘அனாதை’ யாருமில்லை என்ற வலியை கடந்து, தான் வளர்ப்பு தந்தை என்றதை எல்லாம் கடந்து இந்தளவு மனதை இலகுவாக்கி பேசவும், தற்போது விட்டு
பிடித்தார். அவருக்கு தெரியாதா? மகன் தன் வலியை மறந்து இயல்பாக பேச தன்னை போலவே மாற்றிக் கொள்கின்றான் என்று.
-தொடரும்.

Wow super extraordinary father son bonding. Very emotional episode. Very intresting sis
கரை தந்த கடலே…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 5)
நல்ல அப்பா, நல்ல பையன்.
ஒருத்தரையொருத்தர் விட்டுத் தர மாட்டேன்ங்குறாங்க. இவங்களுக்கு எதுக்கு கல்யாணம், பேசாமல் இப்படியே விட்டுடலாம்.
அட்லீஸ்ட் இவங்களாவது இப்படியே, சந்தோஷமா நிம்மதியா இருக்கட்டும்ன்னு தோணுது. மூணாவதா ஒருத்தி வந்து எனக்குத்தான் நீ, உனக்குத்தான் நான்னு ஒருத்தருக்கொருத்தர் உரிமை போராட்டம் நடத்தறதை விட இந்த லைஃப்பே பெட்டர்ன்னு தோணுது போங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Sema nalla bonding parkalam appaku first kalyanama payanaka nu
Super super super super super super super super super super super super super super super
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 pradeep ku evlo relations erukangala yaarumey ella nu nenachen pa aanalum lover ponavudaney endha paiyan nu kagave vaazdhurukarey romba great 👍 paiyan soldra mathiri eniyavudhu avar vazkhaiya parkanum
👌👌👌👌👌