Skip to content
Home » காதலின் காலடிச் சுவடிகள்-6

காதலின் காலடிச் சுவடிகள்-6

காதலின் காலடிச் சுவடுகள் 6

“ரம்யா” என்ற ஒற்றை சொல்லோடு அமைதியாகி விட்டான் வேந்தன்”

“வேந்தா ” என்று அழைத்த புகழுக்கும் பேச்சே வரவில்லை…….வேந்தனின் இலக்கற்ற பார்வை இன்னும் இன்னுமாய் புகழ், அருண் இருவரையும் வதைத்தது….

போன் ஒலியில் மூவரும் மீண்டனர்….

அருணின் போன் டிஸ்பிளே அப்பா என்று காட்ட “வேந்தா உங்க அப்பா தான்டா”

“இங்க கொடு என்று அட்டென்ட் செய்து காதில் வைக்க “

“அருணு” என்ற அழைப்பில் “அப்பா நான் வேந்தன் பேசறேன்” என்று கூறியது தான் தாமதம்…….

“தம்பி ,அய்யா,ராசா,வேந்தா எப்படிய்யா இருக்க???எப்ப கண்ணு வீட்டுக்கு வர போற???வந்து இங்க எல்லாரையும் ஒரு எட்டு பாத்துட்டு போ ராசா”……என்று கூறினார் வேந்தனின் தந்தை….

“கண்டிப்பா வரேன்பா …சரி நீ ஏன் என் போன்ல கால் பண்ணாம அருணுக்கு கால் பண்ணி இருக்க”????…….

“உனக்கு தான் ராசா முதல்ல கூப்டேன் …நீ எடுக்கல …. அதான் அருணுக்கு கூப்டேன்…..

“சரிப்பா எல்லாரையும் பாத்துக்கோ’ நான் வரேன்….இப்ப போன் வைக்கிறேன்…..

“தம்பி வேந்தா “

“சொல்லு பா”……

“தம்பி” என்று அழைத்து அவர் சொல்லாமல் நிறுத்தவும்…விஷயத்தை அவனே யோசித்து “கண்டிப்பா வரேன் பா”என்று பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான் வேந்தன்…. அடுத்து அவர் கூற வந்தது என்னவென்று அவனுக்கு தான் தெரியுமே…..

“சரி தம்பி நான் போன் வைக்கிறேன்” என்று கட் செய்து விட்டார்….

பெருமூச்சுடன் வேந்தன் போனை அருணிடம் கொடுத்தான்……

“என்னடா அப்பா என்ன சொன்னாரு ” அருண் கேட்க…

“ஊருக்கு வர சொன்னாரு டா”……வேந்தன் அளித்த பதிலில்……

“ஊருக்கா என்று புகழும், அருணும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்……

“ம்ம்ம் ஆமாம்”

“சரி எப்ப போக போற “???? என்று புகழ் கேட்க ……

“போக போற இல்ல …போக
போறோம் “….என்று வேந்தன் அளித்த பதிலில் முழித்தான் புகழ்……

“போக போறோம்ன்னா புரியல ….நாம மூணு பேருமா????என்று அருண்
வினவ ……

“இல்ல ஐந்து பேரும்”……

“வேற யாருடா”????…….

“ம்ம்ம் நீ, நான், இந்த எருமை, அப்புறம் யாழினி,கவி”……போதுமா??? டிக்கெட் பார்த்து போட்டுடு….

“சரி “என்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை அருணிற்கு……

“இந்த டெட் பாடிய என்ன செய்யலாம்”????அத முதலில் முடிவு பண்ணு”……

“ஏதே டெட் பாடியா என்னடா சொல்றீங்க???? கொன்னே போட்டுடிங்களா??? மயக்கம் தான நெனச்சேன்…..என்று கத்திய புகழை இருவருமே கண்டு கொள்ளவில்லை…..

“இன்னும் அவன் சாகல டா” என்று அருண் கூறியதும்…ஹப்பாடா என்று மூச் விடுவதற்கும்….அருண் அடுத்த வார்த்தையில் மயக்கமே வரும் போல் இருந்தது…..

“என்ன சொன்ன”?????

“என்ன என்ன சொன்ன”?????

“இப்ப நீ சொன்னியே”????

“ஆமா சொன்ன”…..

“அதான் என்ன சொன்ன”????

“அதாவது புகழு இப்ப போகல உயிர்……கொஞ்ச நேரத்துல போய்டும் அப்படின்னு சொன்னேன்”…….

“அப்படின்னா “

“டேய் ரோட்ட பார்த்து வண்டி ஒட்டுடா” என்று வேந்தன் கூற…..

“அய்யோ கடவுளே இன்னிக்கா இவன்கள பார்க்கணும்…..அய்யா கருப்பசாமி என்ன காப்பாத்து பா…. ஊருக்கு வந்து எங்க அப்பனுக்கு மொட்டை போடுறேன் என்று வேண்டிக் கொள்ள அருண், வேந்தன் இருவரும் சிரித்தனர்……..

ஹாஸ்டலில் மூவரும் உள்ளே செல்ல

“மது இந்த வேந்தன் யாரு “என்று நேகா கேட்க…….

“என்னோட அண்ணன் தான் ” என்று கவி பதில் கூறினாள்…..

“ஓஓஓஓ உங்க அண்ண்ணா ஆனா நீங்க ரெண்டு பேரும் சரியா பேசிக்கவே இல்ல…..

தொடரும்……..

3 thoughts on “காதலின் காலடிச் சுவடிகள்-6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *