Skip to content
Home » காதலின் காலடிச் சுவடுகள்-12

காதலின் காலடிச் சுவடுகள்-12

காதலின் காலடிச் சுவடுகள் 12

மதுவுடன் யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்ன செய்ய என்று யோசித்து கவிதாவை துணை வைத்தனர்…

மது, கவிதா ஒரே வயது என்பதால் இவர்களுக்கு சாதகமாக அமைந்தது….

தன் அம்மாவை பார்த்த மது கதறி அழும் போது யாராலும் தேற்றவோ தடுக்கவோ முடியவில்லை…. அழ கூடாது என்று எச்சரிக்கை செய்து அழைத்து வந்த வேந்தனால் கூட தடுக்க இயலவில்லை….
அப்போதுதான் வெளியே சென்று வந்த ரங்கநாதன் வர அறையில் அழும் குரல் கேட்டு பதறி ஒடி வந்தார்… தன் தங்கை மகளை பார்த்து என்ன செய்வதென்று புரியாமல் பின்பு சுதாரித்துக் கொண்டு மதுவை தேற்றினார்…..

” மது இங்க பார்!!! மாமா பார் அழாதே!! எல்லாம் சரி ஆகிடும்.. முன்னாள் இருந்ததுக்கு சாரதா இப்ப பரவாயில்லை…. தேறி வருவதாக டாக்டர் சொன்னாங்க…. நீ அழ கூடாது மாமா சொல்றேன் இல்ல… என்று மதுவை சமாதானம் செய்தார்”……

“நான் என்ன செய்யறது மாமா?? எனக்கு எதுவுமே புரியலையே!! எனக்கு அம்மா கூட இருக்கணும்.. அம்மாக்கு எல்லாமே பாக்கணும்… அம்மா எனக்கு முக்கியம் மாமா… ஆனா அப்பா மேல இருக்கிற பயத்துல என்னால எதுவும் செய்ய முடியலையே”…… என்று அழுத மதுவை எப்படி சரி செய்வது என தெரியாமல் கலங்கி நின்றனர்….

” இப்ப கூட நான் அப்பாக்கு தெரியாமல் தான் மாமா வந்து இருக்கேன்…. அவர் ஊருக்கு போய் இருக்காரு போல சித்தி சொன்னாங்க… அதான் அம்மாவ பார்த்துட்டு போலாம் வந்தேன்.. தெரிஞ்சா அவ்ளோதான்”… என்று பயந்த மதுவிடம் வேலம்மாள் பாட்டி வந்து” பயப்படாத தாயி
அவன் அப்படி என்ன பண்ணிடுவான் பார்க்கலாம்”… என்று தைரியம் சொன்னார்….

“அம்மா புரியாம பேசாதீங்க… இப்ப இவர் இங்க வந்தான்னு தெரிஞ்சாலே சாமியாடிடுவான்…. சரியான மூர்க்க பய…. ” ஏன் தம்பி அதுதான் சின்னபிள்ள சொன்னா உனக்கு எங்க போச்சு அறிவு”??? என்ற தாய், மகன் இருவரையும் கத்தி தீர்த்தார் ரங்கநாதன்…..

“அப்பா நான் பார்த்துக் கொள்கிறேன்… எத்தனை நாளைக்கு பயப்பட முடியும்… எல்லாம் ஒரு நாள் சரியாகனும் தான… அது இப்பவே இருந்துட்டு போகட்டும்”…
என்று வேந்தன் கேட்க….

” எல்லாம் தெரிந்தும் நீயே இப்படி பேசலாமா தம்பி”….

“சரி விடுங்க வந்த புள்ளைய திருப்பி அனுப்ப வேண்டியது தான்”… சாப்டு போகட்டும் புள்ள “….என்று கலைவாணி கூற….

” அடி கூறுகெட்டவளே எதுக்குடி எங்களோட வாய் பார்த்துட்டு நின்ன…. முதல்லயே சொல்லத் தானே”… என்று நெற்றியில் அடித்து கொண்டார் வேலம்மாள்…..

“நீங்க எல்லாம் மாத்தி மாத்தி பேச நான் சொன்ன உங்களுக்கு தலைல ஏறுமா”??? என்று நொடித்து கொண்டு கலைவாணி கூற… ” இதுக்கு மட்டும் பேச வக்கனையா வாய் வருதோ” என்று வேலம்மாள் சண்டையை ஆரம்பித்தார்…

” உங்க பஞ்சாயத்த அப்புறம் வச்சுக்கோங்க!!!.. வந்த புள்ளைக்கு ஏதாவது சாப்பிட குடுங்க”….

“மாமா வந்து ஒரு மணி நேரமா இது மட்டும் தான் சொல்லி சொல்லிட்டு இருக்கீங்க… ஒரு கிளாஸ் தண்ணி கூட குடிக்க குடுக்கல”…. என்று மது கூற அனைவரும் சிரித்து விட்டனர்….

” சரி போய் குளிச்சிட்டு வா மது .. சீக்கிரம் அந்த வீட்டுக்கு போகணும் இல்ல”…. ” வேந்தா மது கூட்டிட்டு போய் விட்டு விட்டு வா”… என்று கலைவாணி சொன்னார்….

குளித்து முடித்து தன் கடமைகளை முடித்து விட்டு இருவரும் வர டைனிங் டேபிளில் மதுவிற்கு பிடித்த அத்தனை உணவு வகைகளும் இருந்தது….

” நானும் ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் வீட்டுக்கு வந்து இருக்கேன்… நானும் இந்த வீட்டு பிள்ளை தான்… அவளுக்கு பிடித்ததை மட்டும் சமைத்து இருக்கீங்க”…??? என்று தாயை வம்பிழுத்தான் வேந்தன்….

” தம்பி நீ இங்க தான் இருக்க போற… ஆனா மது அப்படி இல்லை…. அந்த வீட்டில் அவளுக்கு புடிச்சதை சாப்பிட முடியுமோ?? முடியாதோ??? சின்ன பிள்ளை கிட்ட என்ன வம்பு….. என்று கலை கேட்க…

” சரி சரி இன்னைக்கு ஒரு நாள் தான் பொழச்சு போ”…..

” பாருங்க அத்தை எப்படி சொல்லிட்டு இருக்கான்னு “??? அத்தையிடம் செல்லம் கொஞ்சிய மதுவை இமைக்காமல் பார்த்தான் வேந்தன்……

“சரி டா தங்கம் நீ சாப்பிடு “

” சரி அத்தை ” என்று தட்டில் இருந்த உணவை எடுத்து வாயில் வைக்க அதை ஒரு கரம் தட்டி விட்டது…. மது நிமிர்ந்து பார்க்க…..

” ஏய் எழுந்திரு இந்த வீட்டுக்கு வந்ததும் இல்லாம இங்க சாப்பிட உட்கார்ந்து இருக்கியே அசிங்கமா இல்ல உனக்கு”????
என்று வேந்தன் வயதை ஒத்த ஒருவன் சண்டையிட்டான்….

தொடரும்….

3 thoughts on “காதலின் காலடிச் சுவடுகள்-12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *