காதலின் காலடிச் சுவடுகள் 16
இன்னும் இரண்டு நாள் மட்டுமே என்ற வேந்தனின் நம்பிக்கையில் … கடவுளே அவன்களை கண்டு பிடிஞ்சிடணும்… என்று அவசரமாக ஒரு வேண்டுதலை மது வைக்க…
“யாழினி ” என்ற வேந்தனின் அழைப்பில் சுயம் பெற்று…
” சொல்லு மாமா “
” யாழினி என்ன நடந்தாலும் நம்பிக்கையோட இரு சரியா”!!!!
“என்ன மாமா நடக்கும்”???…..
” என்ன நடந்தாலும்”…. அந்த வார்த்தையை அவன் திரும்ப திரும்ப கூற.. ஏதோ நடக்க போகிறது புரிந்து கொண்டாள். …
“சரி மாமா”
” யாழினி என் மேல நம்பிக்கை இருக்கு தான!! எது செய்தாலும் அது சரியா இருக்கும் தான” என்று வேந்தன் கேட்க…
” மாமா ” என்று வெறும் காற்று மட்டுமே வந்தது… வார்த்தை வரவில்லை… ஏதோ பெரிதாக நடக்க போவதாக உள்ளுணர்வு கூறியது…
“சொல்லு யாழினி”!!!….
” இருக்கு மாமா”….
“அப்ப எது நடந்தாலும் நம்பிக்கையை மட்டும் என் மேல வை சரியா”???? என்று போனை கட் செய்து விட்டான்… மதுவிற்கு எதுவும் புரியாமல் அமர்ந்து இருக்க… வேந்தனோ இன்னும் சிறிது நேரம் பேசி இருந்தால் உண்மை மொத்தமும் உலகின் இருப்பான்….. தான் சொல்ல போகும் உண்மையில் இந்த குடும்பம் என்ன ஆகுமோ??? என்ற பயத்தை விட யாழினியை எப்படி தேற்றுவது என்பதே அவனின் நிலையை தடுமாற செய்தது….
எப்படி இருந்தாலும் உண்மை தெரிந்து தானே ஆக வேண்டும்… கண்டுபிடித்த பின்பு எவ்வாறு மூடி மறைப்பது… ஆனது ஆகட்டும் என்று இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு வேலையை பார்க்க வேண்டியது தான்… என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டு மாடியில் இருந்து கீழ் இறங்கி வந்தான்….
தன்னையே பார்த்து கொண்டு இருந்த கவி யிடம்…
” என்னடி “
” ஒண்ணுமில்லை.. இப்ப தான் உன்னோட மூஞ்சி கொஞ்சம் பளிச்சினு இருக்கு”… என்று கிண்டல் செய்ய….
இவர்களின் யோசனையில் இல்லாத கல்பனாவோ அவள் வேலையை காட்ட தொடங்கினாள்….. தன் தொலைபேசியில் இருந்து தன் தம்பிக்கு அழைத்து உடனே வீடு வர சொன்னாள்…..அவனும் அக்காவின் சொல்லை தட்டாமல் அன்று இரவே திருநெல்வேலி வந்து அடைந்தான்… அன்று இரவு மதுவின் தந்தைக்கு அழைத்து ஒன்றுக்கு இரண்டாக கல்பனா கூற மதுவின் தந்தை மறுநாள் காலை வருவதாக தகவல் தர தன் எண்ணம் ஈடேற போகும் மகிழ்ச்சியில் கல்பனா….
கவி தனது வீட்டிற்கு சென்று விட மதுவிற்கு மனதே சரியில்லை….. ஏதோ பெரிதாக நடக்க போவது போன்றே ஒரு எண்ணம்…. வேந்தனுக்கு அழைக்கலாம் என்று யோசித்து கால் செய்து வேண்டாம் என்று வைத்து விட்டாள்…. அதற்குள் அவனுக்கு ரிங் சென்று இருக்க உடனே அழைத்து விட்டான்….
“லட்டு பொண்ணே என்னடா??… என்று கேட்க…
” தெரியாம கை பட்டு கால் வந்துட்டு
போல “என்று சமாளிக்க….. பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி… ” யாழினி இப்ப நீ என்ன கேட்டாலும் என்னால் பதில் சொல்ல முடியாது… என்ற வேந்தனிடம்
” இல்ல மாமா மனசு ஒரு மாதிரி நெருடலாக இருக்கு… தப்பு நடக்க போற மாதிரி தோணிட்டே இருக்கு… அதான் என்று ஒப்புக் கொள்ள…
” எல்லாம் சரி ஆகிடும் லட்டு போய் தூங்கு” என்று போனை வைத்து விட்டான்….
மது நினைத்து போல் கல்பனா அவன் தம்பி ரஞ்சித் வைத்து காய் ரகர்த்த மது புதைக்குழியில் சிக்கும் நிலை வந்தது….
தொடரும்….
அய்யய்யோ..! இந்த கல்பனா சும்மாவே இருக்க மாட்டாளா…?
Nice epi