Skip to content
Home » காதலின் காலடிச் சுவடுகள்-17

காதலின் காலடிச் சுவடுகள்-17

காதலின் காலடிச் சுவடுகள் 17

இரவே கல்பனாவின் தம்பி ரஞ்சித் வர அக்கா, தம்பி இருவரும் சதி ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வந்தனர்….அதன் பின்னரே நிம்மதியாக உறங்கினர்… மதுவிற்கு எப்போதும் போல் கனவு வர அலறி துடித்து இரவு தூக்கத்தை தொலைத்தாள்….. ஹாஸ்டலில் இருந்திருந்தாலாவது கவி துணைக்கு இருந்து இருப்பாள்….. இப்போது தனிமை மிகவும் பயத்தை கொடுத்தது….

மறுநாள் காலை மது எழுந்து வர ஹாலில் அமர்ந்து இருந்தவனை பார்த்து உடலெங்கும் நடுக்கம் ஏற்பட்டது…..

” ஹாய் மது எப்படி இருக்க??? நல்லா இருக்கியா?? படிப்பு எல்லாம் எப்படி போகுது???? என்று அவளை தலையிலிருந்து, கால் வரை பார்த்து கொண்டே ரஞ்சித் கேட்க”…. அவன் பார்வையில் கூனிக்குறுகி அந்த இடம் விட்டு நகர்ந்தாள்….

தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் செல்லும் மதுவை பார்த்து கோபம் வந்தாலும் கோப பட்டு வந்த காரியத்தில் கெடுத்துக் கொள்ள அவன் என்ன முட்டாளா????….

மறுபடியும் பல்லை இளித்துக் கொண்டே அவளை போக விடாமல் வழி மறிக்க அதற்குள் ” என்ன மது இப்ப தான் எழுந்து வரியா”??? என்று மகேந்திரன் குரல் ரஞ்சித் பின்னால் இருந்து ஒலிக்க…. தலையை ஆம் என்று ஆட்டி விட்டு அங்கிருந்து அகன்றாள்….

“இவன் எதுக்கு வந்தான்…. இப்ப ரிஷி கிட்ட சொல்லணுமே…. இப்ப அக்காவும், தம்பியும் என்ன ஏழரைய கூட்ட போறாங்களோ!!! என்று யோசனை செய்த படியே மது அறைக்கு செல்ல……
அங்கு அமர்ந்து இருந்தான் வேந்தன்…. முதலில் பிரமையோ என்று நினைத்த மது… ” மாமா விளையாடாத இங்க நானே நிறைய குழப்பத்தில் இருக்கேன்… நீ வேற போ மாமா” !!!! கற்பனை என்று நினைத்து அவனை அடிக்க….

” அடியேய் பிசாசு எதுக்குடி அடிச்ச “!! என்று தன் தோள்பட்டை தடவி கொண்டே கூற….

” மாமா நிஜமா நீயா மாமா” எப்படி மாமா ரூம் உள்ள வந்த”???…..

” ஆமா இது அப்படியே மைசூர் மகாராஜா பேலஸ் வர முடியாது பாரு ” …என்று நக்கல் அடித்து விட்டு மதுவை இழுத்து அணைத்து கொண்டான்…. அவனை முறைக்க முடியாமல் மார்பில் தலை சாய்த்து கொண்டாள்….. அவளை தன்னுள் புதைத்து கொண்டு “லட்டு” .. என அழைக்க தலை நிமிர்த்தி அவன் முகம் பார்க்க….

” நான் இப்ப சொல்ல போறத பயப்படாமல் கேளு”….. நான் கொஞ்சம் வெளியூர் போறேன் தாத்தா, ரம்யா திதிக்கு ஊருக்கு வந்துடுவேன்…. கவி வந்து உனக்கு துணைக்கு இருப்பா …. புகழ் இங்க தான் ஊரில் இருப்பான்… ஏதாவது அவசரமாக சொல்ல வேண்டி இருந்தா அவனுக்கு கால் பண்ணு சரியா…. எதுவாக இருந்தாலும் நான் உன்கூட தான் இருக்கேன்னு நினைச்சுக்கோ”…..

“மாமா என்ன செய்ய முடிவு செய்து இருக்க??? இப்படி எல்லாம் பேசாத!!!!! கண்கலங்க தன் மாமனிடம் கூற…..

கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு” பல வருட தேடலுக்கு முடிவு கிடைச்சு இருக்கு லட்டும்மா “….. ” வேற எல்லாதையும் முடித்து விட்டு வந்து சொல்வேன் சரியா!!?? என்று கூறி உதட்டில் தன் உதட்டை பொறுத்துக் கொள்ள முத்தம் நீண்டு கொண்டே செல்ல இருவரும் பிரியும் எண்ணம் இல்லாமல் மெய் மறந்து நின்றனர்…..

வேந்தன் போன் அடிக்க ” யாருடைய அது இருந்து இருந்து இப்ப தான் சந்தோஷமா இருந்தேன்… அது பொறுக்காதே உங்களுக்கு என்று எடுத்துக் காதில் வைக்க ” டைம் ஆச்சு வேந்தா போகணும் ” அருண் சொல்ல… மறுபடியும் அவசர முத்தம் ஒன்றை உதட்டில் பதித்து விட்டு ” பார்த்து இரு லட்டு” என்று கூறி செல்லும் அவனை சட்டையை பிடித்து இழுத்து மீண்டும் அணைத்து கொண்டாள் மது….

தொடரும்…..

இன்னும் முன்று அத்தியாயம் தான் இருக்கு… மக்களே முடிந்ததும் படிக்க நினைக்கிறவங்க படிக்கலாம்….நன்றி நன்றி நன்றி🙏💕….

3 thoughts on “காதலின் காலடிச் சுவடுகள்-17”

  1. CRVS2797

    இக்கட்டான நேரத்துல வேந்தன் அவளை தனியா விட்டுட்டு இப்ப அவன் எங்கே போறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *