அத்தியாயம் – 15
தன் மருமகனிடம் எல்லாம் கூறியபின் அவரது வெருப்பை உணர்ந்தவர் மனம் உடைந்து போனார்..அந்த வருத்தம், மீனாட்சி இனியன் மதுமிதாவிற்கு இழைத்த பாவம், அவர்களை கண்டுபிடிக்க இயலாத நிலை என வாட்ட கை கால் முடங்கி போக அந்நேரம் தனது மனைவி கர்ப்பிணியாக இருப்பதால் எந்த பிரச்சனையும் அவரை நெருங்காமல் பார்த்துக்கொண்டார் ஸ்டீவ்.. ஆனால் ஊரைவிட்டு அநாதைகளாய் வந்த இனியன் மனதளவில் மிகவும் அடிப்பட்டு போனார்..மதுமிதாவோ மீராவின் மேல் கோபத்தை வளர்த்துக்கொண்டார்..
தவறோ சரியோ மனதில் இருப்பதை வெளிப்படையாக யாரும் பேசாததே இவ்வளவு இன்னல்களுக்கும் காரணம்..
இசையில் வித்தகரான சங்கராச்சாரியாருக்கு அப்பெயர் வரக்காரணமே அவரது இசை கலை தான்.. அதனால் அவர்மீது ஏற்பட்ட வெறுப்பு இசையையே வெறுக்க வைத்தது மதுமிதாவை.. தனது தந்தைக்கு விருப்பம் என்ற ஒரே காரணத்திற்காக இசையை ஆர்வத்தோடு கற்ற இனியன் மனைவியின் உணர்வுக்கு மதிப்பு தந்து இசையை ஒதுக்கி வைத்தார் ஆனால் இசைதான் அவரது உயிர் என்பதை மதுமிதா அறிந்து இருந்தாலும் அந்த கேடுகெட்ட இசை குடும்பத்துக்கே வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்.. ஆனால் இனியனுக்கு இசைமேல் ஆர்வம் என தெரிந்த ஸ்டீவ் அவர்களை கண்டுபிடிக்க இசை சம்பந்தப்பட்ட தொழிலையே தேர்ந்தெடுத்து நிறுவினார் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வந்து அவர்களை பற்றி தகவல் கிடைத்ததா என தேடிவிட்டு செல்வார்..இடையில் இஷான் பிறந்த சமயம் சங்கராச்சாரியார் உயிர் பிரிந்தது.. அவர்மேல் கடலளவு கோவம் இருந்தாலும் அவரது இறுதி சடங்கை இனியன் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் செய்து முடித்தார்.. இறுதி காலத்தில் சங்கராச்சாரியார் தன்னிடம் ஒப்படைத்த பொறுப்பு இனியனையும் மதுமிதாவையும் கண்டுபிடித்து ஊரறிய அவர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டார் என்பதை அறிவிக்க வேண்டும்.. அவர்களுக்கு உரிமையான சொத்தை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற வேண்டும் என எண்ணியவர் தமிழ்நாட்டில் சென்னையின் மையப்பகுதியில் எஃப் எம் நிறுவனத்தை துவக்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்..
இதையெல்லாம் கேட்டதும் மதுமிதாவிற்கு மீராவின் மேல் உண்டான கோவம் இல்லாமல் போனது.. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவரை துரோகியாக நினைக்க வைத்துவிட்டதை எண்ணி வருந்தினார்.. ஆனால் இனியனோ வருத்தத்தில் இருந்தார் தன்னை ஆதரவாக சொந்தமாக பார்த்த உறவு உயிரோடு இல்லை என்று.. ஸ்டீவ்வை பார்த்து..
“மீரா..அ..அக்கா..எ..எப்படி இறந்தாங்க? என்ன ஆச்சு?” என்று கேட்க.. அவ்வளவு நேரம் தைரியமாக இருந்த மனிதர் உடைந்து போனார்..
“உங்க அப்பா உங்களுக்கு செஞ்ச விஷயம் தெரிஞ்ச அதிர்ச்சியில தான்..ஹர் கார் மெட் ஆன் ஆக்சிடெண்ட் அண்ட் ஷி டைட்” என்று கூற
“என்ன?” என்று அதிர்ந்து வினவினர் இனியனும் மதுமிதாவும்..
“எஸ்.. உங்கள கல்யாணத்துக்கு முன்ன கண்டுபிடிச்சுடனும்னு எங்க எங்கேயோ தேடி நீங்க கிடைக்காததால அவ ரொம்ப அப்செட் ஆகிட்டா.. அப்பா இறப்புக்கு அப்புறம் ரொம்ப டல் ஆகிட்டா.. சோ அந்த டைம்லாம் இஷானை வெச்சு தான் அவள டைவர்ட் பண்ணுவேன் ஒரு டைம் ரொம்ப ஹர்ட் ஆகி உங்கள பத்தி பேசினா அப்போதான் அவ உங்கமேல எவ்ளோ அஃபெக்ஷனா இருந்தானு எனக்கு தெரிஞ்சது..உங்கள நான் தீவிரமா தேட அதுவும் ஒரு காரணம்..உங்க நியாபகமா தான் இனியன் நேம் வர்ற மாதிரி பையனுக்கு இஷான்னு நேம் வெச்சா..நானும் அவ பாசத்தை புரிஞ்சு அக்செப்ட் பண்ணினேன்.. ஆனா மாமா சாகும் முன்ன உங்களுக்கு செஞ்சது எல்லாம் எனக்கு ஒரு ரெக்கார்டிங்கா அனுப்பி இருந்தார் அதை நான் உங்களுக்காக ஒரு பென் ட்ரைவ்ல போட்டு வெச்சு இருந்தேன்..மீராக்கு மியூசிக் னா பிடிக்கும் சோ ஆல்வேய்ஸ் அவளோட கார்ல பென் ட்ரைவ்ல தமில் சாங்ஸ் வெச்சு இருப்பா நான் ஏதோ நியாபகம்ல இந்த ஆடியோ பென் ட்ரைவ்வையும் அவளோட பென் ட்ரைவ்வோட சேர்த்து வெச்சுட்டேன்.. அவ ஒன்ஸ் மனசு சரியில்லைனு கார் எடுத்துட்டு லாங் ட்ரைவ் போகும்போது சாங் கேட்க பென் ட்ரைவ் ப்ளே பண்ண இதை கேட்டு இருக்கா அந்த ஷாக்ல கார் கன்ட்ரோல் மிஸ் ஆகி அங்க இருந்த ஒரு கேரேஜ்மேல மோதி அவளுக்கு subdural hematoma disease அஃபெக்ட் ஆகி வித் இன் ஒன் டே ல ஷி ஈஸ் நோ மோர்..அண்ட் இஷான்.. யார் பேச்சும் கேட்காம கிங் மேக்கர் மாதிரி இருந்தான் மீராவோட ஆக்சிடெண்ட்ல ஹி சேன்ஜ்ட்டு டோட்டலி அண்ட் அப்போ தான் இசைங்கிற நேம்ல கயல்விலி வாய்ஸ் கேட்டு அவள லவ் பண்ண ஆரம்பிச்சு இருந்தான்.. ஆனா மீரா சாகும் முன்ன உங்க டாட்டர தான் எப்படியாவது கல்யாணம் செய்யனும்னு ப்ராமிஸ் வாங்கினா அந்த ப்ராமிஸ்காக தான் ஹி கேம் ஹியர் அண்ட் ஹி ஹாண்டில் ஆல் திங்க்ஸ் வித் காம்.. அவனை இவ்ளோ காமா நான் பார்த்ததே இல்ல..கேட்டதுக்கு அம்மாவுக்காகனு சொல்லிட்டான்.. என்னால தடுக்க முடியல.. ஹி லவ்ஸ் ஹிஸ் மதர் சிங்கிங் அன்கன்டிஷன்லி.. சேம் வாய்ஸ் யுவர் டாட்டர் ஹாவ் அவனோட லவ் அண்ட் அவன் அம்மாவோட ப்ராமிஸ்காக மேரேஜ் பண்ணிக்க வந்த பொண்ணு ரெண்டு பேரும் ஒரே ஆள்தான்னு தெரிஞ்சு அவன் அவ்ளோ ஹாப்பி.. அவனோட கோவம்லாம் கன்ட்ரோல் பண்ணிகிட்டு உங்களை பொறுமையா ஹாண்டில் பண்ணி இருக்கான்..ஆ..ஆனா இப்போ அவனும்” என்றபடி அவரும் குலுங்க அவரை ஓடிச்சென்று அணைத்துக்கொண்டான் ஜோனஸ்..
“ஒன்னுமில்ல பா அதான் ஆபரேஷன் நடக்குதே ஹி வில் பி ஆல்ரைட் பா..நம்ம இஷான் நிச்சயம் நம்மகிட்ட திரும்ப வருவான் பா” என்று கூற.. அவர் அருகில் வந்த இனியன் அவரது கைகளை பற்றிக்கொண்டு
“தப்பான புரிதல் எல்லாரையும் வேற வேற மாதிரி சோதிச்சு இருக்கு..எல்லாமே சரியாகிடும் கவலைபடாதீங்க” என்று கூற அவரது கையை தட்டி கொடுத்தவர்.
“ஐ ஹோப் தட்” என்று கூற மதுமிதாவோ என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக கண்ணீர் வடித்தபடி நின்றார்.. கயலோ இவர்கள் யாரையும் கண்டுகொள்ளவில்லை தன்னவன் தன்னிடம் தேடியது காமத்தை அல்ல காதல் கலந்த தாயன்பை என்று உணர்ந்த நொடி ஆபரேஷன் தியேட்டர் வாசலையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.. அவளது அருகில் வந்த ஸ்டீவ்வை ஒரு பார்வை பார்த்தவள் தன்னவனின் உடைமையை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்..
அவளது நிலை புரிந்தவர் அவள் பக்கத்தில் அமர்ந்து அவளது தலையை தடவி “ஃபார் யூ ஹி வில் பி கம் மை சைல்ட் டோன்ட் வொர்ரீஸ்.. ஆல்வேய்ஸ் யூ ஒன்லி ஹவர் டாட்டர் இன் லா ஓகே..அவன் உன்னை எப்படி எப்போ லவ் பண்ணான்னு நான் சொல்றதை விட அவனே சொல்றது தான் நல்லதுனு நினைக்கிறேன்..ஐ ஃஹோப் யு அண்டர்ஸ்டான்ட்” என்று கூற அவரை பாவமாக பார்த்தவள்..
“நீங்க நினைக்கிற மாதிரி நடக்காது அங்கிள் அவ..அவரு கண்டிப்பா பிழைச்சு வருவாரு..அ..அவருக்கு தெரியும் அவர் இல்லனா நானும் இருக்கமாட்டேன்னு..அதுக்காகவாச்சும் அவரு பிழைச்சு வருவாரு” என்று கூற அவளது உறுதியில் மனம் மகிழ்ந்தவர்..
தான் நினைத்ததையும் சரியாக யூகித்து பதில் பேசும் அவளது புத்திக்கூர்மையையும் மனதில் மெச்சிக்கொண்டார்..
இனியனுக்கும் மதுமிதாவிற்கும் தங்கள் மகள் தங்களிடம் பேசாதது வருத்தம் இருந்தாலும் அவளது நம்பிக்கையை பார்த்து திகைத்தனர்..
கெளதமும் கூட அதிர்ச்சியாகி போனான் அவள் வார்த்தையில் உண்மைக்காதல் பழிவாங்கும் உணர்ச்சியை கூட அழிக்கவல்லது என்பதை புரிந்து கொண்டான்..
இவர்கள் தங்களது வாழ்வை வளமாக வாழவேண்டும் என்று ஆண்டவனிடம் ப்ராத்தித்தான்..ஜோனஸ்க்கு கூட இஷானை இந்த பொண்ணு முறைச்சுகிட்டு சுத்தும் அடிக்கவேற செஞ்சது இருவருக்கும் செட் ஆகுமா? என்று கேள்வி இருந்தது அவளது பதிலில் அவளது காதலை அறிந்து கொண்டான்.. எப்போதும் காதல் மோதலில் துவங்கி புரிதலில் வாழ்ந்து மடிதலில் இதிகாசமாய் உருவெடுக்கும் இவர்கள் காதலும் ஒரு இதிகாசமாய் மாறுமா? (அது நம்ம வாசகர்கள் கையிலதான் இருக்கு.. அவங்களுக்கு இவங்களை புடிச்சா வாழவைப்போம் இல்லனா பிரிச்சுடுவோம்)
ஓபன் ஸ்கல் சர்ஜரி என்பதால் முழுதாக பதினாறு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது..சர்ஜரி செய்யும் நியூரோசர்ஜன் முதலில் குறிப்பிட்ட இடத்தில் டிரில் மாதிரி துளையிட்டு சிறு எலும்பை உடைப்பார் அப்போது தான் ஸ்கல் சேதாரம் இன்றி பிரிக்கலாம் இல்லையெனில் ஆபத்து நேரிடும் பின்பு அதை செய்ய முழுதாக இரண்டரை மணி நேரம் எடுக்கும் அதன்பின் மிகவும் நுணுக்கமான ஆபரேஷன் நடக்கும்..தேவையெனில் டிஷ்யூ சேம்பில் எடுப்பர் இல்லையெனில் விட்டு விடுவர்.. ஆபரேஷன் முடிந்து தையல் போட்டபின் ஸ்டரைல் பேன்டேஜ் (sterile bandage)எனப்படும் தனி பேன்டேஜ் போடப்படும்.. அதன்பின் ஆபரேஷன் முடிந்து ஐ.சி.யு வில் வைக்கப்படுவர் ஏனெனில் உடனடியாக இன்ஃபெக்ஷன் ஆகிவிடும் என்பதால்..ஆபரேஷன் முடிந்ததும் உடனடியாக MRI ஸ்கேன் எடுப்பர் ஆபரேஷன் சரியாக இருந்ததா எங்கேயாவது இரத்தக்கசிவு இருக்கிறதா என.. இதெல்லாம் செய்து முடிய வெளியே வந்தா ர் டாக்டர்..
“ஆபரேஷன் ஈஸ் சக்ஸஸ்..பட் உறுதியா எதையும் சொல்ல முடியாது அவரு கண் விழிச்சாதான் சொல்ல முடியும் இல்லனா கோமாக்கு போய்ட்டா கஷ்டம்தான்.. ஸ்கல் தான் டேமேஜ் ஆகி ஒரு ப்ளேஸ்ல மட்டும்தான் இரத்தகசிவு இருந்தது சோ அதை ஆபரேட் பண்ணிட்டோம்..இனி ஆல் இன் காட்ஸ் ஹாண்ட்ஸ்” என்றுவிட்டு “இப்போதைக்கு அவரை யாரும் பார்க்க முடியாது பிகாஸ் ஆஃப் இன்ஃபெக்ஷன்.. சோ..ப்ளீஸ் வெயிட்” என்று விட்டு அவர் சென்றுவிட..அனைவரும் தொய்ந்து போய் அமர்ந்தனர்..
நள்ளிரவில் இஷானின் உடல் தூக்கிப்போட நர்ஸ் அலாரம் அழுத்த டாக்டர்கள் ஓடினர் ஐசியு நோக்கி..
அச்சோ…! ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி…?
முதல்ல இஷானை பிழைக்க வைக்குற வழியைப் பாருங்க. அப்புறம் அவனோட விழியோட சேர்த்து வைக்கப் பாருங்க… சம்ஜே..???
Nan gali polave 🙄🙄😁😁😁 mikka nandri sago🥰❤️
Ishan ku sikram treat panunga kapathunga avana avan vizhi oda seranum avanga amma aasaiya niraivetha vainga
Idhu nalla irukke.. aana epdi kaapathuradhu 🙄🙄
அச்சோ எந்த தவறும் பண்ணாத மீராக்கு இப்படி ஒரு இறப்பு .. இந்த இஷான்ன காப்பாதி விடுங்க
பெற்றவர் செய்த பாவத்துக்கு பிள்ளைகள் அனுபவிக்கும் தண்டனை.. மிக்க நன்றி சகோ❤️🥰
Nice epi
மிக்க நன்றி சகோ❤️😍
முட்டாள் மதுமிதா 😠😠