Skip to content
Home » காதலை கண்ட நொடி – 17

காதலை கண்ட நொடி – 17

அத்தியாயம் – 17

என் சுவாசமாய் நீ 

  ஆனபின் ஒருமுறை இதயம் துடிக்க உன்னை தேடினேன்..

காற்றாய் கரைந்து போன 

மாயம் என்ன என் சுவாசமானவனே..

        -டைரியில்..

“நோ..என் இஷான என்கிட்ட இருந்து பிரிக்காதீங்க..நோஓஓஓ” 

என்று அலறி அழுதவளை அதிர்ச்சியாய் எல்லோரும் பார்க்க அவளை பிடித்து உலுக்கினான் கெளதம்..

“ஹேய்..என்ன ஆச்சுடி.. இங்க பாரு கயல் சாருக்கு உள்ள ட்ரீட்மென்ட் போய்ட்டு இருக்கு..” என்று அவளை உலுக்க..அப்போது தான் சுயம் அடைந்தவள் உடனே இஷானின் தந்தையையும் தனது பெற்றோர்களையும் பார்த்து..

“ப்ளீஸ் உங்ககிட்ட கெஞ்சி கேட்கிறேன்..என் இஷானை என்னான்டயே கொடுத்துடுங்க.. நா..நான் முதல்ல அவரை பழிவாங்கனும்னு தான் காதலிக்கிறேன்னு சொன்னேன்..ஆ..ஆனா..எப்போ அவரு உயிருக்கு ஆபத்தான நி..நிலமையில பார்த்தேனோ அப்பவே புரிஞ்சுன்டேன் அவரு இல்லாம நானும் இருக்கமாட்டேன்னு.. 

நேக்கு யாரும் வேண்டாம் உங்க பணம் உங்க மரியாதை உங்களோட கவுரவம் எதுவும் வேணாம் என் இஷான் மட்டும் போதும் அவரைமட்டும் என்கிட்ட இருந்து யாரும் பிரிக்க பார்க்காதீங்க.. 

உங்க கால்ல விழுந்து கேட்கிறேன்..என்னோட அவர என்னான்டயே கொடுத்துடுங்கோ ப்ளீஸ்” என்று அவர்கள் மூவரின் காலிலும் விழப்போக அவளை தடுத்த மதுமிதா..

“எல்லாத்துக்கும் காரணம் நான்தான்டி கயல்.. உங்க தாத்தா மேல இருந்த கோவம் என் கண்ண மறைச்சுடுத்து.. அதனாலதான் ஒரு அப்பாவி பிள்ளையான்டான் உயிர ஆபத்துல சிக்க வெச்சுட்டேன்..

இனி நீயா வேண்டாம்னு சொன்னாலும் அவர்தான் நம்மாத்து மாப்பிள்ளை கவலபடாதேடி.. நான் செஞ்ச பாவத்துக்கு அவரான்ட மன்னிப்பு கேட்கனும் அதுவே நேக்கு போதும்” என்று கூற அவரிடம் இருந்து விலகி தன்னவன் உடைமையை மீண்டும் தன்னோடு வைத்துக்கொண்டு அமர்ந்தாள்..

அதைக்கண்டு மதுமிதா குலுங்கி அழ..

“விடுமா அவ சரியாகிடுவா..குழந்த ரொம்பவும பயந்து இருக்கா அதான் உன்மேல கோவமா இருக்கா..அவரு பிழைச்சு எழுந்து சொன்னா கேட்டுப்பா” என்று அவரை சமாதானம் செய்தார் இனியன்..

அவளது அருகே சென்ற ஸ்டீவ்

” இஷான்னா ரொம்ப இஷ்டமோ?” என்று கேட்க..

“ஏன்னே தெரியாம ரொம்ப பிடிச்சுடுத்து அங்கிள்” என்று கூற லேசாக சிரித்தவர்..

“கிரேஸி கேர்ள்..நீயும் அவனும் ரொம்ப நாள் சந்தோஷமா இருப்பீங்க நோ வொர்ரீஸ் மை சைல்ட்” என்று கூற..

அவரை பார்த்தவள் அமைதியாக தலையை குனிந்து அமர அந்நேரம்

வெளியே வந்த டாக்டர் “ஓபன் ஸ்கல் ஆபரேஷன்ல இப்படி நடக்கும் இது சகஜம்தான்.. ப்ளட் ப்ரஷர் ஸ்டேபில் ஆகாது சீக்கிரம் அதான் அவருக்கு கஷ்டமாகிடுச்சு இன்ஜெக்ட் பண்ணிட்டோம்..நவ் ஹி இஸ் பெட்டர்” 

என்று அனைவரின் மனதிலும் ஆறுதலான வார்த்தை சொல்ல அவரிடம் வந்த ஜோனஸ்..

“நாங்க எப்போ அவரை பார்க்க டாக்டர்?” என்று கேட்க..

“இது கொஞ்சம் கிரிட்டிகல் ஸ்டேஜ் சார்..அவர் கண்முழிக்கிற வரை ஆபத்து ஸ்டேஜ்தான் ஏன்னா சிக்ஸ்டி பர்சன்ட் கோமா ஸ்டேஜ்க்கு போக சான்ஸ் இருக்கு.. சோ கண்முழிக்கிற வரை யாரையும் பார்க்க அலோவ் பண்ண மாட்டோம்..அவருக்கு இன்ஃபெக்ஷன் ஆக நிறைய சான்ஸ் இருக்கு சார்..சோ ப்ளீஸ் வெயிட் ஃபார் ட்டூ டேய்ஸ் சார்”

என்றுவிட்டு சென்றுவிட்டார்..

தன் நெஞ்சோடு அணைத்த அவனது உடைமையை இன்னும் இறுக்கி பிடித்துக்கொண்டாள் இஷானின் விழி..

அவள் அருகில் வந்த ஜோனஸ்

“அவன் உயிரோடதான்மா இருக்கான்..நீ கவலைபடாதே..அவன் கண்விழிக்க இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம்..போ மா போய் ட்ரஸ் மாத்திட்டு வா..எவ்வளவு நேரம் இப்படியே இருப்ப..முதல்ல ஏதாவது சாப்பிடு” என்று கூற..

“அவரு கண்முழிக்காம நான் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் சார்” என்று கூறிவிட்டு அமர்ந்து கொண்டாள்.. கெளதமிடம் திரும்பிய ஜோனஸ்..

“நீங்க போய்ட்டு அவங்க தம்பிய கூட்டிட்டு அவங்களுக்கு ட்ரஸ் எடுத்துட்டு வாங்க கெளதம்..அவங்கள பத்தி உங்களுக்கு தானே தெரியும்” என்று கூற அவனும் சரியென கிளம்பினான்..

திரும்பி வரும்போது அவளது தம்பியுடன் வந்தவன் அவளிடம் உடையை நீட்டினான்.. அவனை கேள்வியாய் பார்த்தவளை நோக்கி..

“அவரு கண்ணுமுழிச்சு பார்க்கும்போது இப்படித்தான் அவர்முன்ன போய் நிப்பியா? அவரு உன்ன பார்க்கும்போது நீ நல்லா இருந்தாதானே அவரை கவனிச்சுக்க முடியும்” என்றவன் அவளை உடை மாற்ற சொல்ல உடையை மாற்றியவள் அவன் நீட்டிய உணவையும் உண்டாள்..தன்னவனை பார்த்துக்கொள்ள தான் நலமாய் இருக்கவேண்டும் என்று.. அப்போதும் தன் நண்பனுக்கு உணவை பகிரவும் மறக்கவில்லை..தன்னவனின் உடைமையை விட்டுவிடவும் இல்லை..கண்கள் கண்ணீர் சிந்த அவளிடம் உணவை வாங்கி கொண்டவன் அவளுக்கும் ஊட்டி விட்டான்..

அங்கிருந்த அவளது பெற்றோரையும் திட்டி சாப்பிட வைத்தான் 

ஜோனஸ்ஸையும் ஸ்டீவ்வையும் அவளுக்கு சொன்ன அதையே செய்து சாப்பிட வைத்து அவர்களை விட்டு தன் தோழியிடம் சரணடைந்தான்..

மொத்தமாய் மூன்று நாட்கள் எல்லோரையும் தவிக்க வைத்து டாக்டர்களை அலறவிட்டவன் கண் திறந்தான்.. இமைகளை கஷ்டப்பட்டு பிரித்தவனை பார்த்த நர்ஸ் டாக்டரை வரவழைக்க டாக்டர்கள் வந்து அவனை முழுதாக செக் செய்தனர்..

அவனை பரிசோதனை செய்து பின்பு அவனை நார்மல் வார்டுக்கு மாற்றினனர்.. அதன்பின் அவனை பார்க்க அனைவரையும் அனுமதித்தனர்.. 

அனைவரும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.. அனைவரையும் நிற்கவைத்த மருத்துவர்..

“சார் உங்க பேர் நியாபகம் இருக்கா?” என்று கேட்க..

“ம்ம்..இ..இஷான் டைசன் ஸ்டீவ்” என்று கூற..

“குட்..நாட் பேட்..இவங்கலாம் யாருனு தெரியுதா?” என்று காட்ட

 கண்களை சுழட்டி பார்த்தவன் அனைவரையும் ஓர் அந்நியபார்வை பார்த்தவன்..ஸ்டீவ்வை மட்டும் பார்த்து..

“டேட்” என்று அழைக்க.. கண்கள் பணிக்க அவன் அருகில் வந்தவர்..

“காட் க்ரேஸ்..மை சன்” என்று கூறி அவனை லேசாக அணைத்துக்கொண்டார்..

“சார் வேற யாரையாவது நியாபகம் இருக்கா?” என்று கேட்க..மீண்டும் அனைவரையும் பார்க்க ஜோனஸ்ஸை பார்த்தவன்..

“ஜோனி” என்று அழைக்க.. தன் நண்பனின் ப்ரத்யேக அழைப்பில் கண்கள் கலங்க

ஓடிவந்து அவனை லேசாக கட்டிக்கொண்டவன் “மச்சான்” என்று அழ ஆரம்பித்து விட்டான்..

“ரொம்ப பயந்துட்டியா” என்று கேட்க..

“உயிரே போய்டுச்சுடா” என்று கேட்க..

தன்னவன் தன்னை பார்க்க மாட்டானா என்று கண்கள் கலங்கி மூக்கு சிவந்து நின்றிருந்தவளை பார்த்தவனுக்கு அவளது முகம் எங்கோ பார்த்தது போல் இருந்தது பின் நினைவு வர தன் தந்தையை நோக்கினான் அவரும் கண்மூடி திறக்க அவர்களது குடும்பத்திற்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்தவன்.. அவளை அருகில் வா என்று கை நீட்ட 

ஓடிவந்து அவனது கரங்களை பற்றிக்கொண்டவள் அதுவரை அழாமல் அடக்கி வைத்த அத்தனை துன்பத்தையும் அழுது கரைந்தாள்..

“எ..என்னை ம..மறக்கலைல?” என்று தேம்பியபடி கேட்க..

“விழி” என்று அவனின் பிரத்தியேக அழைப்பில் மனம் நிறைந்தவள் மூன்று நாட்கள் மொத்தமாய் மறந்திருந்த அழுகையை குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிக்க..

“எ..எனக்கு உன்மேல கோவம் இ.. இன்னும் போகல விழி” என்றான்..

எதற்காக என்று யோசித்தவள்..

“இல்ல..என்ன தப்பா நினைக்காதேள் அவரு என் ப்ரண்ட் தான் நீங்க ஆத்துல வந்து பேசி சம்மதம் வாங்க டைம் ஆகும்ல அ..அதுக்குள்ள எங்காத்துல வேற வரன் தேடிட கூடாதுனு அவரும் நானும் செஞ்ச ட்ராமா அது..நான் உ..உங்கள விட்டு வேற யாருக்கும் ஆம்படையாளா போகமாட்டேன்.. அப்படி போகனும்னா என் ஜடம்தா” என்று அவள் கூறி முடிக்கும் முன் அவளது உதட்டில் தன் டிரிப்ஸ் ஏறாத கையை வைத்தவன்..

“உ..உன்ன யாருக்கும் விட்டுத்தரவும் மாட்டேன்..விட்டுட்டு போகவும் மாட்டேன்” என்று கூற நின்றிருந்த அனைவரின் கண்களும் கலங்கியது..

அவன் அருகில் வந்த இனியன் அவனது தலையில் கட்டு இருந்ததால் கன்னத்தில் தடவியவரை பார்த்து புன்னகைத்தவன்..

“என் விழியை என்கிட்டயே கொ..கொடுத்துடுங்க மாமா..நா..நான் அவளையும் உங்களையும் பத்திரமா பார்த்துப்பேன்..ப்ளீஸ்” என்று கேட்க..

அவரோ தன் மனையாளை பார்த்தார் அவரோ தன் தவறை எண்ணி நொந்தவராய் நின்றிருந்தார்..

அந்நேரம் உள்ளே வந்த நர்ஸ் “சார் ப்ளீஸ் அவருக்கு தலையில ஆபரேஷன் ஆகி இருக்கு ரொம்ப ஸ்டெரயின் பண்ணக்கூடாது அவரை ரெஸ்ட் எடுக்க விடுங்க” என்று கூற அனைவரும் வெளியே போக திரும்ப விழியின் கையை தன்னோடு பற்றினான்..அவள் திரும்பி 

“என்ன இஷான்?” என்று கேட்க அனைவரும் திரும்பி பார்க்க..

“உங்க அ..அம்மாக்கு இன்னும் எ..எங்க அம்மா மேல கோ..கோவம் போகலையா? அதான் என்கிட்ட பே..பேசவே இல்லையா?” என்று கேட்க.. அவன் அருகில் வந்த மதுமிதா 

“எந்த மூஞ்சிய வெச்சுண்டு உங்களான்ட மன்னிப்பு கேட்கனு தெரியாமதான் பேசாம இருந்தேன்..யாரோ செஞ்ச பாவத்துக்கு உங்களான்ட நான் கோவமா பேசி பெரிய அபத்தம் செய்ய போய்ட்டேன்..என்ன மன்னிச்சிடுச்கோ தம்பி” என்று கூறி அழ 

“த..தாய்மாமா வைஃப்பும் இன்னொரு அம்மாதான் அ..அவங்கள எந்த மகனாச்சும் கோ..கோச்சுப்பானா?” என்று கேட்க.. அவருக்கோ கண்கள் கலங்கியது..

“உ..உங்கள போய் நான் தப்பா புரிஞ்சுண்டேனே” என்று அவர் அழ..

“உ..உங்க பொ..பொண்ண எனக்காக ஒரு பா..பாட்டு பாட சொல்றீங்களா..ப்ளீஸ்..அ..அப்போதான் நீங்க என்னை மன்னிச்சதா அர்த்தம்” என்று கூற அவரோ தன் கண்களை துடைத்துக்கொண்டு..

“இதோ கண்டிப்பா..ஆனா அவ என்னான்ட பேச மாட்றாளே..நா..நான் உங்களை ஏதோ வேணும்னே தள்ளிவிட்டு அடிபட வெச்சா மாதிரி நினைச்சுண்டு இருக்கா” என்று கூற அவளை பார்த்தவன்..

“தப்பு விழி..அம்மா ந..நம்மமேல இருக்குற பாசத்துல தான் அப்படி செஞ்சு இருப்பாங்கனு யோசிடா.. அம்மாவ தள்ளி வ..வைக்காதே அதோட வலி ரொம்ப பெ..பெருசு அ..அதை நான் அ..அனுபவிச்சுட்டு இருக்கேன் டெய்லி” என்று கூற இப்போது தனது விரல் கொண்டு அவனது உதட்டில் கை வைத்தவள் 

“வேணாம் அதெல்லாம் யோசிக்காதீங்கோ..உங்களுக்கு நான் இருக்கேன்.. இப்போதான் அவங்கள அம்மானு சொன்னீங்கோ.. சோ..ஃபீல் பண்ணக்கூடாது.. உங்களுக்கு என்ன நான் அவங்களோட பேசணும் அவ்ளோதானே பேசுறேன்..நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றுவிட்டு திரும்ப அவன் மீண்டும் அவள் கையை பிடித்து இழுக்க ‘இன்னும் என்ன?’ என்பதை போல அவள் பார்க்க..

“சாங்” என்று கூறி லேசாக சிரிக்க

“அதான் கேட்கிறாரே பாடுடி கயல்” என்று மதுமிதா கூற..

பாடத்துவங்கினாள். 

“ஆயர்பாடி மாளிகையில் தாய்மடிமேல் கன்றினை போல் 

மாயக்கண்ணன் தூங்குங்கின்றான் தாலேலோ” என்று அவள் பாட அவன் தூங்க ஆரம்பித்து இருந்தான்..

அனைவரது முகத்திலும் ஏதோ ஒருவகையில் நிம்மதி பரவியது..

10 thoughts on “காதலை கண்ட நொடி – 17”

  1. CRVS2797

    அப்பாடா…! எப்படியோ இஷானை காப்பாத்தி கொடுத்துட்டிங்க.

      1. Avatar

        Ishan safe … Adhanala author neengalum safe 🙂 padhara vachuteenga..thanks for saving him and a happy ending

        1. Jayalakshmi S

          பதறாதீங்க பதறாதீங்க…
          அதான் கொண்டு வந்துட்டேனே❤️❤️😍😍 மிக்க நன்றி சகோ😍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *