Skip to content
Home » காதலை கண்ட நொடி -18 (epilogue)

காதலை கண்ட நொடி -18 (epilogue)

கடைசி அத்தியாயம்..

அதாங்க எபிலாக்..

எட்டு மாதங்கள் கழித்து..

லண்டன் மாநகரத்தில் கோலாகலமாக கொண்டாட்டமாய் தமிழரின் ப்ராமண முறைப்படி திருமணம் ஏற்பாடு ஆனது..

ஸ்பைசி எஃப் எம் மின் ஓனரும் லண்டனின் அப்பர் மிடில் கிளாஸ்ஸின் பாரம்பரியத்தையும் சேர்ந்த ஸ்டீவ்வின் மகனான

இஷான் டைசன் ஸ்டீவ்விற்கும்..

தமிழ்நாட்டில் படாத பாடு பட்டு இப்பொழுது தங்களது மருமகனின் உதவியால் ஹோட்டல் ஓனரான இனியன் மதுமிதா தம்பதியரின் மகளான கயல்விழிக்கும் திருமணம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது..

பார்ப்பவர்கள் அனைவரும் ஒரு கணம் இந்த ஜோடியை கண்டு பொறாமைபடும் வண்ணம் பார்வையாலே காதல் செய்யும் இந்த காதல் ஜோடிகள் சிறகின்றி பறந்தனர்..

ஸ்பைசி எஃப் எம்மின் வாட்ச்மேன் முதற்கொண்டு அனைவரையும் தன் சொந்த செலவில் தனி விமானத்தில் திருமணத்திற்கு அழைத்து வந்தார் ஸ்டீவ்.. தன் மகனின் ஆசையை அவன் சொல்லாமலே நிறைவேற்றுபவர் ஆயிற்றே..

அன்று இஷான் கண்முழித்ததும் அவனைவிட்டு அகலவே இல்லை அவனது விழி..

அனைவருக்கும் அதில் ஒரு திருப்தி..அதனால் அவர்களை யாரும் தொந்தரவு செய்யவில்லை.. தனது தோழிக்காக ஸ்நாக்ஸ் டைமை தியாகம் செய்து நோட்ஸ்லாம் எழுதி கொண்டு வந்து அவளுக்கு புரியும்படி சொல்லிக்கொடுத்தான் கெளதம்.. 

தன் நண்பனையும் அவனது தந்தையையும் வற்புறுத்தி ரெஸ்ட் எடுக்க வைத்த ஜோனஸ் இஷானின் பொறுப்பை திறம்பட செய்து வந்தான்.. ஆனால் செய்யும்முன் இருவரிடமும் கலந்தாலோசிக்க மறக்க மாட்டான்.. கூடவே இஷானுடன் இருந்தபடியே இசை ப்ரோகிராமில் கயலையும் நடத்த உதவினான்..

இருவரும் தங்களது நட்புக்களை உயிராய் தாங்கினர்..இவர்களது நட்பும் ஒருவித காதல்தான்.. அதை உணர்ந்தவர்களுக்கே அதன் உன்னதம் புரியும்..

மதுமிதா அவன் கேட்டதையெல்லாம் சமைத்து கொடுத்து அவனை கயலுடன் சேர்த்து பார்த்துக்கொள்ள அவரது சமையல் சுவையில் மயங்கியவன் அவர்களுக்கு தன் மூலமாக பேங்க் லோன் ஏற்பாடு செய்து உயர்தர ஹோட்டல் வைக்க செய்தான்..ஆறு மாதங்கள் முழுதாக ரெஸ்ட் எடுத்த இஷான் பழையபடி எல்லாம் செய்யலாம் என்று டாக்டரே சொன்னாலும் கயல் அவனை அதிக வேலை செய்ய விடமாட்டாள்..

அவளுக்கு உதவி ஜோனஸ்ஸும் கெளதமும்..

இது சரிபட்டு வராது என்று முடிவு செய்த பெரியவர்கள் அவர்களது திருமணத்தை முடிவு செய்ய தங்களது திருமணம் தனது அத்தை வாழ்ந்த வீட்டில் நடக்க வேண்டும் என ஆசைபட்ட கயல்விழியின் ஆசைக்கிணங்க அங்கேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..

முறைப்படி மடிசார் அணிந்து தன்னவனை வேஷ்டி சட்டையில் பார்த்தவள் அவனது கம்பீரமான அழகில் மயங்கி விழாத குறையாக அவனை ரசித்துக்கொண்டு இருக்க அவனோ இவளது ட்ரெடிஷனல் அழகில் மயங்கி நின்றான்.. 

காசியாத்திரைக்கு பெண்ணின் சகோதரனை கேட்க ஜோனஸ்ஸும் கெளதமும் வந்து நின்றனர்.. கயல் இஷானின் விருப்பப்படி இருவரும் சேர்ந்து தங்களது சொந்தமாக செயல்பட வேண்டும் என்றதற்காக இருவரும் சேர்ந்தே எல்லா சம்பிரதாய சடங்குகள் செய்தனர்..

தகப்பனாக தன் மடியில் மகளை அமர்த்தி அவளை தன் உடன்பிறவா சகோதரியின் மகனுக்கு தாரைவார்த்து கொடுத்தார் இனியன்..

கண்களில் கண்ணீரும் உதட்டில் சிரிப்புமாய் அவள் தலைகுனிந்து தாலியை பெற்றுக்கொள்ள குனிய அவளது முகத்தை நிமிர்த்தி கண்களை துடைத்தவன் அவளது முன்நெற்றியில் முத்தமிட்டு முத்திரை பதித்து பின்னரே மங்கலநாணை அவளது சங்கு கழுத்தில் அணிவித்தான்.. 

கண்கள் கலங்க அமர்ந்திருந்த இனியனின் கைகளை பிடித்து அழுத்திக்கொடுத்தவனின் அழுத்தம் சொல்லாமல் சொன்னது இனி இவள் என் பொறுப்பு என்று..

அனைவரது முகமும் சிரிப்பில் மின்ன ஸ்டீவ் மட்டும் தன் காதல் மனைவி மீராவை எண்ணி வருத்தப்பட.. அவரது தோளில் ஆதரவாய் கை போட்ட இஷான்..”ஜோனி” என்று அழைக்க…

ஜோனஸ்ஸும் கெளதமும் ஒரு அழகான மெழுகு சிலையை அவர் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தினர்.. மூடியிருந்த திரையை விலக்க சொல்லி இஷான் கூற அதை விலக்கியவர் கண்கள் அசையவில்லை..

தன் மீராவை தத்ரூபமாக உயிரோடு இருப்பதை போல் வடிவமைத்து தன் தந்தைக்கு பரிசளித்தான் இஷான் 

கண்கள் கலங்க அந்த சிலையை பார்த்தவர் இஷானை பார்க்க கண்சிமிட்டி சிரித்தான் அந்த அழகு கள்வன்.. அவனை அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தியவர் கண்கள் கலங்க தன் மனையாளின் சிலையை தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டு இருந்தார்..அதைக்கண்டு சந்தோஷப்பட்டான் இஷான்..இதையெல்லாம் கவனித்தவன் பக்கத்தில் இருந்த மனையாளின் கனல் பார்வையை கவனிக்க மறந்துவிட்டானே..(மாட்டிகிட்டயே ராசா)

தாலி கட்டியபின் அவள் புடவை மாற்ற சென்ற நேரத்தில் அவனது அனைத்து கேர்ல்ஸ் ப்ரண்ட்ஸ் ஸும் அவனை சூழ்ந்து கேள்வி கேட்டு துளைத்தனர்..

“நாங்க இங்க இத்தனை பொண்ணுங்க இருக்கோம் ஆனா நீ எங்கள விட அழகு கம்மியா ஒரு இண்டியன் கேர்ல்ல மேரிட் பண்ற வீ ஆர் வெரி டிஸ்ஸப்பாயிண்டட் இஷா” என்று அந்த கும்பலின் தலைவி சொல்ல எல்லோரும் ஆம் என்று கத்த அவர்கள் அனைவருக்கும் புன்னகை ஒன்றையே அவன் பதிலாய் கூறி வேறு ஏதும் கூறாமல் விடைகொடுக்க அதை புடவை மாற்றி வந்த கயல்விழி கண்டு முகம் சிவந்து காளியாய் அவதாரம் எடுத்ததை இன்னும அறியாமல் சுற்றிக்கொண்டு உள்ளான் விழியின் இஷா..

அவள் அமைதியாகவே வர அனைவரும் வீடுவந்து சேர்ந்தனர்.. 

வந்தவர்களை ஊஞ்சலில் அமரவைத்து பாட வேண்டும் என்று கேட்க அவனுக்கு உடல்நலம் சரியில்லை ரெஸ்ட் வேண்டும் என்று அதை கேன்சல் செய்துவிட்டு அவள் சென்று ரூமிற்குள் புகுந்து கொண்டாள்..அவனும் அவளுக்கு டையர்ட் என்று விட்டுவிட்டான்.. நேரே அவள் தன் அறையில் சென்று உடைமாற்றி படுத்துக்கொண்டாள்..

கோவம் மட்டும் குறையவே இல்லை..

வந்தவர்கள் அனைவரையும் வீட்டின் மனிதர்களாய் இருந்து உபசரித்து வழியனுப்பி வைத்தனர் கெளதமும் ஜோனஸ்ஸும்.. ஸ்டீவ்வை பார்க்க வந்த சென்னை ஆபீசின் வாட்ச்மேன்..

“சொல்லுங்க வாட்ச்மேன்.. எல்லாம் உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருந்துச்சா?” என்று ஸ்டீவ் கேட்க..

“அய்யா என்னங்க இது நான்லாம் வெளிநாட்டுக்கு எந்த பக்கம் போகணும்னு கூட தெரியாம இருந்த ஆளுங்க என்னைலாம் கூட்டி வந்து தம்பி துணிமணிலாம் எடுத்துக்கொடுத்து..

வாட்ச்மேன் தானேனு சாதாரணமா நினைக்காம தம்பி என்னையும் மனுஷனா மதிச்சு பழகுறாரே அதுவே பெரிய விஷயங்க.. இதுல நீங்க வேற பிடிச்சமாதிரி இருந்துச்சானு கேட்கறீங்களே ஐயா உங்க எல்லாரோட நல்ல மனசுதான்யா உங்கள இந்த நிலைமைக்கு உயர்த்தி இருக்கு..” என்று அவர் கூற..

லேசாக புன்னகைத்த ஸ்டீவ் 

“அவனோட என்னோட எல்லா நல்ல குணமும் அவ அம்மா சொல்லி கொடுத்தது.. எல்லாருமே மனுஷங்கதான்னு அவதான் ஈகுவல்லா நடத்துவா” என்று கூற எல்லோரும் கண்கலங்கி போயினர்.. அவர்களும் விடைபெற்று கிளம்ப..

இரவு அவனது ப்ரத்தியேக அறையில் முதலிரவுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.. 

“அவங்க வசதிக்கு நம்ம அளவுக்கு இறங்கி வந்ததே பெரிய விஷயம் கயல்மா உங்க அத்தை மாதிரி நீயும் நடந்துக்க..நல்லபடியா இருக்கனும்” என்று அறிவுரைகளை கூறி அவளை அனுப்பி வைத்தார் மதுமிதா..

நல்லபிள்ளை போல கேட்டுக்கொண்டவள்..

அந்த அறையின் வாசலில் நின்றாள்.. நின்றவள் லேசாக கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.. சென்றவள் கதவின் அருகிலேயே நின்றுவிட்டாள் ஏனென்றால் உள்ளே முழுதும் இருளாக இருந்தது..அதனால் அங்கேயே நின்றாள்..

“மை வார்ம் வெல்கம் டார்ஜில்” என்று அவள் காதோரம் குரல் கேட்க அதிர்ச்சியில் கையில் இருந்த ஃப்ளாஸ்க் தவற அதை பிடித்தவன்..

“ஹேய்ய்..ஸ்வீட்ஹார்ட்..எதுக்கு இந்த பயம் நான்தான்” என்றபடி விளக்குகளை ஒளிரவிட அவள் காலில் கீழே இருந்து அவர்களது அறை முழுவதும் அடர் சிவப்பு ரோஜா இதழ்களை கொண்டு விரிப்பு போல் ரெடி செய்து இருந்தான் தன்னவளுக்காக..அதை பார்த்தவள் கண்கள் விரிய சுற்றி பார்த்தவள் பார்வை இறுதியில் அவனில் வந்து நிற்க.. அதுவரை மறைந்திருந்த கோபம் தலைதூக்க அவனை முறைத்தவள் தொம் தொம் என நடந்து அந்த ஃப்ளாஸ்க்கை தொப்பென வைத்தவள்.. அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு சென்று அங்கிருந்த காட் டில் அமர்ந்துக்கொண்டாள். 

அவள் செய்ததுக்குலாம் அர்த்தம் புரியாமல் ங்கே என விழித்தவன்..

“விழி பேபி.. நான் செஞ்சது ஏற்பாடுலாம் உனக்கு புடிக்கலையா? என்ன ஆச்சு எது சரியில்லை சொல்லு பேபி ஹனிமூன்ல மாத்திக்கலாம்” என்று கேட்க..

“எனக்குனு வந்து வாய்ச்சவன்தான் சரியில்ல.. நான் எவ்வளவு நம்பினேன் என் இஷா நல்லவன் இதுவரைக்கும் என்னை தவிர வேற பொண்ணலாம் பார்க்கவே மாட்டான்னு நம்பினேனே.. ஆனா நீ.. நீ ஒரு ஊரே சேர்த்து வெச்சு இருக்க? இதுல அவளுகலாம் என்னை அழகா இல்லனு சொல்றாளுங்க நீங்க எதுவும் பதில் சொல்லாம அமைதியா சிரிச்சுண்டு இருக்கேள்..

அப்போ அப்போ நான் நினைச்சது எல்லாம் பொய் அதானே..போடா..” என்று கூற..

‘இஷா..மாட்டிகிட்டியேடா இப்போ என்ன சொல்லி சமாளிக்க போற’ என்று எண்ணியவன்..

“ஹே பேபி அப்படி இல்லடி இதுவரைக்கும் நான் யாரையும் லவ் பண்ணலடி..  உன்னை மட்டும் தான்டி லவ் பண்ணேன் ப்ளீவ் மீ டியர்”  என்றபடி அவள் அருகில் வர..

“கிட்ட வராதேடா.. நீ வேணாம் எனக்கு போடா” என்று கூற 

கோவபட்டவன்..

“ஷட் அப் விழி” என்று கத்த அதிர்ந்து அவனை பார்த்தாள்..

“இவ்வளவு சொல்றியே என்னை சுத்தி அவ்வளவு பேர் இருந்தாங்கனு சொல்றியே அவங்க யாராவது என்னை டச் பண்ணி பார்த்தியா? இல்ல நான் யாரையாவது டச் பண்ணி பார்த்தியா? சொல்லுடி பார்த்தியா?” என்று அடக்கப்பட்ட கோவத்தோடு கேட்க

‘இல்லை’ என்பது போல தலையசைக்க

“பின்ன எதை வெச்சு என்னை ப்ளே பாய் ரேஞ்சுக்கு சொல்ற.. நான் உன்ன எப்படி லவ் பண்ணேன் தெரியுமா?..

நீ ஒருநாள் மிஸ்டேக் பன்னல ப்ரோகிராம் அந்த ப்ரோகிராம் ல இருந்து உன்ன டெர்மினேட் பண்றதா இல்ல கன்டினியூ பண்றதானு வந்த சமயம் அப்பாக்கு ஹெல்த் இஷ்யூ அதனால உன் ஃபைல் என்கிட்டதான் வந்தது.. முதல்ல எதுவுமே கேட்காம உன்ன டெர்மினேட் பண்ணதான் உன் ஃபைலை எடுத்தேன்.. அப்படியே என் மீராம்மாவை பார்த்தமாதிரி இருந்துச்சு யாரு என்னனு உன் ஃபைலை பார்த்து தெரிஞ்சுகிட்டேன்..உன் வாய்ஸ் நோட் கேட்டப்புறம் நான் நானாவே இல்ல.. அந்த வாய்ஸ் சேம் அம்மா வாய்ஸ் எனக்கானவளா அப்போவே உன்னை நான் உணர்ந்தேன்..

தினமும் உன் ப்ரோகிராம் ரெக்கார்டிங்  எனக்கு வரணும்னு சொல்லித்தான் நான் அன்னைக்கு உன்ன வார்னிங்வோட விட்டேன்..உன் வாய்ஸ் கேட்காம எனக்கு தூக்கமே வராது..உன்ன பார்த்து ப்ரபோஸ் பண்ணனும்னு இண்டியா வரணும்னு நினைச்ச சமயம்தான் அம்மாவோட ஆக்ஸிடென்ட் அம்மா சாகும்போது அவங்க தம்பி பொண்ணதான் கல்யாணம் செய்யனும்னு சத்தியம் வாங்கினாங்க அம்மாவோட கடைசி டைம் அவங்க கடைசி ஆசை நிறைவேத்த தான் மனச கல்லாக்கிட்டு ப்ராமிஸ் பண்ணேன்..

 ஆனா மனசுல ஏதோ ஒரு ப்ளேஸ்ல நீ மட்டும் அந்த மாமா பொண்ணா இருக்ககூடாதானு தவிச்சேன்.. நான் மாமாவை பத்தி டிடெக்டிவ் மூலம் கிடைச்ச தகவல்ல தான் நீயும் நான் காதலிச்ச பொண்ணும் ஒரே பொண்ணுனு தெரிஞ்சுச்சு அவ்ளோ சந்தோஷம் நெக்ஸ்ட் டே வே உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டேன்..உன்பின்னாடியே சுத்தி உன்னை கல்யாணம் வரை கொண்டு வந்தேன்.. நான் தமிழ் கத்துக்கிட்டதும் உனக்கு தான் டைரியில கவிதை எழுதினேன்..ஆமா நான் பப் அது இதுனு போவேன்தான் ஆனா எந்த பொண்ணையும் டச் பண்ணிகூட பேசமாட்டேன் அது அம்மாவோட வளர்ப்பு வைஃப்பா வரவள தவிர வேற யாரையும் டச் லாம் செய்யக்கூடாது அது அவளுக்கு நாம செய்யுற துரோகம் செய்யுறதுனு சொல்லுவாங்க..அதன்படி நான் டச் பண்ண பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் கேர்ள் ஆல்வேய்ஸ் நீ மட்டும் தான்டி.. அப்படி பட்ட என்ன நீ வேணாம்னு சொல்றல போடி” என்று கோவமாய் அவன் திரும்ப.. 

தன்னவனின் உயிர் காதலை உணர்ந்த நொடி அவளது இதயம் கனிந்தது.. ஓடிச்சென்று பின்னிருந்து அவனை அணைத்தவள் 

“ஐயம் சாரிங்க..நா..நான் சும்மா விளையாட்டுக்கு சொ..சொன்னேன் நீ..நீங்க இவ்ளோ சீரியஸ்ஸா எடுத்துப்பீங்கனு தெ..தெரியலங்க..ப்ளீஸ் உங்க விழி தானே என்ன மன்னிச்சிடுங்க.. ப்ளீஸ் இஷான்” என்று அழ அவளது கண்ணீர் அவனது முதுகில் சூடாக பட அவளது கையை பிடித்து முன்னே இழுத்தவன்..  

“இனி விளையாட்டா கூட அப்படி பேசாதடி ஆல்ரெடி அம்மாவை இழந்த வலியே எனக்கு பெருசா இருக்கு நீ இல்லாம நான் வாழுறதே வே” என்று கூறிக்கொண்டே போனவன் பேச்சு நின்று போனது  அவன் இதழில் அவனது விழியின் மொழியால்..

அவளது இதழ்மொழியில் கோவம் எல்லாம் கரைய அவளது தேனை பருகும் முறை அவனுடையது ஆனது..ஊடல் முடிந்து வரும் கூடல் இனிமையானது காமம் கடந்து காதலானது..

இரண்டு வருடம் கழித்து…

“இஷா..கம் ஃபாஸ்ட்” என்ற வார்த்தையில் கடகடவென ஓடிவந்தான் இஷான்.. 

“வாட் ஹாப்பன்ட் பேபி” என்று மூச்சு வாங்க கேட்டவனை முறைத்தவள்

“ஹவ் மெனி டைம்ஸ் ஐ டோல்ட் யூ டோன்ட் ரன் இடியட்” என்று கோபமாய் கத்த..

“சாரி பேபி சாரி பேபி..இனி ஓடிவரல..எதுக்கு டார்ஜில் கூப்பிட்டீங்க?” 

“யுவர் வைஃப் தெஃப்ட் மை சாக்லேட்..நீங்க அவளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்தும் ஷி தெஃப்ட் மைன்” என்று அவனது அழகிய மூன்று வயது மகள் மீரா கூற..

“அச்சோ.. பேபி.. அம்மாக்கு ஸ்வீட் டூத்டா..இப்போ தம்பி பாப்பா உள்ள இருக்காங்கல அதான் எடுத்து சாப்பிட்டு இருப்பாங்க..ஃபர்கிவ் ஹர் பேபி..நாம வேற வாங்கிக்கலாம்” என்று தன் மகளை சமாதானம் செய்ய..

அங்கு மகளின் கோவத்திற்கு காரணமானவளோ சாக்லேட்டை ரசித்து மூக்கு கன்னம் என பூசிக்கொண்டு தின்று கொண்டு இருந்தாள்..

அவளை பார்த்த குட்டி மீரா..பக்கென சிரித்து..

“ஓகே திஸ் டைம் ஃபார் மை ப்ரதர் ஐ ஃபர்கிவ் ஹர்..டர்ட்டி கேர்ள்..” என்றுவிட்டு ஓடிவிட்டாள்..பின்னே கயலிடம் அடிவாங்கவேண்டுமே..

அவளது அருகில் சிரித்தபடி வந்தவன் அவளது கன்னத்தை இருகைகளில் தாங்கி 

“என்ன இது இன்னும் சின்ன பிள்ளைகூட சண்டைபிடிக்கிறடி..அவ நம்ம பொண்ணுடி”என்று கூற 

“நீ கரெக்டா சாக்லேட் வாங்கி கொடுத்தா நான் ஏன் அவளோட பங்கை எடுக்கிறேன்..தப்பு உன்னோடது..” என்று கூற 

“ஓஓ தப்பை சரி செய்யலாமா?” என்றபடி அவளது முகத்தில் ஒட்டி இருந்த சாக்லேட்டை தனது இதழுக்கு இடமாற்றம் செய்தான்..

காலங்கள் பல மாறினாலும் மாறாது இவர்களின் நேசமும் காதலும்..

உன் விழியசைவில்

என் இதயம் துடிக்குதடி..

என் இதயத்தில் அறைக்குள்

உன்னை சிறையெடுத்தேன்..

உள்ளே உன்னை வைத்து பூட்டி

சாவியை தொலைத்தேனடி..

தங்கிவிடு என்னுயிரினில்…

          -டைரியில்..

10 thoughts on “காதலை கண்ட நொடி -18 (epilogue)”

  1. CRVS2797

    வாவ்…சூப்பர். உண்மையிலேயே இஷான் & கயல் விழி காதல்…
    மொழிக்கு அப்பாற்பட்டது தான்.

    1. Jayalakshmi S

      மிக்க நன்றி சகோ❤️😍..ஆரம்பம் முதல் கடைசி வரை சப்போர்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி சகோ❤️😍🥰

    1. Jayalakshmi S

      மிக்க நன்றி சகோ😍🥰..ஆரம்பம் முதல் கடைசிவரை உங்கள் ஆதரவு கொடுத்தற்கு நன்றி😍❤️🥰

    1. Jayalakshmi S

      Nan mrg aanadhula irundhu 2 yrs nu podalaiye normal ah 2years kalichu nu than pottu irukken sago read between lines madhiri padinga puriyum nan padichutu than ud ea pottu irukken sago nandri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *