Skip to content
Home » காதலை கண்ட நொடி -5

காதலை கண்ட நொடி -5

அத்தியாயம் – 5

முற்பகலில் உன் முகம் 

இரவின் மதியாய் என்னை 

மயக்க..

மூர்ச்சையாகி விட்டேன்..உன் நினைவினில்..

உன் மடிதாங்கி..

எனை சுமக்க வருவாயா?

          -டைரியில்..

தன்னை காணவருமாறு சொல்லி சென்றவனுக்கோ மனதில் ஏதோ இனம் புரியாத பாரம் ஏறிக்கொண்டது.. 

தான் செய்வது சரிதானா? என்று எண்ணியவன்..அவனுக்கும் ஜோனஸ்ஸிக்கும் பொதுவாக இருக்கும் காரியதரிசியிடம்..ஃபோன் செய்து..

“ஐ ஹாவ் சம் இம்ப்பார்ட்ண்ட் வொர்க்.. இஃப் மிஸ்.இசை ஈஸ் வெயிட்டிங் ஃபார் மீ..ப்ளீஸ் இன்ஃபார்ம் ஹர்..சர் கால்ட் ஃபார் இன்வெஸ்டிகேட் தட் ப்ரோகிராம் இஸ்ஸுயூ..சோ ப்ளீஸ் கிவ் லெட்டர் ட்டூ ஹிம் வித் ரீசன்.. ஆர் எல்ஸ் வீ வில் டேக் ஆக்ஷன் ஃபார் திஸ்..நவ் டெல் ஹர் ட்டூ லீவ்.. அண்ட் ஆல்சோ கிவ் ஹர் பைக் கீ..கம் அண்ட் டேக் தட் கீ” என்று கூறிவிட்டு..தனது மேஜை மேல் கீயை வைத்துவிட்டு வாஷ்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்..

அந்த காரியதரிசி அவன் சொன்னதை அவளிடம் கூறிவிட்டு கீயையும் கொடுத்துவிட்டு செல்ல கயல் தான் குழம்பி போனாள்..

‘அப்போ நாம ஒரு வெள்ளக்காரன் கிட்டதானே வம்பு பன்னோம் மேனேஜர்கிட்ட எப்படி நம்ம பைக் கீ வந்துச்சு’ என்று அவள் எண்ண அவள் தலையில் நங்கென்று கொட்டிய கெளதம்..

“அங்க ஏதாவது இருந்தா தானே ஒர்க் ஆகும் இல்லாததை வெச்சு என்ன ட்ரை பன்னாலும் வராது.. நீ வம்பு பன்னவருதான் நம்ம சீ.இ.ஓ டைரக்ட்டா அப்பாயிண்ட் பன்ன புது மேனேஜர்.. அதும் லண்டனில் இருந்து வந்து இருக்காரு..அவருகிட்ட தான் நீ அலம்பல் பன்ன” என்று கூற அப்படியே ஷாக் ஆகிவிட்டாள் கயல்..

“ஏன்டா முருகேசு யாரு என்னானு தெரியாமலே இறங்கி வேலை செய்யறோமேடா..என்னவா இருக்கும்” 

“ம்ம்.. சனி பகவான் பார்வை நம்ம மேல பலமா இருக்குனு அர்த்தம்.. இட் மீன்ஸ் உங்க அம்மா மதுமிதா மாரியாத்தாவா அவதாரம் எடுக்க போறாங்கனு அர்த்தம்” என்று கெளதம் கோவமாக கூற..

‘பயபுள்ள டென்ஷன் ல போட்டு கொடுத்துடுமோ.. அப்புறம் மது.. என்னை மாத்து மாத்துனு மாத்துமே’ என்று எண்ணியவள்..

“என்னடா.. இப்படிலாம் பயம் பன்ற.. எடுத்து சொன்னா நான் புரிஞ்சுக்க மாட்டேனா.. வா..வா..வாஸ்து சரியில்லாத இடத்துல நமக்கு என்ன வேலை.. இனி மைக் முன்னாடி தவிர வேற எங்கேயாவது வாய தொறந்தா என்னானு கேளு” என்று கூறியவளை மிக கேவலமாக லுக் விட்டான் கெளதம்..அவனை பார்த்து அசடு வழிந்தவள்…

“ஹிஹிஹி.. வா தங்கம் உனக்கு பிச்சி வாங்கி தர்றேன்.. என் சம்பளத்துள பாதி உன் ஸ்டொமக்ல தான் குடும்பம் நடத்ததுதுடா” என்றவளை முறைத்தவன்..

“இனி என்கூட வந்த உன்ன கொன்னுடுவேன் போடி..” என்றபடி அவன் நகர இவள் இழுக்க அவளால் பேலன்ஸ் பன்னவே முடியவில்லை.. எங்கு அவனை விட்டுவிடுவோமோ என முயற்சி செய்து அவள் இழுக்க கெளதம் அசால்ட்டாக அவளை உதற.. அவளோ கீழே விழப்போனவளை ஏதோ ஒரு கரம் தாங்கி நின்றது..

“ஐயோ..நான் விழுந்துட்டேன் எனக்கு உயிர் போய்டுச்சா.. நான் எங்கோ பறக்கிறேனே..டேய் கெளதம் எரும இப்படி அநியாயமா என்னை கொன்னுட்டியே” என்று கண்ணை மூடிக்கொண்டே அவள் கத்த..

“எக்ஸ்கியூஸ் மீ.. நீ இன்னும் உயிரோட தான் இருக்க மிர்ச்சி..கண்ண தொறந்து பாரு” என்று குரல் கேட்க.. ‘இது யாரு’ என்று எண்ணியபடி கண்களை திறந்தவள் தன்னை தாங்கி நின்றவனின் கண்களில் கட்டுண்டு நின்றாள்..

‘இவன் அந்த வெள்ளைகாரன் தானே.. அவன் கண்ணதான் நான் பார்த்தேனே.. ஸ்ஸ்ப்ப்பா அப்படியே தின்னுடுவான் போல பார்த்தானே..இவன் எங்க இங்க’ என்று யோசிக்கும்போதுதான் அவளுக்கு கெளதம் சொன்ன அனைத்தும் நியாபகம் வர டக்கென்று அவனிடம் இருந்து விலகினாள்..

அவனும் அவளை நேராக நிறுத்தியவன் அவளை முறைத்துவிட்டு 

“I told tomorrow i want submission of for wat reason u collapse ur program that day..But u don’t hav any guilty feelings abt that.. ur so happy with ur frnd but we r still struggling with our advertisement agencies madam.. tomorrow without fail i want the submission or else i will take action” (நான் ஏற்கனவே சொல்லிட்டேன்..நீங்க ஏன் அன்னைக்கு ப்ரோகிராம் ல அப்படி செஞ்சீங்கனு ரீசன் நாளைக்கு வேணும்னு.. ஆனா நீங்க உங்க ப்ரண்ட் கூட ஜாலியா இருக்கீங்க.. நாங்க இப்போ வரைக்கும் எங்க விளம்பர ஏஜென்சி கூட கஷ்டப்பட்டுட்டு இருக்கோம்.. நாளைக்கே எனக்கு டீடெயில்ஸ் வரல உங்கமேல நடவடிக்கை எடுப்பேன்) என்று கூறியவன் கோவமாக செல்லப்பார்க்க..திரும்பியவன் காதில் அவள் புலம்புவது கேட்டது..

“ரீசன் இவனுக்கு நான் எப்படி புரிய வைக்க?” என்று புலம்ப அவளை பார்த்து திரும்பியவன்.

“உங்களுக்கு இங்கிலிஷ் அவ்ளோ கஷ்டமா இருந்தா தமில்லயே சொல்லுங்க..எனக்கு தமில் தெரியும்” என்று கூற அவளோடு சேர்ந்து அதுவரை தலையை சொரிந்து கொண்டு நின்ற கெளதமும் ஆஆவென பார்த்தனர்..

‘என்ன இவனுக்கு தமிழு தெரியுமா? அப்போ நாம பேசினது எல்லாம் இவனுக்கு புரிஞ்சுடுச்சா? அய்யய்யோ சுத்தம்.. போச்சு போச்சு எல்லாம் போச்சு’ என்று எண்ணியவள்..

“சாரி..சார்..நான் தெரியாம” என்று அவள் முடிக்கும்முன்பே..

“லண்டன்ல இருந்தா தமில் தெரியாம இருக்கனும்னு அவசியம் இல்ல மேம்..அண்ட் எங்க அம்மா தமில்தான் சோ.. எனக்கு நல்லாவே தெரியும்.. அண்ட் ஐயம் லயன் நாட் பிக்..” என்றுவிட்டு சென்று விட்டான்..

‘விட்டா கண்ணுலயே கதகளி ஆடுவா போல மிர்ச்சி வாய் ரொம்ப ஜாஸ்திடி உனக்கு குறைச்சுகாட்டுறேன்.’ என்று எண்ணியபடி ஓடிவிட்டான் அவன்..

யோசனையில் நின்றவள் தெளிந்து..

‘இனி இங்க வேலை செய்ய முடியும்னு எனக்கு தோணல.. இந்த வேலையை விட்டா என் ப்ளான் எல்லாம் சொதப்பிடுமே..என்ன செய்யுறது’ என்று யோசித்தவள் அதை அப்படியே நண்பனிடமும் கேட்க..

“வேற வேலை தேட வேண்டியதுதான் வா..அவர் கால்ல விழு..தயவுசெஞ்சு மன்னிச்சிடுங்க அய்யானு கேளு.. அவரு பார்க்க நல்லவரா இருக்காரு..மன்னிச்சிடுவாரு” என்று கெளதம் கூற.. 

“சரிடா கெள.. நாளைக்கு பேசுறேன் அவருகிட்ட” என்று கூறியவள் நாளை அவனிடம் என்னவெல்லாம் பேசவேண்டும் என்று யோசித்துக்கொண்டே செல்ல அவளது வண்டியை பார்க்க அப்போது தான் அவன் வண்டியின் கண்ணாடியை உடைத்தது நியாபகம் வர நேராக வாட்ச்மேனிடம் ஓடினாள்..அவளை பார்த்தவர்..

“என்னம்மா எதுக்கு இப்படி ஓடிவர?” என்று கேட்க..

“அங்கிள்.. என் வண்டிக்கு எவ்வளவு ஆச்சுனு நீங்க சொல்லலையே?” என்று கேட்டாள்.. யோசித்தவர்..

“ஐயாயிரம் ரூவாமா” என்று கூற..

“அவ்வளவு ஆகிடுச்சா..ஒரு நிமிஷம்..டேய் கெள.. இந்தா கார்ட் போய் காசு எடுத்துட்டு வா” என்று கூற அவனும் வாங்கி கொண்டு சென்றான்..

அவன் சென்றதும் தயங்கியபடி..

“அங்கிள் அது வந்து..” என்று கேட்க அவளை பார்த்தவர்.

“சொல்லுமா” என்று கேட்க

“இல்ல அங்கிள் ஈவ்னிங்.. அந்த வெள்ளை..இல்ல இல்ல அந்த ஃபாரின்காரு” என்று கூற

“ஆமா நம்ம புது மேனேஜர்.. அவருக்கு என்ன?” என்று அவர் கேட்க..

“இ..இல்ல..அவரு காரு? க..கண்ணாடி உடைஞ்சு இருந்ததே?” என்று கேட்க..

“ஆமாம்பா.. அவரு காரை பார்க் பண்ணும்போது தவறுதலா இடிச்சுட்டாராம்.. நான்தான் அவரு காரோட பம்பர் அப்புறம் கண்ணாடிலாம் மாத்த சர்வீஸ்க்கு விட்டு வந்தேன்..பாவம் அவருக்கு எக்கசக்க செலவு” என்றார் வாட்ச்மேன்..

“அச்சச்சோ.. எவ்ளோ செலவு ஆச்சு அங்கிள்?” என்று கேட்க..

“அது ஆச்சு லட்சகணக்குல உனக்கு எதுக்கு பாப்பா அது?” என்று கேட்க..

உடனே உஷாரானவள்..

“இ..இல்ல நம்ம ஊருக்கு புதுசுல அதான் கேட்டேன் அங்கிள்” என்று அவள் கூறி முடிக்கவும் கெளதம் வரவும் சரியாக இருந்தது.. வந்தவன் காசை நீட்ட..

அவரும் வாங்கி கொண்டார்.. அவளோ யோசனையோடே போனாள்.. அவளிடம் கெளதம்..

“வண்டி செமயா ரெடி பண்ணி இருக்காங்கடா.. புது வண்டி மாதிரி இருக்கு..இந்த மாதிரி ரெடி பண்ண ரொம்ப செலவு ஆகும்.. ஆனா இவரு வெறும் ஐயாயிரம் சொல்றாரு..அடுத்த முறை அவரை கேட்டு விடனும் சர்வீஸ்க்கு” என்று கூற..

“அவருக்கு தெரிஞ்சவரா இருப்பாங்கடா அதான் கம்மியா வாங்கினாங்க போல” என்றவள் அமைதியாக யோசிக்க ஆரம்பித்து விட்டாள்..’அவனிடம் எப்படி பேசுவது?என்ன பேசுவது? இப்போது அந்த வாட்ச்மேன் வேறு வண்டிக்கு லட்சகணக்கில் செலவானது வேறு..அதும் இல்லாமல் அன்றைய ப்ரோகிராம் சொதப்பலில் இன்னைக்கு வரை விளம்பரதாரர்களோடு பேச்சு வார்த்தை சுமூகமாக இல்லை என்று அதற்கு வேறு என்ன சொல்லி சமாளிப்பது?’ என்று பலவாறு எண்ணிக்கொண்டே சென்றாள்.. அவனும் அவளது மெளனத்தை கவனிக்கவில்லை..

அவனோ..

வாஷ்ரூமிற்குள் நுழைந்தவன் மனதில் ஏகப்பட்ட கேள்விகள்.. இவள்தான் அவள் என்று உறுதியாகிவிட்டது..கூடவே வந்த கெளதமால்..ஆனால் என்னவோ கோவமுகமாய் அவளை சந்திக்க மனம் வரவில்லை.. அதனால் காரியதரிசியிடம் சொல்லிவிட்டு சென்றவன் அவள் சென்று இருப்பாள் என்று நினைத்து வெளியே வர இருவரும் மும்முரமாக அவனை பற்றியே ஆராய்ச்சியில் இருக்க..அவள் பேசியவிதம் சிரிப்பாக வந்தது அதனாலேயே அவளிடம் கோவமாக பேசுவது போல பேசிவிட்டு திரும்ப அவள் மீண்டும் அவனை கிண்டல் செய்ய.. தனக்கு தமிழ் தெரியும் என்று சொன்னதும் அவளது முட்டைக்கண்கள் அழகாய் விரிய அதில் தன்னை தொலைத்தவன்..எங்கே அவளிடம் இப்போதே ஏதாவது உளறி விடுவோமோ என்று எண்ணியவன் ஏதேதோ பேசிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டான்.. சென்றவன் சிசிடிவியை ஆராய அவள் வாட்ச்மேன் அருகில் செல்ல உடனே அவருக்கு ஃபோன் செய்துவிட்டான்.. அவர் அட்டென் செய்யவும் அவள் பேசத்துவங்கவும் சரியாக இருக்க.. அவள் தயங்கி தயங்கி தன்னை பற்றி விசாரிக்க அவளிடம் மொத்தமாய் சரிந்து போனான்..உடனே அவளது குடும்பம் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டான்.. அவளது திட்டம் அறியாமல்..

அன்று முழுவதும் யோசித்தவள் மறுநாள் அவனை சந்திக்க சென்றாள்.. தெரியப்போகும் விவரம் அறியாமல் அவனை சந்திக்க சென்றாள்..

Tags:

5 thoughts on “காதலை கண்ட நொடி -5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *