Skip to content
Home » காதலை கண்ட நொடி -7

காதலை கண்ட நொடி -7

அத்தியாயம் -7

மறுநாள்..

கயலுக்கு அன்று மனசே சரியில்லை..

இஷானின் பார்வை அவளுக்குள் ஏதோ மாற்றங்களை வரவைத்தது.. எங்கே அவனை காதலித்துவிடுவோமோ என்ற பயத்திலேயே அவனிடம் சண்டை போட்டுக்கொண்டே திரிந்தாள் ஆனால் அவளை காணும்போது அவன் கண்களில் தெரியும் காதல் வழியும் ஆழிப் பார்வை அவளை அவனுள் மூழ்கடிக்கும் பார்வை.. அவனிள் தன்னை தொலைத்துவிட்டால் தனது திட்டம் என்ன ஆவது? என்று என்ன என்னவோ யோசித்து அவளது மனம் எங்கு சுத்தினாலும் இஷானிடமே வந்து சேர்ந்தது..

‘நோ..நோ..இவன்கிட்ட இருந்து முடிஞ்சவரைக்கும் விலகியே இருக்கனும்..இல்லனா அவளோதான்.. ஆனா அந்த ஓனர் பையனை எப்படி இந்தியா வரவைக்குறது?’ என்று யோசித்தாள்..

யோசித்து யோசித்து தலைவலிலாம் வரல தூக்கம் வந்துட்டு அதனால மேடம் கவுந்துட்டா..அதான் எழுந்ததுக்கு அப்புறம் ஃபீல் பன்றாங்களாம்.

என் இதயம் வலிக்குமென

தெரிந்தும்..

ஈட்டியை பாய்ச்சுகிறாய்.

என்னில் இருக்கும் 

உனக்கு வலிக்காமல்

அடித்துக்கொள் பெண்ணே..

       -டைரியில்.

அதனால் அவள் அன்று கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு கெளதம்மை இழுத்துக்கொண்டு கிளம்பினாள் பக்கத்தில் இருந்த மாலுக்கு..

“ஏன்டி இப்படி என் உயிர வாங்குற..ஊர்சுத்த போறவ நீயே போக வேண்டியது தானே.. ஏன் என்னையும் இழுத்துட்டு வர்ற..நான் கிளாஸ்க்கு போய் இருப்பேன்ல” என்று அவளை திட்டியவனை நின்று மேலிருந்து கீழ் வரை ஒரு லுக்கு விட்டவள்..

“இந்த மூஞ்சி காலேஜுக்கு எதுக்கு போகுதுனு தெரியாதா? காலேஜ் கேன்டீன்ல உட்கார்ந்துட்டு சமோசாவ திங்கதானே அம்புட்டு அக்கறையா காலேசுக்கு போக ஆசை படுற?”, என்று கேட்க..

‘கரெக்டா கண்டுபிடிச்சுட்டாளே..இப்ப நான் என்ன சொல்றது?’ என்று யோசித்தவன்..

“ஸ்டுப்பிட் ஃபெலோ நான் படிச்சு பெரிய ஆள் ஆகுறது உனக்கு பொறாமை மேன்” என்று கூற அவனை முறைத்தவள்.. 

“இதுக்கு மேலயும் நீ பெரிய ஆள் ஆகனுமா?” என்று கையை பக்கவாட்டில் காட்டி அவள் கேட்க..

“உனக்கு பொறாமைடி குச்சி..ஒட்டடை அடிக்கத்தான் நீ லாயக்கு” என்று கூற.

“ஓஓ..ரொம்ப பொறாமைதான்..”

என்றபடி அவனை இழுத்து செல்ல அவனும் அவளுடன் சென்றான்..

ரெண்டு பேரும் நாலுமுறை மால்லை சுத்தி வந்தாச்சு ஒரு குண்டூசி கூட வாங்கல..

“அய்யோ.. இவளோட என்னால முடியலையே..என்னை நடக்கவெச்சே கொன்னுடுவா போலவே.. என்னால முடியாது போடி நீயே..” என்று கூறிவிட்டு அங்கிருந்த ஃசேரில் அமர்ந்து கொண்டான்.

“போடா பண்ணி..திண்ணிபண்டாரம்..நான் போய் சுத்திட்டு உனக்கு கொட்டிக்க ஏதாவது வாங்கி வர்றேன்..இங்கேயே இரு..வேற எங்கனா போன நானே திண்ணுடுவேன் உனக்கு இல்ல..” என்று விட்டு சென்றவளை பார்த்துக்கொண்டு அங்கேயே அமர்ந்தான்..

‘எல்லாருக்கும் நல்லது யோசிக்கிறா..ஆனா அவளுக்குனு மட்டும் யோசிக்க மாட்டேங்குறாளே..அப்பா அம்மாக்காகனு அவ லைஃப்ப கெடுத்துக்காம இருக்கனும் கடவுளே’ என்று தன்னுயிர் தோழிக்காக யோசித்தபடி அமர்ந்தவன் அங்கே வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டான்..

அவனை விட்டு சற்று தூரம் சென்றவள் அங்கிருந்த ஒரு கடையில் சுற்றி வரும்போது அவள் கண்ணில் பட்டது ஒரு அழகான வேலைபாடு கொண்ட தங்கநிற ஜிமிக்கி.. அதன் அழகு அவளை ஈர்க்க அதை வாங்கலாமா? என்று யோசித்தவள் கண்ணில் விலை பட்டது.. 

‘ஆத்தி இம்புட்டு விலையா?’ என்று எண்ணியவள் மனதில் சட்டென சோகமும் வந்தது..தங்களது நிலை எதனால் என எண்ணி அதற்கு காரணமானவர்மேல் கோவமும் வந்தது..

அதனால் அவள் அங்கிருந்து நகர அந்த ஜிமிக்கியை கையில் எடுத்தான் இஷான்.. (அது எப்படித்தான் ஹீரோயின் வர்ற இடம் எல்லாம் ஹீரோ என்ட்ரி ஆகுறாங்களோ?)தன் நண்பனுடன் அங்கே அருகில் ஹோட்டலில் ஒரு மீட்காக வந்தவன் பொதுவான பார்க்கிங்கில் இவளது வாகனத்தை பார்த்ததும் அவளை காணும் ஆவல் எழ வந்துவிட்டான் வந்தவன் கண்ணில் பட்டது அந்த கடைக்குள் நுழையும் கயல்தான்.. அவள் அந்த ஜிமிக்கியை ஆவலோடு பார்ப்பதை பார்த்தவன் கண்கள் அவளையேதான் பார்த்து அவளது உணர்வுகளை உள் வாங்கியது.. அவள் கண்களில் தோன்றிய மாற்றத்தை மறக்காமல் கவனித்தவனின் பார்வை ஏதோ யோசித்தது.. அவளது பார்வை விலையை பார்த்ததும் முதலில் கவலையானவள் முகம் சட்டென கோவமானது எதனால் என்று யோசித்தவன் அவள் அந்த கம்மலை வாங்காமல் நகர உடனே அந்த கம்மலை எடுத்தான் விலையை பார்க்க அது ஐயாயிரம் என இருக்க அதை உடனே வாங்கியவன் கிஃப்ட் பேக் செய்து வாங்கியவன் அவள் பின்னே சென்றான்.. அவளோ தன் நண்பனுக்கும் தனக்கும் வெஜ் ஸ்டிக்ஸ் வாங்கியவள் அவனிடம் சென்று அதை நீட்ட அவளிடம் இவன் கிஃப்ட்டை நீட்டினான்.. ‘எவன்டா அவன்’ எண்ணும் தோரணையோடு அவள் பார்க்க 

“ஹாய்..விழி..” என்றபடி அவளிடம் நீட்டினான் அந்த கிஃப்ட் பாக்ஸ்ஸை..கெளதம் எழுந்து நின்று இருவரையும் பார்த்த கெளதம் ஏதோ பிரச்சனை என்று எண்ணியவன் எழுந்து நிற்க.. இஷானை முறைத்தவள் 

“என்ன இது?” என்று கேட்க..

“இது நீங்க வாங்க ஆசைப்பட்டதுதான் விழி.. என் வைஃப்பா வரப்போறவங்களுக்காக வாங்கின பர்ஸ்ட் கிஃப்ட்..” என்றவன் இன்னும் நீட்டிய கையை இறக்கவில்லை.. அதில் பெரும் கோவம் கொண்டவள்..

பளாரென அறைந்தாள் அவன் கன்னத்தில்..

“ஏங்க நீங்க ஃபாரின்காரா இருந்தா எனக்கென்ன.. எனக்குனு ஒரு ரூல்ஸ் இருக்கு.. உங்க இஷ்டதுக்கு வந்து காதலிக்கிறேன்னு சொன்னா நான் காதலிக்க உங்க வீட்டு நாய்குட்டினு நினைச்சீங்களா.. இந்த கயல்கிட்ட வெச்சு கிட்டீங்க மரியாதை கெட்டுபோய்டும்.. போங்க உங்களுக்குனு எவளாச்சும் ஈஈஈனு இளிப்பா அவளை லவ் பன்னுங்க முதல்ல இடத்தை காலி பன்னுங்க..இல்ல நடக்குறதே வேற..” என்று அவள் கத்த எல்லோரும் அவர்களை தான் பார்த்துக்கொண்டு இருந்தனர்..

அவள் அறைந்ததில் கோவம் வந்தாலும் அதை அடக்கிக்கொண்டவன்..

பட்டென அவள் கன்னத்தில் ஓர் அறை விட்டான்.. அதில் கன்னத்தை பிடித்துக்கொண்டவள் சுற்றிலும் பார்க்க அனைவரும் அவர்களை பார்க்க அதில் அவமானமாய் தோன்ற அந்த அவமான உணர்வை தந்தவனை கோவமாய் பார்த்தாள்.

“என்னடி லுக்..நான் உன்கிட்ட லவ் சொன்னேன் அதுக்கு நீ கோவப்பட்ட ஓகே..அதுக்கு உனக்கு ரைட்ஸ் இருக்கு.. ஆனா எந்த ரைட்ஸ்ல என்னை அடிச்ச? உனக்கும் எனக்கும் என்ன ரிலேஷன்ஷிப்?” என்று கோவமாக அதே நேரம் அமைதியாக கேட்க அப்போது தான் அவளது தவறின் ஆழம் புரிய அவனை நிமிர்ந்து பார்க்க அவள் கண்களில் கண்ணீரை கண்டவனுக்கு அதை துடைத்து ‘உனக்கு கஷ்டம் இல்லாம நான் பார்த்துப்பேன்டி.. என்கிட்ட வந்துடுடினு’ அணைத்துக்கொள்ளும் ஆர்வம் வர..

“கெளதம் உங்க ப்ரண்ட்ட கூட்டிட்டு போங்க” என்று அவளை பார்த்துக்கொண்டே அவனிடம் கூறினான்..அவன் கோவம் ஏதோ செய்ய அவளை அமைதியாக இழுத்துக்கொண்டு சென்றான் அவன்.

அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அவள் செல்ல..

கன்னத்தில் கை வைத்தவன்

‘என்னையே அடிச்சுட்டல.. இதுக்கு நீ அனுபவிப்படி..இதுக்கான பதில் நீ சொல்லியே ஆகனும்டி..இந்த இஷான் யாருனு உனக்கு காட்டல.. என் பேரை மாத்திக்கிறேன்டி..’ என்று மனதில் கோவத்தை அவள்மேல் விதைத்தான்..

மோதல் காதலாய் மாறும் காலம் எப்போதோ?

5 thoughts on “காதலை கண்ட நொடி -7”

  1. CRVS2797

    ஆனாலும் இது ரொம்பவே அதிகம் தான். அது எப்படி தெரிஞ்சவங்களா இருந்தாலும் சட்டுன்னு கை நீட்டறது.

  2. Avatar

    புடிக்கலனா சொல்லனும் ஆனால் இப்படி பப்ளிக் பேஸ்ல அடிக்கறது கொஞ்சம் ஓவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *