Skip to content
Home » காற்றோடு காற்றாக – டீஸர்

காற்றோடு காற்றாக – டீஸர்

காற்றோடு காற்றாக – டீஸர்


இந்த வீடு அவனுக்கு முற்றிலும் புதியது அல்ல. அதுவும் இந்த வரவேற்பறையும் இந்த
சோபாக்களும் அவனும் பிரியாவும் நீண்ட நேரம் ஒன்றாக அமர்ந்து பணியாற்றிய இடம் தான்.
இன்று தான் மட்டும் தனியாக. அதுவும் பிரியாவின் கணவனாக. இந்த வீட்டின் மூத்த
மாப்பிள்ளையாக.


காலத்தின் கோலத்தை என்னவென்று சொல்வது?
“உட்காருங்கள் மாப்பிள்ளை” பெரியவர்கள் இருவரும் அமரும்படி வற்புறுத்தினார்கள்.
அன்றைய நினைவில் பம்முவதா? அன்றி இன்றைய நிலையில் அமருவதா? என்று
யோசித்தவாறு நின்றவன் எதேச்சையாக திரும்பி பார்த்தான்.


இந்த திருமணம் எப்படி பிரியாவிற்கு எதிர்பாராததோ அதைப் போலத் தானே தானும்
எதிர்பாராதது. அதற்கு நான் ஏன் குறுகுறுவென்று உணர வேண்டும்? நன்றாக நிமிர்ந்து
அமர்ந்தான்.

முழு கவனத்துடன் முழு மனதுடன் சடங்குகளை செய்தான். திருமணம்
எதிர்பாராதது என்றாலும் தனக்கு வேண்டாதது அல்லவே. எனவே கர்மசிரத்தையுடன்
செவ்வனே செய்தான் சடங்குகளை.


அவன் முதலில் சோபாவில் அமருவதற்கு தயங்கியதையும் என்னவோ யோசித்து நின்றதையும்
பிறகு எதையோ தீர்மானித்துக் கொண்டதையும் சடங்குகளை சிராமமாக செய்வதையும் கண்ட
பிரியாவிற்கு அவன் இந்த திருமணத்தை உண்மையாக்கிட தீர்மானித்து விட்டான் என்று
புரிந்தது. அந்த புரிதல் அவளுக்குள் ஒருவித கிலியைக் கொடுத்தது. திருமணத்தை
தீர்மானித்தவன் தன்னுடைய எதிர்காலத்தையும் கூட சேர்த்து தீர்மானித்திருப்பனே.

கடவுளே.

கதையின் அடுத்தடுத்த அத்தியாயம் வரும். வாசிப்பவர் கருத்து பகிரவும்.

3 thoughts on “காற்றோடு காற்றாக – டீஸர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *