Skip to content
Home » கால் கிலோ காதல் என்ன விலை?-10

கால் கிலோ காதல் என்ன விலை?-10

அத்தியாயம்-10

அர்ஜுனை ஒளிந்து ஒளிந்து ரசித்தவள் அந்த கரடுமுரடான தாடியும் பிடித்துப்போனது.

ஒருவிதத்தில் தாலி கட்டிய பெண்ணவளை அர்ஜுனுக்கும் பிடித்திருந்தது.

அதுவும் அன்னையிடம் முழங்கால் மடித்து கதை பேசவும் லேசான ஆசை பிறந்தது.

ஆனால் அவள் படித்தவள் தான் டிப்ளமோ என்றவை அவனுக்குள் ஏற்ற தாழ்வை இடித்துரைத்தது.

‌‌ தேவராஜ் பூசி மொழுகி மகளை பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவளாக காட்ட, தரகர் மூர்த்தி அது தெரியாமல் ஆணித்தரமாய் உரைத்திருந்தும், முதலிரவு அறையில் மூலையில் கிடந்த காகிதம் மின்விசிறி சத்தத்தால் ஓசையெழுப்ப, அமிழ்தினி வரும் வரை நேரம் போகாது அந்த பேப்பரை வாசித்தவனுக்கு அவள் படித்த பெண் என்று காட்டி கொடுத்துவிட்டது.

பொட்டலம் படிக்க வந்த புத்தகமென்றாலே என்ன புத்தகம் என்று ஆராய்ந்து பார்த்து விடுவான். நல்ல புத்தகமாக இருந்தால் அதற்குண்டான மாணவர்களிடம் கொடுப்பான்.
அந்த எண்ணம் தான் அமிழ்தினி புத்தகத்தை புரட்ட அவள் படித்தவளென்ற அடையாளத்தை காட்டிவிட்டது.

 அர்ஜுனுக்கு இதற்கு பின் அவளிடம் எவ்வாறு பழக என்ற இடைவெளி வேறு உருவானது. 

அதனால் தான் நேரம் எடுத்துக்கொண்டு தனித்து வந்தான். 

அதுவுமே அமிழ்தினிக்கு அவனை பிடிக்க ஆரம்பித்தது. 

அர்ஜுனுக்கு லேசான சஞ்சலம் பயமென்றதை தருவித்தது. தன்னை விட்டு சென்றிடுவாளோ? இந்த எண்ணம் உருவானதிலிருந்து அவளை தன் உடமையாக மாற்றும் எண்ணம் அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நுழைந்தது.

ஆனால் அப்படியே பாய்ந்து அவளை ஆக்கிரமிக்க, தாலி என்ற கயிற்றை வைத்து புணர அவனுக்குள் இருந்த நல்லவனுக்கு விருப்பமும் இல்லை.

இன்று அமிழ்தினி தன்னையே காணவும், அவனது மனம் அவள் அழகை ரசிக்கும் எண்ணம் தாண்டி அந்த அழகை ஆராதிக்க விரும்பியது‌.

அடிக்கடி கடைக்கண்ணால் கடையை பார்த்து இடைப்பட்ட நேரத்தில் அமிழ்தினியை ரசிக்க, “அர்ஜுனே புதுப்பொண்டாட்டியை அப்பறம் பாருப்பா. கடலை எண்ணெய் நூறுலிட்டரு கொடு” என்று வாங்கவும் தலையை சொரிந்து கவரில் எண்ணெய்யை அளந்து ஊற்றி சணலால் முடிச்சிட்டு தந்தான்.

 "ஏன்டா கடையை சாத்திட்டு நேரத்துக்கு தூங்கலாம்ல" என்று இளவழகி கூற, "சாத்துவோம்" என்றவன் மெதுவாக அதே நேரத்தில் விறுவிறுவென எடுத்து வைத்தான். அதில் தக்காளி பெட்டி உருண்டோடியது. 

அதனை எடுத்து வைக்க, கூடுதலாக நெய்பாலிஷ் கைகள் வேறு இடையே தென்பட்டது. அது அமிழ்தினி என்று தனியாக கூறவேண்டியதில்லை.

அவளும் எடுத்து வைக்க, "உனக்கு எதுக்கு சிரமம் உள்ளாற போ" என்றான்.‌

“பரவாயில்லை தக்காளி விழுந்துடுச்சே” என்று எடுத்து வைக்க, அவனோ மற்ற பொருட்களை எடுத்து வைத்தான்.‌

சிப்ஸ் பேக்கெட் ஷாம்பு சரம், இஞ்சி பேஸ்ட், 3 ரூபாய் ஃப்ரு பேக்கெட், பத்து ரூபாய் டீத்தூள், என்று கொத்தாக மாட்டிய ஆணியிலிருந்து கடையில் மளிகை சாமான் மூட்டைக்கு மேலாக வைத்தான்.

“என்ன அர்ஜுனே கடையை சீக்கிரமே சாத்தற” என்று குழந்தையை இடுப்பில் வைத்து ஒரு அக்கா கேட்க, “இல்லையேக்கா நேரமாச்சே” என்றான்.‌

“ம்கும் எங்க நேரமாச்சு? மனதில் விழுந்த விதையே சீரியலு பத்து மணிக்கு முடியும்‌. டிவில இப்ப தான் பேரே போட்டு ஆரம்பிக்கறான்.” என்றதும் அர்ஜுன் திருதிருவென விழித்தான்.

“ரொம்ப முழிக்காத முட்டைக்கண்ணு வெளியே வந்துடும். நாங்களும் இரண்டு பிள்ளை பெத்தவங்க தான். நேரத்துக்கு கடை சாந்தி புள்ளை குட்டியை உருவாக்கற வழியை பாருங்க.” என்று கூச்சப்பட வைத்தார்‌.

அர்ஜுன் அமிழ்தினி இரு விழிகளில் ஒருவரை மாற்றி ஒருவர் தயக்கமாய் பார்வையிட, “குழந்தைக்கு பால் ஆத்தணும். சர்க்கரை கால் கிலோ கொடு. அப்பறமா நீங்க கண்ணும் கண்ணும் கலந்து பாருங்க.” என்றார் அந்தப் பெண்.

“ஏன்க்கா சும்மாயிருக்க‌மாட்ட” என்று சர்க்கரையை அள்ளி தராசில் நிறுத்தி எடைப்போட்டான்.

அடுத்து ஒருவர் வந்து புளியை கேட்க, சர்க்கரை அள்ளிய கையால் புளியை நிறுத்தி மடித்து கொடுத்தான்.

இருவரும் சென்றதும், அமிழ்தினியை ஏறிட, அத்தை தூங்க போயிட்டாங்க” என்று தக்காளி பெட்டியை சரியாக வைத்து எழுந்தாள்.

கடையை மூடியவன், அன்னை உறங்கும் அறையில் இருக்க கண்டு அமிழ்தினியை குண்டுக்கட்டாக தூக்கினான்.

சேலை அணிந்த வெற்றிடையில் அவனது சர்க்கரை ஒட்டிய கைகள் தடம் பதித்தது.

கைகள் நடுங்க அவன் தன்னை தூக்கவும், அவனது கழுத்தில் மாலை சூடியவளாக, “அத்தை முழிச்சிருக்க போறாங்க” என்று தந்தியடிக்க கூறினாள்.

“ஏன் தூங்கியிருக்கணும்னு ஆசைப்படற?” என்றான்.

“அப்படி சொல்லலை? நீங்க என்னை கையில தூக்கிட்டு இருக்கிறதை பார்த்துடுவாங்கன்னு?” என்று இழுத்தாள்.

"பார்த்துக்கலாம்" என்றவன் அவனது அறையில் கட்டில் கிடத்தி கதவை தாழிட்டான்.‌

சட்டை கழட்டவும், பொன் வண்டு சோப் உபயோகத்தால் கிடைத்த பனியன் விளம்பர பலகையாக காட்சியளித்தது.

அதனை கழட்டி தலையை சுற்றி வீசவும், மூட்டை தூக்கிய வலுவான கைகள், வயதுக்குண்டான திண்மத்தோளோடு இருந்தான்.

அமிழ்தினி பின்னுக்கு நகர முற்பட, “எதுக்கு என்னையே பார்த்துட்டு இருந்த?” என்றான்.

“இல்லை.. நான் வந்து…. நீங்க எப்படி வியாபாரம் பண்ணறிங்கன்னு நோட் பண்ணினேன். தவிர” என்று அவனை கண்டு பேசி திக்கி திணறி பார்வையிட்டாள்.

புளியும் உப்பும் கையில் ஆங்காங்கே ஒட்டியிருக்க, அவளது முகத்தை நிமிட்டினான்.

முதல் முத்தம் பதிந்தவனுக்கு தொடர்வது எளிதாக மாறி முடிவுரை செய்ய‌ மனமின்றி இரவை நீட்டிப்பு செய்தான்.

முத்தங்களும் சத்தங்களும் முடிவுக்கு வந்த கணம், கூடி களைத்த அசதியில் உறக்கமும் வந்தது. அவனது நெஞ்சை பஞ்சாக மாற்றி உறங்க, அதிகாலை காய்கறி வாங்க செல்லும் நேரம் கடந்தது.

எப்பொழுதும் நான்கு நான்கரைக்கு சென்று இங்கே ஏழு மணிக்கு திரும்பி வியாபாரம் செய்வான். இன்றோ மணி ஆறாக இளவழகி தலையை சொரிந்து மகனின் அறையை தட்ட தயங்கினார்.

கடைக்கு வந்த ஆட்கள் எல்லாம் பொருட்கள் வாங்கி சென்றாலும், “என்ன அர்ஜுன் வண்டி இங்க இருக்கு? ஆரணிக்கு போகலையா?” என்று கேட்டு கேட்டு செல்ல, ஒரு கட்டத்தில் காய்கறி எல்லாம் புதிதாக இல்லாமல் வியாபாரம் பாதிக்கும் என்று கதவை தட்டினார்.

இரவு அமிழ்தினியோடு கூடி களித்து, அவளை மார்பில் போட்டு உறங்கியவன், அடுத்த நாள் காலை அவளது கழுத்து வளைவில் முகம் வைத்து இருந்தான்.

கதவு தட்டும் சப்தம் கேட்க, அத்தைனு நினைக்கேன்” என்றவளின் பாதி சேலை அவனிடம் இருந்தது.

“பதட்டபடாம கட்டு” என்றவன், கொட்டாவி விட்டு ”ஏன்ம்மா கதவை உடைக்கிற?” என்று குரல் கொடுத்தான்.

“அர்ஜுனே, காய்கறி வாங்க போகலையாடா? மணி ஆறாகுது” என்று கத்தவும், பனியனை தலை வழியாக போட்டவன், கடிகாரத்தில் நேரம் பார்த்தான்.‌

தலையிலடித்து, “இந்தா வர்றேன்” என்று குரல் கொடுத்து தலையை கையால் வாறினான்.

இளவழகி குரல் கொடுத்துவிட்டு சென்றிட, அர்ஜுனோ “காய்கறி வாங்க போகலை. இனிமே போய் எப்ப வர்ற?” என்றவன் அமிழ்தினியை பார்வையிட்டான்.

அவளோ சேலையை பிடித்து நின்றிருந்தாலே தவிர கட்டவில்லை. ‌

“என்‌முகத்தை பார்க்கற.‌கதவை திறக்கணும். சீக்கிரம் சேலையை கட்டு” என்று எரிந்து விழுந்தான்.

“உடம்பெல்லாம் சர்க்கரை புளியோட பிசுபிசுப்பு இருக்கு.” என்று தலையை சொரிந்தாள்.‌

‌‌ “நேத்து கடைசியா மீறி சர்க்கரை பொட்டலம் கட்டியதோட தொட்டுயிருப்பேன். எப்படியும் குளிக்க தானே போற? ஆகற வேலையை பாரு?” என்ற அர்ஜுன் கூற்றில், அமிழ்தினி அதன் பிறகே அவனது முகத்தை பார்த்து பார்த்து பயந்து கட்டி முடிக்க, கதவு திறந்து வெளியேறினான்.
போனை கையில் எடுத்து கூட்டாளி ஒருவனின் எண்ணிற்கு அழைத்து, “மாப்பிள்ளை எனக்கு சிலது வாங்கணும். ஆரணிக்கு வரமுடியலை. நான் சொல்லறதை வாங்கிட்டு வந்துடுடா” என்று கோரிக்கை வைத்தான்.‌

அவனும் ‘டேய் இப்ப தான் எல்லாம் வாங்கி வண்டில கட்டினேன். சரி சொல்லு” என்று சலிப்படைய, மடமடவென தேவைக்கு ஏற்ப வாங்கிட லிஸ்டை சொன்னான்.

”ஏலேய் அர்ஜுனே என் வண்டில இடம் போறது வரை தான் வாங்குவேன்.‌” என்று அதுப்பு செய்ய, “சரி சரி” என்றான்.‌ ஏதோ மளிகை கடையோடு அதனை சார்ந்த ஒருவன் கூட்டாளியாக இருக்க சட்டென மூளை வேலை செய்ய, ஓரளவு சமாளித்தான்.

அதன் பின் அமிழ்தினியை தேட அவளோ தலைக்கு குளித்து முடித்து வெளிவந்தாள்.‌

அர்ஜுன் கண்ணிற்கு தேவதையாக காட்சி தர, தன்னிலை மறந்து நின்றான்.

“ஏன்டா அப்படியென்ன தூக்கம்? எப்பவும் விரசா போயிட்டு வருவ? இன்னிக்கு எந்த மோகினி பிடிச்சதுனு தூங்கிட்ட?” என்று டீயை தரவும் வாங்கினான்.‌

‘நீ கட்டி வச்ச மோகினி தான்’ என்றவன் வாயில் உரைக்கவில்லை. ஆனால் பார்வை என்னவோ அமிழ்தினியிடம் இருந்தது.

அவனாக மீனை திண்ற பூனையாக அறைக்கு வந்தான்.

“என்ன உம்முனு கிடக்க?” என்றான்.
படித்த பெண்ணிற்கு தனது அணுகுமுறை சினத்தை தூண்டிவிட்டதா? என்ற பயத்தோடு வந்தான்.‌ ஏனெனில் சற்று முன்‌புளியீம் சர்க்கரையும் அவளது திருமேனியில் கண்டதன் விளைவு, அவளது வாட்டம் உள்ளதா என்று ஆராய்ந்தான்.

"பல்தடமா இருக்கு‌. அந்த கட்டை விரல் நகம் மட்டும் ஏன்‌ பெரிசா வளர்த்து வச்சிருக்கிங்க" என்று கூற, அவள் கூறவரும் சாராம்சம் புரிய "சாரி.. பேப்பர் கிழிக்க, சணலை அறுக்க, நகம் வளர்த்தேன். உன்னை பதம் பார்க்கும்னு கூறுயில்லை. இனி ஜாக்கிரதையா இருக்கேன்" என்றவன் வெளியேறினான்.

அமிழ்தினி முகம் செவ்வானம் பூசியிருக்க, அர்ஜுனோ தாடியின் சொரசொரப்பில் தேய்த்தபடி குளிக்க சென்றான். 

குளித்து முடித்து கட்டை விரலில் நகத்தை ஓரளவு வெட்டினான்.

“இதென்னடா அதிசயமாயிருக்கு? நகத்தை வெட்டிட்ட? குலதெய்வ சாமியே நேர்ல வந்து சொன்னாலும் நகத்தை வெட்டமாட்டேன்னு கத்துவ” என்று வர, கடைக்குள் நுழைந்தவனோ, அம்மா சொன்னதை கேட்டு எதிர்வினையாற்றாமல், ‘படிச்ச பொண்ணு நேக்கா என்னை அவ வளையில விழவைக்கிறாளா? அர்ஜுன் விடாதடா, அப்பறம் தலைக்கு மேல ஏறி ஆடுவா. முதல்லயே மடங்கிடாத அப்பறம் கெத்து என்னவாகறது’ என்று எண்ணினான்.‌

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

27 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை?-10”

 1. Avatar

  Adei korangu payalae unaku romance varavaikardhukulla enga veena akka thaila thundu pottu ponanga…edho unaku skrma romance vachanga ila ne idhuvum pesuva innum pesuva….gethu kaatra moonchiya paaru😠😠 poda anguttu…

 2. Avatar

  Adei korangu payalae unaku romance varavaikardhukulla enga veena akka thaila thundu pottu ponanga…edho unaku paavam paarthu skrma romance vachanga ila ne idhuvum pesuva innum pesuva….gethu kaatra moonchiya paaru😠😠 poda anguttu…

 3. Priyarajan

  Spr spr spr…. Arjune ni sari illa sariye illa…. Waiting for nxt ud💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞

 4. Avatar

  இவன எந்த தராசில் வச்சு நிறுக்கறதுன்னே தெரியவில்லை.

 5. CRVS 2797

  இனிமே இப்படித்தான்டா அர்ஜூன்.. அட்ஜஸ்ட் கரோ…!
  படிச்ச பொண்ணாவது, படிக்காத பொண்ணாவது… இனி இப்படித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *