Skip to content
Home » கால் கிலோ காதல் என்ன விலை?-12

கால் கிலோ காதல் என்ன விலை?-12

அத்தியாயம்-12

  தானாக நேரம் எடுத்தாலும் விடுவித்து "இப்ப கண்ணு எரியலையே?" என்றான். 

கண்ணுல மிளாக கையை வச்சி தேய்ச்சிட்டு உதட்டுல முத்தமிட்டு கண்ணு எரியலையேனு கேட்கறாரு' என்று விழிக்க, "கண்ணு உதடு எரிச்சல் இருந்தது. நீங்க உதட்டுல முத்தமிடவும் அங்க ஓகே. கண்ணுல ஆட்டோமெடிக்கா சரியாகிடுச்சு." என்று நாணியபடி கூறினாள்.

அர்ஜுனோ அட கண்ணுல எரிய, உதட்டுல கிஸ் பண்ணிருக்கேன். லூசா இவன்னு நினைச்சிருப்பாளோ? ஆனா என்னவோ வாயை வச்சி ஊதிட்டு எரியுது எரியுதுனு கத்தினப்ப அந்த உதடு என்னவோ இழுத்திடுச்சு. அதை சொன்னா நம்ம வீக்னஸ்னு நினைப்பாளா? என்றவன் கண்ணில் ‘நொச்’சென்ற முத்தம் வைத்து, “சரியாப் போயிடுச்சா?” என்று குழந்தையிடம் கேட்பது போல கேட்க தலையாட்டினாள் அமிழ்தினி.

“இனி யாருக்கும் என்னை கேட்காம கடன் கொடுக்காத. யாராவது அப்படி கேட்டா, நான் வந்தப்பிறகு வாங்கிக்க சொல்லு. அவர் என்னை திட்டுவார்னு உண்மையை சொல்லிடு” என்றான்.

அதற்கும் சரியென்று பதில் பேச, அர்ஜுனோ முட்டைக்கண்ணால் அவளை பார்த்து கடைக்கு சென்றான். அங்கேயிருந்தால் அவளது முந்தாணையில் வாசம் கொள்ளும் பித்து ஏறியது. ஆனால் பாவம் செய்யும் தொழிலே தெய்வமாக மளிகைக் கடையை நடத்துபவனுக்கு நின்று நிதானமாக திருமணம் ஆகும் தம்பதி போல நேரம் எடுத்து காதலிக்க தோதுபடவில்லை.

கடையில் ஆட்கள் நிச்சயம் வந்துயிருப்பார்கள். போதாதற்கு தன்னை பெற்றவளே மனம் போன போக்கில் திட்டிக்கொண்டிருப்பார்‌.

“என்னடா உற்றுன்னு வர்ற. அந்த பிள்ளையை திட்டிட்டியா? டேய் அந்த பிள்ளை வந்து ஒரு வாரம் கூட ஆகலை. அதுக்குள்ள திட்டி சண்டை போடாதடா.” என்றதும் “அம்மா வேலையை பார்க்கறியா. நீயா திரைக்கதை எழுதாத.” என்று அமர இளவழகியை அனுப்பினான்.

பெத்த பிள்ளைகளை அம்மாவுக்கு ஹீரோவா தெரிவாங்க. இந்தம்மா கண்ணுக்கு நான் வில்லனா தெரியறேன். இதுல கட்டிக்கிட்டு வந்ததும் பீதியா பார்க்குது. அர்ஜுன் ஏன்டா உன் ராசி இப்படி இருக்கு என கடையில் கத்திரிக்காயை நிறுத்தி எடைப்போட ஆரம்பித்தான்.

அவரோ மருமகளை தேடி வர, அமிழ்தினி கண்ணில் காரம் இருக்க லேசான எரிச்சலுக்காக தண்ணீரால் முகம் அலம்பினாள். 

‘அடகிராதகா ஒரு பொண்ணை கட்டி வச்சா அழ வச்சிருக்கான்னே. இவனெல்லாம் சிரிச்சு பேசி குடும்பம் நடத்தி என்னத்த வாழ போறானோ. நரசிம்மா சாமி உன் கோபத்தை போலவே இவனுக்கு வாறி வச்சிருக்க. கொஞ்சம் நிதானமா நடக்க சொல்லு. இப்படியே போனா வம்சத்தை விருத்தி பண்ண முடியாது.’ என்று கடவுளிடம் புலம்பியவர் மருமகளை தீண்டவும், விளுக்கென பின் நகர்ந்தாள்.

எங்கே அறையில் முத்தமிட்டது போல, இங்கேயும் அர்ஜுன் செய்வானோ என்று தான் அமிழ்தினி நகர்ந்தது.

இளவழகிக்கோ ‘ம்கும் தொட்டாலே மிரளுறா. அவன் முகறயை இஞ்சி திண்ணவனாட்டும் காட்டியிருப்பான். பொண்ணு பயப்படுது’ என எண்ணினார்.‌

“ஒன்னுமில்லை மா. கடன் கொடுத்தா என்னையே ஏசிடுவான். அவங்க அப்பா கடனா கொடுத்து தான் வியாபாரம் தழைக்கலைனு அர்ஜுனுக்கு நினைப்பு. அதனால ஒத்த பைசா யாருக்காகவும் கடன் தரமாட்டான். ஒரு நோட்டுல யார் சரியா கடன் தருவாங்களோ அவங்களுக்கு மட்டும் கடன் தருவான்.” என்றதும் அமிழ்தினி புரிந்தது என்று தலையாட்டினாள்.

"அம்மா அப்பாவிடம் தினமும் பேசு‌. அடிக்கடி பேசினா தானே அவங்களுக்கும் மக சந்தோஷமாயிருக்கான்னு தெரியும். 

ஏதாவது சண்டையின்னா மட்டும் சொல்லிடாத. என்னிடம் சொல்லு என்னனு கேட்கறேன்.

கொஞ்சம் முசுடு. ஆனா நல்ல குணம்" என்று கூறவும் அமிழ்தினி மென்னகையோடு தலையாட்டினாள்.

"காலையிலயே கதை பேசறேன். சாப்பிடுவோம்" என்று அழைக்க, "அவரு அத்தை?" என்று கேட்டாள். 

‌ “அவனா… கூப்பிட்டா ஒரு நேரம் வருவான். ஒரு நேரம் கத்துவான். அதனால காலையில் மோர்கஞ்சி கேழ்வரகு கூழு, பழைய சோறுன்னு கடஞ்சி கொடுத்திடுவேன். அதுன்னா வத்தலோ ஊறுகாயோ கடிச்சிட்டு குடிச்சிடுவான்.‌

அவனா நேரமிருந்து சாப்பிட உட்கார்ந்தாலும் யாராவது சோத்துல கை வைக்கிறப்ப தான் வருவாங்க அதுக்கு சலிச்சிட்டு மடமடன்னு விழுங்குவான்” என்றதும், மளிகைக்கடை இருக்கும் திக்கில் பார்வையை வீசினாள்.

மாமியார் மருமகள் ஒன்றாக சாப்பிடும் நேரம் அமிழ்தினி கண்கள் இரண்டு மூன்று முறை அலைப்பாய துவங்கியது.‌

அவளது வாட்டம் உணர்ந்த இளவழகியோ வேகமாய் சாப்பிட்டு, கடைக்கு சென்றவர், “டேய் நான் சாப்பிட்டேன். கடையை பான்த்துக்கறேன். நீ போய் சாப்பிடு.” என்றார்.

நீ ஒன்னும் பார்க்க வேண்டாம் அம்மா‌ நானே பார்த்துக்கறேன். பசிக்கலை” என்று அர்ஜுன் ஷாம்பு பாக்கெட்டை சரத்திலிருந்து உருவி இரண்டை தந்தான்.

‌‌”அந்த பிள்ளை கூட போய் சாப்பிடு டா. கல்யாணமாகி கூட சேர்ந்து சாப்பிட என்னவாம்” என்றதும் “தனியா சாப்பிட்டா உள்ள இறங்காதா?” என்றவன் கடையிலிருந்து வீட்டுககுள் சென்றான்.

தனியாக தட்டில் கோலமிட்டு விளையாடியவளை கண்டு, “சோறு வை” என்ற குரலாலே பயமுறுத்தினான்.

வில்லனுக்கு டப்பிங் கொடுக்கும் குரல். அந்தளவு இருக்கும் எதிராளியை மிரட்டும் விதமாக.

சாதத்தில் கோலமிட்டவள் அவன் குரலால் கையை உதறிட, சாதம் லேசாய் சிதறியது.

குழம்பு இருந்தும், தட்டில் சாதம் வைத்து தயிர் ஊற்றி முடிக்க, அத்தை குழம்பு வச்சிருக்காங்க” என்று முன்‌நகர்த்தினாள்.

“எனக்கு இந்த டிபன்னு காலங்காத்தால சூடான குழம்பு இரண்டுமே செட்டாகாது.” என்று சாப்பிட்டான்.

அர்ஜுன் சாதத்தை பிசைய, அவன் தலைமுடி தான் தெரிந்தது.

‌ போதாதற்கு கஷ்டப்பட்டு முகத்தை காணும் போதும் முகம் முழுக்க முடி. தலை சாய்த்து அமிழ்தினி பார்க்க, நிமிர்ந்தவன் என்ன?’ என்று பார்வை வீசினான். புருவங்கள் இரண்டும் அவளை கேள்விக்கேட்டது.

புருவமும் அடர்த்தியா இருக்கு. இதுல இந்த மூஞ்சில முகத்தை எங்க தேடுவேன். என்ன முகபாவணை காட்டறார்னு தெரிந்துக்க என்று எண்ணியவளின் சிந்தை கலைக்கும் விதமாக, “எதுக்கு என்னையே பார்க்குற. உன் அழகுக்கு சுமாரானவன் தான். சாப்பிடு” என்று கூறவும், “நீங்களும் நல்லா தான் இருக்கிங்க. கண்ணுக்கு லட்சணமா‌” என்றவள் எழுந்தாள்.

இதற்கு மேல் என்ன‌வேண்டும் அவனுக்கு, சாப்பிட்டு முடித்து தட்டிலேயே கை அலம்பவும் "அமிழ்தினி" என்று பாக்கெட்டிலிருந்து தேன் மிட்டாயை நீட்டினான். 

“சாப்பிட எடுத்து அங்கேயே வச்சிட்ட, என்றதும் “இல்லை இரண்டு சாப்பிட்டேன். இது மூனாவது நீங்க கத்தவும் அப்படியே வச்சிட்டேன்.” என்றவள் அவன் கையிலிருந்து எடுக்க செல்ல கையை மடக்கி கொண்டான்.

அவள் அவன் கண்களை நோக்க, அதன் பின்‌ கையை திறந்தான். அவனை பார்வையிட்டபடி எடுத்ததும், “நேத்து தான் ஒரு முட்டை ஐந்து ரூபான்னு அர்ஜுன் சொன்னான். அதுக்குள்ள ஐம்பது பைசா ஏறிடுச்சா? எங்க உன்‌ பையனை கூப்பிடு கேட்டுக்கறேன்.” என்ற குரலில் கடைக்கு ஓடினான்.

“எக்கோ ஒரே விலையா. நாளுக்கு நாள் விலை ஏறாதா. அப்படியேவா இருக்கும். ஐந்து ஐம்பது தான் ஒரு‌முட்டை விலை. வாங்கினா வாங்கு இல்லை நடையை கட்டு.” என்று கறாராக கூறவும் மூன்று முட்டை கொடு.” என்றார் கடைக்கு வந்தவர்.

“ஆளு மாறினா உடனே இந்த விலை இல்லை அந்த விலை இல்லைனு நம்மளை கேள்வி கேட்டு குழப்பறது.” என்று இளவழகி உள்ளாற வரவும், தனக்காக அர்ஜுனை சாப்பிட அனுப்பிய அத்தையை வாஞ்சையாய் பார்த்து சிரித்தாள்.

மகள் ரஞ்சிதா போன் போடவும், உங்கண்ணி’ என்று காதில் வைத்து பேச, “என்னம்மா எப்படியிருக்க? தம்பி எப்படியிருக்கான். அம்முவுக்கு இடமெல்லாம் சௌகரியமா இருக்கா?” என்று ஆரம்பிக்க, ‘நல்லாயிருக்கோம் டி. நீ எப்படி இருக்க? மாப்பிள்ளை எல்லாம் சௌவுக்கியமா?

அம்முக்கு என்ன? நல்லா இருக்கா. உன் தம்பி தான் இப்பவும் சிடுசிடுன்னு இருக்கான். ஏதாவது புத்திமதி சொல்லுடி. காலையிலேயே அந்த பிள்ளையை அழவச்சிட்டான். கல்யாணமாகி ஒரு வாரம் இருக்குமா? அதுக்குள்ள இப்படி செய்தா நல்லாவாயிருக்கும்” என்றதும் ரஞ்சிதாவோ “ம்மா… தம்பி இப்படி இருக்கறதே நல்லது. இல்லைனா அவ முந்தாணையில விழுந்து உன்னை தான் உதாசினப்படுத்துவான். கல்யாணம் பண்ணிட்ட இனி அவன் பாடு அவ பாடு. நீ எதுவும் அவளுக்கு சப்போர்ட் பண்ணாத.” என்றதும் இளவழகிக்கு ஏதோ போன்ற உணர்வு.

“சரி நீ வேலையை பாரு‌.” என்று வைத்திட, அமிழ்தினி சாப்பிட்ட தட்டை எடுத்து வைக்கும் பொறுப்பில் இருந்தாள்.

இளவழகி போன் பழைய காலதாது மாடல்‌. காதில் வைத்து பேசினால் பக்கத்தில் நன்றாகவே கேட்கும். அதனால் தான் அர்ஜுன் இல்லாத நேரமாக அவனுக்கு வரன் பார்க்கும் விஷயமெல்லாம் தரகரிடம் பேசுவார். இன்று மருமகளை வைத்து மகளிடம் பேசியது தவறோ கேட்டிருக்குமோ என்று அஞ்சினார்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்

28 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை?-12”

 1. Priyarajan

  Aiii na tha 1stuuu…. Reaction ah kandu pidikkave thhadiya edukkanum polave….. Spr going sis waiting for nxt ud😍😍😍😍😍👌👌👌👌👌👌

 2. Priyarajan

  na tha 1stuuu…. Reaction ah kandu pidikkave thhadiya edukkanum polave….. Spr going sis waiting for nxt ud😍😍😍😍😍👌👌👌👌👌👌

 3. Avatar

  I think அமிழ்தினி அப்படி இல்லன்னு நினைக்கிறேன்..
  சொல்ல முடியாது…மத்த மாமியார் மாதிரி இவங்களும் இருக்கலாம்..🧐🧐🧐

 4. Avatar

  Super sis nice epi 👍👌😍 en pa Arjun nu un voice a ketey andha pulla eppdi bayapududhe ennum nee ennalam panna poriyo 🙄 Ella nathanar um eppdi thano🤔

 5. Avatar

  கால் கிலோ காதல் ரொம்ப அழகாக போகுதுமா நல்ல அருமையான குடும்ப கதைகாதல் மோதல் மாமியார் மருமகள் புரிதல் அண்ணியின் குணம் எல்லாமே அழகாக அளவாக சொல்லி இருக்கிங்கமா நன்றாக இருந்தது வாழ்த்துகள் மா

 6. Avatar

  Indha thaadikaaran kullayum oru romantic hero irupanu nenaikala panrdhellam pannitu avalayae Kora solran paaru😂😂….ammu avanuku indha thaadi tan azhagu adhanala Avan moonchila endha reaction um thedadha….indha Arjun akka yen ipadi pesituruko therila….

 7. Kalidevi

  Arjun un face enga iruku nu kandu pidikanum pola ithula reaction enga kandu pidika. Athana oru mamiyar marumaga kitta nalla nadanthukitta atha keduka yarna varuvanga crta

 8. Avatar

  Arjun andha ponnu unnoda mudi la moonji enga nu thedura trim kooda panna koodathu nu ethachum sattam iru ku ah enna ah paru unnoda amma ku.yae ne villan ah than theriyum ah nanga unna hero nu respect panrom ozhunga shave pannuda

 9. CRVS 2797

  இதோடா…! இவங்க புருசன்காரன் மட்டும் இவங்களை சுத்தி வரணும்…. அதே நாத்தனாருங்கன்னா….
  அத்தனை இளப்பமா…?
  இருடி, இதே அர்ஜூன் அமிழ்தினயை தலையில் தூக்கி வைச்சிட்டு ஆடற நாளு கூடிய சீக்கிரமே வரத்தான் போகுது.

 10. Avatar

  இந்த அர்ஜுன் மனச பூட்டி வச்சிருக்க மாதிரியே அவன் அழகையும் அந்த புதருக்குள் ஒளிச்சு வச்சிருக்கானே.

 11. Avatar

  சூப்பர் ஸ்டோரி அப்டேட் பண்ணவும் நோட்டிபிகேசன் வந்தால் இன்னும் நல்லாயிருக்கு ம்

 12. Avatar

  நாத்தனார் புத்திய காட்டுறிங்களே நியாயமா இது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *