Skip to content
Home » கால் கிலோ காதல் என்ன விலை-14

கால் கிலோ காதல் என்ன விலை-14

அத்தியாயம்-14

   அர்ஜுனுக்கு இன்று என்னானது? என்று சிலர் கேட்டுடும் அளவிற்கு இருந்தான்.

   எப்பொழுதும் பேசும் வார்த்தையில் பணிவுயில்லை. என்னதான் கணீர் குரலென்றாலும் வருபவரை கடித்து குதறும் அளவிற்கு எரிந்து விழுந்தான்.

   “ஏன் அர்ஜுன் இப்ப என்ன கேட்டேன்னு இப்படி மூஞ்சிக்காட்டுற மல்லி விலை ஏறிடுச்சுன்னு கொசுறு கொடுக்கமாட்டேன்னு சொல்லு. எப்ப பார்த்தாலும் உசுரை வாங்கறதா திட்டற?” என்று சலித்து சென்றால் இடையில் குழந்தையை வைத்து பெண்ணொருத்தி. அக்குழத்தையோ அர்ஜுன் ‘மல்லி எம்புட்டு விலை ஏறிடுச்சு.. சும்மா கொசுறு கேட்டா கடையை இழுத்து மூடணும்’ கத்தியதற்கு வீல்லென்று அழுதது. இடைவிடாமல் தேம்ப அவ்விடம் விட்டு சென்றார்.‌

  அர்ஜுன் மத்த நேரமிருந்தால் வெள்ளக் கட்டியை கொடுத்து சமாதானம் செய்திருப்பான்.‌
இன்றோ என்னை பார்த்து கத்துது? நேத்து பிறந்த குழந்தைகளுக்கு கூட இந்த அர்ஜுன் இளிச்சவாயனா? என்று வீட்டை கவனித்தான்.‌

   அன்னை இளவழகியோ டிவி சீரியலில் பிஸியாக இருக்க, அர்ஜுனுக்கு எரிச்சலானது.

   ‘எப்ப பாரு நாடகம்’ என்றவன் தன் உண்மையான கோபத்திற்கு காரணமானவளை தேடினான்.

   அவளுக்கு தான் சீரியல் என்றாலே அலர்ஜி. நாடகம் என்பதால் அநியாயத்துக்கு நாடகமாக இருக்க வேண்டுமா? இயல்பான நடிப்புக்கு மாறாக சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்திலும் நகைகளை அள்ளி போட்டு மேக்கப்பை அப்பி, சிவாஜி சாவித்திரி தோற்று போகும் அளவிற்கு மிகைப்படுத்தும் நடிப்பு இருக்கும்.

  அதனால் அமிழ்தினி அறைக்குள் தான் இருப்பது போல தோன்றியது.

    அடிக்கடி புது மனைவி தரிசனமாவது கிடைக்கட்டுமென்று ஆசையில் மண் விழ, நெஞ்சு விம்மி, அறைக்கு சென்றான்.

  அவன் ஆசையாக அவள் காலாட்டி படுத்திருக்க ஆசையெங்கெங்கோ அலைபாய, தன் மனதை அடக்கினான்.

    மெத்தையில் குப்புறப்படுத்தி காலாட்டி, “அக்கா… அதெல்லாம் மாமா கேட்பார். இவர் கேட்கமாட்டார்.” என்று கிசுகிசுப்பாய் பேசினாள்.

  ஏதோ சொல்லிக் கொடுப்பது போல பேச்சு இருக்க, அர்ஜுனனுக்கு கடுப்பாக, ‘அமிழ்தினி அமிழ்தினி’ என்று இரண்டு முறை கூப்பிட, அவன் ஆசையாக முழு பெயரை கூப்பிடட்டும் என்று காலாட்டி செவியில் விழுந்தாலும் காது கேளாதது போல ரசித்தாள்.

  ‘ஏ… உன் வீட்டுக்காரர் கூப்பிடறார்” என்று அஞ்சனா கூற, ‘ம்ம்.’ என் விளையாடும் என்னத்தோடு கூறினாள்‌.

  இங்கு நம் நாயகனுக்கு பொறுமை என்பதும் என்ன விலை என்பான். காதல் என்றாலும் என்ன விலை என்பான்.
   அப்படி தான் மூன்றாவது முறை பொறுமை பறந்து போனை தட்டி விட்டான்.

  திடுதிப்பென போனை தட்டிவிட, அது தரையில் முத்தமிட்டது.

   “என்ன பண்ணறிங்க” என்று பதறினாள் அமிழ்தினி. 

   “கூப்பிட்டுடே இருக்கேன்‌ போன்ல பேசிட்டு இருக்க?” என்று கடிந்தான் அர்ஜுன்.

  போனை எடுக்க முனைப்பாய் குனிந்தாள். அக்கா லைனில் இருப்பாளென்று எண்ண, மீண்டும் பிடுங்கி வீசினான். அவனுக்கிருந்த கோபம் அப்படி, ஆனால் போனுக்கு தெரியுமா?! கண்ணாடி தொடுத்திரை கொண்டதோ விரிசலிட்டு உடைந்து கோடு கோடாய் காட்டியது‌.

   “அச்சோ டிஸ்பிளே ஒர்க் ஆகலை‌. போனும் உடைந்திருக்கு” என்று டச் போனை தொட்டு தொட்டு செயல் கொண்டதாக உள்ளதா என சோதித்தாள்.
   ஆனால் போனை தட்டி விட்டவன் வேகம் அப்படி உடைந்து உயிரை விடும் அளவிற்கு சென்றிருந்தது தொலைப்பேசி.

   அர்ஜுனுக்கு தற்போது போன் உடைத்து பெரிய விஷயமாக மாறியது. அவள் தன்னை நிராகரித்தது மறந்து போனது. அமிழ்தினி உதடு பிதுங்கி “ஆசையா நானா வாங்கியது. என்ன அவசரம் நீங்களா என் முழு பெயரை ஆசையா கூப்பிடறிங்கன்னு ரசித்து கேட்டேன்.” என்று உரைத்திட, அர்ஜுனுக்கு சாரி கூட கேட்க இயலாது அவளது போனை வாங்கினான். தனது அழைப்புக்கு ஏங்கியா ரசித்தாள். ஆனாலும் உடனே மன்னிப்பு வேண்டிட ஆண் மனம் தயங்கியது‌.

   அதற்கு கடையில் வேறு ஆட்கள் வரிசையாய் வரவும், அர்ஜுனை ஏலம் விட்டுவிட, “நா…நான் நானே சரிப் பண்ணி தர்றேன்” என்று மளிகைக் கடைக்கு ஓடினான்.

     எங்கே அமிழ்தினி ஏதேனும் சண்டையிடுவாளோ என்ற பயமும் இருந்தது.

  அமிழ்தினி அப்பொழுதும் அவனது முகபாவனையை ஏறிடவில்லை. ‘வடை போச்சே’ என்பது போல போன் போச்சே என்று அதிர்ந்திருந்தாள்‌. காஸ்ட்லி போன் என்று கூற முடியாது எட்டாயிரத்துக்கு தந்தையிடம் மல்லுக்கட்டி வாங்கியது.

   அதை தெரியாது கல்லா பெட்டி அருகே அமிழ்தினி போனை வைத்து விட்டு வியாபாரம் பார்த்தான். காசு போடும் பொழுது எல்லாம் உடைந்த போன் அவனை நிசப்தமாய் மிரட்டியது.

   இது வேற இப்ப எவ்வளவு செலவு இழுத்து வைக்குமோ? அவ வேற கோபமா இருப்பாளா? காலையில தள்ளி விட்டேன். இப்ப போனை உடைச்சேன். மூச்சு விடாம ரூம்லயே இருக்கா.
   அம்மா திட்டற மாதிரி நமக்கு இந்த கோபம் அதிகமோ. புது மனைவி… இவளிடம் சண்டைன்னா அம்மா என்னை திட்டி தீர்க்கும்‌.

படிச்ச பொண்ணு மனசுல இந்த மளிகைக்கடைக்காரன் ஏன் தான் கட்டினோம்னு நினைப்பாளோ? அய்யோ… அவசரப்பட்டுட்டியே அர்ஜுன்’ என்று அவனுக்குள் அவனையே சாடினான்.

   இதில் சாதம் வைக்கும் போது, “என் போன் கொடுங்க. நான் என்னனு பார்க்கறேன்” என்று கேட்டாள்.

   “நான் தான் சரி பண்ணி தர்றேன்னு சொல்லிட்டேனே. என்ன பிரச்சனை உனக்கு? நான் படிக்காத முட்டாள் இல்லை‌. டிப்ளமோ முடிச்சிருக்கேன்.

  டிஸ்பிளே மாத்தியாகணும். நாளைக்கு ஆரணில போன் சர்வீஸ் கடைக்கு போய் சரி பண்ணிடுவேன். இந்தா பட்டன் போன்”  என்றுரைத்தான்.‌

  அவனுடைய போனில் அமிழ்தினி சிம்மை போட்டு நீட்டினான்.

   “ஒன்னும் வேண்டாம்… நான் யாருக்கு போன் பண்ண போறேன்” என்று கூறினாள்.
  
   “ஏதோ பேசிட்டு இருந்த” என்று கேட்க, “மறந்துடுச்சு‌” என்று முகம்வாடி பரிமாறினாள்.

   இந்த பேச்சு விவகாரம் ஒன்றும் பாதியுமாக கேட்ட இளவழகியோ “போனை பத்திரமா வச்சிருக்க கூடாது.” என்று அமிழ்தினியை கூறினார்.

  டச் போன் விலை அதிகம் என்று அர்ஜுன் போட்ட பிட்டு.

   மருமகள் வந்த கொஞ்ச நாட்களிலேயே விலையுயர்ந்த போனே இப்படி உடைந்து விட்டாள் என்று வருத்தம் கொண்டார்.

   அமிழ்தினியோ ‘நான் எங்க உடைச்சேன். உங்க பிள்ளை தான் தட்டி விட்டார்’ என்று உரைக்க தொண்டை வரை வார்த்தை வந்தது. ஆனால் அர்ஜுன் கமுக்கமாய் மதிய உணவை விழுங்க, அமைதியானாள்‌.

   சின்ன கோபம் முளைத்தது. ஆனால் அடர் புதரை வைத்திருந்த அர்ஜுனின் முகத்தில் அந்த கோபத்தை புதைத்தாள்.

  ஏனோ நாளாக நாளாக நமக்கு பிடிக்காதது கூட பிடிக்கும் என்ற கோட்பாட்டில் தாடியை ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.

   அர்ஜுன் மாலை நேரம் கிடைக்க டச் செயல்பாட்டை சரி செய்தான். ஆனாலும் போன் தொடுத்திரை மாற்ற வேண்டும். அந்தளவு விரிசலிட்டு இருந்தது.

    இரவும் அர்ஜுன் தேன் குடித்த கள்வனாக அமிழ்தினியை நெருங்க, அதற்கெல்லாம் தடையின்றி இல்லறம் இனித்தது இருவருக்குள்.

   ஒருவிதத்தில் அர்ஜுன் நிம்மதியடைந்தான். நல்லவேளை அமிழ்தினி தன்னை கடியவில்லையென. இதே அன்னையென்றால் இந்த வீதி முழுக்க இன்று இந்த செய்தியை பரப்பி விட்டிருப்பார்.‌ அர்ஜுன் தான் உடைத்தான். இந்தளவு கோபக்காரன் ஆகாதென்று அவனை பற்றி ஒன்றுக்கு இரண்டாய் கூறியிருப்பார்.

    இன்றும் சில முனங்கல் இருந்தாலும் புது மருமகளை கடியாது தவிர்த்தார்.

    இளவழகியை பொறுத்தவரை அமிழ்தினி போன் அவள் தான் உடைத்திருப்பாளென்று நினைத்திருந்தார்.

   உடனடியாக தொடுத்திரையை மாற்றிடும் பொருட்டு காலையிலேயே காய்கறி வாங்கும் கடைக்கு தாமதமாகவே தன் வண்டியை எடுத்து சென்றான்.
    போன் சர்வீஸ் கடை திறக்கும் வரை காய்கறி வாங்கிவிட்டு அருகே காத்திருந்தான்.

   காத்திருக்கும் வினாடி எல்லாம் வீட்டில் மளிகை வியாபாரம் தடையாகுகின்றதே யார் யார் எல்லிஸ் கடைக்கு வந்து திரும்பி சென்றனரோ.

   வியாபார நேரம் தடையானாலும் பத்துமணிக்கு போன் கடை திறந்ததும் கொடுத்து உடனடியாக ரிப்பேர் செய்ய கூறினான்.

   போன் சர்வீஸ் கடை ஆளோ உடனடியா பண்ண முடியாதுங்க. நாளைக்கு வந்து வாங்கிக்கோங்க‌ என்று கூறியிருந்தார். இல்லையென்றால் மேலும் மதியம் வந்து வாங்கிக்க கூறியிருந்தார்.

வியாபாரம் இனியும் தடைப்படுமென நாளைக்கு வந்து வாங்கிக்கறேன். நீங்க சரி பண்ணிட்டா இந்த போனை தக்காளி கடைக்காரரிடம் கொடுங்க. நான் காலையில இவரிடம் வாங்கிக்கறேன் என்று சரி செய்வதற்கான பணத்தை மட்டும் கொடுத்துவிட்டான்.
  
  வீட்டிற்கு வந்தப்போது இளவழகி புலம்பல் தான் கேட்டது.

   ‘என்னைக்கும் இல்லாம வண்டில காய்கறி வாங்க போனான். நான் கூட விரசா வர்றதுக்குன்னு நினைச்சா இவன் ஆடி அசைந்து மதியம் வந்து சேருறான்.” என்றார்.
 
   “ஏம்மா… போன் கடை என்ன காலையிலேயே திறந்து வைப்பான்.” என்ற வார்த்தை விட்டதும் போன் சர்வீஸ் கடைக்கு சென்றதை தெரிந்துக் கொண்டார்.

   அமிழ்தினி கையை பிசைந்து அங்கே நிற்க, கடையவாது அவளை பார்க்க கத்து கொடு’ என்று சலித்தார்.
 
  அவருக்கு தினசரி வேலைகள் தடையானது கொஞ்சம் அதிருப்தி.

  அதனால் குளிக்க சென்றார்‌

   அமிழ்தினியோ போன் ஒரே நாளில் திரும்ப வாங்கி விடுவானென்று இருந்தாள்.

   கை வீசி வரவும் “உடனே தரமுடியாதுனு சொல்லிட்டாங்க. அதையே யூஸ் பண்ணு” என்று கூறிவிட்டான்.

  அவளுக்கு அவனது போன் பயன்படுத்த தயக்கம்.

  அதை மீறி நேற்று அக்காவிடம் பேசிக்கொண்டிருந்த போது போன் தடையாகியதால், தன்னை தவறாக எண்ணுவாளோ என்று அக்காவுக்கு அழைத்தாள்‌.

   முதலில் நலம் விசாரிக்க, பின்னர் “சாரிக்கா… நேத்து போன் கட்டாயிடுச்சு” என்று காரணம் கூறி முற்படும் நேரம், அதெல்லாம் நீ விளக்க வேண்டாம். உன் புருஷன் குரல் கேட்டதும் புரிஞ்சுக்காதவளா.. புதுசா கல்யாணமானவக.” என்று சிரிக்க, அர்ஜுன் கடையிலிருந்து தன்னவளை தரிசிக்க, அமிழ்தினிக்கு இளவழகி போனை போல தன் போனின் சப்தமும் வெளியே கேட்கின்றதோ என ஐயம் வந்தது.
     
    ஒருவிதமாக அசௌவுகரியம் வரவும், “அய்யோ அக்கா சும்மாயிருக்க மாட்ட. நான் வைக்கிறேன்.” என்று அணைத்தாள். 

  காதலித்து மணந்தவர்களுக்கு கூட கணவன் மனைவியான பின் புரிதல் அத்தனை சுலபத்தில் வருவதில்லை‌. அப்படியிருக்க சில மாதம் போனில் கூட பழகாத ஒருவனின் மனம் எப்படி நினைக்கும் என்று அறியாத பேதை அர்ஜுனை சந்தேகமாய் நோக்கினாள்‌.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

14 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை-14”

 1. Avatar

  Oru vazhiya enga thaadikaaran vandhutan ka😂…. Dei arjun paiyalae unaku enna tan prachainai sumavae un moonchi kadugu thalicha maadhri tan irukum ipo vera kadu kadu nu iruka…. Thevailamai ph pochae… Ipo ivan amma vera ini enna enna solla porangalo therila…. Super super ka….waiting for next ud

  1. CRVS2797

   அச்சோ பாவம்..!
   ரெண்டு பேராலேயும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க முடியாம என்ன தவிப்பிது…?

 2. Avatar

  Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr sis 👌👌👌👌👌👌👌👌

 3. Avatar

  ரொம்ப யோசிக்காத அமிர்தினி அர்ஜுன் கொஞ்சம் சுடு மூஞ்சி தான் ஆனா ரொம்ப நல்லவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *