Skip to content
Home » கால் கிலோ காதல் என்ன விலை -16

கால் கிலோ காதல் என்ன விலை -16

அத்தியாயம்-16

       குண்டு மல்லி பூ வீட்டிற்கு பின்னால் பூத்திருக்க அதனை தொடுத்து மருமகளிடம் கொடுக்காமல் டிவியிருக்கும் ஸ்டாண்ட் பக்கத்தில் வைத்தார்.

   “குண்டு மிளகாய் விலை ஏறிடுச்சு. நீ பாட்டுக்கு பழைய விலையே போட்டு வித்துடாத” என்று கூற, இளவழகி மகனை ஏறயிறங்க பார்த்தார்.

   அர்ஜுனனுக்கு அன்னை பார்வை அனலை வீச, “ஏய்.. நீ என்னை பராக்கு பார்க்குற கிளம்பு” என்றான்.

   அமிழ்தினியோ நான் கிளம்பி தானே இருக்கேன். இவருக்கு என்னவாம்?’ என்று முறைக்க, “அவன் கிடக்கிறான் அம்மு. அந்த பூவை எடுத்து தலையில வச்சிக்கோ” என்றுரைத்தார்.

   “சரிங்க அத்தை” என்று பூ குத்தும் பின்னை எடுத்து பல்லில் பிளவிட்டு, சிகையில் பூவை குத்தினாள்.

  “அவனிடம் சொல்லிருக்கேன். படம் முடிஞ்சி வெளியே சாப்பிட்டுடுங்க.” என்று கூறவும் தலையாட்டினாள்‌.
“நீங்க நேரத்துக்கு சாப்பிடுங்க அத்தை‌” என்றாள்‌.

சுடிதார் அணிந்து டிவிஎஸ் வண்டியில் அர்ஜுனுக்கு பின் அமர்ந்தாள். 

   இளவழகியோ மகன் மருமகளை வழியனுப்பி விட்டு கடையில் வீற்றுக்கொண்டார். கடையிலிருந்து ஹாலில் இருக்கும் டிவி தெரியும்படி அர்ஜுன் வைத்திருப்பான்.

    அதனால் நாடகத்தை போட்டு விட்டு, சத்தம் கூட்டி வைத்து கடையில் இருந்தார்.

  அமிழ்தினி அர்ஜுன் தோளில்‌ வலது கையை போடலாமா வேண்டாமா என்று பயந்தாள்.

    அரர்ஜுனோ அன்மருதை கிராமம் தாண்டவும் வண்டியில் அமைதியாக வருவதை தவிர்க்க எண்ணி பேச்சை ஆரம்பித்தான்.
‌ “சினிமா எல்லாம் அடிக்கடி போவியா?” என்று கேட்டான்.
  
  “ம்ம்.. அப்பா ரஜினி படத்துக்கு மட்டும் தான் கூட்டிட்டு போவார். அக்கா மாமா ஊருக்கு வந்தாங்கன்னா விஜய், அஜித் படம் விக்ரம், சூர்யா இப்படி யார் படமாயிருந்தாலும் போவோம். அக்காவும் ஆறு மாசத்துக்கு ஒருதடவை தான் வருவா. அதுவும் மூனே நாள்ல கிளம்பிடுவா.” என்றாள் உபரி தகவலாக.

   அர்ஜுனோ ‘நல்ல வேளை இவளையும் ஆறுமாசத்துக்கு ஒரு தடவை அனுப்பலாம். மூன்று நாள் இவளை விட்டு இருக்கலாம். அதுக்கு மேலனா நான் தாங்க மாட்டேன்’ என்ற எண்ணம் ஓடியது.

    அர்ஜுனுக்கு ஆச்சரியம் இவள் இல்லாம மூன்று நாட்களுக்கு மேலாக உன்னால் வாழ முடியாதா? இத்தனை நெருக்கமா. இடைப்பட்ட நாளில்? அந்தளவு இவளுக்காக ஏங்குகின்றாயா? என்று மனசாட்சி கேலி செய்தது.

   மனசாட்சியை அடக்கிவிட்டு, “கடைசியா என்ன படம் யார் கூட பார்த்த?” என்று கேட்டான்.‌

   பத்து மாதத்திற்கு முன் வந்த படத்தின் பெயரை கூறிவிட்டு, நாக்கை கடித்தாள்.

  பின்ன… படத்தின் பெயரை கூறி  பிரெண்ட்ஸ் கூட பார்த்தேன் என்றாள்.

  “பிரெண்ட்ஸ்னா?” என்று அர்ஜுன் கேட்டான். கல்லூரி படித்த பிள்ளைகளோடு சென்றிருப்பாளென யூகித்தான். அமிழ்தினி வாயால் உரைக்கட்டுமென காத்திருந்தான்.

‌  “பிரெண்ட்ஸ்னா பிரெண்ட்ஸ்னா…” என்று தடுமாறினாள்.

   அவள் தடுமாற்றத்தை உள்ளுக்குள் ரசித்து “பள்ளிக்கூடம் படிச்சப்ப போனியா? பார்டா உங்கப்பா எப்படி அனுப்பினார். ஆனாலும் மூன்று வருஷம் நடுவுல எங்கயும் படத்துக்கு போகலை?” என்று வேண்டுமென்றே கேள்வி கேட்டு தொலைத்தான்.

  “ஆஹ்.. ஆஹ். ஆமா.. ஸ்கூல் பிரெண்ட்ஸ் தான். ஆனா பள்ளிக்கூடம் படிக்கிறப்ப போகலை. அப்பா அப்படி போனா தோளை உறிச்சிடுவார்‌
  இப்ப தான் நடுவுல ஸ்கூல் படிச்சப் பிள்ளைங்க எல்லாம் சேர்ந்து போனோம். ஆமா… சேர்ந்து போனோம்” என்று பொய்யுக்கு உரம் போட்டாள்.

   ‘படிச்ச பிள்ளை என்னம்மா பொய் சொல்லுது. உண்மையை சொல்ல அம்புட்டு பயம். ஒருவேளை போனை வேற தட்டி விட்டேன். நம்மளை கோபக்காரன்னு நினைச்சு தயங்குதோ?!’ என்று எண்ணி, “நான் உங்கப்பா மாதிரி இல்லை. பிரெண்ட்லி டைப்.” என்றான் பெருமையாக.

   அமிழித்னிக்கோ ‘ஆமா.. ஆமா பிரெண்ட்லி டைப். முகறகட்டையை பார்த்தாலே தெரியுது.’ என்று அவன் தலையை பார்த்தாள். நன்றாக கருகருவென்ற சுருட்டை முடி.

  தாடி மீசை எல்லாம் அச்சுறுத்தும் விதமாக முரட்டுதனமாய் இருந்தது.

   இதே தாடி மீசை உன்னை இரவெல்லாம் இம்சிக்கவில்லையா?

   உன் தேகத்தில் ஊர்வலம் கடக்க இலயித்து கிறங்கினாய். என்றது உள்மனம். அமிழ்தினி அவனது தோற்றம் அச்சுறுத்தினாலும் அவனை பிடித்திருக்க அவனையே ரசித்தாள்.

   ”கேட்டுட்டே இருக்கேன் பதிலை காணோம். வண்டிலயிருந்து கீழே விழுந்துட்டியா?” என்று பக்கவாட்டில் திரும்பினான்.

   மல்லிப்பூ சூடி தெய்வீக அழகில் இருந்தவளை காண தெவிட்டவில்லை. எதிரே வந்த பேருந்தின் வெளிச்சம் பெண்ணவள் முகத்தில் படவும், ‘எதிர்ல வண்டி’ என்றவள் குரலில் திரும்பினான்.

    அவளது அழகில் அவன் கேட்ட கேள்வியை மீண்டும்‌ கேட்கவில்லை. அவளுமே அவன் என்ன கேட்டான் என்று மீண்டும் கேட்கவில்லை.

  ‘ஒரு வேளை நீ படிச்ச பொண்ணாயிருந்து என்னை மாதிரி மளிகைக்கடைக்காரனை கல்யாணம் பண்ணியிருப்பியா?’ என்ற கேள்வி அப்படியே பாதாளத்தில் சென்றது. அதன் பின் தொடர்ச்சியாக நீ படிச்சவ தானே? உனக்கு என்னை பிடிச்சிருக்கா? என்ற தொடர் வினாக்கள் கேளாமலே மறைந்தது.

    சாலையில் பேருந்து வரவும் பொறுப்பாய் வண்டியை செலுத்தினான்.

   அரை மணி பயணம் மீண்டும் சற்று நேரத்தில் பேச்சை ஆரம்பித்திட வைத்தது.
  
   “உனக்கு இங்க எல்லாம் சௌவுகரியாம இருக்கா?” என்றான்.

   “இல்லை… கஷ்டமாயிருக்கு” என்றாள்.
  
   வண்டியை நிறுத்திட அவன் மீதே முன்னழகு மோதி வலது கையை அவன் தோளில் அழுத்தினாள்.

   “என்ன?” என்றான் கடுகடுவென.

   “இதுக்கு தான்…. கஷ்டமாயிருக்குன்னு சொல்ல வந்தேன். என்னால எதையும் பிடிக்காம உட்கார முடியலை. உங்க தோளை பிடிச்சிக்கவா?” என்றாள்.
  
   ”அதுக்கு தான் கஷ்டமாயிருக்குன்னு சொன்னியா?” என்றதும் அவன் கேட்டதை நினைத்து, “இங்க என்ன கஷ்டம். எப்பபாரு திட்டிட்டே இருக்கற அப்பா கூட இங்க இல்லை. அத்தை அவங்க உண்டு அவங்க நாடகம் உண்டுன்னு இருக்காங்க. நீங்க கடையில் இருக்கிங்க. நான் எங்க வீட்ல இருக்கற மாதிரி தான் தனியா உலாத்தறேன்.

   என்ன அங்க இத்தனை நாள் பழகின இடம் ஒவ்வோரு பொருளும் இடமும் பழக்கமானது.
   நம்ம வீடுன்னு நினைப்பு ஆழமா இருக்கு.

  இங்க இப்ப தானே வந்திருக்கேன். சௌவுகரியத்துக்கு குறைச்சல் இல்லை. ஆனா எல்லாமே புதுசு. ‘என்னோடது’ ‘நம்மளோடது’ இப்படி உணர்வான நினைப்பு ஆழமா பதியலை.

  சட்டுனு நீங்க கோபப்பட்டா, ‘அவர் வீடு, நம்ம வீடு இல்லையே’னு சின்ன வருத்தம்.” என்றாள்.‌

   “இந்த அவரே உனக்குரியவன். உறக்குரியவன் என்றாலே உனக்கு தான். உன்‌வீடு தான்‌. நம்மளோடது தான்” என்றவன் கண்ணாடியில் அவளை காண உதடு விரிந்து மகிழும் பெண்ணவளை கண்டான்.

   ”புரிஞ்சுதா?” என்றான்.‌
   அவள் தலையாட்டலையும் கண்ணாடி வழியாக கண்டவன், அவள் கையை எடுத்து இடையை வளைக்க வைத்தான்.

  அவன் தோளில் முகம் பதிய வந்தவள் நுகர, வெல்லத்தின் வாசம் பிடித்து, “கடைசியா வெல்லத்தை மடிச்சி கொடுத்திட்டு சட்டையில் இடது தோளில் துடைச்சிங்களா?” என்றாள்.

   “ம்ம்ம்.. ஏன் வாடை குமட்டுதா?” என்றான்‌ குரல் சற்று உள்ளே போனது. புது சட்டை தான் வரும் பொழுது அணிந்தான். ஆனால் கல்லாப் பெட்டியில் பணத்தை எடுக்கும் நேரம் வெல்லத்தை கேட்டு வரவும், வியாபாரம் செய்தவன், பழக்க தோஷத்தில் தோளில் துடைத்தான்.
   எப்பொழுதும் லுங்கியில் துடைத்திடும் பழக்கம். இன்று பேண்ட் அணிந்திருக்க, சட்டையில் வேறு ஷாம்பு தொங்கிக்கொண்டு உரச, அதனை தட்டி விட வந்தவன் தோளில் சட்டையில் துடைத்தான்.

  “நல்ல வேளை அன்றைக்கு மாதிரி அழுகிய வெங்காயம் அளவுக்கு இல்லை. இனி இதை பழகிக்கறேன்.” என்றாள். கூறிவிட்டு பயந்தாள் இதனால் புது பிரச்சனை தோன்றினால்?

   அர்ஜுனுக்கு அன்று ஆரணிக்கு காய்கறி வாங்கி ஏற்றி வந்து இவளை கட்டிப்பிடித்தது நினைவில் வந்தது. காய்கறி வாங்கிய அன்று என்னய்யா அழுகிய வெங்காயம் போட்டு ஏமாத்தறியா?’ என்று வெங்காய தோளை உறித்து காட்டி வேற நல்லதா போடு’ என்று கத்தியது நினைவில் வந்து செல்ல, அந்த நாற்றத்தோடு அணைத்தால் விலகாமல், முகம் சுளிக்காமல் இருக்க முடியுமா? இவள் கூறுவதை போல பழகிக்கொள்ளவில்லையே.

   தன் தவறு உணர்ந்து உடல் இறுகினான்.

  ‘அச்சோ போச்சு போச்சு’ என்று பயந்தவள், அவன் உடலை தன் கரங்களால் இறுக்கி கொண்டாள்.

   இடையில் வளையல் அணிந்த கரம் தன்னை இறுக்க, அவன் இறுக்கம் தளர்ந்தது‌.

  சிறு கீற்று புன்னகை உருவாக, “நாம ரஜினி படத்துக்கோ, விஜய் அஜித் விக்ரம் சூர்யானு ஸ்டார் நடிச்ச படத்துக்கு போகலை. பேய் படத்துக்கு போறோம். தமன்னா ராஷி கன்னா நல்லா டான்ஸ் பண்ணிருக்கா” என்று புகழ்ந்தான்.

   “நல்லவேளை சுடிதார் போட்டுட்டு வந்தேன்.” என்றாள்.

   என்னடா இது தமன்னா ராஷிகன்னா பெயர் சொன்னா பொறாமையில் பேசுவான்னா சுடிதார் போட்டது நல்லதுன்னு சொல்லறா. அங்கேயே டான்ஸ் ஆடுவாளோ? என்று திரும்ப, ”என்ன பார்க்கறிங்க… நீங்க விடுற ஜொள்ளுல நனைஞ்சு போயிட்டா… அதான் துப்பட்டா வச்சி துடைச்சிப்பிங்கள்ல” என்று கூறவும் அர்ஜுனுக்கு அவள் பேச்சு சிரிப்பை தந்தது.
     இந்நேரம் வீட்டில் இருந்தால் வியாபாரத்தில் மூழ்கி இருப்பான். பரவாயில்லை‌… நான்கு இடம் சென்றால், உணர்வுகள் தூண்டப்பட்டு இயல்பாக பேச பழக முடிகின்றதே.

நேராக போன் சர்வீஸ் கடைக்கு சென்று போனை வாங்கினான். அமிழ்தினியிடம் கொடுக்க, "அவசரத்துல பர்ஸ் ஹேண்ட்பேக் எடுத்துட்டு வரலை‌ நீங்களே வச்சியிருங்க வீட்ல வந்து வாங்கிக்கறேன்" என்று திருப்பி கொடுத்தாள். 

போனை வாங்கி பார்த்துவிட்டு அவன் பேண்டில் வைத்து விட்டான்.

   அடுத்து வெங்கடேஸ்வரா தியேட்டருக்கு வரவும், பைக் பார்க்கிங் விட சென்றான்.
    எல்லா வண்டியும் புல்லட், பல்சர், ஹோண்டா என்று வரிசையாக இருக்க, தனது டிவிஎஸ் நிறுத்திவிட்டு அமிழ்தினியை பார்த்தான்.‌

   அவளோ ஒவ்வொரு பைக்கை கண்டு, “இது மாதிரி பைக் காய்கறி வைக்க வசதிபடாது தானே?” என்றாள்.

    லேசான இறுக்கம் சூழ, ”ம்ம்.. பெட்டி முன்னால கட்டவும், பின்னாடி மூட்டை கட்டவும் டிவிஎஸ் தான் வசதி. ஏன்… இந்த வண்டில உட்கார மாட்டியா?” என்றாள்‌.

   “நான் அப்படி சொல்லலையே” என்றவள் முகம் வாடியது. எதற்கெடுத்தாலும் தான் அவனை அவனது வீட்டை இடத்தை வண்டியை குறை காண்பதாக எண்ணுகின்றானே என்ற வருத்தம்.

   “நான்… நான் தப்பா கேட்கலை. அது வந்து..” என்று இழுக்க, “டிக்கெட் வாங்கிட்டு வாங்க. இல்லைனா கிடைக்காம போயிடும். அப்பறம் திரும்பி போகணும்.” என்றாள் அமிழ்தினி.

   தலையாட்டி இங்கேயே இரு வந்துடறேன்” என்று சென்றான்.

   ராஷிகன்னா தமன்னா உருவ போர்ட் இருக்க, ஆளாளுக்கு அங்கு நின்று போட்டோ எடுத்தார்கள். வயசு பசங்க எடுப்பது வேறு பெண்களும் குழந்தை குட்டி என்று மாறி மாறி எடுக்க அமிழ்தினி அதனை சிரித்தபடி வேடிக்கை பார்த்தாள்.

“உன் போன்ல நீ எடுத்துக்கறியா?” என்று போனை நீட்டினான்.‌

“இல்லை… எனக்கு அதெல்லாம் ஆசையில்லை” என்று மறுத்தாள்.

“அப்ப என்னை எடு” என்று அவன் போனை நீட்டினான்.

அவளோ அவன் போனை பார்த்து “இதுல எடுக்கறதுக்கு எடுக்காமலே இருக்கலாம். லென்ஸ் ஏன் ஸ்க்ரேட்சஸ் ஆகி வச்சியிருக்கிங்க. பொட்டலம் மடிச்சி அங்கங்க அப்படியப்படியே வச்சிட்டு இருப்பிங்க அப்படிதானே?” என்றாள்.

அர்ஜுன் மறுக்க இயலுமா?! அது தான் வந்ததிலிருந்து பார்த்துவிட்டாளே.

“நில்லுங்க நான் என் போன்ல எடுக்கறேன்.” என்று அவனை ராஷி கன்னா நிற்கும் இடத்தில் நிற்க வைத்து எடுத்தாள்.

“மில்க் ப்யூட்டி பக்கத்துல” என்று தமன்னா அருகே எடுத்தான்.

‘இந்த மூஞ்சிக்கு நானே அதிகம். இதுல மில்க் ப்யூட்டி. முதல்ல என் கூட எடுத்தாரா’ என்று க்ளிக் செய்தாள்.

அடுத்து அவனை நிற்க வைத்து ”ஒரு நிமிஷம் உங்களோட நான் ஒரு போட்டோ” என்றாள்.

அர்ஜுனுக்கு அவள் தன்னோடு செல்ஃபி எடுக்க, விழுங்கியவனாக அமிழ்தினியை பார்த்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
 

  

 
   

15 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை -16”

 1. Avatar

  Endha Arjun konjam Ella rombave kashtam pa purinjika amizdhini nee romba menakedanum poalye ma🙄 Veena sis unga heros laiye romba vithiyasamana hero pa evaru aana pudichiruku😉

 2. Kalidevi

  Eni tha kathai sudu pidika pothu arjun ellathaium thappa eduthukama ava kitta manasula patatha pesi palagu apo tha intha padikala ava padichi iruka mari mind set vachi down panatha una neeye

 3. Priyarajan

  Arjune theriduva polaye da😍😍😍😍😘😘😘😘😘😘💕💕💕💕💕💕😍💕💕😍👌👌👌👌👌👌👌

 4. CRVS2797

  அடப்பாவி…! சொன்ன மாதிரி அவளோட ஒரு செல்பி கூட எடுக்கலை. ஆனா, தமன்னா கூட எடுக்கிறானா…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *