Skip to content
Home » கால் கிலோ காதல் என்ன விலை-2

கால் கிலோ காதல் என்ன விலை-2

அத்தியாயம்-2

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரனின் கோவிலின் திசையை பார்த்து தேவராஜ் வணங்கினார். பூஜையறையிலிருந்த ஜன்னல் வழியாகவே கோவில் கோபுரம் தெரியும். தேவராஜிற்கு எப்பொழுதும் பூஜையுடனே மாடிக்கு வந்து திருவண்ணாமலை கோபுரத்தின் திசையை பார்த்து வணங்கி எழுவது வழக்கம்.
 
   இன்றும் அவ்வாறு வணங்கிவிட்டு காக்கைக்கு உணவை வைத்து காகத்தினை அழைத்தார். தினமும் சாதம் வைப்பதால் தேவராஜ் அழைக்கும் முன்னரே காகம் அங்கிருந்தது.

      “சந்திரிகா சந்திரிகா” என்று ஏலமிட்டபடி மனைவியை அழைத்தார்.

   “இங்க தான் இருக்கேன் தோட்டத்துல” என்று குரல் கொடுத்திடவும், வெள்ளை பனியன் கைலி அணிந்தவர் துண்டால் போர்த்தியபடி படிக்கட்டில் கீழேயிறங்கினார்.

      “இங்க என்ன பண்ணிட்டுயிருக்க? அம்மு எங்க காணோம்?” என்று பெற்ற மகளை தேடினார். அமிழ்தினியை எப்பவும்  பெயரை நீட்டி அழைப்பது சொற்பம். எப்பவும் செல்லச்சுருக்கம் அம்மு தான்.  

   “என்ன பண்ணிட்டு இருக்கேன்னா என்ன அர்த்தம் பார்த்தா தெரியலை. பெரிய பொண்ணு அஞ்சனாவுக்கு எலுமிச்சை பழம், கொய்யாபழம், நெல்லிக்கானு பறிச்சிட்டு இருக்கேன். எப்படியும் சனிக்கிழமை பெரிய பொண்ணு வீட்ல தங்கறோம். ஞாயிறு தானே மாப்பிள்ளை பார்க்கறோம். சனிக்கிழமை எலுமிச்சை ஊறுகாய் போடலாம்னு பறிக்கறேன். இந்த பெரிய காயை பறிச்சி தாங்களேன்.” என்று கணவரை தன் கைக்கு எட்டாத  பழத்தை பறிக்க சுட்டிக்காட்டினார்.

  “எவடியிவ? நானே பொண்ணைக் காணோம்னு பதறிட்டு இருக்கேன். இவ ஊறுகாயை போட பழத்தை பறிக்க சொல்லறா. அம்மு எங்கடி?” என்று சீறினார்.

   “வீட்டுக்குள்ள தான் இருந்தா கவனிக்கலையா?” என்று சேலையில் பறித்த பழங்களை முடிச்சிட்டு மாடிக்கு ஏறினார்.

   கீழே வாடகைக்கு விட்டிருந்தார்கள். மேலே வீடு என்பதால் படிக்கட்டில் ஏறி கதவை திறக்க, தன் பாதக்கொலுசில் முத்து அவிழ்ந்ததை, தன் முத்துபற்களால் கடித்தபடி அமிழ்தினி சரிசெய்தாள்.

   “இந்தா, இங்க தானே இருக்கா.” என்று தேவராஜை பார்த்து பொரிந்தார் சந்திரிகா.

   மகள் குளிக்க பாத்ரூமிற்கு சென்றதை கவனிக்கவில்லை.

    “இங்க தான் இருக்கேன்னு ஒரு வார்த்தை சொல்ல என்னவாம்?” என்று ஜாடையாக மகளை கடுகடுப்பாய் பொரிந்தார்.

“நீங்க என்ன என்னையா கூப்பிட்டிங்க. சந்திரிகா சந்திரிகானு உங்க ஆசை பொண்டாட்டியை தானே கொஞ்சி கூப்பிட்டிங்க. அமிழ்தினி அம்முனு என் பெயரை கூப்பிட்ட மாதிரி தெரியலையே.” என்று தங்தையோடு சரிக்கு நிகராக மல்லுக்கு நின்றாள்.

    “இந்த வாய் போறயிடத்துல இருந்தா சரிவராது. நாளைப்பின்ன உங்க வீட்டுக்கு போன்னு அனுப்பிடுவார். பொண்ணா லட்சணமா அடக்கவொடுக்கமா இருக்கற வழியை பாரு” என்று உணவு மேஜையில் இட்லி வடகறி என்று ஊற்ற சுவைத்தார்.

   “எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேன். அதை மீறி ஞாயிறு பொண்ணு பார்க்க ஏற்பாடு பண்ணிருக்கிங்க.
   பெத்த கடமைக்கு தலைக்குனிவு வரக்கூடாதுனு பொண்ணு பார்க்க சம்மதிச்சிட்டேன்.

  நீ பி.எஸ்.சி பிசிக்ஸ் படிச்சாலும் உனக்கு எந்த ஜாதகமும் பொருந்த மாட்டேங்குது. இப்ப டிப்ளமோ முடிச்சவன் தான் செட்டாகுதுனு என்னை பிளஸ்டூ முடிச்சிருக்கறவனு தரகரிடம் பொய் சொல்லிருக்கிங்க. அதுக்கும் தலையாட்டி சிவனேனு இருக்கேன். இதுக்கு மேல என்ன அடக்கம் வேண்டும்? என்னவோ படிச்ச மாப்பிள்ளையை கட்டி வைக்கிற பில்டப்.

   உங்களுக்கு நான் சம்மதம் கொடுக்காம நடிச்சி ஓடி ஒளியற மாதிரி சந்தேகம் வந்தா எதுக்கு இந்த வரனை பார்க்கணும். இதை விட பெட்டரா பார்க்கலாமே. உங்களுக்கே இந்த வரன் டம்மினு தெரியுதுல? பிறகு எதுக்கு பொருத்தம் பத்தலை கட்டம் சரியில்லை. அதுயிதுனு என்னை இம்சிக்கறிங்க. கேட்டா இந்த வருஷத்துல கல்யாணம் பண்ணலைனா எனக்கு கல்யாண யோகமே இருக்காதுனு இஷ்டத்துக்கு கதை விடறது.” என்று பொரிந்து தள்ளினாள்.
 
   “இங்க பாரு அம்மு. நான் இப்ப தான் வீடு கட்டி, வாடகைக்கு விட்டு வசதி வாய்ப்பு வந்துச்சு. உங்க அக்காவை கல்யாணம் கட்டக்கொடுக்கறப்ப ஒரளவு கையில காசுயில்லை.
    அஞ்சனாவை ஹார்டுவோர்ஸ் கடை நடத்திய சரவணனுக்கு கட்டி கொடுத்தோம். இப்ப உன்னை படிக்க வச்சது ஏதோ நீ செய்த புண்ணியம்.
   உங்க அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடனை அடைக்கவே சரியா இருந்ததால, உனக்கு கல்யாணம் பண்ணறது தள்ளிப் போயிடுச்சு. இப்பவே வயசு 22 ஆகுது. உங்கக்கா எல்லாம் 20 வயசுல கல்யாணம் கட்டிக் கொடுத்தேன்.

  இப்ப இருக்கற நிதிநிலைமையில கடன் வாங்காம நல்ல வரன் என்றால் இந்த பையன் தான்.

   படிப்பு டிப்ளமோ என்றாலும் சொந்தம்மா மளிகைகடை வீடு வாசல் இருக்கு. ஈ எறும்புக்கு கூட தொந்தரவு பண்ணாதவன். குணத்துல திருவண்ணாமலை தீபம் போல சுடர் விடுவானாம்.
பேசறது சக்கரகட்டியா இருக்குமாம். இதுக்கு மேல என்ன வேண்டும்.

  உங்க அக்காவுக்கு நகை நட்டு சீர்வரிசை செய்தது போலவே உனக்கும் போடுவேன். இந்த பட்டி தொட்டில அக்காவை உன்னை ஒரே ஊருக்கு போற வழில கட்டிக்கொடுத்தா வயசானப்பின்ன நானும் உன் அம்மாவும் வந்து பார்த்துட்டு போக சௌவுகரியமா இருக்கும்.

  அதை விட்டுட்டு படிச்ச பி.எஸ்.சி படிப்புக்கு பட்டணத்து மாப்பிள்ளை, கழுத்துல அட்டை போட்டிருக்கறவன், கம்பியூட்டர் பெட்டி தட்டறவன் மாப்பிள்ளையா வேண்டுமின்னா நாக்கு வழிக்கணும்.

  நம்ம இனத்துல படிச்ச படிப்புக்கும் தகுதிக்கும் சேர்த்து நகையும் கேட்பாங்க. இதே மளிகைக்கடை வச்ச பையன் என்றால் அக்காவுக்கு போட்டது மாதிரி சொல்லி திருப்தியா போட்டு சிறப்பா கட்டி வைப்பேன்.

  நம்ம தகுதிக்கு மீறி கட்டி கொடுக்க ஆசைப்பட்டா நான் கடன்காரனா போகணும். பொண்ணு கொடுத்த இடத்துல கைகட்டி நிற்கணும். இதே இங்கனா ஒரே பையன் அம்மா மட்டும். அக்காவும் சென்னையில கட்டிக்கொடுத்திருக்காங்க. அதனால அடிக்கடி வந்து பிக்கல் பிடுங்கல் இருக்காது
நீ சௌவுகரியமா இருப்ப. நல்லா யோசித்து தான் முடிவெடுத்திருக்கேன்.” என்று பத்தாவது முறையாக மூளைச்சலவை செய்தார் தேவராஜ்.

    ஏற்கனவே அஞ்சனாவை படிக்க வைக்காமல் அமிழ்தினியை படிக்க வைத்ததற்கே அஞ்சனா சலங்கை கட்டி ஆடிவிட்டாள். இதில் தந்தையின் கைக்கு மீறிய சம்பந்தமாக தனக்கு பார்க்கின்றார்கள் என்றால் அஞ்சனா சந்திரமுகி 2 படத்தில் நடித்த கங்கனா ரனாவத்-தை போல அவதாரம் எடுப்பாள். அந்த முகத்தை காணமுடியுமா?
  
    தந்தையும் மூச்சு பிடிக்க வரனை புகழ்ந்து பேசி தள்ளுகின்றார். மளிகைக்கடைக்காரன், டிப்ளமோ படிப்பு என்றதிலேயே அமிழ்தினி மனம் அதிருப்தி அடைந்தாளென்றால் இல்லை.
  
    ஆனால் ஏதோவொன்று ‘என்னவோ பண்ணுங்க’ என்ற ரீதியில் இருந்தாள்.

   தந்தையிடம் அதற்குமேல் மல்லுக்கட்ட மனமில்லை.

    திருமணம் என்பது நிறம், உயரம், பணம், அந்தஸ்து, நகைநட்டு, ஜாதி, படிப்பு, வேலை, எந்தவூர், எந்த மாவட்டம், பழக்கவழக்கங்கள், என்று பலதரப்பட்டதை எண்ணி முடிவெடுக்கிறார்கள். மகளுக்கு பிடிகின்றதா என்று துளியும் நினைப்பதில்லை.

  ‘முதல்ல மாப்பிள்ளையை பார்த்தா தானே பிடிக்குதா? இல்லையா? என்று கூற முடியும். தான் இன்னமும் அவனை காணவில்லையே.

      அர்ஜுன் பெயர் மட்டும் நன்றாக தான் உள்ளது. அர்ஜுன் அமிழ்தினி என்று நினைத்தவள் பெண் பார்க்க செல்லும் நாட்களுக்கு பல நூறு தடவை சலித்துக் கொண்டாள்.

    முதலில் அக்கா விட்டுக்கு சென்று பிறகு வீடு திரும்பும் போது தாய் தந்தையர் ஒரு நாடககூத்தை ஆரம்பிப்பார்கள்.

  அதில் தான் தலையாட்டி பொம்மை. அக்கா மாமா எல்லாம் துணைநடிகர்கள். பொண்ணு பார்க்கும் வைபோகத்தை எண்ணி பார்த்ததிற்கே கண்கட்டியது.

     இரண்டு நாட்கள் உள்ளதால் இன்று அன்னையின் சமையலை ருசிப்பார்க்க ஓடினாள்.

  எப்பவும் தந்தை உண்டப்பிறகு வெளியே சென்றிடுவார்.
   அதனால் ஆற அமர பொறுமையாக சாப்பிடுவாள். தாய் சந்திரிகாவும் தட்டை எடுத்து வந்து சாப்பிட, “நீங்க இன்னும் சாப்பிடலையா அம்மா.” என்று கேட்டாள்.

  “உங்கப்பா சாப்பிடறதுக்கு முன்ன நான் என்னைக்கு சாப்பிட்டுயிருக்கேன்.” என்று இட்லியை எடுத்து போட்டு சாப்பிட, “ஏன்ம்மா சாப்பிட்டா தான் என்னவாம்” என்று தட்டில் கோலமிட்டாள்.

   “கல்யாணம் பண்ணிட்டு வந்தப்புதுசுல ஒரு தடவை அப்படி தான் சாப்பிட்டேன். உங்க ஐய்யம்மை அன்னைக்கு எனக்கு அறிவுரை என்ற பெயர்ல காது சவ்வு கிழிய வச்சிட்டாங்க. இன்னமும் அவங்க திட்டிய அமுத வார்த்தைகள் காதுல ஒலிச்சிட்டேயிருக்கு. அதுலயிருந்து எப்பவும் உங்கப்பா சாப்பிட்டு போனப்பிறகு தான் நான் சாப்பிடறது.” என்று தன் கதையை விளக்கினார்
  “ஐய்யம்மை தான் தவறிட்டிங்களா, இப்ப நீங்க உங்க இஷ்டத்துக்கு எப்ப வேண்டுமென்றாலும் சாப்பிடலாமே.” என்று கேட்டாள்.
 
   “ம்கும். அன்னைக்கு காதுல ரத்தவர்றவரை கேட்ட வார்த்தைக்கு பிறகு எனக்கு முன்னாடி திங்க முடியுமா. அப்படியே பழகிடுச்சு.” என்று தட்டை அலம்ப எடுத்து சென்றார்.

தட்டில் கோலமிட்டு பேசிய மகளிடம் “சாப்பிடுடி” என்று அதட்டவும் தவறவில்லை. “நான் எல்லாம் பசிச்சா சாப்பிட்டுடுவேன்.” என்று அம்மு கூற, “வர்றப்போற உன் புருஷன் சாப்பிடறதுக்கு முன்னாடியே நீ சாப்பிட்டு பாரு. உங்கத்தை என்ன போடு போடப்போறாங்கன்னு தெரியும். இங்க தான் வாய் கிழிய பேச முடியும். அங்கயெல்லாம் பேசமுடியாது.” என்றதும் அமிழ்தினிக்கு இப்பொழுதே கவலை தலைதூக்கியது.

    இன்று வெள்ளிக் கிழமை. நாளை சனிக்கிழமை அக்கா வீட்டிற்கு செல்ல வேண்டும். என்ன அதிசயமோ தந்தை அங்கு தங்க முடிவெடுத்திருக்கின்றார்.
 
   அக்காவை கட்டிக்கொடுத்து இந்த இரண்டு வருட வாழ்வில் அப்பா அம்மா அங்கே தங்குவது அரிதானது. அதுவும் தன்னையும் சேர்த்து குடும்பமாய் தங்க செல்வது ஆச்சரியமானது. எல்லாம் பொண்ணு பார்க்க செல்லும் மகிமை என்று முடிவெடுத்திருந்யாள். .     
    அங்கு சென்று ஒரு நாள் இருந்துவிட்டு, ஞாயிறு பெண் பார்க்க போகின்றனர்.
  யார் அவனோ? அர்ஜூன் என்ற பெயர் மட்டும் தெரியும். போட்டோ எதுவும் தரகர் தந்தையிடம் தந்ததாக நினைவில்லை. மாமாவிடம் தான் தரகர் தூரமாகயிருந்து அந்த அவனை சுட்டிக்காட்டியிருந்தாராம்  அக்கா கணவருக்கு பிடித்திருந்ததாக கூறி அப்பாவை அழைத்துவிட்டார்.

     கொஞ்சம் கலக்கமாக இருந்தது. தந்தைக்கு மட்டும் பிடித்திருந்து தனக்கு பிடிக்காவிட்டால்? திருமணத்தை மறுத்தால் அதற்கு செவி மடுக்க மாட்டாரே? சாப்பிட்ட தட்டை கழுவிக்கொண்டே சிந்தித்தாள்.
  சந்திரிகா வந்து, “எந்த உலகத்துலடி இருக்க? கழுவின தட்டை எத்தனை முறை கழுவிட்டு இருப்ப.

  இங்க வாடகைக்கு இருக்கறவங்களு தண்ணி பார்த்து செலவழிங்கன்னு உங்கப்பா கட்டுப்பாடா சொல்லறார். நீயென்னடானா தண்ணியை திறந்துவிட்டு விளையாடிட்டு இருக்க, போய் ஆகவேண்டிய வேலையை பாரு. உங்கக்கா போன முறை வந்தப்ப கொடுத்த ப்ளவுஸ் சேலை எல்லாம் தச்சி வாங்கிட்டியா? அதையெல்லாம் மறக்காம எடுத்து வை” என்று அதட்டினார்.

  அமிழ்தினியோ தண்ணீரை உதறி தன் துப்பாட்டாவில் துடைத்தபடி அவளது அறைக்கு வந்தாள்.

   அக்காவோ கூட்டு குடும்பம், சுடிதார் அறவே போடக்கூடாதென்று கூறிவிட்டார்கள். அதனால் எப்பவும் சேலை, இங்கே ஒரேயிடத்தில் தைய்த்து பழகியவளுக்கு அங்கே யாரிடமும் கொடுக்க பிடிக்காமல் மொத்தமாய் கொடுத்து விடுவாள். இங்கே தெரிந்த அக்காவிடம் தைய்த்து வாங்கி சென்று சேர்ப்பது வாடிக்கை தான்.

   ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தாள். அமிழ்தினி அறைக்கு வந்த சந்திரிகா, ஞாயிற்று கிழமை சேலைக்கட்டணும். இந்த புடவையை எடுத்து வை.” என்று பச்சை வண்ண பட்டை சுட்டிக்காட்டினார்.

   “எப்பவும் பச்சை மஞ்சள் சிவப்பு தானாம்மா? இதுல இவ்ளோ பெரிய பார்டர் வேற, கொஞ்சமாவது மனசாட்சியிருக்கா? பொண்ணு பார்த்துட்டு அங்கிருந்து பஸ்ல திரும்ப இங்க வரப்போறோம். இப்படி பட்டு கட்டி என்னை தம்பட்டம் அடிக்க சொல்லறிங்களா?

    ஏதாவது சிம்பிளா தான் கட்டுவேன். மளிகைக் கடைக்காரனுக்கு அது போதும்.” என்று பீரோவை துழாவினாள்.

   என்னவோ உடுத்தி தொலை. ஆனா நல்லதா உடுத்து” என்று சந்திரிகா சென்றுவிட்டார்.

கருநீலத்தில் பேன்ஸி சேரியில் கண்ணுக்கே தெரியாத அளவிற்கு ஜரிகையிருக்க, சாண்டல் கலந்திருந்தவையை எடுத்து பேக்கப் செய்திருந்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

25 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை-2”

  1. Kalidevi

   Avana partha vera ena solla poralo ivan vera hair cut shave pannama irukan sila perku nalla irukum athu but namma heroine pidikanume

 1. Avatar

  Yema amizhthini ne enna posukunu malligakadaikaran nu ku idhu podhum sollita nalaiku Avan tan unaku purushan adhu nyabagam irukatum….ipadilan posukunu pesida kudadhu manasu evlo feel agudhu theriyuma….
  Super super ka….. waiting for next ud….

  1. CRVS2797

   அட அம்மு….! மளிகைக் கடைன்னா அத்தனை கேவலமா..?
   சொந்த உழைப்பும்மா..
   எவன் கிட்டேயும் கை கட்டி சேவகம் பண்ணலை.
   உனக்கு அவன் தான்
   புருசன்… இது என்னோட ஆசிர்வாதம்.

 2. Avatar

  Super sis nice epi 👍👌😍 renduperum ponnu parkurathukey eppdi salichikurangaley edhula marriage panni love vandhu🙄 eppove kanna kattudhe 🤧 sis neenga eppdi dhan evangala serthu vaika poreengalo therinjika eagerly waiting next epi seekirama podunga pls 🙏

 3. Avatar

  ஆஹா. அவன் சொல்லும் போதே நினைத்தேன். அவனுக்கு படித்த பொண்ணு தான் வரும் என…சூப்பராக இருக்கு

 4. Avatar

  Iva enna pattunu maligaikadakaran nu sollitan pathathuku iva tweleveth mattum padichatha sonnathum poi ah aathadi ithu ellam arjun ku therincha avan yae no nu solliduvan pathathuku avan look ah partha la yae iva vera enna pesuva nu theriyala aga ponnu pakkura function gallata function ah maridumo

 5. Avatar

  இன்னும் எத்தனை வருஷம் ஆனா பையன உனக்கு பிடிச்சுருக்கான்னு கேக்க போறாங்களோ🤦😪😮‍💨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *