Skip to content
Home » கால் கிலோ காதல் என்ன விலை -20

கால் கிலோ காதல் என்ன விலை -20

அத்தியாயம்-20

மச்சான் கர்ணனோடு நடந்து வீட்டுக்கு வரும் நேரம் அமிழ்தினி மாத்திரையை எடுத்து ரஞ்சிதாவிற்கு கொடுத்து நீரை புகட்டினாள்.

"என்னாச்சு?" என்று கர்ணன் கேட்க, "வேறென்ன உங்கக்கா உண்டாயிருக்கா. நீ தாய்மாமாவா ஆகிட்ட" என்று சர்வசாதாரணமாக உரைத்தார்.‌

ஓரளவு அன்னையிடம் போனில் அக்கா பேசிய நேரம் கேட்க நேர்ந்தது. ஏதோ ஹாஸ்பிடல் போகின்றேன். கருவுண்டாகி இருக்க வாய்ப்புண்டு என்ற பேச்சு செவியில் விழுந்தது‌. ஆனாலும் இரண்டு மாதம் நிறைவுற்ற பின் ஊருக்கு சொல்லிக்கலாம் என்று இளவழகி கூறியிருந்தார். கிராமத்தில் கண்ணுப்படும் என்ற மூடநம்பிக்கை. ஒருவர் கண் போல மற்றவர் கண் இருக்காதே என்பார்‌.

அதோடு தம்பிக்கு சொன்னா மட்டும் வரமுடியுமா? மருமகளிடம் சொல்லிடறேன்’ என்று உரைத்தது நினைவு வந்தது.

"அண்ணி இந்த மாத்திரை தேதி காலாவதி ஆகிடுச்சு. இதை போடாதிங்க" என்று ஒரு மாத்திரை அட்டையை தனியாக எடுத்து வைத்தாள் அமிழ்தினி. 

“அதெல்லாம் பரவாயில்லை டாக்டர் தான் கொடுத்தாங்க. ஏற்கனவே இரண்டு நாள் போட மறந்துட்டேன்” என்று ரஞ்சிதா கூற, ”எதுயெதுல விளையாடறதுனு இல்லையா? சாதாரண ரவை, சேமியா, பிரெட் பேக்கெட் காலாவதி ஆனாலே சாப்பிடக்கூடாது. இது மெடிசின். அதுவும் நீங்க கர்ப்பமா இருக்கிங்க. இப்படியெல்லாம் கண்டிப்பா சாப்பிடக்கூடாது. டாக்டரிடம் நேர்ல போய் மெடிசின் டேட் எக்ஸ்பீரியட் முடிஞ்சிடுச்சு என்னயேதுன்னு கேளுங்க” என்று அறிவுறுத்தினாள்.

ரஞ்சிதாவிற்கு ‘வந்துட்டா பெரிசா படிச்ச பிள்ளையாட்டம். அங்க காத்திருந்து டாக்டரை பார்க்கவே நேரம் போகுது. இதுல இதுக்குன்னு ஒரு நாள் போய் கேட்கணுமா?’ என்று சலிந்தார்.

கர்ணனோ “தங்கச்சி சொல்லறது வாஸ்தவம் தானே. நாளைக்கு ஓரெட்டு கேட்டுக்கோ. வீட்ல தானே சும்மாயிருக்க” என்று கூறவும் வேறுவழியின்றி தலையாட்டிக் கொண்டாள் ரஞ்சிதா.

 அர்ஜுனுக்கு ''ஆமா தேதி முடியறதுக்குள்ள உபயோகப்படுத்தணும் அப்படின்னு பார்த்தா டிபார்ட்மெண்ட் கடையில் பொருட்கள்ல பாதிக்கிட்ட விற்காது. ஆனா பலபேர் கண்ணை மூடிட்டு வாங்கி கூடைக்குள்ள போட்டுட்டு போவாங்க." என்றான் எரிச்சலாய்.

“நீங்க அப்படி விற்பிங்களா?” என்று கேட்டதும், “அதெப்படி தெரிந்தே கொடுப்பேன். நான் விற்கற ஒவ்வொரு பொருளும் நேத்து பேக்கெட் போட்ட மளிகை சரக்கு, இன்னிக்கு சந்தைக்கு வந்ததா இருக்கணும்.

காய்கறி கூட அதுக்கு தான் தினமும் காலையில மெனக்கெட்டு ஓடுறேன். லாரிலயிருந்து இறங்கின உடனே வாங்கிட்டு வந்து வித்துடணும்.” என்றதும் அமிழ்தினிக்கு நிம்மதி உருவானது.

ரஞ்சிதமும் கணவரிடம் தலையாட்டிவிட்டு தம்பியும் ‘அதெப்படி காலாவதி ஆனதை விற்பேன்’ என்றதும் ரஞ்சிதா மருந்தை மாற்றிட முடிவெடுத்தாள்.

   மதிய உணவை தயார் செய்து பரிமாறவும், அமிழ்தினி சுவைத்தாள்.

ஆடு, கோழி, மீன், முட்டை, ஈரல், இறா என்று வகை தொகையில்லாமல் இலையில் பரிமாறினாள்.

அச்சோ நான் இதெல்லாம் சாப்பிட மாட்டேன் என்று கூறாமல் எல்லாவற்றையும் ருசிப்பார்த்தாள் அமிழ்தினி.

தன் அக்கா வீட்டில் கூச்சப்படாமல் எடுத்து போட்டு சாப்பிடவும் அர்ஜுனுக்கு சந்தோஷம் தான்.

மாலை ஆனதும் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு பிடித்து புழல் ஏரியை காண அழைத்து சென்றான். ரஞ்சிதாவின் தொல்லையால்....

முதலில் 'ஆமா அதென்ன பெரிய தாஜ்மஹாலா? ஒன்னும் தேவையில்லை' என்று நினைத்தான். 

“ஏன்டா வீட்லயே இருக்கவா கூட்டுட்டு வந்த. நாலு இடத்துக்கு கூட்டிட்டு போடா.‌” என்று வலுக்கட்டாயமாக கூறவும் சம்மதித்தான்.

சாய்வான குன்று போல இருந்ததில் ஏறினார்கள்.
இதான் புழல் ஏரி, செங்குன்றம்னு சொல்வாங்க. சென்னைக்கே குடி தண்ணீ இதுலயிருந்தும் போகுது.” என்றான்.

“தெரியும்” என்று அமிழ்தினி கூறவும் அர்ஜுன் முகம் நீர் சூழ்ந்த பக்கம் திரும்பியது.

‘தெரியலைனு சொல்லுதா. இல்லை ம்ம்’ கொட்டுதா? எல்லாம் தெரியும்னு மிதப்பு.’ என்று புலம்பினான். ஆனாலும் ஒருபக்கம் தெரிந்து வச்சியிருக்கறதுல என்ன தப்பு என்றும் மகிழ்ந்தான்.

ஆங்காங்கே காதலர்களும், குடும்பமாய் இவர்களை போல சிலர் வந்திருந்தனர். 

ஏரிக்கு வந்து நின்று புகைப்படம் எடுத்திடாமல் மாங்காய் பத்தை கேட்டாள்.

அர்ஜுன் விலை கேட்க ஒன்று இருபது ரூபாய் என்று மிளகாய் தூளை தூவி நீட்டினார்கள். சட்டை பையில் கையை விட்டவன் “என்னது? இந்த இரண்டு பீஸ் இருபது ரூபாயா? அநியாயம்” என்றான்.‌

அமிழ்தினி அச்சோ திருவண்ணாமலையில வளையல் வாங்கறப்ப வந்த பிரச்சனை மாதிரி இங்கேயும் ஆரம்பிக்கறார். என்று அவனிடம் “எனக்கு மாங்காயே வேண்டாம்.” என்று அர்ஜுனிடம் கூறிவிட்டு மறுத்தாள்.

20 ரூபாயுக்கு விற்காம பத்து ரூபாய்க்கா விற்பாங்க” என்று அந்த பெண்மணி கத்த, “அக்கா பல் கூச்சம் தெரியாம கேட்டுட்டேன். ப்ளீஸ் விட்டுடுங்க” என்றாள்.

அர்ஜுனின் கையை பிடித்து இழுத்தும் வந்தாள்.

“ஏய் என்னை ஏன்டி இழுத்துட்டு வர்ற? அந்த பொம்பள அநியாயத்துக்கு விற்குது. நம்ம கடையில் மாங்காய் கிலோ என்ன ரேட்டு தெரியுமா?” என்று கேட்டதும், “அய்யா சாமி ஒரு கிலோ இருபது ரூபாயாவே இருக்கட்டும். விட்டுடுங்க.. இனி வெளியே வந்தா சாக்லேட், மிட்டாய், மிக்சர், பிஸ்கேட் எதுனாலும் நம்ம கடையில் இருந்து எடுத்துட்டு வந்துடறேன். வெளியே சத்தியமா கேட்க மாட்டேன்” என்று கூறினாள்.

அவள் நம்ம கடையில’ என்றதுமே அர்ஜுனின் மனதில் குளுகுளுவென்று இருந்தது.
அதனால் அவனை அறியாமல் சீரான முத்து பற்கள் தெரிய சிரித்தான்.

“அம்மாடி… அழகா சிரிக்கறிங்க இந்த தாடிக்குள் உதடு பல்லு எல்லாம் புதைந்திருக்கு” என்றாள்.

அர்ஜுன் மனநிலை ஆனந்தத்தில் நிறைந்திருக்க, “ஏன் தினமும் உதட்டுல முத்தமிடும் போதும், உன் கன்னத்தை கழுத்துக்கு கீழே லைட்டா கடிக்கும் போது இந்த பல் உதடு இதெல்லாம் தாடில புதைந்திருக்கறது தெரியலையா?” என்று அவளது வலது கையை பிடித்து கதைத்தான்.‌

அமிழ்தினி இடது கையால் முகத்தை மூடினாள், அங்கு அந்தி வானம் சிவந்தது போல அவள் முகமும் சிவந்திருந்தது.

மெதுவாக ஓரிடம் அமரவும், "நீங்க நான் பயந்த அளவுக்கு இல்லை." என்றாள். 

அர்ஜுன் புருவம் சுருக்கி, ‘ஒரு வேளை என்னை முரடனா நினைச்சிட்டாளோ? இப்ப அப்படியில்லைனா அவ படிச்சதை என்னிடம் பகிர்வளா?’ என்று சிந்தித்தான்.

அவள் படித்தவள் என்பது சின்ன விஷயம் தான். ஆனால் தன் கரம் பற்றி மணமான ஒருத்தி தன்னிடம் சின்ன உண்மையை கூட மறைக்காமல் பகிர்கின்றாளென்றால், அர்ஜுன் அமிழ்தினி இதயத்தை வென்றதற்கு சமம் தானே.

அவன் அவள் வாயால் கேட்க நினைத்து தவம் கிடக்க, "நாமளும் ரஞ்சிதா அண்ணி மாதிரி இங்க மளிகைக்கடை வைக்கலாமா? கிராமத்துல என்ன முன்னேற்றம் அடைய முடியும்? இங்கன்னா உங்க கடின உழைப்புக்கு வியாபாரம் விற்குமே. அப்படியே அண்ணி வீடு பக்கத்துல இருக்கும். அத்தைக்கும் பொண்ணு பையன் பக்கத்துலயே இருந்தா சந்தோஷமா இருக்காது?" என்றாள். 

முதலில் தனிக் குடும்பம் பேச்சா என்று கையை விட்டான். அமிழ்தினி அதை உணரவில்லை‌. ஆனால் இளவழகியும் தங்களோடு அழைத்து வந்து சென்னையில் வியாபாரம் பெருக்க கூறியதால் லேசான நிம்மதி. ஆனாலும் அவள் கரத்தை பற்றியதை தொடரவில்லை.

“அக்கா சொன்னாளா?” என்றதும், ஆமென்று தலையாட்டினாள்‌.

“அவளுக்கு இங்க போரடிக்குன்னு அம்மாவையும் உன்னையும் பேச்சு துணைக்கு கூட வச்சிக்க பார்க்குது.

இதெல்லாம் சரிவராது.

நல்லதோ கெட்டதோ தங்கம் இருக்கற இடம் என் ஊரு. வைரம் கிடைக்கும்னு சென்னை பட்டிணத்துக்கு வந்து அலைய கூடாது. எனக்கு தங்கமே போதும்.” என்று எழுந்தான்.

“இல்லைங்க நீங்க நல்ல ஹார்ட் வொர்க்கர்” என்று கூற, “விருந்துக்கு அக்கா வீட்டுக்கு வந்திருக்கோம். நாளைக்கு நைட் கிளம்பிடுவோம்” என்று பேச்சை முடித்தான்.

அதை கூறும் போதே கழுத்து நரம்புகள் கோபத்தை கட்டுப்படுத்துவது தெரிந்தது.

'சரி" என்று அமிழ்தினி மௌவுனமானாள். 

இரவு குடல் குழம்பும் இட்லியும் வைக்க, அர்ஜுன் சாப்பிட்டான்.

அமிழ்தினியும் சாப்பிட்டாள்.

ரஞ்சிதா மருந்தை உட்கொள்ளும் போது அமிழ்தினி கூறியதால் குறிப்பிட்ட மாத்திரையை தவிர்த்தாள்.

 கர்ணாவோ "நாளைக்கு கடை அடைச்சிட்டு ஹாஸ்பிடல் வரமுடியாது. அதனால நீயும் உன்‌தம்பியும் தம்பி பொண்டாட்டியும் ஹாஸ்பிடல் போயிட்டு, வர்றப்ப இங்க இருக்கற 'ரேவதி ஸ்டோர்' துணி கடையில அவங்களுக்கு பிடிச்ச துணி எடுத்துக்கோ." என்று பணத்தை கொடுத்தார். 

விருந்து வைத்தால் புது துணிமணியை வழங்குவது செய்முறை. அதனால் கர்ணா கூறினார். ரஞ்சிதா பணத்தை எண்ணி பார்த்து தலையாட்டினாள்.

இரண்டு அறையில் கட்டில் மட்டும் போட்டுயிருந்ததில் அர்ஜுன் அமிழ்தினி உறங்க சென்றனர். வழக்கமாய் அக்காவை பார்க்க இங்கு வந்தால் அர்ஜுன் இங்கே தங்கி உறங்கினாலும், இன்று அமிழ்தினியோடு செல்ல, சங்கடமாய் இருந்தது. 

ஆனால் ரஞ்சிதா மாத்திரை போட்டு பத்தரை தாண்டி என்ன பேசுவதென்று, உறங்க அவர்கள் அறைக்கு சென்றாள். கர்ணாவும் கொட்டாவி விட்டு எழுந்தான். 

தனியறையில் அர்ஜுன் அமிழ்தினி ஒருவர் மாற்றி ஒருவர் பார்க்க, இரவில் ஆக்கிரமிக்கும் மன்மத பூதம் இருவருக்குள்ளும் ரசாயனத்தை நிகழ்த்தியது.

எந்தவிதமான வாக்குவாதமும் நிகழாமல் இருஉதடும் ஒன்றாய் சங்கமித்தது. கைகள் பிணைக்க 'என்னயிருந்தாலும் நம்ம வீட்டு வசதி இங்கயில்லை' என்று கிசுகிசுக்க, "ஆமா ஆமா தக்காளி பெட்டி, அரிசி மூட்டை, இரண்டு கால் எலி' என்று கூற, "நீ லேசுபட்டவ எலியில்லை பெருச்சாளி." என்று கடித்து கிள்ளி ஆளுமையில் சுகித்திட வைத்தான்.

அடுத்த நாள் ஏழு மணிக்கு எழுந்தான். அமிழ்தினி தான் அலாரத்தை நிறுத்திவிட்டு நன்றாக தூங்கட்டுமென விட்டாள்.

அமிழ்தினி எழுந்து ரஞ்சிதாவிற்கு உதவினாள்.

கொட்டாவி விட்டு தலையை கோதி வந்த அர்ஜுன், “அம்மு அர்ஜுனுக்கு டீ” என்றதும், சுட வைக்கிறேன் அண்ணி” என்று கூறினாள்.

‘அம்மு… ஒரே நாள்ல அம்முவா? அமிழ்தினி… அம்முனு தான் சொல்வாங்க. வேற வழி. என்னோட, என் அம்மாவோட, என் அக்காவோட இயல்பா கலந்துட்டா’ என்று தன்னவளை நோட்டமிட்டான்.

குளித்து முடித்து எங்கோ கிளம்பும் தினுசில் இருக்க, “எங்க கிளம்பிட்ட” என்றான்.

“ஹாஸ்பிடலுக்குடா” என்று அமிழ்தினி வாய் அசைக்க குரலோ ரஞ்சாதாவிடமிருந்து வந்தது.

"நேத்து மாத்திரை தேதி காலாவதி ஆனதா சொன்னதால புது மாத்திரை அட்டையை வாங்க போகணும். உங்க மாமா அப்படியே டிரஸ் வாங்க சொல்லியிருக்கார். நீயும் கிளம்பு. பத்தரைக்கு ஹாஸ்பிடல் போயிட்டு கடைக்கு போயிட்டு வந்துடலாம்" என்றார். 

அர்ஜுன் டீ குடித்து சாப்பிட்டு கிளம்பினான்.

ஹாஸ்பிடல் வரவும் கூட்டம் இருந்தது. அதை தாண்டி இவர்கள் சென்று பார்க்கவும், “தேங்க் காட் மாத்திரையை போடாம வந்திங்க. நேத்து மட்டும் இரண்டு பேஷண்ட் இந்த டேட் எக்ஸ்பீரியட் மாத்திரை போட்டதால ரத்தப்போக்கு வந்துடுச்சு.

இரண்டு பேரையும் கருவுல இருந்த குழந்தையும் சட்டுனு பார்த்துட்டோம்.

இங்க டாக்டர் மேல இருந்த கோபத்துல ஒரு நர்ஸ் குப்பைக்கு போன மாத்திரை அட்டை திரும்ப கொண்டு வந்து வச்சிடுச்சு. டாக்டர் பேரை கெடுக்க நினைச்சிருக்கு. ஆனா டாக்டர் நல்ல நேரம் சிசிடிவில அந்த நர்ஸ் குப்பையிலயிருந்து எடுத்து ஒளிஞ்சு வந்து வச்சதை பார்த்துட்டோம்.

எப்படியெல்லாம் பழிவாங்கறாங்க. சம்மந்தமேயில்லாம பிள்ளைதாச்சி பொம்பளைங்களை பலிகாட மாத்தியிருக்கு.

இதே அதீத ரத்த போக்கு ஏற்பட்டிருந்ததுனா என்னாகறது” என்று நேற்று நடந்தவையை இன்றும் கூற, ரஞ்சிதாவிற்கு அசதியில் மயங்கிய பெண்ணவளை கண்டு வயிற்றில் கை வைத்தாள்.

அமிழ்தினி கூறியதை புறம் தள்ளியிருந்தாள். தனக்கும் இந்த நிலை வந்திருக்கும் என்று புரிய கடவுளுக்கும் நன்றியை உரைத்தாள் ரஞ்சிதா.

கையோடு அம்முவிடம் அதை பகிர, “அதுக்கு தான் அண்ணி மருந்து மாத்திரை விஷயத்துல தேதி எல்லாம் கவனிக்கணும். ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது” என்றாள்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

19 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை -20”

 1. Avatar

  Super sis nice epi 👌👍😍 ranjitha oru apt ah na nathanar character pa nallavela amizdhini pecha ketanga🙄

 2. Avatar

  Super ammu. Arjun your educated wife. She wl.be helpful to you for your business, life, education etc. interesting sis

 3. Avatar

  அருமையோ அருமை.என்ன இயல்பான நடையிலும் எழுத்திலும் மனதைக் கவரும் வகையில் இருக்கிறது இந்த தொடர்.பிரவீணா கதை யென்றால் அவ்வளவு பிரமாதம்.

 4. Kalidevi

  oruthar life la real ah nadakura mariye eluthuringa sisy . sila per ippadi tha ethuku kova padanum munja kamikirathunu illama yoaikama pesurathu apram yosikurathu. but romance nu vantha mattum crt ah panunvanga apadi tha arjun antha thadi kulla face tha maranji iruka illa heart um konjam marachi vachi irukan pola

 5. Avatar

  வாவ்… சூப்பர்..! உண்மையிலேயே ரொம்ப நல்ல விஷயம் தான் அம்மு எடுத்து சொல்லியிருக்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *