Skip to content
Home » கால் கிலோ காதல் என்ன விலை -27

கால் கிலோ காதல் என்ன விலை -27

அத்தியாயம்-27

  ஊசிப்போட்டதால் குழந்தை அழுது கைகால்களை ஆட்டி சிணுங்க, குழந்தையை கையில் ஏந்தி ஆனந்தமாக ரஞ்சிதம் வந்தாள்.

   அமிழ்தினி சிறு கலக்கமும் அன்ன நடையுமாக ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்து விட்டு பின்னால் வந்தாள்.

  அமிழ்தினி கூறும் முன் ரஞ்சிதமோ, “அம்மா நீ மறுபடியும் பாட்டி ஆகப்போற. உன் மருமக உண்டாயிருக்கா. அர்ஜுன் அப்பாவாக போறான்.” என்று கூற, சர்க்கரையை மடித்து கொண்டிருந்தவன் கை நழுவ சர்க்கரை கீழே விழுந்து சிதறியது.

   இங்கே அம்முவிற்கு இதயமே அதிர்வலையை கிளப்ப, சுடிதார் துப்பட்டாவை இறுக பற்றினாள்.

   இளவழகியோ சீரக தண்ணீரை அருந்தி அப்பொழுது தான் கூடத்திலிருந்த மெத்தையில் அமர, மருமகளை கண்டு “அப்படியா?” என்று கேட்டார்.

    “அவளிடம் கேட்கறிங்க அவளே பேபேன்னு முழிக்கறா. ஆஸ்பிடல் வாடை குமட்டவும் வாந்தி எடுத்து மயங்கிட்டா, டாக்டர் என்கிட்ட தான் முதல்ல சொன்னாங்க. கண்விழித்த இவளிடம் அவங்க சொன்னதும், இதோ இப்படி தான் முழிச்சுட்டு வர்றா‌.” என்றவள் அர்ஜுனை எட்டி பார்த்து அவன் கடையில் நிற்பதை கண்டு, “அம்மா அவனிடம் எப்படி சொல்லறதுன்னு அம்மு பயப்படறாப்ள தெரியுது‌.” என்று கிசுகிசுப்பாக கூறினார்.

  “ஆமா அவன் கிடக்கான். எது சொன்னாலும் முகத்துல காட்டிடாத பாவணை.” என்று மருமகளை உட்கார வைத்து உச்சி முகர, அர்ஜுன் வந்தான்.

  மெதுவாக எழுந்து, “எனக்கு தெரியாது. அங்க போனப்பிறகு தான் டாக்டர் சொன்னாங்க” என்று திக்கி திணற, “சந்தோஷம்.” என்றவன் லேசாக சிரிக்க முயன்றான்.

   “சுடிதாரை மாத்து வாந்தி எடுத்தல்ல” என்று அவர்கள் அறைக்கு செல்ல ரஞ்சிதம் அம்முவை விரட்ட, அம்முவும் வாந்தி எடுத்த உடை என்றதால் மாற்ற செல்ல, அர்ஜுன் பின்னாடியே சென்றான்.‌

இருவரும் தங்கள் சந்தோஷத்தை பகிர எண்ணி மற்றவர் சிரித்தனர்.

 ஆனால் அறைக்குள் “நான் சொன்னதை கேட்க கூடாதுன்னு முடிவோடு இருக்க அப்படி தானே அமிழ்தினி.

   படிச்ச நம்மிடம் ஆர்டர் போடறானு என்னை முட்டாளா நினைக்க வச்சிட்ட.” என்று ஆரம்பிக்கவும், “இல்லிங்க எனக்கு தெரியா..” என்று கூறியவளிடம் ஆவேசமாக மாறி அடுக்கி வைத்து துணிகளை களைத்தான். அதில் அவன் சாப்பிட சொன்னா எள்ளுருண்டை பாக்கெட் பிரிக்கப்படாமல் இருந்தது.

  “நான் சொன்னதை கொடுத்ததை அசட்டையா நினைச்சிட்ட.

  உன் உடலுக்கும் கெடுதல் வந்திடக்கூடாதுன்னு தான் மருந்து மாத்திரைனு தவிர்த்து லூசு மாதிரி இயற்கையான உணவா தந்தது.
  நீ படிக்காத முட்டாள்னு என்னை ஏமாத்திட்ட‌.

   ஏற்கனவே நாம படிக்காத பொண்ணுன்னு சொல்லி ஏமாத்தியதுக்கும் மாங்கா மடையனா தலையாட்டினான். நம்ம இழுத்த இழுப்புக்கு வந்துடறான்னு எகத்தாளம் தானே?” என்று பல்லை கடித்து கர்ஜிக்க, அம்மு மறுப்பாய் தலையாட்டினாள்.

   “பின்ன என்னடி அவசரம் பிள்ளையை பெத்துக்க? நானே கடனா போகுதுன்னு மூச்சு விடமுடியாம திணறுறேன். இதுல கூடுதலா செலவு இழுத்து வைக்க? முதல்லயே சொன்னேன்ல இப்ப குழந்தை வேண்டாம்னு. சொன்னேனா இல்லையா” என்று நெருங்கி வந்து கேட்க, கண்ணீரை தான் உகுத்தினாள்.

    “நமக்குன்னு வர்ற குழந்தை செலவு இல்லையே. வரவு தானே.

   எத்தனையோ பேர் குழந்தை வரம் கிடைக்காம தவமிருக்காங்க. டெஸ்ட் டூயூப் பேபியாவது பெத்துக்கலாம்னு இல்லாத நரகவேதனை அடையறாங்க. கடவுள் தானா கொடுக்கறப்ப இப்படி பேசாதிங்க” என்றாள்.

    “ஏன்… நான் புதுசா பேசலையே. குழந்தை வேண்டவே வேண்டாம்னு சொல்லலையே. இப்ப இரண்டு வருஷம் வேண்டாம்னு தானே சொன்னேன்” என்றான்.
  
“ஒரே வார்த்தையில் திருப்பி திருப்பி பேசாதீங்க. எது எப்ப அமையும்னு நம்ம கையில இல்லை. அதோட குழந்தையே வேண்டாமின்னா என்னை அடியோடு தொட்டிருக்க கூடாது.” என்றவள் முகத்தில் கோபத்தை காட்டினாள்.‌

   “ஓ… நான் தொட்டது இப்ப குறையா சொல்லற.” என்றவன் அவள் முன் வந்து பேச வேகமாக அவள் கைகள் அடிவயிற்றை பிடித்தது.

இப்படியான நேரத்தில் தான் அக்கா அஞ்சனாவுக்கும், மாமா சரவணனுக்கும் சண்டை ஏற்பட்டது. கணநேரம் கோபத்தில் சரவணன் தள்ளிவிட காலை பிடித்தாள் அஞ்சனா. அன்று லேசான குழப்பத்தில் வேறு இருந்ததில் காலை உதற, அக்கா வயிற்றில் பலமாய் பட்டு கரு கலைந்ததாக அஞ்சனா முன்பு உரைத்தது. அந்த பயத்தோடு அவள் முன்னெச்சரிக்கையாய் பாதுகாக்க அர்ஜுனுக்கு சினம் துளிர்த்தது.

“உருவானதை அழிக்கற அளவுக்கு கெட்டவன் இல்லைடி நான்‌. ஆனா என்னை அந்தளவு மனுஷ தன்மையே இல்லாதவனா நினைச்சிட்டல்ல” என்று வெளியேறிவிட்டான். அவள் அர்ஜுனை நிறுத்தி நிதானமாக பேசி புரிய வைக்க முடியவில்லை. அவளுக்கு இருந்த அசதியில் அவனிடம் வாதம் செய்யவோ பேசவோ தெம்பில்லை.

   ஆனால் நியாயப்படி அம்மு கோபம் கொள்ள வேண்டியது. அவள் மீதும் சிறு தவறு உள்ளதாக கருதினாள்.

  இவன் கூறியதை மீறி, இந்த பாக்கெட்டை திண்ணாமல் கைவிட்டாள். இந்த அவசர காலத்தில் கொஞ்சம் போல சேமிப்பை ஈட்டிவிட்டு, பிள்ளை பேறுகாலத்தை நினைத்தான். அவன் திட்டமிட்ட வாழ்வை முடிவெடுத்ததும் தவறில்லை.
  குழந்தையை வளர்ப்பவர்களே முடிவெடுக்க வேண்டும். அம்முவிற்கு குழந்தை என்ற ஏக்கம் வந்ததும் கணவன் கூறியதை கடைப்பிடிக்க மனம் மறுத்தது.

   என்னயிருந்தாலும் குழந்தை செல்வத்தை தடை செய்திடவே தாய் மனம் நினைக்கும். எப்பொழுது வருமென்ற ஆவலை ஒவ்வொரு புதுப்பொண்ணும் ஏங்குவார்களே.

  அர்ஜுனுக்கும் ஆசையில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. அவனுக்கு பேராசை உள்ளது.

   என்ன இங்கிருக்கும் சூழல் அவன் கழுத்தை நெருக்குவதாக உணர்ந்தான்.

  இத்தனை நாள் வீடும் கடையும் ஒரு வருட லீஸில் இருந்தது. அதனால் முன்கூட்டியே பணத்தை கொடுத்திருந்தான். போன மாதத்திலிருந்து லீஸ் முடிந்து வாடகை பணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

   பிரசவ செலவு, பெயர் சூட்டும் விழாவில் தங்க சங்கிலி, விழா முடித்தப் பின்னும் ரஞ்சிதா தடுப்பூசி அதுயிதுயென்று இளவழகி தான் செலவழித்தார். கர்ணா கொடுத்தாலும், அம்மா அழைத்து போவதால் இளவழகி தான் கொடுத்தார்.

   இதில் வீட்டு வாடகை, கடை வாடகை, கடைக்கு மளிகை சாமான் சரக்கு, காய்கறி என்று வாங்கவும் பணம் கையில் வாங்கி எண்ணுவதற்குள் பணம் மற்றவருக்கு உடனே கை மாறிவிடுகிறது.

  இதில் கண்ணில்படும் அனைத்தும் குழந்தைக்கு என்று வாங்க கையை மீறியது.

  கிராமத்தில் சொந்த வீடு சொந்த கடை, ஏதோ விற்றதில் மீதி சேமிப்பாக என்று காலாட்டி ராஜாவாக வாழ்ந்தவனுக்கு, கடனும் வியாபாரம் நடந்தும் கையை மீறிய செலவுகளும் மனவுளைச்சலை தந்தது.

    இதில் அமிர்தமாக அம்முவின் தாய்மை செய்தி ஏற்கும் மனநிலையை விட, கூடுதலாக கடனும் பொறுப்புமா கழுத்தை நெறிக்க தயாராக இருப்பதாய் தோன்றியது.

    அமிழ்தினி, “எனக்கு இந்த குழந்தை கடவுளுக்கு நிகர்’ என்பது போல பாதுகாத்தாள். தாய் தந்தையருக்கு இளவழகி போனில் கூற, மாறி மாறி சந்தோஷங்கள் அலைப்பேசி வாயிலாக பரிமாறப்பட்டது.

   அர்ஜுனுக்கு அம்முவின் மாமா சரவணன் அலைப்பேசி வாயிலாக வாழ்த்தினார்.

  “கொழுந்தியா இப்ப தான் பேசுச்சு. வாழ்த்துகள் பங்காளி. ரொம்ப சந்தோஷமா இருக்கு. பார்த்து பத்திரம் இங்க அவ அக்கா உண்டானப்ப தெரியாம சண்டையில் காலை உதறவும் குழந்தை கலைந்திடுச்சு. கொழுந்தியாள ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க. பெயர் சூட்டு விழாவுல பார்த்தப்ப ஈரக்குச்சி கணக்கா இருக்கு” என்றார்.

   நன்றி கூறி பத்திரமாக பார்த்துக் கொள்வதாக உரைத்து முடித்து கொண்டான்.

ஏனோ இவர்கள் சண்டையை வைத்து பயந்திருப்பது அவனாக புரிந்துக்கொண்டான்.

   பழக்கூடையில் இருந்த ஆப்பிளை நறுக்கி அம்மு முன் நகர்த்தி விட்டு “அக்கா நீயும் சாப்பிடு” என்று மறைந்தான்.

   ‘இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை’ என்று எண்ணினாலும் நறுக்கி வைத்த ஆப்பிளை விழுங்கினாள்.

ஊரில் மாமனார் தேவராஜன் தான் உடனடியாக வருவதாக போனில் தெரிவிக்க, “இல்லை மாமா பொறுமையா வாங்க. அவசரமில்லை” என்றான்‌.

   மருமகன் கூறினால் வீட்டிலே இருக்க முடியுமா? தாத்தா பதிவியில் இருக்க மகளை காண அடுத்த நாளே தயாரானார்.

   சந்திரிகா ஊறுகாய் முதல், பழங்கள் வரை கொண்டு வந்தனர்.

   நடக்கும் கூத்தை அர்ஜுன் வேடிக்கை பார்த்தான்.

   அமிழ்தினி தன் அக்கா பொண்ணை கொஞ்சி விளையாடும் போது, ‘அவளோட ஆசையை கேட்கவில்லையா?’ என்று அவன் மனம் அவனையே திட்டியது.

  ஆனால் அம்முவிடம் சரியாக பேசி நாலு நாள் கடந்துவிட்டது. அவன் அணைக்க வந்தப்போது குமட்டி வாந்தி எடுத்து விட்டாள்.

  அதிலிருந்து முற்றிலும் விலகி நின்று கொண்டான்.
  
   அந்தளவு லேசான பிரிவு அப்பொழுதே தலை துவங்கிவிட்டது.

   முகம் வாடி அம்மு இருக்க, இரவில் அவள் உறங்கியப்பின் வந்து அணைத்து கொண்டான்.‌

   அடிக்கடி மீண்டும் மருந்து மாத்திரையென்று செலவானது. அர்ஜுன் அம்முவின் தந்தையிடம் பணத்தை வாங்க மறுத்தான்.

  அவனுக்கான வீம்பு, ஈகோ தன் குழந்தைக்கு தானே மருத்துவம் பார்க்க வேண்டுமென்ற எண்ணம்.

  இதெல்லாம் இருக்க, தேவராஜனிடமிருந்து பத்து பைசா வாங்க கை செல்லவில்லை.

  அமிழ்தினி வாங்க முற்படும் முதல் நாளான்றே, “என்ன என்னால குழந்தைக்கு செலவு பண்ண முடியாதுன்னு நீயா முடிவு பண்ணிட்டியா?” என்று எகிறினான்.‌
  
   “ரஞ்சிதம் அண்ணிக்கு நீங்க தானே செலவு செய்திங்க. எனக்கு எங்கப்பா செய்யட்டும்” என்றதற்கு “ஒரு மண்ணும் வேண்டாம். அப்படி வாங்கின அப்படியே உங்க வீட்டுக்கு போயிடுடி.” என்றான்‌‌.

   அர்ஜுனை புரிந்துக்கொள்ள முடியாது தவித்தாள். இதில் கர்ப்பவதியாக தள்ளாட்டம் அசதி, குமட்டல் என்று படுத்தியெடுக்க, அர்ஜுனை கண்டு பயந்துப்போனாள்.

   அவனும் அடிக்கடி கடனை வாங்கி, கொடுத்து இருப்பு குறைவாவதை காண்கின்றாள்.

  என்ன தான் வியாபாரம் ஆனாலும் செலவு கூடுவதை தவிர்க்க முனைய, சமாளிக்க மட்டுமே முடிந்தது.

   அம்முவிற்கு சில நேரம் பழைய அர்ஜுன் தலை தூக்க மாட்டானா என்ற ஏக்கம் உருவாகும்.

  என்ன தான் தாண்டிக்குள் புதைந்திருந்தாலும்‌ அவன் அன்பு நேசம் அவளை மட்டுமே சுற்றியிருக்கும்.

இங்கு வந்தப் பிறகு பிரைவேஸி கூட குறைந்து விட்டது. கிராமத்திலும் இரண்டு அறைகள் கொண்ட வீடு முன்னே கடை என்று இருக்கும். ஆனாலும் அறைகள் கூடம், புறவாசலென்று நீண்டு கிடக்க அறையில் அவன் சிரித்தாலும் அணைத்தாலும் சற்று அறையெங்கும் மகிழ்ச்சி பிரசவிக்கும்.

  இங்கு ஒரு செங்கலுக்கு பக்கத்தில் மற்றொரு அறை ஹால் என்று பெட்டி பெட்டியாய் அறைகள் இருக்க, சத்தமாய் பேசினாலும் இளவழகி “என்னம்மா?” என்று கேட்கின்றார்.

  இதில் ரஞ்சிதம் அண்ணியரும் குழந்தை அழைத்து வந்து விட்டு செல்வார்கள்.

  அவள் மனதில் தோன்றியதை பகிர அவனிடம் ‘நீ முன்ன மாதிரி இருங்க’ என்று கூற துடித்தது.

   இதே எண்ணம் தான் அர்ஜுனுக்கும் இருந்தது. குழந்தை உருவானதும் என்னை இரண்டாம் பட்சமாக மதிக்கிறா. அவளுக்கு நான் வில்லனா தெரியறேன். எங்கம்மா என்னை டேமேஜ் பண்ணி பேச மட்டும் செய்வாங்க. இவ என்னை வில்லனா நினைச்சு என்‌மனசை உடைக்கிறா’ என்று உள்ளுக்குள் ஏங்குவான்.
 
  இதில் அடிக்கடி பீட்ரூட் ஜுஸ் ஆப்பிள் பழச்சாறு என்று கொடுத்திட அன்னையிடம் சொல்வான்.‌ காய்கறி கடை என்பதால் முட்டை பால் பீட்ருட் ஜுஸ், கலவை சாதம் என்று தினமும் சாப்பிட, நீங்களே சாப்பாடு செய்து போட்டா போதுமா? நாங்களும் எங்க மகளுக்கு சோறு செய்து போட்டு வளைகாப்பு நடத்தி, எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகப்போறோம் என்று வந்தனர் சந்திரிகா-தேவராஜன்.

    “அவ வந்தா கூட்டிட்டு போங்க” என்றான்.‌ இன்னும் மாமா என்று இயல்பாக வாயில் வராது.

  “ஏன்டா கிறுக்கு பிடிச்சிருக்கா.? வளைகாப்பு நடத்தினா அவ போகணும்” என்று இளவழகி எடுத்துரைக்க, அர்ஜுன் பார்வை மனைவியை தாக்கியது.

    “இல்லைம்மா.. இங்கேயே ரெகுலரா செக்கப் பார்க்கணும். அங்க பிரசவம் வேண்டாம். இங்க முடிச்சிட்டு போலாம்” என்று கூறினாள்.‌

   “அட அப்ப நெருக்கத்துல வந்துடலாம்” என்று மனதை மாற்றினார்கள்.

ஏழாம் மாதம் வளைகாப்பு வைத்து சொன்னதை போலவே அழைத்து சென்றனர்.‌

   அர்ஜுன் இங்கே ஏதோ ஒரு ஆதரவு குறைந்தது போல் உணர்ந்தான்.‌

   அம்மு இல்லாத அறை அவனை வாட்டியது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

16 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை -27”

 1. Avatar

  Arjun pazhaiya mathiri irukkanum ammu manasu yenguthu athae pola avan oda kobam aval.ah rombavae bayapada vaikuthu avan oda ennam thappu nu sollamaten aana athula aval oda virupam enna nu pakkanum la thadikara ippo feel pannu

 2. Avatar

  ரொம்ப ரொம்ப அழகான மளிகை கடைகாரனின் காதல் கதை படிக்கும் போதே நம்ம தெருவில் இருக்கும் ஒரு மளிகை கடை வைத்திருக்கும் குடும்பத்தோடு நாமும் பயணிப்பது போல் இருந்தது சகோதரி வாழ்த்துகள்

 3. Avatar

  Ama da irukura apo mugam kuduthu pesamatta neeya edhavadhu pirinchikuva…. Ipo ammu ponadhum feel panna vendiyadhu… Ivana solli kuthamaillai ivan manufacturing defect apadi…. Super 🥰Akka ….waiting for next ud….

 4. Kalidevi

  Ena tha kova patalum avanukum aasai iruku avan onum vendam sollalaye kolanthaiya ipothaiku konjam thalli podalamnu ninachan avalotha but ava sonnathukaga kova pattalum konjam santhoasa patu irukalam . Samadhanam pani irukalam arjun appale cut pani juice la potu koduka sonna pothuma

 5. Avatar

  Super super super super super super super super super sis waiting for next ud 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

 6. M. Sarathi Rio

  பேசாம இவன் திரும்பவும் கிராமத்துக்கே போயிடலாமே. சொந்த வீடு, சொந்த கடை, சொந்த வாழ்க்கை, சொந்த குடும்பம்ன்னு எல்லாமே நல்லாத்தானே இருந்தது.
  ஆனா, இப்ப பணப்ெபிரச்சினையாலேத் தானே இத்தனை சங்கடம்..
  அதை தவிர்க்கலாமே…

 7. Avatar

  ❤❤❤❤💛💛💛💛💛💛💙💙💙💙💙💚💚💚💚💚💚💚💚💚💚💜💜💜💜💚💚💚💜💜💜💜💜💜💜💜💜💚💚💚💚💚💚💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💛💛💛💛💛💛❤❤❤❤❤❤❤❤❤❤💜🎰💜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *