Skip to content
Home » கால் கிலோ காதல் என்ன விலை? -5

கால் கிலோ காதல் என்ன விலை? -5

அத்தியாயம்-5

  அமிழ்தினி எண்ணம் பொய் ஆக்காமால் அர்ஜுனை மணம் செய்து வைக்க தேவராஜ் ஆர்வமாய் இருந்தார். அதன் பொருட்டு மடமடவென நாட்கள் பார்க்கப்பட்டு திருமண தேதி குறிக்கப்பட்டது.

   இடைப்பட்ட நாட்களில் அமிழ்தினி அர்ஜுன் நம்பர் பரிமாறப்பட்டாலும் அர்ஜுனாக ஒரு முறை கூட  அழைக்கவில்லை.
   இளவழகி வாரத்திற்கு இரண்டு முறை போன் போட்டு அமிழ்தினியோடு கதைப்பார். கூடுதலாக சந்திரிகாவிடமும் பேசுவார். அப்படி தான் அமிழ்தினியோடு இரண்டு மூன்று முறை பேசினான்.

   முதலில் பேசக் கொடுத்துவிட்டப் போது, “நல்லாயிருக்கிங்களா?” என்று அமிழ்தினியாக கேட்டதற்கு “சௌவுக்கியம்ங்க” என்றான்.

  பதிலுக்கு நீங்க நலமா என்று கூட அவன் கேட்கவில்லை.

   நேரிடையாக, “எனக்கு இந்த பொம்பள பிள்ளைங்களோட பேசி பழக்கமில்லைங்க. சட்டுனு ஒரு பொண்ணை பார்த்து பேசு பழகுனு நம்பர் தந்தா எப்படி பேசறதுனு தெரியலை. அதனால தான் போன்ல பேச தயக்கம். ஒரு வேளை கல்யாணம் ஆனப்பிறகு இங்க வந்தா பேச வாய்ப்புண்டு” என்று தன் வாழ்நாளில் முதல் முறையாக ஒரு பெண்ணிடம் நீண்டவுரையாக பேசினான்.

   “எனக்குமே புதுசு. நானும் பேசலைனு தவறா நினைக்காதிங்க. அத்தை நல்லா பிரெண்ட்லியா பேசறாங்க” என்று மாமியாரை பாராட்டினாள்.

  “யாராவது ஒருத்தர் எதையாவது பேசிட்டு இருக்க மாட்டாங்களானு வீட்ல சுத்திட்டு இருப்பாங்க. இப்ப நீங்களும் உங்கம்மாவும் பேச கிடைச்சா விடுவாங்களா?” என்றான்.
  நிச்சயம் வேறு யாராவது கலகலவென் பேசுபவர்கள் இந்த வார்த்தையை உதிர்த்தால் நகைச்சுவையாக இருக்கும்.

  கடுகடுவென முகமும் புதராய் தாடி மீசை வைத்து கண்கள் என்னிடம் அநாவசிய பேச்சை பேசாதே என்று எட்டி நிறுத்தும் விழிகளும், இறுக்கமான உதடும் கொண்டு அர்ஜுன் பேசுவது என்ன ரகத்தில் சேர்ப்பதென்று தெரியவில்லை.

  இதற்கிடையே கடைக்கு ஆட்கள் வந்து மிட்டாய், எண்ணெய் என்று மாறி மாறி கேட்க வியாபாரம் பார்த்தபடி பேசுவதை புரிந்துக்கொண்டு, “கடையில வேலையா இருப்பிங்க வச்சிடறேன்” என்று துண்டித்தாள்.
 
  அர்ஜுன் ‘அதெல்லாம் இல்லிங்க பேசுங்க’ என்று கூறியிருந்தால் அமிழுதினி மனம் சமாதானம் ஆகியிருக்குமோ என்னவோ?
  
   “சரி” என்று அம்மு துண்டிக்கும் முன் அர்ஜுன் அலைப்பேசியை கத்தரித்தது அம்முவிற்கு திகைப்பு தான்.

   ஒரு அழகான பெண் பேசுவதே ஆண்களுக்கு பிடிக்கும். இதில் தான் அர்ஜுன் மணக்க போகும் பெண் என்றாலும் தன்னிடம் வழிய வந்து பேசாதது ஆச்சரியமடைந்தாள்.
  இந்த காலத்தில் இப்படியொருத்தனா? இல்லைனா டிப்ளமோ முடிச்ச பையன் என்றதால ஊர் உலகத்துல பசங்க எப்படி நடந்துப்பாங்கன்னு தெரியாதா? என்று சிந்தித்தாள்.

    அவள் தான் அர்ஜுனை பற்றி அதிகம் சிந்தித்தாள். அவனோ தினமும் விடிவதற்கு முன் காலை எழுந்து ஆரணி சென்று காய்கறி பெட்டியை வாங்கி,எடுத்து வந்து, ஆவணியாபுரத்தில் இறங்கி, வியாபாரம் பார்த்து, வயிற்றை நிரப்பி, அன்னையிடம் சில வாக்கு வாதங்கள் புரிந்து இரவில் நிம்மதியான உறக்கமென வாழ்க்கையில் கழித்தான்.

  காதலென்ற அன்(ம்)பை கைப்பேசி மூலமாக விதைத்திடாதவனாக இருந்தான்.

   அம்முவிற்கும் பெரிதாக அவன் பேசவில்லையே என்று வருத்தமில்லை. அவன் முதல் முறை யாரோ ஒருவனாக பார்த்த அன்று முதலில் முனங்கும் முகமும், அதன் பின் குரங்கு செயினை அபகரித்த அன்று தனக்காக பேசியதும், இவள் தான் பார்க்க வந்த பெண் என்று அறிந்தப்பின் அடிக்கடி அவளை பார்வையால் தாக்கி அம்புகளும் அன்று பார்தத பார்வை இன்றுவரை மறக்கவில்லை.
  
   சிலரின் பார்வை வாழ்நாளில் மறக்க முடியாதது. அதன் தாக்கம் அத்தனை எளிதில் மறந்திடாது. அத்தகைய பார்வையை வீசினான். அதிலிருந்து மீண்டால் மட்டுமே அவனுக்கு தன்னை மணக்க பேசி முடித்ததும் அவன் அதன் பின் தன்னிடம் போனில் கூட பேசாதது கருத்தில் பதியும்.

    அர்ஜுன் அக்கா ரஞ்சிதா மற்றும் மாமா கர்ணன் அவர்களும் ஒரு நாள் வந்து இளவழகியோடு திருவண்ணாமலைக்கு சென்று அமிழ்தினியை பார்த்து சம்பிரதாயத்திற்கு பூ வைத்து எங்கள் வீட்டு பெண்ணென்று பறைச்சாற்றிக் கொண்டார்கள்.
  
   ரஞ்சிதா அமிழ்தினியிடம் “அவன் நல்லா பேசறானா? ஒரு நாளைக்கு எத்தனை தடவை பேசறான்?” என்று இலகுவாக கேட்டார்.

  அம்முவோ மெதுவாக வலது கையில் சுட்டுவிரல், மோதிரவிரல், நடுவிரல், ஆள்காட்டிவிரல், என்று கைவிரலைவிரித்திட, “ஒரு நாளைக்கு நாளு தடவையா?” என்றார்.

‌ அமிழ்தகனியோ “இதுவரை மொத்தமே நான்கு முறை அழைத்து பேசியிருப்பதாக உரைத்தாள்.

  ரஞ்சிதா அமிழ்தினி பதிலில் ஆடிப்போனாள். அருகேவந்து, “என் தம்பி யாரிடமும் அவ்ளோ சீக்கிரம் பேசமாட்டான். ஆனா பேச ஆரம்பிச்சா நல்லா பழகுவான். அவன் தினமும் பேசலைனு வருத்தமா?” என்றதும் அப்படியெல்லாம் இல்லை’ என்று உண்மையை உரைக்க, அவள் சமாளிப்பதாக ரஞ்சிதா நினைத்து கொண்டார். ஏதேதோ சமாளிப்பும், தம்பியின் புகழ்மாலையும், பேசி தீர்த்துக்கொண்டார். அமிழ்தினியோ எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாள்.

  இப்படியாக நாட்களில் திருமணத்திற்கு காஞ்சிபுரத்தில் புடவை எடுப்பதற்கும் இளவழகி தான் வந்தார்.

   மாப்பிள்ளை வீட்டில் இளவழகி, ரஞ்சிதாவும், பெண் வீட்டில் அஞ்சனா, சந்திரிகா, தேவராஜ் என்று சென்றார்கள்.
 
   அன்று கூட பணத்தை கொண்டு வர நீயும் வாடாயென்று கேட்டதற்கு, என்னையும் அக்காவையும் நீ தானே வளர்த்த, அப்படியிருக்க இப்ப பணத்தை கொண்டு போக பாதுகாப்புக்கு நான் எதுக்கு? என்று முடித்து கொண்டான்.

     ஒருவழியாக திருமண பத்திரிக்கையை ஊருக்கும் சொந்தத்திற்கும் கொடுத்து முடித்து, திருவண்ணாமலையில் ஒரு  மண்டபத்தில் தாலிகட்ட வீற்றிருந்தான்.

  “ஏன் மாப்பிள்ளை தாடியை எடுத்திருக்கலாம்ல” என்று கர்ணா தங்க செயினை சரிப்படுத்தியப்படி கேட்டார்.

   “தாடி எடுத்தா மட்டும் அரவிந்த்சாமியா மாறிடுவேனா. போ மாமா” என்று சலித்தான்.

   அமிழ்தினியோ கண்ணை கசக்கவில்லை, அதே நேரம் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக வந்தாள். நாயகன் அர்ஜுனுக்கு எப்படிப்பட்ட மனநிலையில் வீற்றிருந்தானோ, அதை விட கொஞ்சம் நல்ல மனநிலையில் தான் அமிழ்தினி இருப்பதாக உறுதியாக சொல்லலாம்.
  
   அர்ஜுன் பேசியதை கேட்டவளுக்கு லேசான சிரிப்பு, உதடுவிரிந்து அவனருகே வந்தமர, அவரோ அவள் புன்னகையை பார்த்து வந்திருந்த கூட்டத்தை பார்த்து மிக நீண்ட பெருமூச்சு வெளியிட்டான்.
   அவன் மார்பு ஏறியிறங்க, கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான்.
 
    ஆளாளுக்கு பேச்சை வளர்த்து இன்னார் மகள் இன்னார் மகன் கைப்பிடிக்க போவதாக உரைத்தார்.
   தாலி செயின் கொடுக்கவும் அதனை வாங்கி பட்டென கழுத்தில் போட்டுவிட்டு தன் மாலையை சரிச்செய்வதில் மும்முரமானான்.

  போட்டோக்காரனே “அண்ண மெதுவா தாலியை பிடிங்க போட்டோவே எடுக்கலை. இப்படி ஸ்பீடா போட்டா எப்படி?” என்று கேட்டார்கள். அதன் பின் தாலியை அணிவித்ததாக போஸ் கொடுத்தான்.

    மாலை மாற்றும் போது மெதுவா மெதுவா போடணும், என்றதுற்கு அதை போலவே செய்தான்.

   “அண்ண கொஞ்சம் கொஞ்சமா சிரிங்க” என்று படுத்த, “தம்பி நான்  சிரிச்சாலும்  சிரிக்காட்டிலும் தாடியிருப்பதால தெரியாது.” என்றான்.

    அம்முவிற்கு அதை கேட்டு நகைப்பு தோன்றினாலும், எங்கே சிரித்தால் இந்த கடுகடுக்காரன் முகம் திருப்புவானோ என்று அவனுக்காக யோசித்தாள்.
   
     வாழ்த்துரை பேசியவரை கண்டுக்கொள்ளாமல் கையிலிருந்த  பூச்சண்டை வைத்து ஆராய்ச்சியாளனாக இருந்தான்.

   ரஞ்சிதா வந்து “டேய் சிரிச்சா தாடி கொட்டிடாது. கண்ணும் உதடும் மலர்ந்திருக்க, உன் மூஞ்சி பார்க்க லட்சணமா இருக்கும். இப்படி அமைதியா இருந்தா என்னடா அர்த்தம்?” என்று கிசுகிசுப்பாய் கடிந்திடவும் “இந்தா எனக்கு நடிக்க வராது. நான் கல்யாணத்துக்கு சந்தோஷமா தான் தலையாட்டினேன். இத்தனை நாள் நானும் அம்மாவும் ஏதோ வாழ்ந்துட்டோம். இப்ப இந்த பொண்ணை வச்சி வாழணும்னு ஏகப்பட்ட நினைப்பு மனசுல ஓடுது. நல்லபடியா வாழவைக்க வேண்டாமா? கல்யாணம்னா சந்தோஷம் மட்டுமா? கலக்கமும் இருக்கும். இதே பொண்ணு கலக்கமா இருந்தா ஒத்துப்பிங்க. பையன் இருந்தா சிரிசிரின்னை நச்சரிக்கறது.” என்று திட்டவும், அவன் பேசியதை கேட்ட அம்முவிற்கு ஒர் இதம் கிடைத்தது.
 
   “என்னவோ போடா.” என்று ரஞ்சிதா நகரவும், மாலையை சரிப்படுத்தியபடி பக்கத்திலிருந்தவளை பார்த்தான்.

   சாதாரண செயினை பறிக்கொடுத்தப்போது, அப்படி அழும் நிலையில் இருந்தாள். என்னிடம் அவள் வாழ்வே பறிப்போகுமே எப்படி சிரிக்கின்றாளென்ற ஆச்சரியம் கலந்து அவளை உற்றுநோக்கினான்.

   அவனுக்குள் அந்த நொடி ஒரு நிமிர்வும் எதையும் சாதிக்கும் ஆளாகவும் எண்ண வைத்தது.

   அதன் பின் வந்த மௌவுனங்களில் சிறு முறுவல் கூடியது.

    பெண் வீட்டுப்பக்கம் தான் மண்டபம் என்பதால், திருமணம் முடித்து, அங்கு சென்றார்கள்.

   இளவழகியும் ரஞ்சிதா கர்ணா எல்லாம் மாலை வரை அமிழ்தினி வீட்டிலிருந்துவிட்டு ஆவணியாபுரம் சென்றார்கள்.

  தனியறையில் லேசான அலங்காரத்தோடு இருந்த மெத்தையில் அர்ஜுன் வீற்றிருந்தான்.

   பின்னங்கழுத்தை தடவியபடி, அங்கும் இங்கும் நடந்தான்.
   அமிழ்தினியை அறைக்குள் விட்டுவிட்டு அஞ்சனா கிளம்பினாள்.
 
  தனது அறையில் தானே வெற்று கிரகவாசியாக உள்நுழைந்தாள். 
   அர்ஜுன் கையை பிசைந்து அவளை பார்க்க, பால் டம்ளரை அவனிடம் நீட்டினாள்.
 
   அதனை வாங்கிவிட்டு மேஜையில் வைத்திட, காலில் விழ தயங்கி நின்றாள்.
  தாய் கூறியதால் அசௌவுகரியமாக விழ குனியும் நேரம், “கால்ல எல்லாம் விழாத. அதென்ன கான்சப்டோ கேவலமாயிருக்கு.” என்றதும் அமிழ்தினி நிம்மதியானாள்.

  அவளுக்குமே எதுக்கு விழணும். என்ன சாஸ்திரமோ? ஒருவிதமான பிடிக்காமையோடு நின்றாள்.

   “இத்தனை நாள் போன்ல கூட சகஜமா பேசியது கிடைக்காது. இப்ப வந்து உன்னை தீண்டவும் அசிங்கமா இருக்கும். சட்டுனு உன்னோட இந்த மெத்தையில.” என்றவன் எப்படி சொல்வதென்று தவித்தான்.

  “இப்ப வேண்டாம்னா எனக்கும் வேண்டாம். நான் தப்பா எடுக்கலை. ரிலாக்ஸா இருக்கலாம்” என்று சட்டென உதிர்த்துவிட்டாள்.

   அர்ஜுன் நெற்றி சுருக்கி பார்க்க, “இல்லை… உங்கக்கா அர்ஜுன் எல்லாம் யாரிடமும் சட்டுனு பழகமாட்டான். கொஞ்சம் நாளாகும். பழகிட்டா நல்லா பார்த்துப்பான்னு சொன்னாங்க. நமக்குள் பழக்கம் குறைவு தான் அதான் சொன்னேன் ” என்று பார்வையின் பொருளுணர்ந்து கூறினாள்.

    “தூக்கம் வருதுன்னா தூங்குங்க.” என்றவன் தலையணையை தரையில் போட்டு படுக்க ஆரம்பித்தான். ரொம்ப நன்றி என்னை புரிஞ்சுக்கிட்ட என்ற எந்த வார்த்தை நீட்டலும் அங்கில்லை.

  அமிழ்தினியோ இவன் எந்த ரகமோ? தரையில வேண்டாம் கட்டிலில் படுக்க சொல்லலாமா? என்று கூறவந்தாள். ஆனால் ஒரு வார்த்தை கூடுதலாக பேசாதவனிடம்  தானாக பேசவும் தயங்கி மெத்தை ஓரத்தில் படுத்துக்கொண்டாள்.
 
   இது இவளது மெத்தை. எப்பவும் சௌவுகரியமாக படுத்து பழகியது. ஆனால் அதில் அவளே ஒடுங்கி படுத்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

20 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை? -5”

 1. CRVS2797

  அச்சச்சோ..! என்ன இது ….ரெண்டு பேரும் இப்படி எல்லா விஷயத்துலேயும் கட் & ரைட்டாவே இருக்கிறாங்க.
  ஒருவேளை, போக போக கமரகட்டு (இனிப்பு மிட்டாய்) ஆகுவாங்களோ..??

 2. Kalidevi

  Super epi fash ah pothu story ithuku apram tha love start aguma apo rendu perkum konja konjama purinjitu love come life start pana poranga . Nice pesina purinjika mudinga pesunga freeya

 3. Avatar

  Super sis semma epi 👌👍😍 edhunga rendum eppdi erukudhungaley enna design o🙄 kadavuley evangaluku nadula love vandhu onnu serndhu happa paavam author ji romba kashtam pa🤧

 4. Avatar

  கதை மாதிரி இல்லாம ஏதோ நமக்கு ரொம்ப நெருக்கமாக இருக்குறவங்க கூட பயணிக்குற மாதிரி ஒரு உணர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *