Skip to content
Home » கால் கிலோ காதல் என்ன விலை? -6

கால் கிலோ காதல் என்ன விலை? -6

அத்தியாயம்-6

அமிழ்தினி நள்ளிரவு புரண்டு படுத்தவள் தன்முன் இருந்தவனின் வதனத்தில் திடுக்கிட்டு எழுவும், அந்த மெத்தையில் அசைவு உண்டாகி அர்ஜுன் கண் திறந்தான்.

அமிழ்த்னி நெஞ்சு விம்ம தன்னை கண்டு பதட்டமடைவதை கண்டு, “கட்டில்ல முக்கால் வாசி ப்ரீயா இருந்துச்சு. கீழே படுத்து கஷ்டப்படறதுக்கு மேலேயே வந்துட்டேன். பயமாயிருந்தா சொல்லிடு. கீழே படுத்துக்கறேன்” என்று அவன் குரல் அந்த நள்ளிரவில் கணீரென தெளிவாக கேட்டது.

“இ.. இல்லை.. படுத்துக்கோங்க. நான் பயப்படலை” என்று படுத்துக்கொள்ள, அவனோ குப்புறப்படுத்து இருந்தவன் தலையை மறுபக்கம் திருப்பிக் கொண்டான். அமிழ்தினி படுத்துக் கொண்டாளே தவிர கண்களை உருட்டிக்கொண்டு உடலை குறுக்கிக்கொண்டு படுத்தவள் நெஞ்சில் கைவைத்து படபடப்பை தவிர்க்க முயன்றாள். அத்தனை பயம் அவன் முகத்தை நெருக்கமாய் கண்டதில்.

அவளது இதய சத்தம் அர்ஜுனுக்கு கேட்டுக்கொண்டு இம்சை செய்திருக்குமோ என்னவோ, “பயமாயிருக்குனா சொல்லு. இப்படி தூங்காம இருக்காத.” என்று இரண்டாம் முறையாக கூறவும், தன்னையே கடிந்தவளாக “இல்ல நெர்வஸா இருக்கு. பட் பழகிக்கறேன்.” என்று நிதானம் கொண்டு பதில் தந்து இமை மூடிக்கொண்டாள்.

அவனுமே பழகி தானே ஆகவேண்டும் என்பது போல அதே மெத்தையில் படுத்திருந்தான். ஒரு ஆறுதலுக்காவது ஏதேனும் பேசுவானென்று பார்க்க அவனோ எவ்வித பாதிப்பின்றி கிடந்தான்.

இமைகள் இறுக மூடியிருக்க ஒரு கட்டத்தில் தன்னால் உறக்கம் தழுவியது இமைகள்.

அடுத்த நாள் காலையில் எழுந்தப்போது அவளது சிகைகற்றை அவனது தங்க பிரேஸ்லேட்டில் மாட்டி இழுப்பட்டது, அதனை எடுக்கப் படாதபாடுபட்டாள்.

தன் கை பக்கம் ஏதோ கூச்சம் கொடுக்க சொரிந்தான்.

இறகை வைத்து கூச்சத்தை உண்டு செய்யும் ஏதோவொன்று தன்னை இஞ்சிக்கு கையை தூக்கி சொறிந்தான்.

பெண்ணவள் முடி இழுப்பட்டு “ஆஹ்” என்று அமிழ்தினி குரலில் அவன் இமை திறக்க, அவன் கண் முன் அருகே அழகான தரிசனம் கிடைக்கவும், “முடி முடி உங்க பிரேஸ்லெட்ல மாட்டியிருக்கு” என்றதும் அவனும் மெதுவாக எழுந்தான்.

அவளது சிகையை பிரேஸ்லெட்டிலிருந்து விடுவித்திட சட்டென துண்டாக்கினான்.‌ இரண்டு மூன்று சிகைகள் தலைவாரி உதிர்ந்ததை போல பாவித்து அவளிடமே கொடுத்தான்.

சுவற்றில் தொங்கிய கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான்.

அமிழ்தினியோ என்னயிவன் நாசூக்காக எடுத்து தருவான்னா பிச்சிட்டான்.’ என்று அதிர்வில் இருக்க, அர்ஜுன் எழுந்ததும், ஏதாவது வேண்டுமா? என்பது போல கேட்கின்றாளென எண்ணி, “நான் கொஞ்ச நேரம் தூங்கறேன். எழுந்தாலும் என்ன செய்யறதுனு தெரியலை.” என்று கூறவும், பல்லை கடிப்பதை காட்டிக்காமல் “தூங்குங்க. எழுந்ததும் வேண்டுமின்னா காபி கொண்டு வர்றேன்” என்று அவளும் எகத்தாளமாய் பதிலுக்கு கூறினாள்.

“காபி? இல்லை எனக்கு டீ தான் பழக்கம். ஏழுமணிக்கு கொண்டுவா” என்றான் அதிகாரமாக.

அவளும் சரியென்று தலையாட்டி முடித்தாள். அர்ஜுன் மீண்டும் குப்புறப்படுத்துக் கொண்டான்.

அமிழ்தினி முனங்கியபடி குளித்து முடித்து வெளிவரும் நேரம், சந்திரிகா “மாப்பிள்ளைக்கு காபி போடவாடி” என்று கேட்டு முடிக்க, “டீ தான் குடிப்பார். ஏழுமணிக்கு எழுந்துக்கறேன்னு சொல்லிருக்கார்” என்று அமிழ்தினி தலையை துண்டால் துவட்டியபடி கூறவும் மகளை ஆச்சரியமாக பார்த்தார்.

மகள் இத்தனை அன்னியோன்யமாக பேசியிருக்கின்றாளா என்று தாயுள்ளம் மகிழ்ந்தார்.

நிறைவான பார்வையோடு அவளுக்கு காபி கொடுத்து முடிக்க, குடித்தவளை, கணவரிடம் சுட்டிக்காட்டி மகள் பொறுப்பு வந்துவிட்டதாக கூறி மகிழ்ந்தார்.

“நான் சொன்னேன்ல அம்முக்கு நல்லபடியாக எல்லாம் மாறும்னு” என்று தேவராஜ் அகமகிழ்ந்தார்.

சந்திரிகாவோ “சந்தோஷமா இருந்தா சரி” என்று சமையல்கட்டிற்கு வரவும், ‘ம்கூம் பிடிக்குதோ பிடிக்கலையோ வாழ்க்கையை மாத்திக்கணும்’ என்று அஞ்சனா தாயிடம் சலித்தாள்.

“நீயென்னடி இப்ப சலிச்சிக்கற? பெரிய மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்?” என்று கேட்க, “போம்மா மாமியார் என் தலையை உருட்டி விளையாடறாங்க. ஏய் அம்மு நீயாவது முதல்லயே சுதாரிச்சிக்கோ” என்று கவலையாக கூறினாள்.

“என்னடி பேசற பெரிய மாப்பிள்ளை காதுல விழப்போகுது. ஏன் சின்ன மாப்பிள்ளை காதுல விழுந்தாலும் தப்பு தான். குடும்பத்தை இப்பவே பிரிக்கறதா நினைப்பாங்க.” என்று திட்டவும், அஞ்சனாவோ என்னவோ சொல்லுங்கள் என்று காபியை பருகினாள்.

அமிழ்தினியோ காபி பருகியவள் “இரண்டு நாள் கழிச்சு, நான் இல்லாம ஜாலியா இருப்பிங்க இல்லை. நான் புது இடத்துல கஷ்டப்படணும்.” என்று அம்மு ஆரம்பிக்கவும், “ஆமாடி நானும் எங்கப்பா அம்மாவை விட்டுட்டு வந்தவ தான். இதெல்லாம் பொண்ணா பிறந்தா அனுபவிச்சி தான் ஆகணும். சும்மா கண்ணை கசக்கிட்டு மாத்தி மாத்தி இரண்டு பேரும் மூக்குறியாம கிச்சன்லயிருந்து நடையை கட்டுங்க.

இந்தா இவளை இன்னும் இரண்டு நாள் இருந்துட்டு போடினு சொன்னா, அய்யோ அம்மா அங்க போட்டது போட்டபடி இருக்கு போகணும்னு கால்ல சுடத்தண்ணி ஊத்தினாப்ல பேசுவா. நீ ஆறு மாசம் கழிச்சு அத்தக்கு முடியலை. வீட்டு வேலை எல்லாம் நான் தான். நான் இல்லைனா வீடே சுத்தாதுனு கதை விடுவ.

இங்க இப்ப இப்படி தான் பேசுவிங்க. புருஷன்மார் தலை தெரியவும் விழுந்தடிச்சி ஓடுவிங்க” என்று குறைப்படவும் “அஞ்சனா” என்று சரவணன் கூப்பிட, “இதோ வர்றேங்க” என்று ஓடினாள்.

அம்மு சிரிக்க, “சிரிக்காதடி, கொஞ்ச நேரத்துல டீ எடுத்துட்டு நீ ஓடுவ” என்று சொல்லி அகலவும், சந்திரிகாவோ “டீத்தூளை போட்டு கொதிக்க விடு” என்று வேலை வாங்கவும், “நான் கல்யாண பொண்ணு நீயே செய்மா” என்று தோளைக்கட்டிக் கொள்ளவும், சந்திரிகாவோ “கல்யாணம் ஆகிடுச்சு புதுப்பொண்ணு எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். டீத்துளை போடு” என்றதும் அம்மு சலித்தபடி கொதிக்க வைக்க ஆரம்பித்தாள்.

“இரண்டு நாள்ல இந்த வீடே வெறிச்சோடி கிடக்கும். உங்கப்பாவாது வெளியே போயிடுவார். நான் இங்கிருந்து அந்தா திருவண்ணாமலை பாதையை தான் வெறிச்சிட்டு உட்கார்ந்திட்டு இருக்கணும். எங்களுக்கு சந்தோஷம் நிம்மதி தரணும்னு நினைச்சா, போறயிடத்துல ஒரு அவமதிப்பு சொல்லும் எடுக்காத. பார்த்திரு உங்கப்பா வேற பிளஸ்டூ என்று சொல்லிட்டார். படிச்சவளாட்டும் பேசிட்டு முழிக்காத. அப்படியே உளறினா அவங்க சொல்லி தெரியும் இவங்க சொல்லி தெரியும்னு சமாளி. அதுக்கு பிறகு வீட்டுக்குள்ளயே இருந்தா நமக்கு என்ன படிச்சோம்னு நமக்கே தெரியாது.” என்று புலம்பினார் சந்திரிகா.

அம்முவிற்கு லேசான முகவாட்டம் வந்தது.
உண்மை தானே அக்கா எல்லாம் என்ன படித்தாளென்று அவளுக்கே இப்பொழுது தெரியாது. அந்தளவு வீடு குடும்பம் என்று ஒன்றிவிட்டாள்.

கன்னத்தில் கைவைத்து சிந்தனையில் கிடந்தவள் காதுக்குள், “அமிழ்தினி அமிழ்தினி” என்று எங்கோ யாரோ கூப்பிடுவது கேட்க திரும்பினாள்.

அங்கே அர்ஜுன் சன்னமான குரலில் அழைத்தான்.

அவன் கூப்பிட எழுந்து அவனருகே வந்தாள்.

“கூ..கூப்பிட்டிங்களா?” என்று கேட்க, “டீ வேண்டும்” என்றதும் அம்மு சமையல் கட்டுபக்கம் சென்றாள்.

“அம்மா அவரு டீ கேட்கறார்” என்றதும் கொதிக்க வச்சிட்டு அப்படியே போயிட்ட. நான் தான் ஆப் பண்ணினேன். பால் கலந்து கொடு” என்று சந்திரிகா கூறவும், அட டீயை அடுப்புல வச்சிட்டு மறந்துட்டேனே என்று சென்றவளிடம், “இதே போல அங்கயிருந்தா என் தலை உருளும்.” என்று சந்திரிகா புலம்பினார்.

அம்மு டீ கலந்து அர்ஜுன் இருந்த அறைக்கு நுழைந்தாள். “சாரி இங்க அம்முனு கூப்பிடுவாங்களா அமிழ்தினினு நீங்க கூப்பிடவும் சட்டுனு நினைவு கலையலை” என்று கூறியவளிடம், போனை எடுத்து பார்த்தான். அதில் அமிழ்தினி என்று இருந்தது. “உன் பெயர் அமிழ்தினி என்று தான் சேவ் டண்ணிருந்தேன். அம்மு?” என்று புருவம் சுருக்கினான்.

“நிக் நேம். அமிழ்தினி அலைஸ் அம்மு” என்று புன்னகை முகமாக கூறியதும், “ஓ செல்லப்பெயரா?” என்று டீ குடிப்பதில் ஆர்வமானான்.

“ம்ம்.. எப்பவும் அம்முனு கூப்பிடுவாங்க. நீங்க அமிழ்தினி என்றதும் சட்டுனு நினைவு வரலை. அந்தளவு அம்மு தான் பேமஸ்.” என்று தன் பெயர் பெருமையை கூறவும் அர்ஜுனோ சூடான டீயை ஊதி குடித்து கொண்டிருப்பதே முதன்மையானதாக பாவித்தான்.

அமிழ்தினிக்கு சங்கடமாக போகவும், அர்ஜுனிடம் “டீ நல்லாயிருக்கா? நான் போட்டது” என்று கூறினாள்.

“எங்கவூர் பஸ் ஸ்டாப்ல இருக்கற டீக்கடை டீ மாதிரி இருந்துச்சு” என்றவனின் பதிலில் நஸ்லாயிருக்குனு சொல்லறானா நல்லாயில்லைனு சொல்லறானா? என்று புரியாது விழிக்க, அவள் கையில் டீ டம்ளரை வைத்தான்.

அவளோ அவனை பார்த்து டம்ளரை பார்த்து முடிக்க, அர்ஜுன் ஜன்னல் வழியாக திருவண்ணாமலையை காண அம்மு டம்ளரை வைக்க சமையல்கட்டிற்கு சென்றாள்.

“மாப்பிள்ளை என்னடி பண்ணறார்?” என்று சந்திரிகா கேட்க, “திருவண்ணாமலை கோவிலை ஜன்னல் வழியா பார்த்துட்டுயிருக்கார்.” என்று நக்கலாய் கூறினாள்.

தேவராஜோ “அதை ஏன் ஜன்னல்லயிருந்து எட்டி எட்டி பார்க்கணும். சாப்பிட்டு முடிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வந்துடுங்கம்மா. முதல் முறை கோவிலுக்கு சேர்ந்து போனா நல்லது” என்று கூறவும் அம்முவோ ‘அவரே என்ன செய்யறதுனு தெரியாம ஜன்னலில் வேடிக்கை பார்த்தா என்னவோ திருவண்ணாமலை கோவிலை பார்க்க ஆசைப்பட்டதா நினைச்சிக்கிட்டாங்க’ என்று மலைக்க, சந்திரிகாவோ “அம்மு மாப்பிள்ளையை சாப்பிட கூப்பிடுடி. அஞ்சனா நீயும் உன் மாப்பிள்ளையை கூப்பிடு” என்று அனுப்ப இரு மகள்களுக்கும் தங்கள் துணையை அழைக்க சென்றார்கள். அஞ்சனா சரவணன் இருவரும் வந்தார்கள்.
அம்முவோ அர்ஜுனிடம் “அம்மா அப்பா சாப்பிட கூப்பிடறாங்க. நீங்க கோவில் மலையை பார்த்துட்டு இருந்ததை சொல்லவும் நம்மளை கோவிலுக்கு போகச்சொன்னாங்க” என்று கூறினாள்.

‌”இவயேன் அதையெல்லாம் சொல்லற என்பது போல நோட்டமிட்டான்.
ஆனாலும் நல்லது என்றது அர்ஜுன் மனம். அவனுக்கு இங்கே இருப்பது அசௌவுகரியத்தை தந்தது.
தன் வீட்டை தவிர்த்து எங்கும் தங்கியது இல்லை

புதுமாப்பிள்ளைக்கும் மூத்த மாப்பிள்ளைக்கும் உணவை வைக்க, “அம்மு நீ கோவிலுக்கு தனியா கூட்டிட்டு போவியா? இல்லை நாங்க வரட்டுமா?” என்று சரவணன் கேட்க, “மாமா எங்கவூரு எனக்கு வழி தெரியாதா?” என்று அமிழ்தினி கேட்கவும் பலத்த சிரிப்போடு சரிசரி என்று கூறிவிட்டார்.
கோவிலுக்கு என்றதும் சேலையுடுத்தி நகையை அணிவித்தார் சந்திரிகா.
அறைக்குள் வந்து “கோவிலுக்கு போகலாமா?” என்று அமிழ்தினி கேட்க, அவளது ஜிமிக்கியை பார்த்தவனது தலை அவனாகவே ஆட்டவைத்தது.
“ஏங்க அமிழ்தினி ஒரு நிழுஷம்” என்றதும் அமிழ்தினி பதட்டமாய் வந்தாள். இதென்ன மரியாதை? என்பது போல.

    தந்தை எதிரில் இப்படி ஏங்க வாங்க என்றால் தன்னை துப்பாக்கியால் துளைத்திடும் பார்வையை வீசுவாரே’ என்ற பதட்டம்.
 
   “கடையை ரொம்ப நாளா மூடிவைக்க முடியாது. எப்ப எங்க வீட்டுக்கு போகலாம்னு ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்டான்.

   ”நாளைக்கு என்னை கொண்டு வந்து விட போறோம்னு அம்மா அக்காவோட பேசிக்கிட்டாங்க. அக்கா மாமாவை அப்படியே ஆரணி பக்கம் கிளம்பறாங்க” என்று கூறினாள்.

  “நல்லது” என்றவன் நின்றயிடத்திலேயே அவளிருக்க அவனோ “நீங்க போங்க” என்றான்.

   அவ்ளோ தயங்கியபடி “எங்க அக்காவை மாமா எல்லாம் வா போனு தான் பேசுவார். நீங்க இப்ப ‘நீங்க போங்க’ன்னு என்னை சொன்னா அவ சிரிச்சி கிண்டல் பண்ணுவா. அதோட வித்தியாசமா தெரியும். நமக்குள்ள ஒன்னும் பேசிக்கலைனு சொல்லாமலே தெரிந்திடும். அதோட நான் உங்களோட வயசுல சின்னவ தான்.” என்று கூறிவிட்டு பயத்தோடு கண்கள் படபடப்பை விடாது கால் பாத விரல்கள் சேலைக்குள் இழுத்து கொள்ளும் அளவிற்கு குறுகியபடி கேட்டாள்.

   “ஓ.. சரி நீ போ கோவில் நடை எப்ப திறக்கும்னு கேட்டு அதுக்கு ஏத்தமாதிரி டைம் சொல்லு.” என்று சகஜமாக பேசவும் “12-4 நடை மூடியிருக்கும். மத்த நேரம் திறந்திருக்கும்” என்றாள். இங்கேயே வாழ்ந்தவளுக்கு தெரியாதா?!

   அர்ஜுன் அதேயிடத்தில் அமர்ந்திருக்க, “சாப்பிட வாங்கங்க” என்று அழைத்தாள்.
 
  அர்ஜுன் அவளை பின் தொடர அவளது பாதத்தில் கொலுசுமணியை கண்டவனுக்கு மெதுவாய் இடையிலும் சடையிலும் கண்கள் சென்றது.
  
  அடிக்கடி பார்வையை திசைதிருப்ப, பொன்தாலி அவனது மனையாளென்று எடுத்து இயம்பியது.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்

21 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை? -6”

 1. Avatar

  Yen da Arjun oru pombala pulla avalae thayakkam koocham ilama edho pesura ne enna da ennamo one mark qns answer panra maadhri bathil kudukura….ketta enaku pombala pillai kita pesi pazhakam ila nu solra…ava mattum enna Ella aambalaingakitaum pesi pazhakapatrukala….nalla soluranya detailu….

  Super super ka…. waiting for next ud

 2. CRVS2797

  அடப்பாவி…! இப்பவாவது அம்மு அவனோட பொண்டாட்டி தான்னு நம்புவானா…?? இல்லையா ??

 3. Avatar

  Adai ipathan Ava undra pondatti nu ninappu vanthu pakkariyakum 🤦 nalla paiyan da ne ….
  Pavam puilla kadasi varai antha tea nalla irruncha iliyanu thayriyama poiruchu 😅😅😅😅😅😅
  Vidu Ammu neeye oru nall avan sonna kadaila tea kudichu pathu thayrinjuko…😉🤪😄

 4. Avatar

  Arjun nee oru unique piece pa unna endha ammu eppdi samalikka poralo therilaiye 🙄 super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍

 5. Avatar

  இந்த கதை பகுதி இன்றைக்கு முழுவதும் படித்தேன் ரொம்ப அழகாக இருந்தது கதையின் பயணம் கதையை வாசிக்கும் போது நம் வீட்டில் நடப்பது போல் கதையோடு ஒன்றி போய் விட்டேன் சகி வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *