Skip to content
Home » கால் கிலோ காதல் என்ன விலை?- 7

கால் கிலோ காதல் என்ன விலை?- 7

அத்தியாயம்-7

   ஒவ்வொரு முறையும் அமிழ்தினி சாப்பிடும் போது நகை முன்னே வரவும், “தயவு செய்து கோவிலுக்கு இத்தனை நகையை போட்டுட்டு வராத.
அன்னைக்கு குரங்கு செயினை பறித்தது போல இங்க ஏதாவது அசம்பாவிதம் நடந்தா மனசு கஷ்டமாயிடும்.” என்று கூறவும் தேவராஜோ “தாலியோட சின்னதா ஏதாவது போட்டுட்டு போ” என்று கூறினார்.
 
   “எல்லாம் ஆரம் நெக்லஸ்னு பெரிசு பெரிசா வாங்கி கழுத்தை நிரப்பணும்னு வச்சிட்டிங்க. சின்னதா எதுவும் இல்லை” என்று குறைப்பட்டாள் அமிழ்தினி.

    சந்திரிகாவை ஒரு சின்னதா கழுத்தொட்டி செயின் வாங்க தெரியாது என்று கடிந்தார்.

   அர்ஜுன் சாப்பிட்டுவிட்டு தன் கழுத்தில் இருந்த தனது செயினும், அமிழ்தினி வீட்டில் போட்டதும் இருக்க, தனது செயினை கழட்டியெடுத்து அமிழ்தினினிடம் நீட்டினான்.

   அமிழ்தினி எதுவும் பேசாமல் அவனை கூர்ந்து பார்த்து வாங்கி மாட்டிக்கொண்டாள்.

    அடுத்து மலை ஏற தயாராகி வீட்டிலிருந்து கிளம்ப, அர்ஜுனிடம் திருவண்ணாமலை கோவில் சிற்பங்களையும் பெருமையும் பேச வாயெடுத்தாள்.

  “இதுக்கு முன்ன இங்க வந்திருக்கேன். எனக்கு எதுவும் சொல்லாத.” என்று துண்டித்திட, அவனை கண்டு சேலை முந்தானியில் முடிச்சிட்டு ‘என்னதான் பேசணுமாம். ஒரு லிஸ்ட் போட்டு தரச்சொல்லணும்’ என்று மெதுவாய் முனங்கி பின் தொடர்ந்தாள்.

    காலையில இட்லியை தானே முழுங்கினான். என்னவோ கல்லை முழுங்கிட்டு வந்தது மாதிரி இருக்கார்.

    இந்த புதர் மூஞ்சில சிரிக்கறாரா? ரசிக்கறாரா? கோபப்படறாரா ஒன்னும் தெரியலை என்று புலம்பியபடி நடந்தாள்.

   இக்கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் கொண்டுள்ள இந்த கோயில் 6 பிரகாரங்களையும், 9 ராஜகோபுரங்களையும் கொண்டுள்ளது. இக்கோயில் மலையடிவாரத்தில் இருக்கிறது. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபமென அமைந்துள்ளது.

   அதனால் வழி நெடுக கொஞ்சம் நடந்தே சென்று விட அர்ஜுன் அமிழ்தினி சற்று களைத்துவிட்டனர்.
  ஏற்கனவே நேற்று ரிசப்ஷன் திருமணம் என்று கால் கடுக்க நின்றதும், இன்று அதன் தொடர்ச்சி நடையிட, கால்கள் துவள ஆரம்பித்தது.
 
   வழியில் லெமென் சோடா வாங்கி கொடுக்க, அர்ஜுனை கண்டு பருகினாள்.
   “நீங்க குடிக்கலை?” என்று குடித்து விட்டு கேட்டதும், அவனோ மறுப்பாய் தலையாட்டி திரும்பினான்.

   ‘இரண்டு வார்த்தை தானா பேசினா என்னவாம். தாடிக்காரா?’ என்று திட்டினாள்.

    கோவிலில் அமிழ்தினி பக்தியாக வலம் வர அர்ஜுனோ வேடிக்கை பார்த்தபடி வந்தான்.
 
    அமிழ்தினிக்கு ஒவ்வொரு ஸ்தலமும், நுழையும் போதும் பக்தியாக நுழைய அர்ஜுனோ “நான் இங்கயிருக்கேன் நீ போ” என்றான்.
 
   “ஏன் கோவிலுக்குள்ள வரலையா?” என்று கேட்டாள்.

   “இதப்பாரு எங்கம்மாவை முண்டச்சியா உட்கார வச்சிட்டு எங்கப்பா எப்ப போனாரோ அப்பவே எனக்கும் இந்த சாமிக்கும் சரிவரலை. நான் இங்க வந்தது நேரம் கடத்த” என்றதும் அமிழ்தினிக்கு வாதடவோ, கடவுளை பற்றி புகழுரை எடுத்துரைக்கவோ மனம் வரவில்லை.

     அங்கிருந்த லிங்க ஸ்தலத்தில் அர்ஜுன் அமர்ந்துவிடவும், “நீ வேண்டுமின்னா சாமி கும்பிட்டுக்கோ, நான் கூடவே வர்றேன்.” என்று கூறினான்.

   “பரவாயில்லை… இங்க நிறைய முறை வந்துட்டேன். திருவண்ணாமலையை ஸ்தலத்தை நினைத்தாலே முக்தி தருவாரு. இங்க உங்க காலடி பட்டிருக்கே போதும்.” என்றவள் அவன் நெற்றியில் திருநீறு வைத்திட, சட்டென நெற்றியில் பெண்ணவள் விரல்கள் அவனை ஸ்தம்பிக்க வைத்தது.

   “வெறும் நெற்றியா இருந்துச்சு. அதனால வச்சேன். வீட்டுக்கு போனாலும் அப்பா பார்ப்பார்” என்றதும் அழிக்க போனவன் அப்படியே நிறுத்தினான்.

   ஆங்காங்கே இருந்த திண்பண்டத்தை பார்த்து நிற்க, இவர்களை போலவே இருந்த புதுமணத்தம்பதிகள் வளையல் வாங்கவும், கடையில் இழுத்து செல்வதையும் கண்டவன், “நீ எதுவும் வாங்கலையா?” என்றான்.

   இல்லையென்று தலையாட்டவும், “கோவிலுக்குள் போனதுக்கு விபூதி வச்ச, உங்கப்பா உன் கையில எந்த பொருளும் இல்லைனா அப்ப மட்டும் ஏதும்” என்றவன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.

    “கல்யாணம் எல்லாம் இப்ப வேண்டாம்னு நினைச்சேன். என்னத்த சாதிச்சோம்னு ஒரு பொண்ணை வேற கட்டிக்கிட்டு என்னோடவே கஷ்டப்படணும்னு கல்யாணத்தை தடைசெய்தேன்.
  எங்கம்மா தான் என்னை சமாளிக்க முடியலைனு உன்னிடம் மாட்டிவச்சிடுச்சு. பாவம் நீ” என்றான் அர்ஜுன்.

   “யார் மாட்டினா? யார் பாவம்? எங்கம்மா என்னை ஊரையே உலையில வச்சிடுவேன்னு வையும். நீங்க தான் பாவம்” என்றதும் அர்ஜுன் புருவமேற்ற, ‘என்னயிவர் முறைக்கறாரா?’ என்று அச்சம் பிறந்தது.

   அர்ஜுனோ நிறைய பேர் கல் வைத்த வளையலை வாங்கிதர கண்டு “நீயும் அதுல ஒன்னு எடு” என்றான்.

   அமிழ்தினி ஆசையாக எடுத்து பார்த்தாள். சிவப்பு வண்ணம் கொண்ட வளையல் அழகாக இருக்க, அவளடுக்கும் முன் அதனை எடுத்து விலை கேட்டான்.
  
   “இருநூறு ரூபா தம்பி” என்றதும் “என்னது? இருநூறா, யோவ் பகல் கொள்ளை அடிக்கிற. இந்த வளையல் இருநூறா?” என்று சத்தமிட்டான்.

   அமிழ்தினிக்கு பகீரெனறது. கடைக்காரரோ “தம்பி பிளாஸ்டிக் பாக்ஸில போட்டு வருது விலை எல்லாம் நான் முடிவுப்பண்ணறதில்லை.” என்று கடைக்காரர் கூற, “எது இந்த டப்பாவா. இந்த பிளாஸ்டிக் டப்பாவைல போட்டு வளையல் வித்தா நூறுரூபாயா? யோவ் மொத்தமா பிளாஸ்டிக் டப்பா சீப்ரேட்ல வாங்கி பத்து ரூபா டப்பா எல்லாம் வாங்கிக்கறது. ஐம்பது ரூபாய்கு தேறாத வளையலை அதுல போட்டு இருநுறு ரூபா பொருளா மாத்தறதா. யார்கிட்ட காதுல பூசுத்தற.” என்று துள்ளினான்.
  
  “இங்க பாரு தம்பி விருப்பம் இருந்தா வாங்கு. இல்லை நடையை கட்டு. வியாபாரத்த தடுக்காத” என்று மற்றவர்களுக்கு வியாபாரம் பார்த்து பணத்தை வாங்குவதிலும் வளையல் பெட்டியை கொடுப்பதிலும் பிசியானார் மனிதர்.

   “ப்ளீஸ் எனக்கெதும் வேண்டாம். நீங்க வாங்க” என்று அமிழ்தினி அழைக்க, “ஏங்க ஊரை ஏமாத்தறாங்க. ஆரணி பஜார்ல ஒரு பிளாஸ்டிக் டப்பா இருபது முப்பதுல விற்குது. இந்த டப்பா அவ்ளோ தான் தேறும். வளையல் ஐம்பது ரூபா. சரி நூறுனே வச்சிக்கோங்க. டபுள் மடங்கா விற்கறாங்க.” என்று புலம்பினான்.

  அதற்கு அமிழ்தினி “அது பஞ்சாபி  பிரைடல் சூரா பேங்கல் செட். இப்ப நிறைய பட்டி தொட்டி எல்லாம் கருகமணி, பாசி எல்லாம் தாண்டி நார்த் சைட் என்ன மாடலோ அது தான் டிரெண்டிங்கா விற்கறாங்க.
   இது கல்யாணத்துக்கும் கல்யாணமானவங்களுக்கும் பங்ஷன் மோட் இருக்கற நேரம் குட் வைப்ஸ்ஸா டிரஸுக்கு மேட்சா வாங்கறாங்க.
இங்க பாருங்க பிரைஸ் ஆன்லைன்ல 225 போட்டிருக்கு. இது ஆன்லைன்ல ஆஃபர்னு போட்டு 180கு சேல் ஆகுது. இங்க நடை வியாபாரி மொத்தமா வாங்கி இருநூறுக்கு விற்கறார். அவருக்கு ஒரு வளையல் வித்தா இருபது நூறுபா லாபமா இருக்கும்.” என்று அமிழ்தினி அந்த கடைக்காரர் வைத்த வளையலை போட்டோ எடுத்து  குகூளில் லென்ஸ் என்ற ஆப்ஷனில் போட அது அதை போலவே இருக்கும் புகைப்படத்தை காட்டியது. அதில் நுழைந்து மற்ற விலைப்பட்டியலை எடுத்து அர்ஜுனுக்கு காட்டி எடுத்துரைக்க, அர்ஜுன் அமிழ்தினியை தினுசாக பார்த்தான்.

    அமிழ்தினியோ அவன் முன் நேட்டிய போனை மடக்கி, எல்லாமே போன்ல கத்துக்கறது” என்று நடக்க, அர்ஜுனோ வளையல் கடக்காரரிடம் சென்று ஒரு வளையலை வாங்கினான்.

   “இல்லை எனக்கு வேண்டாம்” என்று மறுக்க, “பரவாயில்லை வாங்கிக்கோங்க” என்று கொடுத்துவிட்டு முன்னே செல்ல, அமிழ்தினி கையில் வளையல் பாக்ஸை வைத்து சென்றவனின் முதுகை வெறித்தாள்.

     ‘அப்பா… நீங்க சொன்ன பொய் சீக்கிரமா உடையப்போகுது. என் வாய் சும்மாயில்லாம போனை வச்சி வியாக்கானம் பேசுது.’ என்று பின் தொடர்ந்தாள்.

   கொஞ்சமும் இப்படியொருத்தனிடம் அப்பா கோர்த்துவிட்டுட்டாரே என்ற சலிப்பு அவளுக்கு உருவாகலில்லை.

   ஆனால் அர்ஜுனுக்கு முதல் நாளே இவ பெரிய அறிவாளி நான் முட்டாள் என்ற ரீதியில இருக்கு. நமக்கென்ன  வளையல் வாங்கி பழக்கமா? காய்கறி ரேட் கேட்டா போன வருஷம் போன மாசத்துலயிருந்து இப்ப வரை துல்லியமா சொல்வேன். வாங்காத பொருளோட விலை எனக்கென்ன தெரியும்’ என்று மனதில் அத்தனை வாதம் செய்தான். தவறியும் பெண்ணவளிடம் அதை உதிர்க்கில்லை. சொல்லப்போனால் அவளிடம் பேச வந்தவனே. தற்போது பேசும் முடிவும் அடிமனதில் அமிழ்ந்தது.

     அமிழ்தினிக்கு தான் இவர் ஏதாவது பேசி சிரிச்சா கூட பெட்டர் இப்படி ரப்பா சுத்தினா நாம என்ன செய்ய?’ என்று கையை பிசைந்து நின்றாள்.

  அதை மீறி இவளாக பேசிட முயன்றாள்.

  “இங்க இப்படி உட்கார்ந்திருக்கறப்ப, பொண்ணு பார்க்க வந்தது தான் நினைவு வருது. அன்னைக்கு அந்த குரங்கு என் செயினை திருட்டிட்டு ஓடிடுச்சு.” என்றாள்.

   அர்ஜுனோ நெற்றியை தேய்த்தவன், “சொல்ல மறந்துட்டேன். அந்த செயின் கிடைச்சிடுச்சு. வேட்ல வச்சிருக்கேன்.”என்றான்.
 
   அமிழ்தினிக்கோ “வாவ் கிடைச்சிடுச்சா. எப்படி நாங்க போனதும் குரங்கு எங்கயாவது போட்டு எடுத்துட்டிங்களா?” என்று ஆர்வமாய் கேட்டாள்.  முகத்தில் சில புன்னகை கூட ஆச்சரியத்தை தாண்டி வழிந்தது.

   “அன்னைக்கே கிடைக்கலை. அடுத்த வாரம் கோவிலுக்கு போனப்ப, மரத்துல தொங்கிட்டு இருந்தது. எடுத்துட்டு வந்தேன்.” என்றான்.

   “அப்ப ஏன் முன்னாடியே சொல்லலை.” என்று கேட்டாள்.

   இதே மற்றவர்களாக இருந்தால், மெட்டல் செயின் கிடைத்ததை பகிர்ந்து அதை சாக்காக வைத்து பேசி பழகி நெருங்கியிருப்பார்கள்.

   “எப்படியும் நீ என் வீட்டுக்கு வருவனு அப்ப கொடுக்கலாம்னு விட்டுட்டேன்.” என்றான் விட்டேந்தியாக.

   ‘கல்லுக்குள் கூட ஈரம் இருக்கும். இவனுக்குள் வார்த்தை இருக்காது. பேச கூலி கேட்பான் போல, என்றானது அமிழ்தினிக்கு.

   “வீட்டுக்கு போகலாமா? கடுப்பா இருக்கு” என்றான்.

  ‘இப்ப என்னாச்சு கடுப்பா ஆகுது’ என்றதை மறைத்து சரியென்று தலையாட்டி பின் தொடர்ந்தாள்.

   பின்னால் வருகின்றாளா இல்லையா என்ற ஆராய்ச்சியின்றி மடமடவென இறங்க, சேலையை லேசாக பிடித்து கஷ்டப்பட்டு அவன் நடைக்கு ஓட்டமாய் வந்து சேர்ந்தாள்.

   வீட்டுக்கு வந்து சேரும் நேரம் மூச்சு வாங்கியது.

  அர்ஜுனோ டிவியை போட்டு அமர, அமிழ்தினி அமமாவோ வளையல் வாங்கி தந்திருக்காரா ஓன்று மாப்பிள்ளையை புகழ்ந்தார்.

   அமிழ்தினிக்கு ஆமா இது வாங்க எத்தனை போராட்டம். இது தெரியாம அம்மா அக்கா எல்லாம் மெச்சிக்கோங்க.’ என்று அர்ஜுனை வெறித்தாள்.

  இனி வரும் காலம் இவனோடு. நறுக்கு தெரித்த வார்த்தை பேசுபவனோடு உன் வாழ்வு தொடரும்’ என்ற கிலி அமிழ்தினி மனதிற்குள் சூறாவளியாக பிரவாகித்தது.
 
   அர்ஜுனிற்கு பாடலில் பார்வை இருந்தாலும் கூடவே அன்றைய பேப்பருக்கு வந்த இலவச மலரை தான் புரட்டியிருந்தான். வாழ்க்கை அவனுக்கு என்ன புரட்ட காத்திருக்கின்றது என்று தாமதமாய் அறிவான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

24 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை?- 7”

 1. Kalidevi

  Etho twist vachitingla sisy story la . But nalla tha irukum . Arjun Yen pesa matran ippadiye konjam pesa vainga avanaium ithula mrg aeiduchi vera

 2. Avatar

  Kadu kadu nu irundha enga mugilan yae maathitanga….adhae maadhri Arjun yum kadhal valaila vizhavachidalam….ana ammu od padipa pathi therincha enna pannuvano nu tan bayama iruku… Super super ka…. waiting for next Arjun ud…

 3. CRVS2796

  அடேய்… கட் அன்ட் ரைட் ராமசாமி
  வாயைத் திறந்தா முத்து உதிர்ந்திடும் போலயிருக்கே…
  ஏன், அந்த முத்து தான் உதிர்ந்து
  உன் பொண்டாட்டி ஒரு செயினைத் தான் தொடுத்து போட்டுக்கட்டுமே… உன் சொத்து என்ன கொள்ளையா போக்போகுது…?

 4. Avatar

  Ammu arjun ah parthu ippo vae ava vazhkkai ah pathina bayam vandhuduchi ivan konjam aachum pesuna paravaliya ah feel pannuva ivan than robo mode la yae suthuran yae ithula iva vera valayal kadaikararuku support ah vera pesi avanuku doubt vara vachiduva pola

 5. Avatar

  மளிகை கடைகாரனின் வியாபாரம் சூப்பர் இவங்க இரண்டு பேரையும் என்ன செய்ய போறீங்க சகி கதை எப்படி போகும் ரொம்ப எதிர்பார்க்க வைக்குது 1/4 கிலோ காதல் வாழ்த்துகள்

 6. Avatar

  எனக்கென்னவோ ரைட்டர் தோழி அர்ஜுன் கேரக்டர உருவாக்கும் போது மிளகாய் இஞ்சி இதெல்லாம் சாப்பிட்டுட்டே யோசிச்சீங்களா🤔🤔🤔🤔
  . பாவம் அம்மு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *