Skip to content
Home » கால் கிலோ காதல் என்ன விலை?-9

கால் கிலோ காதல் என்ன விலை?-9

அத்தியாயம்-9

   ‌அர்ஜுன் வந்ததும் வராததுமாக அறைக்குள் செல்ல, பின் தொடர்ந்தாள் அமிழ்தினி.

    அவள் வந்ததும் கதவை சாற்றியவன், ”உங்கப்பா ஏன் இப்படி செய்யறாரு?” என்று சத்தமின்றி கர்ஜித்தான்.

     “ஏன் இப்படின்னா?” என்று சுவரில் பல்லியாக ஒட்டியபடி தவித்து கேட்டாள். அர்ஜுன் அவளை ஓடவிடாமல் நிறுத்தியிருந்தான்.

“ஓ… ஒன்றா இரண்டா எதுனு யோசனையா? அந்தளவு இருக்கு?!

உங்கப்பா காய்கறி வாங்க ஆரணிக்கு கூட்டிட்டு போனா, உங்க மாமா வீடு இங்க தான்னு நைஸா என்னை கூட்டிட்டு போயிட்டார்.‌ வழில இதான் பெரிய மாப்பிள்ளையோட ஹார்ட்வொர்க்ஸ் கடைனு நிறுத்திட்டார்.

    எனக்கு வேலை இல்லைனு நினைச்சிட்டாரா? அங்கப்போனா உங்க அக்கா மாமியார் என்னை தினுசா பார்க்கறாங்க.” என்று எகிறினான்.

‌ அப்பா ஏன் இப்பவே கூட்டிட்டு போனாரோ? என்று தள்ளாடினாள். அர்ஜுன் முகம் நெருக்கத்தில் வந்து அச்சுறுத்தியது. ஆம் அச்சுறுத்தியது. கண்கள் அனல் தெறிக்க, அவன் பல்லைகடித்து பேசும் விதம், அவளுக்கு அவ்விடத்தில் அகப்பட்ட எலியாக எண்ணிட தோன்றியது.
  
   அவனுக்கே போதுமென்று பட்டிட, “இன்னோரு முறை உங்கப்பா என்‌கூட வரக்கூடாது.” என்று கடிந்துவிட்டு சென்றான்.‌ செல்லும் போதே சட்டையை கழட்டி கட்டிலில் தூரயெறிந்து குளியலறையை சுற்றினான்.

   வெளியே வரும் நேரம் அதேயிடத்தில் அசையாது நின்றிருந்தாள். லேசான அதிர்ச்சி, அவன் வரவும் தன்னிலை உணர்ந்து எச்சிலை விழுங்கி அவன் வீசியெறிந்த சட்டை துணியை எடுத்தாள்.

‌‌டவல் அணிந்து வந்தவனுக்கு அவள் வெளியே சென்றிருப்பாளென்ற எண்ணம்.
ஆனால் அவளிருக்க சுதாரித்து நடமாடினான். அமிழ்தினிக்கு தான் சங்கடமாய் போக, குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். தற்காலிகமாக மறைந்து கொண்டாள்.

   பீரோவில் திறக்க, அடுக்கி வைக்கப்பட்ட துணிகள். கூடுதலாக ஐயர்ன் செய்து புது துணி போல மடித்திருக்க, தன்னுடைய துணிதானா என்று ஆச்சரியப்பட்டான்.

    அன்னை மடித்து வைக்கும் போது சாதாரணமாக மடித்து வைத்திருப்பார் ஆனால் இந்தளவு அழகாக காட்சியளிக்காது‌.

    ஏதோ அவளை காணும் ஆவல் அக்கணம் உதிக்க, ”அங்க என்ன பண்ணற? தனியா போய் அழறியா?” என்று கர்ஜிக்கும் குரல்.

    ”அய்யோ இல்லை.‌ உங்களுக்கு டிஸ்டர்ப்பா இருக்கும்னு இருந்தேன்.” என்றதும் என்ன‌ டிஸ்டர்ப் என்றவனுக்கு டவல் அணிந்த வெற்று மார்பில் நீர்த்துளிகள் கொஞ்சமிருக்க அப்படியே வந்துட்டேனா, என்று கைக்கு கிடைத்த சட்டையை எடுத்தணிந்தான்.

    “ஆச்சு வெளியே வரலாம்” என்றதும் தலை நீட்டி வந்தாள்.

   பீரோ திறந்திருக்க மடித்து வைத்ததற்கு நன்றி உரைப்பானென காத்திருந்தாள். அப்படி கூறினால் தேங்க்ஸ் எதுக்குங்க என்‌கடமை தானே என்று பேச்சுரையாற்ற நினைத்தாள்.
  அவனோ எவ்வித மாற்றமும் இன்றி வெளியேறினான். அமிழ்தினிக்கு இவனிடம் நல்லா பல்பு வாங்கறேன்.’ என்று ஈரடவலை எடுத்து காயப்போட சென்றாள்.

‌‌ சந்திரிகா மருமகன் வந்ததும் மகள் அறைக்கு செல்ல, அர்ஜுன் குளித்து முடித்து வர மகளும் தாமதமாய் வர என்று வேறொரு காட்சி நடந்திருக்குமென்ற நினைப்பு.

இதில் ஹைலைட்டே மகளிடம் நீ மாப்பிள்ளைக்கு சாப்பாடு பரிமாறு என அனுப்ப, அன்னையின் எண்ணப்போக்கை யூகித்த அமிழ்தினியோ தலையில் அடிக்காத குறை.‌

  ‌ ‘அய்யோ அய்யோ இந்த அம்மா எடக்குமடக்கா திங்க் பண்ணுதே. அவங்க மாப்பிள்ளை 50கிராம் கூட சிரிச்சு பேசலை. எங்கப்போய் முட்டிக்க? என்று தினுசாய் வலம் வந்தாள்.
   மதியம் போல சாப்பிட்டு தேவராஜ் சந்திரிகா கிளம்ப அமிழ்தினிக்கு கண்ணெல்லாம் கலங்கியது. சணலில் பொட்டலம் மடித்தவனின் கண்ணில் அமிழ்தினி கண்ணீர் அருவியாக வந்தவண்ணம் அவள் துடைப்பதை கண்டு, “முட்டைக்கண்ணு” என்று திட்டி முனங்கினான்.

   எதிரே வேர்கடலை வாங்கிய பெண்மணியோ “முட்டை வேண்டாம் அர்ஜுன் வேர்கடலை மட்டும் தான்” என்றதும் அந்தக்காவிடம் கொடுத்து பணத்தை வாங்கி கல்லாப்பெட்டியில் போட்டான்.

   “மாப்பிள்ளையிடம் சொல்லிட்டு கிளம்பறோம் தங்கச்சி” என்று தேவராஜ் கூற, “ஏலேய் அர்ஜுன் சம்பந்தி கிளம்பறார் டா‌.” என்றதும் “இரண்டு நாள் இருந்துட்டு போகலாமே மாமா” என்று பெயருக்கு கூற ‘இல்லை மாப்பிள்ளை அங்க கல்யாணம் ஆனதும் தினசரி வேலை அப்படியே தேங்கிடுச்சு. ‌இப்ப கிளம்பினா சரியா இருக்கும்.

    பொண்ணை பத்திரமா பார்த்துக்கோங்க. கொஞ்சம் வாயாடும் மத்தபடி சொல் பேச்சை கேட்கற ரகம் தான். செல்லமா வளர்ந்துடுச்சு” என்றதும் குலுங்கி அழது அமிழ்தினி தாயை கட்டிக்கொண்டாள்.

இளவழகி தான் சமாதானம் செய்தார். அவனோ ‘என்னங்கடா இது மாறிமாறி அழுது படம் காட்டறாங்க’ என்று கையை பிசைந்து வேடிக்கை பார்த்தான்.

    அமிழ்தினி அழுவது அவனுக்கு வித்தியாசமாக தெரிந்தது.
  படித்த பெண் அழுகின்றாளேயென்ற ஆச்சரியம். அடுத்த கணமே, மளிகைக்கடைகாரனை கட்டியதற்கு அழாமல் என்ன செய்வாளென்றதும் மௌவுனம் ஆட்கொண்டது.

     பிறகு இளவழகி தான் பேசி அமிழ்தினியை சமாதானம் செய்தாள். “அர்ஜுன் பஸ் ஏத்தி விட்டுட்டு வாடா.” என்றார்.‌
   கடையை யார் பார்ப்பா என்ற ரீதியில் அன்னையை காண, ”கடையை நான் பார்த்துக்கறேன். நீயும் அமிழ்தினியும் பஸ் ஏத்தி விட்டு வாங்க” என்று‌தள்ளாத குறையாக கூற மாமனாரை பைக்கில் ஏற்றிவிட்டு லக்கேஜ் எடுத்து புறப்பட, அமிழ்தினி சந்திரிகா பேசியபடி நடந்தனர்.

    “உங்க அக்கா மாமியார் மாதிரி இளவழகி மாமியார் இருக்க மாட்டாங்க. பேசி பழக நல்லா குணமா தெரியுது. நீ அதை தக்கவச்சிக்கோ.

   மாப்பிள்ளை ஏதாவது சொன்னா அமைதியா கேட்டுக்கோ.” என்று கூற, அமிழ்தினியோ “எனக்கு ஏன் கல்யாணம் பண்ணினிங்க. எல்லாமே புதுசா இருக்கு.‌ எனக்குயிது தேவையா?” என்று அலுத்துக் கொண்டாள்.

   “கொஞ்ச நாள்ல உன் வீடா தெரியும். அதுக்கு பிறகு நம்ம வீடு போரடிக்கும்” என்று சந்திரிகா கூறவும் மறுப்பாய் தலையசைத்தாள்‌.

    பலவித அறிவுரையோடு பேசி வர பேருந்து நின்றது.

அர்ஜுனுக்கு உடனடியாக பேருந்து வந்தாலா உத்தமம் என்று வேண்டினான்.

இல்லையா பின்ன தேவராஜின் ‘அந்த காலத்துல நான் எல்லாம்’ என்று ஆரம்பித்து அவரது வாழ்க்கை வரலாற்றை மீண்டும் மீண்டும் புரட்டி பேச நொந்து விட்டான்.
அவனை சோதிக்காமல் பேருந்து வந்ததும் எட்டி பார்த்தான்.‌

   அச்சச்சோ இந்த வண்டியா என்று அர்ஜுன் திரும்ப, கண்டெக்டரோ “நீங்க ஏறலையா தம்பி” என்று பண்பாய் கேட்டார். இவனிடம் ஏதேனும் வைத்து பஸ் டயரை பஞ்சராக்கி விட்டால்?  
    அந்த பயம்.

  “இல்லிங்க அவங்க மட்டும் தான்” என்று கையை காட்டி அமிழ்தினியோடு நின்றான்.

   ”ஓ… கல்யாணம் ஆகிடுச்சு?” என்று தினுசாய் கேட்க ” ஆஹ் ஆகிடுச்சு” என்றான்.‌

    கண்டெக்டரோ அமிழ்தினியை பாவமாய் நோக்கி விசிலடித்து பேருந்தை கிளப்ப, பெற்றோருக்கு கையசைத்து அனுப்பியவளுக்கு அந்த நடத்துனர் தன்னை பார்த்த பரிதாப பார்வை வேறு அடிவயிற்றை கலக்கியது.

    “நடந்து வந்திடறியா? இல்லை எப்படி?” என்றதும் ஏன் திரும்பக் போறப்ப காலியானது ஏறிக்கொள்ளலாமே என்று வந்தாள்.

   டிவிஎஸ் வண்டி காய்கறி பெட்டி எடுத்து வர தோதாக இருக்கும் இன்று  அமிழ்தினிக்கு வண்டியை பிடிக்கவில்லை. பக்கவாட்டில் பிடிக்க இடமிருந்தும் அது தோது படாமல் போக அர்ஜுன் தோளில் கைவைக்க, அவனும் அவளது தீண்டலை புறம் தள்ளவில்லை‌.
 
     ஆவணியாபுரத்தில் பெண் பார்த்த நிகழ்வு நடந்த கோவிலிலை பார்வையிட, வண்டி கண்ணாடியில் அமிழ்தினி முகம் கண்டவனோ, “உன் செயின் வீட்லயிருக்கு. கொடுக்க எடுத்து வச்சேன் மறந்துட்டேன்” என்றதும் “ஓ.. அது சாதாரண செயின் காஸ்ட்லி எல்லாம் கிடையாது” என்று‌ கூறினாள்.

    அர்ஜுனுக்கு சாதாரண செயின் என்றவள் மீது பார்வை திரும்பி வீட்டுக்கு வரவும், சட்டென தோளில் கை வைத்திருந்தவளுக்கு எடுக்க, அவனோ தன்‌தோளை தீண்டிய உணர்வோடு கடைக்கு வந்தவனுக்கு தோளில் அமிழ்தினி கைகள் இன்னும் நீளாதா என்ற தாபம் தாக்கியது.

    மெதுவாக அவளை தேட கண்ணீரோடு கரைந்தவள் தென்பட்டாள்.‌

     அருகே சென்று பேச நினைத்தவனுக்கு கடைக்கு ஆட்கள் வரவும் அதை முதலில் கவனிக்க வேண்டிய கட்டாயம் நெறுக்கியது.

 மதியம் போல சாப்பிட வந்தான் இரண்டறைக்கு, அவனோ டிவி ரிமோட்டை தட்டியபடி படம் பார்த்து உணவை காலி செய்ய, அவனுக்காக இத்தனை நேரம் உண்ணாமல் இருந்தவளுக்கு 'இதுக்கு முதல்லயே சாப்பிட்டுயிருக்கலாம்.' என்று தட்டை வைத்து உண்ணவும் அவள் தட்டை வைக்கும் சப்தம் அவனை கலைத்தது. 

‌‌ ”நீ இன்னும் சாப்பிடலையா?” என்றதும் “ஆனா கூட சாப்பிடறேன்னு‌ நேரம் கடந்து காத்துகிடக்கா’ என்று இளவழகி தட்டை வைத்து சப்தம் கேட்டு எட்டி பார்த்து பதில் தந்தார்.

''நான் நேரத்துக்கு சாப்பிட மாட்டேன்.‌ எனக்கு எப்ப தோதோ அப்ப தான் சாப்பிடறது.‌இப்படி காத்திருக்காத." என்றவன் கை கழுவி விட்டான்.

தனியாக சாப்பிட இதுக்கு அவங்களோட சாப்பிட்டிருக்கலாம் என்ற கடுப்பு உருவானது.

ஏற்கனவே பெற்றோரை பிரிந்த கவலை. தனக்கு இந்த வீட்டில் நான் இருக்கேன் என்று ஆதரவு வார்த்தை அர்ஜுனிடமிருந்தும் வராதப்போது தேவையற்ற கோபம் எழும்பியது‌.

 அறைக்கு வந்ததும் தனக்கு நினைவிருக்கும் போதே அவளிடம் கொடுக்க எண்ணி செயினை கொண்டு வந்து வைத்தான்.‌

 "ஏன்டா புதுசா?'' என்று இளவழகி கேட்க, "அந்த பொண்ணோடது. பொண்ணு பார்க்கறப்ப கழுத்துல இதை தான் போட்டிருந்தது. குரங்கு தூக்கிட்டு போய்‌மரத்துல வச்சிடுச்சு." என்று கூறிவிட்டு துண்டை எடுத்து கையை துடைத்தான்.‌

‌‌ “நீ எப்ப கோவிலுக்கு திரும்ப போன? உன்‌ கண்ணுக்கு இந்த கருப்பு மணி எப்படி தெரிந்தது. அதுவும் இந்த புள்ளையோடதுனு” என்று வினாவை துவக்க, அமிழ்தினியோ அவன் கொடுத்த தன் நகையை தீண்டினாள்.

அவள் உபயோகம் செய்த அதே செயின் ஆனால் அவளுடையதில் குட்டி குட்டி யானை இரண்டு பக்கமும் இருக்கும். ஆனால் இதில் தாமரை மலர் இருக்க, அர்ஜுனை ஏறிட்டாள்.

‌‌ “கோவிலுக்கு எதுக்கோ போனேன்.‌ உனக்கென்ன கோவிலுக்கு வரலைனு ஏன்டா வரலைனு புலம்பற, போனாலும் என்ன கோவிலுக்கு போனியானு கேட்கற? ஒருமனுஷன் கோவிலுக்கு போகணுமா வேண்டாமா?” என்று கத்திவிட்டு கடைக்குள் ஓடிவிட்டான்.‌

பெரும்பாலும் கடைக்குள் இருந்தால் எந்த விஷயமும் பேசக்கூடாது.‌‌ ஒன்று அவன் மறந்து போவான்.‌ இல்லையேல் கடைக்கு வருபவர்களும் கருத்து கூறுவது அவனுக்கு பிடிக்காது‌.

அது அன்னைக்கு தெரியும். என்னவோ போ என்று துணி உலர்த்த சென்று விட்டார்‌.

அமிழ்தினிக்கு 'எங்கயோ தேடி பிடிச்சி அதே செயினை வாங்கியிருக்கார் பாவம். கல்லுக்குள் ஈரம் இருக்கற மாதிரி இந்த தேவதாஸ் தாடிக்குள்ளயும் குட்டியா காதல் முளைக்குது என்றவளுக்குள் மனம் பூரிப்பை தர தனியாக மெல்ல முறுவல் உதிர்த்தது. 

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்


 

26 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை?-9”

 1. Avatar

  Super sis nice epi 👍👌😍 kallukullum kaadhal erukuma adha nee dhan konduvaranum aana adhu konjam kashtam dhan pa🙄

 2. Kalidevi

  Parra namma arjun ku love varuthu pola . Ithuku konjam vai vittu pesi tha paren . Nice epi sisy nalla poitu iruku daily update podunga sisy

 3. Avatar

  Onnu Ivan oru dhinusa suthiran Anga oruthan oru dhinusa suthitu irukan ivanungalukku romance varudhuku padadha paadu padanum Pola veena akka…epadi vandhu Sikki irukinga paarthingala….

 4. Avatar

  1/4 கிலோ காதல் சூப்பர் அர்ஜீன் அமிழ்தினியின் காதல் கலாட்டா ஆரம்பம் சூப்பர் சகிமா வாழ்த்துகள்

 5. CRVS2797

  அதுசரி…! தேவதாஸ் எல்லாருமே ஒரிஜினல் தேவதாஸ் இல்லை தானே.
  அப்புறம், இவன் மட்டும் எப்படி அப்படி இருப்பான் ???

 6. Avatar

  ஆத்தா இனி, அவன் கொஞ்சம் முசுடு தான் ஆனா நல்லவன். புரிஞ்சிக்க முயற்சி பண்ணு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *